| மேற்கத்திய சதியை முறியடிக்க... |
|
|
| Common Articles - Common Articles | |
| புதன், 12 ஏப்ரல் 2006 03:00 | |
|
பத்திரிகை சுதந்திரம் என்ற பெயரில் உலகெங்கிலும் உள்ள 130 கோடி இஸ்லாமியர்கள் மனதை புண்படுத்தும் வகையில், டென்மார்க் மற்றும் நார்வே பத்திரிகைகள் இறைத்தூதர் நபி(ஸல்) அவர்களின் கற்பனை உருவங்களை வரைந்த செய்தியையும், அதன் விளைவாக உலகெங்கிலும் ஏற்பட்ட எழுச்சியையும் நாம் அனைவரும் அறிவோம். உலகெங்கிலும் உள்ள மக்களின் மனதில் இஸ்லாத்தைப் பற்றிய கேள்விகளும் விவாத அலைகளும் எழுந்துள்ள இச்சூழலில், இஸ்லாமிய ஆங்கில இணையதளங்களில் புகழ்பெற்ற இஸ்லாம்ஆன்லைன். நெட் (islam-online.net) இறைத்தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் அவர்கள் எடுத்துரைத்த வாழ்வியல் தத்துவங்களை உலக மக்களுக்கு எளிமையாக அறிவிக்கும் வகையில் புதிய இணையதளம் ஒன்றினை வெகு விரைவில் துவங்க உள்ளது. இஸ்லாத்தின் மீதுள்ள காழ்ப்புணர்ச்சியால், மேற்கத்திய ஊடகங்கள் இஸ்லாத்திற்கெதிராக திட்டமிட்டு பரப்பி வரும் தவறான தகவல்களுக்குத் தக்க விளக்கங்களை, ஆதாரப்பூர்வமாக வழங்குவதும் இதன் முக்கிய பணியாகும்.
கார்ட்டூன் விஷயங்கள் தொடர்பான சில தமிழ் பதிவுகள் உங்கள் பார்வைக்கு:
- அபூ ஸாலிஹா
கருத்துக்கள் (1)
![]() எழுதியவர்: Syed , January 03, 2010 01:34 அஸ்ஸலாமு அலைக்கும். அல்ஹம்துலில்லாஹ். இது ஓர் நல்ல யோசனை. ஏனெனில் சிலர் இஸ்லாம் பற்றித் தவறாக புரிந்துள்ளனர். முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கையை ஒவ்வொருவரும் அறிய வேண்டும். அல்ஹம்துலில்லாஹ். ========= உங்கள் பின்னூட்டம் தமிழாக்கப் பட்டுள்ளது. நீங்களே நேரடியாகத் தமிழில் பின்னூட்ட: http://www.satyamargam.com/TamilTyping - சத்தியமார்க்கம்.காம் கருத்து எழுதுக :
|