| அம்பலமாகும் அமெரிக்கப் பொய்கள்! சதாமுக்கும் அல்காயிதாவுக்கும் தொடர்பு இல்லை! |
|
|
| செய்திகள் - உலகச் செய்திகள் |
| திங்கள், 17 மார்ச் 2008 11:40 |
|
முன்னாள் ஈராக் அதிபர் சதாம் ஹுசைனுக்கும் அல்காயிதா அமைப்பிற்கும் எந்தவிதமான நேரடித் தொடர்பும் இருந்திருக்கவில்லை என அமெரிக்கப் பாதுகாப்பு அமைச்சகம் (Pentagon) நடத்திய ஆய்வு ஒன்றின் முடிவு மூலம் அமெரிக்கா உலக மக்கள் அனைவரையும் ஒரே சமயத்தில் முட்டாளாக்க நடத்திய பெரும் நாடகம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அமெரிக்கா ஈராக்கை கைப்பற்றிய பிறகு அங்கிருந்து பெறப்பட்ட 600,000-த்திற்கு அதிகமான ஈராக்கின் அரசாங்க ஆவணங்கள், மற்றும் சதாமுடன் பணி புரிந்தவர்களிடம் ஆயிரக்கணக்கான மணி நேரங்களில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் ஆகியவற்றை ஆய்வு செய்து இந்த முடிவு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு முன் ப்ளூ-ரிப்பன் செப்-11 கமிஷன் என்ற அமைப்பும் பெண்டகனின் பொது ஆய்வாளரும் இணைந்து நடத்திய ஆய்வுகளும் இதே முடிவை வெளிப்படுத்தியிருந்த போதிலும் இம்முறை பரிசீலிக்கப்பட்ட ஆவணங்களும் தகவல்களும் முந்தைய ஆய்வாளர்களுக்குக் கிடைத்திருக்கவில்லை. அமெரிக்க அரசு இதுபோன்ற ஆய்வு அறிக்கைகளைத் தனது இணையப் பக்கத்தில் வெளியிட்டு, பத்திரிக்கையாளர்களுக்கும் அதன் பிரதிகளை அனுப்பி வைப்பது வழமை. ஆனால் இம்முறை அவ்வாறு செய்யாமல், தனிப்பட்ட முறையில் இந்த அறிக்கையை வேண்டிக் கேட்பவர்களுக்கு மட்டுமே அனுப்புகிறது.வழக்கத்திற்கு மாறான இச்செயல், இந்த ஆய்வறிக்கை சொல்லும் உண்மைகள் பெருமளவில் ஊடகங்களில் வெளியிடப்படுவதை கட்டுப் படுத்தும் நடவடிக்கையோ என்ற சந்தேகத்தை விளைவித்துள்ளது. "சதாம் ஈராக்கில் பேரழிவு ஆயுதங்களை தயாரிக்கிறார்; அவருக்கும் செப்டம்பர் 11 தாக்குதல் தொடர்பாக குற்றம் சுமத்தப் பட்டிருக்கும் அல்காயிதா அமைப்பிற்கும் தொடர்பு இருக்கிறது" என்ற இந்த இரு காரணங்களை முன்வைத்தே அமெரிக்கா ஈராக் மீது போர் தொடுத்தது. அதிபர் ஜார்ஜ் புஷ், துணை அதிபர் டிக் ச்செனி ஆகியோர் இந்தக் காரணங்களையே திரும்பத் திரும்பச் சொல்லி வந்தனர். இருந்தும் கடந்த 5 ஆண்டுகளாக ஈராக்கை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அமெரிக்கா இன்றுவரை அங்கிருந்து பேரழிவு ஆயுதங்கள் எதனையும் கண்டு பிடிக்கவில்லை என்பதால் அவர்கள் சொன்ன முதல் காரணம் பொய் என தெளிவானது. இப்போது இந்த ஆய்வு அறிக்கையின் மூலம் இரண்டாவது காரணமும் பொய் என்பது அம்பலமாகியுள்ளது. இந்த அறிக்கை சதாமுக்கும் அல்காயிதா அமைப்பிற்கும் எந்த நேரடித் தொடர்பும் இருந்திருக்கவில்லை எனச் சொல்லும் அதே சமயத்தில், அவரது அரசு பாலஸ்தீன தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு கொண்டிருந்தது எனவும் தெரிவிக்கிறது. "ஈராக்கின் நீண்டகாலத் திட்டங்களுக்கு இந்த அமைப்புகள் உதவக்கூடும் என்ற எண்ணத்தில் சதாமின் அரசு, இந்த அமைப்புகளுக்கு நேரடியான, அதே நேரத்தில் மிக கவனத்துடனான, ஒத்துழைப்பை நல்கி வந்துள்ளது" என்கிறது இந்த அறிக்கை "பாலஸ்தீன அமைப்புகளுடனான தொடர்புகளை ஈராக்கிய அரசு மிகக் கவனமாக அரசு ஆவணங்களில் பதிவு செய்துள்ளது. உதாரணமாக, காஸா மற்றும் மேற்குக் கரை பகுதிகளில் தற்கொலைத் தாக்குதல்களில் ஈடுபடுபவர்களின் குடும்பத்தினருக்கு ஈராக் நிதி உதவி அளித்துள்ளது" எனவும் இந்த அறிக்கை தெரிவிக்கிறது. இத்தகவல் உண்மையெனில், சதாம் ஹுசைன் அமெரிக்காவுக்கோ மற்ற நாடுகளுக்கோ அல்லாமல் இஸ்ரேலுக்கு மட்டுமே பெரும் அச்சுறுத்தலாக விளங்கியிருக்கிறார் என்பது தெளிவு. ஈராக் மீது போர் தொடுக்க அமெரிக்காவுக்கு எந்த உண்மையானக் காரணமும் இருந்திருக்கவில்லை. அதே சமயத்தில் சதாமை ஒழித்துக் கட்டுவதால் இஸ்ரேலுக்குத்தான் அனுகூலம் இருந்திருக்கிறது. அப்படியானால் இஸ்ரேலின் அடியாளாகத்தான் அமெரிக்கா ஈராக் மீது போர் தொடுத்ததா? அப்படித்தான் தோன்றுகிறது! கருத்துக்கள் (2)
![]()
கடந்த ஐந்து வருடங்களுக்கு முன் இதே மார்ச் 20ந்தேதி 5.30 மணியளவில் 170,000 சதுர மைல்களைக் கொண்ட ஈராக்கிய மண் இரத்தத்தில் ஊற ஆரம்பித்தது.
