இஸ்லாமோஃபோபியா – ஒரு பார்வை! (பகுதி 3)

Share this:

சுமார் 800 ஆண்டுகாலம் இஸ்லாமியர்கள் ஆட்சி செய்த அந்தலூசியா என்றறியப்பட்ட ஸ்பெயினில், சிலுவைப் போர்களைத் தொடர்ந்து கிறிஸ்தவ தீவிரவாதம் தலைவிரித்தாடிய கால கட்டத்தில், ஒரு சதவீத முஸ்லிம்கள் கூட மீதம் இல்லாதவாறு நாடு முழுவதும் சல்லடை போட்டு முழுவதுமாக முஸ்லிம்கள் அழித்து ஒழிக்கப்பட்டனர். ஆனால் இன்றோ, மீண்டும் அங்கு இஸ்லாம் துளிர் விட்டு புத்துணர்வுடன் எழுச்சி பெற ஆரம்பித்து விட்டது. இது தான் இஸ்லாத்தின் சிறப்பியல்பாகும்.

இறுதித்தூதர் முஹம்மது(ஸல்) அவர்களால் இஸ்லாம் மீண்டும் கட்டமைக்கப்பட்ட காலத்தில் முதல் இஸ்லாமிய அரசாங்கம் மதீனாவில் அமைக்கப்பட்டது. சுமார் 13 வருடங்கள் மக்கா நகரில் இஸ்லாமிய பிரச்சாரத்தில் அவர்கள் ஈடுபட்டிருந்த போதிலும், இறுதியில் மக்காவிலிருந்து அம்மக்களால் வெளியேற்றப்பட்டனர்.

பின்னர் அவர்கள் குடியேறிய மதீனா நகரில், அவர்கள் ஒரு இஸ்லாமிய அரசை நிறுவும் வகையில், மதீனா நகர மக்கள் தங்களின் முழு ஆதரவை முஹம்மது(ஸல்) அவர்களுக்கு கொடுத்தார்கள். இங்கு கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில், முன்பு மக்கா நகரில் வாழ்ந்த மக்களில் மிகப் பெரும்பான்மையானவர்கள் குறிப்பிட்ட எந்த மதத்தையும் சாராமல் கடவுள் எனத் தாம் கருதிய அனைத்தையும் ஏற்று வணங்கிக் கொண்டிருந்தவர்களாவர். இவர்களிடையே 13 வருடங்கள் நபி(ஸல்) அவர்கள் நேரடியாக பிரச்சாரம் செய்த பொழுதும் கிடைக்காத வரவேற்பு, பெரும்பாலான மக்கள் முஹம்மது(ஸல்) அவர்களை நேரடியாகப் பார்த்திராத மதீனா நகரத்தில் அவர்களுக்குக் கிடைத்தது. இத்தனைக்கும் மதீனாவில் வாழ்ந்த மக்களில் மிகப் பெரும்பான்மையானவர்கள் பல்வேறு கோத்திரங்களில் இருந்த மாறுபட்ட நம்பிக்கைகள் கொண்ட மக்களே ஆவர். இவர்களிடையே யூத, கிறிஸ்தவர்களும் பெருவாரியாக வாழ்ந்து வந்தனர்.

மிகக் குறுகிய காலத்திலேயே மதீனா நகர மக்கள் இஸ்லாமியக் கோட்பாடுகளைத் தம் வாழ்க்கை நெறியாக ஏற்றதுடன், அந்த மார்க்கத்தைத் தமக்கு அறிமுகப்படுத்திய முஹம்மது(ஸல்) அவர்களையும், அவர்களின் கொள்கைகளையும் மனதார ஏற்றுக் கொண்டனர். அதாவது யூத மற்றும் கிறிஸ்தவ மதங்களில் நம்பிக்கை வைத்திருந்த அம்மக்களே திருக்குர்ஆனையும் நபி(ஸல்) அவர்களையும் ஏற்று முஸ்லிம்களானவர்கள் ஆவர். அதற்குப் பின் வந்த 10 வருடங்களில் மக்கா நகர் உட்பட ஏனைய அரபு நாடுகளில் பெரும்பாலானவை இஸ்லாமிய அரவணைப்பின் கீழ் வரும் வகையில் அந்தந்த நாட்டு மக்கள் மிக எளிதில் மனதார இஸ்லாத்தைத் தங்கள் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டனர்.

