ஜனநாயகத் தூண்களே …!

தேசியச் சின்னம்
Share this:

ஒரு நாட்டின் ஜனநாயகத்தைத் தாங்கி நிற்பது நாடாளுமன்றம், அரசு நிர்வாகம், நீதித்துறை மற்றும் ஊடகத்துறை ஆகிய நான்கு தூண்களே என நாம் கேள்விப்பட்டிருப்போம். இந்த ஒவ்வொரு துறையும் நமது நாட்டில் தத்தமது கடமைகளைச் சரிவர செய்திருக்குமேயானால் அமெரிக்காவின்  எடுபிடியைப் போல் நமது நாடு மாறி இருக்காது. உலகின் தலைசிறந்த நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக விளங்கியிருக்கும். ஆனால், நமது நாட்டின் ஜனநாயகத் தூண்களான நான்கு துறைகளும் தமது கடமைகளிலிருந்து ஒதுங்கி நிற்கின்றன என்றும் சொல்லலாம்; அடக்கி வைக்கப்பட்டிருக்கின்றன என்றும் சொல்லலாம்.

 

நாடாளுமன்றம்:

நமது நாட்டின் நாடாளுமன்றத்தின் நடவடிக்கைகளைப் பார்த்தால், இதை நாடாளுமன்றம் என்று சொல்லுவதைவிட மக்கள் பிரதிநிதிகள்(?) கூடிக் கலையும் இடம் என்றுதான் சொல்ல வேண்டும். சட்டங்கள் இயற்றுவது முதல் கொள்கை முடிவுகள் எடுப்பது வரை ஏறக்குறைய அனைத்து அரசு முடிவுகளும் நாடாளுமன்றத்திற்கு வெளியிலேயே தீர்மானிக்கப்பட்டு விடுகிறது. அதிலும் குறிப்பாக குற்றவாளிகளையும் இஸ்லாமியர்களுக்கு எதிராக ஆயுதமேந்திய இந்துத்துவ பயங்கரவாதிகளையும் தண்டிப்பதில் நாடாளுமன்றம் எந்தவிதத்திலும் பணியாற்றவில்லை. நாடாளுமன்ற உறுப்பினர்கள்  தங்களது தண்டச் சம்பளத்தைச் சட்டப்பூர்வமாகப் பெருவதற்கே பெரிதும் துணை நிற்கிறது. இதன் மீது நாம் கேள்விகள் தொடுப்பது பலனளிக்காது என்பது கடந்த கால அனுபவம்.

அரசு நிர்வாகம்:

இதில் மிகப்பெரிய வேடிக்கைதான் அரங்கேறுகிறது. மத்திய அரசு அதிகாரம் வாய்ந்ததா? இல்லை மாநில அரசுகள் அதிகாரம் வாய்ந்தனவா? என்ற கேள்விக்கு விடை தெரியாமல் அரசுகளும் குழம்புகின்றன; மக்களையும் குழப்புகின்றன. இரு அரசுகளுக்கும் உள்ள மகா ரகசிய உடன்படிக்கையானது மத்திய அரசின் முஸ்லிம் விரோதப் போக்கினை மாநில அரசுகள் கண்டுக்கொள்ளக்கூடாது – ஆர்.எஸ்.எஸ்ஸின் ஆயுதப்பயிற்சியை தடுக்க மறுப்பது உட்பட.  அதுபோல் மாநில அரசுகளின் முஸ்லிம் விரோதப் போக்கினை மத்திய அரசு அலுவல் ரீதியாக கேள்வி கேட்கக்கூடாது – மாநில அரசுகள் அரங்கேற்றும் போலி என்கெளன்டர்கள் உட்பட. இந்த அதிகாரபூர்வமற்ற உடன்படிக்கையை இரு அரசுகளும் தீவிரமாகக் கடைப்பிடிப்பதை நாம் காணலாம். முஸ்லிம் பெண்களின் கற்பைச் சூறையாடுவதையும் இஸ்லாமியப் பச்சிளங்குழந்தைகளின் இரத்தத்தை உறிஞ்சுவதையுமே தங்களது அரசின் கொள்கைகளாக கடைப்பிடித்துவரும் அமெரிக்காவிற்கும் அதன் கள்ளக்குழந்தை இஸ்ரேலிற்கும் காவடி தூக்கும் மத்திய அரசின் இஸ்லாமிய விரோத வெளியுறவுக்கொள்கை குறித்து எந்த மாநில அரசும் கேள்வி எழுப்புவதில்லை. அதுபோல் உலக வரலாறு கண்டிராத கொடூரமான இஸ்லாமியர்களுக்கெதிரான படுகொலையையின் போதும் அதனை அரங்கேற்றிய நரவேட்டை நரேந்திர மோடி தலைமையிலான கும்பல்களே என பல விசாரனை அறிக்கைகள் வெளிச்சம் போட்டு காட்டிய போதும்  கண்டுகொள்ளாததுபோல் இருப்பதற்கும் அதிகாரபூர்வமற்ற இவ்வுடன்படிக்கையே காரணமாக இருக்கிறது. இதன் மீதும் கேள்விகள் தொடுப்பது பயனளிக்காது.

