| குண்டுவெடிப்புகளுக்குக் காரணம் ஹிந்துத்துவா அமைப்பு - மஹாராஷ்டிரக் காவல்துறை! |
|
|
| செய்திகள் - இந்தியச் செய்திகள் |
| சனி, 25 அக்டோபர் 2008 06:38 |
|
குண்டுவெடிப்புகளை நடத்தியவர்கள் ஹிந்துத்துவா அமைப்பினர்தாம்! மகாராஷ்டிரக் காவல்துறை உறுதிப் படுத்தியது!! மும்பையில் நடைபெற்ற பல குண்டுவெடிப்புகளை நடத்தியவர்கள் ஹிந்துத்துவ அமைப்பினர் என்பதையும் அவரகளது வீடுகளிலும் தோட்டத்திலும் பதுக்கி வைத்திருந்த டன் கணக்கான வெடிப்பொருட்களையும் சத்தியமார்க்கம்.காம் ஆதாரங்களுடன் வெளியிட்டிருந்தது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம்.
மகாராஷ்டிர மாநிலத்திலுள்ள மாலேகோன், குஜராத் மாநிலத்திலுள்ள மொடஸா ஆகிய இரு இடங்களிலும் கடந்த மாதம் நடந்த குண்டுவெடிப்புகளுக்குப் பின்னணியில் ஹிந்துத்துவ அமைப்புகள் செயல் பட்டிருப்பது, அசைக்க முடியாத ஆதாரங்களுடன் தற்போது நிரூபணம் ஆகியுள்ளது.
முஸ்லிம்கள் கொண்டாடும் நோன்பு பெருநாளுக்கு முதல்நாள் (29.09.2008) மஹாராஷ்டிர மாநிலம் மாலேகோனிலும் குஜராத்திலுள்ள மொடஸாவிலும் நடந்த குண்டுவெடிப்புகளை நடத்தியவை ஆர்.எஸ்.எஸுடன் தொடர்புடைய இந்து ஜாகரண் மஞ்ச் என்ற சங்கபரிவார இயக்கம் என மகாராஷ்டிரா காவல்துறை தகுந்த ஆதாரங்களுடன் தற்போது கண்டுபிடித்துள்ளது.
"மாலேகோனில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்புக்கு உபயோகிக்கப்பட்ட இருசக்கர வாகனத்தைத் திருடியவர்களைக் குறித்த விசாரணையில், அதிர்ச்சிகரமாக இவ்வுண்மை உறுதிப்படுத்தப் பட்டது" என்று மஹாராஷ்டிராவின் தீவிரவாத எதிர்ப்புப் படை(எ.டி.எஸ்)யிலுள்ள உயர் அதிகாரி கூறினார். இம்மாதம், அக்டோபர் 10 அன்று மத்தியப் பிரதேசத்திலிருந்து கஸ்டடியில் எடுக்கப்பட்ட ஷியாம்லால், திலீப் நஹர், தர்மேந்திரா பைரகி ஆகிய மூன்று சங்கபரிவாரத் தொண்டர்களிடமிருந்து காவல்துறைக்கு மாலேகோன்-மொடஸா குண்டு வெடிப்புகள் குறித்த விவரங்கள் கிடைத்துள்ளன.
கடந்த செப்டம்பர் 29 அன்று இரவு நடந்த குண்டுவெடிப்புகளில் மாலேகோனில் ஒரு சிறுவன் உட்பட 5 முஸ்லிம்களும் மொடஸாவில் ஒருவரும் கொல்லப்பட்டிருந்தனர். அன்று குண்டுவெடிப்பு நடந்தச் சில நிமிடங்களிலேயே வழக்கம்போல் அதன் பின்னணியில் சிமியும் இந்தியன் முஜாஹிதீன் என்ற இயக்கமும் செயல்பட்டதாகக் காவல்துறையும் பெரும்பாலான ஊடகங்களும் கட்டுக்கதைகளைப் பரப்பியிருந்தன. "இரண்டு குண்டு வெடிப்புகளிலும் தொடர்புடையவர்கள்" என்பதாக உடனடியாக 12 முன்னாள் சிமி உறுப்பினர்களும் கைது செய்யப் பட்டிருந்தனர்.
அன்று எவ்வித ஆதாரங்களும் இன்றி, அவசரகதியில் விசாரணையின்றி சிமியின் மீது குற்றம் சுமத்திக் கைது செய்த மகாராஷ்டிரக் காவல்துறை, விசாரணையின் இறுதியில் இரு குண்டு வெடிப்புகளையும் ஹிந்துத்துவா அமைப்பு நடத்தியுள்ளதாக இப்போது ஆதாரங்களுடன் கூறியுள்ளது. நோன்புப் பெருநாளுக்கு முந்தைய நாள் இரவு மாலேகானில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு, முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் இப்பகுதிகளில் சமுதாயங்களிடையே கலவரங்களை உருவாக்குவதற்கான முயற்சியாக இருந்தது என்றும் விசாரணையில் உறுதியானது. இதே ரீதியில் தமிழ்நாட்டின் தென்காசியில் சங்கபரிவாரத்தினரே குண்டு வைத்து விட்டு, நிமிட நேரத்தில் முஸ்லிம்கள் வைத்ததாகச் செய்தியைக் கசிய விட்டதும் அடுத்த சில மணிநேரத்திலேயே இராமகோபாலன், இல.கணேசன் உட்பட சங்கபரிவாரத்தினரால், "தீவிரவாதி முஸ்லிம்களைக் கைது செய்ய வேண்டும்" என அறிக்கைகள் விடப்பட்டதும் அடுத்த சில தினங்களிலேயே அக்குண்டுவெடிப்புகளுக்குப் பின்னணியில் சங்கபரிவார ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர்தான் ஈடுபட்டிருந்தனர் என்பது காவல்துறை விசாரணையில் உறுதியானதும் நினைவிருக்கலாம். அவ்வழக்கின் விசாரணையில், "கலவரங்களை உருவாக்குவதற்காக நாங்கள்தான் எங்கள் அலுவலகத்திலேயே குண்டு வைத்தோம்" என்று கைது செய்யப் பட்ட ஆர்.எஸ்.எஸ்காரர்களே வாக்குமூலம் கொடுத்திருந்தனர்.
