முகப்பு

இஸ்லாம்

செய்திகள்

தகவல்

கட்டுரைகள்

சேவைகள்

தொடர்பு கொள்க!

English

இஸ்லாம்

இஸ்லாமிய ஆண்டின் ஏழாவது மாதம் ரஜப்ஜப் மாதம் என்பது ஹிஜ்ரி எனும் இஸ்லாமிய ஆண்டின் ஏழாவது மாதமாகும். அது, அல்லாஹ்வினால் தனிப்பட்ட முறையில் சிறப்பித்து, தனி அந்தஸ்து பெற்ற மாதங்களில் ஒன்றாகும். அல்லாஹ் திருக்குர்ஆனின் 9ஆவது அத்தியாயமாகிய 'தவ்பா'வின் 36ஆவது வசனத்தில் கூறுகின்றான்:

"திண்ணமாக அல்லாஹ்வின் அங்கீகாரம் பெற்ற மாதங்களின் எண்ணிக்கை (ஓராண்டுக்குப்) பன்னிரண்டுதாம். (இவ்வாறே) வானங்களையும் பூமியையும் படைத்த நாளிலிருந்தே அல்லாஹ்வின் (பதிவுப்) புத்தகத்தில் (பதிவு செய்யப் பட்டு) உள்ளது. அவற்றுள் நான்கு(மாதங்கள்) புனிதமானவையாகும். இதுவே நேரான மார்க்கமாகும். ஆகவே அம்மாதங்களில் (போர் செய்து) உங்களுக்கு நீங்களே தீங்கிழைத்துக் கொள்ளாதீர்கள் ..."

அல்லாஹ் இந்த நான்கு புனித மாதங்களில் சிறப்புக் கவனம் செலுத்தி அதில் பாவங்களும் தீமைகளும் ஏற்படா வண்ணம் தவிர்த்துக் கொள்ளுமாறு கட்டளையிட்டுள்ளான்.

"நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வின் அடையாளச் சின்னங்களையும் சிறப்பான மாதங்களையும் ... (அவமதிப்பதை)நீங்கள் ஆகுமாக்கிக் கொள்ளாதீர்கள் ..." (5:2).

அதாவது, பாவமான காரியங்களைத் தவிர்ப்பதையும் அல்லாஹ் சிறப்பித்தவற்றுக்கு மாசு கற்பிப்பதையும் தடை செய்வதன் மூலம் இந்தப் புனித மாதங்களைக் கண்ணியப்படுத்திடுமாறு அல்லாஹ் நமக்கு ஏவியுள்ளான். இந்தத் தடையும் கட்டளையும் பாவமான காரியங்களில் கவனமாக இருப்பது போல் தவறான நம்பிக்கையின் அடிப்படையில் அமைந்த செயல்பாடுகளை விலக்குவதிலும் நாம் கவனமாக இருக்க வேண்டும் என்பதையும் உள்ளடக்கியுள்ளது. ஆனால் நம்மில் பலர் கண்ணியமான இந்த ரஜப் மாதத்தின் பெயரால் விசேஷமான நோன்புகள், 27ஆம் நாளன்று விசேஷமான தொழுகைகள், (கப்ருஸ்தான்) அடக்கஸ்தலத்தை தரிசித்து அங்கு விசேஷ துஆக்கள் ஓதுதல், இம்மாதத்தில் சிறப்புள்ளது என்று கருதி விசேஷமாக உம்ராக்கள் செய்தல் போன்ற நபிவழி(ஸுன்னத்து)க்குமாற்றமான பல்வேறு நூதன அனுஷ்டானங்களை நன்மை பெற்றுத் தரும் காரியமாக கருதி, இஸ்லாமிய மார்க்கத்தின் பெயரால் இம்மாதத்தில் நிறைவேற்றுவதைப் பரவலாகக் காணமுடிகிறது.

இஸ்லாமிய மார்க்கத்தில் இது போன்ற நபிவழியில் இல்லாத, குர்ஆனுக்கும் நபிவழி(ஸுன்னத்து)க்கும் மாற்றமான புதுமையான காரியங்களைச் செயல்படுத்துவது மிகவும் தீங்கான ஒன்றாகும். ஏனெனில் நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்வினால் மார்க்கம் முழுமை படுத்தப்பட்ட பின்னரே மரணித்தனர்.

"... இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தைப் பரிபூரணமாக்கி விட்டேன்; மேலும் நான் உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன்; இன்னும் உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே(இசைவானதாகத்)தேர்ந்தெடுத்துள்ளேன்"(5:3).

அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள் அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

"எவர் ஒருவர் இந்த மார்க்கத்தில் இல்லாத ஒன்றை உருவாக்குகிறாரோ அது அவரிடமிருந்து ஏற்றுக்கொள்ளப்படாது" (முஸ்லிம் 3242).

ரஜப் எனும் இம்மாதத்தில் பல 'பித்அத்' எனும் நூதனமான அனுஷ்டானங்கள் (மற்றும் நம்பிக்கைகள்) நன்மை தரும் எனும் பெயரால் நடைமுறையில் உள்ளன அவற்றில் சில.

1) ஸலாத்துல் ரகாஇப் எனும் நூதனத் தொழுகை

இது சிறப்பான நூற்றாண்டுகளான ஆரம்பகால நூற்றாண்டிற்குப் பிறகு குறிப்பாக ஹிஜ்ரி நான்காம் நூற்றாண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. சில பொய்யர்கள் இதை ரஜபுப் பிறை ஒன்றில் தொழ வேண்டும் என்று அறிமுகப்படுதினார்கள்.

ஹதீஸ்கலை வல்லுனர்கள் பெரும்பாலும் இதை பித்அத் என்று நிராகரித்துள்ளனர். இமாம் அபு ஹனீஃபா, ஷேக் இப்னு தைமிய்யா, இமாம் மாலிக், இமாம் ஷாஃபீ, இமாம் அஃத்ஃதவ்ரீ போன்ற பலரும் இதே கருத்தைக் கொண்டுள்ளனர்.

2) இம்மாதத்தின் முக்கியமான சம்பவங்களாகக் கூறப்படுபவை

இம்மாதப் பிறை ஒன்றில்தான் நபி முஹம்மத்(ஸல்) அவர்கள் பிறந்தார்கள்; 27 அல்லது 25ஆம் நாளன்று அவர்களுக்குத் தூதுத்துவம் வழங்கப்பட்டது போன்ற அனைத்துமே தவறான, ஆதாரமற்ற கூற்றுகளாகும்.

3) ஷப்-ஏ-மிஃராஜ்

நபி(ஸல்) அவர்களின் மிராஃஜ் எனும் விண்ணுலகப் பயணத்தை ஷப்-ஏ-மிஃராஜ் எனும் பெயரில் கொண்டாடுவது. ரஜப் மாததின் 27ஆம் நாளில் மிஃராஜ் நடைபெற்றதாக உள்ள ஒரு பலவீனமான செய்தியின் அடிப்படையில், முஹம்மத் நபி(ஸல்) அவர்களின் மிஃராஜ் எனும் விண்ணுலகப் பயணம் நமக்குத் தரும் படிப்பினைகள் யாவை என்பதைக் கருத்தில் கொள்ளாமல் மிஃராஜ் இம்மாதத்தில் நடந்ததாகக் கருதி அதைச் சிறப்பாகக் கொண்டாடுதல்.

இந்நாளைச் சிறப்பிக்கும் முகமாக இந்நாளில் விசேஷ நோன்பு நோற்பது, இரவு முழுவதும் விசேஷத் தொழுகைகள் தொழுவது, அதிலும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் 100 முறை ஆயத்துல் குர்ஸி, 100 முறை குல் ஹுவல்லாஹு போன்ற சூராக்கள் ஓதி தொழ வேண்டும் போன்ற நபிவழி ஆதாரமற்ற அமல்களைப் பலர் செய்கின்றனர். இது மிகப் பெரும் வழிகேடு ஆகும். புதிய வகைத் தொழுகைகளைப் புகுத்துவது, நபி (ஸல்) அவர்கள் நமக்கு நன்மையைப் பெறும் செயலை, அதாவதுமார்க்கத்தை முழுமையாகக் காட்டித் தரவில்லை என்று கூறுவதற்குச் சமமாகும்.

