முகப்பு

இஸ்லாம்

செய்திகள்

தகவல்

கட்டுரைகள்

சேவைகள்

தொடர்பு கொள்க!

English

இந்திய செய்திகள்

ஹிந்துத்துவ இராணுவ உயர் அதிகாரி புரோகித்இந்திய இராணுவ உயர் அதிகாரி புரோஹித் ஒப்புதல்

இந்திய இராணுவ உயர் அதிகாரி (லெப்டினெண்ட் கலோனில்) ஆன ஸ்ரீகாந்த் புரோஹித், மாலேகோன் குண்டுவெடிப்பின் பின்னணியில் தானே மூளையாக இருந்து செயல்பட்டதை ஒப்புக் கொண்டுள்ளார்.

மாலேகோன் குண்டு வெடிப்பை விசாரித்து வரும் அதிகாரிகளுக்கு, புரோஹிதுதான் 'அபிநவ் பாரத்' என்ற இந்து பயங்கவாத அமைப்பின் உறுப்பினர்களுக்கு இந்த வெடிகுண்டுகளைத் தயார் செய்து கொடுத்திருக்கக் கூடும் எனச் சந்தேகம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த நவம்பர் 5ஆம் தேதி கைது செய்யப்பட்ட புரோஹித், ஹிந்துத்துவா இயக்கத்தைச் சேர்ந்தவராவார் என்பது தற்போது நிரூபணம் ஆகியுள்ளது.


37 வயதான பொறுப்பு மிக்க உயர் அதிகாரியான ஸ்ரீகாந்த் புரோஹித், கடந்த செப்டம்பர் 29இல் மாலேகோனில் நடந்த குண்டு வெடிப்புக்குத் தேவையான ஆர்.டி.எக்ஸ் வெடிமருந்து உபகரணங்களை ஏற்பாடு செய்து அதற்கான முழுமையான திட்டத்தையும் தானே வகுத்து நடத்தியதாக ஒப்புக் கொண்டுள்ளார்.

புரோஹித்தை விசாரித்துள்ள மும்பையின் பயங்கரவாத தடுப்புத் துறைப் படையினரின் (Anti-Terrorism Squad) பார்வை, மேற்கொண்டு அடுத்தடுத்த இராணுவ உயர் அதிகாரிகளின் மீது விழுந்துள்ளது. புரோஹித் மீது போலிசாருக்கு சந்தேகம் விழ ஆரம்பித்த கணத்திலிருந்து பதிவு செய்யப்பட்ட அவரது தொலைபேசி உரையாடல்கள் அவருக்கும் அவருக்கு முன்னர் விசாரணை வட்டத்திற்குள் வந்து விட்ட ஓய்வு பெற்ற இராணுவ மேஜர் ரமேஷ் உபாத்யாயாவுக்கும் உள்ள நெருங்கிய தொடர்பை நிறுவியுள்ளன.


மேஜர் ரமேஷ் சந்த் உபாத்யாயாவைப் பற்றிக் கடந்த 28.10.2008 அன்று சத்தியமார்க்கம் தளம் செய்தி வெளியிட்டிருந்தது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம்.


ஹிந்துத்துவ புரோகித் - யார் இவர்?

ATS இன் மூத்த அதிகாரி அளித்தத் தகவலின்படி, புனேயில் ஒரு நடுத்தர வர்க்க பிராமணக் குடும்பத்தில் பிறந்த புரோகித், மிகவும் கடவுள் நம்பிக்கை கொண்டவராகவும் நாட்டுப் பற்று மிக்கவராகவும் பரவலாக அறியப் படுகிறார்.


கல்வியில் சிறந்து விளங்கிய இவர், கடந்த அக்டோபர் 1993யில் இராணுவத்தில் இரண்டாவது லெப்டினெண்ட் ஆகச் சேர்ந்து பணியாற்றினார். இராணுவ அதிகாரியாகக் கடந்த அக்டோபர் 94இல் அஸ்ஸாமில் இவர் தனது முதல் பணியினைத் துவக்கினார். பின்பு மணிப்பூருக்கு மாற்றலாகி 95வரை பணியாற்றினார். அதன் பின் நாகாலாந்தில் பணியாற்றிய இவருக்கு 1996இல் கேப்டன் ஆகப் பதவி உயர்வு கிடைத்தது.


