முகப்பு

இஸ்லாம்

செய்திகள்

தகவல்

கட்டுரைகள்

சேவைகள்

தொடர்பு கொள்க!

English

பிற மதத்தினருக்காக

ஐயம்: விபச்சாரத்திற்குரிய தண்டனை எது?
• ஆணுக்கும், பெண்ணுக்கும் 100 சவுக்கடிகள் (24:2)
• பெண்ணுக்கு ஆயுள் சிறை; ஆணுக்கு தண்டனையில்லை (4:15)

தெளிவு:

மது அருந்துதல், களவாடுதல், விபச்சாரம், வன்புணர்ச்சி, அவதூறு கூறல், ஓரினச் சேர்க்கை, கொலை செய்தல் போன்ற கொடிய குற்றங்களுக்கு, இஸ்லாம் விதித்துள்ள குற்றவியல் தண்டனைகள் அர்த்தமுள்ளவையாகும். குற்றங்கள் களையப்பட வேண்டும் என்கிற நடுநிலை சிந்தனையுடையோர் எவரும் இஸ்லாமிய குற்றவியல் தண்டனைகள் அவசியமானவை என்பதை ஒப்புக் கொள்வார்கள். நவீன உலகில் பெருகிவரும் குற்றங்கள் களையப்பட வேண்டுமாயின் இஸ்லாமிய குற்றவியல் தண்டைகளை நடைமுறைப் படுத்திட வேண்டும் எனவும் கூறி வருகின்றனர். பெருகிவரும் குற்றங்களைக் கண்டு நாம் எங்கு வாழ்கின்றோம், எங்கு சென்று கொண்டிருக்கிறோம் என்கிற அதிர்ச்சியில் மலைத்து, அரண்டு மனம் பதறிப் போயுள்ளவர் ஏராளம்!

மக்களைப் பாதுகாக்க வேண்டிய அரசுகள் குற்றங்களுக்குத் துணை நிற்கின்றன. உதாரணமாக: விபரீத விளைவுகளைத் தரும் என்று நன்கு தெரிந்தும், மது வியாபாரத்தை அரசாங்கமே முன்னின்று நடத்தி, குற்றங்கள் அதிகரிக்க வித்திடுகின்றன. கொடிய குற்றங்களுக்கு வலுவான தண்டனைகள் வழங்கப்படாமல் குற்றங்கள் குறையப் போவதில்லை! இருக்கும் குற்றவியல் தண்டனைச் சட்டமோ, குற்றங்கள் குறைய உதவப் போவதில்லை.

கேள்வியில் எழுப்பியுள்ள சந்தேகங்களுக்கும் இங்கு நாம் விவரித்துக் கொண்டிருப்பதற்கும் தொடர்பில்லை என்றாலும், ''விபச்சாரம்'' மனித சமூகச் சீர்கேடு என்றிருந்தும் அரசுகளே விபச்சாரத்திற்கு அங்கீகாரம் வழங்குவது வேதனைக்குரிய விஷயம். விபச்சாரக் குற்றத்திற்கு இஸ்லாமிய தண்டனை கடுமையாக இருந்தாலும், குற்றங்கள் களையப்பட அல்லது குறைய உதவும். இந்த வகையில் விபச்சாரக் குற்றத்திற்கு இரு வகையான தண்டனைகளை இஸ்லாம் விதித்துள்ளது. அவற்றைக் காண்போம்:

உங்கள் பெண்கள் வெட்கக் கேடானதைச் செய்தால் உங்களில் நான்கு சாட்சிகள் மூலம் நிரூபிக்கச் சொல்லுங்கள். அவர்கள் சாட்சி கூறினால் அப்பெண்கள் மரணிக்கும் வரை அல்லது அவர்கள் விஷயத்தில் அல்லாஹ் வேறு வழியைக் காட்டும் வரை வீட்டில் அவர்களைத் தடுத்து வையுங்கள். (அல்குர்ஆன் 4:15)

மேற்கண்ட வசனம், விபச்சாரக் குற்றத்திற்குக் குறிப்பிட்ட தண்டனை விதிக்கப்படாமல் இருந்த, இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில் விதிக்கப்பட்டது.

