சத்தியமார்க்கம்.காம்

"வேலைவாய்ப்புகளில் உயர்சாதியினருக்கே முன்னுரிமை"-அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்! print Email
பொதுவானவை - பொதுவானவை
ஞாயிறு, 11 நவம்பர் 2007 18:56

இந்தியா பல்வேறு இன, மொழி, கலாச்சார மக்கள் ஒருங்கிணைந்து வாழும் ஒரு மதச்சார்பற்ற ஜனநாயக நாடாகும். இங்கு, சுமார் 105 கோடி மக்கள் வசிக்கின்றனர். இவர்களில் பெரும்பான்மையாக, இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், பௌத்தர்கள், சீக்கியர்கள், மலைஜாதியினர், பழங்குடியினரும் இவர்களோடு ஒப்பிட்டுப் பார்க்கப்படும் பொழுது மிகச்சிறுபான்மையாக 2.5 சதவீத அளவில் உயர்ஜாதி எனத் தங்களை அழைத்துக் கொள்ளும் பிராமணர்களும் வாழ்கின்றனர்.

 

என்றாலும் இந்தியாவில் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக நாள்தோறும் அராஜகங்களும் அட்டூழியங்களும் தலைவிரித்தாடுகின்றன. எவருக்கும் எவ்விதத் தொந்தரவும் கொடுக்காமல், தொழுநோயாளிகளைக் கூடத் தொட்டுத் தூக்கிச் சேவை புரிந்த மருத்துவர் முதல் கர்ப்பத்தில் இருந்தச் சிசு வரை எவ்விதத் தயவுதாட்சண்யமும் இன்றி வெட்டித் துண்டாக்கப் பட்டுத் தீயிலிட்டுப் பொசுக்கப்படுகின்றனர். பள்ளியில் சேவை புரியும் கன்னியாஸ்திரிகள் முதல் உலகமே அறியாமல், தான் உண்டு; தன் குடும்பம் உண்டு என்று வாழும் குடும்பப் பெண்கள் வரை நடுத்தெருவில் - பலர் முன்னிலையில் கற்பு சூறையாடப்படுகின்றனர். முஸ்லிம்களின் பள்ளிவாசல்கள் குறி வைத்துத் தகர்க்கப்படுகின்றன. பொருளாதாரம் திட்டமிடப்பட்டுக் களவாடப்படுகின்றன.


பல்வேறு இன, மொழி, கலாச்சார மக்களை ஒருங்கிணைத்துப் பாதுகாப்புக் கொடுக்க வேண்டிய மதச்சார்பற்ற இந்தியாவின் காவல்துறை, இராணுவம், நீதித்துறை மற்றும் அரசாங்கங்களோ இவற்றையெல்லாம் கண்டுக் கொண்டே கைகட்டி, வாய்பொத்தி எதையும் காணாதவர்களாகவும் கேட்காதவர்களாகவும் இருப்பதோடு மட்டுமின்றி இயன்றவரை வன்முறைக்குத் துணைப் போகவும் செய்கின்றன.


இவ்வளவு நடந்தும் சம்பந்தப்பட்ட முஸ்லிம், தாழ்த்தப்பட்டச் சமுதாய மக்களோ போதிய உணர்வின்றி, தம் மீது கட்டவிழ்த்து விடப்படும் அராஜகங்கள் நடக்கும் பொழுது மட்டும் "அய்யோ, அம்மா, கொல்கிறார்களே, இதைக் கேட்பார் யாருமே இல்லையா?" எனக் கதறி அழுவதும் ஒரு சில நாட்களில் பாதிக்கப்பட்ட இடத்திலுள்ள மக்களுக்குத் தங்களிடமிருந்தே இருப்பதில் சிறிதைப் பிச்சையாகப் போட்டு விட்டு அதனை அப்படியே மறந்து விடுவதுமாக வாழ்ந்து வருகின்றனர்.


அதிநவீன அறிவியல் கண்டுபிடிப்புகளைச் செய்து சாதனைகள் படைத்துக் கொண்டு உலக அரங்கில் போட்டிப்போட்டு முன்னேறிக் கொண்டிருக்கும், சுதந்திரம் அடைந்துச் சுமார் 60 ஆண்டுகளைக் கடந்து 21ஆம் நூற்றாண்டில் பீடு நடை போடும் மதச்சார்பற்ற ஜனநாயக இந்தியாவினுள் வாழும் முஸ்லிம், கிறிஸ்தவ, தாழ்த்தப்பட்ட மக்களின் எதார்த்த நிலை இது தான்.


போலியாக உலக அரங்கின் முன் தலை நிமிர்ந்து நிற்பதாகப் போலிப் பெருமிதப்பட்டுக் கொள்ளும் இந்தியாவை உண்மையிலேயே உலக அரங்கின் முன் தலை நிமிர வைக்க வேண்டுமெனில் மேற்கூறப்பட்ட அவலநிலைகள் இந்தியாவிலிருந்துக் களையப்பட வேண்டும்.


அதற்கு என்ன வழி? இதனை ஆராயும் முன் மேற்கண்ட இந்தியக் குடிமக்களின் அவலநிலைகளுக்குரியக் காரணம் என்ன என்பதை ஆராய வேண்டியது முக்கியம்.


பல்வேறு இன, மத, மொழி, கலாச்சார மக்கள் நிறைந்த ஒரு நாடு, உண்மையிலேயே அது ஜனநாயக நாடாக ஆக வேண்டும் எனில், அங்கு வாழும் அனைத்து மக்களின் வாழ்வாதார நிலைகள் ஒரே சமச்சீரில் மேன்மையடைய வேண்டும். சமூகத்தில் எந்த இனமும் தாழ்நிலையில் இருக்கக் கூடாது. இயன்றவரை எல்லா இன மக்களின் கல்வி , பொருளாதார, வேலைவாய்ப்பு, சமூக நிலைகள் குறைந்தபட்சம் ஒரே நிலைக்கு எட்ட வேண்டும்.