காவல்துறையினரின் அண்மை வெடிகுண்டு வேட்டைகளில் சிக்கும் ஹிந்துத்துவ அமைப்பினரால் நாட்டில் நடக்கும் பெரும்பான்மையான குண்டுவெடிப்புகளின் பின்னணியில் சங்கபரிவாரத்தினரின் திட்டமிட்ட சதி இருப்பது உறுதியாகியுள்ளது.
கடந்த செப்டம்பரில் மகாராஷ்டிராவின் மாலேகோனிலும் குஜராத்தின் மொடஸாவிலும் இருசக்கர வாகனங்களில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டுகள் சில நிமிட இடைவெளியில் இரண்டு இடங்களிலும் வெடித்துச் சிதறின. மாலேகோனில், தடை செய்யப்படுவதற்கு முன்பு செயல்பட்டிருந்த சிமியின் பழைய அலுவலகத்தின் முன்பக்கத்தில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை சமூக விரோத ஹிந்துத்துவாவைச் சேர்ந்தவர்கள் நிறுத்தியிருந்தனர். குஜராத்தின் மொடஸாவில், குண்டுவெடிப்புக்கு உபயோகிக்கப்பட்ட இருசக்கர வாகனத்தின் சீட்டில் குர்ஆன் வசனங்கள் உள்ள ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது. இதிலிருந்து திட்டமிட்டு, சிமியின் மீது குண்டுவெடிப்புகளைச் சுமத்துவதற்குச் சங்பரிவாரம் செயல்பட்டிருந்ததும் உறுதியாகியுள்ளது.
இருசக்கர வாகனங்களின் உரிமையாளர்களை அடையாளம் தெரியாமல் இருக்க வண்டியின் நம்பர் பிளேட் மற்றும் எஞ்சினில் உள்ள எண்களைச் சுரண்டி மாற்றியிருந்தனர். தடயவியல் அதிகாரிகளின் உதவியோடு காவல்துறை நடத்திய பரிசோதனையில், குண்டுவெடிப்புகளுக்கு உபயோகிக்கப்பட்ட இரு சக்கர வாகனங்கள் குஜராத்தில் விற்கப்பட்டவை என்பது உறுதி செய்யப் பட்டது.
இவ்விரு சக்கர வாகனங்களின் உரிமையாளர் ஆர்.எஸ்.எஸ்ஸின் மாணவர் இயக்கமான 'அகில பாரதீய வித்யார்தி பரிஷத்(எ.பி.வி.பி)' என்ற அமைப்பில் தீவிரத் தொண்டராகச் செயல்பட்டிருந்தவராவார்.
இந்தக் குண்டுவெடிப்புகளை நடத்தியவர்கள், மத்தியப் பிரதேச மாநிலம் இண்டோரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் 'இந்து ஜாகரண் மஞ்ச்' தொண்டர்களே என்பதையும் மகாராஷ்டிரக் காவல்துறை கண்டு பிடித்துள்ளது. வழக்கின் விவரங்கள் மத்திய உளவுத்துறைப் பிரிவுகளுக்கும் வழங்கப்பட்டுள்ளதாகக் காவல்துறை தெரிவித்தது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் மாலேகோனில் நடந்த குண்டுவெடிப்புகளுக்குப் பின்னணியில் சங்கபரிவார இயக்கங்களே செயல்பட்டிருந்தன என்பதையும் வழக்கம்போல் அந்தப் பழியை முஸ்லிம்கள் தலையில் சுமத்துவதற்காக ஒட்டுத்தாடி, தொப்பி போன்றவை ஹிந்துத்துவத் தீவரவாதிகளால் பயன்படுத்தப் பட்டிருந்தன என்பதையும் அண்மையில் கேரளாவில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் விபின் தாஸ் என்பவர் தன் வீட்டுத் தோட்டத்தில் பதுக்கி வைத்திருந்த சக்தி வாய்ந்த வெடிகுண்டுகளைக் கேரளக் காவல்துறை கண்டு பிடித்ததையும் சத்தியமார்க்கம்.காம் வெளியிட்டிருந்தது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம். ஆனால், நாட்டில் நடக்கும் எல்லா குண்டுவெடிப்புகளுக்கும் சிமியைத் தொடர்புபடுத்துவதிலேயே காவல்துறை இதுவரை கவனம் செலுத்தியிருந்தது. சிமி வழக்கில் நீதிபதி கீதா மிட்டலின் கையால் குட்டுப் பட்ட பிறகு மகாராஷ்டிரக் காவல்துறையின் போக்கில் குறிப்பிடத் தக்க மாற்றம் தெரிய வந்துள்ளது.
