சத்தியமார்க்கம்.காம்

ஊடகங்களில் தொடரும் தனிமனிதத் தாக்குதல்கள் print Email
Common Articles - Common Articles
செவ்வாய், 19 ஆகஸ்டு 2008 15:04

ஒரு நாட்டின் தலைவிதியையே மாற்றத் தக்கவை ஊடகங்கள் என்றால் மிகையில்லை. ஆனால், அவையே தகாதவர்களின் கரங்களில் சிக்கும்போது விளைவு படுமோசமடைவதையும் மறுப்பதற்கில்லை.

 

ஒரு சமுதாயம் முன்னேற்றம் பெறுவதற்கும் தலைநிமிர்ந்து நடப்பதற்கும் அச்சமுதாயத்தின் இளவல்கள்தாம் பெரும் பங்காற்றக் கூடியவர்கள். அவர்களைச் சரியான பாதையில் வழிநடத்தினால் சாதித்துக் காட்டுவார்கள். அவர்களை நெறிப் படுத்தத் தவறினால் தங்களுக்கும் தம் தலைவர்களுக்கும் தம் சமுதாயத்திற்கும் அவர்களால் விளையும் தீங்குகள், அவமானங்கள் எல்லை மீறிவிடும்.

 

காட்டுப்பாடற்ற இணைய வசதியான மின்னஞ்சல் என்ற ஊடகம் இயக்க வெறிபிடித்த இளைஞர்களிடம் சிக்கியபோது தம்மை மறந்தனர்; தரம் தாழ்ந்தனர். ஓரிரு ஆண்டுகளுக்கு முன்னர் சில முஸ்லிம் இயக்கங்களின் இளவல்களின் கரங்களில் மின்னஞ்சல் வசதி சிக்கிப் படாத பாடுபட்டது. மாற்றி மாற்றித் தூற்றிக் கொள்வற்கும் அவற்றைப் பெறுபவரது அனுமதியின்றிப் பலருக்கும் அனுப்பி வைப்பதுமாக ஃபித்னாக்களைப் பரப்புவதில் இயக்க இளவல்கள் படு உற்சாகத்துடன் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

 

அப்போது நமக்குக் "குரங்கு கையில் பூமாலை" பழமொழிதான் நினைவுக்கு வந்தது.

 

நிலைமை மாறுதலடைந்தது; அதாவது மிக மோசமடைந்தது! இலவச வலைப்பூக்கள் இணையத்தில் கிடைக்கத் தொடங்கியதிலிருந்து இளவல்கள் ஆளுக்கொன்றாய் எடுத்துக் கொண்டு, ஷைத்தானின் குணங்களை ஆவணப் படுத்தத் தொடங்கினர்.

 

இஸ்லாமியப் பிரச்சாரத்துக்கும் கொள்கை விளக்கங்களுக்கும் அருமையாகப் பயன் படத்தக்க வகையில் அல்லாஹ் வழங்கியுள்ள அற்புதமான ஊடகங்களான மின்னஞ்சலையும் வலைப்பூக்களையும் "முகத்திரையைக் கிழிப்போம்", "தோலுரித்துக் காட்டுவோம்", "வேஷத்தைக் கலைப்போம்" போன்ற கொள்கை(?) முழக்கங்களோடு கட்டற்ற இணைய வசதியை எதிர்க் கருத்துக் கொண்டவர்களை நோக்கி இளவல்கள் திருப்பினர். தாக்குதல்-எதிர்த் தாக்குதல் ஆகிய பாவங்களில் சிந்தனையைச் செலவு செய்து, தங்களது பொன்னான நேரத்தை வீணடிப்பதில் வீறு கொண்டு எழுந்தனர்.

 

"இளவல்களின் ஆர்வக் கோளாறுக்குத் தலைவர்கள் என்ன செய்வார்கள்?" என்று நாம் நல்லெண்ணம் கொண்டிருந்ததைக் கடந்த 17ஆம் தேதி (17.08.2008) இரவு விண் தொலைக்காட்சி நிகழ்ச்சி உடைத்துப் போட்டது.

