சத்தியமார்க்கம்.காம்

இஸ்லாமிய வரலாற்றில் புதுத் திருப்பம்! print Email
News - Indian News
வியாழன், 05 ஜூன் 2008 04:20

{mosimage}இஸ்லாம் எனும் இறைமார்க்கத்தில் எந்தப் பிரிவும் இல்லவே இல்லை. ஆயினும், இறுதி நபி முஹம்மத்(ஸல்) அவர்கள் மரணத்திற்குப் பின்னர் ஏற்பட்ட அரசியல் தலைமை ஆதரவு/எதிர்ப்பு, விருப்பு/வெறுப்புகள் எனும் அரசியல் கருத்து வேறுபாடுகளை முன்வைத்து, சிலர் ஏற்படுத்திய குழப்பங்களின் விளைவாகத் தோன்றிய, ஸுன்னீ/ஷியா என்ற இரு பிரிவுகள், "இஸ்லாத்தில் பிரிவுகள் இல்லை" (6:153) என்ற இறைகட்டளையை மறந்து, கடந்த 1400 ஆண்டுகளாக ஒருவரை ஒருவர் கொள்கையளவிலும் எதிர்த்துக் கொண்டு, தனிப் பள்ளி, தனி வழிபாடுமுறை என்று பிரிந்து செயல்பட்டு வருகின்றனர்.

ஸுன்னீ முஸ்லிம்: ஸுன்னத் ( நபி முஹம்மத்(ஸல்) அவர்கள் வழியினர்) என்பது பின்னர் ஸுன்னீ என்றானது.

 

ஷியா முஸ்லிம்: ஷியாத்தே அலீ (நபிகளாரின் மருமகனார்) அலீ(ரழி) அவர்களின் ஆதரவாளர்கள், பின்னர் காலப்போக்கில் ஷியா பிரிவினர் என்று அறியப் பட்டனர்.

 

காலங் காலமாக மனிதகுலத்தின் எதிரியாகிய ஷைத்தானும் அவனுடைய வலையில் சிக்கிய சில இஸ்லாத்தின் எதிரிகளும் அவர்களின் பிரித்தாளும் சூழ்ச்சிகள் மூலம் இரு பிரிவினரிடையேயும் வேற்றுமைகளை வளர்த்து, அவை மேலும் மேலும் உறுதியாகி,  'இஸ்லாத்திலும் பிரிவுகள் உள்ளன' என்ற தவறான ஒரு கருத்துருவாக்கம் ஏற்பட்டு, அது உலகம் முழுதும் ஆழப் பதிந்து பரவலானது என்பது வருத்தத்துக்குரிய உண்மையாகும்.

 

இறைவனால் வகுத்தளிக்கப்பட்ட வாழ்க்கைத் திட்டத்தினை உலக மக்களுக்கு முன்னுதாரணமாக வாழ்ந்து காட்ட வேண்டிய முஸ்லிம்கள், சின்னஞ்சிறு விஷயங்களிலிருந்து இறைவனுக்கு மாறு செய்யாத - ஆனால் மார்க்க அடிப்படையில் வலியுறுத்தப்பட்ட பல பெரிய விஷயங்கள்வரை தங்களுக்குள் பல்வேறு கருத்து வேறுபாடுகள் கொண்டு பல அணிகளாக, ஒற்றுமையின்றி பிரிந்து கிடப்பதே உலக 'முஸ்லிம் வரலாறாகும்'.

 

இதுவே நரேந்திரமோடி போன்ற சமூக விரோதிகளுக்கும் மதத் தீவிரவாதிகளுக்கும் பயங்கரவாதிகளுக்கும் RSS போன்ற அமைப்பாகச் செயல்படும் இரத்தவெறி கொண்ட ஹிந்துத்துவ வெறியர்களுக்கும் ஷாரோன், புஷ் போன்ற மனித விரோத சக்திகளுக்கும் முஸ்லிம்களைக் கிள்ளுக்கீரையாக நினைத்துத் தங்களின் எல்லாவிதச் சோதனைகளையும் முஸ்லிம்கள் மீது செய்து பார்ப்பதற்கு வழிகோலுவதாக அமைந்தது.

 

இதனைக் காலம் கடந்தெனினும் இதோ முஸ்லிம் சமுதாயம் உணரத் துவங்கி விட்டது என்பதற்கான அடையாளம் காண ஆரம்பித்து விட்டது.

 

ஆம், இந்திய இஸ்லாமிய வரலாற்றில்... இல்லையில்லை உலக இஸ்லாமிய வரலாற்றில் முதன் முறையாக இஸ்லாமியர்களில் இரு பெரும்பான்மையினராகப் பிரிந்து செயல்பட்டு வந்த ஸுன்னீக்களும் ஷியாக்களும் தங்களுக்குள் ஒன்றிணைந்து ஆன்மீகச் செயல்பாடுகளைச் செய்ய முன்வந்து விட்டனர்.

 

அதன் முன்னோடியாக, 'ஷியா' மற்றும் 'ஸுன்னீ' எனும் "இரு (அரசியல் அடிப்படையில் பிரிந்த) பிரிவினர்கள் மத்தியில் நல்லிணக்கம் ஏற்படுத்திடும் முயற்சியாக இவ்விரு பிரிவின் அங்கத்தினர்கள் இணைந்து உத்திரப்பிரதேசத்தில் உள்ள லக்னவ் மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் கூட்டுத் தொழுகையை நிறைவேற்றினர்" என்று அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரிய (All India Muslim Personal law board-AIMPLB) உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

 

"இந்தக் கோரிக்கையை ஷியாப் பிரிவினைச் சார்ந்த மார்க்க அறிஞர்கள் முன் வைத்தனர். மேலும் இது இரு சாராருக்கும் பலனளிக்கும் (ஒற்றுமை முயற்சி) என்பதால் நாங்கள் இதற்கு இசைந்து குழுவாக (ஷியாச் சகோதரர்களும் ஸுன்னீ சகோதரர்களும்) ஒன்றிணைந்து வெள்ளி்கிழமையின் விசேஷ ஜும்ஆத் தொழுகையை ஷியாக்களுக்குச் சொந்தமான அஃபிஸி பள்ளியில் நிறைவேற்றினோம்" என்று ஸுன்னீத் தலைவர்களுள் ஒருவரும் (AIMPLB) நிர்வாகியுமான மௌலானா ராஷித் ஃபிரன்கி மஹல்லீ அவர்கள் IANS செய்தியாளர்களிடம் பேசும்போது கூறினார்.

 

"இந்த முன் முயற்சி இரு சாராருக்கு மத்தியில் நெருக்கம், நல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவம் மலர உதவும்" என்றும் அவர் கூறினார்,

 

"இரு சாராருடைய உறவையும் உறுதியாக்கிடும் வகையில் இரு சாராரின் மார்க்க அறிஞர்களும் இது போன்று கூட்டுத் தொழுகைகளைப் பல பள்ளிகளில் இணைந்து நிறைவேற்றுவார்கள்" என்றும் ஒரு ஷியா மார்க்க அறிஞர் தெரிவித்தார்.

 

மேலும், "விரைவில் நாங்கள் எமது ஸுன்னீச் சகோதரர்களுடன் அவர்களுடைய ஆயிஷாபாக் எனும் இடத்தில் உள்ள பள்ளி வளாகத்தில் கூட்டாகத் தொழுகையை நிறைவேற்றுவோம்" என்றும் அவர் உறுதி கூறினார்.

 

கடந்த சில வாரங்களுக்கு முன்பு இரு சாராரின் தலைவர்களும், "தொழுகையைக் கூட்டாக நிறைவேற்ற வேண்டும், ஏனெனில் இது இரு பிரிவினர் மத்தியில் உள்ள தூரத்தை அகற்றிட உதவும் ஒரு மிகச் சிறந்த பாலமாகும்" என்று கருத்துத் தெரிவித்திருந்தனர்.

 

இதற்கு முன்னர் அகில இந்திய முஸ்லிம் தனிநபர் வாரியத்தின் தலைவர் ஷாயிஸ்தா அம்பர் இது போன்ற ஒரு கூட்டுத் தொழுகையை ஏற்பாடு செய்திருந்தார். இதில் இரு சாராருடைய ஆண்களும் பெண்களும் அம்பர் எனும் இடத்தில் ஒரு குழுவாகக் கலந்து கொண்டு, தொழுகையை நிறைவேற்றினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

ஏக இறைவனால் மனிதர்களுக்கு அளிக்கப்பட்ட தூய்மையான ஏக இறைமார்க்கமாகிய இஸ்லாத்தினைத் தானும் உணர்ந்து, பிற சமுதாயத்தினருக்கும் உணர்த்தி, நேர்வழியும் ஈடேற்றமும் பெற வழி வகுக்க வேண்டிய முஸ்லிம்கள், தங்களிடையே நிலவும் ஷிர்க் அல்லாத மற்ற கருத்து வேறுபாடுகளைத் தள்ளி வைத்து, சமூகத்தில் இருக்கும் பிளவுகளையும் குழப்பங்களையும் நீக்க உதவும் இதுபோன்ற முயற்சிகள்தாம் முஸ்லிம்கள் மட்டுமின்றி முழு மனித சமுதாயமும் ஒற்றுமையாகவும் இணக்கமாகவும் பாதுகாப்பாகவும் வாழ்ந்து ஈடேற்றம் பெற வழிவகுக்கும்.

 

ஒரே சமுதாயத்தின் இருபெரும் பிரிவுத் தலைவர்களுக்கும் அறிஞர்களுக்கும் இடையே இந்தியாவில் ஏற்பட்டிருக்கும் இப்புதிய மாற்றம், உலகம் முழுதும் வாழும் முஸ்லிம்களிடையே பரவுவதற்கும் அதுவே உலக முஸ்லிம்களின் ஒற்றுமைக்குத் துவக்கமாக அமைவதற்கும் அருளாளன் அல்லாஹ் அருள் புரியட்டும்.

 

அதற்கான முயற்சிகளில் இறங்கித் துவக்கி வைத்துள்ள இரு பிரிவு அறிஞர்களுக்கும் தலைவர்களுக்கும் சத்தியமார்க்கம் தளக்குழு மனமார்ந்த உள்ளங்கனிந்த வாழ்த்துகளையும் நன்றிகளையும் உரித்தாக்குகின்றது.!

 

வல்ல இறைவன் உதவி புரியட்டும்!

கருத்துக்கள் (50)add comment
 1 2 > 

எழுதியவர்: Aneez Munower , June 05, 2008 06:58

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ....) கொள்கையின் அடிப்படையில் அமையாத ஒற்றுமை நிலைக்குமா? பித் அத் என்ற வழிகேடு நரகில் கொண்டு சேர்க்குமே. அது பற்றிய கவலை வேண்டாமா? அன்புடன் அனீஸ் முனவ்வர்



எழுதியவர்: ஜமீல் , June 05, 2008 07:00

அல்ஹம்து லில்லாஹ்! பலகோடி உலக முஸ்லிம்களின் உள்ளத்துக்குள் பன்னெடுங் காலமாகக் கனன்று கொண்டிருந்த வேதனை அகலும் 'காலம் நெருங்கி விட்டது'. அல்லாஹ்வின் கருணைமழை இடையறாது பொழிவதற்கும் பிரிவினைக்கோடு அழிவதற்கும் நாம் அனைவரும் தொடர்ந்து துஆச் செய்வோம். செய்தியைத் தந்த சத்தியமார்க்கம் தளத்தினருக்கு வாழ்த்துகள்!



எழுதியவர்: இறை நேசன் , June 05, 2008 09:59

அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... நீண்ட காலத்திற்குப் பின் இணையத்தில் காணக்கிடைத்த இனிப்பான செய்தி. மனதில் இனம்புரியாத ஓர் மகிழ்ச்சி அலை பரவுகின்றது. குறுகிய வட்டத்தினுள் சுற்றிவரும் ஒரு சில முஸ்லிம் குழுக்களும் பரந்த மனப்பான்மையுடன் செயல்பட வேண்டிய கட்டாயநிலையை உத்தரபிரதேச முஸ்லிம்கள் உருவாக்கியுள்ளனர். உலக முஸ்லிம்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த இந்தத் தித்திப்பான செய்தியை வெளியிட்ட சத்தியமார்க்கம்.காம் தளத்தினருக்கு மனமார்ந்த நன்றிகள். இறைவன் சமுதாய ஒற்றுமையை வலுப்படுத்தட்டும். அன்புடன் இறை நேசன்.



