முகப்பு

இஸ்லாம்

செய்திகள்

தகவல்

கட்டுரைகள்

சேவைகள்

தொடர்பு கொள்க!

English

வாசகர் மடல்

திர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, தேர்தல் பிரச்சாரத்தின் ஓர் அங்கமாக இந்துக்களுக்கு மதவெறியூட்டிக் கொண்டு வருகிறது பா.ஜ.க! மனித குலத்திற்கே வேட்டு வைக்கும் இத்தகைய மதவெறியர்களை அடையாளம் கண்டுகொண்டு கண்டித்து வரும் இந்து சகோதரர்களுக்கு இச்சமயத்தில் நாம் நன்றி சொல்லியாக வேண்டும்.

ஓட்டுப் பொறுக்கிகளின் கேவலமான அரசியல் லாபத்திற்காக, அப்பாவிச் சிறுபான்மையினர் மீது பழியைப் போட்டு இந்து - முஸ்லிம் ஒற்றுமையைக் குலைக்கும் செயல்கள் அதிகரித்து வருகின்றன.

குறிப்பாக தமிழகத்தில் இந்து இயக்க தலைவர்கள் மீது நடத்தப்பட்டு வரும் கொலைகளை முன்னிறுத்தி, முஸ்லிம்கள் மீது பழி போடுவதற்கான முயற்சிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. எனினும் அவற்றில் பெரும்பாலானவை தோல்வியில் முடிந்து வருகின்றன.

"படுகொலைகளைச் செய்தவர்கள் முஸ்லிம்கள் தான்!" என்று போராட்டம் நடத்திய ஹிந்துத்துவா இயக்கங்களே வெட்கப்பட்டு தலைகுனியும் படியாக, அக் கொலைகளுக்கான காரணம் முன் விரோதம், தொழிலில் போட்டி, கொடுக்கல் வாங்கல், பெண் தொடர்பு, கந்து வட்டி, அரசியல் இலாபம் என்று பல்வேறு பரிமாணங்கள் தொடர் விசாரணைகளில் வெளிவந்து பல் இளிக்கிறது.

மேற்கண்ட காரணங்களில் லேட்டஸ்டாக இணைந்திருப்பது ஹிந்துத்துவா நிர்வாகிகளின் "விளம்பர மோகம்"

அதாவது, தன் வீட்டிற்குத் தானே வெடிகுண்டு வீசிவிட்டு - தீவிரவாதிகள் தாக்கியதாகவும், அதனால் தனக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் பொய் புகார் அளித்து, டிவி, செய்தித்தாள்கள் மூலம் "புகழ்" அடைய எண்ணிய கேவலங்கள் வெளியே வந்து சந்தி சிரிக்கின்றன.

இன்றைய (05-10-2013) ஊடங்களில் வெளியான பரபரப்பான செய்தி:

இந்நேரம்.காம்: குண்டு வீசியதாக நாடகமாடிய பா.ஜ.க நிர்வாகி கைது!

கோவை: தனது வீட்டில் தானே குண்டு வீசி நாடகமாடிய பா.ஜ.க நிர்வாகியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கோவை, வடவள்ளி அருகே, சோமையம்பாளையம் தாயுமானவர் வீதியில், வசிப்பவர் ராமநாதன். இவர்,பா.ஜ.,வின், நிர்வாகி. தன் வீட்டில் மர்ம நபர்கள், பெட்ரோல் குண்டு வீசியதாக, காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார்.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் ராமநாதன், வேண்டுமென்றே, தனக்குத்தானே தனது வீட்டில் குண்டு வீசிவிட்டு தவறான புகார் அளித்தது தெரியவந்தது. இதையடுத்து, ராமநாதன் கைது செய்யப்பட்டார். பின்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைக்கப்பட்டார்

இதேபோல தன் சொந்த விளம்பரத்திற்காக கடந்த ஆகஸ்ட் மாதம் திண்டுக்கல்-பழனி சாலையில் பாஜக நிர்வாகி பி. பிரவீண்குமார் தன் சொந்த வீட்டில். பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டில்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டதும் இதுதொடர்பாக பிரவீண்குமார் மற்றும் கமலக்கண்ணன் ஆகியோர் கைது செய்யப்பட்டதும் குறிப்பிடத் தக்கது.