இன்னும் சிலர் அவர்கள் மிஃராஜ் என்று நம்புகின்ற நாளை இஸ்லாமிய விழாக்களில் ஒன்றாகவே கொண்டாடுவதைப் பார்க்க முடிகிறது. அதிலும் ஆண்-பெண்கள் கலந்து பெண்கள் ஹிஜாபின்றி வெளியில் செல்வது, ஹராமான முறையில் பாடல்கள் பாடுவது, கலந்துரையாடுவது போன்ற இதர தடுக்கப்பட்ட காரியங்களில் ஈடுபடுவதையும் பார்க்க முடிகிறது. இது இஸ்லாம் அனுமதித்துள்ள இரு பெருநாட்களிலும் அனுமதிக்க படாத ஒன்று எனும்போது இதுபோன்ற பித்அத்தான விழாக்களின் நிலை என்ன என்பதை விளக்கத் தேவை இல்லை. இவை அனைத்தும் ரஜப் மாதத்தின் 27ஆம் நாளில் மிஃராஜ் எனும் பயணம் நடந்ததாகக் கூறப்படும் ஆதாரமற்ற செய்தியின் அடிப்படையில் செய்யப்படுகின்றன.

மிஃராஜ் எனும் பயணம் இன்ன நாளில்தான் நடந்தது என்று ஆதாரப் பூர்வமான ஹதீஸ்கள் ஏதுமில்லை. எனில், இவ்வாறு மனம்போனபடிக் கொண்டாட நமக்கு எவ்வித அனுமதியுமில்லை. ஏனெனில் நபி(ஸல்) அவர்களோ அவர்களுடைய அருமைத் தோழர்களான ஸஹாபாக்களோ இவ்வாறு நமக்குக் காட்டித்தந்ததாகவோ செய்ததாகவோ எந்த ஆதாரமுமில்லை.

4) பல்வேறு ஆதாரமற்ற துஆக்களை ஓதுவது

 

ரஜப் மாதத்தில் ஓதவேண்டியவை என்ற பெயரில் பல்வேறு துஆக்களை சிலர் அறிமுகப்படுத்தியுள்ளனர். இவை அனைத்தும் நபி வழி ஆதாரமற்ற பித்அத்துகளாகும்.

5) கப்ருகளுக்கு செல்வது

இம்மாதத்தில் மட்டும் விசேஷமாகக் கப்ருக்களுக்குச் சென்று சில துஆக்கள் ஓதுவதும் பித்அத் ஆகும். பொதுவாக எல்லா நாட்களிலும் கப்ருகளுக்கு(பொது மையவாடிக்கு)ச் சென்று அங்குள்ளவர்களுக்காகப் பிராத்தனை செய்வது மார்க்கத்தில் அனுமதிக்கப் பட்ட ஒன்றே. மேலும் "கப்ருகளுக்குச் செல்வது மரணத்தின் சிந்தனையை ஏற்படுத்தும்; ஆகையால் கப்ருகளுக்கு செல்லுங்கள்" (திர்மிதீ 974) என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். ஆனால் அதை ரஜப் மாதத்தில் மட்டும் செய்வது நபி வழியல்ல.

6) கோன்டே கி நியாஜ்

இந்தப் பெயராலும், இன்னும் சில இடங்களில் பூரியான் ஃபாத்திஹா எனும் பெயராலும் விசேஷ பாத்திஹாக்கள் ஓதி விருந்துகள் என்றும் புனிதமானதாகக் கருதி இனிப்புகளும் உணவும் பரிமாறுவது, அது நன்மை என்று கருதுவது, அதை நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் விநியோகிப்பது ஆகிய அனைத்துமே தவிர்க்கப்பட வேண்டிய பித்அத்கள் ஆகும்.

7) ரஜப் மாத நோன்பு

இந்த மாதத்திற்கு என்று விசேஷ நோன்பு நோற்க குர்ஆனிலோ நபிவழியிலோ எந்த ஆதாரமுமில்லை. ஆகையால் வழமையாக நோன்பு நோற்பது என்பது வேறு; இம்மாதத்தின் சிறப்பு நோன்பு என்று கருதி இம்மாதத்தில் நோற்பது என்பது வேறு என்பதையும் உணர வேண்டும்.

8) விசேஷ உம்ராக்கள்

உம்ரா பயணம் மேற்கொள்வது அனுமதிக்கப்பட்ட ஒன்றே. ஆயினும் அதை இம்மாத்தில் செய்வது அதிக நன்மையானது என்று கருதுவது அல்லது இம்மாதத்தில் அதிகமான எண்ணிக்கையில் உம்ரா மேற்கொள்வது ஆதாரமற்ற செயலாகும்.

