சத்தியமார்க்கம்.காம்

ஜெர்மனில் தலைவிரித்தாடும் இஸ்லாமோஃபோபியா! print Email
செய்திகள் - உலகச் செய்திகள்
செவ்வாய், 07 ஜூலை 2009 12:49

இஸ்லாத்தின் மீதான காழ்ப்புணர்வும் அதீத பயமும் உலகில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இஸ்லாமிய அடையாளங்களுடன் ஒரு ஆணோ அல்லது பெண்ணோ சுதந்திரமாக வெளியே நடமாட முடியாத அளவுக்கு இந்த இஸ்லாமோஃபோபியா எல்லையைத் தொட்டு நிற்கிறது.

அதிலும் குறிப்பாக முஸ்லிம் பெண்கள் அணியும் ஹிஜாப் எனும் பர்தா, நாகரீகம் என்ற பெயரில் எவ்விதக் கட்டுப்பாடும் இல்லாமல் அரை-குறை ஆடை அணிந்து வலம் வருபவர்களிடையே மிகுந்த எரிச்சலைத் தோற்றுவித்து வருகிறது. சமீபத்தில் பிரெஞ்சு அதிபர் சார்கோஸி, பர்தாவின் மீதான தன் அதீத காழ்ப்புணர்வைக் கொட்டியதும் அதனைத் தொடர்ந்து, இந்திய உச்சநீதிமன்றத்தாலேயே மோசமானவர் என பட்டம் வழங்கப்பட்ட பால்தாக்கரே தன் வெறுப்பை உமிழ்ந்ததும் உலகம் கண்டது.

இந்த வரிசையில் வெறுப்பின் உச்சகட்டமாக, ஹிஜாப் அணிந்த ஒரே காரணத்திற்காக 31 வயதான மர்வா ஷெர்பினி என்ற முஸ்லிம் சகோதரி ஒருவர் ஜெர்மனியில் பொது இடத்தில் பலர் முன்னிலையில் கொடூரமான முறையில் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். மனதை உலுக்கும் கொடூரமான இச்சம்பவம் ஜெர்மனியின் ட்ரெஸ்டன் நகரில் நடந்துள்ளது. இந்தக் கொடூரக் கொலையைச் செய்த ஆக்ஸெல் என்பவரை போலிசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

நீதிமன்றத்தில் நீதிபதிகளும் மேலும் பலரும் கூடி இருந்த போது அவர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்தக் கொடூர சம்பவத்தில் தனது மனைவியைக் காக்கப் போராடிய மர்வாவின் கணவரான எல்வி ஒகஸ்-வும் கடுமையாக தாக்கப்பட்டு மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார். ஜெர்மனியின் செய்தி ஊடகங்கள் தரும் தகவலின் படி, ஷெர்பினியின் கணவரான ஒகஸ் கொலைகாரனால் கடுமையாகத் தாக்கப்பட்டதாகவும் இதனைத் தடுப்பதற்காக முன் வந்த போலிஸ்காரர் ஒருவரின் துப்பாக்கிக்குண்டு பாய்ந்து அவர் படுகாயம் அடைந்தார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 2008ம் வருடத்தில், தான் ஹிஜாப் அணிவதைக் கண்டு தன்னைப் "பெண் தீவிரவாதி" என ஆக்ஸெல் என்பவர் தொடர்ந்து கூறித் தொல்லை கொடுத்து வந்ததை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளார் ஷெர்பினி. இந்த வழக்கு ஏற்கனவே எகிப்து மற்றும் ஜெர்மனி மட்டுமின்றி சர்வதேச அளவில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருந்தது.

இச்சூழலில் வழக்கின் முடிவு வெளியானது. அதில் ஷெர்பினியை அவமதித்த குற்றத்திற்காக 750 யூரோக்கள் ($1,050) அபராதமாகச் செலுத்தும்படி ஆக்ஸெலுக்கு ஜெர்மனி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆக்ஸெல், இது தொடர்பாக அபராதம் செலுத்த நீதிமன்றம் வந்தபோது ஆத்திரம் தலைக்கேறி பலர் முன்னிலையில் ஷெர்பினியை குத்திக் கொலை செய்தார்.

தொடர்ந்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு மருத்துவர்கள் கடுமையாகப் போராடியும் ஷெர்பினியின் உயிரைக் காக்க முடியவில்லை. இவர் படுகொலை செய்யப்படும்போது மூன்று மாத கருவைத் தன் கருப்பையில் சுமந்தவராக இருந்தார் என்பதும் ஏற்கனவே மூன்று வயதுள்ள ஒரு குழந்தைக்குத் தாய் என்ற உருக்கமான செய்தியும் வெளியாகியுள்ளது. நீதிமன்றத்திலேயே அதுவும் தனது மூன்று வயது மகனின் கண்ணெதிரேயே இவர் படுகொலை செய்யப் பட்டுள்ளார்.

கொலைகாரனான 28 வயதான ஆக்ஸெல், ஜெர்மனியில் உள்ள முஸ்லிம்கள் மீது கடுமையான காழ்ப்புணர்ச்சி கொண்டவராவார் என்று ஜெர்மன் குற்றவியல் வழக்கறிஞர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

இச்செய்தி எகிப்து துவங்கி உலகம் முழுவதும் தீயாய் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹிஜாப் அணிந்த ஒரே காரணத்திற்காக அநியாயமாக ஒரு பெண்ணின் மீது அவதூறு/ பழி சுமத்திய ஒருவரை ஜெர்மனிய சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு, அவர் மீது வழக்குத் தொடர்ந்து வெற்றி பெற்ற ஒரு பெண் இவ்வாறு கொலை செய்யப் பட்டிருப்பது மிகவும் அநீதியான செயல் என்று இதனைக் கண்டித்து கண்டனங்கள் உலகம் முழுவதும் எழுந்துள்ளது.

இஸ்லாத்தில் இறைவனின் கட்டளையை ஏற்று ஹிஜாப் அணிந்து பேணுதலான முறையில் வாழ்ந்த ஒரே காரணத்திற்காக இப்பெண் படுகொலை செய்யப் பட்டிருப்பதால் இவர் வீரமரணம் அடைந்த வீராங்கனை என்று எகிப்திய மக்கள் அழைக்கின்றனர். அத்துடன் ஜெர்மனியில் தலைவிரித்தாடும் இஸ்லாமோஃபோபியா தொடர்பான செயல்களை எதிர்த்துத் தமது கண்டனங்களைப் பரவலாக தெரிவித்து வருகின்றனர்.