ஊடகத்துறை:

“வருமானம், மேலும் வருமானம், மேலும் மேலும் வருமானம்” இதுவே தற்போதைய ஊடகத்துறையின் தாரக மந்திரம். சமுதாய நலன், சத்தியம், நேர்மை போன்ற ஊடகத்துறைக்கு தேவையான முக்கிய காரணிகளை ஏறக்குறைய அனைத்து ஊடகங்களும் மறந்துவிட்டன; மறுத்துவிட்டன. விறுவிறுப்புகளை, சாதாரண பாதிக்கப்பட்ட மக்களின் வேதைனைகளை வியாபாரமாக்குவது, நடிகைகளைப் பற்றி ஆற-அமர விவாதிப்பது, பத்திரிக்கைச் சுதந்திரம் என்ற போர்வையில் இஸ்லாமியர்களுகெதிராக அவதூறுகளைப் பரப்புவது இவையே நவீன கால ஊடகங்களின் அடையாளங்கள். இஸ்லாமியர்களுக்கெதிராக உலகில், இந்திய நாட்டில்  நடக்கும் அக்கிரமங்களை மூடிமறைப்பதுதான் தங்களின் தலையாய கடமை என்று தங்களது எஜமான அமெரிக்காவும் அதன் சார்ந்த ஊடகங்களும் தங்களுக்குக் கற்றுத்தந்த பாடம் என்ற நினைப்பில் ஊடகங்கள் செயல்படுகின்றன. உலகில் நடக்கும் பயங்கரவாதச் செயல்கள் பலவற்றுக்கும் ஊடகத்துறையே ஒருவகையில் காரணமாக இருப்பதனை யாரும் மறுக்க இயலாது. சுய சிந்தனை, ஆழமான விசாரணை, நிடுநிலைமை போன்றவற்றில் ஊடகத்துறையினர் உறுதியாக இருந்திருப்பார்களேயானால் இந்திய ஜனநாயகம் செழித்திருக்கும். ஆயிரக்கணக்கான பிரச்சனைகளும் குழப்பங்களும் ஒரு முடிவுக்கு வந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. தங்களின் சொந்த மண்ணிற்காகப் போராடும் காஷ்மீர், இராக், ஆப்கானிஸ்தான், பாலஸ்தீன் மக்களை இஸ்லாமியத் தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தியும் தன் சொந்த மக்களையே கொன்று குவித்த விடுதலைப்புலிகள் இயக்கத்தினரைப் போராளிப் புலிகள் என்று கூறியும் தங்களின் பாசிச சிந்தனையை பரைச்சாற்றுவதனை இனிவரும் காலங்களிலாவது நிறுத்திக் கொள்வார்களேயானால் இந்திய ஜனநாயகத்தின் தூண்களில் ஒன்று வலுவோடு இருக்கும். மேற்கத்திய ஊடகங்கள் வெளியிடும் செய்திகளையும் தகவல்களையும் அப்படியே வாந்தி எடுக்கும் இவர்களிடம் நியாயம், நீதி தொடர்பாக கேள்வி எழுப்புவதும், எழுப்பாமல் இருப்பதும் சமமே.