மேற்கண்டதைப் போன்ற ஒவ்வொரு பித்அத்தான காரியமும் வழிகேடு ஆகும் என்பதை உணர்ந்து நபிவழிக்கு மாற்றமான நம்பிக்கைகளையும் அமல்களையும் செய்வதைக் கைவிட வேண்டும். இல்லையெனில் "பித்அத்துகள் நரகில் சேர்க்கும்" (திர்மிதீ 1560) என்ற நபி (ஸல்) அவர்களின் எச்சரிக்கையை அலட்சியப்படுத்தி விட்டு நாமாகவே நரகிற்குச் செல்ல முயல்வதைப் போன்றதாகும்.

ஆகையால் ரஜபு மாத நூதன வழிபாடுகளையும் நடைமுறைகளையும் களைந்து, நபி வழியில் நடந்து, இம்மை மறுமை வெற்றியும் ஈடேற்றமும் பெற முறையாக முயல்வோமாக; அதற்கு அல்லாஹ் அருள் புரிவானாக! ஆமீன்.

கருத்துக்கள்   
portonovo kaja nazimudeen riyadh
0 #1 portonovo kaja nazimudeen riyadh -0001-11-30 05:53
மிக அருமையாக விளக்கியுள்ளீர் கள். இதுப்போல் நிறைய 'பித் அத்' (innovation) பற்றி எழுதி 'அறிவிலிகளை' உணர்வு படுத்துதல் மிக அவசியமான ஒன்றாகும். பாராட்டுகள்.
Quote | Report to administrator
Sultan
0 #2 Sultan 2010-06-24 14:49
"இவை அனைத்தும் மிஃராஜ் எனும் பயணம் நடந்ததாகக் கூறப்படும் ஆதாரமற்ற செய்தியின் அடிப்படையில் செய்யப்படுகின்ற ன." - Kindly change / correct this sentence.
Quote | Report to administrator
S.S.K
0 #3 S.S.K 2010-06-24 19:32
Assalamu Alaikum

"இவை அனைத்தும் மிஃராஜ் எனும் பயணம் நடந்ததாகக் கூறப்படும் ஆதாரமற்ற செய்தியின் அடிப்படையில் செய்யப்படுகின்ற ன." - Kindly change / correct this sentence

Though the sub heading and Paragraph mention this can be corrected like below to make it more clear.

"இவை அனைத்தும் ரஜப் மாததின் 27ஆம் நாளில் மிஃராஜ் எனும் பயணம் நடந்ததாகக் கூறப்படும் ஆதாரமற்ற செய்தியின் அடிப்படையில் செய்யப்படுகின்ற ன." -
Quote | Report to administrator
சத்தியமார்க்கம்.காம்
0 #4 சத்தியமார்க்கம்.காம் 2010-06-24 21:01
அன்பு வாசகர்கள் சுல்தான், எஸ்.எஸ்.கே ஆகிய இருவரின் ஆலோசனைக்கு இணங்கி 'ரஜப் மாதத்தின் 27ஆம் நாளில்' எனச் சேர்க்கப் பட்டுள்ளது.

அவ்விருவருக்கும் நன்றி!
Quote | Report to administrator
M .Muhammad
0 #5 M .Muhammad 2010-06-26 00:37
ரஜபு மாத நூதன வழிபாடுகளையும் நடைமுறைகளையும் களைந்து, நபி வழியில் நடந்து, இம்மை மறுமை வெற்றியும் ஈடேற்றமும் பெற முறையாக முயல்வோமாக; அதற்கு அல்லாஹ் அருள் புரிவானாக! ஆமீன்.
Quote | Report to administrator
alavutheen
0 #6 alavutheen 2010-07-05 13:47
அஸ்ஸலாமு அலைக்கும்
ரஜப் மாத்தின் சிறப்பை பற்றி எழுதிருந்தீர்கள ் நன்றி.ஏன் அதற்கு தீடிரென மாறி பித்அத் என்று பேச வருகிறீர்கள். நோன்பு தொழுகைகளை எப்போது செய்தால் என்ன ? காலமமெல்லாம் தொழுகையையும் நோன்பையும் பிடிப்பதை இஸ்லாம் கட்டாயப்படுத்த வில்லை. எனவே மனிதனுக்கு எந்த நேரத்தில் அவகாசம் கிடைக்கின்றதோ அந்த நேரத்தில்தான் செய்யமுடியும். கட்டாயமான விடயங்களைதான் அந்த அந்த நேரத்தில் செய்ய வேண்டும்.மாறாக சுன்னத்தான அவனால் முடியுமான எந்த நற்காரியங்களையு ம் அவனுக்க கிடைக்கின்ற நேரத்தில்தான் செய்ய முடியும். எனவே சுன்னா சன்னா என்று பேசுகிறீர்களே நபிகளாருடைய அழகான சுன்னத்துகளை அடிப்படைகளை விட்டு விட்டு இவைகளை பேசுகிறீர்கள். நபிகளார் நடந்த மண்ணில் நடக்கின்ற கொடுமைகளும் கலாச்சார சீர்கேடுகளையும் பற்றி உங்ளால் ஏன் பேச முடிவதில்லை. அரபு நாடுகளில் நடக்கினற கொடுமைகளும் விபச்சார பெண்களின் ஆபசங்களும் உங்களுக்கு தீமைகளாக தெரிவதில்லையா? என் இவைகள் பற்றி உங்களை எழுத தடுப்பவைகள் அந்த நாடுகளில் இருந்து வருகின்ற பணங்களா?