"கொலைகாரனான ஆக்ஸெல் ஏற்கனவே ஷெர்பினியை அடிக்கடி சீண்டி தொல்லை கொடுத்துக் கொண்டிருந்தார் என்றும் அவரது ஹிஜாபை வலுக்கட்டாயமாக பறித்து அதனைக் கிழிக்க முயற்சிகள் செய்தார் என்றும் ஷெர்பினியின் தங்கையான அதாரிக் அல் ஷெர்பினி எகிப்திய செய்தி ஊடகங்களில் தெரிவித்துள்ளார். மேலும் ஷெர்பினியின் கணவர் இத்தொல்லைகள் தொடர்பாக ஜெர்மனியின் உள்ளூர் காவல் நிலையத்தில் ஏற்கனவே புகார் கொடுத்திருந்ததையும் சுட்டிக்காட்டினார்.

"ஷெர்பினி ஹிஜாப் அணிவதால் அவருக்குப் பிரச்னைகள் ஏற்படும் என்றும் இதன் மூலம் அவரது உயிருக்கு ஆபத்துகள் வரும் என்றும் பல கொலை மிரட்டல்கள் ஏற்கனவே வந்துள்ள போதிலும் அதனை அலட்சியப் படுத்தி தொடர்ந்து அணிந்து வந்தார்" என ஷெர்பினியின் குடும்ப நண்பரும் அலெக்ஸாண்டரியா பல்கலைக் கழகத்தின் இயற்பியல் துறைப் பேராசிரியரானருமான ஹிஷாம் அல் அஸ்ஹரி தெரிவித்தார். மேலும் "இஸ்லாத்தைப் பின்பற்றுவதால் தன் உயிரை இழக்க நேரிடலாம்!" என்பதை ஷெர்பினி அறிந்து வைத்திருந்தார் என்றார் பேராசிரியர் ஹிஷாம்.

கடந்த 5-7-2009 இல் படுகொலை செய்யப்பட்ட ஷெர்பினி மர்வாவின் ஜனாஸா(உடல்) அவரது சொந்த நாடான எகிப்துக்குக் கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது என்பதை பெர்லினில் உள்ள எகிப்தியத் தூதரகம் அறிவித்துள்ளது. 35 இலட்சம் முஸ்லிம்கள் வசிக்கும் ஜெர்மனியில் ஹிஜாப் தொடர்பான இத்தகைய நிகழ்வுகள் அடிக்கடி நடந்து கொண்டிருக்கின்றன என்பதும் ஜெர்மனின் பல மாநிலங்களின் பள்ளிகள் தம் ஆசிரியைகள் ஹிஜாப் அணியத் தடை விதித்துள்ளன என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

ஜெர்மனியில் இஸ்லாமோஃபோபியா தலை விரித்தாடுகிறது என்பது மீண்டுமொரு முறை சகோதரி மர்வாவின் வீரமரணத்தின் மூலம் நிரூபணமாகியுள்ளது என்பது கவலைக்குரிய உண்மையாகும்.

தீவிரவாதம், பயங்கரவாதம் என்ற பெயரில் ஏற்கெனவே உலகம் முழுவதும் முஸ்லிம்கள் குறிவைத்துத் தாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் இந்நேரத்தில், தான் விரும்பும் ஆடையை அணிவதற்குக் கூட முஸ்லிம் பெண்களுக்குச் சுதந்திரமில்லை என்ற ரீதியில் இஸ்லாமோஃபோபியா எனும் நோய் பரவி வருவது அதிர்ச்சியளிக்கக் கூடியதாகும். இஸ்லாத்தின் மீதும் முஸ்லிம்களின் மீதும் தொடர்ந்து வரும் இஸ்லாமோஃபோபியாவினால் விளைந்த இத்தகைய வன்முறை தாக்குதல்களை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான முயற்சிகளை, உலக முஸ்லிம்கள் உடனடியாக ஒன்றிணைந்து எடுக்க வேண்டியது கட்டாயமாகும்.

- அபூ ஸாலிஹா

கருத்துக்கள் (25)add comment
0
அபூ பௌஸீமா:


என்ன கொடுமை! முஸ்லிம்கள் இவ்வாறான மனித உரிமை மீறல்களை ஜெனீவாவில் உள்ள மனித உரிமை மீறல்களை விசாரிக்கும் நீதி மனறத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும். இஸ்லாமிய அமைப்புக்கள்தான் இவற்றில் முன்னோடியாகவிருக்க வேண்டும்.
உலகளாவிய ரீதியில் தந்திகள் கடிதங்கள் மின்னஞ்சல்கள் ஜேர்மனியின் அரசியல் தலைமைக்கும் ஐ. நா. செயலாளருக்கும் இலட்சக்கணக்கில் அனுப்பப்பட் வேண்டும்.

நீதி கிடைக்கும் என்பதற்காகவல்ல மனிதம் மாசுபடுத்தப் படுவதைக் கண்டிப்பதற்காக.

வஸ்ஸலாம்
அபூ பௌஸீமா
1

July 07, 2009 20:03
0
Muhammad:
smilies/shocked.gifsmilies/sad.gifsmilies/cry.gifsmilies/angry.gif
2

July 07, 2009 22:57
0
அப்துல்லாஹ் . M:
அஸ்ஸலாமு அலைக்கும்

// என்ன கொடுமை! முஸ்லிம்கள் இவ்வாறான மனித உரிமை மீறல்களை ஜெனீவாவில் உள்ள மனித உரிமை மீறல்களை விசாரிக்கும் நீதி மனறத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும். இஸ்லாமிய அமைப்புக்கள்தான் இவற்றில் முன்னோடியாகவிருக்க வேண்டும்.
உலகளாவிய ரீதியில் தந்திகள் கடிதங்கள் மின்னஞ்சல்கள் ஜேர்மனியின் அரசியல் தலைமைக்கும் ஐ. நா. செயலாளருக்கும் இலட்சக்கணக்கில் அனுப்பப்பட் வேண்டும்.

