சத்தியமார்க்கம்.காம்

தமிழகச் செய்தி ஊடகங்களுக்கு த.மு.மு.க எச்சரிக்கை! print Email
News - Tamil Nadu News
சனி, 09 ஆகஸ்டு 2008 05:04

{mosimage}நாட்டில் நடக்கும் எந்தவொரு பயங்கரவாத செயலுக்கும் சிறு பான்மை முஸ்லிம்கள் மீது பழி போடுவது ஓர் வாடிக்கையாகி விட்டது. எங்கே குண்டு வெடிப்புகள் நடந்தாலும் உண்மைக் குற்றவாளிகளை கண்டு பிடிக்க துப்பற்ற, திறமையற்ற காவல் துறை மற்றும் பாதுகாப்பு நிறுவனங்கள் முஸ்லிம் அமைப்புகளையும் அப்பாவி முஸ்லிம் இளைஞர்களையும் காரணமாக்குவதையும் கைது செய்வதையும் தங்கள் வழக்கமாக்கி கொண்டிருக்கின்றன. கையாலாகாத காவல் துறை சொல்லும் அனைத்தையும் கண், காது, மூக்கு வைத்து தங்கள் மனோ இச்சைக்கு ஏற்ப எழுதுவதையும் ஒளிபரப்புவதையுமே வாடிக்கையாக கொண்டுள்ளன அச்சு மற்றும் காட்சி ஊடகங்கள்.

 

சமீபத்தில் நடந்த பெங்களூர் மற்றும் அஹ்மதாபாத் குண்டு வெடிப்புகளிலும் வழக்கம் போல முஸ்லிம்களை இணைத்து செய்திகள் வெளியிட்ட மீடியாக்கள் தமிழகத்தில் தீவிரவாதிகள் கைது, குண்டு வைக்க சதி என்ற காவல் துறையின் வழக்கமான பல்லவியை போட்டி போட்டு கொண்டு தங்கள் இஷ்டம் போல வெளியிட்டு அரிப்பைத் தீர்த்துக் கொண்டன. காவல்துறை சொல்வதை அப்படியே வாந்தி எடுக்கும் இந்த ஊடகங்கள மறுபுறம் கேட்க வேண்டும்; குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் என்ன கூறப்படுகிறது என்பதையும் மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்ற சமூக அக்கறையில்லாமல் செயல்பட்டு வருகிறார்கள்.

குறிப்பாக முஸ்லிம் தீவிரவாதிகள், இஸ்லாமிய பயங்கரவாதிகள் என ஒரு சமூகத்தையும் மதத்தையும் கொச்சைப்படுத்துவது கடும் கண்டனத்துக்குரியது மட்டுமல்ல, பத்திரிக்கை சட்டத்தின்படி தண்டனைக்குரியது. ஆனால் எழுதுவதற்கு முன்னால் தங்கள் மூளையிலும் பேனா முனையிலும் போதை ஏற்றிக்கொள்ளும் ஊடகங்களுக்கு சரியான பாடத்தை முஸ்லிம் சமுதாயம் புகட்ட வேண்டியதிருக்கும் என எச்சரிக்கிறோம். மதுரையில் ஒரு நாளிதழுக்கு நேர்ந்த கதியை பார்த்தும் இவர்கள் திருந்தவில்லை. அந்தளவுக்கு போகாமல் ஜனநாயக ரீதியில் இது போன்று வக்கிரமாக எழுதும் ஊடகங்களின் அலுவலகங்களில் நூற்றுக்கணக்கில் திரண்டு உள்ளிருப்பு போராட்டம் நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என தமிழகத்தின் அனைத்து ஊடகங்களையும் முஸ்லிம் சமுதாயத்தின் சார்பில் எச்சரிக்கிறோம்.

காலத்தின் கட்டாயம்


தமிழக ஊடகங்களில் இந்துத்துவா மற்றும் ஏகாதிபத்திய கைக்கூலிகளே நிறைந்திருக்கும் சூழ்நிலையில் பொதுவான நடுநிலையான மாற்று அச்சு மற்றும் காட்சி ஊடகங்களை ஏற்படுத்த வேண்டியது முஸ்லிம்களின் அவசர மற்றும் முக்கிய கடமையாக இருக்கிறது. கேரள முஸ்லிம்களின் முன்மாதிரியைக் கொண்டு தமிழகத்தில் உடனடியாக இதற்கான வேலைகளை சமுதாய நலன் விரும்பிகள், செல்வந்தர்கள் முடுக்கி விடவேண்டும். ஊடகத் துறையில் பணியாற்றுவதற்கு முஸ்லிம் இளைஞர்கள் ஆர்வமுடனும் அர்ப்பணிப்புடனும் முன் வர வேண்டும். அப்போதுதான் ஊடகத்தில் இருக்கும் நச்சு விதைகளை கிள்ளி எறிய முடியும்.