எனவே உங்களால் முடிந்தால் நபிகளார் விட்டு சென்ற இரு பொக்கிஷங்களாக அல்குர்ஆனும் அஹ்லுல் பைத்தும் இருக்க ஏன் நபிகளார் விட்டுச் சென்றது அல்குர்ஆனும் நபி சுன்னாவும் என்கிறீர்களே இந்த தெளிவான ஹஸனான ஹதீஸ் உங்களின் கண்களுக்கு தெரிவதில்லையா? அதை விட்டு விட்டு பலயீனமா அறிவிப்பாக வந்திருக்கின்ற குர்ஆனும் நபி வழியும் என்று பேசகிறீர்களே அதை நீங்கள் எங்கு ஸஹீஹ் என படித்தீர்கள். அதை உங்களால் நிருபித்து காட்ட முடியுமா?

எனவே நபிகளாரின் சரியான சுன்னாவை அறிந்தவர்கள் அவர்களது குடும்பத்ததை தவிர வேறு யார் சிறந்தவராக இருக்க முடியும். சுன்னா சுன்னா பேசகின்ற போதே இஸ்லாத்தில் அத்தனை பிரிவுகளுக்கும் ஒவ்வொரு மாதிரியான அறிவுப்புகள் வைத்திருக்கிறார ்கள். எனவே எதை நபிகளாரின் சுன்னா என்று சொல்வது?எந்த கொள்கை நபிகளாரின் சுன்னா? சொல்லுங்கள். நபிகளாரை அல்லும் பகலும் நேசித்த ஸஹாபாக்கள் நபிகளாரின் வுளு எடுத்த தண்ணீரை எடுத்து உடலில் பூசிக் கொண்ட ஸஹாபாக்கள். ஆனால் நபிகாளார் எப்படி தக்பீர் கட்டி தொழுதார்கள் என்று தெரியாத பலவாறு அறிவிக்கிறார்கள ். சொல்லுங்கள்.இல் லை நபிகளார் பலவாறும் தொழுதார்களா? சரியாக சிந்தித்து பாருங்கள். எங்கயோ குழப்பங்கள் தலைவிரித்திருக் கின்றன என்பது தெளிவாகும். ஆகவே ஆரம்பத்திலிருந் து நபிகளார் வரலாற்றை படியுங்கள். அதன் பின்னர் முடிவெடுங்கள். எனவே இவைபற்றி க்ஆன் ஹதீஸ் ஆதரங்களுடன் நான் உங்களுக்கு எழுதுவேன் தற்போது வேலை பழு காரணமாக எழுத முடியவில்லை
Quote | Report to administrator
abudeen
0 #7 abudeen 2011-06-22 16:33
mr alavudeen u r right becouse they are saying sunna sunna ,but everyone following differnet way , everybody saying iam right ,our organisation right , our leader right , but they are fighting with each other,they dont gave prober knowlege
Quote | Report to administrator
M .Muhammad:
0 #8 M .Muhammad: 2011-06-24 12:20
அஸ்ஸலாமு அலைககும்
அன்பு சகோதரர் அலாவுத்தீன் & அபுதீன்

குர் ஆன் ஸுன்னா என்பவர்கள் அனைவரும் அதை முறையாக பின்பற்றாமல் ஹதீஸ்களை
ஆதாரமற்றது பல்வீனமானது என்று கூறி தமக்கு சரியாக தோன்றும் அமல்களில் மூழ்கி அதையே சரிகாண்பது தான் பிரச்சினகளுக்கு காரணம், பிரச்சினைக்கு தீர்வு அல்ல.