எழுதியவர்: மும்பைகர் , June 05, 2008 14:51

அஸ்ஸலாமு அலைக்கும் கண்ணியமிக்க சகோதரர்களே மிகவும் சந்தோஷமான செய்தியாகிய இதை அறிந்த இந்நேரத்தில், சில ஆண்டுகளுக்கு முன்பு மும்பையில் 1993களின் போது இது போன்று முஸ்லிம்கள் ஒன்றிணைந்து '' லா ஷியா லா ஸுன்னி இஸ்லாமியா இஸ்லாமியா'' (No Shia, No Sunni ,Only Islam Only Islam) என்று கோஷமிட்டு ஒற்றுமையாக ஊர்வலமாக வந்த செய்தி நினைவுக்கு வருகிறது. இது போன்ற முயற்சிகள் தொடரவேண்டும். பரவ வேண்டும். முஸ்லிம்கள் எல்லாவித கருத்து வேறுபாடுகளையும் விட்டு ஒன்றிணைந்து ஒற்றுமையாக ஓரணியாக செயல்படவேண்டும். அதன் மூலம் இஸ்லாம் எனும் ஓரிரை கொள்கையை மக்களுக்கும் முறையாக விளக்கிட எல்லா விதத்திலும் முயற்சிகள் செய்ய வேண்டும். இறைவன் சமுதாய ஒற்றுமையை வலுபடுத்திட அனைவரும் முயற்சியும் துவாவும் செய்வோம். அன்புடைய மும்பைகர்



எழுதியவர்: Mujibur Rahman , June 05, 2008 15:34

முஸ்லிம் சமுதாயம் உணரத் துவங்கி விட்டது என்பதற்கான அடையாளம் காண ஆரம்பித்து விட்டது. TAMILNAATILUM ITHEPPOL PIRINTHUIRUKKUM SAMUTHAAYA THALIVARKAL ONRUSERTHAAL.......ALHAMTHULILAAH.....ALHAMTHULILAAH.....



எழுதியவர்: மு. முஹம்மத் , June 05, 2008 17:38

அஸ்ஸலாமு அலைக்கும். அல்ஹம்துலில்லாஹ்; வ ஜஸாக்கல்லாஹு கைர். இந்தியாவின் இந்நிகழ்வு உலகளவில் உள்ள முஸ்லிம்கள் அனைவருக்கும் ஒரு நல்ல முன்மாதிரியும் பாடமுமாக அமைய அல்லாஹ்விடம் பிராத்திப்போமாக. தமிழக மற்றும் கேரள முன்னோடி அமைப்புகள் இதில் கவனம் கொண்டு இவ்வழியில் அடுத்த அடிகள் எடுத்து வைக்க முயலவேண்டும். அல்லாஹ் போதுமானவன்.



எழுதியவர்: ஜமீல் , June 05, 2008 21:02

அன்புச் சகோதரர் அனீஸ் முனவ்வர், எதுவும் நிலைக்குமா நிலைக்காதா என்பதை முடிவு செய்ய வேண்டியவன் அல்லாஹ்; நாமல்ல. முயற்சி செய்ய வேண்டியது நம் கடமை; முடித்துத் தரவேண்டியது அவன் உரிமை. கொள்கையில் ஒன்றானவர்கள் என்று சொல்லிக் கொண்டவர்களின் ஒற்றுமை நிலைக்கவில்லையே! ஒருவருக்கொருவர் ஸலாம் சொல்லிக் கொள்வதுமில்லை; ஒருவர் ஸலாம் சொன்னாலும் மற்றவர் பதில் தருவதில்லை என்ற நிலை ஒரே கொள்கையை உடையவர்களிடம் காணப் படுகிறதே! இதற்கு என்ன சொல்வீர்கள்? ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டால்தானே தத்தம் கொள்கை எதுவெனச் சொல்ல முடியும்? நெருங்கி வருபவரை விரட்டியடிக்கும் உரிமை, பெருமானார் (ஸல்) அவர்களுக்கே இல்லை (80:8,9,10) எனும்போது நமக்கு அந்த உரிமை இல்லவே இல்லை. நல்லவை நினைப்போம்; அல்லவை தவிர்ப்போம்.



எழுதியவர்: S.S.K. , June 05, 2008 22:12

அஸ்ஸலாமு அலைக்கும் அன்பு சகோதரர் அனீஸ் முனவ்வர் அவர்களே கொள்கை அடிப்படையில் அமையாத ஒற்றுமை நிலைக்காது என்பது, அல்லது கொள்கை அடிப்படையில் தான் ஒற்றுமை நிலைக்கும் என்பதும் ஒரு மாயை என ஒன்றுக்கு பல முறை உலகளவில் பல்வேறு இடங்களில் நிரூபணம் ஆகியுள்ளது. ஆக... பல்வேறு கொள்கைகளில் இருந்த நிலையில் அதைப் பற்றி பேசாததால் ஒற்றுமையாக இருக்க முடிகிறது, ஒரே கொள்கையில் இருப்பதாக கருதும் போதும் கருத்து வேறுபாடுகளை பெரிது படுத்தினால் ஒற்றுமையாக இருக்க இயலுவதில்லை. கொள்கையில் உறுதியில்லையெனிலும் ஒன்றை எதிர்க்க வேண்டும் என்பதால் ஒற்றுமையாக இருக்க முடிகிறது, ஒரு விஷயத்தை சாதிக்க வேண்டுமெனில் ஒற்றுமையாக இருக்க இயலுகிறது. ஆக ஒற்றுமையாக இருக்கவேண்டும் என்று எண்ணி உறுதியாக இருந்தால் ஒற்றுமை என்பது எக்காலத்திலும் எல்லோருக்கும் சாத்தியமே. இன்று ஒற்றுமையாக இருப்பதாக காட்சியளிக்கும் எத்தனையோ அமைப்புகள் ஜமாத்துகள் உண்மையில் ஒத்த கொள்கையில்,ஒத்த கருத்தில் இல்லையெனிலும் ஒற்றுமையாக இருப்பதாக பிறர் அறிய வேண்டும் என்று நாடினால், அவ்வாறு ஒன்றாக, ( நாடிய காலம் வரை)இருக்க முடிகிறது இருக்க முடியும் என்பதும் யதார்த்தம். அதே போல் கொள்கையடிப்படையில் தான் ஒற்றுமை என்று கூறுபவர்கள் நூற்றுக்கு நூறு சதவீதம் தாம் கூறும் கொள்கையை முழுமையாக பின்பற்றக்கூடியவர்களை கொண்டுள்ள ஒற்றுமையான குழு என்று கூறுவதும் சரியல்ல. இவ்வடிப்படையில் அல்லாஹ் 3:103 ல் 'நீங்கள் அனைவரும் ஒற்றுமையாக அல்லாஹ்வின் கயிற்றை (வேதத்தை) பற்றிப் பிடியுங்கள் பிரிந்து விடாதீர்கள்' என்று கூறியுள்ளது மிகவும் முக்கியம் என்ற எண்ணம் இருந்தால் அதற்காக எவ்வளவு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் ஒற்றுமையாக் இருந்த நிலையில் அதை சரி செய்ய தீர்த்துக் கொள்ள வாய்ப்புகள் அதிகம். மேலும் மனிதர்கள் அனைவரும் ஒரே உம்மத்தினர் என்று அல்லாஹ் கூறுகின்றான் என்பதை கவனத்தில் எப்போதும் வைக்க வேண்டும். அதே நேரம் பிரிந்து கிடந்து ஒருவர் அடுத்தவரை குறைகண்டு, ஃபத்வாக்கள் வழங்கி அதற்கேற்ப ஆதாரங்கள் சமர்பிப்பதில் காலத்தை கடத்தினால் அல்லாஹ்வின் முக்கிய கட்டளையாகிய ஒற்றுமையென்பது சாத்தியமாகாது. கொள்கை அடிப்படையில் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம் ஏனெனெல் நாங்கள் அனைவரும் 100 சதவீதம் கொள்கையை முழுமையாக பின்பற்றுகிறோம் அப்படி பட்டவர்களையே பரிசீலித்து இணைக்கிறோம் என்பது எல்லாம் முழுமையாக சாத்தியமாகாத வெறும் வார்த்தை ஜாலங்கள் என்பதை சிந்திப்ப்வர்கள் உணர முடியும். இப்படி கருதுபவர்கள் அறிந்தோ அறியாமலோ தங்களையும் தங்களை நம்புபவர்களையும் ஏமாற்றுகிறார்கள் என்பதே உண்மையாகும். அதே போல் இந்த ஒற்றுமை அல்லது ஒற்றுமையாக தொழுவது பித்தத் ஆகாது. பித்தத் என்றால் மார்க்கத்தில் புதிதாக ஏற்படுத்துவது. இங்கு புதிதாக ஏதும் ஏற்படுத்தப் பட வில்லை, மார்க்கம் அனுமதிக்காத பிரிவை களைந்து ஒற்றுமையாக தொழுகை எனும் மார்க்க கடமையை நிறைவேற்றுவது பித்தத்தில் அடங்காது ஆகையால் அஞ்சத் தேவையில்லை. இது போன்ற ஒற்றுமை மலர வழி செய்தால் தான் எதிர் கருத்து அறிந்து ஆய்வு செய்து தன்னை திருத்திக் கொள்ள அதிகம் வாய்ப்புள்ளது. இதற்காக முயற்சிப்போம் . அல்லாஹ் நமது இந்த எண்ணத்திற்கும் நிச்சயம் அருள் புரிவான்.



எழுதியவர்: abdul azeez , June 05, 2008 23:06

நானும் சத்யமார்கம் தளம் வாழ்த்துவதில் சேர்ந்துகொண்டேன். // அல்லாஹ்வின் கருணைமழை இடையறாது பொழிவதற்கும் பிரிவினைக்கோடு அழிவதற்கும் நாம் அனைவரும் தொடர்ந்து துஆச் செய்வோம். // சகோதரர் ஜமீளின் துஆவோடும் // இறைவன் சமுதாய ஒற்றுமையை வலுப்படுத்தட்டும்.// சகோதரர் இறைநேசன் துஆவோடும் // இறைவன் சமுதாய ஒற்றுமையை வலுபடுத்திட அனைவரும் முயற்சியும் துவாவும் செய்வோம். // சகோதரர் மும்பைகர் துஆவோடும் சேர்ந்து பிரார்த்திக்கிறேன் மா சலாம். அப்துல் அசீஸ்.