புனே, ராஜஸ்தான் மீண்டும் புனே என்று பல்வேறு மாநிலங்களில் பணியாற்றிய புரோகித், மேஜர் ஆகப் பதவி உயர்வு பெற்று இந்திய இராணுவத்தின் நுண்ணறிவுப் பிரிவில் (intelligence wing) பொறுப்பு மிக்கப் பதவியில் அமர்ந்தார். கடந்த 2000க்கும் 2005க்கும் இடைப்பட்ட காலத்தில் ஜம்மு, காஷ்மீர் மற்றும் அமர்நாத் பகுதிகளில் பணியாற்றினார்.


பொறுப்பான பதவியில் இருக்கும் போதுகூட தனது பயங்கரவாத இயக்கமான அபிநவ் பாரத் பற்றிய பல உரைகளை இவர் ஆற்றியது, அதற்கான இளைஞர்களைத் தேர்ந்தெடுத்தது, அவர்களுக்கு உரிய பயிற்சி அளித்தது ஆகிவற்றை புரோகித் செய்துள்ள அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகிக் கொண்டே வருகின்றன. அபிநவ் பாரத் பயங்கரவாத இயக்கத்திற்கு 5000 க்கு மேற்பட்ட உறுப்பினர்கள் நாடு முழுதும் சுறுசுறுப்புடன் இயங்கி வருகின்றனர்.

"மாலேகோனில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பிற்குத் தேவையான வெடிமருந்துகளையும் திட்ட வடிவத்தையும் முழுமையாக வடிவமைத்துக் கொடுத்தது நான்தான். ஆனால், அது அபிநவ் பாரத் உறுப்பினர்களுக்குக் கைமாறிய விதம் குறித்து எனக்குத் தெரியாது" என்று துவக்கத்தில் போலிசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார் புரோஹித்.


ஆனால், தொடர்ந்த போலிசாரின் புலன் விசாரணையில் இராணுவ உயர் அதிகாரியான புரோஹித், அபிநவ் பாரத் இந்து பயங்கரவாத இயக்கத்தின் உள்ளூர் நிறுவன உறுப்பினர் (Founder Member) என்ற திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.


ATS அளித்துள்ள தகவலின்படி இராணுவ உயர் அதிகாரி புரோஹித், தனது இயக்கத்தில் பணிக்கு அமர்த்தி உள்ள இளைஞர்களுக்கு வெடிமருந்துகளைத் தயாரிப்பது, வெடிகுண்டுப் பாகங்களை இணைப்பது ஆகிய பயிற்சிகளை முன்னின்று அளித்ததாகத் தெரிவித்துள்ளது. இதற்கான தகவல்களை அரசுத் தரப்பு வழக்கறிஞர் அஜய் மிஸ்ரா நீதிமன்றத்தில் பதிவு செய்துள்ளார்.


அபிநவ் பாரத் என்ற இந்து பயங்கரவாத இயக்கம், பிற ஹிந்துத்துவா இயக்கங்களுடன் பரஸ்பர தொடர்பில் இருத்தல், இயன்றவரையிலான மத வெறியினை ஊட்டி அவர்களைத் தயார் செய்தல், தயார் ஆனவர்களை உறுப்பினர்களாக ஆக்குதல் போன்ற பணிகளில்தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.


கடந்த அக்டோபர் 2007இல் மத்தியப் பிரதேசத்தில் உள்ள Army Education Corps Training College & Centreக்குப் பொறுப்பு வகித்த புரோஹித், அங்கு அரபுமொழி பயின்று தேர்ச்சி பெற்றிருப்பது வியப்புக்குரிய விஷயமாகும். பின் லெப்டினெண்ட் கலோனிலாகக் கடந்த ஏப்ரல் 2008இல் பதவி உயர்வு பெற்றார்.


