பாலஸ்தீனும் மேற்கத்திய ஊடகங்களும் – 3

Share this:

ப்பட்டமாக யூத ஆதரவு நிலைபாட்டினை எடுக்கும் அமெரிக்காவிலிருந்து வெளிவரும் ஊடகங்கள் பாலஸ்தீன் விவகாரத்தில் செய்தியினை தரும் முறையை தெரிந்து கொள்வதற்கு, பாலஸ்தீன் விவகாரத்தில் நடுநிலையைப் பேணும் இந்தியாவிலிருந்து வெளிவரும், செய்திகளின் உண்மைதன்மைகளில் நடுநிலையைப் பேணுவதாகப் பரவலாகக் கருதப்படும் “ஹிந்து” நாளிதழ்  பாலஸ்தீன் விவகாரத்தைச் செய்தியாக வடிக்கும் முறையினைக் காண்போம். அக்டோபர் 4, 2000 அன்றைய “ஹிந்து” நாளிதழில் மத்திய ஆசியாவின் குழப்பங்களைக் குறித்து, ஸ்ரீதர் கிருஷ்ணசாமி அவர்கள் ஒரு கட்டுரையை வடித்துள்ளார்.

அதில் “பில்கிளிண்டனும், மிஸ் ஆல்பிரைட்டும் பங்கு பெற்றிருந்த ஹைகேபினட்டின் உறுப்பினர்கள் துரிதகதியில் மத்திய கிழக்கில் அமைதியை நிலைநிறுத்துவதற்காக மிகுந்த சிரமம் ஏற்பதாக” எழுதுகிறார். (The hindu Daily – 4th Oct 2000, article written by Sreedhar krishnaswami).

இதில் மிக விரிவாக மத்திய கிழக்கின் பிரச்சினைகளைக் குறித்து ஆராயும் அவர் மத்திய கிழக்கில் குழப்பங்களை நிலை நிறுத்துவதில் அமெரிக்காவுக்குள்ள பங்கினைக் குறித்து ஒரு வரி கூட குறிப்பிடவில்லை. இது தான் பிரச்சினைகளை நடுநிலையாக அணுகும் “ஹிந்து”வின் நம்பகத்தன்மையின் இலட்சணம். ஏன் இந்த நிலைபாடு? இங்கும் அதே தான் பிரச்சினை. அப்பட்டமான யூத ஆதரவு நிலைபாடு. அதனால் அமெரிக்காவினை விமர்சிக்க தயக்கம்.

“ஹிந்து”வின் இஸ்ரேலிய ஆதரவு நிலைபாட்டினை அறிய அதில் வந்த மற்றொரு செய்தியினைக் குறித்துக் காண்போம். பாலஸ்தீன் மேற்குக்கரையில் நடந்த ஒரு சம்பவத்தைக் குறித்து திரு கேசவமேனோன் அவர்கள் 8 அக்டோபர் 2000 அன்று “ஹிந்து”வில் ஒரு விரிவான அறிக்கையினை சமர்ப்பிக்கிறார். நெப்லஸ் நகரத்தில் யூதர்களுக்குச் சொந்தமான ஜோசப் கல்லறையை பாலஸ்தீனியர்கள் தீவைத்தது தான் சம்பவம்.

அசோசியேட்டட் பிரஸ் வெளியிட்ட அறிக்கையில் புகைப்படத்துடன் மூன்று பத்திகளில் செய்தி காணப்படுகிறது. எந்த சமுதாயமானாலும் மற்றவர்களின் வழிபாட்டுத் தலங்களையோ அல்லது மத அடையாள நிறுவனங்களையோ ஆக்ரமிப்பது அநியாயம் என்பதில் மாற்றுக்கருத்துக்குச் சிறிதும் இடமில்லை. ஆனால் இங்கு ஆராய வரும் விஷயம் அதுவல்ல. இச்சம்பவம் நடந்ததன் மறுநாள் டிபரியாஸ் நகரத்தில் முஸ்லிம் களின் ஒரு பள்ளிவாசலை யூதர்கள் அழித்த சம்பவம் நடந்தது.