இந்தியாவை எடுத்துக் கொண்டால், இன்று இந்திய மக்கள் தொகையில் சுமார் வெறும் 2.5 சதவீதத்தினரே இருக்கும் உயர் குடியினராகத் தங்களைக் கருதிக்கொள்ளும் பிராமணச் சமூகம், அரசின் அனைத்து அதிகார உயர்மட்டப் பதவிகளையும் தங்கள் கையில் தக்க வைத்துக் கொண்டுள்ளனர். மக்களிடையே தொடர்புகளை ஏற்படுத்தும் பிரபல ஊடகங்களிலிருந்து, மக்களுக்குப் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய நீதித்துறை, பாதுகாப்புத்துறை வரை அனைத்து இடங்களிலுள்ள அதிகார உயர்மட்டப் பதவிகளிலும் அவர்களே நிறைந்துக் காணப்படுகின்றனர்.
இந்தியாவில் முஸ்லிம்கள், தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடியினர் - கல்வியில் பின்தங்கியுள்ளனர்; இவர்களுக்கு ஒரு சாதாரண கல் உடைக்கும் தொழிற்சாலையிலிருந்து, அரசு சார் உயர் தொழில்நுட்பத் தொழிற்சாலைகள் வரை அனைத்திலும் உள்ள உயர் வேலைவாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன; சாதாரண கிராமப் பஞ்சாயத்து அலுவலக அதிகாரிப் பதவிகளில் இருந்து மாவட்ட, மாநில அரசு அதிகாரிப் பதவிகள் வரை, காவல்துறை, உளவுத்துறை, இராணுவம், நீதிமன்றம் என எல்லா இடங்களிலும் விரல் விட்டு எண்ணும் அளவிலான நபர்கள் வேலை செய்யும் படியாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளனர். எல்லா இடங்களும் உயர்சாதியினரின் கைகளால் ஆக்ரமிக்கப்பட்டுள்ளதால் அதிகாரங்கள் உடைய உயர்பதவிகளை முஸ்லிம்களுக்கும், தாழ்த்தப்பட்டவர்களுக்கும் செல்ல விடாமல் தடுப்பதில் இவர்கள் வெற்றி கண்டுள்ளனர். இதற்காக உண்மையைப் பொய்யுடன் கலந்து அந்தப் பொய்யையும் உண்மையாகச் சமூகத்தில் நம்ப வைக்கும் உத்தியை இவர்கள் தாராளமாகப் பயன்படுத்துகின்றனர்.


ஓர் உதாரணத்திற்கு:

 

கடந்த அக்டோபர் 6-ம் தேதியிட்ட தி எகனாமிஸ்ட் எனும் ஆங்கிலச் சஞ்சிகையில், சமூகத்தில் தாழ்நிலையில் இருக்கும் கீழ்தட்டு மக்களின் நிலையை உயர்த்த முனையும் இந்தியாவின் இடஒதுக்கீட்டுக் கொள்கையை விமர்சித்து ஒரு கட்டுரை வெளியாகி இருந்தது. தனியார் தொழிற்துறை நிறுவனங்களுக்கு ஆதரவாக எழுதப்பட்டிருக்கும் இக்கட்டுரை, "இட ஒதுக்கீட்டு முறையில் வேலை வாய்ப்புகளை வழங்குவது சமுதாயத்தின் கீழ்த்தட்டு மக்களுக்கு எவ்வகையிலும் பலனளிக்காது என்பது மட்டுமல்லாமல் தொழிற்துறையை அது வெகுவாகப் பாதிக்கும்" என வாதிடுகிறது.

மேலும், 'மனுதர்மத்தின் அடிப்படையில் அமைந்த சாதிப்பிரிவினைகள் தான் உலகிலேயே மிக அசிங்கமான ஒரு சமூக அமைப்பாக இருக்க முடியும். மனுவின் சட்டப்படி தாழ்ந்த சாதியைச் சேர்ந்த ஒருவர் ஒரு பிராமணருக்கு அவர் செய்ய வேண்டிய வேலைகளைப் பற்றிச் சொன்னால், கொதிக்க வைக்கப்பட்ட எண்ணை அவரது வாயிலும் காதிலும் ஊற்றப்பட வேண்டும். இதன் காரணத்தினாலோ என்னவோ, சிறந்த வேலை வாய்ப்புகளில் பெரும்பகுதியை உயர்சாதியினர் மட்டுமே அனுபவித்து வருகின்றனர். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பெரும்பாலும் அவை கிடைப்பதே இல்லை.

இந்த நிலைமையைச் சீர் செய்யவே, இந்திய அரசு, 1950-லிருந்தே கல்வி நிறுவனங்களிலும் பொதுத்துறையிலும் இட ஒதுக்கீட்டு முறையை நடைமுறைப் படுத்தியது. ஆயினும், சுமார் 60 ஆண்டுகள் கடந்த நிலையிலும் இக்கொள்கை போதிய பலனை நல்கியதா என்றால் இல்லை" என இக்கட்டுரைத் தொடர்கிறது.

"இருப்பினும் பல அரசியல் காரணங்களுக்காக அரசு இக்கொள்கையை தனியார் துறையிலும் திணிக்க முயல்கிறது" எனக் குற்றம் சாட்டும் இக்கட்டுரை, "பிரதமர் மன்மோகன் சிங் தலித் மக்களுக்கு போதிய வேலை வாய்ப்புகளை வழங்காத நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கிட்டத்தட்ட மிரட்டியதாகச்" சொல்கிறது. "ஏற்கெனவே பொதுத்துறையில் நடைமுறைப் படுத்தப்பட்டுத் தோல்வியடைந்த ஒரு கொள்கையை தனியார் துறையிலும் நடைமுறைப் படுத்த முயல்வது பைத்தியக்காரத்தனம்" எனவும் இக்கட்டுரை தெரிவிக்கிறது.

"சமுதாயத்தின் கீழ்த்தட்டு மக்களின் வாழ்க்கைத்தரத்தினை மேம்படச் செய்வது தனியார் நிறுவனங்களின் பொறுப்பு அல்ல. இந்நிறுவனங்கள் வேலைவாய்ப்புகளில் சாதி அடிப்படையில் பாரபட்சம் காட்டுகின்றனர் என்பதற்கு எந்த ஆதாரமும் கிடையாது. இம்மக்களின் அவலநிலை தொடருவதற்குக் காரணமான உண்மையான குற்றவாளி, அரசாங்கமும் அழுகிப்போன அதன் கல்விக் கொள்கையும்தான்"
என்ற அழுத்தமான ஒரு கருத்தையும் இக்கட்டுரை முன்வைக்கிறது.


கட்டுரையின் ஆரம்பப்போக்கைக் கவனிப்பவர்களை, "இந்தியாவின் கேடுகெட்ட சமூக நிலைக்குக் காரணம் புறந்தள்ளப்பட வேண்டிய மனுதர்மக் கொள்கையின் அடிப்படையிலான உயர்சாதியினரின் செயல்பாடுகளும், அவர்களே உயர் வேலைவாய்ப்புகளில் நிறைந்திருப்பதுமே" என்ற ஆணித்தரமாக எடுத்து வைக்கப்படும் அசைக்க முடியாத உண்மை, அக்கட்டுரையின் மீதான நம்பகத்தன்மையை உறுதி செய்து விடுகின்றது.