பொய் ஒன்றை மட்டும் அடிப்படையாகக் கொண்டு 'Operation Iraqi Freedom' என்ற அகங்காரப் பெயரைப் புனைந்துகொண்டு அமெரிக்கா துவங்கிய இந்தப்போர் மூலம் இலட்சக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் சவக்குழிக்கும், எஞ்சியவர்கள் சொந்த நாட்டிலேயே அகதிகளாகவும் ஆகினர். பல்லாயிர அமெரிக்க சிப்பாய்களுக்கும் ஈராக் மண்ணில் அமெரிக்காவே சாவு மணி அடித்தது.
இவையனைத்தையும் எதிர்த்து உலகம் கொந்தளித்த வேளையில் அவ்வப்போது அமெரிக்காவின் வாஷிங்டன், நியூயார்க், மியாமி, சிகாகோ, லாஸ் ஏஞ்சல்ஸ் & சான் ஃபிரான்ஸிஸ்கோ ஆகிய மாநிலங்களிலிருந்தும் கடுமையான எதிர்ப்புகளும் அதிருப்திகளும் பொதுமக்களிடையே எழுந்திருந்தாலும் அவை அனைத்தையும் ஆளும் வர்க்க ஈகோ வென்றது.
அமெரிக்காவின் பொருளாதாரத்தை ஆட்டம் காண வைத்த இச் சுயநலப்போர் பற்றியும் சத்தியமார்க்கம்.காம் தளத்தில் கட்டுரை வடித்திருந்தீர்கள்: (http://www.satyamargam.com/index.php?option=com_content&task=view&id=819&Itemid=51)
இப்போது அமெரிக்காவின் Institute of Defence Analysis வெளியிட்டுள்ள அறிக்கை (Saddam and Terrorism: Emerging Insights from Captured Iraqi Documents) ஒன்றில் தான் இதுவரை கைப்பற்றியுள்ள 600,000 ஒரிஜினல் டாக்குமெண்ட்களையும் பல்லாயிரக்கணக்கான மணி நேரங்கள் ஓடக்கூடிய ஆடியோ/வீடியோ ஆதாரங்கள் அனைத்தையும் பரிசீலித்துப் பார்த்ததில் 'ஈராக்கிற்கும் அல்காயிதாவிற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை!' என்பதை முழு மனதுடன் ஒப்புக்கொண்டுள்ளது. ஒப்புக்கொண்டு எழுதிக் கையெழுத்திட்டது - Harmony என்று அழைக்கப்படும் US Department of Defense Database!
அடப்பாவிகளா? அப்படியென்றால் இதுவரையில் நடந்த இரத்தக்களறி விளையாட்டுக்காக செய்ததா?
கடந்த 2002 செப்டம்பரில் அமெரிக்காவின் பாதுகாப்புச் செயலரான டொனால்ட் ரம்ஸ்ஃபெல்ட் போர் துவங்குவதற்குக் காரணமாகக் கூறிய 'US had irrefutable evidence of collaboration between baghdad and Al Qaeda' வில் ஒரு சதவீதம் கூட உண்மையில்லை என்பது வெட்டவெளிச்சமாகி விட்ட சூழலில் ஒரு நாட்டையே நிர்மூலமாக்கிய கொடியவர்களுக்கு என்ன தண்டனை கொடுத்தால் தகும்?
1
March 20, 2008 06:42
அஸ்ஸலாமு அலைக்கும்.அனைத்து சகோதரர்களுக்கும். இந்த ஈராக் ஆக்கிரமிப்பு போர் வந்து விளையாட்டுக்காக நடத்தப்பட்டது கிடையாது ரொம்ப சீரியஸ்ஆக தான் முடிவெடுத்து செய்யப்பட்டது அதவாது முஸ்லிம்கள் ஆதிக்கம் குறையனும். தம் சிளுவைக்காரர்கள் தான் உலகத்தை ஆலனும். என்ற ஒரே குறிக்கோள் தான் அவர்கள் வேலை. அடுத்து ஈரான் பக்கம் தலை திருப்பி விட்டார்கள் மற்ற சக முஸ்லீம் நாடுகளெல்லாம் கண்கொள்ளா வேடிக்கை பார்த்துகொண்டிருப்பதால் தான் இந்த அவலம் நடக்கிறது.வேடிக்கை நீடிக்கும் வரை சிலுவை ஆதிக்கம் வளர்ந்துகொண்டே தான் இருக்கும்
2
March 20, 2008 22:08
கருத்து எழுதுக :
|