நபி(ஸல்) அவர்களின் இறுதிகாலம் வரை, தங்களிடமிருந்து கைவிட்டுப் போன மத மற்றும் அதிகார தலைமைப் பீடங்களை திரும்பவும் மீட்க முடியாமல் கொந்தளித்துக் கொண்டிருந்த யூத குருமார்களும், ரப்பிகளும் நபி(ஸல்) அவர்களின் காலத்திற்குப் பின் பல்வேறு வழிகளில் மீண்டும் தங்களிடமிருந்து விட்டுப்போன அதிகாரங்களை மீட்டெடுக்க மிகுந்த சிரத்தைகளை மேற்கொண்டனர். எனினும் மூன்றாம் கலீஃபா உஸ்மான்(ரலி) அவர்களின் ஆட்சி காலம் வரை அதனை அவர்களால் சாதிக்க இயலாமல் இருந்தது.

இஸ்லாமோஃபோபியாவின் ஊற்றுக்கண் இங்கே தான் ஆரம்பம் ஆகின்றது. அதாவது இஸ்லாமிய எழுச்சியின் ஆரம்பகாலம் வரை மத மற்றும் ஆட்சி அதிகாரத் தலைமைப் பீடங்களை தங்கள் விருப்பத்திற்கு வளைத்து போட்டு அராஜகங்களிலும், அக்கிரமங்களிலும் தான்தோன்றித்தனமாக திளைத்துக் கொண்டிருந்த யூத குருமார்களும் ரப்பிகளும் தான் இஸ்லாமோஃபோபியாவின் அன்றைய பிறப்பிடங்களாவர். தங்களிடமிருந்து கைவிட்டுப் போன அதிகாரங்களை மீட்டெடுக்க அவர்கள் எடுத்த பல்வேறு முயற்சிகளின், அடிச்சுவடுகளின் மறுவடிவமே இன்றைய இஸ்லாமோஃபோபியாவாகும்.

இஸ்லாத்தை வீழ்த்தினாலே தாங்கள் இழந்த தங்களின் அதிகாரங்கள் திரும்பக் கிடைக்கும் என்பதை நன்றாக உணர்ந்து கொண்ட யூதர்கள்,(இந்தியாவின் தற்காலச் சூழலுக்கு இது மெத்தப் பொருந்தும். ஆரம்பகால மனு அடிப்படையிலான பிராமணீயத்தின் ஆட்சியை தகர்த்த இஸ்லாத்தின் வருகையும் அதனை மீட்டெடுக்க இன்று நடக்கும் கடும் முயற்சிகளும் அப்படியே பொருத்திப் பார்க்கத்தக்கனவையே. இஸ்லாத்தின் வருகையால் தங்களின் ஆதிக்கம் நிச்சயம் ஆட்டம் கண்டுவிடும் என்பதை அக்கால மதீனாவின் யூதர்களின் நிலையிலிருந்து பாடம் கற்றுக் கொண்ட ஆதிக்க சக்திகளே எல்லா உருவிலும் இஸ்லாத்தை மூர்க்கமாக எதிர்க்கின்றன என்பது நினைவுகூரத்தக்கது.) ஆரம்ப காலத்தில் அரசியல் அதிகாரத்தை மீட்டெடுக்க இஸ்லாமிய ஆட்சியின் அதிகார வரம்பிற்குள் பல்வேறு ஒப்பந்தங்களின் அடிப்படையில் இருந்து கொண்டே சந்தர்ப்பம் கிடைக்கும் பொழுதெல்லாம் இஸ்லாமிய அரசின் எதிரி நாடுகள் மற்றும் குழுக்களுடன் இரகசிய ஒப்பந்தங்களைச் செய்து கொண்டு நயவஞ்சகமாக நம்பிக்கைத் துரோகத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அவர்களின் அரசியல் ரீதியிலான முயற்சிகள் அனைத்தும் இஸ்லாம் வார்த்தெடுத்த இரண்டாம் கலீஃபா உமர்(ரலி) அவர்களின் ஆட்சி காலத்தில் நிர்மூலமாக்கப்பட்டதோடு, வீரியத்துடன் அண்டைநாடுகளுக்கும் இஸ்லாம் எடுத்துச் செல்லப்பட்டது.