தொடர்ந்து, "பொதுத்துறையில் தோல்வியடைந்த ஒரு கொள்கையை அரசு தேவையில்லாமல் தனியார் துறையிலும் திணிக்கப்பார்க்கின்றது" என்றக் குற்றச்சாட்டை வைத்து மக்களின் மனதில் "ஆம், சரி தானே" என்பது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி விடுகின்றது. பொதுத்துறையில் தோல்வி அடைவதற்கானக் காரணம் என்ன என்பதைக் குறித்துப் பேசாமலேயே தொடர்ந்து, "தனியார் நிறுவனங்கள் வேலைவாய்ப்புகளில் சாதி அடிப்படையில் பாரபட்சம் காட்டுகின்றனர் என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை" என்றுக் கூறி மொத்த உண்மைகளையும் குழி தோண்டிப் புதைக்க முற்படுகின்றது.


கட்டுரையின் ஆரம்பத்தில் கொடுத்த "உயர் சாதியினரின் மனுதர்மக் கொடுமை" என்ற உண்மை, கட்டுரையின் மையக்கருவாகக் கூறியப் பொய்யை உண்மைப்படுத்த கொடுக்கப்பட்ட ஒரு விலை மட்டுமே என்பதை அநேகமாக எவரும் அறிய வாய்ப்பின்றி அப்படியே நம்பி விடுகின்றனர். ஆனால் உண்மையான நிலை என்ன?.

"இந்தியத் தனியார் நிறுவனங்களின் வேலைவாய்ப்புகளில் முஸ்லிம்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட இனத்தவரைக் காட்டிலும் உயர் சாதியை சேர்ந்தவர்களுக்கே முன்னுரிமை வழங்கப் படுகிறது" என அமெரிக்கப் பேராசிரியர்கள் நடத்திய ஆய்வு ஒன்று உண்மையைப் போட்டு உடைக்கின்றது.


அதே தி எகனாமிஸ்ட் சஞ்சிகையின் அக்டோபர் 20 இதழில், அமெரிக்க பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த இரு பேராசிரியர்கள், இக்கட்டுரையில் வைக்கப்பட்ட அந்தப் பொய்களை மறுத்து அவற்றுக்கு எதிராக பதிலளித்துள்ளனர்.

நியூயார்க் பல்கலைக்கழகம் மற்றும் பிரின்ஸ்டன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த இப்பேராசிரியர்கள் கடந்த இரண்டாண்டு காலமாக இந்த ஆய்வை நிகழ்த்தி வந்துள்ளனர். இந்த ஆய்வு, நன்கு படித்தத் தகுதியுள்ள கீழ்த்தட்டு மக்களுக்கு எதிராக வேலை வாய்ப்புகளில் பாரபட்சம் காட்டப்படுகிறது என்பதை ஆதாரங்களுடன் வெளிப்படுத்தியிருக்கிறது.

முஸ்லிம்களுக்கு எதிராக மோடி நடத்திய இன ஒழிப்பு அராஜகத்தை எவ்விதம் தெஹல்காவினர் உலகிற்கு வெளிப்படுத்தினரோ, அதே பாணியில் இவர்கள் நடத்திய ஆய்வு முஸ்லிம்கள் மற்றும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிராக தனியார் நிறுவனங்கள் செய்யும் மோசடியை வெளிக் கொணர்ந்துள்ளது. இந்த ஆய்வுக்குழுவினர், பத்திரிக்கைகளில் வெளியான பட்டதாரிகளுக்கான வேலை வாய்ப்பு விளம்பரங்களுக்கு வெவ்வேறு பெயர்களில் சுமார் 4,800 வேலை விண்ணப்பங்களைப் பல நிறுவனங்களுக்கும் அனுப்பினர். கிட்டத்தட்ட ஒரே அளவிலான தகுதிகளை உடைய விண்ணப்பங்களைத் தயாரித்து, அவற்றிற்கு உயர் சாதி, தாழ்ந்த சாதி மற்றும் முஸ்லிம் பெயர்களை இட்டு, அவற்றை இந்திய மற்றும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு அவர்கள் அனுப்பினர். இவற்றிற்கு வந்த பதில்கள்தான் இந்தியத் தனியார் தொழிற்துறை நிறுவனங்களிடையே சாதி, இன பாகுபாடுகளும் பாரபட்சமான மனப்போக்கும் எந்த அளவிற்குப் புரையோடிப் போயுள்ளது என்பதை வெளிப்படுத்தியது.

இவ்வாறு 'விண்ணப்பித்த' தலித் ஒருவர் நேர்முகத்தேர்விற்கு அழைக்கப்படும் வாய்ப்பு, கிட்டத்தட்ட அதேத் தகுதியை உடைய ஒரு உயர்சாதியினருக்குக் கிடைத்த வாய்ப்புகளில் மூன்றில் இரண்டு பங்குதான். முஸ்லிம் 'விண்ணப்பதாரர்களின்' நிலைமையோ இன்னும் மோசம். உயர்சாதி இந்துக்களுக்கு கிடைத்த வாய்ப்புகளில் மூன்றில் ஒரு பங்கே முஸ்லிம்களுக்குக் கிடைத்தது.

இந்திய இஸ்லாமியச் சமுதாயத்திற்கு கவலையளிக்கக் கூடிய வகையில், அசைக்கவியலா ஆதாரங்களுடன் இந்த ஆய்வறிக்கை சொல்லும் கருத்து, தனியார் துறைகளின் உயர்பதவிகளில் புகுந்துக் கொண்டு உயர்சாதியினர் நிகழ்த்தும் தகிடுதத்தங்களை வெளிச்சமிட்டுக் காட்டியிருக்கின்றது. அத்துடன் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு ஏன் அவசியம் என்பதையும் இது வலியுறுத்துகிறது.


மேற்கூறப்பட்ட உதாரணம், இந்தியாவில் உயர்சாதியினராகத் தங்களைக் கருதிக் கொள்ளும் 2.5 சதவீதம் மட்டுமே உள்ள பிராமணச் சமூகத்தினர் உயர் அதிகாரப் பதவிகள் அனைத்தையும் தொடர்ந்துத் தக்க வைத்துக் கொண்டிருப்பதற்கான வழிமுறைகளில் மிகச் சாதாரணமான ஒரு யுத்தி மட்டுமே.


தகுந்த ஆதாரங்களுடன் ஹிந்துத்துவத்தின் முகமூடியை கிழித்தெறிந்த தெஹல்காவைப் போன்று, அசைக்க முடியாத ஆதாரங்களுடன் தனியாரில் உயர்சாதியினரின் ஆக்ரமிப்பையும் தாழ்த்தப்பட்ட, முஸ்லிம்களுக்கான பாரபட்சத்தையும் தோலுரித்த அமெரிக்கப் பேராசிரியர்களின் செயல்கள் ஊக்கமளிக்கின்றன. ஆனால், இவை இந்தியச் சமூகத்தை மேல்மட்டத்திற்கு உயர்த்துவதற்கும், அனைவருக்கும் சமநீதி கிடைத்து உலக அரங்கில் இந்தியா தலை நிமிர்ந்து நிற்கவும் போதாது.