 

ரமளான் பிறை, ஈதுப் பெருநாள் ஆகியவற்றுள் மாற்றுக் கருத்துகள் கொண்டிருக்கும் ஓர் அமைப்பின் நிர்வாகிகளை, "இறையச்சம் அற்றவர்கள்", "கருத்தில் தெளிவில்லாதவர்கள்", "தனித்துக் காட்டுவதற்காகத் தவறுகளைச் செய்யச் கூடியவர்கள்" என்றெல்லாம் அவைப் பண்பாடுகளை மறந்து நிகழ்ச்சி நடத்தியவர்கள் திட்டித் தீர்த்தது மட்டுமின்றி, எதிர்க் கருத்துக் கொண்டவர்களின் உள்ளங்களுக்குள் ஊடுருவிப் பார்த்ததுபோல் "உள்நோக்கம் தெரிகிறது" என்றார்கள்.

 

உதிரத்தை வியர்வையாக்கிக் காசு சம்பாதித்து அனுப்புபவனிடம் ஓயாமல் நிதி வேண்டிக் கோரிக்கை வைப்பவர்கள், அந்தக் காசு எதற்காகச் செலவிடப் படவேண்டும் என்பதைச் சற்றே சிந்தித்துப் பார்த்து, தங்களது கருத்துகளைச் சான்றுகளின் அடிப்படையில் வலியுறுத்துவதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். மாற்றுக் கருத்துகளில் வலுவில்லை என்றால், அதையும் - அதாவது கருத்தை மட்டும் - விமர்சனம் செய்ய வேண்டும்.

 

அதை விடுத்துத் தனிநபர் தாக்குதலைத் தொலைக்காட்சியில் நடத்தித் தங்கள் இளவல்களுக்குப் போலி உற்சாகம் அளிக்க வேண்டாம் என்பது சம்பந்தப் பட்ட இயக்கத் தலைவர்களுக்கு நாம் முன்வைக்கும் வேண்டுகோளாகும்.

 

அமைப்புகளுக்கு நிதியுதவி செய்பவர்கள் தஃவாவுக்கென்று தருகிறார்கள்; ஒருவரை ஒருவர் தரம் தாழ்ந்து தாக்கிக் கொள்வதற்கல்ல என்பதை அனைத்துத் தரப்பினரும் உணர வேண்டும் என்பதை இங்கு அழுத்தமாகப் பதிவு செய்கிறோம். தலைவர்கள் பண்பாட்டைச் சிறிது கைவிட்டால், இளவல்கள் முழுவதுமாகக் கைவிடுவர் என்பதையும் நினைவுறுத்துகிறோம்.

 

நல்லதை எடுத்துச் சொல்வது மட்டுமே நமது கடமை; எடுப்பதும் விடுப்பதும் அவரவர் உரிமை.

 

அனைத்து நிகழ்வுகளையும் தீர்ப்புக்காகக் கணக்கெடுத்து வைப்பது அல்லாஹ்வின் தனியுரிமை. இதை உணர்ந்து செயல் பட்டால் அனைவர்க்கும் பெருமை!

 

"நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வுக்காக நீதியை நிலைநாட்டுவதற்கு நீங்கள் சாட்சியாளர்களாக இருங்கள். ஒரு கூட்டத்தார் மீது உங்களுக்கிருக்கும் வெறுப்பு, நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்டக் கூடாது. நீதி செய்வீர்; அதுவே இறையச்சத்திற்கு நெருக்கமானது. அல்லாஹ்வை அஞ்சி வாழுங்கள்! நீங்கள் செய்பவை அனைத்தையும் நிச்சயமாக அல்லாஹ் நன்கு அறிந்தவனாவான்" (அல்-குர் ஆன் 005:008).

 