நீதி கிடைக்கும் என்பதற்காகவல்ல மனிதம் மாசுபடுத்தப் படுவதைக் கண்டிப்பதற்காக. //

மேலும் இஸ்லாமிய விழிப்புணர்ச்சியிலும் அழைப்பு பணியிலும் அதிகம் கவனம் செலுத்தப்பட்டு இஸ்லாம் பற்றிய தவறான கருத்துக்கள் முறையாக, களையப்படவும், தூய்மையான இஸ்லாம் மற்றும் அவற்றின் உன்னத நெறிகள் அனைத்தும் பரவலாக நடைமுறைப்படுத்தப்படவும் ஆவன செய்யப்பட வேண்டும். இஸ்லாமிய நெறிகளை முஸ்லிம்கள் பலர் உதாசீனப்படுத்தி வாழும் போது இது போன்ற முன் மாதிரியாக கொள்கைப் பிடிப்புடன் செயல் படும் சிறு பான்மையான மூஸ்லிம்கள் இவ்வுலகில் பாதிக்கப் படுகின்றனர். இது அவர்களுடைய ஈமானுக்கு மற்றுமின்றி அனைத்து முஸ்லிம்கள் மற்றும் முஸ்லிம் அல்லாதோருக்கு இறைவன் புறத்தில் இருந்து சோதனையென்றால் மிகையாகாது.

நிலையற்ற இவ்வுலக வாழ்க்கையில் இறைகட்டளைக்காக உயிரையும் மிரட்டல்களையும் துச்சப்படுத்தி அழகிய ஒரு முன்மாதிரியாக வாழ்ந்த சகோதரிக்கு நிலையான மறுமையின் வாழ்க்கையில் அல்லாஹ் உயர்ந்த அந்தஸ்து வழங்கிட பிராத்திப்போமாக. ஆமீன்.

அப்துல்லாஹ் . M

( சத்தியமார்க்கம்.காம் சகோதரர்கள், இந்த ஸ்மைலிக்களின் உருவங்களை பயன்படுத்த வாய்ப்பளித்துள்ளதை தவிர்ப்பது நல்லது. ஜஸாக்கல்லாஹு கைரன்)



வஸ்ஸலாம்
3

July 08, 2009 09:02
0
நிவாஸ்:
செய்தி நெஞ்சை உலுக்கியது. ஒரு பெண் என்னும் பாராமல் மத வெறி பிடித்து இவ்வாறு கொன்று விட்டாரே? என்னத்தை இப்போது பெற்றுக் கொண்டார் இவர்>

மிரட்டலுக்கு அஞ்சி ஹிஜாபை களைந்து விடாமல், இஸ்லாத்திற்காக உயிரை துச்சமாக எண்ணிய வீர சகோதரிக்கு துஆக்கள்.

நிவாஸ், கரூர்.

[மேலே கருத்திட்டுள்ள சகோதரர் அப்துல்லாஹ் அவர்களே இஸ்மைலி நமது எண்ணங்களை சில பாராக்கள் எழுதுவதை சில நேரம் ஒரு க்ளிக்கில் பிரதிபலித்து விடுமே. அதனால் சத்தியமார்க்கம் தளத்தினரே நீக்க வேண்டாம். மேலும் இஸ்லாத்தில் ஸ்மைலி உர்வங்கள் கூடாது எனில் மேலே சகோதரரி குடும்பத்தினர் போட்டாவும் நீக்கனும். மேலும் தளத்தின் அத்தனை போட்டாவையும் நீக்கவேண்டும். இத்தகைய தவறான புரிதல் வேனாமே]

4

July 08, 2009 10:22
0
நீடூர் A.M.B. பைஜுர் ஹாதி:
எல்லாம் வல்ல அல்லாஹ் ஹிஜாப் அணிந்த முஸ்லிம் என்ற ஒரே காரணத்திற்காக தன் இன்னுயிரை இழந்த சகோதரிக்கு மறு உலகில் முழுமையான வெற்றியினை வழங்குவதற்கு பிரார்த்திப்போமாக! எங்கே சென்றது மேற்கத்திய ஊடகங்கள்? மேற்கத்தியர்கள் பேசும் ஜனநாயகமும், பத்திரிக்கை சுதந்திரமும் இதுதானா? ஒரு கிறிஸ்தவரோ, ஒரு யூதரோ தாக்கப்பட்டு இறந்திருந்தால் குதியாய் குதித்து இஸ்லாத்தினை எவ்வளவு தாழ்வு படுத்த முடியுமோ அவ்வள்வு தாழ்வு படுத்தியிருக்கும். ஆனால் ஒரு இஸ்லாமிய பெண் அதுவும் கற்பினின் பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள செய்தியினை மேற்கத்திய ஊடகங்கள் பொருட்படுத்தவேயில்லை என்கிறபோது இவர்களுக்கு பத்திரிக்கை சுதந்திரம் பற்றியோ, பத்திரிக்கை தர்மத்தினை பற்றியோ பேசுவதற்கோ எழுதுவதற்கோ சிற்றிற்றும் அறுகதை இல்லை. ஆஸ்திரேலியாவில் இந்தியர்கள் தாக்கப்பட்ட போது "ஆஸ்திரேலியாவில் தலைவிரித்தாடும் இனவாதம்" என்று ஓய்வில்லாமல் கதறிய இந்திய ஊடகங்கள் தற்போது என்ன செய்கின்றன? பி.பி.சி. சி.என்.என்.போன்ற இஸ்லாமிய விரோத ஊடகங்களிடமிருந்து இன்னும் உத்தரவு வரவில்லையா? கற்பனைக்கும் எட்டாத நவீன ரக ஆயுதங்கள் எங்களிடம் எங்களிடம் இருக்கிறது, உலகில் வல்லரசுகள் நாங்கள் தான் என்று மார்தட்டும் மேற்கத்திய உலகம் ஒரு சாதாரண பெண்மணி அணியும் ஹிஜாப் என்ற ஆடைக்கே இவ்வள்வு பயப்படுகிறதென்றால் இன்ஷா அல்லாஹ் இஸ்லாமியர்களிடம் நாகரிகம் என்ற போர்வையில் உலாவரும் மேற்கத்தியர்கள் தோல்வியடையும் நாட்கள் வெகு தொலைவில் இல்லை. ஆபாசமும், விபச்சாரமும் தலைவிரித்தாடும் மேற்குலகிலேயே ஹிஜாப் அணிவதுதான் நாகரிகம், அதைதான் இஸ்லாம் வலியுறுத்துகிறது என்ற உறுதியுடன் இருந்தமைக்காக தன் உயிரையே இழந்த சகோதிரியின் தியாகத்தினை உணர்ந்தாவது நம் தமிழ் நாட்டில் ஹிஜாப் அலட்சியம செய்யும் பெண்மனிகள் நிறைய பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்


5

July 08, 2009 11:43
0
nizam kuraisi. koothanallur:
இதுவும் இறைவனின் செயல் தான். ஒரு உயிர் இழப்பால் ஒட்டுமொத்த இஸ்லாமியர்களின் உணர்வுகளையும் ஒன்று திரட்டியுள்ளான்.
6

July 08, 2009 20:21
0
asfar:
அஸ்ஸலாமு அலைக்கும்

அழகிய ஒரு முன்மாதிரியாக வாழ்ந்த சகோதரிக்கு நிலையான மறுமையின் வாழ்க்கையில் அல்லாஹ் உயர்ந்த அந்தஸ்து வழங்கிட பிராத்திப்போமாக. ஆமீன்.