நீதித்துறை:

மற்ற  மூன்று துறைகளை ஒப்பிடுகையில் நீதித்துறையானது முக்கியமான ஒன்றாக இருக்கிறது. ஆனால் துரதிஷ்டவசமாக இந்தியாவில் நீதி என்பது விலையுயர்ந்த ஒன்றாகவும் சாதாரண பாமர மக்களுக்கு ஒரு காட்சிப்பொருளாகவுமே மாறிவிட்டது. மற்ற மூன்று துறைகளும் எப்படித் தங்களின் கடமையிலிருந்து வழிமாறிச் சென்றுவிட்டதோ அதுபோலவே நீதித்துறையானதும் தனது கடமையிலிருந்து கொஞ்சம் கொஞ்சம் வழிதவறி சென்று கொண்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக இஸ்லாமியர்கள் தொடர்புடைய விஷயங்களில் அலட்சியம் காட்டும் போக்கு அதிகமாகவே காணப்படுகிறது. சில நீதிபதிகள் தங்கள் கடமைகளைச் சரிவர நிறைவேற்ற நினைக்கும் போது மற்ற சக நீதிபதிகளின் ஒத்துழைப்பும் அரசு நிர்வாகம் மற்றும் ஊடகங்களின் ஒத்துழைப்புகள் இல்லாமல் போவது மிகவும் வேதனையான ஒன்று. உண்மையிலேயே நீதித்துறை என்ற தூணிற்கு அதிகாரம் இருக்குமேயானால் ஊழல் அரசியல்வாதிகள் கோலோச்சவும் இயலாது; ஆர்.எஸ்.எஸ். என்ற ஆயுதமேந்திய இஸ்லாமிய விரோத இயக்கம் அரசின் நிர்வாகத்தில் ஊடுருவி இருக்கவும் முடியாது.

ஒரு சாதாரணக் குடிமகனாகவும் நீதியையும் இந்திய நீதிமன்றங்களின் மீதும் நம்பிக்கை வைத்திருக்கும் ஓர் இஸ்லாமியனாகவும் நீதித்துறை என்ற ஜனநாயகத்தினை தாங்கும் நீதித்தூணை நோக்கிச் சில கேள்விகளை முன்வைப்போம்:

1) பொடா என்ற கருப்பு சட்டம் அமலில் இருந்த காலக்கட்டத்தில் நாடு முழுவதும் நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் தீவிரவாதிகள் என்ற போலிக் குற்றச்சாட்டின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்டதை அனைத்து நீதிபதிகளும் நன்கு அறிவர். ஆனால் அந்தக் கருப்பு சட்டமே இல்லாமல் காலாவதி ஆன பிறகும் இன்னும் அந்த நூற்றுக்கணக்கான  முஸ்லிம்கள் சிறைகளில் வதைபடுவதில் என்ன நியாயம் இருக்கிறது?

2) பொடாவில் கைது செய்யப்பட்ட ஒருவரின் மீதுக்கூட குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லையே பிறகு ஏன் இன்னும் அவர்கள் சிறையில் வதைபடவேண்டும்?

3) குறிப்பாக கோத்ராவில் இரயிலை எரித்ததில் முஸ்லிம்களுக்குத் தொடர்பில்லை. மாறாக இரயிலின் உள்ளிருந்தவர்கள்தான் இரயில்  எரிப்பிற்கு காரணம் என்று நிரூபிக்கப்பட்ட பிறகும் இரயில் எரிப்பினைக் காரணம்காட்டி, அப்பாவி முஸ்லிம்கள் நூற்றுக்கணக்கில் கைதுசெய்யப்பட்டனரே அவர்களை விடுவிப்பதில் ஏன் நீதிமன்றங்கள் தலையிட மறுக்கின்றன?

