முகப்பு

இஸ்லாம்

செய்திகள்

தகவல்

கட்டுரைகள்

சேவைகள்

தொடர்பு கொள்க!

முஸ்லிம்களுக்காக

ஐயம்: அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

என் பாட்டனாருக்கு இரண்டு மனைவியர். பாட்டனாருக்கு என் தந்தை முதல் மனைவியின் மகன். என் சிறிய தந்தை இரண்டாம் மனைவியின் மகன். நான் என் சிறிய தந்தையின் மகளைத் திருமணம் செய்யலாமா? தயவு செய்து எனக்கு பதில் அனுப்பவும்.

மின்னஞ்சல் வழியாக சகோதரர் அஜீஸ் ஜாஃபர்.

தெளிவு: வ அலைக்கும் ஸலாம் வரஹ்...

ஒருவர் தனது சிறிய தந்தையின் மகளைத் திருமணம் செய்ய மார்க்கத்தில் தடை இல்லை.

உங்களுக்கு (மணமுடிக்க) விலக்கப்பட்டவர்கள்: உங்கள் தாய்மார்களும் உங்கள் புதல்வியரும் உங்கள் சகோதரிகளும் உங்கள் தந்தையின் சகோதரிகளும் உங்கள் தாயின் சகோதரிகளும் உங்கள் சகோதரனின் புதல்வியரும் உங்கள் சகோதரியின் புதல்வியரும் உங்களுக்குப் பாலூட்டிய (செவிலித்) தாய்மார்களும் உங்கள் பால்குடிச் சகோதரிகளும் உங்கள் மனைவியரின் தாய்மார்களும் ஆவார்கள். அவ்வாறே, நீங்கள் ஒரு பெண்ணை விவாகம் செய்து அவளுடன் நீங்கள் சேர்ந்துவிட்டால், அவளுடைய முந்திய கணவனுக்குப் பிறந்த உங்கள் கண்காணிப்பில் இருக்கும் மகளை நீங்கள் கல்யாணம் செய்யக்கூடாது. ஆனால் நீங்கள் ஒரு பெண்ணை மணந்த பின்னர், அவளுடன் வீடு கூடாமலிருந்தால் (அவளை விலக்கி அவளுக்கு முந்திய கணவனால் பிறந்த பெண்ணை விவாகம் செய்து கொள்வதில்) உங்கள் மீது குற்றமில்லை. உங்களுக்குப் பிறந்த குமாரர்களின் மனைவியரையும் நீங்கள் விவாகம் செய்து கொள்ளக்கூடாது. இரண்டு சகோதரிகளை (ஒரே காலத்தில் மனைவியராக) ஒன்று சேர்ப்பது விலக்கப்பட்டது - இதற்கு முன் நடந்து விட்டவை தவிர (அவை அறியாமையினால் நடந்து விட்டமையால்), நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்போனும், கருணையுடையோனுமாக இருக்கின்றான். (அல்குர்ஆன்: 4:23)

உடன் பிறந்த அண்ணன்-தம்பிகளுக்குப் பிறந்த ஆண்-பெண் மக்கள் ஒருவரையொருவர், "அண்ணன்", "தங்கை", "அக்கா", "தம்பி" என்ற உறவுமுறையில் அழைத்துக் கொண்டாலும் ஒரே தந்தைக்குப் பிறந்த ஆண்-பெண் மக்களிடையே ஏற்படும் சகோதர, சகோதரி இரத்த உறவு போன்று, பெரிய தந்தை-சிறிய தந்தை மக்களிடையே சகோதர-சகோதரி உறவை இறைவன் ஏற்படுத்தவில்லை.

மேற்கண்ட திருமறை (4:23வது) வசனத்தில் திருமணம் முடிக்க விலக்கப்பட்டவர்களில் ''உங்கள் சகோதரிகளும்'' என்பதில் ஒரு தாய் தந்தையருக்குப் பிறந்த பெண் மக்களும் ஒரு தந்தை இரு அன்னையருக்குப் பிறந்த பெண் மக்களும் சகோதரிகள் என்ற இரத்த உறவு வட்டத்திற்குள் வந்துவிடுவர்.

அதுபோல் ஒரு பெண்ணுக்கு முந்திய கணவன், பிந்திய கணவன் என இரு கணவருக்குப் பிறந்த ஆண்-பெண் மக்களாக இருந்தாலும், இருவரும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் என்பதால் இவர்களும் உடன் பிறந்த சகோதர-சகோதரியாவர்.