கேள்வியில் எழுப்பியுள்ள, குர்ஆனில் முரண்பாடுகள் உள்ளன என்கிற தரப்பிலிருந்து ஆதாரமாக வைத்த இருவசனங்களில் மேற்கண்ட வசனத்தில், உங்கள் பெண்கள் வெட்கக் கேடானதைச் செய்தால், பெண்ணின் மீது விபச்சாரக் குற்றம் சுமத்துபவர்கள் அதை நான்கு சாட்சிகளைக் கொண்டு நிரூபிக்க வேண்டும் என போகிற போக்கில் பெண்களின் மீது வீணான அவதூறுகள் பரப்புவதைத் தகர்த்து விடுகின்றது.

நான்கு சாட்சிகள் மூலம் நிரூபிக்கப்பட்டால், ''அப்பெண்கள் மரணிக்கும் வரை அல்லது அவர்கள் விஷயத்தில் அல்லாஹ் வேறு வழியைக் காட்டும் வரை வீட்டில் அவர்களைத் தடுத்து வையுங்கள்.'' என்று இரு ஆலோசனைகள் வழங்கப் படுகின்றன. இன்றும் பெண் பிள்ளைகளின் நடவடிக்கைகள் சரியில்லை என உறுதியாக அறிந்தால், இனி படிக்கச் செல்லவேண்டாம் - வேலைக்குப் போகவேண்டாம் என பிள்ளைகள் வெளியில் செல்வதைத் தவிர்த்து வீட்டில் தடுத்து வைத்து விடுகின்றனர் பெற்றோர். குடும்ப கண்ணியம் மற்றும் பெண்மக்களின் எதிர்கால நன்மையைக் கருதியும் இவ்வாறு தடுத்து வைப்பதைத் தவறு என்று சொல்வதற்கில்லை! தண்டனை எனவும் எடுத்துக் கொள்வதற்கில்லை.

அதுவும், அவர்கள் விஷயத்தில் இறைவன் வேறு வழியைக் காட்டும் வரை என இடைக்கால அவகாசம் வழங்கப்பட்டு பின்னர், விபச்சாரக் குற்றத்திற்குத் தண்டனை விதித்து 24ம் அத்தியாயத்தின் 2வது வசனம் அருளப்பட்டன:

விபச்சாரம் செய்யும் பெண்ணையும், விபச்சாரம் செய்யும் ஆணையும் அவர்கள் ஒவ்வொருவரையும் நூறு கசையடி அடியுங்கள். அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நீங்கள் நம்பினால் அல்லாஹ்வின் சட்டத்தில் அவ்விருவர் மீதும் உங்களுக்கு இரக்கம் ஏற்பட வேண்டாம். அவ்விருவர் தண்டிக்கப் படுவதை நம்பிக்கை கொண்டோரில் ஒரு கூட்டம் பார்த்துக் கொண்டிருக்கட்டும். (அல்குர்ஆன் 24:2)

இறைச் சட்டத்தை நிறைவேற்றுவதில் உங்களுக்கும் இரக்கம் ஏற்படவேண்டாம் என்றும் விபச்சாரன், விபச்சாரி தண்டிக்கப்படுவதை நம்பிக்கை கொண்டோர் பார்க்க வேண்டும் எனவும் மற்றவருக்குப் படிப்பினையாக்கியது இஸ்லாம்.

இறைமறையின் கட்டளைப்படி விபச்சாரி, விபச்சாரன் ஒவ்வொருவருக்கும் நூறு கசையடி அடித்துத் தண்டிக்கும்படி சட்டம் நடைமுறைக்கு வந்தது. இது குறித்து இறைத்தூதர் (ஸல்) அவர்களின் அறிவிப்பு வருமாறு:

''(விபச்சாரக் குற்றத்திற்கான தண்டனை சட்டத்தை) என்னிடமிருந்து பெற்றுக் கொள்வீர்! அல்லாஹ் (வாக்களித்திருந்ததைப் போன்று) பெண்களுக்கு ஒரு வழியை ஏற்படுத்திவிட்டான். மணமாகாத பெண்ணுடன் மணமாகாத ஆண் விபச்சாரம் செய்துவிட்டால் நூறு கசையடிகள் வழங்கி, ஓராண்டு காலத்திற்கு நாடு கடத்தப்பட வேண்டும். மணமான பெண்ணுடன் மணமான ஆண் விபச்சாரம் செய்துவிட்டால் நூறு சாட்டையடிகள் வழங்கி (உயிர் பிரியும்வரை) கல்லெறி தண்டனையும் வழங்கப்பட வேண்டும். என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் - உபாதா பின் ஸாமித் (ரலி) நூல்கள் - முஸ்லிம் 3489,3490 திர்மிதீ 1354)