கருத்துக்கள் (7)add comment

எழுதியவர்: மு முஹம்மத் , August 20, 2008 08:54

அஸ்ஸலாமு அலைக்கும் அன்பு சகோதரர்களே ஆக்கத்தில் சுட்டப்பட்ட 17.08.08 அன்றைய வின் டீவி நிகழ்சியை நானும் கண்டேன் உங்கள் முறையான சுட்டிக்காட்டலுக்கு நன்றிகள். சம்பந்தப்பட்டவர்களும்,அனைவரும் இதை கவனத்தில் கொள்ள வேண்டியது அவர்களுக்கும் முஸ்லிம் சமுதாயத்திற்க்கும் நல்லது. பயனுள்ள மார்க்க விஷயங்களை அறிந்துகொள்ளும் நோக்கத்தில் எந்த இயக்கத்தையும் சாராமல் அல்லது வெறுக்காமல் அதன் மூலம் வெளிப்படும் கருத்துக்களை அணுக வேண்டும் எனும் அடிப்படையில் வின் டீவியில் ஒளிபரப்பப்படும் இதர இஸ்லாமிய நிகழ்ச்சிகளையும் தொடர்ந்து பார்த்து வருகிறேன். அதில் மேற்கண்ட நிகழ்ச்சியில் வைக்கப்பட்ட வாதங்கள் வைக்கப்பட்ட விதம் தங்கள் ஆக்கத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது அதே நேரம் நிகழ்ச்சியை பார்க்கும் போது வைக்கப்பட்ட வாதங்களுக்கும் மனதில் எழுந்த எதிர் கருத்துக்கள் சில, கவனம் வேண்டி கீழே. வாதம் 1) குர் ஆன் வசனம் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ அவர் நோன்பு நோற்க வேண்டும் என்று கூறுகிறது இதிலிருந்து அடைபவர்கள் என்றும் அடையாதவர்கள் என்றும் இரு சாரார் பற்றி குறிப்பிடப்படுகிறது. இதற்கு மாற்று கருத்துடையவர்கள் பல முறை இதில் வரும் வார்த்தை ஷஹித என்பதற்கு அடைந்தார்கள் என்று பொருள் செய்வதை விட பெறுவார்கள் (கேள்விபடுதல், சாட்சியாக இருத்தல் செய்தி மூலம் அறிய பெறுவது) என்பது பொருந்தும் இவ்வாரு இந்த வார்த்தைக்கு பொருள் செய்வது குர் ஆன் ஹதீஸில் கையாளப்பட்டுள்ளது என்று கூறியுள்ளனர். இரண்டாவதாக இதை அடைவார்கள் என்று கருத்து கொண்டாலும் அந்த அடைவார்கள் என்பதற்கு செய்தி மூலம் அடைவது உட்பட்ட பொருளும் உள்ளதால் செய்திமூலமோ பார்ப்பதின் மூலமோ அடைந்தவர்கள் அறிந்தவர்கள் நோன்பு நோற்க வேண்டும், அல்லாதவர் நோற்க வேண்டாம் என்றும் இதை புரிந்து கொள்ள இயலும். ஆக இந்த வசனம் அவர்கள் கூறும் கருத்தைபோன்றே அவர்களுக்கு மாற்று கருத்தையும் கூறும் விதமாக உள்ளது. இன்னும் சில ஆங்கில மொழிப்பெயர்ப்புகள் அந்த 2:185 வசனத் தொடர் பிரயாணிகள் நோயாளிகள் தவிற என்று தொடருவதால் (பிரயாணத்திலும் நோயாளிகளுமாக அல்லாத நிலையில்) ஊரில் உள்ளவர்கள் என்றும் மொழி பெயர்த்துள்ளனர். வாதம் 2) இரண்டாவது வைக்கப்பட்ட ஹதீஸ் அதாவது பிறை பார்த்து நோன்பு வையுங்கள் பிறை பார்த்து நோன்பு விடுங்கள் மேகம் இருந்தால் ஷஃபானை முப்பதாக கணக்கிடுங்கள். இந்த ஹதீஸின் அடிப்படையில் பிறை பார்த்து தான நோன்பு வைக்கவோ விடப்படவோ வேண்டும் என்றும் 'கணிக்க தடைவுள்ளது' என்றும் ஆணித்தரமாக கருத்து கூறப்பட்டது. பிறை பார்ப்பது இங்கு ஏவப்பட்டாலும், ஒவ்வொரு முஸ்லிமும் பிறையை பார்த்துவிட்டு பின்னர் தான் நோன்பு வைக்க வேண்டும் பிறையை பார்க்கவில்லையென்றால் நோன்பு வைக்கக் கூடாது என்று இது கூறுகிறது என்று யாரும் கூற மாட்டார்கள். ஆக பிறையை பார்க்க வேண்டியதை பிறையின் செய்தியை அறிவிப்பை அறிய வழியில்லாத ஒரு சூழ்நிலையில், இடத்தில் முஸ்லிம்கள் இருக்கும் போது, எக்காலத்திற்கும் பொருந்தும் இஸ்லாம் வகுத்துள்ள ஒரு வழிமுறையே இது என்று விளங்கினால் இதுவும் முரணாகாது என்பதையும் இங்கு கவனிக்க