சத்தியமார்க்கம்.காம்

காவிப் பித்துத் தலைக்கேறிய காந்தி(?) print Email
செய்திகள் - இந்தியச் செய்திகள்
செவ்வாய், 17 மார்ச் 2009 18:15

முன் குறிப்பு:

"காந்தியிடம் இருந்த மரியாதையால் தன் மகள் இந்திராவை 'காந்தி' ஆக்கினார் நேரு. சரி, ஒத்துக்கலாம்; அந்தம்மாவைக் கல்யாணம் செய்து கொண்டு ஃபார்ஸி ஃபெரோஸும் 'காந்தி' ஆனாரு. சரின்னு அதையும் ஒத்துக்கிட்டோம். ரெண்டு பேருக்கும் ரெண்டு பிள்ளைகள் பிறந்தார்கள். பேரு ராஜீவ் 'காந்தி'; சஞ்சய் 'காந்தி'. அதையும் ஒத்துக்கிட்டோம். இத்தாலிக்கார சோனியா ... எப்படிய்யா 'காந்தி' ஆனா(ரு)? சொல்லு..."

நீண்டகாலம் திமுகவின் பிரச்சார பீரங்கியாகத் திகழ்ந்த 'தீப்பொறி' ஆறுமுகம், ஒருகாலத்தில் திமுக-பாஜக கூட்டணியின்போது காங்கிரசைத் தாக்குவதற்காகப் பயன்படுத்திய மேற்காணும் கேள்விகள்தாம் நினைவுக்கு வருகின்றன - "சீக்கிய மேனகா ... எப்படி காந்தி ஆனாரு? சொல்லு; அந்தம்மாவுக்குப் பொறந்த வருண் எப்படி காந்தி ஆனாரு? சொல்லு ..." என்ற நீட்சியுடன்.

எனவே, சஞ்சய்-மேனகாவுக்குப் பிறந்த வருணோடு, 'காந்தி' என்ற பெயரைச் சேர்த்து காந்திஜியின் பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தக் கூடாது என்பதால் வருணை இங்கு வெறும் 'வருண்' என்றே குறிப்பிடுவோம்.

-0-

ஜனநாயகக் கேலிக்கூத்தின் உச்சபட்ச கோமாளித்தனமான மற்றொரு தேர்தல் திருவிழா ஆரம்பமாகி விட்டது. மக்களை ஏமாற்றிப் பிழைக்கும் அரசியல்வாதிகள் அனைவரும் இன்னொருமுறை மக்கள் முன்னிலையில் கோமாளி வித்தைக் காட்ட தயாராகி விட்டனர்.

மக்களின் அடிப்படை வாழ்வு, பொருளாதார மேம்பாடு, தொழில் வளர்ச்சி, கல்வி, வேலைவாய்ப்பு போன்ற மக்களையும் நாட்டையும் வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதற்குத் தாங்கள் என்னென்ன செய்யப்போகிறோம் என்றும் என்னென்ன செய்துள்ளோம் என்பதையும் பட்டியலிட்டு மக்களைக் கவர்வதே உண்மையான ஜனநாயத்தின் அடையாளங்களாகும்.

ஆனால், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக ஏட்டளவில் பீற்றிக் கொள்ளும் இந்தியாவில் மட்டும் இதற்கு நேர் முரணான காட்சிகளே எப்போதும் அரங்கேறுகின்றன. இதற்கு எந்தக் கட்சியும் விதிவிலக்கல்ல. அதிலும் பிரிவினைவாதத்தையும் அடக்குமுறையையும் அடிப்படையாகக் கொண்ட ஆர்.எஸ்.எஸ்ஸைத் தலைமையாகக் கொண்ட பாரதீய ஜனதா கட்சியைப் பொருத்தவரை, ஜனநாயகம் என்பது வெறும் ஏட்டுச் சுரைக்காய்தான்.