உடல்பலத்தின் மூலம் இஸ்லாத்தை தகர்ப்பது இயலாத காரியம் என்பதை நன்றாக உணர்ந்து கொண்ட யூதர்களுக்கு, அவர்களின் தந்திரமான மதியூகத்திற்குப் பிரதிபலன் மூன்றாம் கலீஃபா உஸ்மான்(ரலி) அவர்களின் ஆட்சி காலத்தில் கிடைத்தது. நபி(ஸல்) அவர்களின் உற்ற தோழரும் அவர்களின் மருமகனுமான உஸ்மான்(ரலி) அவர்களைக் கொலை செய்ததன் மூலம், இஸ்லாத்தைத் தகர்க்கும் காரியத்திற்கு யூதர்கள் துவக்கம் குறிக்க ஆரம்பித்தனர்.

இதன் பின்னர் அவர்களின் செயல் திட்டம் அனைத்தும் இஸ்லாத்தின் கொள்கைகளிலும், சட்டதிட்டங்களிலும், கலாச்சாரப் பழக்க வழக்கங்களிலும் இடைச்செருகல்களைப் புகுத்துவதிலும், இஸ்லாமியர்களிடையே பிரிவுகளையும், பகைமைகளையும் உருவாக்குவதிலும் திரும்பியது. இதற்காக அவர்கள் தங்களை முஸ்லிம்களாக அறிவித்துக் கொண்டு இஸ்லாத்தை மிகத்தெளிவாக படிப்பதில் தங்களின் ஆரம்பகாலத்தை செலவழித்தனர். நபி(ஸல்) அவர்களின் காலத்திலேயே, தன்னை முஸ்லிமாக காட்டிக் கொண்டு, முஸ்லிம்களிடையே பிளவுகளை ஏற்படுத்துவதன் மூலம் இஸ்லாத்தின் வளர்ச்சியைத் தடுத்துவிட வலம் வந்த அப்துல்லாஹ் பின் உபை என்பவரின் செயல்பாடுகள் இவற்றிற்கு சாட்சியம் பகரும். அப்துல்லாஹ் பின் உபையின் வழித்தோன்றல்கள், இன்றைய காலகட்டத்தின் சல்மான் ருஷ்டி வரை இஸ்லாத்தினுள் முஸ்லிம் போர்வையில் இருந்து கொண்டு இஸ்லாத்தைத் தகர்க்க முயலும் வேலையைச் செவ்வனே உலக இலாபத்திற்காக செய்பவர்களின் பட்டியல் இஸ்லாமிய வரலாற்றில் நீண்டு பரந்து காணப்படுகின்றது.

தங்களிடமிருந்து கைவிட்டுப் போன மத, அரசியல் அதிகாரங்களை திரும்பவும் கைப்பற்ற யூதர்கள் எடுத்துக் கொண்ட முயற்சிகளைத் தோல்வியுறச் செய்த இஸ்லாத்தின் அதீத வளர்ச்சி, யூத மத குருமார்களுக்கும், ரப்பிகளுக்கும் இஸ்லாத்தின் மீதான அதீத பயத்தை பிற்காலத்தில் தோற்றுவித்தது. எனவே அதனை எதிர் கொள்வதற்கான செயல்திட்டங்களை மும்முரமாக வகுக்க ஆரம்பித்தனர்.

இஸ்லாத்தை நன்கு விளங்கி, முஸ்லிம் பெயர்களில் வலம்வந்த யூதர்கள், இஸ்லாத்தின் அடித்தளமான திருக்குர்ஆனும், நபி(ஸல்) அவர்களும் தான் இஸ்லாமிய எழுச்சியின் அடித்தளங்கள் என்பதை தெளிவாக புரிந்து கொண்டு, முஸ்லிம்கள் மனதிலிருந்து இஸ்லாத்தை அகற்ற வேண்டுமெனில் அவர்கள் நம்பிக்கையின் அடித்தளமான குர்ஆன் மற்றும் ஹதீஸ்கள் மீதான சந்தேகத்தை தோற்றுவிப்பதே தலையாய பணியாக இருக்க வேண்டும் என்ற வகையில் தங்கள் திட்டங்களை வகுக்க ஆரம்பித்தனர். (இந்த ஆதிகாலத்து உத்தியைத் தான் இன்றைய நவீன இஸ்லாமோஃபோபிக்குகள் செய்வதை தமிழிணையத்தை வலம் வருபவர்கள் எளிதில் அறிந்து கொள்ளலாம்)