பெண்கள் விஷயத்தில் இறைவன் வேறுவழி ஏற்படுத்தும்வரை என்று 4:15வது வனத்தில் கூறியுள்ள வேறுவழியை இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு இறைவனால் அறிவிக்கப்பட்டு, மேற்கண்ட நபிவழிச் செய்தியாக விபச்சாரத்திற்கான தண்டனை சட்டங்கள் நடைமுறைக்கு வந்தன.

இதன் பிறகு, மணமாகாத ஆணோ - பெண்ணோ விபச்சாரம் செய்தால் அவர்களுக்கு கசையடிகளும், ஓராண்டு காலம் நாடுகடத்தலும்; மணமான ஆணோ - பெண்ணோ விபச்சாரம் செய்தால் அவர்களை உயிர் பிரியும் வரை கல்லெறிந்து கொல்வதும் சட்டமாகியது. தொடர்ந்து அச்சட்டம் கடைபிடிக்கப் பட்டது, அது குறித்த பல நபிவழிச் செய்திகளிலிருந்து இரு அறிவிப்புகள்:

கிராமவாசிகளில் ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ்வின் சட்டத்தின் படியே நீங்கள் எனக்குத் தீர்ப்பளிக்கும் படி நான் தங்களைக் கேட்டுக் கொள்கிறேன்" என்று கூறினார்; அவரை விட விளக்கமுடையவராக இருந்த அவரின் எதிரி, -ஆம், எங்களுக்கிடையே அல்லாஹ்வின் சட்டத்தின்படி தீர்ப்பளியுங்கள்" என்று கூறினார். 'என்னை(ப் பேச) அனுமதியுங்கள்" என்று கிராமவாசி கூற நபி(ஸல்) அவர்கள், 'சொல்" என்று கூறினார்கள்.

அவர், 'என் மகன் இவரிடம் வேலைக்காரனாக இருந்தான். அப்போது இவரின் மனைவியுடன் விபச்சாரம் செய்துவிட்டான். என் மகனைக் கல்லால் அடித்துக் கொன்று விடவேண்டும் என்று என்னிடம் தெரிவிக்கப் பட்டது. எனவே, நான் (இந்த தண்டனையிலிருந்து அவனைக் காப்பாற்றுவதற்காக) அவனுக்காக நூறு ஆடுகளையும் ஓர் அடிமைப் பெண்ணையும் பிணைத் தொகையாகத் தந்தேன். பிறகு, அறிஞர்களிடம் நான் விசாரித்தபோது, என் மகனுக்கு நூறு கசையடிகளும் ஓராண்டுக் காலத்திற்கு நாடு கடத்தலும் தான் தண்டனையாகத் தரப்பட வேண்டும் என்றும், இந்த மனிதரின் மனைவிக்குக் கல்லெறி(ந்து கொல்லும்) தண்டனை கொடுக்கப் படவேண்டும் என்றும் என்னிடம் தெரிவித்தனர்" என்று கூறினார்.

இதைக் கேட்ட இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! உங்கள் இருவருக்குமிடையே நான் அல்லாஹ்வின் சட்டத்தின் படியே தீர்ப்பளிக்கிறேன். அடிமைப் பெண்ணும் ஆடுகளும் (உன்னிடமே) திருப்பித் தரப்பட வேண்டும். உன் மகனுக்கு நூறு கசையடிகளும் ஓராண்டுக் காலம் நாடு கடத்தும் தண்டனையும் தரப்பட வேண்டும்" (என்று கூறிவிட்டு, அருகிலிருந்த உனைஸ் இப்னு ளஹ்ஹாக்(ரலி) அவர்களை நோக்கி) 'உனைஸே! நீங்கள் இந்த மனிதரின் மனைவியிடம் சென்று, அவள் (தன் விபசாரக் குற்றத்தை) ஒப்புக் கொண்டால் அவளுக்குக் கல்லெறி தண்டனை கொடுங்கள்" என்று கூறினார்கள். அவ்வாறே, உனைஸ் அவர்கள் அவளிடம் சென்று விசாரிக்க, அவளும் (தன் குற்றத்தை) ஒப்புக் கொண்டாள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அவளைக் கல்லெறிந்து கொன்று விடும்படி உத்தரவிட, அவ்வாறே அவள் கல்லெறிந்து கொல்லப்பட்டாள். (அறிவிப்பவர்கள் - அபூ ஹுரைரா(ரலி) மற்றும் ஸைத் இப்னு காலித் அல் ஜுஹைனீ(ரலி) நூல்கள் - புகாரி 2725, முஸ்லிம் 3502, திர்மீதி 1353)