If a Muslim is involved in Killing, the whole Islam and Muslim is condemned, anyhow just read this story also which held last week in Sri lanka.
http://www.asfarm.20m.com/1209.htm
7

July 09, 2009 05:42
0
நிஜாமுத்தின்:
துயரமான செய்தி இது!

முஸ்லிம் ஒருவர் பிற மதப் பெண் ஒருத்தியை இதே போன்று படுகொலைச் செய்திருந்தால் - அவருக்குக் கிடைத்திருக்கும் பட்டங்களும் விளம்பரங்களும் என்ன என்பதை எண்ணிப் பார்த்தேன்.

தமிழ் ஊடகங்களில் முதல் முறை காண நேர்ந்த செய்தி. அறியத் தந்தமைக்கு நன்றி! இந்த கொடுரத்திற்கு ஜெர்மன் தலைகுனிந்துள்ளது.

செய்திக்கான சுட்டி: http://inneram.com/index.php/2...jab-murder

புர்கா கொலை: ஜெர்மனி வருத்தம்!
--------------------------------------------------------

கடந்த ஜூலை 5 ஆம் தேதி எகிப்திய மர்வா செர்பினி என்ற 32 வயது முஸ்லிம் பெண் ஒருவர் ஹிஜாப் எனப்படும் முஸ்லிம் பெண்கள் அணியும் உடையை அணிந்ததற்காக ஏற்பட்ட சர்ச்சையில் நீதிமன்றத்திலேயே கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். இதை எதிர்த்து எகிப்திய மக்கள் கெய்ரோவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து ஏற்பட்ட நெருக்கடியை அடுத்து ஜெர்மனி இச்சம்பவம் குறித்து வருத்தம் தெரிவித்துள்ளது.

ஜெர்மனி அதிபர் ஏங்கலா மெர்க்கெல் எகிப்திய அதிபர் ஹொஸ்னி முபாரக்கைச் சந்தித்து இச்சம்பவம் குறித்த ஜெர்மனி தரப்பு விளக்கம் அளிப்பார் என ஜெர்மன் அரசு செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

"இது போன்ற ஒரு மதத்துக்கு எதிரான கடுமையான வெறுப்பு உமிழ்தலை ஜெர்மனி ஏற்றுக் கொள்ளவில்லை; மர்வா என்ற முஸ்லிம் பெண்ணைக் கொன்ற அக்சன் என்ற ரஷ்ய நபர் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தக்க தண்டனை வழங்கப்படுவார்" என்று ஜெர்மனி தெரிவித்துள்ளது.

அரபு லீக் பொதுச்செயலர் அமர் மூசா, "இது மனித இனத்துக்கு எதிரான வன்கொடுமை; இதை அனுமதிக்கக் கூடாது" என்று கூறியுள்ளார்.

8

July 09, 2009 11:41
0
ameer:
மாஷா அல்லாஹ், அந்தச் சகோதரிக்காக துஆ செய்வோம்
9

July 09, 2009 18:20
0
அப்துல்லாஹ் M:


அஸ்ஸலாமு அலைக்கும்
அன்பு சகோதரர் நிவாஸ் அவர்களே...
தங்கள் பின்னூடத்தில்...

//மேலே கருத்திட்டுள்ள சகோதரர் அப்துல்லாஹ் அவர்களே இஸ்மைலி நமது எண்ணங்களை சில பாராக்கள் எழுதுவதை சில நேரம் ஒரு க்ளிக்கில் பிரதிபலித்து விடுமே. அதனால் சத்தியமார்க்கம் தளத்தினரே நீக்க வேண்டாம். மேலும் இஸ்லாத்தில் ஸ்மைலி உர்வங்கள் கூடாது எனில் மேலே சகோதரரி குடும்பத்தினர் போட்டாவும் நீக்கனும். மேலும் தளத்தின் அத்தனை போட்டாவையும் நீக்கவேண்டும். இத்தகைய தவறான புரிதல் வேனாமே] //

கூறியுள்ளதற்கு எனது புரிதல் விளக்கம்.
உருவப்படம் உகைப்படம் உபயோகிக்க்லாமா என்பதில் நிர்ப்பந்தம் , தேவை மற்றும் அவசியமான கல்வி போன்ற பலன் நிமித்தம், செய்திகளுக்காக , அறிமுகத்திற்காக உபயோகிப்பது என்பதும் இது போல் ஸ்மைலியாக உபயோகிப்பதும் ஒன்றாகாது. அல்லாஹ் மிக அறிந்தவன்.



10

July 09, 2009 23:46
0
மு முஹம்மத்:
அஸ்ஸலாமு அலைக்கும்
சகோதரர் நிவாஸ் அவர்களுக்கு

//இஸ்மைலி நமது எண்ணங்களை சில பாராக்கள் எழுதுவதை சில நேரம் ஒரு க்ளிக்கில் பிரதிபலித்து விடுமே//

மேலே Muhammad எனும் ஒரு சகோதரர் தமது பின்னூட்டத்தில் இந்த இஸ்மைலி எனும் உருவங்கள் நான்கை மட்டும் போட்டு முடித்துள்ளார். இதை தவிர ஒரு வார்த்தையும் இல்லை. இதை எப்படி விளங்குவது. சற்று அவர் அல்லது தாங்கள் விளக்குவீர்களா.

தெளிவான தமிழ் வார்த்தகள் மூலம் நமது உள்ள ஆதங்கத்தையும் வேதனையையும் உணர்வுகளையும் அனைவருக்கும் புரியும் விதமாக வெளிபடுத்துவதை விட்டு இது போன்ற சந்தேகமான முறையை அதுவும் இது போன்ற உருவங்கள் பரிகாசம், கேலி செய்யும் விதமாக, விநோதமாக உள்ளது என்பதை மறுக்க இயலாது.