4) உலக வரலாறு கண்டிராத குஜராத் அரசின் இஸ்லாமிய விரோத இனப்படுகொலைக்குக் காரணம் கோத்ரா இரயில் எரிப்பு சம்பவம்தான் எனக் கூறப்படும்போது, அந்த இரயில் எரிப்பு சம்பவம் பற்றி ஏன் முழு விசாரணையில் ஈடுபடவில்லை? சி.பி.ஐ. மூலம் விசாரணை செய்ய வேண்டுமென மத்திய அரசிற்கு ஏன் அறிவுறுத்தவில்லை?

5) இரயிலை எரித்ததில் வெளியில் இருந்த முஸ்லிம்களுக்குத் தொடர்பில்லை. மாறாக இரயிலின் உள்ளிர்ருந்தவர்களே என்று யு.சி.பானர்ஜியின் அறிக்கையின் மீது நடவடிக்கை எடுக்க முன்வர மறுப்பதேன்?

6) ஒன்றும் அறியா அப்பாவி முஸ்லிம் பெண்கள் ஆயிரக்கணக்கில் கற்பழிக்கப்பட்டு கொல்லப் பட்டது பற்றியும், ஆயிரக்கணக்கில் குழந்தைகள், முதியவர்கள் கொல்லப்பட்டது குறித்தும் முனைப்பான-முறையான விசாரணை நடத்தத் தயங்குவது ஏன்? (கொல்லப்பட்டவர்கள் முஸ்லிம்கள் என்ற அலட்சியத்தாலா?).

7) இனப்படுகொலையை தலைமையேற்று நடத்திய நரவேட்டை நரேந்திர மோடியை “நவீன நீரோ மன்னன்” என்று வர்ணித்ததோடு  நிறுத்திக் கொண்டு, நரேந்திர மோடிக்கும் அவரின் சகாக்களுக்கும் அவரின் குருநாதர்களுக்கும் சட்டத்தின மூலம் தண்டனை வாங்கித்தரத் தயங்குவது ஏன்? அதற்குத் தடையாக இருப்பவர்களை உலகின்முன் வெளிச்சம் போட்டுக் காட்டுவதற்கு நீதித் துறைக்கு அதிகாரம் இல்லையா?

8) “குஜராத் நரவேட்டையை நாங்கள்தான் நடத்தினோம், ஆயிரக்கணக்கான பெண்களை நாங்கள்தான் கற்பழித்தோம், ஆயிரக்கணக்கான பெண்களை நாங்கள்தான் விதவைகளாக்கினோம், ஒன்றுமறியா பச்சிளங்குழந்தைகளின்  உயிர்களை நாங்கள்தான் பிரித்தெடுத்தோம், நூற்றுக்கணக்கான இஸ்லாமியகளின் வழிபாட்டுதளங்களை நாங்கள்தான் இடித்துத் தரைமட்டமாக்கினோம், பெண்களின் பிறப்புறுப்புகளை நாங்கள்தான் கிழித்தெறிந்தோம்,  பிள்ளைத்தாச்சி என்றுகூட பாராமல் ஒரு முஸ்லிம் பெண்ணின் வயிற்றைக் கிழித்து, அதிலிருந்த குழந்தையைத் தீயிட்டுக் கொளுத்தியதும் நாங்கள்தான் என்று தெஹல்கா நிருபரின் முன் வெட்கமின்றி தங்களின் குற்றங்களை வீர-தீர சாகஸங்களாகப் பெருமையுடன் ஒப்புக்கொண்ட நரவேட்டை நரேந்திரமோடியின் சகாக்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு உங்களுக்கு அதிகாரம் இல்லையா? இல்லை நமக்கேன் வம்பு என்று உங்கள் கடமையிலிருந்து ஒதுங்கியிருக்கிறீர்களா?