மக்களிடையே வெறுப்பையும் காவிச் சிந்தனையையும் விதைத்து, நாட்டில் வாழும் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் அல்லாத அனைவரையும் "இந்துக்கள்" என்ற மாய்மாலத்தில் ஒருங்கிணைக்க தொடர் முயற்சி செய்து வருகிறது பாஜக. அதற்கான ஆரம்ப ஆயுதமாக அது கையில் எடுத்துக் கொண்டதுதான் பாபர் மசூதி!

அரசியலில் அன்றிலிருந்து ஆரம்பித்த காவி வக்கிரச் சிந்தனைகள், இன்று வேர் விட்டு விருட்சமாகப் பரவி நிற்கிறது. நாட்டின் குடிமக்களில் ஒரு சாராரைக் கொன்றொழிப்பதையும் அதற்காக அறைகூவல் விடுவதையும் சிறுபான்மையினரையும் தாழ்த்தப்பட்ட மக்களையும் அடித்தட்டிலிருந்து மேலெழும்ப விடாமல் அழித்தொழிப்பதையும் மட்டுமே இலட்சியங்களாகக் கொண்டு ஒரு நாட்டில் ஒரு கட்சி வெளிப்படையாக இயங்க முடியுமா?.

Dim lights Embed Embed this video on your site

இந்தியாவில் மட்டும் அது முடியும்! ஒன்றல்ல, ஆர்.எஸ்.எஸ் என்ற விஷ விருட்சத்தின் விழுதுகளாகவும் எச்சங்களாகவும் வெளிப்படையாகவும் இரகசியமாகவும் பல பிரிவுகளாகப் பிரிந்து விரிந்த உபவிஷங்களாக!

ஆர்.எஸ்.எஸ்ஸின் கூடாரத்தில் ஐக்கியமாகி விட்டால் அடுத்த விநாடியே 'அகோரி'ப் பித்துத் தலைக்கு ஏறிவிடும் என்பது அதன் அரசியல் பிரிவான பிஜேபி மூலம் இன்னொரு முறை தெளிவாகி இருக்கிறது.

உத்தரப்பிரதேசத்தின் பிலிபித் தொகுதியில் பிஜேபியின் நாடாளுமன்ற வேட்பாளாராகப் போட்டியிடும் வருண், கடந்த 6.3.2009இல் அங்கு நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசும்போது,

Dim lights Embed Embed this video on your site

"இது (காங்கிரஸின் சின்னமான) கை அல்ல. தாமரையின் சக்தி. இது இந்தியாவில் உள்ள முஸ்லிம்களின் தலைகளை வெட்டி எறியும், ஜெய் ஸ்ரீராம்".

"இந்துக்கள் அனைவரும் இந்தப் பக்கம் வந்துவிட வேண்டும். மற்றவர்கள் பாகிஸ்தானுக்குப் போய் விட வேண்டும்".

"ஓர் இந்துவுக்கு எதிராக எவனாவது கையை உயர்த்தினால், கீதை மீது சத்தியமாக அவனது கையை இந்த வருண் வெட்டுவான்"

என்றெல்லாம் முழங்கித் தள்ளியிருக்கிறார். யாருக்காவது காவிப் பித்துத் தலைக்கேறி விட்டால் அவர், பைத்தியங்கள் உளறுவதை விடக் கீழ்த்தரமாக அர்த்தமின்றி உளறுவார் என்பதற்கு வருண் நல்ல உதாரணம்!

"இந்துக்கள் அனைவரும் இந்தப் பக்கம் வந்துவிட வேண்டும். மற்றவர்கள் பாகிஸ்தானுக்குப் போய் விட வேண்டும்" என்றால், முதலில் இந்துக்கள் என்றால் யாவர் என்பதை ஆர்.எஸ்.எஸின் கண்ணோட்டத்தில் தெளிவாக்கினால், "முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், சமணர்கள், தாழ்த்தப்பட்டோர், பகுத்தறிவுவாதிகள் என 2.5% பார்ப்பனர்களைத் தவிர அனைவருமே பாகிஸ்தானுக்குப் போய்விட வேண்டும். பாகிஸ்தான் தாங்குமா? பாகிஸ்தானில் இவர்களுக்கெல்லாம் இடம் கிடைக்குமா?" என்ற கேள்வியை ஆர்.எஸ்.எஸ், தன் சகாவான ஐ.எஸ்.ஐயுடன் கலந்துபேசி இந்திய அரசுக்குத் தெரிவிக்க வேண்டும்.