எழுதியவர்: அப்துல்லாஹ், அதிரை , June 06, 2008 07:48

இந்த கட்டுரையின் மூலம் சமுதாயம் ஒன்று படவேண்டும் என்று சத்தியமார்க்கம் தளத்தினரின் ஆர்வமும் அதே சமயம் அதில் உள்ள ஒரு சிறு துளி போன்ற ஒரு நிகழ்ச்சி நடைபெற்றதும் அதைப் பார்த்து சந்தோஷமடைந்து அதற்காக பின்னூட்டமிட்டுள்ள எனதருமை சகோதரர்களுக்கும், பின்னூட்டமிடாமல் படித்துவிட்டு மகிழ்ச்சியுடன் விடைபெற்ற சகோதரர்களுக்கும் எனது சலாத்தினைத் தெரிவித்துக்கொண்டு அந்த சகோதரார்களுடைய எண்ணம் விரைவில் ஈடேர நான் வல்ல இறைவனிடம் பிரார்த்திக்கின்றேன். ஆனால் இந்த தமிழ் நாட்டில் தவ்ஹீத் பெயரைச் சொல்லி தங்களுக்காக ஒரு கூட்டத்தை தக்கவைப்பதற்கு சில சமுதாய துரோகிகள் சமுதாயத்தைக் கூறுபோட்டுக்கொண்டிருக்கும் நிலையைப் பற்றி என்ன வென்று சொல்வது? யாரோடும் கூட்டு சேரக்கூடாது. தவ்ஹீத் ஜமாத்தினரால் ஒதுக்கப்பட்டவர்களோடு பேசுவது தெரிந்தாலே அவன் தவ்ஹீதை (ஏகத்துவக்கொள்கையை) விட்டு வெளியேறிவிட்டான் என்று ஃபத்வா கொடுத்து இந்தச் சமுதாயத்தை கூறுபோடுகிறார்களே அவர்கள் பற்றி என்ன சொல்கின்றீர்கள்? ஏராளமானோரை மாநாட்டிற்கு அழைத்து அந்த மாநாட்டில் ஒரு கண்காட்சியாக 'தவ்ஹீதிலிருந்து வெளியேறியோர்' என்று பட்டியலிட்டு பிஜே யாரைவிட்டு வெளியேறிவந்தாரோ, இவர் யாரை ஷிர்க்கான குற்றச்சாட்டு அல்லாமல் தங்கள் சொந்த விருப்பு வெறுப்பிற்காகவும், பொருளாதாரக் குற்றச்சாட்டுகளைச் சுமத்தி வெளியேற்றினாரோ அந்த சகோதரர்களை 'தவ்ஹீத் (ஏகத்துவக்) கொள்கையை விட்டு வெளியேறியோர் என்று ஃபத்வாக் கொடுப்பதற்கு இவர்களுக்கு என்ன தகுதி? இவர்கள் என்ன இறைவனா? அல்லது இவர்கள் இறைவனின் தூதுச்செய்தியைப் பெற்ற நபிமார்களா? இவர்கள் இப்படி ஃபத்வாக் கொடுப்பது தான் தவ்ஹீதா? பிஜேயை விட்டு வெளியேறிவிட்டால் அவன் தவ்ஹீதைவிட்டு வெளியேறிவிட்டான் என்று ஒரு புது மார்க்கத்தை - தவ்ஹீதுக்கென்ற புது விளக்கத்தை உருவாக்கியிருக்கும் - இன்றைய தமிழக தவ்ஹீத் வாதிகளை எந்தக் கொள்கையில் சேர்ப்பது? இது மிகப்பெரிய சமுதாய துரோகம் இல்லையா? இவர்கள் குற்றம் சுமத்தக்கூடிய அந்த சகோதரர்கள் எந்த விதத்தில் இறைவனுக்கு இனைவைத்து விட்டார்கள்? இந்த நவீன தவ்ஹீத் வாதிகளால் நிரூபிக்க முடியுமா? அல்லது குறைந்தபட்சம் இவர் இயக்கத்தின் பொதுச்செயலாளர் செய்ததாக ஒரு பாலியல் குற்றச்சாட்டு (இவராலே குற்றம் சாட்டப்பட்டு சில நாட்கள் இவர் இயக்கத்தலிருந்து நீக்கி பிறகு சேர்த்தது) போன்ற தவறாவது செய்தார்கள் என்று நிரூபிக்க முடியுமா? நீங்கள் உலக சமுதாயத்தின் ஒற்றுமையை வாரவேற்கின்றீர்கள். ஆனால் இவர்கள் போண்ற நவீன போலித் தவ்ஹீத் வாதிகளுக்கு (?) உங்கள் எழுத்தின் மூலம் சமுதாயத்தைக் கூறு போட ஊக்குவிக்கின்றீர்கள். ஒருசிலரிடம் காரணம் கேட்டால் ஒற்றுமை என்பது கொள்கைச் சார்ந்து வரவேண்டும் என்று ஒரு புது விளக்கம் கொடுக்கப்படுகின்றது. நாம் கேட்கின்றோம் இவரிடம் என்ன கொள்கை இருக்கின்றது? இவர் என்னென்ன குற்றச்சாட்டு சொல்கின்றாரோ அந்த அத்தனைக்குற்றச்சாட்டுகளும் மற்றவர்களைக் காட்டிலும் இவரிடம் தானே இருக்கின்றது. இதை யாரும் மறுக்க முடியுமா? அடுத்து ஓரளவு இவரைப் பற்றி விவரம் தெரிந்த சிலரிடம் கேட்டால் மனிதர்களுக்கு ஒரு சில தவறு வரத்தானே செய்யும் என்கின்றனர். அறியாமல் செய்யும் தவறு வேறு அவர் அறிந்தே வேண்டும் என்றே செய்யும் தவறு வேறு. உதாரனமாக தவ்ஹீதிலிருந்து வெளியேறியோர் என்று பல சகோதரர்களுடைய பெயர் பட்டியலைப் போட்டது தெரிந்து செய்த தவறா அல்லது தெரியாமல் செய்த தவறா? இந்த சமுதாய துரோகிகளுக்கு குறைந்தபட்ட ஆதரவை தெரிவித்தால் கூட அது சமுதாய பிரிவினைக்கு முழு ஆதரவு கொடுப்பதற்கு சமமானதே என்று சொல்லி இந்தக் சமுதாய துரோகிகளை சகோதரர்கள் இனம் காட்ட வேண்டும் என்று கேட்டுக்கொண்டு இதை செய்ய ஒவ்வொறு சகோதரரும் முன்வர வேண்டும் என்று சொல்வி முடிக்கின்றேன். வஸ்ஸலாம். அதிரை அப்துல்லாஹ்



எழுதியவர்: சைஃபுதீன் , June 06, 2008 08:08

அஸ்ஸலாமு அலைக்கும். கேட்பதற்கு சந்தேஷமான விஷயமாக தெரிந்தாலும், வெறும் சேர்ந்து தொழுகை நடத்துவதால் மட்டும் ஒற்றுமை ஓங்கிவிடாது. ஷியாக்கள் அடிப்படையில் பல விசயங்களில் இஸ்லாத்துடன் மாறுபடுகின்றனர். பல ஸஹாபாக்களை காபிர்கள் என்று கூறுகின்றனர். இவர்களை திருத்த முயல வேண்டுமே தவிர, சும்மா இவர்களுடன் சேர்ந்து தொழுகை நடத்துவது, எம்மதமும் சம்மதம் என்ற கொள்கைக்கு உப்பானது.



எழுதியவர்: அல் அமீன் , June 06, 2008 11:10

//கொள்கையின் அடிப்படையில் அமையாத ஒற்றுமை நிலைக்குமா?// சகோதரர் அனீஸ், இதனைக் கொள்கை அடிப்படையில் அல்லாத ஒற்றுமை என எதை வைத்துக் கூறுகின்றீர்கள்? எது இஸ்லாமிய கொள்கையோ அதனைத் தான் இந்த இரு பிரிவினரும் கொண்டுள்ளதாக நான் அறிகிறேன். 'லா இலாஹ இல்லல்லாஹ் முஹம்மது ரஸூலுல்லாஹ்' என்பதே இஸ்லாமிய கொள்கை. சரி தானா? இந்தக் கொள்கையில் என்ன மாறுபாட்டை இவ்விரு பிரிவினரிலும் நீங்கள் கண்டீர்கள்? மாயையிலிருந்து விடுபடும் காலம் கனிகிறது. அடுத்தவர் கூறுவதைக் கண்ணை மூடி ஏற்காமல்... சிந்திப்போம்; ஒன்றுபடுவோம்.



எழுதியவர்: சத்தியமார்க்கம்.காம் , June 07, 2008 10:33

அன்பான வாசகர்களுக்கு, பின்னூட்டமிடும் சகோதரர்களின் கருத்துகள் அனைத்தும் அவர்களது சொந்தக் கருத்துகள் என்பதையும் சத்தியமார்க்கம் தளத்தின் 'இயக்க/அமைப்பு சாராக் கொள்கைக்கு' அவை மாற்றமாக இருந்தாலும் வாசகர்களின் கருத்துச் சுதந்திரத்துக்கு மதிப்பளித்து, முடிந்தவரை அனைத்துக் கருத்துகளும் இங்கு அனுமதிக்கப் படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம். என்றாலும் கட்டுரைக்குத் தொடர்பில்லாத சில தேவையற்ற தனிநபர்/இயக்கத் தாக்குதல்/தூக்குதல் ஆகியவற்றைப் பின்னூட்டமிடும் சகோதரர்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டுகிறோம். புரிதலுக்கு நன்றி!



எழுதியவர்: அபுசுஃபா , June 07, 2008 12:35

அன்புள்ளச் சகோதரர் சைஃபுதீன், நீங்கள் கூறிய கருத்து தவறு என நினைக்கின்றேன். இணைந்தத் தொழுகையினால் மட்டுமே ஒற்றுமை ஓங்கி விடும் என சொல்வதற்கில்லை. மாற்றம் மனதிலிருந்து வர வேண்டும். ஆனால், மாற்றம் மனதிலிருந்து வராமல் இணைந்து தொழவும் முடியாது என்பதையும் நாம் கவனத்தில் எடுக்க வேண்டும். அதே போன்று ஜமாஅத் தொழுகை, ஹஜ் போன்றவற்றின் மூலம் இஸ்லாம் சமுதாய ஒருங்கிணைப்பையும் தலைமைக்குக் கட்டுப்படுதலையும் பயிற்றுவிக்கின்றது என்பதையும் நாம் கவனித்தால் இணைந்து தொழுகை நடத்துவது ஒற்றுமைக்கான ஆரம்பமாக தாராளமாக எடுத்துக் கொள்ளலாம். //ஷியாக்கள் அடிப்படையில் பல விசயங்களில் இஸ்லாத்துடன் மாறுபடுகின்றனர்.// இஸ்லாத்தின் எந்த அடிப்படைகளில் ஷியாக்கள் மாறுபடுகின்றனர் என்ற பட்டியலைத் தர முடியுமா? இஸ்லாத்தின் அடிப்படையாக, 1. வணக்கத்திற்குரியவன் இறைவன் ஒருவனே; முஹம்மது அவனின் தூதர் 2. மறுமை நாள், 3. மலக்குகள், 4. சுவர்க்கம், நரகம் 5. நன்மை, தீமை இறவனால் ஏற்படுவது மேற்கண்டவற்றின் மீது மனதார நம்பிக்கை வைத்து சாட்சி கூறுதலே இஸ்லாத்தின் அடிப்படையாக நான் புரிந்துள்ளேன். இவற்றில் எதனை ஷியாக்கள் நம்பவில்லை அல்லது மறுதலிக்கின்றனர் என்பதைக் கூறுங்கள். //பல ஸஹாபாக்களை காபிர்கள் என்று கூறுகின்றனர்.// அவ்வாறு கூறினால்(அவ்வாறு கூறுவதிலிருந்து அல்லாஹ் நம்மைப் பாதுகாப்பானாக, சஹாபாக்களை மட்டுமல்ல தன்னை முஸ்லிம் என கூறிக் கொள்ளும் எவரையுமே காஃபிர் என கூறுவதிலிருந்து அல்லாஹ் நம்மைப் பாதுகாப்பானாக.) ஒருவன் இஸ்லாத்தை விட்டு வெளியேறியவன் ஆகி விடுவானா?. இது நான் மேலே பட்டியலிட்ட இஸ்லாத்தின் எந்த அடிப்படைக்கு மாறானது?. ஒருவன் இஸ்லாத்தை விட்டு வெளியேறியவன் என நிச்சயிக்கும் தகுதி இவ்வுலகில் யாருக்கு இருக்கிறது? ஒருவன் இஸ்லாத்தை விட்டு வெளியேறுவதற்குரிய அடிப்படைக் காரணங்கள் யாவை? 'தொழாதவன் காஃபிராகி விட்டான்' என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். எனில் இன்று ஸுன்னத் வல் ஜமாஅத்தினரில் ஏன், ஏகத்துவத்தில் உறுதியாக இருப்பதாக மார்தட்டும் தவ்ஹீத் ஜமாஅத்தினரிலேயே எத்தனை பேர் 5 வேளை தொழுகைக்கு முறையாகச் செல்கின்றனர்?. இவர்களை எல்லாம் காஃபிர்கள் என இவ்வுலகில் ஒருவரால் கூற இயலுமா? ஷியாக்கள் சஹாபிகளைக் காஃபிர்கள் என்பது பயங்கரமான தவறு தான். அந்தக் காரணத்திற்காக அவர்களை நாம் காஃபிர் என கூறுவது நாமும் அதே தவறை செய்வதாகாதா? சரி, ஆயிஷா(ரலி) மற்றும் அலி(ரலி) அவர்களுக்கு இடையில் நடந்த அரசியல் யுத்தத்தைச் சுட்டிக்காட்டி, 'அவர்களை விட நாம் எவ்வளவோ மேல்; அவர்கள் ஒருவரை ஒருவர் வெட்டிக் கொண்டு செத்தனர். நாம் அவ்வாறு செய்யவில்லையே' என ஒருவர் கூறினால் இவரின் நிலை என்ன?. சத்திய சஹாபாக்களை அவர்களின் ஈமானுக்கும் இறைவனிடத்தில் வாக்களிக்கப்பட்ட அவர்களின் தகுதிக்கும் கால் தூசுக்குக் கூட தகுதி பெறாத நம்மை விட தாழ்த்தி வைத்து, மனதில் அகம்பாவத்துடன் இக்கருத்தை அவர் கூறியதற்காக அவரை நாம் காஃபிர் என கூறலாமா? //இவர்களை திருத்த முயல வேண்டுமே தவிர,// எவராலும் எவரையும் திருத்த முடியாது. நபி(ஸல்) அவர்களாலேயே முடியவில்லை. நமது பணி இஸ்லாத்தை மற்றவர்களுக்கு எடுத்தியம்பிக் கொண்டு இருத்தல் மட்டுமே. நபி(ஸல்) அவர்கள் அப்பணியைத் தான் நமக்கு விட்டுச் சென்றிருக்கின்றார்கள். இஸ்லாத்தை முறையாக விளங்காத ஒரு முஸ்லிமுக்கு இஸ்லாத்தைப் பயிற்றுவிப்பதற்கும் அவருடன் இணைந்து தொழுவதற்கும் என்ன தொடர்பு உள்ளது? மதீனாவில் உள்ள புதிதாக இஸ்லாத்திற்கு இணைந்த மக்களுக்கு இஸ்லாமிய அடிப்படை விஷயங்களைப் போதிப்பதற்காக நபி(ஸல்) அவர்கள் ஆட்களை அனுப்பி வைத்தனர் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அந்தச் சஹாபி மதீனாவில் மக்களுக்கு போதனை நடத்திய காலகட்டத்தில் அவர்களுடன் இணைந்து தொழாமல் தனியாகவா தொழுது கொண்டிருந்தார்?. நபி(ஸல்) அவர்கள் அந்தச் சஹாபிக்கு அவ்வாறா கட்டளையிட்டார்கள்?. இல்லையே. //சும்மா இவர்களுடன் சேர்ந்து தொழுகை நடத்துவது, எம்மதமும் சம்மதம் என்ற கொள்கைக்கு உப்பானது.// அடிப்படையை விட்டே விலகி நிற்கின்றீர்கள். முதலில் ஷியாக்களை முஸ்லிம்களாக நீங்கள் கருதுகின்றீர்களா? இல்லையா? 'எம்மதமும் சம்மதம்' என்பதன் அர்த்தம் அறியாமல் கூறுகின்றீர்கள். நமது மார்க்கம் 'இறைவன் ஒருவனே' என்பது. இதற்கு மாறாக 'இறைவன் பலர் உண்டு', 'எல்லோரும் இறைவனே', 'தூணும் துரும்பும் இறைவன் தான்', 'இறைவன் இல்லை' போன்ற மார்க்கங்களும் உண்டும். இவற்றையும் ஏற்றுக்கொள்வது தான் 'எம்மதமு சம்மதம்' என்பது. ஷியாக்கள் 'இறைவன் ஒருவனே' என்பதற்கு மாற்றமானவர்கள் என நீங்கள் கூற வருகின்றீர்களா? சகோதரர் சைஃபுதீனிடமிருந்து பதிலை எதிர்பார்க்கின்றேன். - அபுசுஃபா