மகாராஷ்டிர சிறப்புக் காவல்படையின் அண்மைக் கண்டுபிடிப்புகளைத் தொடர்ந்து நேற்றைய பாராளுமன்ற செயல்பாடுகள் அனைத்தும் ஸ்தம்பித்தன. சூனிய வேளையில், குண்டுவெடிப்புகள் தொடர்பான காவல்துறையின் கைது நடவடிக்கைத் தகவல்களை முஸ்லிம்லீக், கம்யூனிஸ்ட், காங்கிரஸ் கட்சிகள் பாராளுமன்றத்தில் வெளிப்படுத்தின.
"குண்டுவெடிப்புகள் நடைபெறும் வேளைகளில் அவற்றை ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திற்கு எதிராக மட்டுமே திருப்பி, அரசுகள் அநியாயம் இழைக்கின்றன" எனவும் "காவல்துறையின் இக்கண்டுபிடிப்பை அடிப்படையாகக் கொண்டு உடனடியாக பஜ்ரங்தளை அரசு தடை செய்ய வேண்டும்" எனவும் "மாலேகோன் மற்றும் நாண்டட் பகுதிகளில் இதற்கு முன்னர் நடந்த குண்டுவெடிப்புகளோடு பஜ்ரங்தளுக்குத் தொடர்புடையது நிரூபிக்கப் பட்டுள்ளது" எனவும் கம்யூனிஸ்ட் தலைவர் ப்ருந்தா காராட் அரசுக்குக் கோரிக்கை விடுத்தார். "நாட்டில் நடக்கும் அக்கிரமங்களின் பின்னணியில் சங்கபரிவாரமே உள்ளது என்பது ஆதாரப்பூர்வமாக பலமுறை கண்டறியப்பட்டு நிரூபிக்கப்பட்ட போதிலும் அரசு அவற்றுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தயங்குகிறது" எனவும் அவர் குற்றம் சாட்டினார்.
"இந்தக் குண்டுவெடிப்புகளில் தொடர்புடையதாக நிரூபிக்கப்பட்டுள்ள ஹித்துத்துவ மாணவர் இயக்கமான எ.பி.வி.பியை உடனாடியாகத் தடை செய்ய வேண்டும்" என காங்கிரஸ் எம்.பி. ரஷீத் ஆல்வி கோரிக்கை விடுத்தார். "ஒரு மாணவர் இயக்கம் இதுபோன்ற தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது இதுவே முதல் முறை" எனவும் அவர் கூறினார். ஆனால், "இது போன்ற எத்தகைய தீவிரவாத செயல்பாடுகளையும் எந்த ஒரு முழுச் சமுதாயத்தோடும் தொடர்பு படுத்தக் கூடாது" என மத்திய அமைச்சர் கபில் சிபல் பதிலளித்தார்.
குண்டுவெடிப்புகளின் பின்னணியில் சங்கபரிவாரம் செயல்பட்டுள்ள விஷயம் கண்டுபிடிக்கப்பட்ட இச்சம்பவத்தைப் பாராளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்ட நிமிடம் முதல், பாஜக பாராளுமன்றத்தின் செயல்பாடுகளை முடக்கும் விதமாக கூச்சலிட்டுப் பிரச்சனை ஏற்படுத்தியது.
நாட்டில் நீதி நிலைநிறுத்தப் படவேண்டும். உண்மைக் குற்றவாளிகள் உரிய வகையில் தண்டிக்கப் படவேண்டும்.அசைக்க முடியாத ஆதாரங்கள் கிடைத்த பின்னரும் குற்றவாளிகள் தண்டிக்கப் படாவிட்டால், நடைமுறையிலிருக்கும் சட்டங்கள் மக்களிடம் மதிப்பிழந்து விடும்.
இந்தச் சூழலில், நடுநிலை பெயரை நிலைநாட்டிய சில ஊடகங்களிலும் கூட அப்பாவி முஸ்லிம்கள் மீது பொய்யாக புனையப்பட்ட, சங்கபரிவாரத்தின் இத்தகைய திட்டமிட்ட குண்டுவெடிப்புகளுக்கு எதிராக உறுதியான எதிர்ப்புகளோ கண்டனங்களோ ஒரு சம்பிரதாயத்திற்குக் கூட வரவில்லை. முஸ்லிம் சமுதாயத்திற்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள ஊடகப்போருக்கு எதிராக உண்மையை உண்மையாக, சத்தியத்தை நெஞ்சுயர்த்தி எடுத்துரைக்கும் ஒரு நடுநிலை முன்மாதிரி ஊடகம் முஸ்லிம் சமுதாயத்திலிருந்து வெளிவருவதற்கான அவசியத்தை உணர்த்தி நிற்கின்றது!
நீதி எழுந்து நிற்கட்டும் - உறுதியுடன்! கருத்துக்கள் (10)
![]()
நாட்டையே உலுக்கிக்கொண்டிருக்கும் பல்வேறு குண்டுவெடிப்புகளுக்கும் இவர்களுக்கும் இருக்கும் தொடர்பைப்பற்றி ஆழமாக விசாரணை மேற்க்கொள்ளப்படவேண்டும் என்பதே அனைத்து இந்தியகுடிமக்களின் விருப்பம்.மேலும் இவர்கள் சார்ந்த அமைப்புகளையும் அதன் தாய் அமைப்பான என்ற விஷ விருட்சத்தையும் தடைச்செய்வதன் மூலமே இந்தியாவை இந்த ஹிந்துத்வா பயங்கரவாதிகளிடமிருந்து காப்பாற்ற முடியும்.