அதற்கு, இந்தியாவின் அனைத்து அதிகார உயர்பதவிகளிலும் பாரபட்சமில்லாத அளவிற்கு அனைத்து மக்களின் ஆதிக்கத்தை உறுதிப்படுத்துவது அவசியமாகும். குறிப்பாக இந்திய முஸ்லிம்களைப் பொறுத்தவரை இந்திய நீதித்துறை, உளவுத்துறை, காவல்துறை, இராணுவம் போன்ற முக்கிய பாதுகாப்புத் துறைகளிலும், அரசு தனியார் நிறுவனங்களின் உயர் அதிகாரப் பதவிகளிலும் உரிய அளவில் தங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டியது மிக அவசியம்.

மக்களுக்கும் நாட்டுக்கும் மிகுந்த பயனளிக்கப்போகும் சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றத் தடையாக இருக்கும் சக்திகளுக்கு எதிராகப் போராட முற்பட்ட ஒரு மாநிலத்தின் முதல்வரை, தானாக முன்வந்து கண்டித்து நடவடிக்கை எடுக்கப்படும் என மிரட்டிப் பின்வாங்க வைத்த பாரபட்சமில்லாத நீதி நடைமுறைப்படுத்த வேண்டிய இந்திய உச்ச நீதிமன்றம், அசைக்க முடியாத வீடியோ ஆதாரங்களின் மூலம் இந்தியாவில் நிலைகொண்டு விட்ட ஹிந்துத்துவத்தின் முகமூடியை தெஹல்கா கிழித்து எறிந்தப் பின்னரும் இதுவரை அதனைக் குறித்து வாயைத் திறக்காதது மட்டுமின்றி, பல்வேறு அரசியல் கட்சிகளும் தலைவர்களும் சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும் எனக் கோரிக்கை வைத்தப் பின்னரும் எவ்விதச் சலனமும் இன்றி அமைதியாக இருப்பதிலிருந்து மேற்கூறப்பட்டதற்கான அவசியம் மேலும் உறுதியாகின்றது.

தகவல்: இப்னு பஷீர்

கருத்துக்கள் (16)add comment
0
அதி. அழகு:
இன்னொரு டெஹல்காவா? முஸ்லிம்களும் தாழ்த்தப் பட்டவர்களும் இன்னும் எத்துணை காலத்துக்கு வஞ்சிக்கப் பட்டுக் கொண்டே இருப்பர்? வாய்மூடிக் கொண்டே இருப்பர்?
1

November 12, 2007 04:31
0
haneefm:
\\இந்தியாவின் அனைத்து அதிகார உயர்பதவிகளிலும் பாரபட்சமில்லாத அளவிற்கு அனைத்து மக்களின் ஆதிக்கத்தை உறுதிப்படுத்துவது அவசியமாகும். குறிப்பாக இந்திய முஸ்லிம்களைப் பொறுத்தவரை இந்திய நீதித்துறை, உளவுத்துறை, காவல்துறை, இராணுவம் போன்ற முக்கிய பாதுகாப்புத் துறைகளிலும், அரசு தனியார் நிறுவனங்களின் உயர் அதிகாரப் பதவிகளிலும் உரிய அளவில் தங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டியது மிக அவசியம்.\\ இந்திய அரங்கத்தில் எல்லா துரைகளிலும் முஸ்லிகள் முன்னுக்கு வரவேண்டும் என்றால் முதலில் கல்வி துரையில் மேன்பாட்டுக்கு வரவேண்டும்,முஸ்லிகள் வெளிநாட்டுக்கு செல்லும் மொகத்தை நிருத்தனும்//[குறிப்பாக இளைஞர்கள்], வருங்காலத்தில் இந்த சமுதாயாம் தலைநிமிர்ந்து எல்லா துரையிலும் வரவேண்டுமா?? அதற்க்கு நம் முஸ்லிம்மக்கள் கல்வி துரையில் முன்னுக்கு வரனும் ஆன்,பெண் இருவருக்கும் சமுதாயா முன்னொக்கூடன் முஸ்லிம் நிருவனங்களும்,அமைப்புகளும்,பொருளாதா ரிதியில் உதவ முவரவேண்டும் அப்போது தான் நம் முஸ்லிம் சமுதாயாம் மேன்மையடையும், இது இல்லாமல் புள்ளி விபரங்களை வெளியிட்டு நம்மை நாமே தாழ்த்திக்கொள்ளவேண்டாம்...... ஹனிஃப்-குவைத்
2

November 12, 2007 05:46
0
வேணுகோபால்:
//கடந்த அக்டோபர் 6-ம் தேதியிட்ட தி எகனாமிஸ்ட் எனும் ஆங்கிலச் சஞ்சிகையில், சமூகத்தில் தாழ்நிலையில் இருக்கும் கீழ்தட்டு மக்களின் நிலையை உயர்த்த முனையும் இந்தியாவின் இடஒதுக்கீட்டுக் கொள்கையை விமர்சித்து ஒரு கட்டுரை வெளியாகி இருந்தது.// இதற்கான ஆதாரத்தை தரமுடியுமா? நன்றி!
3

November 12, 2007 07:13
0
இப்னு பஷீர்:
//முஸ்லிம்களும் தாழ்த்தப் பட்டவர்களும் இன்னும் எத்துணை காலத்துக்கு வஞ்சிக்கப் பட்டுக் கொண்டே இருப்பர்? வாய்மூடிக் கொண்டே இருப்பர்?// சகோ. அதி.அழகு, சமுதாய அளவிலான ஒரு விழிப்புணர்வு ஏற்படும் வரை இந்நிலை தொடரும் என்றே தோன்றுகிறது. ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுபவர்களும் இருக்கத்தானே செய்வார்கள்? //இந்திய அரங்கத்தில் எல்லா துரைகளிலும் முஸ்லிகள் முன்னுக்கு வரவேண்டும் என்றால் முதலில் கல்வி துரையில் மேன்பாட்டுக்கு வரவேண்டும்,முஸ்லிகள் வெளிநாட்டுக்கு செல்லும் மொகத்தை நிருத்தனும்//[குறிப்பாக இளைஞர்கள்], // சகோ. ஹனீப், நல்ல யோசனைகள் சொல்லியிருக்கிறீர்கள். நன்றி. ஆனால் இந்த ஆய்வறிக்கை சொல்லும் தகவல்களை வைத்துப் பார்க்கும்போது, முஸ்லிம்கள் கல்வியில் மேம்பட்டால் மட்டுமே போதாது எனத் தெரிகிறது. தனியார் நிறுவனங்கள் ஊழியர்களை தேர்ந்தெடுப்பது அவர்களின் கல்வித்தகுதியை வைத்து அல்ல. மாறாக, அவர்களின் சாதி அடிப்படையிலேயே தேர்ந்தெடுக்கப் படுகின்றனர். இந்த பிரச்னையை எப்படி எதிர் கொள்வது? //இதற்கான ஆதாரத்தை தரமுடியுமா? நன்றி!?/ திரு. வேணுகோபால், அந்தக் கட்டுரையின் சுட்டி இதோ: http://www.economist.com/opinion/displaystory.cfm?story_id=9905554
4