எழுதியவர்: abdul azeez , June 07, 2008 20:19

சகோதரர் ஸைப்புதீன் அவர்களே ஒற்றுமையை நடைமுறைப்படுத்த இஸ்லாம் மார்க்கத்தில் கொள்கை அடிப்படையிலோ அல்லது இன்னபிற நிபந்தனைக்கு உட்பட்டாலன்றி ஒன்றாக இருக்கக்கூடாது என்று சட்டவரைமுறைகள் இருக்கின்றதா? ஒரே கொள்கையில் இருக்கின்ற நாம் பல இயக்கங்களிலும், பிரிவுகளிலும், மத்ஹபுகளிலும் இருக்கின்றோமே! இந்த அனைத்து பிரிவுகளிலும் உள்ளவர்களுக்கு இறைவன் ஒன்று தான். நபி முஹம்மது ( ஸல் ) அவர்கள்தான். வேதம் குர்ஆன் ஒன்று தான். ஆகா எல்லாம் ஒத்த மார்க்க கருத்தில் உள்ள நாம் இப்பொழுது ஒற்றுமையாக இருக்கமுடிகிறதா ? உங்களுடைய சலாமுக்கு பதில் கிடைக்கிறதா ? பள்ளிவாசலுக்கு ஒன்றாக தொழ முடிகிறதா ? இல்லையே ! ஆக கொள்கை ஒன்றாக இருந்தால் தான் ஒற்றுமை என்பதெல்லாம் சும்மா சொல்லக்கூடிய வார்த்தை. அபச வதவல்லா சூரா எதை நமக்கு போதிக்கிறது. யார் உங்களிடம் வருகிறாரோ அவரை அரவணைக்க சொல்லவில்லையா ? வீண் தர்க்கம் செய்கிறவர்களை விட்டுதள்ளசொள்ளவில்லையா ? அவர்கள் முஸ்லிம்கள் தான் வேற எந்த மதமும் கிடையாது. ஏன் ? வேதம் வழங்கப்பட்டவர்களான பெண்களை நீங்கள் மனமுடித்துகொள்ளலாம். என்கிறது நம் மார்க்கம் அப்படி வேதம் வழங்கப்பட்டவர்கள் கிருஸ்துவர்கள், மற்றும் யூதர்கள், இவர்களுடைய அடிப்படையே வேறு அப்படிப்பட்டவர்களின் பெண்களை நம் படுக்கைவரை அனுமதித்த மார்க்கம் இஸ்லாம் மார்க்கம். தன்னை முஸ்லிம்கள் என்று சொல்லும் மக்களை ஒன்றாக தொழ கூடாது என்று எப்படி உங்களால் சொல்லமுடிகிறது. ஆதாரத்தை முன்வையுங்கள். தங்கள் உட்பட அனைத்து முஸ்லிம்களுக்கும் அஸ்ஸலாமு அலைக்கும். மா சலாம். அப்துல் அசீஸ்.



எழுதியவர்: ஜி.என் (பரங்கிப்பேட்டை) , June 08, 2008 09:28

கருத்து வேறுபாடுகளை களைய முயற்சிக்கும் அதே வேளையில் தமது கருத்தை பிறர் மீது திணிக்காமல் இருப்பதும், கருத்து வேறுபாடுகள் மீது நிலைப்பவர்களுக்கு மறுமையில் இறைவன் சரியான தீர்ப்பு வழங்குவான் என்று நம்பி ஒருங்கிணைந்து வாழ்வதுமே ஒற்றுமைக்கான முடிவாக இருக்க முடியும்.



எழுதியவர்: Noor Mohammed , June 09, 2008 10:04

First the changes should be done in Saudi Arabia, especially shia muslim living in Saudi Arabia.



எழுதியவர்: இப்ராகீம் , June 09, 2008 11:33

//மனதில் அகம்பாவத்துடன் இக்கருத்தை அவர் கூறியதற்காக// அவர் அகம்பாவத்துடன் தான் அக்கருத்தைக் கூறினார் என்பது உங்களுக்கு எப்படி தெரியும்?