ஒரு சகோதரி இஸ்லாத்தின் கடமையாகிய ஹிஜாபுக்காக உயிரைத் தியாகம் செய்த கண்ணீர் மல்க செய்யும் செய்தியுடன் இது போன்ற உருவங்கள் அதன் தாக்கத்தை குறைத்து கேலி செய்வதாகவே அமைகின்றது. உணர்வுகள் முறையாக எழுத்துக்களாலும் சொற்களாலும் வெளிப்படுத்த சந்தேகமற்ற வழியிருக்கும் போது இது போன்ற சந்தேகமான குறுக்கு வழிகள் தேவையற்றது, மற்றும் பத்தோடு பதினொன்று எனும் நிலையில் உள்ளது. அல்லாஹு அஃலம்.
11

July 10, 2009 22:52
0
Nasoordeen:
smilies/cry.gif
அஸ்ஸலாமு அலைக்கும்

அழகிய முன்மாதிரியாக வாழ்ந்த சகோதரிக்கு நிலையான மறுமையின் வாழ்க்கையில் அல்லாஹ் உயர்ந்த அந்தஸ்து (சுவர்கம்)வழங்கிட பிராத்திப்போமாக. ஆமீன்.
12

July 12, 2009 06:30
0
முஹம்மத்:
மிகவும் கொடுமையான செய்தி இது...அந்த வீர சகோதரிக்கு துஆக்கள் smilies/angry.gif

இதனை தமிழில் வெளிக்கொண்டு வந்த சத்தியமார்க்கம் தளத்திற்கு நன்றி.

(பின் குறிப்பு: உங்கள் தளத்தின் பின்னூட்ட கருத்துப் பெட்டி மிகவும் நன்றாக உள்ளது)
13

July 12, 2009 18:13
0
மு முஹம்மத்:
அஸ்ஸலாமு அலைக்கும்
அன்புள்ள சத்தியமமர்க்கம்.காம் சகோதரர்களுக்கு.

ஒரு சோகமான உண்மைச் சம்பவத்தின் பின்னுட்டத்தில் வெறும் ஸ்மைலிக்கள் மற்றும் அதை சுட்டிக் காட்டியவரை குத்திக்காட்டும் விதமாக....

// பின் குறிப்பு: உங்கள் தளத்தின் பின்னூட்ட கருத்துப் பெட்டி மிகவும் நன்றாக உள்ளது)

சுட்டிக் காட்டப்பட்ட பின்பும் இவ்வாரு கருத்துக்களையும் ஸ்மைலிக்களையும் பின்னூட்டம் இடுபவர்கள், அதற்கு வழி வகுத்து அதை அனுமதிப்பவர்கள் அனைவரும் எதை சாதிக்க நாடுகிறார்களோ தெரியவில்லை. இது தான் இஸ்லாம் காட்டும் வழியா??? கைர்....

அல்லாஹு அஃலம்.

அல்லாஹ் அனைவருக்கும் நேர்வழிகாட்டிட துவா செய்வோமாக.

( இனி பின்னூட்டம் இடவோ கருத்திடவோ கூட மனம் இடந்தரவில்லை.

அல்லாஹ் போதுமானவன்.)




14

July 12, 2009 22:44
0
முஹம்மத்:
சகோதரர் மு முஹம்மத் அவர்களே பின்னூட்ட பெட்டி நன்ராக உள்ளது என்ற என் கருத்து உங்களை புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும்.

இந்த தளத்தில் கருத்துக்களை சுதந்திரமாக இட்டால் பதிக்கிறார்கள் என்பதால் அவ்வாறு இட்டிருந்தேன். ஸ்மைலிக்களை நீக்கவேண்டும் என்ற உங்கள் கருத்தை அனுமதித்த இந்த தளத்தினர், ஸ்மைலிக்கள் வேண்டும் என்று என்னைப்போல சிலர் கேட்டதையும் அனுமதித்தமைக்கு குறை சொல்லுகிரீர்களே? இஸ்லாம் காட்டும் வழியா என்ற கேள்வி வேறு... அல்லாஹ் உங்களுக்கும் எனக்கும் நேர்வழி காட்ட துஆக்கள்.
15

July 13, 2009 10:44
0
அன்ஸாரி:
அன்று மதீனாவில் முஸ்லிம் பெண்மணியின் மேலாடையை இழுத்து வம்புக்கிழுத்த யூதனின் தலையை, அக்கொடுமையைப் பார்க்க நேர்ந்த சஹாபி வெட்டியதாகப் படித்துள்ளோம்.

இன்று, நம்மிடையிலே ஒரு முஸ்லிம் சகோதரி கொடுமையாகக் கொல்லப்பட்டிருக்கிறார். நாம் அதற்கு வருத்தம் தெரிவிக்கும் அடையாளங்களை எழுத்துக்களில் பயன்படுத்துவதைத் தலைபோகும் பிரச்சனையாக்கிக் கொண்டிருக்கிறோம்.

இத்தகைய தாழ்ந்த நிலையில் இருக்கும் இன்றைய முஸ்லிம் சமுதாயம் தான், சஹாபாக்களை விட மேலானவர்கள் என்று ஒரு மார்க்க அறிஞர் புகழாரம் வேறு சூட்டிக் கொள்கிறார்.

என்னே இச்சமுதாயத்தின் கேடு!

அல்லாஹ் தான் நம் அனைவருக்கும் உணர்வைக் கொடுக்க வேண்டும்.
16

July 13, 2009 12:31
0
மு முஹம்மத்:
அஸ்ஸலாமு அலைக்கும்
அன்பு சகோதரர் முஹம்மத அவர்களே

அல்லாஹ் நம் அனைவரின் பிழைகளயும் மன்னிப்பானாக. ஆமீன்...

எனது சிறிய மகனை இது போன்ற ஸ்மைலிக்கள் ஈமேயில் உபயோகிப்பதை தவிர்க்குமாரு நான் கூறியுள்ளேன் காரணம் இது தேவையற்ற உருவப்படமாக இருப்பது மட்டுமின்றி, அறிவியல் ரீதியாக சுபாவத்தை பாதித்து பிறரை பரிகாசம் செய்யும் கேலி செய்யும் விதமாகவும், எதையும் இலேசாக எடுத்துக் கொள்ளும் சுபாவத்துக்கு வழி கோலும், அதன் மூலம் சிறிது சிறிதாக இதைப் போன்ற இன்னும் பல புதிய பழக்கங்கள், கர்ஸர்கள் ஸ்க்ரீன் ஸேவர்கள் என்று இஸ்லாமிய நெறிகளையும் கலாச்சாரத்தையும் விட்டு விலகிட வைத்து விடும் என்ற அச்சமே..

ஆனால் இப்போது நான் விரும்பி படிக்கும் சத்தியமார்க்கம்.காம் இணையதளத்தில் இது இருக்கும் போது அவனை எப்படி சமாதானப் படுத்துவது.... கைர் அல்லாஹ் போதுமானவன்....