November 12, 2007 10:35
0
MOHAMED ALI JINNAH:
ஜாதி உணர்வு. இந்துக்களின் ஜாதி உணர்வை பற்றி சொல்கிறீர்கள். ஆனால் கிறிஸ்தவர்களிடமும் ஜாதி உணர்வு இருக்கிறதே? -த.நி.சங்கர்,சென்னை. ஜாதி உணர்வுமட்டுமல்ல, ஜாதி வெறியே இருக்கிறது. அவர்களின் கடவுள் தான் வேறு. மற்றப்படி அவர்கள் இந்து உணர்வோடுதான் இருக்கிறார்கள். கிறிஸ்த்தவர் கிறிஸ்த்தவரையே கல்யாணம் செய்து கொண்டாலும், ஜாதியை குறிப்பிட்டு கலப்பு திருமணம் என்கிறார்கள். ஒரு கிறிஸ்த்தவர் தன் ஜாதியை சேர்ந்த இந்துவை திருமணம் செய்து கொண்டால் அதை, கலப்புத் திருமணம் என்று அவர்கள் சொல்வதில்லை. அந்த அளவுக்கு ஜாதி அவர்களிடம் ஆழமாக பரவியிருக்கிறது. தேர்தல் நேரங்களில் கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் தொகுதியில், கட்சிகள் தனது வேட்பாளர்களை கிறிஸ்தவராக மட்டும் பார்த்து நிறுத்துவதில்லை. பெரும்பான்மையான கிறிஸ்தவர்கள் என்ன ஜாதியோ அந்த ஜாதிக்காரரே வேட்பாளராக நிறுத்தப்படுகிறார். அதே தொகுதியில் வேற்று ஜாதியை சேர்ந்த ஒரு கிறிஸ்தவரையும், அவருக்கு எதிராக அந்த ஜாதியை சேர்ந்த இந்து வேட்பாளரையும் நிறுத்தினால், பரிதாபமாக கிறிஸ்தவ வேட்பாளர் கிறிஸ்தவர்களாலே தோற்கடிக்கப்படுகிறார். “எங்கள் ஜாதிக்குள் கிடைக்கிற சலுகைகளை கிறிஸ்தவர்களே அதிகம் பெறுகிறார்கள். அதனால் எங்கள் ஜாதியை சேர்ந்த கிறிஸ்தவர்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கக் கூடாது” என்று சொல்கிற தலைவரை, தீவிரமாக ஆதரிக்கிறார்கள் அதே ஜாதியை சேர்ந்த கிறிஸ்தவர்கள். சில இந்துக்களை போலவே, இஸ்லாமியர்கள் மீது காழ்ப்புணர்ச்சியோடு இருக்கிற கிறிஸ்தவர்களும் இருக்கிறார்கள். மாவீரன் திப்புசுல்தானை பார்ப்பனர்கள் விமர்சிப்பது போல், மிக மோசமாக விமர்சிக்கிற கிறிஸ்தவ பாதிரியார்கள் இருக்கிறார்கள். உலக அரசியல் பேசுகிற கிறிஸ்தவர்களில் பலர், இஸ்ரேல் -பாலஸ்தீன பிரச்சினையில் இந்து அமைப்புகளைப்போல், இஸ்ரேலையே ஆதரிக்கிறார்கள். இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த கொலைக்கார யூதர்களின் அறிவுத்திறனை பேசி பேசி வியக்கிறார்கள். ஆண்டவருக்கு ஆணி அடிச்சது யூதர்கள்தானே என்கிற எண்ணங்கூட அவர்களிடம் இல்லை. நாம் கிறிஸ்தவர்களிடம் கேட்டுக் கொள்வதெல்லம் இதுதான், நீங்கள் முற்போக்காளர்களாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை. குறைந்தபட்சம் கிறிஸ்தவ உணர்வோடவாவது நடந்து கொள்ளுங்கள். mathimaaran.wordpress.com/2007/09/20/
5

November 13, 2007 04:44
0
ibn shah:
உயர் சாதியினர் மூன்று சதவிகிதமே இருந்தாலும் 95%வேலைகளில் அமர்த்தப்பட்டுள்ளனர்.இந்த நாட்டின் மிக முக்கியத்துறைகள் பதவிகள் அவர்களிடமே அகப்பட்டுக்கிடக்கிறது.ஒரு குறிப்பிட்ட ஜாதி தான் உயர்ந்த ஜாதி,அந்த ஜாதிதான் எல்லா வளங்களையும்,நலன்களையும்,அனுபவிக்கவேண்டும் என சமூக அமைப்பை மாற்றிவிட்டனர்.இதை உடைத்தெறிந்து,இதுவரை எதையும் அனுபவிக்காத,உரிமைகள் மறுக்கப்பட்ட மக்களுக்கு எல்லாவற்றையும் பெற்றுத்தர வழி காண்பதுதான் சமூக நீதியாகும்.''சமூகநீதி''என சொல்லும்போதே,''சமூக அநீதி''என்று ஒன்று இருக்கின்றது என்பது அர்த்தமாகிறது.அந்த அநீதிகளை எதிர்த்துப்போராடுவது அல்லது வீழ்த்துவது அவசியமாகிறது.அப்படி செய்யாத வரை தாழ்ந்தவர்கள் தாழ்ந்தவர்களாகத்தான் இருப்பார்கள்.
6

November 13, 2007 16:35
0
radha:
Muslims control 70% of leather trade in Tamil Nadu. WIPRO is headed by a billionaire and he is a muslim. There are Muslim ministers in almost all states. Muslims in India get more rights than what non-muslims get in islamic countries. They are treated as equals and India is secular country. They enjoy all rights including rights for minorities in education and culture. If after all this they complain then they better go to their dream lands. It will be good riddance for all. Their literacy is low and they dont educate muslim women. They are backward in social outlook, they beget more children as they dont practice family planning. They practice bigamy. They practice child marriage. For these they have to blame themselves and not others. So instead of blaming others ask yourself why muslims are backward despite they getting all facilities and rights.
7