"தாமரையின் சக்தி இந்தியாவில் உள்ள முஸ்லிம்களின் தலைகளை வெட்டி எறியும்" என்றும் "இந்துக்களைத் தவிர மற்ற அனைவரும் பாகிஸ்தானுக்குப் போய் விட வேண்டும்" எனவும் இவ்வளவு வெளிப்படையாக ஒருவர் பேசுகிறாரே?. இது சட்ட விரோதம் இல்லையா?. இவர் மீது சட்டம் பாயாதா? என்று வெகுளித்தனமாக யாராவது கேள்வி கேட்கக் கூடும்.

ஆர்.எஸ்.எஸ்ஸைத் தலைமையாக ஏற்றுக் கொள்வதற்கு அடிப்படைத் தகுதியே சட்டத்தை மதிக்கக் கூடாது என்பதுதான். அப்படியே தேர்தல் கமிஷனோ, உணர்வில்லாத ஏதோ ஒரு கமிஷனோ, பத்து நாட்கள் கழித்து, கேட்க வேண்டுமே என்பதற்கு ஈனஸ்வரத்தில் முனகினால், இருக்கவே இருக்கிறது "நான் பேசியதைத் திரித்து விட்டார்கள்" என்ற காவி சாணக்கியத்தனம். அத்தகைய பயிற்சிகளைக் கொடுத்தல்லவா ஆர்.எஸ்.எஸ் அகோரிகளைத் தயாராக்குகின்றது!

அதுதான் நடந்திருக்கிறது. வருணின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்துக்குப் பாதுகாப்பு அளித்து அவர் பேசியதைக் கேட்டுக் கொண்டிருந்த உத்தரப்பிரதேசக் காவல்துறை, பத்து நாட்களுக்குப் பிறகு வருணுக்கு எதிராகக் குற்றவியல் பிரிவு 153ஏயின்படி (by words, either spoken or written or by signs or by visible representations or otherwise promotes or attempts to promote on ground of religion, race, place of birth, residence, language, caste or community or any other ground whatsoever disharmony or feelings of enmity, hatred or illwill between different religious, racial, language or regional groups or castes or communities shall be punished with imprisonment) முதல் தகவல் அறிக்கையைத் தாக்கல் செய்திருக்கிறது.

"இந்திய இறையாண்மைக்குச் சவால் விடுவதாகவும் மதவிரோதத்தை விதைத்து வன்முறையைத் தூண்டி விடுவதாகவும்" வருணுக்கு எதிராகப் பிணையில் வரமுடியாத குற்றவியல் சட்டப்படியும் மக்கள் பிரதிநிதுத்துவப் பிரிவுச் சட்டப்படியும் ஒரு வழக்கை நேற்றுத் தேர்தல் கமிஷன் தொடுத்திருப்பதாக PTI செய்திக் குறிப்புக் கூறுகின்றது.

ஆனால், "நாளைக்கு நான் தெளிவாக்கி விடுவேன். ஒன்றும் ஆகாது, கவலையில்லை" என்று வருண் பேட்டி கொடுக்கிறார்.

மேலும், "வருண் பேசியதில் தவறொன்றுமில்லை" என்று ஆர்எஸ்எஸ் தலைவர் தருண் விஜய் விளக்கம் சொல்லி விட்டார்.

"வருண் புயல் மாதிரி; அடுத்த சஞ்சய் வருண்தான்" என்று தாய் மேனகா பெருமை பேசுகிறார்.