9) குற்றவாளிகளே தங்களது குற்றத்தினை உலகறிய ஒப்புக்கொண்ட பிறகு வேறு என்ன சாட்சி வேண்டும் உங்களுக்கு?

10) சொராபுதீன் ஷேக் என்ற அப்பாவி முஸ்லிம் குஜராத் காவல்(?)துறையினரால் தீவிரவாதி பட்டம் சுமத்தப் பட்டுக் கொல்லப்பட்ட போது ஒரு சங்கராச்சாரியார் கொதித்தெழுந்த பின்னும் நீங்கள் மெளனம் சாதித்தீர்கள். ஆனால் சொராபுதீன் ஷேக் ஒரு தீவிரவாதி அல்ல; அவர் ஒரு முஸ்லிம் என்ற காரணத்தினாலேயே திட்டமிட்டுக் கொல்லப்பட்டார் என்று விசாரணை அறிக்கை தெளிவுபடுத்திய பின்னும் குற்றவாளிகளுக்கு தண்டனை தராமல் காலம் தாழ்த்துவது சொராபுதீன் ஷேக் போன்ற சாதாரண அப்பாவி இந்தியக் குடிமகனுக்கு இழைக்கப்படும் அநீதி என்று தோன்றவில்லையா?

11) இஷ்ராத் ஜெஹான் மற்றும் அவரது நண்பர்கள் மூன்று பேர் நரேந்திர மோடியின் காவல்(கூலி)படையினால் கொல்லப்பட்டதும் அவர்கள் முஸ்லிம்கள் என்ற காரணத்தினால்தான் என்று விசாரணை அறிக்கை தெளிவாக கூறிய பின்பும் குற்றவாளிகளுக்கு கடுமையான தன்டனை வழங்காமல் காலம் தாழ்த்துவது எதனால்?

12) சொராபுதீன் ஷேக், இஷ்ராத் ஜெஹான் போன்ற நூற்றுக்கணக்கான அப்பாவிகள் காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட போது அவர்கள் தீவிரவாதிகள் என்று பெரிய எழுத்துகளில் செய்திகளை வெளியிட்ட பத்திரிகைகள், கொல்லப்பட்டவர்கள் முஸ்லிம்கள் என்ற ஒரே காரணத்தினால்தான் கொல்லப்பட்டனர் என்று விசாரணை அறிக்கைகள் தெளிவுபடுத்தியபோது அதே பத்திரிக்கைகள் மெளனம் காப்பது பற்றி அவர்களுக்கு நல்ல அறிவுரையையும் ஒரு நெறிமுறையையும் சொல்லிக் கொடுத்து நீதித்துறையின்மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு வலுசேர்க்க மறந்து போனீர்களா; மரத்துப் போய்விட்டீர்களா?

13) ஆர்.எஸ்.எஸ். என்ற ஆயுதமேந்திய பயங்கரவாதிகள் துப்பாக்கிப்  பயிற்சிகள் மேற்கொள்வதை பத்திக்கைகள் படம்பிடித்து காட்டுகின்றனவே (படங்களை வெளியிடுவதோடு நின்றுவிடுகின்றன. இதுவே முஸ்லிம்கள் செய்திருந்தால் கற்பனைக்கதைகள் சிறகடித்துப் பறந்து பல பக்கங்களை நிறைத்திருக்கும்) சட்ட விரோதமாக ஆயுதப் பயிற்சி எடுக்கும் ஆர்.எஸ்.எஸ் மீது நடவடிக்கை எடுக்க அரசிற்கும் காவல்துறையினருக்கும் உத்தரவிடத் தயங்குவது ஏன்? முஸ்லிம்களைக் கொல்வதற்காக ஆயுதப்பயிற்சி எடுப்பதை பார்த்துவிட்டு, அந்தப் பயிற்சியினைப் பயன்படுத்தி முஸ்லிம்களைக் கொன்றபிறகு பாதிக்கப்பட்டவனது குடும்பத்தார் வழக்குத் தொடர்ந்தால் தான் நடவடிக்கை எடுப்பீர்களா?