வேண்டும். அ ல்லாஹ் மிக அறிந்தவன். வாதம் 3) எங்கு பிறை கண்டாலும் அதை கருத்தில் கொள்ள வேண்டும் என்பவர்கள் அந்த கருத்தில் உறுதியாக இருந்தால் உலகில் எங்கு தெரிகிறதோ அப்போதே அவர்கள் (அதாவது சில பகுதிகளில் இரவாக இருப்பதால்) நோன்பு நோற்குமாரு வரும் இரவில் நோன்பு நோற்க இயலாது இவர்களும் அவ்வாரு செய்வதில்லை ஆகையால் இவர்கள் தெளிவில்லாமல் ஏமாற்றுகிறார்கள் என்று விளங்கலாம். இங்கு இவர்கள் தமது கருத்தை வைக்க அடுத்தவர்கள் கருத்தை நிராகரிக்க நையாண்டி செய்யும் விதமாக இது உள்ளது மேலும் நோன்பு என்பது ஸஹர் நேரம் முடிந்தது முதல் சூரிய அஸ்தமனம் வரை என்ற வகுக்கப்பட்ட அடிப்படையை மறந்து மாற்றமாக பேசுவதாக உள்ளது. மாதத்தின் துவக்கம் என்பது வேறு நாளின் துவக்கம் என்பது வேறு என்பதை கவனிக்க தவறுகின்றனர். மேலும் சந்திரன் மாத்த்தின் துவக்கத்தையும் சூரியன் நாளின் துவக்கத்தையும் அறிவிக்கும் அல்லாஹ்வின் ஏற்பாடு என்பதையும் மறக்கின்றதாகும். வாதம் 4) சூரியனுடைய நேரத்தை கணித்து தொழுகையை நிறைவேற்றுவது என்பது வேறு ஆனால் சந்திரனை அவ்வாரு கணக்கிட இயலாது ஏனென்றால் சந்திரன் உதயம் நேரம் மாறு படும் அது சில நெரங்களில் பகல் பத்து மணிக்கு உதிக்கும் ஆகையால் அந்த நேரம் முதல் அந்நாளை கணக்கிட்டால் பகல் 10 மணி என்றும் இரவு பத்து மணியென்றும் நாளை துவக்க வேண்டி வரும் இதுவும் இயலாது, மேலும் இவர்கள் கருத்துப்படி ஸவூதியில் ஒரு தொழுகையின் நேரம் இருப்பதால் உலகெல்லாம் அந்த தொழுகையின் நேரம் என்று கூறி தொழ இயலாது சில பகுதிகளில் அது நள்ளிரவாகவும் பகலாகவும் என்று மாறி மாறி இருக்கும் போது இது சாத்தியப்படாது. மக்ரிப் நேரம் ஆகி நோன்பு திறக்கும் நேரத்தில் உலகெல்லாம் நோன்பு திறக்க சொன்னால் சில பகுதியுல் பகலாக இருக்கும் பகலில் நோன்பை திறக்க வேண்டி வரும்….. இதுவும் முக்கிய அடிப்படையான நோன்பின் நேரத்தை ஸஹ்ர் முடிவு சூரிய அஸ்தமம் போன்றவை அந்த அந்த இடத்தின் சூரிய ஓட்டப்படி அறியும் நேரப்படி செயல் படுத்தப் பட வேண்டும் என்று புரிந்தால் சிறிதும் முரண்படாது. அதே போல் சந்திரன் உதயம் அஸ்தமத்தையும் துல்லியமாக உலகின் எல்லாப்பகுதிகளுக்கும் முன் கூட்டியே அறிய அறிவிக்கவும் இயலும் அறிவிக்கவும் படுகிறது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். 5) மக்காவில் தொழும் போது கஃபாவை சுற்றிலும் தொழுகிறோம் அவ்வாரு நம்மூரில் தொழ முடியாது நாம் அவ்வாரு தான் அனைவரும் தொழ வேண்டும் என்று சொல்ல மாட்டோம். இதுவும் கஃபாவை நோக்கி தொழ வேண்டும் என்ற அடிப்படைக்கு மாற்றமாக அதை மறந்து பேசுவதாக உள்ளது. ஆக தொழுகையின் நேரம், துருவ பிரதேசத்தில் ஆறு மாதம் பகல் ஆறு மாதம் இரவு எனும் விஷயத்தில் ஆய்வு செய்து கணித்து தொழுகையில் நேரத்தையும் நோன்புன் நேரத்தையும் முடிவு செய்ய வேண்டும் என்பதை தஜ்ஜால் வருகையின் போது ஏற்படவுள்ள ஆறு மாத பகல் விஷயத்தை வைத்து முடிவு செய்ததைப் போல் இவ்விஷயத்தையும் முறையாக, தனது கருத்தை சரிகாண்பதையோ எதிர்கருத்தை மறுப்பதையோ விடுத்து நடு நிலையாக அனைவரும் ஆய்வு செய்து இது போன்ற முக்கியமான அமல் சம்பந்தமான கருத்தில் சுமூகமான முறையில் முஸ்லிம்களிடையே ஒருமித்த கருத்து ஏற்பட அல்லாஹ் அருள் புரிவானாக என்று பிராத்திக்கும். மு முஹம்மத்.