http://www.inneram.com/news/tamilnadu/2410-bombing-acting-bjp-personage-arrested.html

http://www.dinamalar.com/news_detail.asp?id=819441

http://newindianexpress.com/states/tamil_nadu/BJP-worker-hurls-bomb-at-his-house-files-false-complaint/2013/10/04/article1818993.ece

பாஜக நிர்வாகி ராமனாதன் வீட்டில் குண்டு வெடித்ததைத் தொடர்ந்து காவல்துறையினரின் விசாரணை தொடர்புடைய Youtube வீடியோ:


Ramanathan had lodged a police complaint after an organisation had put up posters in Coimbatore opposing the visit of Gujarat Chief Minister and BJP’s prime ministerial candidate Narendra Modi to Tamil Nadu. (The Hindu)

ஹிந்துத்துவாவின் இத்தகைய மோசமான செயல்களை இந்து சகோதர சகோதரிகளே தற்போது பெருமளவில் அடையாளம் கண்டு வருகின்றனர். மேலும், இத்தகைய வேஷங்களுக்கு ஆதரவு தரும் பார்ப்பன தினமலர் போன்ற மோடி பிரச்சாரப் பத்திரிகைகளும் இந்துக்களாலேயே இனம் கண்டு ஒதுக்கப்படுகின்றன.

தமிழக மக்கள் இத்தகைய மதவெறிப் பிரச்சாரங்களை அடையாளம் கண்டு நிராகரித்து ஒருங்கிணைய வேண்டும். அமைதிப் பூங்காவான தமிழகத்தில் இந்துமதவெறியருக்கு இம்மியளவும் இடமில்லை என்பதை நிலைநாட்ட வேண்டும்.

- அபூ ஸாலிஹா

தொடர்புடைய செய்திகள்:

கோவையில் தவிர்க்கப்பட்ட பெரும் மதக் கலவரம்!

ஆடிட்டர் ரமேஷ் கொலை : தயாராகும் இந்துமதவெறியர்கள் !

''ஃபேமஸ் ஆகறதுக்குதான் குண்டு வீசினேன்!'' - விளம்பர ஆசையில் இந்து பிரமுகர்கள்!

 

 


 

Comments   
வித்யா கண்ணன்
+4 #1 வித்யா கண்ணன் 2013-10-05 19:04
பாஜக நிர்வாகி ராமனாதன் வீட்டில் குண்டு வீச்சு என்றவுடன் மதவெறியை கிளப்பும் பதிவுகளை போடும் தமிழ்ஹிந்து.காம ் போன்ற ஹிந்துத்துவா தளங்கள் , உண்மைச் செய்திகள் வெளியான பின்பு அதை உணர்வதுமில்லை. கண்டிப்பதும் இல்லை. என்னே ஒரு நேர்மை?

சக மனிதனை எரித்து தான் மத அரசியலில் லாபம் பார்க்க வேண்டுமா? இதை எல்லாம் ஒரு நாள் இரவில் தூங்கும் முன்பு யோசித்துப் பாருங்கள் ஹிந்துத்துவா நண்பர்களே!
Quote | Report to administrator
குணசீலன்
0 #2 குணசீலன் 2014-11-20 16:43
இந்த பொழப்புக்கு பிச்சை எடுத்து வாழ்வது மானமுள்ள செயல்.

இந்துக்களுக்கு இவர்கள் மீது உள்ள நம்பிக்கை போய் மாதங்கள் ஆகிவிட்டன. மோடி அரசின் வாக்குகள் இந்துக்களுக்கு கொடுத்தது என்னாச்சு?

வெளிநாட்டு வாழ் இந்தியர் போன்று மோடிக்கு உலகம் சுற்றி வரவே நேரம் சரியாக இருக்கும் போது அவருடைய அடிபொடிகள் செய்யும் இது போன்ற கிறுக்குத் தனங்கள் இந்துக்களுக்கு மேன்மேலும் அசிங்கத்தையே ஏற்படுத்துகிறது.