எழுதியவர்: M.Mohamed Abbas , June 09, 2008 14:03

அஸ்ஸாலாமு அலைக்கும் அபுசுபா அவர்களே நீங்கள் சற்று சிந்தித்து பதில் கூறுங்கள் ஷியாயிஸம் பற்றி தமிழ்முஸ்லிம்.காம் வெளியிட்ட செய்தி பார்க்க அகில உலக அளவிலும் இஸ்லாத்தின் மிகப் பெரிய கொள்கை மாறுபாடாகக் கருதப்படுவது 'ஷியாயிஸம்' என்பதுதான். முஸ்லிம்களின் அரசியல் மற்றும் வளர்ச்சி ரீதியாக அன்றுமுதல் இன்றுவரை இடற்பாடுகளை நாம் சந்திப்பதற்கு ஷியாயிஸம் முக்கியப்பங்கு வகிப்பது நாம் மனதில் நிறுத்த வேண்டிய ஒன்று, இஸ்லாத்தின் புரிந்துணர்வில் பல மாறுபாடுகளை கண்ட ஷியாக்கள் இந்த உம்மத்தின் ஒரு பகுதியினர் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனாலும் அவர்களின் கொள்கை புரிந்துணர்வு எடுத்துக் காட்டப்பட வேண்டும், பிறரை எச்சரிக்கைப் படுத்த வேண்டும். இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆஃப்கான் போன்ற நாடுகளில் ஷியாக் கொள்கையின் தாக்கம் (இதுதான் ஷியாக் கொள்கை என்று அந்த மக்கள் அறியாமலே) பரவலாக ஆட்கொண்டுள்ளதை அவர்கள் இஸ்லாத்தை வெளிபடுத்தும் போது தெரிந்துக் கொள்ளலாம். தர்கா வழிபாடு, முஹர்ரம் மாதத்தில் நடக்கும் பல்வேறு (பூ மிதித்தல் என்ற பெயரில் நடக்கும் நெருப்பு மிதித்தல் உட்பட) தன்னை வறுத்திக் கொள்ளும் நிகழ்ச்சிகள் அனைத்தும் ஷியாக் கொள்கையேயாகும். எனவே அதுபற்றி ஓரளவு தமிழ் முஸ்லிம்களுக்கு நினைவுபடுத்தவே இந்தக் கட்டுரை. ஷியா என்பது ஒரு அரபுப் பதமாகும். இலக்கண அடிப்படையில் இதற்கு 'பிரிவு' என்று பொருள். குர்ஆனில் பரவலாக இந்தப்பதம் பிரிவினர் (குரூப்) வழிதோன்றல் போன்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. மூன்றாவது ஜனாதிபதியான உஸ்மான்(ரலி) அவர்களின் படுகொலைக்குப் பிறகு ஏற்பட்ட படுமோசமான அரசியல் நெருக்கடிகள் முஸ்லிம் சமூகத்தை வெகுவாக பாதித்தது. ஆதரவு - எதிர்ப்பு என்ற கோஷங்கள் எழுந்த போது அலி(ரலி) அவர்களுக்கு ஆதரவாக ஒரு கூட்டம் (பிரிவு) களமிறங்கியது. அன்றைக்கு இவர்களை கூட்டிக் காட்ட 'ஷியதுஅலி' அலியின் ஆதரவாளர்கள் (அலி பிரிவினர்) என்ற பதம் பயன்படுத்தப்பட்டது. அடுத்தடுத்து நடந்தேறிய பல்வேறு நிகழ்வுகளுக்குப் பின்னால் 'ஷியது அலி'யில் இருந்த அலி என்ற வார்த்தை நீக்கப்பட்டு 'ஷியா'வாக சுருங்கியது. அதுவே அவர்களை சுட்டிக் காட்டும் பெயராகவும் நிலைத்து விட்டது. பொதுவாகவே அரசியல் கொந்தளிப்பு - நெறுக்கடி ஏற்படும் போது பொய்கள் சர்வசாதாரணமாக பிறப்பெடுத்து சமூகத்தை மொத்தமாக ஆட்கொள்ளும் என்பது நாம் அனுபவ ரீதியாக அறிந்த ஒன்றுதான். இதே நிலை அன்றைக்கும் நீடித்தது. அலியின் ஆதரவாளர்கள் என்று களமிறங்கியவர்கள் தங்களையும் தங்கள் தரப்பையும் நியாயப்படுத்திக் கொள்ள பொய்களை துணிந்து பரப்பினர். (அவர்களின் இந்த நிலைப்பாட்டிற்கும் அலி(ரலி) அவர்களுக்கும் எந்த சம்பதமும் இல்லை என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்) அன்றைக்கு இஸ்லாம் என்ற கொள்கையே மிகப் பெரும் ஆதிக்கம் செய்துக் கொண்டிருந்ததால் கொள்கைத்தனமான பொய்களே மக்களை வெகுவாக கவரும் என்பதை உணர்ந்தவர்கள் அதையே கடைபிடித்தனர். தாம் எதிர்பார்க்கும் அரசியல் மாற்றங்களுக்காக இவர்கள் இத்தகைய பொய்களை பரப்பினாலும் அந்தப் பொய்கள் பலகாலகட்டங்களை கடந்தும் ஒரு பிரிவினரை தன் ஆதிக்கத்தில் வைத்துக் கொண்டிருக்கின்றன. எனவே ஷியா என்பது 'ஷியதுஅலி' (அலி குரூப்) என்று துவங்கி அரசியலுக்காக பொய்களை புனைந்து பின்னர் 'ஷியா' என்றாகி அந்த பொய்களின் மீதே நிலைத்து விட்டவர்கள் என்பதை நாம் மறந்து விடக் கூடாது. அவர்களின் அரசியல் ரீதியான பொய்கள் கொள்கை ரீதியாக எப்படியெல்லாம் வியாபித்தது என்பதில் சிலவற்றை வரலாற்றுப் பக்கங்களிலிருந்து உங்கள் பார்வைக்கு வைக்கிறோம். நபி(ஸல்) அவர்கள் மீது பொய்களை துணிந்து சொல்வதில் அரசியல் பிரிவுகள் முன்னணியில் நின்றன. இப்பிரிவினரில் ஷியாக்கள் அதிகமாக பொய்களை பரப்பியவர்களாவர். இவர்களில் மிக மோசமானவர்கள் அவர்களில் ஒரு பிரிவான ''ராபிழா'' என்ற பிரிவைச் சார்ந்தவர்கள் தான். 'ராபிழாக்களைப் பற்றி என்ன சொல்கிறீர்கள்' என மாலிக்(ரஹ்) அவர்களிடம் கேட்கப்பட்டபோது, 'அவர்களிடம் பேசாதீர்கள், அவர்களிடமிருந்து கிடைக்கும் எந்தச் செய்தியையும் அறிவிக்காதீர்கள், அவர்கள் பொய்யர்கள்' என்று கூறினார்கள. (மின்ஹாஜுஸ்ஸுன்னத்) 'நாங்கள் ஒன்று கூடும்போது எதையாவது ஒரு செயலை நல்லது என நாங்கள் நினைத்தால் உடனே அதை ஹதீஸ் என்று கூறிவிடுவோம்' என்று 'ராபிழா' பிரிவினர் ஷைகுகளில் ஒருவர் கூறியதாக பிரபல ஹதீஸ் கலை மேதை 'ஹம்மது பின் ஸலமா'(ரஹ்) அவர்கள் கூறினார்கள், (மின்ஹாஜுஸ்ஸுன்னத்) 'தாங்கள் மனோ இச்சைகளைப் பின்பற்றி கூட்டங்களில் 'ராபிழா' பிரிவினரைவிட அதிகமாக பொய் சொல்லக்கூடிய எந்த கூட்டத்தையும் நான் பார்க்கவில்லை' என இமாம் ஷாஃபி(ரஹ்) கூறியுள்ளார்கள். (உலூமுல்ஹதீஸ்: இப்னுகஸீர்) தங்கள் மனோ இச்சைக்குத் தக்கவாறு பல ஹதீஸ்களை ராபிழாக்கள் உருவாக்கிக் கூறியுள்ளனர். அவைகளில் பின்வரக்கூடிய செய்திகள் குறிப்பிடத் தக்கவையாகும். நபி(ஸல்) அவர்கள் இறுதி ஹஜ்ஜிலிருந்து திரும்பி வரும்போது 'கதீர்ஃகம்' என்ற இடத்தில் சஹாபாக்களை ஒன்றுசேர்த்து, எல்லா நபித்தோழர்களையும் பார்க்கும்படி அலி(ரலி) அவர்களின் கையை பிடிக்து 'இவர் தான் என்னால் வசிய்யத்துச் செய்யப்பட்டவர், எனது சகோதரர், எனக்குப் பின்னால் கலீபாவாக வர வேண்டியவர், எனவே இவர் சொல்வதை கேளுங்கள், அவருக்கு வழிபடுங்கள், என்று நபி(ஸல்) அவர்கள் சொன்னதாக அவர்கள் மீது ஒரு பெரும் பொய்யைக் கூறியுள்ளனர். 'யாரும் ஆதம்(அலை) அவர்களுடைய அறிவையும், நூஹ்(அலை) அவர்களுடைய தக்வாவையும், இப்ராஹீம்(அலை) அவர்களுடைய பொறுமையையும், மூஸா(அலை) அவர்களுடைய கம்பீரத்தோற்றத்தையும், ஈஸா(அலை) அவர்களுடைய வணக்கத்தையும் பார்க்க விரும்பினால், அவர்கள் அலி(ரலி) அவர்களைப் பார்த்துக் கொள்ளட்டும். என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இட்டுக்கட்டி கூறியுள்ளனர். (தன்ஷிஹுஷ்ஷரீயத்) ''நான் அறிவின் தராசு, அலி அதன் இருதட்டுகள். ஹஸன், ஹுஸைன் இவ்விருவரும் அத்தராசின் கயிறாக இருக்கிறார்கள். ஃபாத்திமா அத்தராசின் தொடர், எங்களிலிருந்து வரும் இமாம்கள் அத்தராசின் தூண்கள், அத்தராசில் தான் எங்களை நேசிப்பவர்களுடையவும், எங்களை வெறுப்பவர்களுடையவும் செயல்கள் எடைப் போடப்படுகின்றன. அலி (ரலி) யை நேசிப்பது நற்செயலாகும், அந்நேசத்தோடு எத்தனை பாவங்கள் செய்தாலும் அவன் தண்டிக்கப்பட மாட்டான், அவர்களை வெறுப்பது பாவமாகும். அவ்வெறுப்போடு செய்யப்படும் எந்த நற்செயல்களும் பயனளிப்பதில்லை'' என நபி(ஸல்) அவர்கள் கூறியதாக இட்டுக்கட்டியுள்ளனர். (தன்ஷிஹுஷ்ஷரீயத்) ''நான் கல்வியின் பட்டணம், அலி அதன் வாயில்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக பொய்யாகப் புனைந்து கூறியுள்ளனர். (தன்ஷிஹுஷ்ஷரீயத்) இவ்வாறு அலி(ரலி) அவர்களைப் பற்றியம், அவர்களின் குடும்பத்தார்களைப் பற்றியும் புகழ்ந்து பல ஹதீஸ்களை ஷியாக்கள் இட்டுக்கட்டிக் கூறியுள்ளனர். இப்படிப்பட்ட ஹதீஸ்கள் மூன்று லட்சத்தை எட்டும் என 'கலீலி' என்பவர் தனது ''அல்இர்ஷாத்'' என்ற நூலில் குறிப்பிடுகிறார். ஹதீஸ்களை இட்டுக்கட்டிக் கூறுவதில் ஈடுபட்டிருந்த ''அபுல் அவ்ஜாயி'' என்பவரைப் பிடித்துக் கொண்டு வந்து அவருடைய தலையை வெட்டுமாறு 'பாஸரா' என்ற ஊரில் அமீராக இருந்த அலி(ரலி) அவர்களின் பேரரான முஹம்மது என்பவர் கட்டளையிட்டார். அந்நேரத்தில் ''நான்காயிரம் ஹதீஸ்களை நான் இட்டுக்கட்டி உங்களுக்குக் கூறியுள்ளேன், அவற்றில் ஹலாலை ஹராமாகவும், ஹராமை ஹலாலாகவும் ஆக்கிக் கூறினேன்'' என்று ''அபுல் அவ்ஜாயி'' கூறினார். (தன்ஷிஹுஷ்ஷரீயத்) ஷியாக்கள் தங்கள் தலைவர்களைப் புகழ்வதோடு நின்றுவிடாமல் அபூபக்கர், உமர், உதுமான் (ரலி - அன்ஹும்) போன்ற பெரும் நபித்தோழர்களை இகழ்ந்து பல ஹதீஸ்களை உருவாக்கிக் கூறியுள்ளனர். இதை அறிந்த சில அறிவிலிகள் ஷியாக்களை எதிர்க்க வேண்டுமென்பதற்காக சில ஸஹாபாக்களைப் புகழ்ந்து இட்டுக்கட்டி சில ஹதீஸ்களைக் கூற ஆரம்பித்தார்கள். பொய்யை, பொய்யைக் கொண்டே எதிர்க்கும் மோசமான பழக்கத்தைக் கடைப்பிடித்தார்கள். ''சுவர்க்கத்தின் மரத்திலுள்ள ஒவ்வொரு இலையிலும் லாயிலாஹ இல்லல்லாஹ், முஹம்மதுர்ரஸூலுல்லாஹ் என்றும் அபூபக்கர், உமர், உதுமான் என்றும் எழுதப்பட்டிருக்கும்'' என்று ஒரு ஹதீஸைப் புனைந்து கூறினார்கள். (தன்ஸீஹ்) இவ்வாறே முஆவியா (ரலி) அவர்களது அணியைச் சார்ந்தவர்கள் தங்கள் அணிக்குச் சாதமாகப் பல ஹதீஸ்களை உண்டாக்கிக் கூறலானார்கள். சத்தியத்தைச் சொல்பவர்களும், அசத்தியத்தைப் பரப்புபவர்களும் தங்கள் கொள்கைகளை வலுப்படுத்துவதற்காக தாங்களாகவே ஹதீஸ்களை உற்பத்தி செய்து கொண்டார்கள். ஷியாயிஸம் என்பது இஸ்லாத்தின் அடிப்படைகளுக்கு முற்றிலும் மாறுபட்ட ஒரு கொள்கையாகும். இன்னும் சொல்லப்போனால் அது ஒரு தனி மதம் என்று கூட சொல்லலாம். நபி (ஸல்) அவர்களை விட அலீ (ரலி) அவர்களை உயர்வானவர்களாகச் சித்தரிப்பவர்கள் ஷியாக்கள். மேலும் அபூபக்ர், உமர், உஸ்மான் போன்ற கலீஃபாக்களும் நபித்தோழர்களும் காஃபிர்கள் என்பது ஷியாக்களின் நம்பிக்கை. ஷியாக் கொள்கை இஸ்லாத்தின் அடிப்படைக்கு மாற்றமானது என்பதைப் புரிந்து கொள்வதற்கு ஷியாக்கள் புனிதமாகப் போற்றும் நூல்களிலிருந்து சிலவற்றை இங்கு தருகின்றோம். ''தொழுகைகளைப் பேணிக் கொள்ளுங்கள்! நடுத்தொழுகையையும் பேணிக் கொள்ளுங்கள்'' என்பது திருக்குர்ஆன் வசனம். இதற்கு விளக்கம் கூறப் புகுந்த ஷியாக்களின் விரிவுரையாளர்கள் அய்யாஷ், ஹுவைஸீ ஆகிய இருவரும் பின்வருமாறு கூறுகின்றார்கள். (ஐந்து) தொழுகைகள் என்பது ரசூல் (ஸல்), அலீ (ரலி), ஃபாத்திமா (ரலி), ஹஸன் (ரலி), ஹுஸைன் (ரலி) ஆகிய ஐவராவர். நடுத் தொழுகை என்று விஷேசமாகக் குறிப்பிட்டது அலீ (ரலி) ஆவார். அய்யாஷி தப்ஸீர் பாகம் 1, பக்கம் 128, நூருஸ்ஸகைன் பாகம் 1, பக்கம் 238 ஷியாக்களின் மற்றொரு தப்ஸீரில், நபி (ஸல்) அவர்கள் ருகூவு, ஸஜ்தா செய்ய நான் பார்த்திருக்கிறேன். அப்போது அவர்கள், இறைவா! உன் அடியார் அலீயின் பொருட்டால் அவர்களின் கண்ணியத்தினால் என் உம்மத்தின் பாவிகளை மன்னிப்பாயாக! என்று துஆ செய்தார்கள் என இப்னு மஸ்ஊது (ரலி) கூறினார்கள். அல் புர்ஹான் ஃபீ தப்ஸீரில் குர்ஆன் பாகம் 4, பக்கம் 226 ''நான் மூஸா (அலை), கிழ்ரு (அலை) ஆகியோர் முன்னிலையில் இருந்திருந்தால் அவ்விருவரை விட நான் மிகவும் அறிந்தவன் என்று பிரகடனம் செய்திருப்பேன்'' என்று அலீ (ரலி) கூறினார்களாம். ஷியாக்களில் புகாரி இமாமைப் போல் மதிக்கப் படும் குலைனீ என்பவர் தமது நூலில் இவ்வாறு கூறுகின்றார். அல் உஸுலுல் காபி கிதாபுல் ஹுஜ்ஜத் பாகம் 1, பக்கம் 261 ''உம்மைக் கொண்டே இறைவன் ஆதமை மன்னித்தான். உம்மைக் கொண்டே யூசுப் நபியை பாழுங்கிணற்றிலிருந்து காப்பாற்றினான். உம்மைக் கொண்டே