இறைவனால் பாதுகாக்கப்பட்ட அருள்மறையாம் திருக்குர்ஆனின் வசனங்களில் எவ்விதமான ஒரு மாற்றத்தையும் கொண்டு வர இயலாது என்பதைப் புரிந்து கொண்டு, நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கை வழிமுறைகளில் இடைச்செருகல்களைத் திணிக்க ஆரம்பித்தனர். இது தொடர்பாக யூதர்கள் பறித்த முதல் வெற்றிக் கனிதான் நாம் முன்னர் குறிப்பிட்ட மூன்றாம் கலீஃபா உஸ்மான்(ரலி) அவர்களின் படுகொலைச் சம்பவம். எனினும், இந்தக் கையாடல்களை வெகு வேகத்தில் உணர்ந்தெழுந்து கொண்ட இஸ்லாமியச் சமூகம், நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கை நிகழ்வுகளை மிகத் தெளிவாக தரம் பிரித்துத் தொகுத்து வைக்க ஆரம்பித்து விட்டது. இந்த முயற்சியில் எண்ணிலடங்கா அறிவிப்பாளர்களின் வாழ்க்கை வரலாறுகள் தெளிவாக அலசப்பட்டு நம்பகத் தன்மை புடம்போடப்பட்டுவிட்டது.

1428 வருடங்களுக்கு முந்தைய சம்பவங்களின் இந்த சுருக்கம், இன்றைய இஸ்லாமோஃபோபியாவின் வெளிப்பாடான “இஸ்லாமியத் தீவிரவாதம், பயங்கரவாதங்களின்” மறுபக்கத்தைத் தெளிவாக தோலுரிக்கின்றன. கடந்த இடைப்பட்ட நூற்றாண்டுகளில் பல்வேறு பிரச்சனைகளில் தலை கொடுத்து சிதறிப்போன யூத சமூகம், ஒரு கால கட்டத்தில் இருப்பதற்கு இடமின்றி உலகின் நாலா பக்கங்களிலும் கிறிஸ்தவ சிலுவைப்படையினராலும், ஹிட்லர் போன்ற யூத எதிர்ப்பு ஆட்சியாளர்களாலும் ஆட்டுவிக்கப்பட்டனர். தாமதமாக அதன் பின்னர் சுதாரித்துக் கொண்ட யூதர்கள் மிகத் தெளிவாக திட்டம் வகுத்து இன்று உலகின் அனைத்து அதிகார பீடங்களிலும் முடிவுகளை நிர்ணயிக்கும் அதிகாரம் படைத்தவர்களாக மாறி இருக்கின்றனர்.

இன்றைய கணக்கின்படி அமெரிக்க செனட்டில் அமெரிக்காவிற்கு மிக அதிக அளவு நன்கொடை வழங்குபவர்களின் பட்டியலில் முதல் மூன்று இடங்களில் யூதப் பணக்காரர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது அமெரிக்காவின் அதிகார உயர் முடிவுகளை நிர்ணயிக்கும் சக்திபடைத்தவர்களாக (lobbyist) இவர்கள் உள்ளனர். ஆரம்ப காலத்தில் எவ்வாறு இஸ்லாத்தை அழித்தொழிக்க பல்வேறு திட்டங்கள் வகுத்து செயல்பட்டனரோ, அதே ரீதியில் இன்றும் இவர்களே செயல்படுகின்றனர் என்பதை மீண்டும் தனியாகக் கூற வேண்டியதில்லை. இதற்கும் இன்றைய இஸ்லாத்தின் அதீத வளர்ச்சியே இவர்களின் அடிமன பயத்திற்கு காரணம் எனபதில் சந்தேகமில்லை. சமீபத்திய ஒரு கணக்கெடுப்பின்படி,

கடந்த 50 வருடங்களில் மட்டும் 235% க்கும் மேலாக (1.6 பில்லியனுக்கும் மேல்) இஸ்லாமியர்கள் பெருகியுள்ளனர். பரவி வரும் கிறித்துவத்தை இஸ்லாத்துடன் ஒப்பிட்டு பார்க்கையில் கிறித்துவம் 47% மட்டுமே அதிகரித்துள்ளது. பிரான்ஸ், ஐரோப்பா மற்றும் அமெரிக்காவின் இரண்டாவது மிகப் பெரிய சமயமாக இஸ்லாம் முன்னணி வகிக்கிறது. “அமெரிக்காவின் மிக வேகமாக வளர்ந்து வரும் சமயமாக இஸ்லாம் உள்ளதென” அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் கோண்டலீசா ரைஸ் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. உலகின் நான்கு பேர்களில் ஒருவர் இஸ்லாமியராய் இருக்கிறார்.