November 15, 2007 11:54
0
ஹாஜியார்:
//If after all this they complain then they better go to their dream lands.// தம்பி ராதா, அது என்ன ட்ரீம் லேண்ட்? முஸ்லிம்களுக்குரிய ஒரே ட்ரீம் லேண்ட் சுவர்க்கம் மட்டுமே. அங்கு அவர்களை அனுப்பி வைக்கச் சூசகமாக உங்கள் நண்பர்களுக்குக் கூறுகிறீர்களோ? ஆமாம், உங்களிடம் எந்த முஸ்லிம் வந்து கம்ப்ளயிண்ட் கொடுத்தான்? இந்தியப் பிரஜைகளிடமிருந்து புகார்கள் பெறும் அளவு உயர்ந்த எந்த உத்தியோகத்தில் நீங்கள் உள்ளீர்கள்? ஜனாதிபதி? பிரதமர்? உச்சநீதி மன்ற நீதிபதி? மாவட்ட கலெக்டர்? குறைந்த பட்சம் பஞ்சாயத்து அதிகாரி? -ஹாஜியார்.
8

November 17, 2007 10:31
0
அலிபாய்:
//ms in India get more rights than what non-muslims get in islamic countries.// அய்யா ராதா இஸ்லாமிய நாடுகளுடன் கம்பேர் செய்ய இந்தியா என்ன இந்து நாடா? அப்படி ஒரு நினைப்பு மனதில் உள்ளது எனில் திருத்திக் கொள்ளுங்கள். இந்தியா ஒரு மதசார்பற்ற ஜனநாயக நாடு. இங்கு அனைவரும் சமம். அனைவருக்கும் சம உரிமை. இப்ப சொல்லுங்க - 2.5 சதவீதம் இருக்கும் பிராமணர்களும் 13.5 சதவீதம் இருக்கும் முஸ்லிம்களும் சம உரிமைகள் தான் இந்தியாவில் அனுபவிக்கின்றனரா? ஆம் என்பதைத் தீர யோசித்துச் சொல்லுங்கள். அப்புறம் ஆதரங்களை வைக்கும் பொழுது காணாமல் போகக் கூடாது. அலிபாய்
9

November 17, 2007 11:04
0
பியூட்டோ:
தேவியில்லாமல் எதற்காக இங்கு ஜின்னா கிறிஸ்தவர்களை வம்புக்கிழுக்கிறார்? கிறிஸ்தவர்கலிடையே ஜாதிமுறையைப் பேணுபவர்கள் இருப்பதன் காரணம் அவர்கள் புராதன இந்துக்கள் என்பதாலேயே. இந்து மதத்திலிருந்து கிறிஸ்தவத்திற்கு மதம் மாறிய சிலர் அவர்களின் புராதன சடங்குகளை அப்படியே பின்பற்றுவதாலேயே சில இடங்களில் அவ்வாறு காணப்படுகிறது. அதனை புனித கிறிஸ்தவத்தோடு தொடர்பு படுத்துவது தவறு. ஜின்னா தன்னை திருத்திக் கொள்ள வேண்டும்
10

November 17, 2007 11:08
0
வெளிச்சம்:
//Muslims control 70% of leather trade in Tamil Nadu.// ஓ! அப்படியா?. எப்படிப்பட்ட ஒரு உண்மையை இந்த முஸ்லிம்கள் மறைத்துள்ளனர்!. சதவீத கணக்கைத் தந்த ராதா அவர்களே, அப்படியே தமிழ்நாட்டில் உள்ள தோல்பதனிடும் தொழிற்சாலைகளின் மொத்த விவரங்களையும் கொடுத்து விடுகிறீர்களா? தமிழகத்தில் முஸ்லிம்களுக்கு நல்ல வருமானம் வரும் ஒரே தொழிலான இந்த தோல் பதனிடும் கம்பெனிகளுக்கு மிகப்பெரிய கிடுக்கிப்பிடிகளை தமிழக அரசு போட்டு அந்த வருமானத்திலும் மண்ணை அள்ளிப்போட்டக் கதை தெரியுமா?
11