முஸ்லிமீன்.
1
October 25, 2008 10:09
Hats off to satyamargam editorial team & reporters who did hardwork for extensive revealing of RSS/VHP/Sang & bajrang dal 's underworld works - continuously
Your media works are simply great & keep it up.
2
October 25, 2008 15:28
அருமையான எழுத்து. மேலும் இன்தமிழில் பகிர்ந்து கொள்ள 'இன் தமிழுக்கு' In-Tamil.com வாருங்கள். இன் தமிழ் மூலம் உங்கள் இணைய தள வாசகர்களை பெருக்குங்கள்.
3
October 27, 2008 04:49
மாலேகான் குண்டு வெடிப்பு விசாரனையில் முன்னள் இராணுவ அதிகாரி மற்றும் பெண் சாமியரினி கைது.
செய்தி:
http://ibnlive.in.com/news/exarmy-officers-under-probe-for-malegaon-blast/76743-3.html
விடியோ:
http://ibnlive.in.com/videos/76743/10_2008/hindu_terror2510/exarmy-officers-under-probe-for-malegaon-blast.html
சத்தியமார்க்கம் இதை மேலும் புலணாய்வு செய்து விரிவான செய்தி அளிக்குமாறு, அன்புடன் கேட்டு கொள்கிறேன்.
வஸ்ஸலாம்.
4
October 27, 2008 17:30
கோட்சே காலம்முதல் இன்றுவரை
ஆர்.எஸ்.எஸ்., சங்பரிவார் கூட்டத்தின்
திரைமறைவுச் சதிகள்-கொலைகள்
சங்பரிவார்க் கும்பல் முன்னின்று நடத்தும் வன்முறைகளை முசுலிம்கள் நடத்தியதாகப் பழிபோடும் சூழ்ச்சிகளை தக்க ஆதாரங் களுடன் அம்பலப்படுத்தியுள்ளார் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள். அறிக்கை வருமாறு:-
அண்மைக்காலமாக இந்தியாவில் பல பகுதிகளிலும் குண்டு வெடிப்புகள் சர்வ சாதாரணமாக நடந்துகொண்டு இருக்கின்றன. விலை மதிப்பில்லா மனித உயிர்கள் பலியாகின்றன. வேதனை! வேதனை!! வெட்கம்!!
இந்தக் குண்டுவெடிப்புகளின் பின்னணியில் மதவெறித்தனம் கொம்பு சீவப்பட்டு இருக்கிறது.
பெரும்பாலும் இந்தக் குண்டுவெடிப்புகளுக்கெல்லாம் முசுலிம் தீவிரவாதிகள்தான் காரணம் என்பது போன்ற ஒரு தோற்றம் கொடுக்கப்பட்டும் வருகிறது!
ஊடகங்கள் கைகளில் இருக்கும் காரணத்தால்...
ஊடகங்களில் 71 சதவிகிதம் உயர்ஜாதி பார்ப்பனர்களின் கைகளில் அடைக்கலம் தேடியுள்ளதால், முஸ்லிம் தீவிரவாதம் என்ற தலைப்பில் திட்டமிட்ட வகையில் பிரச்சாரப்படுத்தி வருகின்றனர்.
ஆனால், அண்மையில் வெளிவந்த அதிர்ச்சியூட்டும் சில தகவல்கள் - கண்டுபிடிப்புகள் ஆர்.எஸ்.எஸ்., பஜ்ரங்தள், இந்து முன்னணி உள்ளிட்ட சங் பரிவார்க் கும்பல் இதுபோன்ற வன்முறைச் செயல்களில் ஈடுபட்டு, அந்தப் பழியை முசுலிம்கள்மீது சுமத்தும் ஒரு தந்திரத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பதை நிரூபித்து வருகின்றன!
இதன்மூலம் பெரும்பான்மை மக்களான இந்துக்களை சிறுபான்மைமக்களான முசுலிம்கள்மீது வன்முறையை ஏவிவிடுவதுதான் இதன் திரைமறைவு நோக்கமாகும்.
பார்ப்பனர்கள் - ஆர்.எஸ்.எஸ். கும்பலைச் சேர்ந்தவர்கள் எப்போதும் இதுபோன்ற வேலைகளில் ஈடுபடக் கூடியவர்கள் என்பதற்கு ஏராளமான எடுத்துக்காட்டுகள் உண்டு.
காந்தியாரைக் கொன்ற கோட்சே!
1. உதாரணமாக தேசப்பிதா என்று மக்களால் மதிக்கப்பட்ட காந்தியாரைச் சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்சே என்ற ஆர்.எஸ்.எஸ். பயிற்சி பார்ப்பனன் என்ன செய்தான்? தனது கையிலே இஸ்மாயில் என்று பச்சைக் குத்திக்கொண்டான்; முசுலிம் களின் மார்க்கப்படியான சுன்னத்தும் செய்துகொண்டிருந்தான் என்றும் கூறுகிறார்கள்!