** 1989-1998 வருடத்திய புள்ளி விபரங்கள்: (இஸ்லாம் பரவும் எண்ணிக்கை சதவீதத்தில்)

வட அமெரிக்கா:

25%

ஆப்ரிக்கா:

2.15%

ஆசியா:

12.57%

ஐரோப்பா:

142.35%

லத்தீன் அமெரிக்கா:

4.73%

ஆஸ்திரேலியா:

257.01%

இந்த அதிவேக வளர்ச்சியினால் எழுந்த பயம் மற்றும் பித்தலாட்டங்கள் பலனளிக்காததன் மூலம் எழுந்த இயலாமை ஒரு கட்டத்தில் முற்றிப்போய் இஸ்லாமியர்கள் தங்கள் உயிரினும் மேலாகக் கருதும் இறைத்தூதர் முஹம்மது(ஸல்) அவர்களை மோசமாகச் சித்தரித்து கார்ட்டூன் வெளியிட்டு தங்கள் மனவெறுப்பை வெளிப்படுத்தும் நிலைக்கு இவர்களை கொண்டு சென்று விட்டது.

இஸ்லாமிய வளர்ச்சியை சீர்குலைக்க, ஆரம்ப காலத்திலிருந்து பல்வேறு திட்டங்களை வகுத்து அதில் வெற்றியும், தோல்வியும் மாறி மாறிப் பெற்று வந்த யூதர்களுக்கு, இந்நூற்றாண்டு பொற்காலம் என்றால் அது மிகையாகாது.

அன்று விதைத்திருந்த எல்லாவிதமான திட்டங்களுக்கும் உரிய அறுவடையை இன்று பெற்றுக் கொள்கின்றார்கள் என்றே கூறலாம். இன்று உலகம் முழுக்க இஸ்லாத்தின் மீதான ஒருவித பயம் முழுமையாக ஓர் பனித்திரை போன்று நிலவி வருகின்றது. இதன் ஒரு பகுதியே நபி(ஸல்) அவர்களுக்கு எதிரான கார்ட்டூன், இஸ்லாமிய தீவிரவாதம்/பயங்கரவாதம் என்ற சொல்லாடல்கள், பேணுதலாய் காட்சியளிக்கும் தாடி, தொப்பி, ஹிஜாப் போன்ற இஸ்லாமிய அடையாளங்களுடன் காண்பவர்களையெல்லாம் பயத்துடனே எதிர் கொள்ளல் போன்றவை.

திட்டமிட்டுப் பரப்பப்படும் இஸ்லாமோஃபோபியா நோயில் சிக்குபவர்களில் பெரும்பாலானோர், உண்மையில் இஸ்லாத்தின் அடிப்படைகளை சிறிதும் அறியாதவர்களாகவே உள்ளனர். ஆனால் அதே நேரம் அவ்வாறு கண்மூடித்தனமாக இஸ்லாமிய கோட்பாடுகளை எதிர்ப்பவர்களே சில நேரம் இஸ்லாத்தின் முகத்தினைக் குறித்து தெளிவான கோணத்தில் அறிய நேரும்பொழுது இருள் விலகி இஸ்லாத்தினுள் நுழையும் எதிர்மறை சம்பவங்களும் ஆங்காங்கே நடைபெறுவதை காணமுடிகின்றது. அமெரிக்க 9/11 இரட்டைக் கோபுர தகர்ப்புக்குப் பின் இஸ்லாத்தின் மீது திருப்பி விடப்பட்ட எதிர்மறை பிரச்சாரத்தின் விளைவுகளில் இதுவும் நடந்தது நினைவு கூரத்தக்கது.

எது எப்படி இருந்தாலும், இஸ்லாத்தின் மீதான தாக்குதல் இன்று வீறு கொண்டு எழுப்பப்படுவதும் அதில் இஸ்லாத்தின் கொள்கைகள், வாழ்க்கை முறைகள் தவறாக வியாக்கியானிக்கப்படுவதும் பரவலாக நடைபெற்றே வருகின்றன.

