குர்ஆனில் முரண்பாடுகளா? (பகுதி-1)

Share this:

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்… குர்ஆனில் முரண்பாடுகள் உள்ளன என்ற பெயரில் இஸ்லாத்தின் எதிரிகள் சிலர் கூறும் கற்பனைக் கதைகளை என்னுடன் சவூதியில் பணிபுரியும் நண்பர் ஒருவர் என்னிடம் கொடுத்தார். அவற்றை உங்களுக்கு அனுப்பியுள்ளேன். இதில் உள்ள கேள்விகளுக்கான பதில்களையும், குர்ஆன் வசனங்களில் முரண்பாடு இல்லை என்பதற்கான தெளிவுகளையும் தக்கச் சான்றுகளோடு தருமாறு கேட்டுக் கொள்கிறேன். (வாசகர் அப்துர் ரஹ்மான், சவூதி அரேபியா)

 

ஐயம்:இறைவன் பூமியை படைத்தது ஆறு நாட்களிலா? (குர்ஆன் 7:54, 10:3, 11:7, 25:59)  அல்லது எட்டு நாட்களிலா? (41:9-12)

 

தெளிவு:- வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்…

தங்களது ஐயங்களை சத்தியமார்க்கம்.காம் தளத்திற்கு அனுப்பி வைத்தமைக்கும் நன்றி. உங்கள் நண்பரோ அல்லது அவருக்கு இந்த ஐயங்களை எழுதித் தந்த பிற மத சகோதரர்களோ, தீர்க்கமான முன்முடிவுகள் ஏதுமின்றி விசாலமான மனதுடன் வாசித்து புரிந்து கொண்டால் தெளிவு கிடைக்கும் என நம்புகிறோம். இவற்றை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

இறைவன் வானங்களையும் பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான்.

‘நிச்சயமாக உங்கள் இறைவனாகிய அல்லாஹ்தான் வானங்களையும் பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான்…”

அல்குர்ஆன் 7:54, 10:3, 11:7, 57:4 ஆகிய வசனங்கள், வானங்கள் மற்றும் பூமியை ஆறு நாட்களில் படைத்ததாகக் கூறுகின்றன.

இறைவன் வானங்களையும் பூமியையும் அவற்றிற்கிடையே உள்ளவற்றையும் ஆறு நாட்களில் படைத்தான்.

‘அவன்தான் வானங்கள், பூமி மற்றும் அவற்றிற்கிடையிலுள்ளவற்றையும் ஆறு நாட்களில் படைத்தான்…”

அல்குர்ஆன் 25:59, 32:4, 50:38 ஆகிய வசனங்கள், வானங்களையும், பூமியையும், அவ்விரண்டிற்குமிடையே உள்ளவற்றையும் ஆறு நாட்களில் படைத்ததாகவும், வானங்களும் பூமியும் ஆறு நாட்களில் படைக்கப்பட்டது என்பதில் அவ்விரண்டிற்குமிடையே உள்ளவற்றையும் சேர்த்தே ஆறு நாட்கள் என்றும் குறிப்பிடப்படுகின்றன. அதாவது,

1) வானங்கள்.

2) பூமி.

3) பூமிக்கு மேல் உள்ளவை. (இடைப்பட்டவை)

என 25:59, 32:4, 50:38 ஆகிய வசனங்களில் மூன்று பிரிவுகளாக அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றை அறிய,

  • ”பின்னர் இரண்டு நாட்களில் அவற்றை ஏழு வானங்களாக அமைத்தான்…” (அல்குர்ஆன் 41:12)

  • இரண்டு நாட்களில் பூமியைப் படைத்தவனை…” (அல்குர்ஆன் 41:9)

  • ”அதன் மேற்பகுதில் மலைகளை அமைத்தான். இன்னும் அதில் அவன் பாக்கியம் பொழிந்தான். மேலும், அதில் அதன் உணவுகளைச் சரியாக நான்கு நாட்களில் நிர்ணயித்தான். கேள்வி கேட்போருக்கு (இதுவே விடையாகும்) (அல்குர்ஆன் 41:10)

41:10 வது வசனத்தில் நான்கு நாட்கள் என்று பூமியைப் படைத்த இரண்டு நாட்களும் சேர்த்தே கூறப்பட்டுள்ளது.

பூமியைப் படைக்கவும், பூமியில் உயிரினங்களுக்குத் தேவையான உணவுகளை அமைக்கவும் நான்கு நாட்கள் என 41:9,10 ஆகிய வசனங்களில் சேர்த்துக் கூறப்படுகின்றன.

வானங்களைப் படைக்க இரண்டு நாட்கள். பூமியைப் படைக்க இரண்டு நாட்கள் இவற்றுக்குச் சமமாக, வானங்களுக்கும் பூமிக்குமிடையே உள்ளவற்றை அமைக்க இரண்டு நாட்கள் என மூன்று பிரிவுகளாக சொல்லப் பட்டுள்ளவற்றை 3 x 2 = 6  அதாவது ”இறைவன் ஆறு நாட்களில் வானங்களையும் பூமியையும் படைத்தான்” என்று முரண்பாடின்றி ஒற்றைக் கருத்தையே இறைமறை வசனங்கள் கூறுகின்றன.

(இறைவன் மிக்க அறிந்தவன்)

 

அடுத்தடுத்த ஐயங்களுக்கான விளக்கங்கள் தொடர்ந்து பதிவாகும், இன்ஷா அல்லாஹ்…

 

குர்ஆனில் முரண்பாடுகளா? (பகுதி-2)

குர் ஆனில் முரண்பாடுகளா? (பகுதி-3)


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.