எழுதியவர்: Rizwan Ahmad , August 20, 2008 09:13

//உதிரத்தை வியர்வையாக்கிக் காசு சம்பாதித்து அனுப்புபவனிடம் ஓயாமல் நிதி வேண்டிக் கோரிக்கை வைப்பவர்கள், அந்தக் காசு எதற்காகச் செலவிடப் படவேண்டும் என்பதைச் சற்றே சிந்தித்துப் பார்த்து, தங்களது கருத்துகளைச் சான்றுகளின் அடிப்படையில் வலியுறுத்துவதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். மாற்றுக் கருத்துகளில் வலுவில்லை என்றால், அதையும் - அதாவது கருத்தை மட்டும் - விமர்சனம் செய்ய வேண்டும்.// உங்கள் செய்தி என் ஆழ்மனதின் வலியை படிப்பதாக உணர்ந்தேன். நாட்டில் இருந்து தொலைதூரம் வந்து வியர்வையே வாழ்க்கையெனக் கழிக்கும் எங்களுக்கு இங்கு நிலவிய பாகுபாடுகள் அற்ற சகோதரத்துவம் ஒரு பெரும் ஆறுதலாக இருந்து வந்தது. ஒவ்வொரு வேளையிலும் வளைகுடாவிற்குக் கையேந்த வரும் எந்த ஒரு இயக்கமும், இங்கே வசிக்கும் தமிழ் மக்களிடையே இதுவரை இல்லாத பிரிவினையை நஞ்சு ஊசி போட்டு ஏற்றிச் சென்றுள்ளதைக் கண்கூடாகப் பார்க்க முடிகிறது. இதில் இரு இயக்கங்களும் விதி விலக்கில்லை. வெறுத்துப் போயிருக்கும் பல சகோதர உள்ளங்கள் விழிக்க ஆரம்பித்து உள்ளன. இனியொரு முறை யாசகம் கேட்க இங்கே வரும்போது அடுத்த சகோதரனை முதுகிற்குப் பின்னால் புறம் பேசினால் 'செ...பைக் கழட்டி அடிப்போம்' என்கிற அளவுக்கு மனநிலை கொந்தளித்துப் போயுள்ளோம்.



எழுதியவர்: முஹம்மது ராபி , August 20, 2008 14:52

காலத்திற்கேற்ற அவசிய நினைவுறுத்தல். இனியேனும் தங்களின் நாவைப் பேணிக் கொள்ள இந்த வறட்டு ஈகோ இயக்கத்தவர்கள் முயலட்டும். இல்லையேல்.... சகோதரர் ரிஸ்வான் அஹ்மத் கூறியது போன்று செருப்பும் பேச ஆரம்பிக்கலாம். நன்றி சத்தியமார்க்கம்.காமினருக்கு. முஹம்மது ராபி கத்தர்



எழுதியவர்: Imran , August 24, 2008 14:22

Assalamualykum Is the one referred to the Win TV program is PJ and the one accused-made fun of by him is SK? Ok, whatever be SKs view-stand in moon sighting is it necessary to make fun-abuse-accuse SK (not only SK, whoever is having a difference of opinion with PJ) in a public tv programme? In Quran (Surah Bakarah) Almighty ALLAH when HE asks HIS Prophet Moosa to go and preach THAWHEED to HIS biggest enemy Pharooh HE advises HIS Prophet to be polite with Pharooh and use good words that will comfort him. Even non-muslims like Karunanidhi knows how to behave in public. When MGR died and in the subsequent MLA election of TN, Rajiv Gandhi as PM worked hard to bring back congress to power (Erattai Elai symbol was blocked and no more single AIADMK with that symbol and two groups one under jayalalitha and other under janaki contested elections, so for Congress the main rival was DMK), he went on to the extent of saying in one public meeting 'why Karunanidhi is wearing black glasses? You know why, ONLY TO SEE LADIES'. This created a big splash among journalists and many approached Karunanidhi for his comments. but what Karunanidhi replied? He simply said 'If I reply to this comment, my stature also will go down to Rajiv. I simply ignore this'. But see how our socalled Samudhaya amaypus-iyakkams-jamaths and their leaders (really) are behaving in public, declaring that they follow Quran and Sunnah? shame on us. The only solution for this is we Gulf working TN Muslims should dump these socalled Samudhaya amaypus-iyakkams-jamaths and their leaders and should not send even one penny to them. If this stand continues for 1 full year, all these socalled Samudhaya amaypus-iyakkams-jamaths and their leaders will vanish, InshaALLAH.