மேற்கத்திய ஆதிக்கவாதிகளின் இத்தகு செயல்பாடுகள் அனைத்தும் திட்டமிட்டு நடத்தப்படுகின்றவைகளே என்பவற்றிற்கு ஆதாரமாக, இஸ்லாமோஃபோபியா-வின் உட்கூறுகளை ஆராய்ந்து கடந்த நவம்பர் 1997 இல் Runnymede Trust வெளியிட்டுள்ள அறிக்கையான Islamophobia: A Challenge For Us All யில் காணப்படும் இஸ்லாமோஃபோபியாவை பிரதிபலிக்கும் எட்டு விஷயங்களை குறிப்பிடலாம். இவை மேற்குறிப்பிட்ட இஸ்லாத்தின் மீதான தாக்குதல்களுக்காக வகுத்துக் கொண்ட 5 அடிப்படை விஷயங்களை அப்படியே பிரதிபலிப்பதை காணலாம். இதன் மூலம் இஸ்லாத்தின் வளர்ச்சியைத் தடுப்பதற்காக, சாமான்ய மனிதர்களுக்குக் காதில் பூவையும், கண்களில் இலவசமாக ஒரு மஞ்சள் கண்ணாடியும் வலுக்கட்டாயமாக அணிவிக்கப்பட்டு தொடர்ந்து இஸ்லாத்தைக் குறித்த பயப்பாடம் நடத்தப்படுவதை புரிந்து கொள்ளலாம்.

Runnymede Trust- ன் அறிக்கையின்படி, ‘இஸ்லாம்’ என்பது, இஸ்லாத்தைப் பற்றியஅச்சம் கொண்ட இஸ்லாமோஃபோபியாக்களின் பார்வையில் இவ்வாறுதான் பார்க்கப்படுகின்றது.

அதாவது இஸ்லாம் – என்றால்…

1.வளைந்து கொடுக்காத தன்மையுடையது; காலத்திற்கேற்ற மாறுதல்களை ஏற்றுக் கொள்ளாதது.

2.பிற மதக்கலாச்சாரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருப்பதுடன், அதன் மூலம் எத்தகைய சாதக பாதகத்தையும் எதிர்பார்க்காமல் இருக்கக்கூடியது.

3. மேற்கத்தியவர்களை இழிவாகக் கருதக்கூடியது; காட்டுமிராண்டித்தனமானது; அறிவுக்குப் பொருந்தாதது; புராதான காலத்தியது; காமுகர்களைக் கொண்டது.

4. மூர்க்கமான, வலியத்தாக்கும் தன்மையுள்ள, அச்சுறுத்தக்கூடிய, பயங்கரவாதத்திற்குத் துணைபோகக்கூடியது; மனித சமுதாயத்திற்குள்சச்சரவுகளை ஏற்படுத்தக்கூடியது.

5. நுண்புலத்துடன் அரசியல் மற்றும் ராணுவ அனுகூலங்களுக்காகவும் பயன்படுத்தப்படக்கூடியது.

6. மேற்கத்திய நாடுகளால் கண்டறியப்படும் அதிலுள்ள குறைகளை நிராகரித்து விடக்கூடியது.

7.பொதுவாக ஒரு நாட்டிலுள்ள சமுதாயம் செல்லும் கலாச்சாரப்போக்கின் கீழ் கலக்காமல் தனித்து நிற்கக்கூடியது.

8.முஸ்லிம்களுக்கெதிரான பகைமையை வெகு இயல்பான கண்ணோட்டத்திலேயே பார்க்கக் கூடியது.

உருண்டாலும் பிரண்டாலும் இஸ்லாத்தின் மீது அவதூறைப் பூச மேற்கூறப்பட்ட இவற்றைத் தவிர வேறு காரணங்களை இத்தகைய ஃபோபியாக்களால் கையாள இயலாது. சமீப கால கட்டங்களில் இஸ்லாமிய வளர்ச்சியை தடுக்கும் பிரச்சார முறைகளில், மேலே பட்டியலிடப்பட்ட எட்டு தன்மைகளும் அடங்குவதை கவனிக்க வேண்டும். இன்று மக்களின் மனதில் இஸ்லாத்தை குறித்த பயத்தை வலிந்து உருவாக்க வகுக்கப்பட்டுள்ள திட்டங்களின் அடிப்படை வரைவிலக்கணமாகவே இவற்றைக் கொள்ளலாம்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்…

ஆக்கம்: அபூ ஸாலிஹா


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.