நியாயந்தான்! அவசரநிலை காலகட்டத்தில் முஸ்லிம்களின் டெல்லிக் குடியிருப்புகளை மட்டும் குறிவைத்து புல்டோசரால் அழித்தொழித்து, புகழ்பெற்ற டெல்லி ஜாமியா மஸ்ஜிதில் துப்பாக்கி சூடு நடத்தி, டெல்லி முஸ்லிம்களின் மனங்களில் அழியா வடுவை ஏற்படுத்திய பழம்புயல் சஞ்சயின் மகனல்லவா வருண்?

நம் நாட்டில் பேசுவதற்கு ஒரு மேடையும் கேட்பதற்கு சிலநூறு தலையாட்டிக் கூட்டமும் ஒரு மைக்கும் கிடைத்து விட்டால் என்ன வேண்டுமானாலும் பேசி விடலாம் என நினைக்கும் ஆர்.எஸ்.எஸ்ஸின் வன்முறைச் சித்தாந்தத்துக்கு அஞ்சலி செலுத்த வேண்டிய காலம் கனிந்து விட்டது.

"நம்நாடு ஒரு ஜனநாயக நாடு; நமது அரசு ஜனநாயக அரசு" எனப் பெருமையாகக் கூறிக் கொண்டிருப்பதில் மட்டும் அர்த்தம் இல்லை. நாட்டின் குடிமக்கள் அனைவரையும் சமமாக நடத்துவதற்கும் அனைவரும் பாதுகாப்பாக வாழ்வதற்கு உத்தரவாதம் வழங்க வேண்டியதும் ஜனநாயக அரசின் தலையாய கடமைகளாகும்.

வெறும் கண்துடைப்பு விளக்க நோட்டீஸ்களும் கமிஷன்களும் அமைப்பதை விடுத்து, வன்முறை வித்துகளை விதைக்கும் பேச்சுகளைப் பேசுவோர் எவராக இருப்பினும் உடனே கைது செய்து, உரிய தண்டனை வழங்க வேண்டும். "வருணுக்குத் இந்தத் தேர்தலில் போட்டியிடத் தகுதி இல்லை" என்ற குறைந்தபட்ச அறிவிப்பையாவது தேர்தல் கமிஷன் அறிவிக்க வேண்டும்.

இல்லையெனில் இதேமாதிரிப் பேச்சுகள் நீளுவதைத் தடுக்க முடியாது - எதிர்ப் பேச்சையும்தான்!

 

கருத்துக்கள் (10)add comment
0
நல்லடியார்:
ஜீவகாருண்யம் பற்றிப் பேசும் மேனகா காந்தி அம்மையார் தன் மகனுக்கு இந்திய முஸ்லிம்களும் ஜீவன் உள்ளவர்கள்தான் என்று சொல்லத் தவறியிருக்கலாம்.
1