எழுதியவர்: ஸயீத் , August 24, 2008 14:55

தங்கள் கொள்கையில் உறுதியும் தெளிவும் இல்லாதவர்களை நம்பி பின் சென்று வழி கெட்டோர் எத்தனை பேர். இவர்கள் அனைவரும் தெளிவு பெற வல்லோனை வேண்டுவோமாக.



எழுதியவர்: அபூ பெளஸீமா - இலங்கை , August 28, 2008 04:55

வின் தொலைக்காட்சி நிகழ்ச்சியை பார்த்தவனல்ல நான். குறிப்பிட்ட நிகழ்ச்சி எந்த இயக்கத்தினது என்பது தெளிவாகத் தெரியப்படுத்தி விமர்சனங்களை வைப்பது மிகவும் சிறந்ததாகும். நிகழ்ச்சியைப் பார்க்காதவர்கள் குழம்பிப் போக மாட்டார்கள். அல்லாஹ் நமக்கு பூரணப்படுத்தப்பட்ட மார்க்கமாக அனுப்பிய இஸ்லாத்தின் அம்சங்களை எடுத்து வைப்பவர்களை அடையாளம் காட்டி விமர்சனம் செய்வது புறம் பேசுவதாக அமையாது. இனி விடயத்திற்கு வருவோம். தாம் விளங்கிய எந்த ஒரு விடயத்தையும் அந்த அடிப்படையிலேதான் மற்றவர்களும் விளங்கிக் கொள்ள வேண்டுமென்று யார் விரும்புகிறார்களோ அவர்கள் விடுக்கும் அறைகூவல் என்ன தெரியுமா? அவர்கள் அவர்களைக் கடவுள்களாக ஏற்றுக் கொள்ளச் சொல்கிறார்கள், கிறிஸ்தவர்கள் எப்படி தம் மதகுருமார்களையும் சன்னியாசிகளையும் கடவுள்களாக ஏற்றுக் கொண்டார்களொ அப்படி இவர்களும் தம்மை அம்மதகுருமார்களின் அந்தஸ்திற்கு ஆளாக்கப்பார்க்கிறார்களோ! அல்லாஹ்வுக்குப் பயந்து கொள்ளும்படி அவர்களுக்கு எச்சரிப்பது தான் முஸ்லிம் என்ற முறையில் நமது கடமை. தவறை - பிழையை உணரும் மனப்பக்குவத்தை அவர்களுக்குக் கொடுக்க அல்லாஹ்வைப் பிரார்த்திப்போமாக! வழிகெட்ட ஷைத்தானின் ஊசலாட்டங்களிலிருந்து நம்மனைவரையும் அல்லாஹ் பாதுகாப்பானாக! வஸ்ஸலாம் அபூ பெளஸீமா



