ஹைதராபாத்தில் இரட்டைக் குண்டுவெடிப்பு: 40 பேர் மரணம்

}இந்தியாவின் தகவல் தொழில்நுட்பநகரங்களில் முக்கியமான ஒரு நகரமாக பெரும் வளர்ச்சி பெற்று வரும் ஹைதராபாத்தில் நேற்று இரட்டை வெடிகுண்டுகள் வெடித்ததில் 40 பேர் மரணம் அடைந்துள்ளதாகவும் 70 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் ஆந்திர அரசு செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது. இந்தக் குண்டுவெடிப்பில் தமது நெருங்கிய சொந்தங்களை இழந்துவாடும் குடும்பங்களுக்கு சத்தியமார்க்கம்.காம் தனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறது.

கடந்த மே 18 அன்று ஹைதராபாத் மக்கா பள்ளியில் வெள்ளிக்கிழமை தொழுகையின் போது ஒரு பெரும் வெடிகுண்டு வெடித்ததும் பலர் உயிரிழந்ததும் அறிந்ததே.

இம்முறை மக்கள் கூட்டமாகக் கூடும் லும்பினி பூங்காவின் திறந்த வெளி அரங்கையும் இன்னொரு சிறு உணவுவிடுதியையும் குறிவைத்துத் தாக்குதல் நடத்தப்பட்டது. மேலும் வெடிக்காத பல குண்டுகள் சிக்கியதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

இத்தாக்குதல்களுக்கு பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷைச் சேர்ந்த தீவிரவாதிகள் தான் காரணம் என்று ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி கூறியுள்ளார்.

சமீபகாலமாக இந்தியாவில் குண்டுவெடிப்புகள் அதிகரித்து வருவதும் ஒரு பாவமும் அறியாத பல அப்பாவி உயிர்கள் இவற்றில் பலியாவதும் கவலைக்குரியது. இது போல் குண்டுவெடித்தவுடன் பாதுகாப்பை முடுக்கிவிடுவதும் பின்னர் அதனைக் கிடப்பில் போடுவதும் அரசுக்கு வாடிக்கையாகிவிட்டது. விரைவான விசாரணைகளும் குற்றம் நிரூபிக்கப்பட்டபின் பொதுவில் நிறைவேற்றப்படும் கடுமையான தண்டனைகளுமே இது போன்ற மனித குலத்திற்கெதிரான குற்றங்கள் குறைய வாய்ப்பளிக்கும்.

இதை வாசித்தீர்களா? :   நரக மாளிகை 2.0 !