March 17, 2009 20:10
0
M.Mohamed Abbas:
அஸ்ஸலாமு அலைக்கும் அனைத்து முஸ்லிம் மக்களுக்கும்... சத்திய மார்க்க தளத்தில் நடமாடும் மத தீவரவாதி வருன் பேசியது வீடியோவுடன் பதிந்திருக்கிறது.... //'இது (காங்கிரஸின் சின்னமான) கை அல்ல. தாமரையின் சக்தி. இது இந்தியாவில் உள்ள முஸ்லிம்களின் தலைகளை வெட்டி எறியும், ஜெய் ஸ்ரீராம்'. 'இந்துக்கள் அனைவரும் இந்தப் பக்கம் வந்துவிட வேண்டும். மற்றவர்கள் பாகிஸ்தானுக்குப் போய் விட வேண்டும்'. 'ஓர் இந்துவுக்கு எதிராக எவனாவது கையை உயர்த்தினால், கீதை மீது சத்தியமாக அவனது கையை இந்த வருண் வெட்டுவான்'// ஆனால் நமது தமிழ் நாட்டு நாளிதல்களில் இவ்வாறு பதிந்துள்ளது தினத்தந்தி மார்ச் 18, 2009 http://dailythanthi.com/article.asp?NewsID=475709&disdate=3/18/2009 //''இந்துகளுக்கு எதிராக யாரவது விரலை நீட்டினாலோ, அல்லது இந்துக்கள் பலவீனம் அடைந்துவிட்டதாக, தலைமை இல்லாமல் போய்விட்டதாக நினைத்தாலோ, ஓட்டுக்காக இந்து தலைவர்கள் தங்களது காலடியில் விழுவார்கள் என்று நினைத்தாலோ, பகவத் கீதை சத்தியமாக அத்தகைவர்களின் கையை வெட்டுவேன்''// மறைக்கப்பட்ட உன்மை தினத்தந்தி நாளிதளில் //இந்தியாவில் உள்ள முஸ்லிம்களின் தலைகளை வெட்டி எறியும், ஜெய் ஸ்ரீராம்.இந்துக்கள் அனைவரும் இந்தப் பக்கம் வந்துவிட வேண்டும். மற்றவர்கள் பாகிஸ்தானுக்குப் போய் விட வேண்டும்'.// மேல் உள்ள வாசகம் தினத்தந்தியில் நீக்கபட்டு விட்டது தினமனி மார்ச் 18,2009.. ///இது எனது கை(அவர் கை உயர்த்திய படி) ஆனால் காங்கிரஸ் சின்னமான கை அல்ல. இது தாமரையின் சக்தி. இது தலைகளை வெட்டி எறியும், ஜெய் ஸ்ரீராம் யாரவது இந்துக்களை நோக்கி விரல் நீட்டினால், இந்துக்கள் பலவினமானார்கள் என்று நினைத்தாலோ , இந்துகள் தலைமையற்றவர்கள் என்று என்று கருதினால் அவர்களின் தலையை வெட்டுவேன் என கீதையின் மீது ஆணையாக கூறுகிறேன் ./// மறைக்கப்பட்ட உன்மை தினமனி நாளிதளில் முஸ்லிம் என்று குறிப்படவில்லை அதை மட்டும் நீக்கி வீட்டு // இது தலைகளை வெட்டி எறியும்// என்று மொட்டையாக பதிக்கப்பட்டுள்ளது //இந்தியாவில் உள்ள முஸ்லிம்களின் தலைகளை வெட்டி எறியும், ஜெய் ஸ்ரீராம்.இந்துக்கள் அனைவரும் இந்தப் பக்கம் வந்துவிட வேண்டும். மற்றவர்கள் பாகிஸ்தானுக்குப் போய் விட வேண்டும்'.// மேல் உள்ள வாசகம் தினமனியில் நீக்கபட்டு விட்டது http://dinamani.com/NewsItems.asp?ID=DNH20090317114103&Title=Headlines&lTitle=%D8d%A1V+%F9Nn%A7Ls&Topic=0&ndate=3/18/2009&dName=No+Title&Dist= மதவெறி பைத்தியம் பிடித்த தினமலர் மார்ச் 18, 2009, //இது எனது கை, ஆனால் காங்கிரஸ் ஆட்சியின் சின்னம் அல்ல. பாரதி ஜனதாவின் பலம், யாரவது இந்துகள் நோக்கி கை நீட்டினால், இந்துகள் பலவினமானவர்கள் என யாரவது நினைத்தால் அவர்கள் கை வெட்டுவேன் என்று கீதை பேரில் உறுதி கூறுகிறேன்.// மறைக்கப்பட்ட உன்மை தினமலர் நாளிதளில் தினமலர் பற்றி சொன்னாலும் ஒன்று தான் சொல்லாமாலும் இருப்பதும் ஒன்று... ஏனெனில் இது ஒரு பொய்மலர்...தினமலரில் பதிந்த கருத்துகள் அனைத்தும் பொய்கள்.தொடர்புடைய வீடியோவுக்கு சம்மந்தம் இல்லாதவை. http://dinamalar.com/Topnewsdetail.asp?News_id=977 http://dinamalar.com/fpnnews.asp?News_id=3269&cls=row4 இது தான் ஊடகத்தின் மறைத்தலும் அதற்கு தகுந்தார் போல் திரித்தலும்...
2