எழுதியவர்: இம்ரான் ஹுஸைன் , September 01, 2008 07:48

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்). இங்கு நீங்கள் குறிப்பிட்டுள்ள விண் டி.வி. நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டவர் ததஜ தலைவர் பி.ஜெ. என்பது தெளிவு. ஏனெனில், அதன் உரிமையாளராக சில ஆண்டுகள் அவர் இருந்துள்ளார். அவர் வசை பாடியது S.K என்பதும் தெளிவு. ஏனெனில், கொள்கை வேறுபாடு காரணமாக பி.ஜெ என்றுமே எஸ்.கே.வுடன் கை குலுக்கவோ, சந்தித்து முகம் கொடுத்து பேசவோ மாட்டார். (பாசிச ஜெயலலிதாவுடனும், வை.கோ. வுடனும் கொள்கை ஒன்றானதால் (?) இரண்டற கலந்து விட்டது வேறு விஷயம்.) சரி நாம் விஷயத்திற்கு வருவோம்.   பி.ஜெ என்றுமே எஸ்.கே. யின் கருத்துக்கு ஒத்து போக மாட்டார். எனவே, பிறை விஷயத்தில் எப்படி ஒருமித்த கருத்து ஏற்பட முடியும்? தன் நிலையை விளக்க வந்த பி.ஜெ., அதை மட்டுமே சொல்ல வேண்டும். மேலும், பிறருடைய நிலை தவறு எனில் அந்த தவறை மட்டுமே சுட்டிக் காட்ட வேண்டும். தனிமனித தாக்குதலில் ஈடுபடுவது அவருடைய (பி.ஜெ.) காழ்ப்புணர்ச்சியையே காட்டுகிறது. சரி மாற்றுக் கருத்து கொண்டவரை பலபேர் (முஸ்லிம் மற்றும் முஸ்லிமல்லாதோர்) பார்க்கும் பொது தொலைக்காட்சி நிகழ்ச்சி வாயிலாக திட்டி தீர்க்க வேண்டுமா? சிந்திப்பீர்.   ஏக இறைவன் அல்லாஹ் தன் திருமறையில் கூறுகின்றான். தன் நபி மூஸா (அலை) அவர்களை தன்னுடைய பகிரங்க எதிரி பிர்-அவ்னிடம் சென்று உபதேசிக்க கட்டளையிடுகிறான். அப்பொழுது தன் நபிக்கு அறிவுறுத்துகிறான். 'பிர்அவ்னிடம் சென்று அழகிய வார்த்தைகளின் மூலம் உபதேசிக்கவும். ஏனெனில், அதன் மூலம் அவன் திருந்தலாம்.' குர்ஆன்-ஹதீஸ் எங்கள் மூச்சு என உரத்து முழங்கும் இந்த தௌஹீதுவாதிகிளின் (?)தலைவருடைய நிலையை பாருங்கள், எவ்வாறு குர்ஆன் ஹதீஸுக்கு மாற்றமாக உள்ளது. முஸ்லிமல்லாதோர் கூட பொது வாழ்க்கையில் - மேடையில் நாகரீகத்தை பேணுகின்றனர். உதாரணத்துக்கு, எம்.ஜி.ஆர். மறைந்த பின் தமிழக சட்டசபை தேர்தல் வருகிறது. அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி அ.தி.மு.க. கோஷ்டி சண்டையை வளர்த்து விட்டு அதனையே காரணமாக காட்டி இரட்டை இலை சின்னைத்தை முடக்கிவிட்டார். காங்கிரஸை எப்படியேனும் மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமர்த்த துடித்த ராஜீவ் காந்திக்கு தடையாக நிற்பது கருணாநிதியும், தி.மு.க.வும். அவர்களை எதிர்த்து கடும் பிரச்சாரம் மேற்கொண்ட ராஜீவ் காந்தி ஒரு கட்டத்தில் மேடையில் நிதானம் தவறி கருணாநிதி எதற்கு கருப்பு கண்ணாடி அணிந்துள்ளார் தெரியுமா? எனக் கூட்டத்தைப் பார்த்து கேட்டுவிட்டு, ஒரு நிமிட மௌனத்திற்கு பின் பெண்கள் பகுதியை நோக்கி தன் கையை சுட்டிக் காட்டி உங்களை பார்க்கத்தான் எனக் கூறினார்.   அன்றைய அரசியல் அரங்கில் இது பெரும் புயலை கிளப்பியது. கருணாநிதியை நிருபர்கள் மொய்த்து கேள்விக் கணை தொடுத்த பொழுது, கருணாநிதி கூறிய பதில் என்ன தெரியுமா? 'இக்கேள்விக்கு நான் பதில் கூறி, ராஜீவ் காந்தியின் நிலைக்கு என்னை தாழ்த்திக் கொள்ள விரும்பவில்லை' என்பது தான்.   பாருங்கள் முஸ்லிமல்லாதோரிடம் காணப்படும் கண்ணியம்-பண்பாடு, தௌஹீது (?) வாதிகளின் தலைவர்களிடம் இல்லை.   