November 17, 2007 11:20
0
முஸ்லிம்:
ராதா அவர்களே இதுக்கு என்ன பதில்? http://neetheinkural.blogspot.com/2007/11/blog-post.html உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றங்களில் நீதிபதிகள் நியமனத்தில் சமூகநீதி தேவை, தேவை! நவம்பர் 20 அன்று காலை சென்னையில் ஆர்ப்பாட்டம் தி.க தலைவர் விடுத்துள்ள அறிக்கை சென்னை - உயர்நீதிமன்றத்தில் தற்போது 45 நீதிபதிகள் உள்ளனர். இந்த நிலையில், மேலும் இரு பார்ப்பனர் நியமனம் செய்யப்பட உள்ளனர்; இதனை எதிர்த்தும், நீதிபதிகள் நியமனங்களில் சமூகநீதி கோரியும் திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம் நடத்திட உள்ளது. இதுகுறித்து திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: சென்னை - உயர்நீதிமன்றத்திற்கும், மதுரை உயர்நீதிமன்றக் கிளைக்கும் சேர்த்து மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 49 ஆகும். இதில் தற்போது (புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 3 நீதிபதிகளை யும் சேர்த்து) உள்ள நீதிபதிகளின் எண்ணிக்கை 45 ஆக உள்ளது. இன்னும் 4 நீதிபதிகளின் இடங்கள் காலியாக உள்ளன. நீதிபதிகளைத் தேர்வு செய்யும் முறை உயர்நீதிமன்ற நீதிபதிகளை, தற்போது எப்படித் தேர்வு செய்கிறார்கள் என்றால், கொலிஜியம் (Colligium) என்று முதல் மூன்று நீதிபதிகளே முடிவு செய்து, மாநில அரசுகளையோ, மத்திய அரசினையோ கருத்து ஏதும் கேட்காமலேயே (நிதி வேண்டுமானால் அதற்கு மட்டும் மாநிலத்தின் முதலமைச்சர், நிதியமைச்சர், சட்ட அமைச்சர் மற்றும் அரசுக்கு நீதிபதிகள் வேண்டுகோள் விடுத்து, பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதைப் பெறுகிறார்கள்) உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதிக்குப் பரிந்துரை செய்து அனுப்புகின்றனர்! அப்படி நீதிபதிகளாகத் தேர்வு செய்யப்படுகிறவர்கள் எந்தெந்த விதிகள் - தகுதிகள் காரணமாக (Norms) பரிந்துரைக்கப்படுகின் றனர் என்பதை எளிதில் எவராலும் வரையறுத்துச் சொல்ல இயலாது. தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் அல்லர் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இந்த கொலிஜியம் என்ற மூத்த நீதியரசர்கள் மூவரில், ஒருவர்கூட தமிழ்நாட்டுக்காரர் அல்லர். தமிழ்நாட்டு மக்களின் - மண்ணின் மனோபாவத்தையே முற்றிலும் அறிந்துகொள்ள வாய்ப்பற்றவர்களும்கூட! முதலாவதாக உள்ள தலைமை நீதிபதி அவர்கள் மகாராஷ்டிர மாநிலத்தவர். அடுத்தவர் (பார்ப்பனர்) பிகார் மாநிலத்தினைச் சார்ந்தவர்.மூன்றாவது (பார்ப்பனர்) ஒரிசா மாநிலத்தவர்.தமிழ் தெரிந்தவர்களாகவோ, தமிழ்நாட்டையோ, அதன் சமூக நீதி வரலாற்றையோ தெரிந்தவர்களோ உள்ளவர்களும் அல்லர் இவர்கள்; தனிப்பட்ட முறையில் அந்த மூவர் மீது நமக்கு எந்த வெறுப்பும், காழ்ப்பும் கிடையாது.. அவர்களை நேரில் ஒருமுறை பார்த்ததுகூட கிடையாது! மேலும் மேலும் பார்ப்பன நீதிபதிகளா? அவர்கள் சமூகநீதியைப்பற்றியோ, மண்ணின் மனோபாவம் (Soil Psychology) பற்றியோ கொஞ்சமும் கவலைப்படாமல் பரிந்துரை செய்தனர் - செய்கின்றனர்! காந்தியாரைக் கொன்ற - கோட்சேவுக்குப் பயிற்சி அளித்த ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் ஷாகாவில் அரைக்கால் சட்டையோடு பயிற்சி பெற்ற ஒரு பார்ப்பன வழக்குரைஞர் - நீதிபதியாக்கப்பட பரிந்துரைக்கப்பட்டு, அது இழுபறியாக இன்னமும் இருக்கிறது - நாம் முன்பே இதுபற்றி சுட்டிக்காட்டி எழுதியிருந்தோம். இந்த 45 பேரில் ஏற்கனவே 5 பார்ப்பனர்கள் - அவர்கள் விகிதாச் சாரத்திற்கு இரட்டிப்பு மடங்குக்குமேல் நீதிபதிகளாக உள்ள நிலையில், தற்போது மேலும் ஒரு பார்ப்பனப் பெண் வழக்குரைஞரும் மற்றும் ஒரு பார்ப்பனரும் பரிந்துரைக்கப்பட்டுள்ளனராம் இந்த கொலிஜியத்தால்! பெண் வழக்குரைஞர்களில் பார்ப்பனரல்லாத, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்டவர்களே கிட்ட வில்லையா?இன்னமும் ஒடுக்கப்பட்ட சமு தாயங்களைச் சார்ந்த திறமைமிகு, வருமான வரி அதிகம் கட்டும் அனுபவமிக்க வழக்கறிஞர்கள் (பிற்படுத்தப்பட்ட வகுப்புகளில் இருந்தும்கூட) உள்ளனரே - அவர்கள் ஏனோ பரிந்துரைப்போர் பார்வையில் படுவதே இல்லை! பார்ப்பனர்களையும், தாழ்த்தப்பட்டவர்களையும் ஒரே பார்வையில் பார்க்கலாமா? என்ன மீண்டும் மீண்டும் பார்ப்பனர்களையே பரிந்துரை செய் கிறீர்களே என்று எவராவது கேட்டால், அதற்கு வரும் பதில் என்ன தெரியுமா? ஏன், எஸ்.சி.,யில் இத்தனை நீதிபதிகள் (சுமார் 10 நீதிபதிகள்) இருக்கையில், பிராமணர்கள் வரக்கூடாதா என்று சொல்லுகிறார் கள் என்ற தகவல்கள் கசிகின்றன! என்னே கொடுமை! காலங்காலமாக அழுத்தி வைக்கப்பட்ட மக்களும், அவர்கள்மீது ஏறி இன்றளவும் குதிரைச் சவாரி செய்பவர்களும் ஒரே மாதிரி பார்க்கப்படவேண்டியவர்களா? ஒரே அளவுகோலால் அளக்கப்படவேண்டியவர்களா? இம்மாதிரி நீதிபதிகளுக்கான பெயர்களை, அதில் உள்ளூர் மக்களை அறிந்த நீதிபதிகளுடைய கருத்தையாவது குறைந்தபட்சம் இந்த கொலிஜியம் (மூவர் குழு) தேர்வுக்குழு கேட்டறிய வேண் டாமா?அரசியல் சட்டத்தில் வற்புறுத்தப்பட்ட, சமூகநீதி வெறும் ஏட்டுச் சுரைக்காய்தானா? இதைவிட வேதனையும் வெட்கக்கேடும் வேறு உண்டா? உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகளை நியமிக்கும் முறை உச்சநீதிமன்றத்திற்குரிய நீதிபதிகளை, குறிப்பிட்ட மாநிலத்தி லிருந்து தேர்வுக்குழு பரிந்துரை செய்யும்போது, எந்த மாநிலத்திலிருந்து தேர்வு செய்கிறார்களோ அந்த மாநிலத்தினைச் சார்ந்த நீதிபதியை (அங்கே நீதிபதியாக உள்ளவரை) (உயர்நீதி மன்ற நீதிபதிகள் நியமனங்களில்கூட) அழைத்து கருத்துரை கேட்டு, அதற்கேற்ப பட்டியலைத் தயாரிக்கும் முறை உள்ளதாகத் தெரிகிறது. அதையாவது இங்கே பின்பற்ற வேண்டாமா? கண்டதே காட்சி, கொண்டதே கோலமா? உச்சநீதிமன்றத்தில்கூட ஒரே ஒரு தமிழ்நாட்டுக்காரர்தான் தற்போது நீதிபதியாக உள்ளார். மற்ற பல மாநிலங்களிலிருந்து, 2 அல்லது மூன்று பேர் உள்ளனர். எனவே, தமிழ்நாட்டுப் பிரதிநிதி களாக உரிய தகுதியோடு உள்ள ஒடுக்கப்பட்ட சிறுபான்மைச் சமுதாய நீதிபதிகளுக்கு அங்கும் வாய்ப்பளித்தால்தானே சமூகநீதி கிடைக்கும். சமூகநீதி கோரி 20 ஆம் தேதி ஆர்ப்பாட்டம்! இவற்றை வலியுறுத்தியும், ஏராளமான பார்ப்பன, ஆண் - பெண் நீதிபதிகளை நியமனம் செய்யப்படுவதைக் கண்டித்தும் வரும் 20.11.2007 அன்று செவ்வாய்க்கிழமை காலை சென்னையில் ஒரு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை திராவிடர் கழகத்தால் நடத்தப்பட உள்ளது.. ஒத்தக் கருத்துள்ள சமூகநீதியாளர்களும் கலந்துகொள்ளலாம் - கலந்துகொள்ள வேண்டுகிறோம். சென்னை 17.11.2007 தலைவர், திராவிடர் கழகம்.
12

