103. காலம்!

ன்னும் விடிந்திராத

இருள்சூழ்ந்த நேரமல்ல;

இனிதாய் உதித்துவிட்ட

இளங்காலைப் பொழுதுமல்ல;

 

உலகே விழித்துக்கொள்ள

உருவான வேளையல்ல;

உச்சியில் செங்கதிரின்

உஷ்ணமான காலமல்ல;

 

கதிரவன் மங்கிச்சாயு மந்தக்

காலத்தின் மீ தாணை…

மனிதன் என்றென்றும்

இழப்பில்தான் இருக்கின்றான் !

 

மறை வானவற்றையும்

மறை ஆணையிட்டவையும்

இறை தந்த மார்க்கத்தையும்

நிறை மனதாய் ஏற்று…

 

சோதனைகளைச் சகித்து

வேதனைகளைப் பொறுத்து

நல்லறங்கள் செய்து

அல்லாதவற்றைத் தவிர்த்து…

 

சத்தியத்தை நேர்மையாகவும்

பொறுமையைக் கனிவாகவும்

தமக்கிடையே உபதேசிக்கும்

நல்லோர்களைத் தவிர !

oOo

-சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்

(மூலம்: அல் குர் ஆன் /சூரா 103:அல்-அஸ்ரு)

இதை வாசித்தீர்களா? :   நீதியைத்தேடி..!
முந்தைய ஆக்கம்சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 20
அடுத்த ஆக்கம்102. பேராசை
சபீர்
கவிஞர் சபீர் (அஹ்மது அபூ ஷாரூக்) எளிய வரிகளில் ஆழமான பொருளைத் தரும் கவிதைகளைப் புனைவதில் வல்லவர். யதார்த்த மயக்கம் எனும் தலைப்பில் கவிதைத் தொகுப்பு நூலை வெளியிட்டுள்ளார். அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த கவிஞர் சபீர், ஷார்ஜாவின் பிரபல பணிமனை நிறுவனத்தின் மேலாளர் ஆவார்,