காந்தியாரைச் சுட்டுக் கொன்றவன் ஒரு முசுலிம் என்று பழி சுமத்தி, பிரச்சாரம் செய்து, இந்துக்களை முசுலிம்கள்மீது மோதவிடும் சூழ்ச்சிதானே இது?
காந்தியாரைக் கொன்றது முசுலிம் அல்ல - ஒரு இந்துப் பார்ப் பனன் என்று தந்தை பெரியார் போன்ற தலைவர்கள் வெளிச் சத்துக்குக் கொண்டு வந்தனர். அந்த உண்மை வெளிவருவதற்கு முன்பாக சில ஊர்களில் இந்துக்களால் முசுலிம்கள் தாக்கவும் பட்டனர்.
சதுமுகையில்...
2. தமிழ்நாட்டில் சத்தியமங்கலத்தையடுத்த சதுமுகை என்ற ஊரில் விநாயகன் சிலைக்கு செருப்பு மாலை போடப்பட்டு இருந்தது. இன்னொரு சாமி சிலை பீடத்திலிருந்து கீழே தள்ளப்பட்டு இருந்தது.
ஊரில் பெரும்பரபரப்பு ஏற்பட்டது. காவல்துறையினரின் புத்திசாலித்தன மான விசாரணையில் சிக்கியவர்கள் யார் என்றால், அவ்வூர் இந்து முன்ன ணியைச் சேர்ந்த மஞ்சுநாதன் (வயது 17) மற்றும் செல்வக்குமார் (வயது 23) ஆகியோர்.
தாங்கள்தான் அவ்வாறு செய்ததாக இந்து முன்னணியைச் சேர்ந்த இரு வரும் ஒப்புக்கொண்டனர். திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்கள்மீது பழியைப் போடுவதுதான் அவர் களின் நோக்கம் என்ற குட்டும் உடைபட்டது. (தி இந்து, 18.2.2002).
தென்காசியில்...
3. அதேபோல, திருநெல்வேலி மாவட்டம் தென்காசியில் ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் நடந்த குண்டுவெடிப்பும் இந்த வகையைச் சேர்ந்ததுதான். 2006 ஜனவரி 24 இல் இது நடந்தது.
இந்து - முசுலிம் மதக் கலவரத்தைத் தூண்டவேண்டும் என்ற பின்னணியில் இந்து முன்னணியினர் இருந்தனர்.
தென்காசி நகர இந்து முன்னணியின் தலைவர் குமார்பாண் டியன் என்பவர், முன்விரோதம் காரணமாகக் கொலை செய்யப் பட்டார். இதில் மூன்று முசுலிம்கள் கைது செய்யப்பட்டனர். மதக் கலவரம் ஏற்பட்டு, முசுலிம்களின் கடைகளும், வீடுகளும் அடித்து நொறுக்கப்பட்டன.
நோக்கம் மதக் கலவரத்தைத் தூண்டுவதே!
இதன் பின்னணியில் தென்காசியில் இந்து முன்னணி அலுவல கத்தில் குண்டுவெடித்தது. இது தொடர்பாக 7 பேர் கைது செய்யப் பட்டனர். அத்தனைப் பேரும் இந்து முன்னணியைச் சேர்ந்தவர்கள்.
குமார்பாண்டியன் கொலை செய்யப்பட்டபோது பெரிய அளவில் மதக்கலவரம் ஏற்படாததால், இந்தக் காரியத்தைச் செய்து அதன் மூலம் பெரிய அளவு கலவரத்தைத் தூண்ட வேண்டும் என்பதுதான் தங்கள் நோக்கம் என்று கைது செய்யப்பட்டவர்கள் வாக்குமூலம் கொடுத்தனர்.
கடையநல்லூரைச் சேர்ந்த சிவா என்ற சிவானந்தம் தமிழக இந்து முன்னணியின் மாநிலப் பொதுச்செயலாளர் ஆவார். இவர் கேரளாவில் கல்குவாரியில் வேலை செய்தவர். பாறைகளை உடைக்கப் பயன்படும் அமோனியம் நைட்ரேட்டை வெடிகுண்டு தயா ரிப்பதற்காக இவர் கொடுத்திருக்கிறார் என்பதும் கண்டுபிடிக்கப் பட்டது.
கான்பூரில் நடந்தது என்ன?
4. உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் 2008 பிப்ரவரி 24 இல் நடந்த ஒரு சம்பவத்தின் மூலம் சங் பரிவார்க் கும்பல் வெடிகுண்டு தயார் செய்யும் தொழிற்சாலையையே நடத்திவரும் சங்கதி வெளியில் வந்தது.
பஜ்ரங் தள் அமைப்பைச் சேர்ந்த ராஜீவ் மிஸ்ரா மற்றும் பூபீந்தர் சிங் ஆகியோர் வெடிகுண்டுகளைத் தயாரிக்கும்பொழுது எதிர்பாராதவிதமாக அவை வெடித்து உடல் சிதறிப் போனார்கள்.
மிகப்பெரிய தொடர் குண்டுவெடிப்பு வன்முறைக்கு அவர்கள் திட்டம் தீட்டியிருந்தது தெரிய வந்தது. கான்பூர் காவல்துறை அய்.ஜி. எஸ்.என். சிங் செய்தியாளர்களிடம் இதுபற்றி விளக்கினார்.