மேற்கண்ட செய்தியில், வேலைக்காரராக அமர்த்தப்பட்ட கிராமவாசியின் மகன் திருமணம் ஆகாதவர். அவருக்கு நூறு கசையடிகளும், ஓராண்டு காலம் நாடுகடத்தலும் விபச்சாரக் குற்றத்திற்கு தண்டனையாகவும், முதலாளியின் மனைவி மணமுடித்தவர் என்பதால் அவரைக் கல்லெறிந்து கொல்வதை விபச்சாரக் குற்றத்திற்கு தண்டனையாகவும் தீர்ப்பளித்து தண்டனை நிறைவேற்றப்பட்டது.

யூதர்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் சென்று அவர்களிடம், தம் சமுதாயத்தாரிடையே ஓர் ஆணும் ஒரு பெண்ணும் விபசாரம் செய்துவிட்டதாகக் கூறினார்கள். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'நீங்கள் கல்லெறி தண்டனை குறித்து தவ்ராத்தில் என்ன காண்கிறீர்கள்?' என்று கேட்டார்கள். அதற்கவர்கள், 'அவர்களை நாம் கேவலப்படுத்திட வேண்டும் என்றும், அவர்கள் கசையடி கொடுக்கப் படுவார்கள் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது" என்று பதிலளித்தார்கள்.

உடனே, (யூத மத அறிஞராயிருந்து இஸ்லாத்தை ஏற்ற) அப்துல்லாஹ் இப்னு சலாம்(ரலி) 'நீங்கள் பொய் சொன்னீர்கள். (விபசாரம் செய்தவர்களை சாகும்வரை) கல்லால் அடிக்க வேண்டுமென்றுதான் அதில் கூறப்பட்டுள்ளது" என்று கூறினார்கள். உடனே, அவர்கள் தவ்ராத்தைக் கொண்டு வந்து அதை விரித்தார்கள். அவர்களில் ஒருவர் 'விபசாரிகளுக்கு கல்லெறிந்து கொல்லும் தண்டனை தரப்படவேண்டும்' என்று கூறும் வசனத்தின் மீது தன்னுடைய கையை வைத்து மறைத்து, அதற்கு முன்பும் பின்பும் உள்ள வசனத்தை ஓதினார்.

அப்போது அப்துல்லாஹ் இப்னு சலாம்(ரலி), 'உன் கையை எடு" என்று சொல்ல, அவர் தன்னுடைய கையை எடுத்தார். அங்கே (விபசாரக் குற்றத்திற்கு) கல்லெறி தண்டனை தரும்படி கூறும் வசனம் இருந்தது. உடனே யூதர்கள், 'அப்துல்லாஹ் இப்னு சலாம் உண்மை கூறினார். முஹம்மதே! தவ்ராத்தில் கல்லெறி தண்டனையைக் கூறும் வசனம் இருக்கத்தான் செய்கிறது" என்று கூறினார்கள். உடனே, அவ்விரண்டு பேரையும் சாகும் வரை கல்லால் அடிக்கும்படி நபி(ஸல்) அவர்கள் உத்திரவிட்டார்கள். அவ்வாறே அவ்விருவருக்கும் கல்லெறி தண்டனை வழங்கப்பட்டது. அப்போது அந்த ஆண், அப்பெண்ணைக் கல்லடியிலிருந்து பாதுகாப்பதற்காக தன் உடலை (அவளுக்குக் கேடயம் போலாக்கி) அவளின் மீது கவிழ்ந்து (மறைத்துக்) கொள்வதை பார்த்தேன். (அறிவிப்பவர் - அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) நூல்கள் - புகாரி 3635, முஸ்லிம் 3503)

இஸ்லாத்தை ஏற்ற ஆண், பெண் முஸ்லிம்களும் விபச்சாரம் செய்த குற்றத்திற்காக அவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டு நிறைவேற்றப் பட்டுள்ளன. விரிவஞ்சி அந்தச் செய்திகளைத் தவிர்க்கிறோம்.