// எனவே உங்களால் முடிந்தால் நபிகளார் விட்டு சென்ற இரு பொக்கிஷங்களாக அல்குர்ஆனும் அஹ்லுல் பைத்தும் இருக்க ஏன் நபிகளார் விட்டுச் சென்றது அல்குர்ஆனும் நபி சுன்னாவும் என்கிறீர்களே இந்த தெளிவான ஹஸனான ஹதீஸ் உங்களின் கண்களுக்கு தெரிவதில்லையா?/ / // இவைபற்றி க்ஆன் ஹதீஸ் ஆதரங்களுடன் நான் உங்களுக்கு எழுதுவேன் தற்போது வேலை பழு காரணமாக எழுத முடியவில்லை//Ju ly 05, 2010 12:17

ஒராண்டு ஆகியும் ஒன்றும் எழுதவில்லை!!! எழுதியதற்கும் ஆதாரமில்லை.!!!

ஆகையால், நமக்கு பின்வரும் குர் ஆன் வசனமும், நபிமொழிகளும் உதவியானது என்பதில் யாருக்கும் ஐயம் வேண்டாம்."... இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தைப் பரிபூரணமாக்கி விட்டேன்; மேலும் நான் உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன்; இன்னும் உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே (இசைவானதாகத்) தேர்ந்தெடுத்துள ்ளேன்" (குர் ஆன் 5:3).

அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள ் அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:"எவர் ஒருவர் இந்த மார்க்கத்தில் இல்லாத ஒன்றை உருவாக்குகிறாரோ அது அவரிடமிருந்து ஏற்றுக்கொள்ளப்ப டாது" (முஸ்லிம் 3242).
"... இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தைப் பரிபூரணமாக்கி விட்டேன்; மேலும் நான் உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன்; இன்னும் உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே (இசைவானதாகத்) தேர்ந்தெடுத்துள ்ளேன்" (5:3).அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள ் அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:"எவர் ஒருவர் இந்த மார்க்கத்தில் இல்லாத ஒன்றை உருவாக்குகிறாரோ அது அவரிடமிருந்து ஏற்றுக்கொள்ளப்ப டாது" (முஸ்லிம் 3242).

"பித்அத்துகள் நரகில் சேர்க்கும்" (திர்மிதீ 1560) என்ற நபி (ஸல்) அவர்களின் எச்சரிக்கையை அலட்சியப்படுத்த ி விட்டு நாமாகவே நரகிற்குச் செல்ல முயல்வதைப் போன்றதாகும்.

ஆகையால் ரஜபு மாத நூதன வழிபாடுகளையும் நடைமுறைகளையும் களைந்து, நபி வழியில் நடந்து, இம்மை மறுமை வெற்றியும் ஈடேற்றமும் பெற முறையாக முயல்வோமாக; அதற்கு அல்லாஹ் அருள் புரிவானாக! ஆமீன்.

Quote | Report to administrator
Basheer
0 #9 Basheer 2011-06-27 11:18
அஸ்ஸ‌லாமு அலைக்கும்,
அல்ஹ‌ம்துலில்லாஹ் அல்லாஹும்ம‌ ஸ‌ல்லி அலா முஹ‌ம்ம‌தின்,
"அல்லாஹும்ம‌ பாரிக் ல‌னா ஃபீ ர‌ஜ‌ப‌, வ‌ ஷ‌ஃபான‌, வ‌ ப‌ல்லிக்ன‌ ர‌ம‌ளான்" என்ற‌ துஆ ஸ‌ஹீஹ் தானா?
Quote | Report to administrator
சத்தியமார்க்கம்.காம்
-1 #10 சத்தியமார்க்கம்.காம் 2011-06-27 18:57
அன்புச் சகோதரர் பஷீர்,
வ அலைக்குமுஸ்ஸலாம்.

தாங்கள் குறிப்பிட்டுள்ள வாறு ஸவாயித் முஸ்னது அஹ்மதில் மட்டும் ஒரு ஹதீஸ் பதிவாகியுள்ளது:

حَدَّثَنَا عَبْد اللَّهِ حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ عَنْ زَائِدَةَ بْنِ أَبِي الرُّقَادِ عَنْ زِيَادٍ النُّمَيْرِيِّ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا دَخَلَ رَجَبٌ قَالَ اللَّهُمَّ بَارِكْ لَنَا فِي رَجَبٍ وَشَعْبَانَ وَبَارِكْ لَنَا فِي رَمَضَانَ وَكَانَ يَقُولُ لَيْلَةُ الْجُمُعَةِ غَرَّاءُ وَيَوْمُهَا أَزْهَرُ

பிற ஸஹீஹ்களில் இந்த ஹதீஸைக் காணமுடியவில்லை.