"உங்கள் சகோதரிகளை மணமுடிக்காதீர்கள்" என இறைவன் விலக்குவது இந்த உறவுகளைத்தான்! கூடுதலாக, ஒரே தாயிடம் பால் குடித்தவர்கள் ஒருவரையொருவர் திருமணம் செய்து கொள்ளலாகாது.

மற்றபடி ஓர் ஆண், தன் பெரியப்பா-சித்தப்பா மகள், அல்லது பெரியம்மா-சின்னம்மா மகளைத் திருமணம் செய்துகொள்வதை இறைவன் தடை செய்யவில்லை.

(இறைவன் மிக்க அறிந்தவன்) 

Comments   

Hussain
0 #1 Hussain 2009-08-24 12:42
அஸ்ஸலாமு அலைக்கும்
அப்படி என்றாள் வசனம் 33:50 க்கு விளக்கம் அளிக்கவும்.
Quote | Report to administrator
அபு வாஃபியா
0 #2 அபு வாஃபியா 2009-08-31 10:22
அஸ்ஸலாமு அலைக்கும், குர்ஆன் வசனம் 4:23ல் யாரை திருமணம் செய்யக்கூடாது என குறிப்பிட்டுள்ள தைப் போல் - திருமணம் செய்ய அனுமதிக்கப் பட்டவர்கள் யார் என்பதற்கு நேரடி வசனம் திருமறையில் உள்ளதா?
Quote | Report to administrator
அப்துர்ரஹீம்
0 #3 அப்துர்ரஹீம் 2012-12-20 00:12
சகோதரரே!! யாரை விவாகம் செய்யலாகாது என தெளிவாக குறிப்பிட்டுவிட ்டார்கள்,இதற்கு மேலும் ஏன் ஐய்யம்?
Quote | Report to administrator
mubarak
0 #4 mubarak 2016-12-20 22:31
நான் என் சித்தப்பா மகளின் மகளை காதலிக்கிறேன் அவளை திருமணம் செய்யலாமா
Quote | Report to administrator
Indian
0 #5 Indian 2016-12-22 05:34
Quoting mubarak:
நான் என் சித்தப்பா மகளின் மகளை காதலிக்கிறேன் அவளை திருமணம் செய்யலாமா

----------------------------

ஆடு உறவு, குட்டி பகையா?. சித்தப்பா மகளை திருமணம் செய்ய இஸ்லாத்தில் தடையில்லை என விளக்கிய பிறகு, சித்தப்பா மகளின் மகளை திருமணம் செய்யலாமா என கேட்பது அவசியமா?.
Quote | Report to administrator
raja
0 #6 raja 2017-03-07 09:59
நான் இந்து.இருப்பினு ம் சித்தப்பா பெண்ணை காதலிக்கிறேன்.ச ிலர் இதை சட்டப்படி குற்றம் என்கிறார்கள்.இந ்து உறவு முறையிலும் ஏகப்பட்ட குழப்பம் உள்ளது.ஆகையால் நான் செய்வது சரி என்கிறேன்.என்னை சட்டம் தண்டிக்குமா?
Quote | Report to administrator
Abu Muhai
0 #7 Abu Muhai 2017-03-08 13:07
Quoting raja:
நான் இந்து.இருப்பினும் சித்தப்பா பெண்ணை காதலிக்கிறேன்.சிலர் இதை சட்டப்படி குற்றம் என்கிறார்கள்.இந்து உறவு முறையிலும் ஏகப்பட்ட குழப்பம் உள்ளது.ஆகையால் நான் செய்வது சரி என்கிறேன்.என்னை சட்டம் தண்டிக்குமா?


இஸ்லாம் வாழ்க்கை முறை நெறிப்படி முஸ்லிம்கள் சித்தப்பா, சின்னம்மா மகளை மணமுடித்திட அனுமதியுள்ளது. இஸ்லாத்தின் இறைவேதம் குர்ஆனில் திருமண உறவு சட்டத்தில் இந்த அனுமதி பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்திய அரசியல் சாசன சட்டமும் தனியார் சட்டம் என்ற பிரிவில் முஸ்லிம்களின் திருமண சட்டத்தை அங்கீகரித்திருப ்பதால் ஒரு முஸ்லிம், சித்தப்பா மகளை மணமுடிப்பதில் எவ்வித தடையும் இல்லை!

