படைத்தவன் உதவி !

குத்தவன் உதவி
வந்திட்டபோது – வழிவகை
விதித்தவன் வெற்றி
வாய்த்திட்டபோது

அலையலையாய் யாவரும்
அணி திரண்டுவந்து
ஆண்டவன் மார்க்கத்தில்
அவர் இணையும்போது

ஆண்டவன் புகழை
அதிகம் துதித்திடுவீர் – அவன்றன்
அளப்பரிய அருளை
அழுது கேட்டிடுவீர்;

மன்னிப்பை ஏற்குமந்த
மாண்புடையோன் முன்னிலையில் – எல்லாப்
பாவமும் பிழைகளும்
பொறுத்தருள வேண்டிடுவீர்!

(மூலம்: அல் குர்ஆன் / சூரா: 110 அந் நஸ்ரு)

-சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்

இதை வாசித்தீர்களா? :   ஈகைப்பெருநாள் வாழ்த்து...!
முந்தைய ஆக்கம்தோட்டா சுட்ட கிவி பழம்!
அடுத்த ஆக்கம்மறுதலித்தோர் !
சபீர்
கவிஞர் சபீர் (அஹ்மது அபூ ஷாரூக்) எளிய வரிகளில் ஆழமான பொருளைத் தரும் கவிதைகளைப் புனைவதில் வல்லவர். யதார்த்த மயக்கம் எனும் தலைப்பில் கவிதைத் தொகுப்பு நூலை வெளியிட்டுள்ளார். அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த கவிஞர் சபீர், ஷார்ஜாவின் பிரபல பணிமனை நிறுவனத்தின் மேலாளர் ஆவார்,