ஜோசப் கல்லறையினைக் குறித்த செய்தியை தாக்கல் செய்த அதே கேசவமேனோன் இச்சம்பவத்தினையும் குறித்து “ஹிந்து”வில் எழுதினார் (The Hindu Daily 9 Oct 2000). ஆனால் செய்தி ஒரே ஒரு வரியில் மட்டும். புகைப்படம் இல்லாமல் என்று தனியே கூற வேண்டிய அவசியமில்லை. பாலஸ்தீனியர்களின் ஜோசப் கல்லறை ஆக்ரமிப்பினை புகைபடத்துடன் மூன்று பத்திகளில் ரிப்போர்ட் செய்யலாம் எனில் இஸ்ரேலின் ஆக்ரமிப்பினை புகைப்படம் இல்லாமல்  ஒற்றை வரியில் ஒதுக்குவது எதனால்?. செய்தியின் ஒரு பக்க சார்புநிலை இதனோடு முடியவில்லை. முஸ்லிம் பள்ளிவாசல் ஆக்ரமிப்பினை  ஒற்றை வரியில் வேறொரு ரிப்போர்ட்டின் பாகமாக கூறிச் சென்றுள்ளார்.

அதாவது இதனை ஒரு செய்தியாகவே கொடுக்கவில்லை என்பது ஒருபுறமிருக்க, இதனைக் குறிப்பிடும் போது பாலஸ்தீனியர்கள் ஜோசப் கல்லறையை ஆக்ரமித்ததைப் பற்றி இதற்கு முந்தைய வரிகளில் மீண்டும் இரண்டு வரிகளில் கூறுகிறார். முதல் மற்றும் இரண்டாம் செய்திகளின் மூலம் பாலஸ்தீனியர்களை அக்கிரமக்காரர்களாகச் சித்தரிப்பது தான் இதன் நோக்கம். அது மட்டுமல்லாமல் தொடர்ந்து அதில் இஸ்ரேலியர்களின் பள்ளி ஆக்ரமிப்பினை வெறும் தற்காப்பாகக் காட்டுவதற்கும் முற்படுகிறார்.

த்தனைக்கும் பாலஸ்தீனியர்கள் ஒரு போதும் யூத வழிபாட்டுத் தலங்களை ஆக்ரமிப்பதற்கு முன்னேற்பாடு எதுவும் தொடங்கவில்லை. 1969-ல் அல் அக்ஸா பள்ளிவாசலை தீவைத்துக் கொண்டு ஒரு இஸ்ரேலியர் தான் முதன் முதலாக மத ஆலயங்களை அழிப்பதற்கு தொடக்கம் குறித்தார். அதற்கும் முன்பு அரசாங்க ரீதியாகவே இஸ்ரேல் அதற்கு முன்மாதிரி காட்டியிருக்கிறது. 1948 –ல் நடந்த இஸ்ரேல் – எகிப்து யுத்தத்தைத் தொடர்ந்து ஜெரூசலம் இரண்டாகப் பிரிக்கப்பட்டது.

பிறகு 100க்கு மேல் பள்ளிவாசல்களையும், கிராமங்களையும் இஸ்ரேலிய இராணுவம் இடித்துத் தரைமட்டமாக்கியது. இச்சம்பவத்தை ஜெருசலேமில் துணை மேயராக இருந்த மெரோண் பென்வினிஸ்ற்றி “Sacred Landscape” என்ற புத்தகத்தில்  வெளிப்படுத்தியுள்ளார் .(Meron Benvenisti, Sacred Landscape: The Burried History of the Holyland since 1948 – University of California Press -2000.) பாலஸ்தீனியர்களை குற்றவாளிகளாகவும் அக்கிரமக்காரர்களாகவும் காட்டுவதற்கு ஆர்வமாகத் துரிதப்படும் கேஸவமேனோன் இச்சம்பவங்கள் ஒன்றையும் பரிசோதிக்காமல் இஸ்ரேலிகளை நிரபராதிகள் போல் எழுதி இருப்பது விசித்திரமாக இருந்தது.

இச்சம்பவத்திற்குப்பின் அடுத்த நாள்(அக் 10) ஜாஃபா நகரத்தில் இரண்டு பள்ளிவாசல்களை இஸ்ரேலியர் ஆக்ரமித்தனர். பெய்த் ஹனீபாவில் ஒரு லாட்டின் பாட்ரியார்க் கிறிஸ்தவ தேவாலயத்தையும் இவர்கள் நாசமாக்குவதற்கு முயற்சி செய்தனர். இந்த மூன்று சம்பவங்களும் “ஹிந்து” நிருபருக்கு ஒரு செய்தியாக கூட தோன்றவில்லை. இந்த சம்பவங்களைக் குறித்து அறியாததால் இச்செய்தியை பதிவு செய்யவில்லை என்று கூறி தப்பிக்க முடியாது. எதுவானாலும் பாலஸ்தீனியர்களின் மண்ணை ஆக்ரமித்துக் கொண்டு, மூன்று பள்ளிவாசல்களும் ஒரு தேவாலயமும் நாசமாக்குவதற்கு முயற்சித்த இஸ்ரேலியரை சமாதானவாதிகளாகவும் தங்களது இருப்பிடத்தை இழந்து அதற்காகப் போராடும் பாலஸ்தீனியர்களை அக்கிரமக்காரர்களாகவும் காண்பிப்பதற்கு பாலஸ்தீனியர்களின் ஒரு கல்லறை ஆக்ரமிப்பே “ஹிந்து”வின் கேசவமேனோனுக்கு போதுமானதாக இருந்திருக்கிறது.