விபச்சாரத்திற்கான குற்றவியல் தண்டனை சட்டத்தில், குர்ஆனில் முரண்பாடு உள்ளன என வாதிப்பது தவறான புரிதலாகும். விபச்சாரத்தில் ஈடுபடும் ஆண்கள், பெண்கள் இருபாலினத்தாருக்கும் சமமான தண்டனை என்பதே இஸ்லாத்தின் நிலைப்பாடு! இஸ்லாமிய நாடு என அறிவித்து, முஸ்லிம்கள் ஆட்சி செய்யும் நாடுகளில் இன்றும் விபச்சாரக் குற்றவியல் தண்டனை என விபச்சாரம் செய்தவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப் படுகின்றது. ஆகவே, குர்ஆனில் முரண்பாடுகள் இல்லை!

(இறைவன் மிக்க அறிந்தவன்)  

 

கருத்துக்கள்   
ரஹ்மத்துல்லா
0 #1 ரஹ்மத்துல்லா 2016-06-02 19:35
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.
குர்ஆனில் விபச்சாரிக்கு கல்லால் எரிந்து கொல்லப்பட வேண்டும் என்ற சட்டம் ஏன் அருளப் படவில்லை? குர்ஆனில் 100 கசையடிகள் மட்டுமே தண்டனை ர்னக்கூறப் பட்டுள்ளது, இதை எவ்வாறு உறுதிபட எடுப்பது? இவ்வாறு ஹதீஸை எடுக்க குரானின் சட்டங்கள் யாவை?
Quote | Report to administrator
Abu Muhai
0 #2 Abu Muhai 2016-06-05 21:59
Quoting ரஹ்மத்துல்லா:
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.
குர்ஆனில் விபச்சாரிக்கு கல்லால் எரிந்து கொல்லப்பட வேண்டும் என்ற சட்டம் ஏன் அருளப் படவில்லை? குர்ஆனில் 100 கசையடிகள் மட்டுமே தண்டனை ர்னக்கூறப் பட்டுள்ளது, இதை எவ்வாறு உறுதிபட எடுப்பது? இவ்வாறு ஹதீஸை எடுக்க குரானின் சட்டங்கள் யாவை?


வ அலைக்குமுஸ்ஸலாம ் வரஹ்,

1)விபச்சாரக் குற்றம் செய்தவர்களைக் கல்லெறிந்து கொல்லப்பட வேண்டும் என்ற சட்டம் குர்ஆனில் ஏன் அருளப்படவில்லை?

2)விபச்சாரக் குற்றமிழைத்தவர் களுக்கு நூறு கசையடிகள் மட்டுமே தண்டனை எனக் குர்ஆனில் கூறப்பட்டுள்ளது இதை எவ்வாறு உறுதிபட எடுப்பது?

3)இவ்வாறு ஹதீஸை எடுக்க குர்ஆனின் சட்டங்கள் யாவை?

மேற்கண்ட மூன்று விதமான கேள்விகளை சகோதரர் எழுப்பியுள்ளார் . முதலாவது கேள்விக்கான விடையோ, விளக்கமோ எவரிடமும் இல்லை.

குர்ஆனை இறக்கி அருளியவன் அல்லாஹ் என்பதால், முதல் கேள்வி அல்லாஹ்வை நோக்கித் திரும்பும். யா அல்லாஹ்வே! விபச்சாரக் குற்றத்திற்கான மரண தண்டனைச் சட்டத்தை நீ ஏன் குர்ஆனில் அருளவில்லை? என இறைவனிடம் கேள்வி கேட்க முடியுமா என்றால்,

"அவன் செய்பவை பற்றிக் கேட்கப்பட மாட்டான். அவர்கள்தாம் கேட்கப்படுவார்க ள்" (அல்குர்ஆன் 21:23) எனவே அல்லாஹ்வை யாரும் கேள்வி கேட்க முடியாது! நாம்தாம் கேள்வி கேட்கப்படுவோம்.