" ரப்பனா லா துஜிஃகுலூபனா பாத இஜ்ஹதய்தனா, வ ஹப்லனா மில்லதுன்க ரஹ்மதன் இன்னக அன்தல் வஹ்ஹாப் "

"எங்கள் இறைவனே! நீ எங்களுக்கு நேர் வழியைக் காட்டியபின் எங்கள் இதயங்களை (அதிலிருந்து) தவறுமாறு செய்து விடாதே! இன்னும் நீ உன் புறத்திலிருந்து எங்களுக்கு (ரஹ்மத் என்னும்) நல்லருளை அளிப்பாயாக! நிச்சயமாக நீயே பெருங் கொடையாளியாவாய்!" (அல் குர் ஆன் 3 : 8 )
17

July 13, 2009 18:33
0
karim74:
மனதைக் காயப்படுத்திய இந்தச் செய்தியை மீள் பதிவு செய்துள்ளேன். நன்றி!
இறக்க நேரிடும் என்று நன்கு தெரிந்தும் இறைக்கட்டளையான ஹிஜாப் அணிந்த இந்த சகோதரிக்கு உயரிய ஷஹீத் அந்தஸ்தை இறைவன் அளிக்க துஆக்கள்.

http://karim74.wordpress.com/2...humanisum/

இங்கே நடைபெரும் கலந்துரையாடலை காண நேரிட்டது.


ஸ்மைலி என்று இங்கே சகோதரர்கள் அழைத்துக் கொள்வது Emotions என்ற குறியீடு பற்றி எண்ணுகிறேன். இது ஒரு யுனிவர்சல் குறியிடுதான். இஸ்லாமிய அடிப்படைகளை சரியான கோணத்தில் புரிந்து கொள்ளாமல் அறிவியல் ரீதியில் சுபாவத்தைப் பாதிக்கும் அது இது என்று எல்லாம் தம்மைச் சுற்றிய வட்டத்தினை குறுகலாக்கி சிலர் இறுக்கிக் கொள்கின்றனர் என்பது புலப்படுகிறது.


எமோஷன்களை இத்தனை சீரியஸாக எடுத்துக் கொண்டால் ஒருவர் தம்முடைய குழந்தையை பள்ளிக்கூடத்தில் கூட சேர்க்க முடியாது. ஏனெனில் உணர்வுகளை வெளிப்படுத்தும் படங்கள், சிறு உருவங்கள் இல்லாத இடங்கள் இல்லை. எதற்கு முக்கியத்துவம் தருகிறோம். எதனை நபியவர்கள் தடுத்தார்கள் என்பதை விளங்காமலேயே வாழ்நாள் முழுவதும் இது போன்று சில சகோதரர்கள் குழம்பி அடுத்தவர்களையும் குழப்பி வருகிறார்கள்.

அத்துடன் நம் சகோதரர்கள் தங்களின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை தங்கள் குடும்ப நியதிகளைப் பொதுவில் திணிக்க வேண்டாமே? என்ற வேண்டுகோளுடன் விடைபெறுகிறேன்.
18

July 15, 2009 11:43
0
MBM.FAIROOZ:
மர்வா அல் ஷெர்பினி: 'நீதி'யின் முன் 'அநீதி'யிழைக்கப்பட்ட கர்ப்பிணித் தாய்!

நீதிமன்றில்....
நீதிபதிகள் பார்த்திருக்க...
அன்புக் கணவருக்கும் மூன்றே வயது மகனுக்கும் முன்னால்...
ஒரு கர்ப்பிணித்தாய் 18 தடவைகள் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா....?

இது ஒன்றும் "ஜாஹிலிய்யாக்' காலத்தில் மனிதப் பண்புகள் வளர்ச்சியுற்றிராத ஒரு தேசத்தில் நடைபெற்ற சம்பவமல்ல. சரியாக பதினைந்து நாட்களுக்கு முன் (ஜூலை 01) ஜேர்மனியின் "ட்ரெஸ்டன்' நகரிலுள்ள நீதிமன்றில் நடந்தேறிய "அசிங்கம்'தான் இது.

"மர்வா அல் ஷெர்பினி' எனும் 32 வயதேயான கர்ப்பிணித் தாய்தான் இவ்வாறு அநியாயமாகக் கொல்லப்பட்டார். ஐந்து வருடங்களுக்கு முன்னர்தான் "எல்வி அலி ஓகாஸ்' எனும் இளைஞரைக் கரம்பிடித்தார். ஓகாஸ் ஒரு பொறியியலாளர். ஷெர்பினி "மருந்தாளர்' துறையில் பட்டப்படிப்பை முடித்திருக்கிறார். இவர்களுக்கு முஸ்தபா எனும் பெயரில் மூன்று வயதில் ஒரு மகனும் இருக்கிறான்.

துருக்கியைச் சேர்ந்த இத்தம்பதியர் 3 வருடங்களுக்கு முன்னர்தான் ஜேர்மனியில் குடியேறினார்கள்.2008ஆம் ஆண்டு ஷெர்பினி தனது மகன் முஸ்தபாவுடன் வீதியில் நடந்து போய்க் கொண்டிருந்தார். அப்போது "அலெக்ஸ்' எனும் 28 வயது இளைஞன் ஷெர்பினியைப் பார்த்து "தீவிரவாதி' என அழைத்ததுடன் மிக மோசமான தூஷண வார்த்தை ஒன்றையும் பிரயோகித்துள்ளான்.ஷெர்பினி இஸ்லாமிய முறையில், ஹிஜாப் அணிந்திருந்ததே இவ்வாறு தூற்றப்படக் காரணமாகும்.

தன்னையும், தான் பின்பற்றும் மார்க்கத்தையும் தூற்றியமையால் ஆத்திரமுற்ற ஷெர்பினி "ட்ரெஸ்டன்' நகரிலுள்ள நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு கடந்த ஜூலை முதலாம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.வழக்கை விசாரித்த நீதிபதி அலெக்சுக்கு 780 யூரோ பணத்தை தண்டமாக விதித்தார். அப்போதுதான் அந்த அகோரச் சம்பவம் நடந்தேறியது.