இந்திய இராணுவத்தின் ஒரு பொறுப்பு மிக்க உயர் அதிகாரியான புரோஹித் இந்த பயங்கரவாதத்தினை நிகழ்த்த ஏராளமானவர்களுக்குப் பண உதவி செய்துள்ளதாகவும் அதில் பெரும்பாலானவை ஹவாலா மூலம் அனுப்பப் பட்டுள்ளதாகவும் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகிக் கொண்டே வருகின்றன.

கருத்துக்கள்   
பரித்
0 #1 பரித் -0001-11-30 05:53
வெட்கக்கேடு, இது இந்தியாதானா? 'வேற்றுமையில் ஒற்றுமை', 'மதச்சார்பற்ற ஜனநாயக நாடு' என்றெல்லாம் இனி சொல்வதற்கு இனி இந்தியாவிற்கு தகுதியுண்டா?

நம் மாநிலங்களிலும் மத்தியிலும் முதுகெலும்பற்ற மானங்கெட்ட ஆட்சி நடைபெறுவதால் உண்மைகள் வெளிவராது.

சரி அது போகட்டும், சனநாயகத்தின் தூண்கள் என்று தங்களை அடையாளப்படுத்து ம் நாளிதழ்கள் என்ன செய்கின்றன.

பியூஸ் போன பல்பு, சோக், சிறு துண்டு ஒயர்கள், மொபைல் போன், சட்டி பானையெல்லாம் முஸ்லிம்களின் வீடுகளில் கிடைத்தால் பயங்கரஆயுதங்களு டன் முஸ்லிம் தீவிரவாதிகள் கைது என பக்கம் பக்கமாக எழுதும் போது, மூட்டை மூட்டையாக பயங்கர வெடிகுண்டுகள் நாடு முழுவதும் சங்பரிவார (தொண்டர்கள்!!) தீவிரவாதிகள் வீட்டிலும் தொழிற்சாலைகளிலு ம் கிடைத்துக்கொண்ட ிருக்கும் இவ்வேளையில் எதையும் வெளியிடாமல் மறைப்பதேன்.

இவர்களெல்லாம் முஸ்லிம்கள் இல்லை என்ற காரணத்தினால்தானே?

உப்பு சப்பில்லாத விசயத்திற்கெல்ல ாம் விடுமுறை நாட்களென்றும் பாராமல் தானாக முன்வந்து விசாரணை செய்யும் நீதிமன்றமும் கண்களைக் கட்டிக்கொண்டிருப்பதேன்.

நீதிவான்களே மனிதநேயம் உள்ளவர்களே நீங்கள் பிறருக்கு எந்த பதிலும் சொல்லவிரும்பாவி ட்டாலும் உங்கள் மனசாட்சிக்கேனும ் சொல்லிவிடுங்கள் .
Quote | Report to administrator
உதயன்.
0 #2 உதயன். -0001-11-30 05:53
இந்துத்துவ பயங்கரவாதம் என்னும் நச்சு நாட்டின் பல்வேறு துறைகளிலும் ஊடுருவி, தற்போது ராணுவத்திலும் இருப்பது நாட்டின் இறையாண்மைக்கு வேட்டு வைக்கக்கூடியாதக வே இருக்கப்போகிறது என்பது கவலை தரும் விஷயம். இந்த மாதிரியான பயங்கரவாத கும்பல்களை பாதுகாத்து அரவணைக்கத் துடிக்கும் பால் தக்கரே போன்ற தீவிரவாதிகளை தடுக்க முனையாமல் வேடிக்கைப் பார்க்கும் மத்திய அரசு ஒரு கையாலாகாத அரசாகத்தான் தெரிகிறது. 'சுரனையற்ற இந்தியா' என்று கட்டுரை எழுதிய பாசிஷ்டுகள் இப்பொது என்ன செய்கிறார்கள்.? தெகல்கா, குஜராத் இன கலவரத்தைத் தோலுரித்துக் காட்டியும் இந்தியாவில் எவ்வித சலனமுமில்லை, குண்டு வெடித்தவர்கள் இந்துதுவா அமைப்பினர் என்ற போதும் நாட்டில் பெரியளவு எதிர்ப்புமில்லை எனும் போது, நிச்சயமாக தெரிகிறது இது 'சுரனையற்ற இந்தியா'.
Quote | Report to administrator
UTHAYAN
0 #3 UTHAYAN -0001-11-30 05:53
கடந்த செப்டம்பர் 29-ல் மகாராஷ்டிராவிலு ள்ள மாலேகானில் குண்டு வெடிப்பு நடந்தது. ஆறு பேர் உடல் சிதறி இறந்தார்கள். முஸ்லிம்கள் அதிக அளவில் வசிக்கும் பகுதி அது. அந்த குண்டுவெடிப்பு தொடர்பாக நடந்த விசாரணையில் இப்போது அணுகுண்டே வெடித்திருக்கிற து. இந்த குண்டுவெடிப்பு அக்கிரமச் செயலைச் செய்ததற்காக ஸ்ரீகாந்த் புரோகித் என்பவரை போலீஸார் கைது செய்திருக்கிறார ்கள். இவர் இந்திய ராணுவத்தில் லெப்டினன்ட் கர்னல் பொறுப்பை வகிப்பவர்.

