முகப்பு

இஸ்லாம்

செய்திகள்

தகவல்

கட்டுரைகள்

சேவைகள்

தொடர்பு கொள்க!

முகப்பு

“எதிர்கால இந்தியாவே
ஏங்கிநிற்கும் மானுடமே
என்ன வேண்டும் உனக்கு
சொல்ல வேண்டும் எனக்கு”

சொல்றேனுங்கய்யா:

பள்ளிக்கூடச் சீருடையும்
பை நிறையப் புத்தகங்களுமாய்
கண்டு வரும் கனவொன்று
எங்களைக்
கடந்து போகுதய்யா

நடப்புல எங்களுக்கோ
கந்தலான ஓருடையும்
குப்பைக்கான கோணிப்பையும்

“படிக்காமல் நீயும்
பிடிக்காத பணி செய்யும்
பரிதாபம் ஏன்?”

ஆத்தாப் பொழப்பிலதான்
சோத்த நாங்க பாத்திருந்தோம்
அப்பனுக்கு உழைப்பில்லை
போதையில்லாப் பொழுதுமில்லை

எலும்புருக்கி சீக்கு வந்து ஆத்தா
எழுந்திருக்க ஏலவில்லை
ஆத்தாவின் தங்கையையும்
அப்பன் சேத்துக்கிட்டார்

எத்தனைதான் பொறுக்கினாலும்
எடை மட்டும் கூடாத
கோணிக்குள்ளே ஏத்தி வச்ச
குடும்ப பாரம் குறையவில்லை!

- சபீர்

செய்தி: கோடை விடுமுறைக்குப் பின் தமிழ்நாடு முழுவதும் இன்று (10-06-2013) பள்ளிக் கூடங்கள் திறக்கப்பட்டன. நேற்றே மாணவ–மாணவிகளுக்கு விலை இல்லா பாடப் புத்தகங்கள், புத்தகப் பை, இலவச சீருடை ஆகியவை வழங்கப்பட்டன.
Comments   
riyaz
0 #1 riyaz 2013-06-11 11:16
சலாம் சிறுசுகளின் மண உளைச்சல் எதிர்பார்ப்புகள ் ஏக்கங்கள் என்று நிறைவேறும் ...நிறைவேறனும் இன்ஷா அல்லாஹ்- சிறப்பான கவி
Quote | Report to administrator
அபுல்கலாம்
0 #2 அபுல்கலாம் 2013-06-11 21:26
பிஞ்சுகளின் கோபம்
நெஞ்சுக்குள்ளே தீபம்
கண்ணீரைச் சொட்டியது
உன் பேனா
கண்ணீர்தான் அதன்
உண்”மை” என்பேனா!
உருக்கத்திற்கும்
உனக்கும் இருக்கும்
நெருக்கத்தில் தமியேன்
நெக்குருகிப் போகிறேன்!!

புத்தக மூட்டையின்
புலம்பலில் தமியேனின்
வித்தகத்தை இச்சாக்கு மூட்டை
விஞ்சி விட்டது; உண்மையில்
நெஞ்சைத் தொட்டது.....!!
Quote | Report to administrator
JAFAR
0 #3 JAFAR 2013-06-11 22:18
சபீர் காக்காவின் சமூக அக்கறையின் பிரதிபலிப்பு...

இதற்கு தொடர்புடைய மற்றொரு கவிதை நான் படித்ததில் பிடித்தது..!

குழந்தைத் தொழில் ஒழித்துவிட்டால்
குடிக்கும் கூழுக்கவன் என்ன செய்வான் ?!

அடுத்தவேளை சோற்றுக்கு
அவன் வீட்டில் அடுப்பெரிய
ஆவன செய்தால் தானே
அவன் தொழிலை நிறுத்துவான்

அந்தவேளை உடனே வரவேண்டும்
அரசாணையும் நிறைவேறவேண்டும் !
அவன் வாழ்வும் வளம்பெறவேண்டும் !!
அதற்கு யார் மனசு வைக்கவேண்டும் ?
Quote | Report to administrator
அதிரைக்காரன்
0 #4 அதிரைக்காரன் 2013-06-12 02:16
வீட்டுப்பாடம் செய்யாவிட்டால்
டீச்சரம்மா அடிப்பாங்கன்னு
குமரேசன் சொன்னபோது
குபுக்கென்று சிரித்தான் கோபி
வீதிதான் அவன் வீடென்பதை
அறியாத டீச்சரின்
அறியாமையை
நினைத்து. :)
Quote | Report to administrator
Ebrahim Ansari
0 #5 Ebrahim Ansari 2013-06-12 18:09
குழந்தைத் தொழிலாளர்கள் அதிகம் உள்ள நாடு எனும் பெயரிலிருந்து ஆப்பிரிக்கா கீழே இறங்க முதலிடத்தில் இந்தியா அவமானகரமாக அமர்ந்திருப்பதா கச் சொல்கிறது யூனிசெஃப் அறிக்கை.