திடீரெனப் பாய்ந்து வந்த அலெக்ஸ் தனது ஆடைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த கத்தியை உருவி மூன்று மாதக் கர்ப்பிணியான ஷெர்பினியின் வயிற்றில் 18 தடவைகள் குத்தினான்.நீதிபதிகளும் நீதிமன்றக் காவலர்களும் பார்த்திருக்கவே இச்சம்பவம் நடந்தேறியது. அச்சமயம் அலெக்ஸை சுட்டுத் தள்ள வேண்டிய பொலிசாரோ தனது மனைவியைக் காப்பாற்ற முயன்ற ஓகாஸ் மீதே துப்பாக்கியால் சுட்டனர். இதனால் பலத்த காயமடைந்த ஓகாஸ் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அப்பாவித் தாயான ஷெர்பினி நீதிமன்றத்தில் வைத்தே உயிர் துறந்தார். ஷெர்பினி மட்டுமல்ல அவர் வயிற்றில் சுமந்திருந்த மூன்று மாதக் கருவும் அங்கு உயிர் துறந்தது.மூன்றே வயதான மகனான முஸ்தபா முன்னிலையிலேயே அவனது தாய் உயிரைத் துறந்தார். தந்தை மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

"தீவிரவாதம்', "பயங்கரவாதம்', "மனித உரிமை' பற்றி அதிகம் கொக்கரிக்கும் மேற்குலகில் நடந்த இச்சம்பவம் முழு உலகையுமே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக எகிப்தியர்களை பெரிதும் கொதிப்படையச் செய்துள்ளது.தனது மார்க்கத்திற்காக அதன்படி தனதுடலை மறைத்து வாழ்ந்தமைக்காக உயிர் துறந்த மர்வா அல் ஷெர்பினியின் ஜனாஸா நல்லடக்கம் கடந்த 6ஆம் திகதி எகிப்தின் அலெக்ஸாண்டிரா நகரில் இடம்பெற்றது. ஆயிரக்கணக்கான எகிப்தியர்கள் கலந்து கொண்ட இந் நல்லடக்க நிகழ்வில் ஜேர்மனுக்கும் யூதர்களுக்கும் எதிரான கோஷங்கள் வானைப் பிளந்தன. இஸ்லாத்திற்காக தன்னுயிர் நீத்த மர்வாவுக்கு ஆதரவாக இன்று சர்வதேச நாடுகள் பலவற்றிலும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. "ஹிஜாபுக்காக ஷஹீதான பெண்' என இவரை முஸ்லிம் உலகில் பலரும் வர்ணித்துள்ளனர். அத்துடன் எகிப்திலுள்ள அலெக்சாந்திரா நகர வீதி ஒன்றுக்கு மர்வாவின் பெயரை சூட்டுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஆனால் துரதிஷ்டவசமாக மேற்குலக ஊடகங்கள் மர்வாவின் கொலையை மூடி மறைத்து விட்டன.இச்சம்பவம் குறித்து உலகின் கவனத்தை ஈர்க்கும் வகையிலான எந்தவொரு அறிக்கையிடலையும் மேற்குலக ஊடகங்கள் செய்யவில்லை. இதுகுறித்து கருத்து வெளியிட்டிருக்கும் துருக்கியின் அல்சுகூர் தினசரியின் ஆசிரியர் அப்துல் அஸீம் ஹம்மாத் ஒரு யூதர் இவ்வாறு கொல்லப்பட்டிருந்தால் மேற்கு ஊடகங்கள் அதற்கு அளிக்கும் முக்கியத்துவத்தை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதிருந்திருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை மர்வாவின் படுகொலை குறித்து உடனடி விசாரணைகளை மேற்கொண்டு கொலைகாரனான அலெக்சுக்கு உச்சபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும் என மர்வாவின் சகோதரர் தாரிக் அல் ஷெர்பினி வேண்டுகோள் விடுத்துள்ளார்.அத்துடன் கடந்த இச்சம்பவம் குறித்து ஜேர்மன் அரசு உரியவிசாரணைகள் எதனையும் மேற்கொள்ளவில்லை என கண்டனம் வெளியிட்டுள்ள ஈரானிய தலைமை நீதிபதி ஆயத்துல்லாஹ் மஹ்மூத் சரோதி இச்சம்பவத்தின்போது நீதிமன்றில் பிரசன்னமாகியிருந்த அனைவரும் விசாரணைக்குட்படுத்தப்பட வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்

இச்சம்பவம் பற்றி ஜேர்மன் அரசு இதுவரை உத்தியோகபூர்வமாக எந்தவொரு தகவல்களையும் வெளியிடவில்லை என எகிப்திய அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர.

அண்மையில் பிரான்சில் 'புர்கா' எனும் முஸ்லிம் பெண்கள் முகத்தை மறைத்து அணியும் ஆடையைத் தடை செய்வது குறித்து நிகலஸ் சார்கோஸி வெளியிட்ட கருத்து ஊடகங்களில் பெரும் கவனயீர்ப்பைப் பெற்றிருந்தது. சார்கோசியின் இந்த வெறுப்பேற்றும் கருத்து அலெக்ஸின் கொலை வெறிக்குப் பின்னணிக் காரணமாக அமைந்திருக்க முடியும் எனவும் விமர்சகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இஸ்லாத்துக்கெதிராக மேற்குலக ஊடகங்கள் திட்டமிட்டு மேற்கொண்டுவரும் இவ்வாறான பிரச்சாரங்களே முஸ்லிம்கள் மீது வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்படுவதற்கான காரணம் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.

முஸ்லிம் தீவிரவாதி, முஸ்லிம் பயங்கரவாதி...போன்ற ஊடகங்களின் வார்த்தைப் பிரயோகங்கள்தான் அலெக்ஸ் போன்றவர்களை மூளைச்சலவை செய்கின்றன.உண்மையில் இவ்வாறான ஊடகங்கள் தமது கருத்துநிலை குறித்து ஒருகணம் சிந்திப்பதற்கு மர்வாவின் கொலை ஒரு நல்ல உதாரணம் எனலாம்.

உண்மையாகவே தான் அவமானப்படுத்தப்பட்டமைக்காக வன்முறைகளைக் கையாளாமல் நீதிமன்றத்தை நாடிய மர்வா தீவிரவாதியா? அல்லது நீதிபதியின் தீர்ப்பினால் கோபமுற்று ஓர் கர்ப்பிணித்தாயையே ஈவிரக்கமின்றி கொலை செய்த அலெக்ஸ் தீவிரவாதியா?

ஒரு பெண் கண்முன்னால் கொல்லப்படுகையில் அவளை காப்பாற்ற முனையாது வேடிக்கை பார்த்த ஜேர்மனிய பொலிசாரையும் நீதிபதிகளையும் இந்த ஊடகங்கள் எவ்வாறு வர்ணிக்கப்போகின்றன?