ஜோசப் கல்லறை ஆக்ரமிப்பு சம்பவத்தை காரணம் கூறி ஜெருசலேமில் அல் அக்ஸா பள்ளிக்கு மேல் உள்ள இஸ்ரேலின் அநியாய ஆக்கிரமிப்பை நியாயப்படுத்தும் முயற்சியும் கேசவமேனோன் செய்கிறார். “பாலஸ்தீனியர்கள் நடுநிலைவாதிகள் இல்லை என்றும் அதனால் அவர்கள் கையில் ஜெரூசலத்தின் அதிகாரத்தை கொடுப்பது சரியல்ல” என்பது தான் இஸ்ரேலின் வாதம் என்று அவர் கூறுகிறார். ஆனால் இப்படியொரு வாதமே இஸ்ரேலுக்கு இல்லை என்பது தான் யதார்த்தமாகும். “ஜெரூசலம் புராதன யூத கேந்திரம் என்றும் அதனால் அங்கு அவர்களைத் தவிர வேறு யாருக்கும் உரிமையில்லை” என்பது தான் இஸ்ரேலின் நிலைப்பாடு.

ஜோசப் கல்லறை ஆக்ரமிப்பு சம்பவத்திலிருந்து இஸ்ரேலின் நிலைப்பாடு தான் சரி என்று தெளிவதாக காட்டுவதற்கு கற்பனையாக ஒரு நிலைபாட்டினை இஸ்ரேலின் மேல் கேசவமேனோன் இட்டுக் கட்டுகிறார். இதனைத் தொடர்ந்த நாட்களில் மூன்று பள்ளிவாசல்களையும் ஒரு தேவாலயத்தையும் நாசமாக்குவதற்கு முயற்சித்த இஸ்ரேலிற்கு தன்னை நடுநிலைவாதி என சான்று பகர்வதற்கு என்ன உரிமை இருக்கிறது என்று கேள்வி கேட்க அவரால் முடியவில்லை. காரணம் பல சம்பவங்களும் அவர் அறிந்ததாகவே தெரியவில்லை. இஸ்ரேல் உருவாக்கப்பட்டதோடு நூற்றுக்கும் மேல் பள்ளிவாசல்கள் இடித்து தரைமட்டமாக்கிய சியோனிஸ அக்கிரமத்தைக் குறித்து ஒன்றும் பேசாமல் கேசவமேனோன் மவுனம் கடைபிடிக்கிறார்.

2000-ல் ஜோசப் கல்லறை ஆக்ரமிப்பதற்கும் பல ஆண்டுகளுக்கு முன்பே ஜெரூசலத்தை பாதுகாப்பதற்குரிய அவகாசத்தை கேட்பதற்கு இஸ்ரேலின் தகுதி தார்மீகமாகக் கெட்டுப் போனது என்பதல்லவா உண்மை? ஆனால் இதை சுட்டிக்காட்டாமல் இஸ்ரேலின் ஆக்ரமிப்பினைப் பூசி மெழுகுவது மட்டுமல்லாது அதனை நியாயப்படுத்தவும் யூதர்களை நடுநிலைவாதிகளாகக் காட்டுவதற்கும் தான் அவர் முயல்கிறார்.

வெளிவிவகாரத்துறையில் பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாகவும், பிரச்சினைகளில் நடுநிலைமை பேணவும் செய்யும் ஒரு மூன்றாம் நாட்டின் தினப்பத்திரிக்கையின் நடுநிலை இதுவெனில், மத்தியகால சிலுவைப்போர் மனநிலையிலிருந்து இப்பொழுதும் மாறாத மேற்கத்திய பத்திரிக்கைகள் மத்திய கிழக்கு நாடுகளின் பிரச்சினைகளை அணுகி செய்தி கொடுப்பது எப்படி இருக்கும் என்பதை இதிலிருந்து ஊகித்தே அறிந்து கொள்ள முடியும்.

— அபூசுமையா


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.