November 17, 2007 11:31
0
இறை நேசன்:
//They enjoy all rights including rights for minorities in education and culture.// அப்படின்னா எதனால இராணுவம், உளவுத்துறை, காவல்துறை, நீதிமன்றம் போன்ற அரசு அதிகாரங்களில் முஸ்லிமகள் பெருவாரியாக காணப்படுவதில்லை என்பதை அறிந்து கொள்ளலாமா? அரசுத்துறை அப்படி எனில் தனியார் துறைகளோ? அதைத் தான் இக்கட்டுரை தோலுரிக்கின்றதே? காழ்ப்புணர்வு கண்ணை மட்டுமல்ல உணர்வையும் மழுங்கடிக்கின்றது என்பதை நன்றாகப் புரிந்து கொள்ள முடிகின்றது. உணர்வு மழுங்கிய சிந்தைக் கெட்டவனிடம் ஆவணங்களும், ஆதாரங்களும், தக்க பதில்களும் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தாது. இதுக்கெல்லாம் புரிய வைக்க கொடுக்க வேண்டிய மொழி வேறு. அது எந்த மொழி என்று இங்கு முழுப்பூசணிக்காயைச் சோற்றில் மறைக்க முயலும் ராதாவுக்கு நன்றாகவே தெரியும்.
13

November 17, 2007 11:55
0
மரைக்காயர்:
இங்கு radha என்பவர் வெளிப்படுத்தியிருப்பது அப்பட்டமான இந்துத்துவ கருத்துக்கள். இந்தியாவை ஏதோ இந்துத்துவ நாடு என்பது போல நினைத்துக்கொண்டிருக்கிறார்கள் இவர்கள். இந்தியாவில் இந்துக்கள் 80% ஆக இருக்கலாம். ஆனால் நல்ல வேலைவாய்ப்புகளையும் உயர்பதவிகளையும் அனுபவிப்பவர்கள் வெறும் 2.5% சதவிகிதமே உள்ள பிராமணர்களும் சில உயர் சாதியினருமே! தலித்கள் என்ற பெயரில் தாழ்த்தி வைக்கப்பட்டிருப்பவர்களும் சக இந்துக்கள்தானே என்ற நினைப்பு இவர்களுக்கு வருவதில்லை! முஸ்லிம்களை அவர்களின் dreamland-க்கு போகச்சொல்லும் radha கும்பல், முதலில் இந்திய இந்துக்களிலேயே அறுதிப் பெரும்பான்மையாக இருக்கும் தலித் மக்களுக்கு அவர்களுக்கான வேலைவாய்ப்புகளையும் உரிமைகளையும் விட்டுக் கொடுத்து விட்டு, அவர்களுக்கு பிடித்த ஏதோ ஒரு தேசத்திற்கு குடி பெயரலாமே? என்ன நாஞ்சொல்றது?
14

November 17, 2007 14:33
0
MOHAMED ALI JINNAH:
யார் திருந்த வேண்டும்.? 'ஜாதி உணர்வு '.என்ற பதிவு. ' இந்துக்களின் ஜாதி உணர்வை பற்றி சொல்கிறீர்கள்.ஆனால் கிறிஸ்தவர்களிடமும் ஜாதி உணர்வு இருக்கிறதே? ' என்று -' த.நி.சங்கர்,சென்னை.' கேட்ட கேள்விக்கு ' வே. மதிமாறன் ' - 'சமூக விழிப்புணர்வு' - செப்டம்பர் 2007 பதிப்பில் 'வே.மதிமாறனிடம் கேளுங்கள் ' என்ற பகுதியில் அளித்த பதில் தான். சுட்டி :http://mathimaaran.wordpress.com/2007/09/20/ ------------------------------------------ பியூட்டோ //கிறிஸ்தவர்கலிடையே ஜாதிமுறையைப் பேணுபவர்கள் இருப்பதன் காரணம் அவர்கள் புராதன இந்துக்கள் என்பதாலேயே.இந்து மதத்திலிருந்து கிறிஸ்தவத்திற்கு மதம் மாறிய சிலர் அவர்களின் புராதன சடங்குகளை அப்படியே பின்பற்றுவதாலேயே சில இடங்களில் அவ்வாறு காணப்படுகிறது.// பியூட்டோ. என்பதன் மூலம் வே. மதிமாறன் கூற்றை , -பியூட்டோ- 'எங்கப்பன் குதிருக்குல் இல்லை' என்று பியூட்டோ ஏற்றுக்கொள்ளுவதும் யார் திருந்த வேண்டும் என்பதும் தெளிவாகிறது. பியூட்டோவுக்கு எனது ஆறுத‌ல்கள்.
15

November 18, 2007 03:04
0
ஷாஹ் மைந்தன்:
ஒரு பகுதியில் சிறுபான்மையினர் அதிகமாக வாழ்ந்தால்,அந்த பகுதியை பல கூறுகளாக பிரித்து,வெவ்வேறு தொகுதிகளில் அதை சேர்ப்பதுதான் நமது நாட்டில் நிலவும் நடைமுறையாக உள்ளது.உதாரணமாக வேலூர் மாவட்டத்தில்,முஸ்லிம்கள் அதிகமாக வாழும் ஊர் ''மேல்விஷாரம்'' ஆகும்.நியாயப்படி இப்பகுதி வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் தான் சேர்க்கப்பட வேண்டும்.ஆனால் அது அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில் சேர்க்கப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் திரு V.P.சிங் அவர்கள் கூட ஒருமுறை 'தகுதி'என்ற வாதத்தை தகர்த்தெறியும் விதத்தில் கூறும் போது'வாய்ப்புக்கொடுத்தால் தகுதியை எல்லோராலும் நிரூபிக்கமுடியும்.வாய்ப்பே கொடுக்காமல் ஒருவனது தகுதியை சந்தேகிப்பது நியாயமா?'என்று கேட்டார்.ஆகவே'தகுதி'என்பதை விட 'வாய்ப்பளிக்கவேண்டும்'என்பதுதான் முக்கியம்.வாய்ப்பே அளிக்காமல் அவனுக்கு தகுதி இருக்கிறதா?என்று கேட்பது சொத்தை வாதமாகும்.எத்தனை உயர்ந்த சாதிக்காரர்கள் தகுதி இல்லாமல் உயர் பொருப்புகளில் இருக்கிறார்கள் தெரியுமா?அது பற்றியெல்லாம் யாரும் கேள்வி எழுப்புவது இல்லை.
16

November 18, 2007 17:27

கருத்து எழுதுக :
சிறிதாக்குக | பெரிதாக்குக

busy
 
You are here  : முகப்பு