ஒரு கொலைகாரனின் கையில் அகப்பட்ட தனது மனைவியைக் காப்பாற்றுவதற்கான உரிமையைக் கூட வாங்காத ஜேர்மனின் "மனித உரிமை'யின் லட்சணம் இதுதானா?

மேற்குலகு முஸ்லிம்களுக்கெதிராக மேற்கொள்கின்ற இந்த நடவடிக்கைகள் ஒருபுறமிருக்க நாகரிகம் எனும் பேர்வையில் ஹிஜாபைக் கழற்றி எறிந்து விட்டு நடைபயிலும் "முஸ்லிம்' பெண்மணிகளே...உங்கள் எல்லோருக்கும் ஷஹீத் மர்வா அல் ஷெர்பினியின் தியாகம் உறைக்கிறதா என்ன?

நன்றி: http://fairoozmbm.blogspot.com...st_15.html
16.07.2009
19

July 17, 2009 04:27
0
Abu Areej, Sri Lanka:
உருக்கமான செய்தி... ஹிஜாபின் கண்ணியம் உணரா சகோதர, சகோதரிகளுக்கு ஷெர்பினியின் மரணம் ஒரு பாடம்.

நன்றியுடன் மீள்பதிவு செய்துள்ளோம்.

http://unmai4u.blogspot.com/2009/07/blog-post.html
20

July 17, 2009 07:57
0
OPJ.அமீன் லால்பேட்டை:
அந்த சகோதரியின் தியாகத்திற்கு உரிய கூலியை இறைவன் வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட அவர்தம் குடும்பத்திற்கு எம் இரங்கல்கள்.

உங்கள் செய்தியை எமது வலைத்தளத்திலும் பதிந்துள்ளோம்

http://opjameen.blogspot.com/2009/07/blog-post_7583.html
21

July 17, 2009 08:22
0
ஆக்கூர் சாதிக் அலி:
காட்டுமிராண்டித் தனமான செயல். மூளை மழுங்கிய அந்த ஜெர்மெனிய மிருகம் ஹிஜாபின் அவசியம் உணராமல் மத வெறி கொண்டு ஆத்திரத்தில் செய்த இந்த படுகொலைக்கு மூன்று வயது பிள்ளையின் தாய் (இன்னும் கர்பிணி) பலியானது நெஞ்சை உலுக்கும் கொடூரம்.
22

July 17, 2009 08:35
0
munas sulaiman:
அஸ்ஸலாமு அலைக்கும் அன்பான சகோதரர்களே இப்படியான கொடுமைகள் காட்டுமிராண்டித்தனம் இனிமேல் எங்கும் நடக்கக்கூடாது அதற்க்காக எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திப்போம், அத்துடன் இந்த ஆக்கத்தினை நான் வேறு ஒரு இணையத்துக்கு மற்றவர்களின் பார்வைக்காக அப்படியே கொடுத்துள்ளேன் உங்கள் அனுமதியையும் வேண்டுகிறேன் நான் இலங்கையைச்சேர்ந்த முனாஸ் சுலைமான் சவுதி அரேபியா. நன்றி
23

July 26, 2009 00:36
0
UMMAR:
POOVAI UMMAR

ASSALAMU ALAIKUM


அழகிய முன்மாதிரியாக வாழ்ந்த சகோதரிக்கு நிலையான மறுமையின் வாழ்க்கையில் அல்லாஹ் உயர்ந்த அந்தஸ்து (சுவர்கம்)வழங்கிட பிராத்திப்போமாக. ஆமீன்.
12


மாஷா அல்லாஹ், அந்தச் சகோதரிக்காக துஆ செய்வோம்
24

August 02, 2009 07:58
0
RIJVAN:
POOVAI-RIJVAN

அஸ்ஸலாமு அலைக்கும்

அழகிய ஒரு முன்மாதிரியாக வாழ்ந்த சகோதரிக்கு நிலையான மறுமையின் வாழ்க்கையில் அல்லாஹ் உயர்ந்த அந்தஸ்து வழங்கிட பிராத்திப்போமாக. ஆமீன்.

அல்லாஹ் கூறுகிறான்....

(ஆகவே,) நிச்சயமாக, எதனை அவர்கள் பொருந்திக் கொள்கிறார்களோ, அந்நுழையு மிடத்தில் அவர்களை அவன் நுழையச் செய்வான். மேலும், நிச்சயமாக அல்லாஹ் நன்கறிகிறவன், சகிப்புத் தன்மையுடையவன்.
(அத்தியாயம் : அல் ஹஜ் - ஹஜ், வசனம்: 59)


25

August 02, 2009 11:10

கருத்து எழுதுக :
சிறிதாக்குக | பெரிதாக்குக

busy
 

இறைமறை

Random Quran Verses

2:119 (நபியே!) நாம் உம்மை உண்மையுடன், (நல்லடியாருக்கு) நன்மாராயம் கூறுபவராகவும், (தீயோருக்கு) அச்சமுட்டி எச்சரிக்கை செய்பவராகவுமே அனுப்பியுள்ளோம். நரகவாதிகளைப் பற்றி நீர் வினவப்பட மாட்டீர்.

விருப்பத் தேர்வுகள்

புதிய கருத்துக்கள்

waseem : முழுமையான அறிக்கை. இதற்கு முன்னர் இத...


கார்த்திகேயன் : //அன்று சொஹ்ராபுதீன் அஸ்திரம் மோடிக்...


M . Muhammad : "யா அல்லாஹ்! நம் முஸ்லிம் சமுதாயத்துக...


Basheer : Assalamu alaikum, Alhamdulillah, Allahumma salli alaa muhammadin.. Nobody can give you freedom. Nob...


முபாரக் அலி : இதில் ஆச்சரியப் படுவதற்கு அல்லதுஅதி...


Lareena Abdul Haq : அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மத்துல்லாஹ்.....


mohamed ali : What is the use of going on in argument and nobody can be converted by argument but can be done by ...


fakrudeen ali anwar-Jeddah : Dear Salma, your great deed is most valuable for all islamic world..keep it up ur standard colors..A...


mohamed ali : Assalamuallikum, Islam is for and unity and for the way of life. But it is pity that we fight for th...


Sofya begam : இஸ்லாத்தின் பார்வையில் "மது அருந்துத...


Basheer : அஸ்ஸ‌லாமு அலைக்கும், அல்ஹ‌ம்துலில்ல...


j.aneess fathema : அஸ்ஸலாமு அலைக்கும் mathu arunthuvadu pattri sollungal



You are here  : முகப்பு