வெடிகுண்டு தயாரிப்புக்குத் தேவையான ஏராளமான பொருள் களும் கைப்பற்றப்பட்டன.
இராணுவத்தில் பயன்படுத்தப்படக் கூடிய குண்டுகளுக்கு ஒப்பானவை அவை!
வரைபடங்களும், நாள்குறிப்பு, தாக்கப்படவேண்டிய முசுலிம் களுக்குச் சொந்தமான முக்கிய இடங்கள்பற்றிய விவரங்கள் எல்லாம் கிடைத்தன.
மகாராட்டிரத்தில்...
5. மகாராட்டிரத்தில் நந்தித் எனும் இடத்தில் இதேபோல, குண்டு களைத் தயார் செய்து கொண்டிருந்தபோது, வெடித்துச் சிதறியதால் பஜ்ரங்தள் தீவிரவாதிகளான நரேஷ்ராஜ் மற்றும் ஹிமான் ஷீ பான்சே ஆகிய இருவரும் கொல்லப்பட்டனர் (4.5.2006).
பெண் சாமியார் சிக்கினார்
6. மகாராட்டிர மாநிலம் மலேகானில் சிமி அலுவலகம் சக்தி வாய்ந்த குண்டுகளால் தகர்க்கப்பட்டது (29.9.2008). ஆறு இசு லாமியத் தோழர்கள் பலியானார்கள்; 90 பேர் படுகாயமடைந்தனர்.
மோட்டார் சைக்கிளில் மர்ம மனிதர்கள் வெடிகுண்டுகளை எடுத்துவந்து வெடிக்கச் செய்திருப்பது புலன் விசாரணையில் தெரிய வந்தது. டைமர் கருவி பொருத்தப்பட்டு இருந்த அந்த வெடிகுண்டு ஆர்.டி.எக்ஸ் மற்றும் அமோனியம் நைட்ரேட் கலவையால் தயாரிக்கப்பட்டு இருந்தது.
புலன் விசாரணையில் பெண் சாமியார் பிரக்யாசிங் பாரதி தாக்கூர் (வயது 38) என்பவர் இதன் பின்னணியில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு கைதும் செய்யப்பட்டுவிட்டார். வந்தே மாதரம் என்ற அமைப்பைத் தொடங்கிய இந்தப் பெண் சாமியாருக்கு உச்சநீதிமன்றத்தால் நீரோ மன்னன் என்று வருணிக்கப்பட்ட முதலமைச்சராகிய நரேந்திரமோடி, குஜராத் மாநில அரசின் உதவித் தொகையெல்லாம் கூட கிடைத்து வருகிறதாம்!
படிக்கும் காலத்தில் ஆர்.எஸ்.எஸின் மாணவர்ப் பிரிவான ஏபிவிபியில் (ஹக்ஷஏஞ) தீவிரமாகப் பங்கெடுத்துக் கொண்டிருக்கிறார். துர்காவாகினி, ஜாக்ரான் மஞ்ச் இவைகளில் தீவிர உறுப்பினராக இருந்திருக்கிறார் இந்தப் பெண் சாமியார்!
பா.ஜ.க. தலைவர் ராஜ்நாத்சிங், மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவராஜ்சிங் சவுகான் ஆகியோரிடம் நெருக்கமானவர் இந்தப் பெண் சாமியார். மேடைகளில் இந்து வெறித்தன நெருப்பைக் கக்கும் பேச்சாளர் இவர். இவரோடு மேலும் மூவர் இந்த வெடிகுண்டு வழக்கில் சம்பந்தப்பட்டுள்ளனர். மூவரும் இராணுவத்தில் பணி யாற்றிய அதிகாரிகள். இருவர் கைது செய்யப்பட்டு விட்டனர்; இராணுவப் பணியில் இருக்கும் இன்னொருவரைக் கைது செய்ய இராணுவத் துறையிடமிருந்து அனுமதிக்காகக் காத்திருக்கின் றனர்.
குல்கர்னி, உபாத்யா ஆகிய முன்னாள் இராணுவ அதிகாரிகள் ஆவார்கள். நாசிக் அருகே இராணுவப் பயிற்சி மய்யம் ஒன்றினை நடத்தி வருகின்றனர். வெடிகுண்டுகளைத் தயார் செய்வது எப்படி? அவற்றைக் கையாளுவது எப்படி என்கிற பயிற்சிகளையெல்லாம் சங் பரிவார்க் கும்பலுக்கு இவர்கள் கற்றுத் தந்துள்ளனர்.
பா.ஜ.க. மத்தியில் ஆட்சியில் இருந்தபோது இராணுவத்திலும் ஏராளமான ஆர்.எஸ்.எஸ். வகையறாக்களை நுழைத்தனர். விமானப் படைத் தளபதி விஷ்ணு பகவத் இதனை அப்பொழுதே வெளிப்படுத்தியதுண்டு.
பா.ஜ.க. செயற்குழுக் கூட்டத்தில் உயர்மட்ட இராணுவ அதிகாரிகள், தளபதிகள் கலந்துகொண்டு விளக்கம் அளித்த தையும் இந்த நேரத்தில் நினைவுபடுத்திக் கொள்ளவேண்டும்.