ஒரு இந்து, சித்தப்பா மகளை மணமுடித்திட இந்து மதச்சட்டம் அனுமதிக்கின்றதா , இந்து மதவேத நூல்களில் திருமண சட்டம் குறித்து பதிவு செய்யப்பட்டுள்ள தா? என்பதை இந்துக்கள் ஆய்வு செய்து முடிவுக்கு வரவேண்டும்!

இந்துக்கள் அக்கா மகளை மணமுடித்துக் கொள்ளலாம்! முஸ்லிம்கள் அக்கா மகளை மணமுடித்திட தடையுள்ளது! இப்படி மதத்துக்கு மதம் திருமண உறவுகள் மாறுபடுகின்றது.

சித்தப்பா மகளைத் திருமணம் செய்வது சட்டப்படி குற்றம் என்று சொல்பவர்களிடம் எந்தச் சட்டப்படி குற்றம், இந்து மதச்சட்டப்படியா ? அல்லது இ பி கோ சட்டப்படியா? என்று கேள்வி கேளுங்கள்.

விடை கிடைத்தால் மறவாமல் பகிர்ந்து கொள்ளுங்கள்!
Quote | Report to administrator
Indian
0 #8 Indian 2017-03-08 22:17
// நான் இந்து.இருப்பினு ம் சித்தப்பா பெண்ணை காதலிக்கிறேன்.ச ிலர் இதை சட்டப்படி குற்றம் என்கிறார்கள் //
-------------------

இந்து திருமண சட்டத்தில் யார் யாரை திருமணம் செய்யலாமென்பது சொல்லப்படவில்லை . ஒவ்வொரு ஜாதியிலும் ஒரு வழக்கம் இருக்கிறது. ஒரு ஜாதியில் மாமனை திருமணம் செய்யலாம், இன்னொரு ஜாதியில் சித்தப்பனை திருமணம் செய்யலாமென இருக்கிறது. இமாச்சல பிரதேசத்தில், பாஞ்சாலி போல் ஒரு பெண் பல ஆண்களை திருமணம் செய்யும் வழக்கம் இருக்கிறது.

உங்கள் ஜாதியில் என்ன வழக்கமென்பதை உங்களுடைய ஜாதி தலைவர்களிடம் கேட்டு பாருங்கள்.
Quote | Report to administrator
Dhanush
+1 #9 Dhanush 2017-06-29 23:19
நண்பர் ராஐா கூறியது போல நான் எனது சித்தபப்பா மகளை காதலிக்கிறேன். நான் இந்து தவன் யாறேனும்உதவ முடியுமா.
Quote | Report to administrator
s.abdul azees
0 #10 s.abdul azees 2017-09-13 21:31
அஸ்ஸலாமு அழைக்கும்
என் பெயர்
அப்துல் அஜீஸ் நானும் என் பெரியத்தா மகள் பெனாசீர் பேகம் இருவரும் நிக்காஹ் செய்து கொள்ள விரும்புகிறோம்.
எங்கள் குடும்த்திற்கு தெரியாது
எப்படி கேட்பதென்று தெரியவில்லை.
எல்லாம் வல்ல இறைவனின் இறையச்சதோடு
வாழ்கின்ற எஙளுக்காக துவா கேளுங்கள் தோழர்களே .
Quote | Report to administrator
radha
0 #11 radha 2018-03-05 06:06
தந்தையின் தம்பி மகளை திருமணம் செய்ய இஸ்லாம் அனுமதிக்குமா?
Quote | Report to administrator
radha
0 #12 radha 2018-03-05 06:13
இந்து ஒருவர்,இஸ்லாம் மதம் மாறி தந்தையின் தம்பி மகளை திருமணம் செய்தால் சட்டப்படி செல்லுமா?
Quote | Report to administrator
Rifas
0 #13 Rifas 2018-06-07 14:55
அஸ்ஸலாமு அழைக்கும்
கேள்வி
தனது உம்மாவின் தங்கட்சியான சாட்சியின் மகனின் மகளை திருமணம் செய்ய முடியுமா?
Quote | Report to administrator

Add comment

இது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.


Security code
Refresh

சமீப கருத்துக்கள்