நன்றி : த.மு.மு.க

கருத்துக்கள் (4)add comment

எழுதியவர்: கனி , August 09, 2008 08:06

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் உண்மையில் இதுபோன்ற பத்திரிக்கையில் வரும் செய்திகளைப் பார்க்கும்பொழுது மிகவும் மனவருத்தவமாகவே உள்ளது. உண்மைக்கு புறம்பாக எழுதி அவர்களுடைய இந்துத்துவ கொள்கையை வெளிகாட்டிக் கொள்கிறார்கள். ஆனால் நாங்கள் தேசிய பத்திரிக்கைகள், நடுநிலைநாளேடு என்று மனச் சாட்சியில்லாமல் போலியாக எழுதியும் வைத்துள்ளார்கள். இந்நிலை மாறவேண்டும். இதற்கு தமிழக முஸ்லிம் சமுதாயத்திற்கு என்று கொள்கைகளுக்கு (சுன்னத் ஜமாத், தவ்ஹீத் ஜமாத், தமுமுக, அஹ்ல ஹதீஸ் இதுபோன்ற பல அமைப்புகளில் சிற்சில காரணங்களுக்காக பிரிந்துகிடக்கின்ற நம்மவர்கள் இவைகளுக்கு) அப்பாற்பட்டு ஒரு பொதுதினஇதழை வெளியிடச் செய்வது காலத்தின் கட்டாயமாகும். தற்பொழுது வரும் மணிச்சுடர் பத்திரிக்கையையும் இன்னும் அதிகமாக மக்களிடம் செல்வதற்கு நம்மால் ஆன முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இதற்காக அனைத்து தமிழகமுஸ்லிம் கட்சி தலைவர்களும், இயக்கங்களும் இணைந்து உடனடியாக ஏற்பாடு செய்யவேண்டும். இது அனைத்து பொதுமக்களிடமும் பரவலாகச் சென்று முஸ்லிம்களைப் பற்றி தவறாக நோக்குடன் எழுதும் ஊடகங்களுக்கு சவுக்கடி கொடுப்பதுபோல் அமையவேண்டும். வல்ல அல்லாஹ் நமக்கு உதவிசெய்வானாக. ஆமீன்.



எழுதியவர்: haneefm , August 09, 2008 11:14

////தமிழக ஊடகங்களில் இந்துத்துவா மற்றும் ஏகாதிபத்திய கைக்கூலிகளே நிறைந்திருக்கும் சூழ்நிலையில் பொதுவான நடுநிலையான மாற்று அச்சு மற்றும் காட்சி ஊடகங்களை ஏற்படுத்த வேண்டியது முஸ்லிம்களின் அவசர மற்றும் முக்கிய கடமையாக இருக்கிறது.///// சமுதய நல்லினக்கத்துடன் ஒரே குரலில் ஓற்றிமையுடன் நம் சமுதாயம்/ இனையட்டும் ///இன்னும் இஸ்லாமியர்கலுக்கு ஏதிராக இந்த காவிக்கூட்டமும் /மீடியக்களும்[துண்டுதலின் பெயரால்]ஒன்றும் அறியா இந்து சகோதர்கலும் நமக்கு ஏதிராக அவர்கள் ஒன்றாக திரளும் போது நம் இஸ்லாமியைகள் ஓர் அணியில் வர தயங்குவது ஏனொ? இன்னும் கவிக்கூட்டமும் மீடியாக்கலும் சொல்லி தான் நம் நிலை புரியவேண்டுமா? இஸ்லாமிய இளைஞ்கர்களே வாருங்கள் ஓர் அணியில்/ நிச்சயமக சிந்திப்பவர்களுக்கு தான் அல்லாஹ் நல்வாழி காட்டுகிறான் ஹனிஃப்- குவைத்



எழுதியவர்: muhammed rifdeen , August 10, 2008 09:43

nam samuzayam maramal allah taalawum mattamattan.iyakkangal islatukkaha illai iyakkattukkahat taan islam.



எழுதியவர்: abusamim , November 12, 2008 06:33

சத்தியமார்க்கம் வலைதள தற்செயலாக பார்க்க நேர்தது,பாராட்டுகள்.(அல்லாஹ்போதுமானவன் ) அனைத்து பகுதிகளும்,உலக,இந்திய,தமிழக,செய்திகளும்,மார்க்கசெய்திகளும்,மென்மேலும்,சிறப்பாகஅமைய இருகரம்யெந்தி வல்லோனிடம் இறஞ்சிகிறேன்-அபுசமிம்,ஜித்தா.



கருத்து எழுதுக :
தமிழ்
ஆங்கிலம்
சிறிதாக்குக | பெரிதாக்குக
 

busy

 
Add Site to FavoritesAdd Page to FavoritesShare This PageEmail This Page
Back to Top
You are here  : முகப்பு