அய்யூப் நபியைச் சோதித்தான்'' என்று அலீ (ரலி) அவர்களை நோக்கி ஸல்மான் பார்ஸீ (ரலி) கூறினார்கள். அல் புர்ஹான் முன்னுரை பக்கம் 27 நபி (ஸல்) அவர்கள் மிஃராஜுக்குச் சென்று இறைவனை நெருங்கிய போது ''முஹம்மதே! திரும்பிப் பாரும்'' என்றானாம் இறைவன். திரும்பிப் பார்த்தால் அங்கே அலீ (ரலி) நிற்கின்றார்கள். தஃப்ஸீருல் புர்ஹான் பாகம் 2, பக்கம் 404 எனக்கு முன் நபிமார்கள் உட்பட எவருக்கும் கொடுக்கப் படாத சிறப்புக்கள் எனக்குக் கொடுக்கப்பட்டுள்ளன. நடந்தது எனக்குத் தெரியாமல் நடந்திராது, நடப்பவை என்னை விட்டும் மறையாது என்று அலீ (ரலி) கூறினார்கள். அல்உஸுலு மினல் காபி பாகம் 19, பக்கம் 197 அலீ (ரலி) அவர்கள் திரும்பவும் இவ்வுலகுக்கு வருவார்கள் என்பது நமது கொள்கையாகும். இதை நம்பாதவன் நம்மைச் சேர்ந்தவனல்லன் என்று பாகிர் இமாம் கூறினார்கள். காஷானியின் கிதாபுஸ்ஸாயி பாகம் 1 பக்கம் 837 நபி (ஸல்) அவர்களை விட அலீ (ரலி) உயர்ந்தவர்கள் என்பது இவர்களின் கொள்கை என்பதற்கு இவை சான்றுகளாகத் திகழ்கின்றன. நபி (ஸல்) அவர்களுக்குப் பின் நான்கு நபர்களைத் தவிர எல்லா நபித்தோழர்களும் மதம் மாறி விட்டனர் என்று ஷியாக்களின் கொள்கை பரப்புச் செயலாளர் ஸலிம் இப்னு கைஸ் அல் ஆமிரீ தனது நூலில் பக்கம் 92ல் கூறுகிறார். மிக்தாத் இப்னுல் அஸ்வத், அபூதர் அல்கிபாரி, ஸல்மான் பாரிஸீ ஆகிய மூவரைத் தவிர எல்லா நபித்தோழர்களும் காபிர்களாகி விட்டனர். கிதாபுர்ரவ்லா மினல் காபி பாகம் 8, பக்கம் 245 அபூபக்ரும், உமரும், அலீ (ரலி) அவர்களுக்குச் செய்த தீங்குக்கு மன்னிப்பு கேட்காமலேயே மரணித்தனர். அவ்விருவர் மீதும் அல்லாஹ்வின் சாபமும், மலக்குகளின் சாபமும், எல்லா மக்களின் சாபமும் உண்டாகட்டும். கிதாபுர்ரவ்லா மினல் காபி பாகம் 2 பக்கம் 246 (அபூபக்ருக்கு பைஅத் செய்ததன் மூலம்) அனைவரும் அறியாமைக் காலத்துக்குத் திரும்பினார்கள். அன்ஸார்கள் மட்டும் அபூபக்ருக்கு பைஅத் செய்யாமல் ஸஃதுக்கு பைஅத் செய்ததன் மூலம் அந்த அறியாமையிலிருந்து விலகினாலும் மற்றோர் அறியாமையில் அவர்கள் வீழ்ந்தனர். கிதாபுர்ரவ்லா மினல் காபி பாகம் 2 பக்கம் 296 எல்லோரும் பல்வேறு உலக நோக்கம் கருதியே இஸ்லாத்தில் இணைந்தனர். அலீ என்ற ஒரு நபரைத் தவிர, அவர் மட்டுமே உணர்ந்து இஸ்லாத்தை ஏற்றார். கிதாபுஷ்ஷியா வஸ்ஸுன்னா என்ற சின்ன ஏடு அல்லாஹ்வும், அவனது தூதர் (ஸல்) அவர்களும் புகழ்ந்துரைத்த நபித்தோழர்களைப் பற்றி தரக்குறைவாகவும், காஃபிர்கள் என்றும் திட்டுவது ஷியாக்களின் கொள்கை என்பதை இதிலிருந்து புரிந்து கொள்ளலாம். இவை தவிர ஷியாக்களின் இமாம்கள் எனப்படும் 12 பேரைப் பற்றிய இவர்களின் நம்பிக்கையும் ஷியாக்கள் இஸ்லாத்திற்குத் துளியும் சம்பந்தமில்லாத கொள்கையுடவர்கள் என்பதை நிரூபிக்கின்றன. ஷியாக்களின் பன்னிரெண்டு இமாம்களும் தாங்கள் எப்போது மரணிப்போம் என்பதை அறிவார்கள். அவர்கள் விரும்பிய நேரத்தில் மரணிப்பார்கள். அல் உஸுலு மினல் காபி பக்கம் 258 இந்தப் பனிரெண்டு இமாம்களிடமும் மலக்குகள் வந்து எல்லா விபரங்களையும் கூறிச் செல்வார்கள். அல் உஸுலுமினல் காபி பக்கம் 398 இந்தப் பனிரெண்டு இமாம்களிடமும் விஷேசமான ஞானம் உள்ளதாம், அதை மலக்குகளும் நபியும் கூட அறிய முடியாது. அல் உஸுலுமினல் காபி பக்கம் 402 எந்த மனிதனின் பேச்சாயினும், பறவைகள் மிருகங்கள் மற்றும் உயிரினங்களின் பேச்சாயினும் அனைத்தையும் பனிரெண்டு இமாம்களும் அறிவர். குர்புல் இஸ்ஸாத் பக்கம் 146 பன்னிரு இமாம்களில் ஒருவராகிய ஜஃபர் சாதிக் அவர்கள் (பூரியான் பாத்தியா நாயகர்) ''வானம் பூமியில் உள்ள அனைத்தையும் நான் அறிவேன், நடந்ததையும் நடக்கவிருப்பதையும் நான் அறிவேன்'' என்றார்கள். அல்உஸுலு மினல் காபி, பாகம் 1, பக்கம் 261 இறந்தவர்களை உங்களால் உயிர்ப்பிக்க இயலுமா? குஷ்ட ரோகிகளையும், பிறவிக் குருடரையும் உங்களால் குணப்படுத்த முடியுமா? என்று அபூஜஃபர் அவர்களிடம் கேட்ட போது முடியுமே என்றார்கள். கிதாபுல் ஹுஜ்ஜா மினல் காபி, பாகம் 1, பக்கம் 470 ''யார் அலீயை அறிந்து கொள்கிறாரோ அவரை நான் நரகில் புகுத்த மாட்டேன். அவர் எனக்கு மாறு செய்திருப்பினும் சரியே, எனக்குக் கட்டுப்பட்டு நடந்தாலும் அலீயை அறியாதவர்களை நான் சுவர்க்கத்தில் சேர்க்க மாட்டேன்'' என்று அல்லாஹ் அலீ (ரலி) யைப் பற்றி கூறினானாம். பஹ்ரானியின் புர்ஹான் எனும் தப்ஸீர் முன்னுரை பக்கம் 23 அல்லாஹ்வின் பெயராலேயே இப்படிப் பொய் கூறுபவர்களே ஷியாக்கள். அல்லாஹ்வின் பெயராலும் அவனது தூதர் (ஸல்) அவர்களின் பெயராலும் இது போல் அவர்கள் அரங்கேற்றிய பொய்கள் ஏராளம். இவர்களது வெறி எந்த அளவுக்குச் சென்று விட்டதென்றால் ''வரவேண்டியவர்'' என்றொரு கற்பனைப் பாத்திரத்தை இவர்கள் உருவாக்கியுள்ளனர். அல் காயிம் என்று இவர்களால் குறிப்பிடப்படக் கூடிய ஒருவர் வருவாராம், அவர் செய்யும் காரியங்கள் என்ன தெரியுமா? காயிம் வந்து ஹுஸைனைக் கொலை செய்தவர்களின் சந்ததிகளை அவர்கள் முன்னோர் செயலுக்காக கொன்று குவிப்பார். தப்ஸீர் சாபி பாகம்1, பக்கம் 172 காயிம் வந்து ஆயிஷாவைத் திரும்ப எழுப்பி அவர்களைச் சவுக்கால் அடிப்பார். பாத்திமாவின் தாயார் மீது அவதூறு கூறியதற்காக இவ்வாறு நடவடிக்கை எடுப்பார். தப்ஸீர் ஸாபி பாகம் 2, பக்கம் 108 இத்தகைய கொள்கைக்காரர்களே ஷியாக்கள். ஷியாக்களைப் பற்றி எழுத வேண்டும் என்றால் இப்படி நிறைய எழுதலாம். அவர்களையும் அவர்களின் கொள்கைகளையும் புரிந்துக் கொள்ளும் சில உதாரணங்களே இவை. பிறிதொரு சந்தர்பத்தில் விரிவாக விளக்குவோம். இன்ஷா அல்லாஹ் இப்போது எனது கேள்வி கேட்கிரேன் //தர்கா வழிபாடு, முஹர்ரம் மாதத்தில் நடக்கும் பல்வேறு (பூ மிதித்தல் என்ற பெயரில் நடக்கும் நெருப்பு மிதித்தல் உட்பட) தன்னை வறுத்திக் கொள்ளும் நிகழ்ச்சிகள் அனைத்தும் ஷியாக் கொள்கையேயாகும்.// இது போல் நாமும் அவர்கள் பின்னால் சேர்ந்து நின்று கை தட்டி அவர்களின் செயலை செய்ய சொல்கிரீர்களா?இது எந்த விததில் நியாயம் என்பதை நீங்கள் சொல்லுங்கள். நபி(ஸல்) அவர்கள் மொழிந்தார்கள்: 'யாரேனும் ஒருவர் எம்முடைய விஷயமொன்றில் புதுமையைச் சேர்க்கின்றாரோ, அது அந்த விஷயம் சார்ந்தது அல்ல, அது நிராகரிக்கப்பட வேண்டும்.' (புகாரி, முஸ்லிம்) 'முஸ்லிம்' ஹதீஸ் கிரந்தத்தில் உள்ள மற்றுமோர் அறிவிப்பின்படி, 'யாரேனும் ஒருவர் நமக்கு உடன்பாடு இல்லாத செயலொன்றை செய்வாரெனில் அது நிராகரிக்கப்பட வேண்டியதாகும்' என்று நபி(ஸல்) அவர்கள் மொழிந்ததாக வருகின்றது. எவன் மாற்றுமத கலாசாரத்தை பின் பற்றுகிறானோ அவன் அந்த மததை சார்ந்தவன் //நபி (ஸல்) அவர்களை விட அலீ (ரலி) அவர்களை உயர்வானவர்களாகச் சித்தரிப்பவர்கள் ஷியாக்கள். மேலும் அபூபக்ர், உமர், உஸ்மான் போன்ற கலீஃபாக்களும் நபித்தோழர்களும் காஃபிர்கள் என்பது ஷியாக்களின் நம்பிக்கை. // அல்லா தெளிவாக இவ்வாறு அறிவிக்கிறான், கண்ணியம் மிக்க நபித்தோழர்கள் மார்க்கத்தில் மிகத்தெளிவான ஞானத்தை உடையவர்களாகத் திகழ்ந்தனர் என்பதற்கு எல்லாம் அறிந்தவனாகிய அல்லாஹ்வே சான்றளிக்கின்றான். மகத்தும் மிக்க அல்லாஹ் கூறுவதைப் பாருங்கள் قُلْ هَـذِهِ سَبِيلِي أَدْعُو إِلَى اللّهِ عَلَى بَصِيرَةٍ أَنَاْ وَمَنِ اتَّبَعَنِي وَسُبْحَانَ اللّهِ وَمَا أَنَاْ مِنَ الْمُشْرِكِينَ (நபியே!) நீர் சொல்வீராக! 'இதுவே என்னுடைய (நேரிய) வழியாகும்; நான் அல்லாஹ்வின் பால் (உங்களை) அழைக்கின்றேன்; நானும் என்னைப் பின்பற்றியவர்களும் தௌ¤வான ஞானத்தின் மீதே இருக்கின்றோம்; அல்லாஹ் மிகத் தூய்மையானவன்; ஆகவே, அவனுக்கு இணைவைப்போரில் நானும் ஒருவனல்லன்.' (12:108) நானும் என்னைப் பின்பற்றியவர்களும் தெளிவான ஞானத்தின் மீதே இருக்கின்றோம் என்ற வாசகத்தில் தெளிவான ஞானம் என்பதற்கு அரபியில் இடம்பெற்ற வார்த்தை 'பஸீரத்' என்பதாகும். பின்பற்றியவர்கள் என்பதில் மறுமை நாள் வரை நபி (ஸல்) அவர்களைப் பின்பற்றுபவர்களும் அடங்குவர் என்றிருந்தாலும் இதில் முதல் பட்டியலில் இடம்பெறுபவர்கள் கண்ணியம் மிக்க ஸஹாபாக்கள் என்பதில் ஐயம் இல்லை அவர்கலுடன் எங்களையும் சேர்ந்து துதித்து இது போல் பாட சொல்கிறீர்களா!அவர்கள் நம்மிக்கை போல் எங்களையும் நம்ம சொல் கிறீர்களா //ஷியாக்களின் மற்றொரு தப்ஸீரில், நபி (ஸல்) அவர்கள் ருகூவு, ஸஜ்தா செய்ய நான் பார்த்திருக்கிறேன். அப்போது அவர்கள், இறைவா! உன் அடியார் அலீயின் பொருட்டால் அவர்களின் கண்ணியத்தினால் என் உம்மத்தின் பாவிகளை மன்னிப்பாயாக! என்று துஆ செய்தார்கள் என இப்னு மஸ்ஊது (ரலி) கூறினார்கள். அல் புர்ஹான் ஃபீ தப்ஸீரில் குர்ஆன் பாகம் 4, பக்கம் 226 // இவ்வாறு எங்களையும் அவர்கலுடன் சேர்த்து இது போல் கேட்க சொல் கிரீர்களா! மேலே உள்ள அந்த சான்று படிக்கும் போதே நெஞ்சம் பதறுகிறது.இந்த மாதரி கேவலமான கொள்கை உடைவர்களின் பின்னால் எப்படி நின்று தொழுகை உங்களுக்கு மனம் வருமா?உங்களுக்கு மனம் வந்தளும் சரி,இவ்வாறு அலி(ரலி) அவர்களை நபி(ஸல்) அவ்ர்களை விட உயர்த்தியும்,சங்கை மிகு அருமை சகாபாக்களை மட்டம் தட்டும் அவர்களின் பின்னால் நின்று தொழுகை செய்ய எனக்கு மனம் வராது மேலும் //நமது மார்க்கம் 'இறைவன் ஒருவனே' என்பது.// //இவற்றையும் ஏற்றுக்கொள்வது தான் 'எம்மதமு சம்மதம்' என்பது. ஷியாக்கள் 'இறைவன் ஒருவனே' என்பதற்கு மாற்றமானவர்கள் என நீங்கள் கூற வருகின்றீர்களா?// ஷியாக்கள் மட்டும் இல்லை உலகத்தில் எந்த மததை சேர்ந்த வர்கலை கேட்டு பாருங்க அவர்கள் அனைவரும் இரைவன் ஒருவன் என்று தான் கூறுவார்கள்,இஸ்லாம் என்பது 'லா இலாஹ இல்லல்லாஹ் முஹம்மது ரஸூலுல்லாஹ்' என்பதே ,இறைவன் மட்டும் ஏற்று கொண்டு நபி(ஸல்) அவர்களையும் ஏற்று கொள்ள வெண்டும். இறைவன் மட்டும் ஏற்று கொண்டு நபி(ஸல்) அவர்களை ஏற்க வில்லை என்றால் எவரும் இஸ்லாம் ஏற்றவன் கிடையாது. ஆனால் ஷியாக்கள் அவர்களின் கலிமா ஒரு இஸ்லாம் சொல்லும் கலிமா போல் இல்லை,அவர்கள் சொல்லும் அந்த கலிமாவை என் கைகளால் எழுத எனக்கு விருப்பம் இல்லை,மேலும் அவர்கள் தொழுகைக்காக் கூரும் பாங்கு வின் அவர்களின் வாசகம் ''அஸ்ஸகது அன்ன முகம்மது ரஸுல்லில்லா' என்பதை அவர்கள் ''அஸ்ஸகது அலி வலியுல்லா' ''அஸ்ஸகது அலி வலியுல்லா' '''அஸ்ஸகது ஹசன் ,ஹுசைன் வலியுல்லா' '''அஸ்ஸகது ஹசன் ,ஹுசைன் வலியுல்லா' இவர்கள் முகம்மது(ஸல்) அவர்களின் உம்மத்தை கூறவில்லை, அலி,ஹச்ன்(ரலி),ஹுசைன்(ரலி)அவர்களை பின்பற்றுவர்களுக்கு தான் அந்த கூற்று. இவ்வாறு கூறும் அவர்களின் பின்னால் நின்று தொழுகை நிறை வேற்ற வேண்டுமா? னீங்கள் சற்று சிந்தித்து பதில் கூறுங்கள் 'லா இலாஹ இல்லல்லாஹ் முஹம்மது ரஸூலுல்லாஹ்' என்று எவன் மனதார ஈமானை ஏற்று கொண்டாணோ அவனே உண்மையான முஸ்லிம்,மு.'.மீன். இதை தவிற்து ஒருவன் கலிமாவில் கூட்டி,குறைத்து சொல்லுவனோ அவன் எப்படி அழைப்பது என்று எனக்கு தெரியவில்லை. அல்லா நமது அனைவரையும் நேர் வழிபடுத்துவனாக! ஆமீன் ஆமீன் யாரப்பில் ஆலமீன்.