96 ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகள் பி.ஜே.பி.யில் சேர்க் கப்பட்டது ஏன் என்பது இப்பொழுது மகாராட்டிரத்தில் - வெடி குண்டு வழக்கில் இராணுவ அதிகாரிகள் மூவர் சம்பந்தப்பட்டதி லிருந்து தெரிந்துகொள்ளலாமே!
மகாராட்டிர மாநிலம் மலேகானில் குண்டுவெடித்த அதே நாளில் குஜராத் மாநிலம் மாடேகாவிலும் குண்டுவெடித்தது. இரண்டும் ஒரே ரகத்தைச் சேர்ந்தவை என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இதற்குமுன் நடைபெற்ற அனைத்துக் குண்டுவெடிப்பு களின் பின்னணியில் சங் பரிவார்க் கும்பல் பெரும்பாலும் இருந்திருக்க வாய்ப்பு உண்டு என்று கருதப்படுகிறது.
இராணுவ அதிகாரிகளின் மேற்பார்வையில் பயிற்சி நிலையங் களையும், தொழிற்சாலைகளையும் வைத்து திட்டமிட்ட வகையில் இந்தக் கும்பல் செயல்பட்டதைப் பார்க்கும்பொழுது இந்த அபாயகரமானவர்கள் நாடு முழுவதும் வெடிகுண்டு வேலையை அரங்கேற்றுபவர்கள் என்பது எளிதில் விளங்கிவிடும்.
சூரத் நகரில் வெடிகுண்டு சேதத்தைப் பார்வையிட நரேந்திர மோடி வந்தபோது, பாதையில் மரங்களில் வைக்கப்பட்டிருந்த 18 வெடிகுண்டுகளைக் காவல்துறையினர் கண்டுபிடித்து எடுத் தனர். வைத்ததே அவர்களாகவே இருக்கக்கூடும் என்கிற அய்யம் நியாயமானதே!
சங் பரிவார்க் கும்பல் இப்படியெல்லாம் வன்முறைக்குத் தேவையான பொருள்களை உற்பத்தி செய்ய தொழிற்சாலை களையெல்லாம் வைத்துச் செயல்படும் பயங்கரமான தகவல்கள் அம்பலத்திற்கு வந்து கொண்டேயிருக்கின்றன. வழக்கம்போல் எங்கள்மீது அபாண்ட பழி என்று கூறி கூக்குரல் போடுகிறார்கள் சங் பரிவார் மற்றும் பா.ஜ.க.வினர்.
இந்த யோக்கியதையில் உள்ள ஒரு கூட்டம் சிறுபான்மை யினர்மீது வன்முறை முத்திரை குத்தி அவர்களுக்கு எதிரான வெறுப்பினைத் தூண்டும் ஒரு வேலையில் திட்டமிட்ட முறையில் இறங்கியுள்ளது என்பதுதான் உண்மை. இதுபோலவே ஒரிசாவிலும் கிறித்தவர்கள்மீது பழி - படுகொலைகள்.
நடவடிக்கைகள் தேவை
மத்திய - மாநில அரசுகள் இந்த அமைப்புகளைப் பயங்கரவாத அமைப்பு என்ற பட்டியிலில் வைத்து சட்ட ரீதியான கடும் நடவடிக்கைகளை உடனடியாகச் செய்யாவிட்டால், நாடு பெரும் விலையைக் கொடுக்கவேண்டியிருக்கும் என்று எச்சரிக்கிறோம்.
சென்னை
28.10.200 தலைவர், திராவிடர் கழகம்.
குறிப்பு: இவ்வறிக்கை துண்டறிக்கையாகவும் கிடைக்கும்; வாங்கி ஊர்தோறும் பரப்புங்கள்.
http://files.periyar.org.in/viduthalai/20081028/news01.html
5
October 28, 2008 10:48
அன்புச் சகோதரர் Thaz,
தங்களது பின்னூட்டத் தகவலுக்கு மிக்க நன்றி!
தாங்கள் அனுப்பிய தகவலின் பின்னணியோடு பல புதிய செய்திகளைத் தாங்கி ஆக்கமொன்று இன்ஷா அல்லாஹ் இன்று அல்லது நாளை வெளியிடப் படும்.
தங்கள் தொடர் ஆதரவுக்கு மிகமிக நன்றி!
6
October 28, 2008 10:54
இந்தச் சூழலில், நடுநிலை பெயரை நிலைநாட்டிய சில ஊடகங்களிலும் கூட அப்பாவி முஸ்லிம்கள் மீது பொய்யாக புனையப்பட்ட, சங்கபரிவாரத்தின் இத்தகைய திட்டமிட்ட குண்டுவெடிப்புகளுக்கு எதிராக உறுதியான எதிர்ப்புகளோ கண்டனங்களோ ஒரு சம்பிரதாயத்திற்குக் கூட வரவில்லை. முஸ்லிம் சமுதாயத்திற்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள ஊடகப்போருக்கு எதிராக உண்மையை உண்மையாக, சத்தியத்தை நெஞ்சுயர்த்தி எடுத்துரைக்கும் ஒரு நடுநிலை முன்மாதிரி ஊடகம் முஸ்லிம் சமுதாயத்திலிருந்து வெளிவருவதற்கான அவசியத்தை உணர்த்தி நிற்கின்றது!