இந்த ஹதீஸ் எடுத்தாளப்பட்டு ள்ள நூல்கள்:
ஸவாயிதுல் முஸ்னத் அஹ்மது (2346); கஷ்ஃபுல் அஸ்த்தார்(616) அமலுல் யவ்மி வல்லைலத்தி (658) ; அல் அவ்ஸத் (3939); அத்-துஆ (911); அல் ஹிலிய்யா (6/269); ஷுஅபுல் ஈமான் (3534); ஃபளாயிலுல் அவ்காத் (14); அல்மவ்ளிஹ் (2/473); தாரீக் இப்னு அஸாகிர் (40/57).

இந்த ஹதீஸ், பலவீனமான அறிவிப்பாளர் ஸாயிததிப்னி அபிர்ருகாத் வழியாக மட்டும் அறிவிக்கப்படுவத ால் பெரும்பாலான ஹதீஸ் கலை அறிஞர்கள் இதை ஏற்க மறுக்கின்றனர். அவர்களுள்

இமாம் தஹபீ, இமாம் ஹாபிள் இபுனு ஹஜர் அல்-அஸ்கலானீ, இமாம் இபுனு முயீன், இமாம் அபூதாவூது, இமாம் அபூஹாத்தம், இமாம் இபுனு ஹிப்பான், இமாம் நவவீ, இமாம் புகாரீ, இமாம் நஸயீ, இமாம் ஹைதமீ, இமாம் இபுனு ரஜப் (ரஹ்மத்துல்லாஹி அலைஹிம்) அடங்குவர்.

இந்த ஹதீஸை மறுதலிக்கும் இமாம்களின் நூல்கள்:
தாரீகுல் கபீர் (3/433); அல்ஜுர்ஹு (3/613); அல்மஜ்ரூஹீன் (1/308); அல்மீஸான் (1/308); அத்தஹ்தீப் (3/305); அத்தக்ரீப் (1/256); தாரீக் இபுனு முயீன் (2/179); அல்காமில் (3/1044); அல்அத்கார் (547); லதாயிஃபுல் மஆரிஃப் (பக்-143); அல்முஜம்மிஃ (2/165); தபய்யனுல் அஜப் (38).
Quote | Report to administrator
Basheer
0 #11 Basheer 2011-06-28 09:53
அஸ்ஸ‌லாமு அலைக்கும்,
அல்ஹ‌ம்துலில்லா ஹ் அல்லாஹும்ம‌ ஸ‌ல்லி அலா முஹ‌ம்ம‌தின்,

Jazakallahu khairen.. Thank U soooooo much. May ALLAH bless you all..
Quote | Report to administrator
மு.முஹம்மது அப்பாஸ்
0 #12 மு.முஹம்மது அப்பாஸ் 2012-06-14 10:03
அஸ்ஸலாமு அலைக்கும் அன்பான சகோதரர்களே,


حَدَّثَنَا عَبْد اللَّهِ حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ عَنْ زَائِدَةَ بْنِ أَبِي الرُّقَادِ عَنْ زِيَادٍ النُّمَيْرِيِّ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا دَخَلَ رَجَبٌ قَالَ اللَّهُمَّ بَارِكْ لَنَا فِي رَجَبٍ وَشَعْبَانَ وَبَارِكْ لَنَا فِي رَمَضَانَ وَكَانَ يَقُولُ لَيْلَةُ الْجُمُعَةِ غَرَّاءُ وَيَوْمُهَا أَزْهَرُ

இந்த துஆ ஸஹிஹ் வானது என்று சத்தியமார்க்க நிறுவனர் மறந்து விட்டார் என நினைக்கிறேன், ஹதிஸ்கலை வல்லுனர்களின் ஒரு பகுதியை மட்டும் பதித்து விட்டும் மற்றொரு ஹதிஸ்கலை வல்லுனர்களின் கருத்து களை பதிக்காதது ஏன்? உன்மையுடன் பொய்யை கலக்காதீர்கள் என்று உங்களை எச்சரிக்கை செய்கின்றேன், அதே போல் தான் மேல் உள்ள கட்டுரையையும் பதித்து உள்ளீர்கள், இன்சா அல்லா அதை நீண்ட தொடராக பின்பு வெளியிடுகிறேன்,