எழுதியவர்: சைஃபுதீன் , June 09, 2008 14:26

சகோதரர் அப்துல் அஜீஸ் மற்றும் அபுசுஃபா, உங்களின் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக... நான் சொல்ல வந்த கருத்து வெரும் சேர்ந்து தொழுவதால் மட்டும் ஒற்றுமை வந்து விடாது. அவர்களின் தவருகளை திருத்த வேண்டும் என்பதாகும். நீங்களாவே பல விஷயங்களை கற்பனை செய்து எழுதியுள்ளீர்கள். அபுசுஃபா அவர்களே, நீங்கள் ஷியாக்கள் சம்பந்தமாக கேட்ட கேள்விகளுக்கு பதில், கிழே உள்ள Link ல் கொடுக்கப்பட்டுள்ளது. அதை படித்து ஷியாக்கள் எப்படிபட்டவர்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள். ஷியாக்களை திருத்த முயலுவது நம் கடமை. அன்புடன், சைஃபுதீன்



எழுதியவர்: சைஃபுதீன் , June 09, 2008 14:26

சகோதரர் அப்துல் அஜீஸ் மற்றும் அபுசுஃபா, உங்களின் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக... நான் சொல்ல வந்த கருத்து வெரும் சேர்ந்து தொழுவதால் மட்டும் ஒற்றுமை வந்து விடாது. அவர்களின் தவருகளை திருத்த வேண்டும் என்பதாகும். நீங்களாவே பல விஷயங்களை கற்பனை செய்து எழுதியுள்ளீர்கள். அபுசுஃபா அவர்களே, நீங்கள் ஷியாக்கள் சம்பந்தமாக கேட்ட கேள்விகளுக்கு பதில், கிழே உள்ள Link ல் கொடுக்கப்பட்டுள்ளது. அதை படித்து ஷியாக்கள் எப்படிபட்டவர்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள். ஷியாக்களை திருத்த முயலுவது நம் கடமை. அன்புடன், சைஃபுதீன்



எழுதியவர்: சைஃபுதீன் , June 09, 2008 14:28

Link யை பதிய மறந்து விட்டோன். இதே Link கிழே, http://www.allaahuakbar.net/SHIITES/index.htm அன்புடன், சைஃபுதீன்



எழுதியவர்: அபுசுஃபா. , June 10, 2008 11:01

சகோதரர் சைஃபுதீன், ஒரு சாரார் மீது நாம் குற்றம் சுமத்தும் பொழுது அதனைக் குறித்து தீர அறிந்தப் பின்னர் சுமத்துவதே சரியானது என்பது எனது நிலைபாடு. அதிலும் ஒருவரை முஸ்லிம் அல்ல எனக் கூறுவது எனில்..? நான் கேட்ட கேள்விகளுக்கு இங்கே பதில் உள்ளது என ஒரு ஆங்கிலச் சுட்டியைத் தருவது சரியல்ல. குறைந்தபட்சம் நீங்கள் அறிந்திருக்கக்கூடிய விஷயங்களையாவது தந்திருக்கலாம். நம்மிடையிலான கலந்துரையாடல் நம்மிடையே நிலவும் சில தவறான புரிந்து கொள்ளல்களை மாற்ற உதவலாம். நீங்கள் தந்தச் சுட்டியில் சென்று சிறிது நேரம் பார்த்தேன். வலது பக்கம் 'இவர்களைக் குறித்து அறிந்து கொள்ளுங்கள்' என்ற ரீதியில் இஹ்வானிஸத்திலிருந்து ஜமாஅத்தே இஸ்லாமி வரை பட்டியல் போட்டுள்ளார்கள். ஆனால் அப்பட்டியலில் எங்கு தேடியும் 'ஷாஃபி, ஹனபி, மாலிக்கி, ஹன்பலி' போன்ற இன்னபிற மத்ஹப்களைக் குறித்துக் காண இயலவில்லை. ஏன் இவை எல்லாம் முழுமையாக இஸ்லாம் வகுத்தச் சட்டப்படி தான் அமைந்துள்ளனவா? 'ஒருவர் மீது கொண்ட வெறுப்பு உங்களை நீதியிலிருந்து தவற வைத்து விட வேண்டாம்' என்ற திருக்குர்-ஆன் வசனத்தை நினைவில் நிறுத்தி எதையும் நடுநிலையோடு அணுகுவோமே. நீங்கள் ஷியாக்கள் கொள்கை ரீதியாக மாறுபாடுகொண்டவர்கள் என முன்னர் கூறியிருந்தீர்கள். எனது கேள்வி: ஷியாள் இஸ்லாமிய அடிப்படை கொள்கைகளில் எந்த விஷயத்தை ஏற்று கொள்ளாமல் மாறுபடுகின்றார்கள் என்பதே. அதுவல்லாமல் அவர்கள் சஹாபாக்களைத் திட்டுகின்றார்கள், முஹர்ரம் கொண்டாடுகின்றார்கள், நெஞ்சில் கீறுகின்றார்கள், பாஞ்சா அடிக்கின்றார்கள், தீகுண்டம் சாடுகின்றார்கள் என்பதெல்லாம் வேண்டாம். இது சுன்னத் வல் ஜமாஅத்தினரிடமும் மலிந்தே காணப்படுகின்றன. இதற்காக ஷியாக்களை மட்டுமல்ல அனைவரையுமே திருத்த முயல நாம் கடமைப்பட்டுள்ளோம். எனது கேள்வி ஷியாக்கள் இஸ்லாத்தின் அடிப்படையில் எதனை ஏற்றுக் கொள்ளவில்லை என்பது தான். அதற்கு நீங்கள் அறிந்ததைக் கூறுங்கள். கலந்துரையாடல் நம்மிடையே உள்ள புரிந்து கொள்ளலில் உள்ள தவறை நீக்க உதவும். அபுசுஃபா.



எழுதியவர்: அபுசுஃபா. , June 10, 2008 11:14

//'லா இலாஹ இல்லல்லாஹ் முஹம்மது ரஸூலுல்லாஹ்' என்று எவன் மனதார ஈமானை ஏற்று கொண்டாணோ அவனே உண்மையான முஸ்லிம்,மு.'.மீன்// சகோதரர் முஹம்மது அப்பாஸ், இஸ்லாமிய அடிப்படை கொள்கைக்கு ஷியாக்கள் எதிரானவர்களா? என்ற கேள்விக்குப் பதிலாக என்னவெல்லாமோ எழுதியுள்ளீர்கள். நீங்கள் எழுதியதிலிருந்தே சுருக்கமாக ஒரு கேள்வி: ஷியாக்கள் 'லாயிலாஹ இல்லல்லாஹ் முஹம்மது ரஸூலுல்லாஹி' என்ற கலிமாவுக்கு எதிரானவர்களா? அதாவது இக்கலிமாவை மொழியாதவர்களா? மற்ற கேள்விகள் பின்னர் கேட்கிறேன். முதலில் இதற்குச் சுருக்கமாக பதில் கொடுங்கள். இவ்வாறு கலிமா அவர்கள் சொல்லவில்லை எனில், அவர்கள் கூறும் கலிமா என்ன என்பதையும் எழுதுங்கள். கவனம் - நீங்கள் கூறும் பதில் உலகிலுள்ள அனைத்து ஷியாக்களுக்கும் பொருந்தும். எனவே அவசரப்பட்டுத் தவறான பதிலைத் தந்து விட வேண்டாம். தீர யோசித்து, ஆய்ந்து பதில் எழுதுங்கள். அபுசுஃபா.



எழுதியவர்: அபுசுஃபா , June 10, 2008 11:23

//அவர் அகம்பாவத்துடன் தான் அக்கருத்தைக் கூறினார் என்பது உங்களுக்கு எப்படி தெரியும்?// சகோதரர் இப்ராகிம், அவ்வாரெனில் அவ்வாறு கூறிய 'அவர்' யார் என்பதை அறிந்து தான் இக்கேள்வியைக் கேட்டுள்ளீர்கள் என கருதுகிறேன். சரி, அவர் அகம்பாவம் இல்லாமல் - மனதில் எந்த எண்ணமும் இல்லாமல் தான் அவ்வாறு சத்திய சஹாபாக்களைக் குறித்து கூறினார் என்றே வைத்துக்கொள்வோம். சுவர்க்கத்திற்கு வாக்களிக்கப்பட்ட சத்தியசஹாபாக்களைக் குறித்து அத்தகைய மோசமான அர்த்தம் வரக்கூடிய கமென்டுகளைக் கூறலாமா?. அவ்வாறு எவ்வித பயமும் இன்றி துணிச்சலாக மேடையில் பேசும் ஒருவரை முஸ்லிமாகக் கருத முடியுமா?(நான் அவரை முஸ்லிம் அல்ல எனக் கூறவரவில்லை என்பதைச் சகோதரர்கள் கவனத்தில் வைக்க வேண்டும். சஹாபாக்களைத் திட்டுவதால் ஷியாக்கள் காஃபிராகி விட்டர் என ஸுன்னிகள் கருதுவதாலேயே நான் இந்தக் கேள்வியைக் கேட்கின்றேன்) அபுசுஃபா