குமரி மாவட்டத்தில் இரு பெரும் கேபிள் நெட்வெர்க் முஸ்லீம்களால் நடத்தப்பட்டும் மேலும் பல கிறிஸ்தவ சேனல்கள் இருந்தும் வியாபார நோக்கில் ஒரு கிறிஸ்தவரால் இஸ்லாமிய சேனல் என்ற பெயரில் ஒரு சேனல் ஆரம்பிக்கப்பட்டு 24 மணி நேரம் இயங்கிக்கொண்டிருக்கிறது.(பார்க்க சமரசம் நேர்காணல்
[TAFAREG] கிறிஸ்துவ சமூகத்தை சேர்ந்த ”மோகனன்” என்பவர்
)உங்களுக்கு சேனல் நடத்த என்ன ஆலோசனை வேண்டும் உதவ தாயாராக தொடர்பு எண் 93642 46100 கொடுத்துள்ளர்). கேரளாவில் சந்திரிகா தினசரியை அடுத்ததாக இப்போ மாஸ்ரோ என்ற பெயரில் பாரிஸ் ஆபுபக்கர் புதிய தினசரியை ஆரம்பித்து வெளிவந்துகொண்டிருக்கிறது.தமிழ் நாட்டில் ஒரு தினசரி கூட முஸ்லிம்களுக்கு இல்லை. தொழில் அதிபர்களே என்ன தொழில் ஆரம்பிக்கலாம் என்று எண்ணுபவர்களே ஆரம்பியுங்கள் ஐயா.
7
October 28, 2008 14:13
சகோதரர் ரபீக் அவர்களே,
தங்களது கருத்தும் தகவலும் மிகச்சரியே. இஸ்லாமிய டிவி சேனல் ஆரம்பித்த அந்த கிறிஸ்துவ சகோதரர், நாளடைவில் இஸ்லத்தின் மீது பற்று கொண்டு இஸ்லாமைத் தழுவி தனது பெயரை காலித் என்று மாற்றியதாகப் படித்த ஞாபகம்.
8
October 28, 2008 20:31
நடு நிலையான ஓர் ஊடகத்தின் அவசியம் மனித நேயம் பாராட்டும் மனிதர்களால் எப்போது நினைவு கூரப் படுகிறதென்றால் மனித உருவில் உலா வரும் மனித மிருகங்கள் செய்யும் அடாவடித் தனங்கள் அதிகமாகிக் கொண்டு போகும் போதுதான்.
நெல் வயலில் களையெடுக்க வேண்டிய காலத்தில் களையெடுக்க வேண்டும். ஓரிரண்டு களைகள்தானே என்று கவனயீனமாகும் விவசாயி அறுவடையில் கோட்டைவிட்டு விசமருந்தும் நிலைக்குத் தள்ளப் படுவான். இப்படியான மனித மிருகங்களை VIP களாக உலவ விடுவதன் மூலம் அரசுகளும் தமது நாட்டையே குட்டிச்சுவராக்குகின்றன. பெரும்பான்மையின் வாக்குகளை மனதில் கொண்டு நிழலுக்குப் பயந்து வீட்டைத் தீக்கிரையாக்குகின்றன.
நாட்டு நலனை மனதில் கொண்டு இயங்கும் தலைவர்கள் இல்லாத ஒரு நாடாக இந்தியா ஆகி விட்டதையே இந்நிகழ்வுகள் காட்டுகின்றன.
புத்தி ஜீவிகளின் பங்களிப்பு மிக மிகக் குறைவாகி வருவதே இதற்குக் காரணம். அவர்களெல்லாம் ஐந்து நட்சத்திர ஓட்டல்களில் அவர்களின் தகுதிசார் கூட்டத்தில் மட்டும் பேசிவிட்டுப் போகிறார்கள். தமது கடமை முடிந்து விட்டது என்ற திருப்தி அவர்களுக்கு! சாதாரண மக்களிடம் அவர்களின் கருத்துககள் சென்றடைவதில்லை.
அரசுகளிடம் அவர்களின் கருத்துக்களுக்கு எந்த மதிப்பும் இல்லை. ஏன்? வாக்குச் சீட்டுகள் அவர்களிடம் இல்லை. கிராமம் கிராமமாகச் சென்று அவர் தம் கருத்துக்களைச் சொல்வதற்கு ஏற்பாடுகளும் இல்லை.
ஏன்? எந்தக் கட்சியாக இருந்தாலும் சரி அந்தக் கட்சி தன் கட்சிக்கு ஆள் சேர்க்கும் கட்சியாகத்தான் இருக்கிறது.
ஆளுக்காள் பேரணிகள் நடத்துகிறார்கள். நோக்கமென்ன? பார்க்கிறோமே! நான் செய்தேன்; என் கட்சி செய்தது! என் இயக்கம் செய்தது!
இதற்காகத்தான் பேரணிகள்! அதனால்தான் எந்த அரசும் இவற்றைக் கண்டு கொள்வதே இல்லை. இருந்தாலும் இவர்கள் பேரணிகளை விடுகிறார்களா?
விட்டால் வாக்குப் போட்டவர்கள் கேட்பார்களே, என்ன செய்கிறீர்கள்?
அப்படிக் கேட்காமலிருக்க இப்படி ஒரு டப்பாங் கூத்து!
போகிற போக்கைப் பார்த்தால் இந்தியாவை மிகச் சீக்கிரத்தில் இந்த மனித மிருகள் உண்டு ஏப்பம் விடப் போகின்றன!
9
October 29, 2008 17:47
கருத்து எழுதுக :
|