இரண்டாவது கேள்வி: விபச்சாரக் குற்றத்திற்குத் தண்டனையாக நூறு கசையடி அடியுங்கள் என அல்குர்ஆன் 24:2வது வசனம் கூறுகின்றது. இதை எவ்வாறு உறுதிபட எடுப்பது? என முதல் கேள்விக்கு நேர் எதிர்மறையாக இரண்டாவது கேள்வி அமைந்துள்ளது அதாவது, விபச்சாரக் குற்றத்திற்கான மரண தண்டனை சட்டம் குர்ஆனில் இல்லையே என்று முதல் கேள்வி எழுப்பி விட்டு, விபச்சாரக் குற்றத்திற்கான குர்ஆனில் அருளப்பட்ட கசையடி தண்டனையை எவ்வாறு உறுதிப்படுத்துவ து? என கேள்விகளில் சந்தேகம் எழுப்பப்படுகின்றது.

காரணம்: விபச்சாரம் செய்வது சமூக அந்தஸ்தாக தற்போது மாறி வருகின்றது. ஓர் ஆணும் பெண்ணும் மன சம்மதத்துடன் முறையாகத் திருமணம் செய்து தாம்பத்திய உறவில் ஈடுபடுவதில் நியாயம் இருப்பதுபோல், ஓர் ஆணும் பெண்ணும் சம்மதித்துக் கொண்டால் யாரும் யாருடனும் உடலுறவு வைத்துக்கொள்ளலா ம் அதற்குத் திருமணம் என்கிற அங்கீகாரம் தேவையில்லை எனும் அளவிற்கு விபச்சாரம் சமூக நெறியாக அங்கீகாரம் பெற்று வருகின்றது.

அதனால்தான், விபச்சாரக் குற்றத்திற்கு கசையடி தண்டனையா? மரண தண்டனையா? என்று விபச்சாரக் குற்றவியல் இஸ்லாத்தின் தண்டனைச் சட்டத்தை ஏற்க இயலாமல் மூன்றாவது கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

இஸ்லாமிய மரபுப்படி, "லாயிலாஹா இல்லல்லாஹ் முஹம்மதுர்ரஸுலு ல்லாஹ்" என்பதே அடித்தள நம்பிக்கை. அல்லாஹ்வை ஏக இறைவனாகவும் முஹம்மது நபியை இறைவனின் தூதராகவும் முஸ்லிம்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.

அல்லாஹ்வின் தூதரைப் பின்பற்ற வேண்டுமென குர்ஆனில் அநேக வசனங்கள் கூறுகின்றன எடுத்துக் காட்டாக:

அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப்படுங்கள் , அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் மாறு செய்யாதீர்கள், அல்லாஹ்வின் தூதரைப் பின்பற்றுங்கள், அல்லாஹ்வின் தூதர் கொடுத்ததை ஏற்றுக் கொள்ளுங்கள் தூதர் விலக்கியதை விட்டும் விலகிக் கொள்ளுங்கள், அல்லாஹ்வின் தூதரிடம் அழகிய முன்மாதிரி உள்ளது என அல்லாஹ்வுக்கும் நம்பிக்கையாளர்க ளுக்கும் உள்ள ஒரே தொடர்பாளர் அல்லாஹ்வின் தூதர் மட்டுமே என்று குர்ஆனின் பல வசனங்கள் வலியுறுத்துகின்றன.

அல்லாஹ்வின் தூதரின் சொல், செயல், அங்கீகாரம் எனப்படும் ஹதீஸ்களும் இறைச் செய்திகளே! ஹதீஸ்களிலிருந்த ு சட்டம் இயற்ற குர்ஆன் வழிகாட்டுகின்றத ு. குர்ஆனின் வழிகாட்டல்படியே மணமாகாதவர் விபச்சாரம் செய்தால் அவருக்கு கசையடி தண்டனையும்,
மணமுடித்தவர் விபச்சாரம் செய்தால் அவருக்கு மரண தண்டனையும் விதித்துள்ளது இஸ்லாம்.

கசையடி தண்டனை அல்லாஹ்வின் வேதத்திலும், மரண தண்டனை அல்லாஹ்வின் உத்தரவுப்படி ஹதீஸ்களிலும் இஸ்லாமிய குற்றவியல் தண்டனைகளாகப் பதிவாகியுள்ளன.