March 18, 2009 12:55
0
அல் அமீன்:
அவிழ்த்து விடப்பட்ட காட்டுமிராண்டிகளின் மத்தியில் இருந்து அவனை வெட்டுவேன், இவனைக் குத்துவேன் என்று கத்துவது பேடித்தனம்! இவ்வளவு பேசும் வருண், உண்மையிலேயே ஆண்மகனாக இருந்தால் நான் இன்ன முஸ்லிமின் தலையை வெட்டப்போகிறேன் என அறிவித்து விட்டு வெட்ட வரட்டும். இவன் வெட்டும் பொழுது வெட்டப்படுபவனின் கை மணியாட்டிக் கொண்டிருக்கும் என்று நினைத்தானோ? அது அந்தக்காலம்.
3

March 18, 2009 20:44
0
அல் அமீன்:
//இந்துக்கள் அனைவரும் இந்தப் பக்கம் வந்துவிட வேண்டும். மற்றவர்கள் பாகிஸ்தானுக்குப் போய் விட வேண்டும்// அய்யோ, அய்யோ, அய்யோ! என்ன காமடி செய்கிறான்கள்! இவனின் பாட்டி இந்திராவையே இந்துவாக ஏற்றுக் கொள்ள சங்பரிவாரம் முன்வரவில்லை என்பது இந்தக் கிறுக்கிற்கு யாராவது சொல்லிக் கொடுங்களேன். இந்துவைத் தவிர எல்லோரும் பாகிஸ்தான் போக வேண்டும் எனில் இந்த அரைவேக்காடு அல்லவா முதலில் செல்ல வேண்டும்? பாஜக அரைவேக்காடுகளின் கூடாரம் என்பதை அழகாகவே தெளிவிக்கிறது இந்த அரைவேக்காடு!
4

March 18, 2009 20:49
0
அன்பழகன்:
அல் அமீன் என்பவர் ஏன் இப்படி ஆக்ரோஷப் படுகிறார் என்பது புரியவில்லை. வருண் காண்டி பேசியதில் தவறு ஒன்றுமில்லை. தான் சார்ந்திருக்கும் கட்சியின் கொள்கைகளைப் பிரச்சாரம் செய்வது ஒரு தவறா? நியாயப்படி பார்த்தால் பாஜக, தேசிய அளவில் வருண் காண்டிக்கு கொ.ப.செ. பதவி கொடுக்கவேண்டும்
5

March 19, 2009 05:37
0
Rafique uthuman/ngl/riyadh:
முஸ்லீம் இயக்கங்களின் சட்ட வல்லுநர்கள் முறையானபடி தேவைபட்டால் சுப்ரீம்கோர்ட் வரை போய் அவனுக்கு(வருண்) சிறைதண்டனையும் தேர்தலில் நிற்கமுடியாதபடியும் தீர்ப்பு வாங்கிதரணும்.இது தேர்தல் காலம்.எந்த கட்சியும் (பிஜேபி தவிர) பகைக்காது.நீதிபதிகளுக்கு அழுத்தம் கொடுக்காது.எனவே காலத்தை பயன்படுத்தி சட்டரீதியாக முழுதண்டனை பெற்றுதர வேண்டும். மற்ற கட்சிகள் தேர்தல் கமிஷன் செய்யும் என்று ஏமாந்துவிடாதீர்கள்.வெளிநாட்டிலிருந்து எதுவும் எழுதலாம் என்று தயவுசெய்து எண்ணாதீர்கள்..வேறு என்ன செய்ய முடியும்.இந்த வீடியோ காட்சிகளை அதிகமாக பயன்படுதிதி தேர்தல் பிரச்சாரம் செய்வதிலே தீவிரம் காட்டணும ; மக அதிகம் இந்துக்களும் சமாதானத்தை விரும்புபவர்கள் தான்.முட்டாள் அவன்தலையில் அவன் மண்ணை அள்ளி போட்டிருக்கிறான்.
6