14) இந்தியாவில் நடந்த பல குண்டுவெடிப்புகளுக்கு சங்பரிவார அமைப்புகளே காரணம் என்ற உண்மையை வெளி உலகிற்கு ஆதாரத்துடன் வெளிச்சம் போட்டுக்காட்டிய மகாராஷ்டிரத் தீவிரவாத தடுப்புப் படையின் தலைவர் ஹேமந்த் கர்கரே மும்பையில் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டாரே அதுபற்றி ஏன் ஆழமான விசாரணை நடத்தவில்லை?

15) கர்கரே சுட்டுக்கொல்லப்பட்ட பின்பு சங்பரிவாரத்தின் மீதான விசாரணை என்ன ஆனது? உச்ச நீதிமன்றமே முன்னின்று விசாரணை நடத்துவதில் இருக்கும் சட்டச் சிக்கல்களும் நடைமுறைச்  சிக்கல்களும் யாவை?

16) குற்றம் நிரூபிக்கப்பட்டால் விதிக்கப்படும் தண்டனையின் அளவைவிட அதிகமாகவே விசாரணை என்ற பெயரில் அனுபவித்து வரும் அப்பாவி முஸ்லிம்களை, சிறைகளிலிருந்து விடுவிக்காதது ஏன்?

இதுபோன்று ஆயிரம் ஆயிரம் கேள்விக்கணைகள் நீதித்துறையை நோக்கி அணிவகுத்து நிற்கின்றன. இது, எங்கள் அதிகார வரம்பிற்குட்பட்டதல்ல என்ற அர்ப்ப காரணத்தினைக்கூறி நீதித்தூணானது  தப்பித்துக் கொள்ளலாம். ஆனால் நீதித்துறை கேணத்தனமான கட்டளையோ, அறிவுரையோ இடுமேயானால் அதனை தட்டிக் கேட்பவர்கள் எவருமில்லை. ஏனெனில் இந்தியாவில் தான் நீதிமன்றத்தின் தீர்ப்புகளை விமர்சிப்பதற்கு குடிமகனான யாருக்கும் உரிமையில்லையே! நாடாளுமன்றம், அரசு நிர்வாகம், ஊடகத்துறை ஆகிய மூன்று தூண்களை விட்டுவிட்டு நீதித்தூணிற்கு முன்பு எனது இந்த நியாயமான கேள்விகளை வைப்பதற்குக் காரணம் நீதித்துறை என்ற தூணிற்கு மட்டுமே இன்னும் உயிரும், உணர்ச்சியும் இருக்கிறது என்ற நம்பிக்கையில்தானேயொழிய வேறு காரணங்கள் இல்லை. இந்திய ஜனநாயகத்தின் நான்கு தூண்களில் மூன்று தூண்களுக்கும் மக்களின் மனதில் இடமில்லாமல் போய்விட்டது. ஆனால் நீதித்தூணின் மீது இன்னும் கோடிக்கணக்கான மக்களின் மனதில் நம்பிக்கை சிறிதளவேனும் இருக்கத்தான் செய்கிறது.

இங்கு முன்வைக்கப் பட்டிருக்கும் கேள்விகளுக்கான பதில்களை சாதாரண மாவட்ட நீதிமன்றங்கள் முதல் உச்ச நீதிமன்றங்கள் வரை ஏதோ ஒன்றாவது செயலில் தராதா என்று ஏக்கத்துடன் காத்திருக்கும் கோடிக்கணக்கான சாதாரண இந்தியக் குடிமக்களில் ஒருவன்,

நீடூர் .எம்.பி.பைஜுர் ஹாதி

யு...


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.