குணசீலன், ஸ்ரீரங்கம்.
Quote | Report to administrator
சுல்தான் பாபர்
0 #3 சுல்தான் பாபர் 2014-11-21 01:48
ஹிந்துத்வாவின் வெறித்தனத்தால் யாருக்கு என்ன லாபம் என எண்ணிப்பார்த்தே ன். முதலில் சாதாரண ஹிந்துக்களுக்கு ஏதாவது கிடைத்ததா என்றால் எதுவுமில்லை. முன்பை விட அதிகமாக ஜாதிவெறி தலைவிரித்தாடுகி றது. படித்த ஒவ்வொரு ஹிந்துவும் முஸ்லிம் நாடுகளிலும் கிருத்துவ நாடுகளிலும் வேலை கிடைத்தால், நாட்டை விட்டு ஓட தயாராக உள்ளார். பசி வந்தால் பத்தும் பறந்து விடும். பட்டினிக்கு முன்னால் தேசபக்தி பஜனை பாடமுடியாது.

அரபு நாடுகளில் வேலை செய்யும் இந்தியரில், 80 சதவீதத்துக்கும் மேலானோர் ஹிந்துக்கள். 20 சதவீதத்துக்கும் குறைவாகவே இந்திய முஸ்லிம்கள் உள்ளனர். 20 வருடங்களுக்கு முன்பு, மேனேஜர் சூப்பர்வைசர் போன்ற பொறுப்பான பதவியெல்லாம் பெரும்பாலும் ஹிந்துக்களுக்கே தரப்பட்டது. பாபரி மசூதி இடிப்பு, குஜராத் கொலைவெறியாட்டம் , 9/11, அரபு வசந்தம் ஆகியவற்றுக்குப் பின் இன்று நிலைமை மாறுகிறது. பல பொறுப்பான பதவிகளிலும், பெரிய வியாபாரங்களிலும ் இந்திய முஸ்லிம்களை காணமுடிகிறது.

குஜராத் கொலைகாரன் பிரதமன் ஆன பிறகு, அரபு தலைவர்களிடம் ஒரு பெரிய வினா எழுந்துள்ளது. நாளை ஹிந்துத்வா வெறியன் இஸ்ரேலுடன் கைகோர்த்து, இலங்கையில் தனி நாடு கேட்டது போல் அரேபியாவிலும் ஹிந்துக்களை உசுப்பிவிட்டு தனிநாடு கேட்டு போராடினால் என்ன செய்வது?.

அப்படியெல்லாம் எதுவும் நடக்காது என்று நமக்கு நாமே ஆறுதல் சொன்னாலும்,
வருடத்துக்கு 3 கோடியாக கட்டுக்கடங்காமல ் பெருகிவரும் இந்தியாவின் 130 கோடி ஜனத்தொகை, வேலையில்லா திண்டாட்டம், தண்ணீர் பிரச்னை, உணவுப்பற்றாக்கு றை, சுருங்கும் கனிமவளம், எரிகிற வீட்டில் பிடுங்கின வரை ஆதாயம் எனும் மனநிலை ஆகிவற்றைப் பார்த்தால், ஒரு கட்டத்தில் ஹிந்துக்கள் தனி நாடு கேட்டு அரேபியாவில் எழுந்து நின்றுவிடுவர் என்றே நம்பத்தோன்றுகிறது.

அப்படியொரு சூழ்நிலை ஏற்பட்டால், இந்தியா பாக்கிஸ்தான் பங்களாதேஷ் ஆப்கானில் வாழும் 80 கோடி இந்திய முஸ்லிம்களும் அரேபியாவுடன் ஒன்று சேர்ந்து இந்தியாவை உடைத்து இன்னொரு பாக்கிஸ்தானை இன்ஷா அல்லாஹ் உருவாக்கிவிடுவர ் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது. அப்புறம் உள்ளதும் போச்சுடா நொள்ளக்கண்ணாதான்.

இப்படியெல்லாம் எழுதலாமா என தயக்கமாக இருந்தது. "எனது ஹிந்து நாட்டில் நீ முஸ்லிமாக பிறந்ததே பெரிய தப்பு" என்று ஹிந்துத்வா வெறியன் அப்பாவி முஸ்லிம்களை துப்பாக்கியால் சுடும்போது, எவ்வளவு நாளைக்குத்தான் வாய்மூடி கைகட்டி வேடிக்கை பார்ப்பது? முள்ளை முள்ளால்தானே எடுக்க வேண்டும்?.

தூங்கிக்கொண்டிருந்த முஸ்லிம்களை தட்டியெழுப்பிய ஹிந்துத்வாவே, உனக்கு ரொம்ப தாங்க்ஸ்.
Quote | Report to administrator
Add comment
இது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.


சமீப கருத்துக்கள்