March 19, 2009 06:05
0
abdul azeez:
சகோதரர் அன்பழகன் நீங்கள் சுயநினைவோடு தான் இந்த பதிவை எழுதினீர்களா ? // இது (காங்கிரஸின் சின்னமான) கை அல்ல. தாமரையின் சக்தி. இது இந்தியாவில் உள்ள முஸ்லிம்களின் தலைகளை வெட்டி எறியும், ஜெய் ஸ்ரீராம்'. // இது தான் பி. ஜெ. பி கட்சியின் கொள்கைகளா ? இதற்க்கு பெயர் தான் நியாயமா ? இதே ரேஞ்சில் இந்தியா செல்லுமானால். சோமாலியா,எதியோபியா, சுடான் நிலைமைக்கு உட்கொண்டுவிடும். இந்த போக்கை அவர்கள் கைவிடவில்லையென்றால் பக்கத்தில் இருக்கும் இலங்கை இந்தியாவுக்கு ஒரு பாடம். முடிந்தால் அவர்களால் முடிந்த அளவு தங்கள் மதத்தை பின்பற்றவும். இல்லை என்றால் ஒரு சராசரி மனிதனைப் போலாவது. வாழக் கற்றுக்கொள்ளவும். மா சலாம். அப்துல் அசீஸ்.
7

March 19, 2009 21:47
0
அல் அமீன்:
//வருண் காண்டி பேசியதில் தவறு ஒன்றுமில்லை. தான் சார்ந்திருக்கும் கட்சியின் கொள்கைகளைப் பிரச்சாரம் செய்வது ஒரு தவறா? நியாயப்படி பார்த்தால் பாஜக, தேசிய அளவில் வருண் காண்டிக்கு கொ.ப.செ. பதவி கொடுக்கவேண்டும்// அன்பழகன் அய்யா, மிகச் சரியாகத் தான் கூறியுள்ளீர்கள். சட்டியில் இருப்பது தானே அகப்பையில் வரும்! பாஜகவின் இனவெறி கொள்கையைத் தான், பாஜகவின் புதிய அறிவுகொளுந்து வருண் வெளிப்படுத்தியுள்ளார். இனி ஒருவேளை மோடி இவரிடமிருந்து பாடம் படிக்க வேண்டி வரலாம். நீங்கள் கூறியது போன்று வருண், பாஜக கொள்கைபரப்பு செயலாளர் பதவிக்குத் தகுதியானவரே!
8

March 20, 2009 11:41
0
பெனா:
ஆர்.எஸ்.எஸ் என்பது அடிப்படையில் ஒரு ரகசிய அமைப்பாகும். அதற்கென்று ஒரு புறத்தோற்றம் உள்ளது. உறுப்பினர் சேர்க்கைக்காக சட்டங்களோ, பதிவேடுகளோ, கணக்குகளோ கிடையாது. ஆனால் அந்த அமைப்பு பெரும் தொகையை வசூலிக்கின்றது. அமைதியான வழிமுறைகள் மீது அதற்கு நம்பிக்கை கிடையாது. அவர்கள் வெளியில் சொல்வதற்கு நேர் எதிர்மறையான செயலில் ரகசியமாக ஈடுபடுகிறார்கள். ஐரோப்பாவின் பல்வேறு பாகங்களில் பாசிசத்திற்கு ஆதரவாகத் தோன்றிய அமைப்புகளின் மறுபதிப்பாக ஆர்.எஸ்.எஸ் விளங்குகின்றது. -ஜவஹர்லால் நேரு (விடுதலை க. இராசேந்திரன் எழுதிய “சங்பரிவாரின் சதி வரலாறு” எனும் நூலில் ‘எச்சரிக்கை மணி’ என்னும் தலைப்பில் த.மு.மு.க தலைவர் பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் அவர்களால் நினைவுகூறபட்டவை)
9