எழுதியவர்: abdul azeez , June 11, 2008 03:38

சகோதரர் ஸைப்புதீன் அவர்களே அஸ்ஸலாமு அலைக்கும். // நீங்களாவே பல விஷயங்களை கற்பனை செய்து எழுதியுள்ளீர்கள். // என்று எழுதியுள்ளீர்களே ! ஒரே கொள்கையில் இருக்கின்ற நாம் பல இயக்கங்களிலும், பிரிவுகளிலும், மத்ஹபுகளிலும் இருக்கின்றோமே! இது என் கர்ப்பனையா ? அல்லது ஒத்த மார்க்க கருத்தில் உள்ள நாம் இப்பொழுது ஒற்றுமையாக இருக்கமுடிகிறதா ? உங்களுடைய சலாமுக்கு பதில் கிடைக்கிறதா ? பள்ளிவாசலுக்கு ஒன்றாக தொழ முடிகிறதா ? நீங்கள் ஊரில் பார்த்ததில்லையா வசதியானவர்களின் வீட்டில் நாய்கள் ஜாக்கிரதை என்று போர்ட் எழுதி இருக்குமே ! அதே மாதிரி ஒவ்வொரு பள்ளிவாசளிலும் நான்கு மத்ஹப் சார்ந்தவர்கள் மட்டும் இப்பள்ளியில் தொழவேண்டும் என்று போர்டை மாட்டி நீங்கள் நினைத்துக்கொண்டு இருக்கும் ஒரே கொள்கைக்காரர்கள் மத்ஹபை சாராதவர்களை பள்ளிவாசலுக்கு தொழ விடாமல் தடுக்கின்றார்களே ! இது தான் ஒற்றுமையா ? மத்ஹபை தான் சேரவில்லை மற்றபடி கொள்கை எல்லாம் ஒன்று தானே. அபச வதவல்லா சூரா எதை நமக்கு போதிக்கிறது. யார் உங்களிடம் வருகிறாரோ அவரை அரவணைக்க சொல்லவில்லையா ? வீண் தர்க்கம் செய்கிறவர்களை விட்டுதள்ளசொள்ளவில்லையா ? இப்படி ஒரு சூரா குர்ஆனில் இருக்கா இல்லையா ? கண் தெரியாதவரை ஆதரிக்க சொல்லி வசனம் இருக்கு சகோதறரே. இல்லை இது என் கர்ப்பனை என்று சொன்னீர்களா ? வேதம் வழங்கப்பட்டவர்களான பெண்களை நீங்கள் மனமுடித்துகொள்ளலாம். என்கிறது நம் மார்க்கம் அப்படி வேதம் வழங்கப்பட்டவர்கள் கிருஸ்துவர்கள், மற்றும் யூதர்கள் இந்த வேதம் வழங்கப்பட்டவர்களை அரபியர்கள் திருமணம் முடிக்கிறார்கள் அப்பெண்ணை நம் மார்க்கத்தில் இணைக்கிறார்கள் பரவலாக நடக்கிறது தான். நீங்கள் இதை என் கர்ப்பனை என்று சொன்னீர்களா ? சற்று விளக்கவும். மேலும் // அவர்களின் தவருகளை திருத்த வேண்டும் என்பதாகும். // நான்கு பிரிவுகள் மற்றும் ஜாக், தௌஹீத இன்னும் அரசியல் பிரிவு இவர்களிடம் இணை வைக்கும் மிகப்பெரும் பாவம் என்பது கிடையாது இவர்களிடம் என்ன தவறு இருக்கிறது ? ( தர்கா வழிப்பாடு செய்பவர்களை தனியா வையுன்கள் ) ஆனால் ஒற்றுமை இல்லையே ! // வெரும் சேர்ந்து தொழுவதால் மட்டும் ஒற்றுமை வந்து விடாது // அப்ப என்னன்ன அம்சம் இருந்தால் அழகான ஒற்றுமை நமக்கு கிடைக்கும் விளக்குங்கள் மற்றும் அனைத்து முஸ்லிம்களுக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் மா சலாம். அப்துல் அசீஸ்.



எழுதியவர்: சைஃபுதீன் , June 11, 2008 06:53

சகோதரர் அபுசுஃபா, ஷியாக்களை நான் காபிர் என்று எனது கமேண்டில் கூற வில்லை. ஷயாக்களைப் பற்றி எதுவும் அறியாமல், நீங்கள் அவர்களை ஆதரிக்கீறீர்கள். நீங்களாகவே அவ்வாறு புரிந்து கொண்டு விட்டிர்கள். ஷியாக்களுக்கு என்று தனி கலிமா உண்டு, அதை கிழே உள்ள Link ல் படியுங்கள். அதில் உள்ள அனைத்தும் விஷயங்களும் ஷியாக்களின் நூல்களிலிருந்து எடுக்கப்பட்டாகும், http://www.allaahuakbar.net/SHIITES/shia_has_different_kalimah.htm



எழுதியவர்: M.Mohamed Abbas , June 11, 2008 15:55

அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரர் அப்துல் அஸிஸ் அவர்களே //நான்கு பிரிவுகள் மற்றும் ஜாக், தௌஹீத இன்னும் அரசியல் பிரிவு இவர்களிடம் இணை வைக்கும் மிகப்பெரும் பாவம் என்பது கிடையாது இவர்களிடம் என்ன தவறு இருக்கிறது ? ( தர்கா வழிப்பாடு செய்பவர்களை தனியா வையுன்கள் ) ஆனால் ஒற்றுமை இல்லையே !// இவர்களின் அனைவரிடத்திலும் இஸ்ஸலாத்தின் அடிப்படையான மிக வலுவான் ஒரு ஒற்றுமை உள்ளது. இந்த நபர் யார் இடத்திலும் உனது கலிமா என்ன என்று கேளுங்கள். அவர்கள் அனைவரும் சொல்லும் ஒரே பதில் 'லா இலாஹ இல்லல்லாஹ் முஹம்மது ரஸூலுல்லாஹ்' என்று தான் அன்பு சகோதரர்ரே. இவர்களிடத்தில் (நான்கு பிரிவுகள் மற்றும் ஜாக், தௌஹீத) உள்ள பிரச்சனை கருத்து வேறுபாடு தான் மற்ற படி இவர்கள் அனைவரும் முஸ்லிம் தான் ,மு.'.மீன் தாம்.இதை அல்லா தெளிவாக திருமறையில் தெரிவித்து விட்டான்,பல வசனங்கள் அல்லா கூறுகிறான் நீங்கள் கருத்து வேற்பட்டு பிரிந்து போய் விடாதீர்கள், கருத்து வேறுபாடு உள்ளது என்று தெளிவாக தனது அத்தாட்சி முலம் நிருபித்து காட்டுகிறான்,இதுயும் உலக முஸ்லிம் உள்ள கிடைத்த ஒரு பெரிய அத்தாட்சி மற்றும் அல்லா முஸ்லிம்களுக்கு கொடுக்கும் ஒரு எச்சிரிக்கை. ஆனால் -ஷியாக்கள் இது போன்ற கலிமா சொல்லவில்லை. 'லா இலாஹ இல்லல்லாஹ் முஹம்மது ரஸூலுல்லாஹ்' என்று எவன் சொல்லுவானோ அவனே முஸ்லிம்,மு.'.மீன் அவனுக்கு தான் மேற்சொன்ன கருத்து வேறுபாடு வசனம் பொருந்தும். இதை தவிற்து இந்த 'லா இலாஹ இல்லல்லாஹ் முஹம்மது ரஸூலுல்லாஹ் கலிமாவை எவன் கூட்டி,குறைத்து சொல்லுவானோ அவனுக்கு இது பொருந்தாது... இதை தவிற்து எவன் இந்த 'லா இலாஹ இல்லல்லாஹ் முஹம்மது ரஸூலுல்லாஹ் கலிமாவை எவன் கூட்டி,குறைத்து சொல்லுவானோ அவனை நீங்கள் எவ்வாறு அழைப்பீர்கள்?



எழுதியவர்: abdul azeez , June 12, 2008 03:45

வ அலைக்கும் சலாம். முஹம்மது அப்பாஸ் அவர்களுக்கு. // இவர்களின் அனைவரிடத்திலும் இஸ்ஸலாத்தின் அடிப்படையான மிக வலுவான் ஒரு ஒற்றுமை உள்ளது. இந்த நபர் யார் இடத்திலும் உனது கலிமா என்ன என்று கேளுங்கள். அவர்கள் அனைவரும் சொல்லும் ஒரே பதில் 'லா இலாஹ இல்லல்லாஹ் முஹம்மது ரஸூலுல்லாஹ்' என்று தான் அன்பு சகோதரர்ரே. // அதற்கு பெயர் வழுவான ஓர் இறைக்கொள்கை தவிர ஒற்றுமை இல்லை. ஒற்றுமை என்பது எல்லோரும் சந்தோசமாக பேசிக்கொல்லனும், சலாம் பகிர்ந்துக்கணும், இவர் அவரைப்பார்த்தால் அடமாங்காவை ஜிலேபி என்று தவறுதலாக வாயில் வைத்து கொண்டது போல் உம்ம் என்று போவதை தவிர்க்கணும், பள்ளிவாசலுக்கு வருபவனை பல்லை உடைத்து ரத்த கலரியாக்கி துரத்திவிடுவது, கைவிடனும் // 'லா இலாஹ இல்லல்லாஹ் முஹம்மது ரஸூலுல்லாஹ்' என்று எவன் சொல்லுவானோ அவனே முஸ்லிம்,மு.'.மீன் // இந்த அடித்தளத்தை நாம் யாரும் விட்டுக்கொடுக்கமுடியாது. ஒத்துக்கொள்கிறேன் ஆனால் அவர்கள் வந்து நம்முடன் சேர்ந்து தொழுகிறார்கள் என்றால் நாம் விட்டுகொடுத்ததாக நினைக்கமுடியுமா ? அப்படிப்பார்த்தால் மத்ஹப் இமாம்கள் கூட கப்ர் தர்கா பற்று இருக்கிறது. அப்ப அவர்கள் கலிமாவின் நிலை தான் என்ன ? இன்னும் அமல்களின் சிறப்புகள் என்ற புக்கைப்பார்தால் நீங்கள் போட்டதெல்லாம் தோர்துவிடும் அந்த அளவுக்கு அபத்தம் மலிந்து கிடக்கும். இதை படிக்கிறவர்கள் கூட 'லா இலாஹ இல்லல்லாஹ் முஹம்மது ரஸூலுல்லாஹ்' சொன்னவர்கள் தான் அப்ப இவர்களின் கலிமாவின் நிலை என்ன ? 'லா இலாஹ இல்லல்லாஹ் முஹம்மது ரஸூலுல்லாஹ்' என்பது வாயளவில் மட்டும்தானா ? மனதில் எந்த வழிப்பாடு பக்தி இருந்தால் பரவாஇல்லையா ? குர்ஆன், ஹதீத் களுக்கு மாற்றமா நடந்தால் பிரச்சினை இல்லையா ? என்னுடைய சமூகத்தினர் எழுபத்தி இரண்டு பிரிவா போகும் அதில் ஒரு கூட்டம் தான் சுவர்க்கம் நுழையும் என்பது நபி மொழி இதை வைத்துக்கொண்டு நாங்கள் தான் அந்த சுவர்க்கம் போவோம் என்று நெஞ்சில் கைவைத்து சொல்கிறார்கள் அத்தனை பிரிவுகளும். இதை எப்படி ஊர்ஜிதமாக சொல்லமுடிகிறது. அவர்களால் ஷியா மக்களை விடுங்கள் அவர்கள் களிமாவில் கலப்படம் பண்ணிவிட்டார்கள் நரகத்தில் இருக்கிறார்கள் என்று வைத்து கொள்வோம். ஆனால் கலிமா சரியா சொல்லி பல பிரிவா இருக்கும் நாம் அதன் காரணத்தால் நரகம் போனால் 'லா இலாஹ இல்லல்லாஹ் முஹம்மது ரஸூலுல்லாஹ்' சொல்லி நரகத்தில் இருப்பதும், சொல்லாமல் நரகத்தில் இருப்பதும் சமமே அஸ்ஸலாமு அலைக்கும் அனைத்து முஸ்லிம்களுக்கும் மா சலாம். அப்துல் அசீஸ்.



எழுதியவர்: abul faiz , June 12, 2008 05:23

//ஷியாக்களுக்கு என்று தனி கலிமா உண்டு. ஷியாக்கள் 'லா இலாஹ இல்லல்லாஹ் முஹம்மது ரஸூலுல்லாஹ்' இது போன்ற கலிமா சொல்லவில்லை.// என்று சில சகோதரர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். ஷியா பிரிவு என்பது சில அரசியல் காரணங்களால் ஏற்பட்ட பிரிவே தவிர கொள்கை அளவில் ஏற்பட்ட பிரிவு அல்ல. முஹம்மது (ஸல்) அவர்களைத்தான் ஷியா பிரிவினர் ரசூலாக ஏற்றிருக்கிறார்கள். குர்ஆன் எனும் இறுதி இறைவேதம் முஹம்மது (ஸல்) அவர்கள் மூலமாக இறக்கியருளப்பட்டது என்பதிலும் எந்த கருத்து வேறுபாடும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் முஹம்மது (ஸல்) அவர்களுக்குப் பிறகு முஸ்லிம்களுக்கு தலைவராக ஆகும் தகுதி அலி (ரலி) அவர்களுக்கும் அவர்களின் வழித்தோன்றல்களுக்குமே உண்டு என்பது ஷியாக்களின் வாதம். நபி (ஸல்) அவர்களின் வழித்தோன்றல்களின் ஆதரவாளர்கள் என்பதாலேயே ஷியாக்கள் 'ஃபாத்திமி'க்கள் என்றும் அழைக்கப் படுகிறார்கள். அரசியல் காரணங்களுக்காக பிரிந்து நிற்கும் இரு சமுதாயங்கள் ஒன்றிணைந்து செயல்பட முன்வந்திருப்பது நிச்சயமாக வரவேற்கத் தக்கது!


 1 2 > 

கருத்து எழுதுக :
உங்கள் கருத்துக்களை எழுத இங்கே கிளிக்கவும்

busy

 
Add Site to FavoritesAdd Page to FavoritesShare This PageEmail This Page
Back to Top
You are here  : முகப்பு