மேல் உள்ள ஹதிஸ் இமாம் அஹமது(ரஹ்), இமாம் தப்ரானி(ரஹ்), இமாம் திர்மதி(ரஹ்), இமாம் இப்னுஹிப்பான்(ர ஹ்) அவர்களும் ஸஹிஹ் வான தரத்தில் பதிவு செய்துள்ளார்கள் , சந்தேகம் இருப்பின் எடுத்து பார்.. மறுபடியும் நீங்கள் வாதம் பண்ணிவீர்கள் ஆனால், நான் இந்த ஹதிஸை எடுத்து கொள்ள மாட்டேன் என்று வாதாடினால் முதலில் நீங்கள் நான் பதித்த இமாம்கள்(ரஹ்) அவர்களின் ஹதிஸை நீ எங்கெல்லாம் பதித்து உள்ளாயோ அதை எல்லாம் எடுத்து விட்டு நீ மேற்சொன்ன துஆவை மறுத்துவிட்டு, உனக்கு வேணுகிற போது எடுத்து கொள்வதும், வேணாம் என்கிற போது விட்டு விடுவிதும் ஒரு முஸ்லிமுக்கு அழகல்ல
Quote | Report to administrator
சையத் பாஷா
0 #13 சையத் பாஷா 2012-06-15 22:59
சகோதரர் முஹம்மது அப்பாஸ்,

உண்மையுடன் பொய்யைக் கலப்பது எல்லாம் இருக்கட்டும்.

ஒரு சபையில் பேண வேண்டிய அடிப்படை நாகரீகத்தைக் கூட அறியாதவரா நீங்கள்?

கொல்லத் துடிக்கும் எதிரிகளிடம் கூட வார்த்தைகள் தடித்து விடாமல் கனிவுடன் பேசி மனதை வீழ்த்திய எம்பெருமான் நபி(ஸல்) அவர்களைத் தலைவராகக் கொண்ட சமூகம் ஸார் முஸ்லிம் உம்மத்!

இவ்வளவு கீழ்த்தரமான கமெண்ட்டையும் அனுமதித்து கருத்து சுதந்திரத்தைப் பேணிய சத்தியமார்க்கம் .... You are... One more step Ahead!!!
Quote | Report to administrator
abu hudhaifa
0 #14 abu hudhaifa 2012-06-27 22:33
//இன்சா அல்லா அதை நீண்ட தொடராக பின்பு வெளியிடுகிறேன்//
இந்த அப்பாஸ் சொல்வதை நிறைவேற்றுவதே இல்லை.தராவீஹ் சம்பந்தமாக நீண்ட கட்டுரை ஒன்றை நான் பதிவு செய்வேன் என்று சொன்னவர் தான் இவர் ஆனால் ஆண்டுகள் பல உருண்டோடியும் இவர் இன்னும் அதை பதிவு செய்ய காணோம்.எனவே இவர் சொல்கிற இதையும் தண்ணீரில் எழுதவேண்டியதுதா ன்.நிச்சயமாக பதிவு செய்ய மாட்டார் எல்லாம் வாய் சவடால் தான். சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்? கோபத்தில் இவருக்கு வார்த்தையை கொப்பளிக்க தெரியுமே தவிர சத்தியத்தை விளங்க வாதம் செய்யத்தெரியாது . "பித் அத்" வெறி தலை விரித்தாடுகிற இவர்களைப் போன்ற ஆட்கள் இருக்கின்ற வரை பித்அத்துக்கு சாவு கிடையாது.
Quote | Report to administrator
M Muhammad
0 #15 M Muhammad 2013-05-26 02:29
"திண்ணமாக அல்லாஹ்வின் அங்கீகாரம் பெற்ற மாதங்களின் எண்ணிக்கை(ஓராண் டுக்குப்) பன்னிரண்டுதாம். (இவ்வாறே) வானங்களையும் பூமியையும் படைத்த நாளிலிருந்தே அல்லாஹ்வின் (பதிவுப்) புத்தகத்தில் (பதிவு செய்யப் பட்டு) உள்ளது. அவற்றுள் நான்கு (மாதங்கள்)புனித மானவையாகும். (அவை துல்கஃதா, துல்ஹஜ், முஹர்ரம், ரஜப் ஆகிய 4 மாதங்களாகும்) ..." (திருக்குர்ஆன் 9 :36 )
Quote | Report to administrator
ஆரோக்கியமான சிந்தனைப் பரிமாற்றங்கள் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த இயலும். வாருங்கள். உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்:
இது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.


சமீப கருத்துக்கள்