March 20, 2009 16:22
0
M.Mohamed Abbas:
அஸ்ஸலாமு அலைக்கும் அனைத்து முஸ்லிம் சகோதரர்களும் மதவெறி தீவரவாதி வருண் பேசிய மேலும் பல தகவல்களை தினத்தந்தி நாளிதல் வெளியிட்டுள்ளது, பார்க்க மார்ச் 23,2009 அதில் இத்தொகுதியில் பைத்தியகார சீக்கியர்(வி.எம்.சிங்) போட்டி இடுகிறார். அவர் ஒரு முஸ்லிம் ஏஜென்ட், அவரை ஆதரிக்கும் இந்துகள், இந்து மதத்தின் மாபெரும் துரோகிகள். இது போல் ரியாஸ் அகமது என்பவரும் போட்டி இடுகிறார். அவர் அப்பட்டமான பாகிஸ்தானி, இத்தகைவர்களை பிடித்து கருத்தடை ஆபிரேசன் செய்துவிட வேண்டும். எனக்கு முஸ்லிம்கள் ஓட்டு தேவையில்லை. இந்துகள் ஒன்றுபட வேண்டும். இந்துகள் ஓட்டு போடமல் இருப்பது மதத்துக்கு துரோகம் செயவது போன்றது. இந்து ரானுவத்தை அமைத்து துப்பாக்கி உரிமம் கொடுப்பேன். மேலும் விரிவாக http://dailythanthi.com/article.asp?NewsID=476780&disdate=3/23/2009
10

March 23, 2009 05:24

கருத்து எழுதுக :
சிறிதாக்குக | பெரிதாக்குக

busy
 
Related Articles :

» Sangh Pariwar worried about ‘Hindu' link to terrorism

NEW DELHI: Ever since a ‘Hindu' link to terrorism surfaced in the form of , many in the Rashtriya Swayamsevak Sangh have been spending sleepless nights, wondering where police investigations will lead once the agencies are able to connect all the dots that have emerged over the past two years.

» NCB, MoneyGram introduce Quickpay remittance service

JEDDAH - The excruciating days of standing in long queue that most of the more than 7 million expatriate workers in Saudi Arabia experience whenever they send remittances to their love ones would soon be a thing of the past

» ஒபாமாவின் 'மாற்றம்', மாறாது நிலைக்குமா?

"இஸ்லாமியத் தீவிரவாதம்", "ஜிஹாதி பயங்கரவாதம்" தொடங்கி, "இன்னொரு சிலுவைப் போர்" வரை, இஸ்லாத்தின் மீது காழ்ப்பைக் கக்கும் சொல்லாட்சிகளை உலகுக்கு அறிமுகப் படுத்திய அமெரிக்க முன்னாள்...

» பய்யினா - தெளிவான அறிமுகம்

நியூயார்க் நகரில் படித்துக் கொண்டிருந்த மாணவர் அவர். ஒரு சராசரி அமெரிக்க மாணவனுக்குரிய அனைத்து குணாதிசியங்களையும் உடையவர். மதம், இறைவன், மார்க்கநெறி ஆகியனவற்றை எல்லாம் தத்துவயியல்,...

» ஒரே ஒரு நிழற்படம்

இந்த நிழற்படத்தை நினைவில் கொள்ளாத இந்தியர்கள் வெகு குறைவு. குஜராத்தில் முஸ்லிம்களை சங்க் பரிவார குண்டர் கும்பல் 2002இல் கொன்று குவித்ததில் இவரது முகம் பரவலாக அறிமுகமானது.இவர் யார்?...
You are here  : முகப்பு