அதேபோல் இந்தூரைச் சேர்ந்த பிரக்யா சிங் தாகூரையும் குற்றவாளி லிஸ்ட்டில் சேர்த்திருக்கிற து போலீஸ். இவர் இந்து மதப் பெண் துறவி. இந்தக் குண்டுவெடிப்புக ்குக் காரணமானவர்களாக மேலும் சில இந்திய ராணுவ அதிகாரிகளும், இந்துமத அமைப்பினரும் அடுத்தடுத்து கைது செய்யப்பட, தேசம் இப்போது அதிர்ச்சியின் விளிம்பில். மதிப்பிற்குரிய ராணுவத்தின் நடுநிலைத் தன்மையையும் இந்துமத அமைப்புகளின் தீவிரவாத எதிர்ப்புக் கொள்கைகளையும் மாலேகான் குண்டுவெடிப்பு ஒரே சமயத்தில் காலியாக்கியிருக்கிறது.

``மாலேகான் குண்டுவெடிப்புச ் சம்பவம் ஏதோ அபூர்வமான விதிவிலக்கு மாதிரி பேசுகிறார்கள். உண்மையில் அது பெரிய நெட்வொர்க்கின் ஒரு சின்ன பகுதிதான். திட்டமிட்டு குண்டு வெடிப்புகளை நடத்திவிட்டு, அந்தப் பழியை முஸ்லிம்கள் மேல் போடு கிற வேலையை இந்து அமைப்புகள் இதற்கு முன்பும் செய்துள்ளன.'' என்கிறார் பேராசிரியர் அ.மார்க்ஸ்.

``இதே மகாராஷ்டிராவிலு ள்ள நந்தெத் பகுதியில் 2006லும் 2007-ம் இரண்டு குண்டுவெடிப்புக ள் நடந்தன. பஜ்ரங்தள் அமைப்பினர் அதில் சம்பந்தப்பட்டிர ுந்ததை போலீஸ் கண்டுபிடித்தது. பிரபல மனித உரிமை ஆர்வலரும் நீதிபதியுமான கோஸ்லே பாட்டில் `இது எதிர்காலத்தில் நிகழவிருக்கும் இந்து பயங்கரவாதத்துக் கான அறிகுறி' என அப்போதே எச்சரித்தார்.

தமிழகத்தில் கூட இந்து மத அமைப்பினரின் சதி அரங்கேறியிருக்க ிறது. கடந்த பிப்ரவரியில் தென்காசி ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் நடந்த குண்டுவெடிப்பில ும் அந்த அமைப்பைச் சேர்ந்தவர்களேதா ன் சம்பந்தப்பட்டிர ுந்தார்கள். முஸ்லிம்களை பயங்கரவாதிகளாகப ் பிரசாரம் செய்கிற போக்கு இனியாவது இந்துமத அமைப்பினரால் நிறுத்தப்பட வேண்டும்'' என்கிறார் மார்க்ஸ்.


