அச்சமற்றவர்கள்! (நபிமொழி)

“அல்லாஹ்வுடைய அடியார்களில் சிலர் நபிமார்களும் அல்லர், தியாகிகளும் அல்லர். மறுமை நாளில் இறைவனிடம் அவர்களுக்குள்ள பதவிகளைக் கண்டு நபிமார்களும், தியாகிகளும் பொறாமை கொள்வர்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினர். (அப்பொழுது) “அவர்கள் யார்? என்று எங்களுக்கு அறிவியுங்கள்” என்று தோழர்கள் கேட்டனர்.

(அதற்கு) நபி(ஸல்) அவர்கள், “அல்லாஹ்வின் பொருத்தத்திற்காகவே தங்களிடையே நட்புக்கொள்வர். அவர்களுக்கிடையில் உறவின் முறையும் இருக்காது; பணத்திற்காகவும் அவர்கள் நட்புக் கொள்ள மாட்டார்கள்; இறைவன்மீது ஆணையாக அவர்களின் முகம் ஒளிர்ந்து கொண்டிருக்கும். அவர்கள் இறை வழியில் செல்வார்கள்; மக்கள் அச்சமுறும் பொழுதும், துக்கிக்கும் பொழுதும் அவர்கள் அச்சமுறவும் மாட்டார்கள். துக்கிக்கவும் மாட்டார்கள்”  (என்று கூறி விட்டு), “(முஃமின்களே!) அறிந்து கொள்ளுங்கள்; நிச்சயமாக அல்லாஹ்வின் நேசர்களுக்கு எவ்வித அச்சமும் இல்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்” என்ற (திருக்குர்ஆன்) 10:62 வது வசனத்தை ஓதினர்”.
 
அறிவிப்பாளர்: உமர்(ரலி),  நூல்: அபூதாவூத்.
இதை வாசித்தீர்களா? :   பாலைவனச் சோலை!