//எத்தனைதான் பொறுக்கினாலும்
எடை மட்டும் கூடாத
கோணிக்குள்ளே ஏத்தி வச்ச
குடும்ப பாரம் குறையவில்லை!//

பிரச்னையின் தாக்கத்தை பிளந்து காட்டும் வரிகள்.
Quote | Report to administrator
இப்னு ஹம்துன்
+1 #6 இப்னு ஹம்துன் 2013-06-12 22:44
சபீர் காக்காவின் கவிதை அருமை.

ஏழு ஆண்டுகளுக்கு முன்பு (முத்தமிழ் குழுமத்தில்) நானெழுதிய கவிதையை நினைவூட்டியது:

வயலுக்கு வெளியேயும் நாற்றுகள்
இப்னு ஹம்துன்


வயதுகளைத் தவிர்த்து
ஒற்றுமையில்லை நமக்குள்.
பள்ளிக்கூடம் உங்கள் உலகம்.
உலகம் எங்கள் பள்ளிக்கூடம்.

பெயர்த்தெடுக்கப்பட்ட
தண்டவாளத் துண்டுகளில்
ஒலிக்கும்
பாடசாலை மணியோசை.
மொழிபெயர்த்தால்...
'நாம் இணைகளில்லை'.

உங்கள் முதுகுகளில்
பாடப்புத்தகங்களின் சுமை.
எங்கள் முதுகுகளில்
யாருடைய வாழ்க்கையோ?!

எங்கள் 'கறுப்பு மை' பூசி
பொலிவடைகின்றன
எஜமானர் காலணிகள்.. .

கைத்தட்டல்கள்
உங்களுக்கு வெற்றிக்காக!
எங்களுக்கோ பெயருக்காக!!.

எங்கோ வெளிச்சம் வேண்டி
எரிக்கப்படும்
இளைய மரக்குச்சிகளில்
கருகிப்போகும் கந்தகம் போல்
கல்வி ஆசை.


வாங்கிச்சேர்க்க ும் வயதில்
விற்றுக்கொண்டிருக்கிறோம்.
ஆசைகளை

உயரே பறக்கின்றன
உங்கள் பலூன்கள்
உள்ளே
எங்கள் மூச்சுக்காற்று!

'நாளைக்குச் சோறிடுவாய்'
நம்பிக்கையின் தைரியம் செழிக்க
உங்கள் படிப்பு

"இன்றைக்குச் சோறிட வா"
இயலாமையின் கூக்குரல் துரத்த..
எங்கள் உழைப்பு.

உங்களுக்கு மட்டும்
வாய்த்துவிட்ட உற்சாகத்தில்
'கல்விதான் கண்' என்கிறீர்கள்
தவறியும்
எங்களைப் 'பார்த்து'விடாத படி!
Quote | Report to administrator
அபுல்கலாம்
0 #7 அபுல்கலாம் 2013-06-12 22:55
சாக்குப் பையின் ‘கனம்”
சரக்குகளை விட
வாழ்க்கைச் சோக மனம்
வாரிக் கொட்டியதால்...
Quote | Report to administrator
sabeer ahmed
0 #8 sabeer ahmed 2013-06-13 20:26
//வாங்கிச்சேர்க ்க ும் வயதில்
விற்றுக்கொண்டிருக்கிறோம்.
ஆசைகளை//

ஏங்கிநிற்கும் பிஞ்சுகளின் இயலாமையை இதைவிடத் துல்லியமாகச் சொல்லிவிட முடியாது, தம்பி இப்னு ஹம்தூன்.

இந்த அவலங்களைக் குறித்து அதிகமதிகம் எழுதப்பட வேண்டும்.

மேலும், வாசித்துக் கருத்திட்ட அனைத்து சகோதரர்களுக்காக வும் நன்றியும் துஆவும்.
Quote | Report to administrator
Add comment
இது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.Question / Answer section for Non-Muslims: http://www.satyamargam.com/islam/others.html


சமீப கருத்துக்கள்

செய்திமடல் (Newsletter)

 

சத்தியமார்க்கம்.காம் தள ஆக்கங்களை மின் அஞ்சலில் பெற்றுக் கொள்ள, உங்கள் மின் அஞ்சல் முகவரியை இட்டு உறுதி செய்யவும். நன்றி!