விபச்சாரக் குற்றத்திற்கு மரண தண்டனையா? என்று மலைப்பாகத் தோன்றினாலும் விபச்சாரத்தினால ் கொடிய சமூகச் சீரழிவு ஏற்படுவது திண்ணம்.

"விபச்சாரத்தை நீங்கள் நெருங்காதீர்கள் . அது மானக் கேடானதாகவும் தீய வழியாகவும் இருக்கிறது" (அல்குர்ஆன் 17:32)

மானக்கேடும் தீய வழியும் எவை எனச் சிந்தித்தால் விபச்சாரம் நெறிகெட்ட செயல் என்பதை உணரலாம்.
(அல்லாஹ் மிக அறிந்தவன்)
Quote | Report to administrator
Farhan
0 #3 Farhan 2017-07-07 17:23
அஸ்ஸலாமு அலைக்கும்

விபச்சாரம் செய்த பெண்ணையே திருமணம்
முடிக்க இஸ்லாத்தில் அனுமதி உன்டா
Quote | Report to administrator
Abu Muhai
0 #4 Abu Muhai 2017-07-08 10:18
Quoting Farhan:
அஸ்ஸலாமு அலைக்கும்

விபச்சாரம் செய்த பெண்ணையே திருமணம்
முடிக்க இஸ்லாத்தில் அனுமதி உன்டா


வ அலைக்குமுஸ்ஸலாம ் வரஹ்,

ஒரு பெண்ணுக்கு ஒரே நேரத்தில் பத்து கணவர்கள் என்ற அளவில் திருமண உறவை அங்கீகரித்திருந ்தது அன்றைய அரபு சமுதாயம்.

இது வெளிப்படையான விபச்சாரம் என்றாலும் அவர்களின் விபச்சாரக் கலாச்சாரம் சமூக அந்தஸ்தாக கருதப்பட்டது!

இந்த காலகட்டத்தில் இஸ்லாம் மீள் எழுச்சி மார்க்கமாக மீண்டும் தோன்றி விபச்சாரம் மானக்கேடான செயல் என அந்த மக்களிடையே விபச்சாரத்தைத் தடை செய்து, விபச்சாரக் குற்றத்திற்குக் கடுமையான தண்டனைச் சட்டத்தையும் விதித்தது!

அன்று இஸ்லாத்தைத் தழுவிய பெரும்பான்மை ஆண்களும் பெண்களும் விபச்சாரம் செய்வதை மனித ஒழுக்கமற்ற மானக்கேடான செயலாகக் கருதியதில்லை, இஸ்லாத்தை ஏற்ற பின்னரே, இஸ்லாத்தின் அறவுரைப்படி விபச்சாரத்திலிர ுந்து விலகிக்கொண்டனர்.

(நபியே!) நம்பிக்கை கொண்ட பெண்கள் உம்மிடம் வந்து, அல்லாஹ்வுக்கு எதனையும் இணைவைக்க மாட்டோம், திருடமாட்டோம், விபச்சாரம் செய்யமாட்டோம், குழந்தைகளைக் கொல்லமாட்டோம்.. .. (அல்குர்ஆன் 060:012

என்று நபியிடம் உறுதி மொழி உடன் படிக்கை எடுக்கச் சொல்கிறான் இறைவன்!

எனவே, திருமணத்திற்கு முன் தவறிழைத்தவர்கள் , திருமணத்திற்குப ் பின் விபச்சாரம் செய்யமாட்டோம் என ஆணும் பெண்ணும் உறுதிமொழி எடுத்துக்கொண்டு , திருமணம் முடித்து இல்லறத்தில் இணைய மார்க்க ரீதியாக தடையேதும் இல்லை!

(அல்லாஹ் மிக அறிந்தவன்)
Quote | Report to administrator
Farhan
0 #5 Farhan 2017-07-19 09:02
அஸ்ஸலாமு அலைக்கும்...

பள்ளிவாசலில் தஹஜ்ஜத் தொழுகை தொழ முடியுமா..??

* குர்ஆனை பார்த்து தஹஜ்ஜத் தொழுகை தொழ முடியுமா...?

குர்ஆன் பார்த்து தொழும் முறை என்ன....?
Quote | Report to administrator
ஆரோக்கியமான சிந்தனைப் பரிமாற்றங்கள் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த இயலும். வாருங்கள். உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்:
இது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.


சமீப கருத்துக்கள்