எங்கு குண்டுவெடிப்பு நடந்தாலும், போலீஸ் கண்களை மூடிக்கொண்டு முஸ்லிம்களை கைது செய்யும் அணுகுமுறையையும் மாலேகான் குண்டுவெடிப்பு கேள்விக்குள்ளாக்கியுள்ளது.

``இதுவரை குண்டு வெடிப்புகளில் தொடர்புள்ளவர்கள ாக போலீஸாரால் கைது செய்யப்பட்ட முஸ்லிம்கள் உண்மையிலேயே குற்றவாளிகள்தான ா என்ற சந்தேகத்தை மாலேகான் சம்பவம் ஏற்படுத்தியுள்ள து. 2001-ல் நாடாளுமன்றத் தாக்குதல் முதல் சமீபத்தில் நடந்த மீரட் குண்டுவெடிப்பு வரை முஸ்லிம்கள் தொடர்பு படுத்தப்பட்ட அனைத்து பயங்கரவாதச் சம்பவங்களையும் மறுவிசாரணைக்கு உட்படுத்த வேண்டும்'' என்று வலியுறுத்துகிறா ர் தமிழக முஸ்லிம் முன்னேற்ற கழகத் தலைவர் .


இது போன்ற கொடூரமான தீவிரவாதச் செயல்களில் ஈடுபடுவோர் அபிநவ் பாரத் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்றும் அந்த அமைப்பினர் இந்தியாவின் பல்வேறு துறைகளுக்குள்ளு ம் ஊடுருவி உள்ளனர் என்றும் உளவுத்துறை தகவல்கள் சொல்லுகின்றன.

``ராணுவம் உள்ளிட்ட பல முக்கியத்துறைகள ில் ஆர்.எஸ்.எஸ், பஜ்ரங்தள் உள்ளிட்ட அமைப்பினரின் ஊடுருவல் இப்போது வெட்டவெளிச்ச மாகியுள்ளது. இந்த ஆபத்தான போக்குக்கு ஆரம்பத்திலேயே முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்'' என்று நடுநிலையாளர்கள் வைக்கும் கோரிக்கையை செவிமடுத்தால், இந்தியாவில் குண்டுவெடிப்புச ் சப்தங்கள் குறையும்..

---------------நன்றி: 'குமுதம்' 19-11-2008
Quote | Report to administrator
abdul azeez
0 #4 abdul azeez -0001-11-30 05:53
அநியாயம் செய்யும் கூட்டத்தினர்க்க ு உதவும் காவல் துறையும், நீதித்துறையும், மற்றும் ஊடகங்கள். தன் மத சார்பு நிலையில் ஒரு பக்கமாக சாய்ந்து தன் கடமையை செய்யும் பொழுது. அதில் இந்திய நாட்டின் இறையாண்மை மிதிக்கப்படுகிற து.பாதிக்கப்படு ம் அபலையின் அழுகுரலும் அனாதையாக்கப்படு ம் பச்சிளம் குழந்தையும், நீதி மறுக்கப்படும் ஏழ்மை மக்களின் திருப்தி இல்லாமல் இந்தியா உருப்படாது. உருப்படவும் கூடாது.

மா சலாம்
அப்துல் அசீஸ்.
Quote | Report to administrator
muhammad
0 #5 muhammad -0001-11-30 05:53
WHY NOT CENTRAL GOVERNMENT STILL BAN ALL THE SUNG PARIVAR GROUPS? FOR WHAT THEY ARE WAITING NOW? WHETHER TO 'BUY' ATS? or TO 'BUY 'JUDGES? or TO MAKE ANOTHER 'NANAVATHY COMMISION' ON THESE ISSUES? or WAITING FOR ELECTION OVER? or TO 'CLEAN-UP' ALL EVIDENCES? last but not least IS THE CONGRESS REALLY AN OPPONENT PARTY FOR BJP? or BOTH FROM SUNG PARIVAR GROUPS? (ya Allah! save us)
Quote | Report to administrator
முருகேஷ்
0 #6 முருகேஷ் 2010-12-14 18:44
தட்ஸ்தமிழ் தளத்தில் இன்று (14.12.10) வெளியான செய்தி:

ஹைதராபாத்: ஹைதராபாத்தில் உள்ள மெக்கா மசூதியில் நடந்த குண்டுவெடிப்புச ் சம்பவம் தொடர்பான வழக்கில் அபினவ் பாரத் இந்து அமைப்பைச் சேர்ந்த தேவேந்திர குப்தா மற்றும் லோகேஷ் சர்மா ஆகியோர் மீது ஹைதராபாத் கோர்ட்டில் சிபிஐ குற்றப்பத்திரிக ்கை தாக்கல் செய்தது.

இந்த இருவரும் ஆஜ்மீர் குண்டுவெடிப்பு வழக்கிலும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு ள்ளது குறிப்பிடத்தக்கது.

ஹைதராபாத் மெக்கா மசூதியில், 2007ம் ஆண்டு மே 18ம் தேதி, வெள்ளிக்கிழமையன ்று, இஸ்லாமியர்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்தபோ து குண்டுவெடித்தது . மசூதி வளாகத்திற்குள் வெடித்த இந்த குண்டில் சிக்கி 9 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து அங்கு பெரும் கலவரம் வெடித்தது. இந்த கலவரத்தை அடக்க போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவத்தில் 2007ம் ஆண்டு ஜூன் மாதம் சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. வழக்கில் அபினவ் பாரத் என்ற வலதுசாரி இந்து தீவிரவாத அமைப்புக்குத் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அந்த அமைப்பின் சர்மா, குப்தா உள்ளிட்ட 6 பேர் சேர்க்கப்பட்டனர்.

இவர்களில் சர்மா, குப்தா ஆஜ்மீர் வழக்கில் சிக்கி கைதாகியிருந்தனர ். அவர்களை ஹைதராபாத்துக்கு க் கொண்டு வந்து விசாரித்த சிபிஐ, பின்னர் இருவரையும் ஹைதராபாத் சிறையில் அடைத்தது. வழக்கின் முக்கிய குற்றவாளியான சந்தீப் சாங்கே, ராமச்சந்திர கல்சங்கரா என்கிற ராம்ஜி ஆகியோர் தொடர்ந்து தலைமறைவாக உள்ளனர். இன்னொரு குற்றவாளியான சுவாமி அஸ்னிமானந்த் சிபிஐயின் விசாரணை வளையத்தில் உள்ளார். இன்னொரு குற்றவாளியான சுனில் ஜோஷி என்பவர் 2007ம் ஆண்டிலேயே கொல்லப்பட்டு விட்டார்.

இந்த வழக்கில் நேற்று 14வது கூடுதல் தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் கோர்ட்டில் குற்றப்பத்திரிக ்கையைத் தாக்கல் செய்தது சிபிஐ. 80 பக்கங்களைக் கொண்ட இந்த குற்றப்பத்திரிக ்கையில் அபினவ் பாரத் அமைப்புதான் இந்த செயலுக்குக் காரணம் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

English summary

Three years after a blast at Mecca Masjid claimed nine lives in Hyderabad, the CBI yesterday filed a charge sheet against Devendra Gupta and Lokesh Sharma, who are also accused in the Ajmer blast case. The probe agency filed the charge sheet running into 80 pages against Gupta, allegedly linked to right-wing group Abhinav Bharat, and Sharma in the XIV additional chief metropolitan magistrate (ACMM) Court in Hyderabad. The bomb explosion inside the Masjid during Friday prayers on May 18, 2007 here had claimed nine lives while five persons were killed in police firing during clashes that erupted after the blast.
Quote | Report to administrator
ஆரோக்கியமான சிந்தனைப் பரிமாற்றங்கள் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த இயலும். வாருங்கள். உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்:
இது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.


சமீப கருத்துக்கள்