இந்த விஷயம் மட்டுமல்ல பல விஷயங்களில் இந்த தௌஹீது (?) வாதிகளின் தலைவர்கள், முஸ்லிம்களின் தலைவர்கள் என்போரிடம் காணப்படும் குறைபாடு இதுவே! இடஒதுக்கீடு விஷயத்தை எடுத்துக் கொள்வோம். பி.ஜெ. யும் ஜவாஹிருல்லாவும் ஒன்றாக இருந்த (தமுமுக) காலத்தில், இடஒதுக்கீட்டு வேண்டி இணைந்து போராட்டங்கள் நடத்தினர்.   பின்பு, லட்சங்கள் - சொத்து - பதவி என்ற உயர்ந்தபின், கொள்கை(!) காரணமாக பிரிந்த இவர்கள் இடஒதுக்கீடு வேண்டி தமுமுக - ஜவாஹிருல்லா தலைநகர் டெல்லியிலும், ததஜ பி.ஜெ. கும்பகோணத்திலும் போராட்டம் நடத்தினர். சிறிது காலம் சென்று இடஒதுக்கீடு கிடைத்து விட்டது. உடன் என்ன அறிக்கை விட்டார்கள், இந்த கொள்கை தங்கங்கள் தெரியுமா? ஜவாஹிருல்லா 'இடஒதுக்கீடு தமுமுக வால் தான் கிடைத்தது. எங்களின் போராட்டத்தின் வெற்றி இது'. பி.ஜெ. பதிலுக்கு இடஒதுக்கீடு 'ததஜ வால் தான் கிடைத்தது. எங்களின் குடந்தையை குலுக்கிய போராட்டத்தின் வெற்றி இது'.   இவர்கள் இருவரும் எவ்வளவு தரம் தாழ்ந்து போய் விட்டனர் பாருங்கள்! இவர்கள் உண்மையான முஸ்லிம்களாக இருந்தால், 'இறைவனின் மாபெரும் கிருபையால் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு கிடைத்துள்ளது. இதற்கு பாடுபட்ட அனைத்து சகோதரர்களுக்கும் இறைவன் அருள் புரியட்டும். எம்முடைய தமுமுக மட்டுமின்றி ததஜ வினரும் போராட்டங்கள் நடத்தினர். ஒன்றாக இருந்த போது சேர்ந்து போராடினோம. பிரிந்து சென்ற பின்பும் அக்கோரிக்கையை வலியுறுத்தி தனித்தனியாக போராடினோம். இறைவருனருளால் வெற்றி கிடைத்தது. இவ்வெற்றியில் ததஜவிற்கும் பங்கு உள்ளது' என எம்.ஹெச். ஜெ.வும், ''ததஜ மட்டுமின்றி தமுமுகவிற்கும் இதில் பங்கு உள்ளது' என பி.ஜெ. யும் அறிக்கை விட்டிருந்தால் அங்கு தான் இயக்கத்தை விஞ்சி இஸ்லாம் இவர்களிடம் மேலோங்கி உள்ளது என எம்மை போன்றோர் அகமகிழ்ந்து இவர்கள் இருவரும் செய்யும் சில நற்காரியங்களுக்கு துணை நிற்கலாம். அந்தோ இவர்கள் விஷயத்தில் இஸ்லாம் தோற்றது. இயக்கம் வென்றது. ஆம். ''இயக்கங்களை ஆரம்பித்து இஸ்லாத்தை வளர்த்தனர் நம் முன்னோர். ஆனால், இவர்களோ இஸ்லாத்தை வைத்து இயக்கங்களை வளர்க்கின்றனர்'   எனவே தான் இந்த தனிநபர் இயக்கங்களில் ஈடுபபட்டு தம் உடல்-பொருள்-ஆவி அனைத்தையும் வீணடிக்கும் இளைஞர்களுக்கு ஒரு வேண்டுகோள். தயை கூர்ந்து இந்த தனிநபர் இயக்கங்களை (தமுமுக, ததஜ, ஜாக், விடியல், ஜ.இ, லீக்) விட்டு வெளியேறி இஸ்லாம் என்ற இயக்கத்தில் நுழைந்து உறுதியாக நிலைத்து இருங்கள். வளைகுடா வாழ் முஸ்லிம் சகோதரர்களே, இந்த இயக்கங்களை - அமைப்புகளை - ஜமாத்துகளை விட்டு ஒதுக்குங்கள். உங்களுடைய பொருளாதார உதவியை இவர்களுக்கு தராது ஒரு முழு வருடம் பொறுத்து பாருங்கள். இவர்கள் எங்கே ஓடுகிறார்கள் என்று! ஒன்று உருத்தெரியாது மறைந்து விடுவர். அல்லது உண்மையான இஸ்லாமிய ஒற்றுமைக்கு வழி கோளுவர். முஸ்லிம்களே சிந்திப்பீர்களா? இன்ஷா அல்லாஹ் இறைவன் நாடினால் நாளை நடக்கும்.   இம்ரான் ஹுஸைன்



கருத்து எழுதுக :
தமிழ்
ஆங்கிலம்
சிறிதாக்குக | பெரிதாக்குக
 

busy

 
Add Site to FavoritesAdd Page to FavoritesShare This PageEmail This Page
Back to Top
You are here  : முகப்பு