இஸ்ரேலின் இணைய பயங்கரவாதம்!

Share this:

{mosimage}Haganah என்றால் ஹீப்ரூ மொழியில் ‘பாதுகாப்பு’ என்று பொருள். இஸ்ரேல் நாடு உருவாக்கப்பட்ட பொழுது இப்பெயரில் ஒரு பயங்கரவாதக் குழு செயல்பட்டுக் கொண்டிருந்தது. இன்று ‘ஹாகானா’ இணையதள பயங்கரவாதத்தின் மறு உருவமாக உள்ளது. அமெரிக்காவில் இருந்து ஆண்ட்ரூ ஆரண் வெஸ்பேட் என்ற யூதர் இதனை உருவாக்கியுள்ளார்.

அமெரிக்காவையும் இஸ்ரேலையும் விமர்சிக்கின்ற இணையதளங்களைத் தேடிக் கண்டுபிடித்துத் தகர்ப்பதே இதன் நோக்கம். இவ்வாறு பாலஸ்தீன, ஈராக் பற்றிய செய்திகளை வெளியிடுகின்ற இஸ்லாமிய இயக்கங்களின் இணையதளங்கள் ஹாகானாவின் கரும் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. அமெரிக்கப் பொருள்களைப் புறக்கணிக்க வேண்டும் என்ற அறிஞர்களின் அறைக்கூவலையும் ஃபத்வாவையும் வெளியிட்ட பல  தளங்கள் அச்சுறுத்தப்பட்டுள்ளன.

 

தகவல் தொழில்நுட்ப நிபுணரான உமர் அப்துல் அஜீஸ் மஷீஹ் (omar@arabic-tech.com) ஒரு சம்பவத்தை விவரிக்கின்றார். சாதாரணமான செய்திகளை வெளியிடுகின்ற ஒரு தளத்தின் உரிமையாளர் ஒரு முறை உமரை தொலைபேசியில் அழைத்தார். தளத்தை ஏற்படுத்திக் கொடுத்த வெப் ஹோஸ்ட் நிறுவனம் தனது தளத்தை மூடி விடுமாறு வலியுறுத்தியுள்ளது. காரணத்தை விசாரித்த போது “உங்களது தளம் பயங்கரவாதத்திற்கு உதவுகிறது” என ஹகானா குற்றம் சுமத்தி இருப்பதாகத் தெரிவித்தனர். அமெரிக்கப் பொருள்களைப் புறக்கணிக்க வேண்டும் என்ற செய்தியை வெளியிட்டதே நீங்கள் ஊக்கம் அளிக்கின்ற பயங்கரவாதம் என்று அவர்கள் அதற்கு விளக்கமும் தந்தனர்.

 

வெப் ஹோஸ்ட் சேவை அளிக்கின்ற நிறுவனங்களுக்கு ‘பயங்கரவாத தளங்களின்’ பட்டியலை ஹாகானா நேரடியாக அனுப்பும். அமெரிக்க புலனாய்வு துறையான FBIயின் சம்மதத்துடன் இது அனுப்பப்படுகிறது என அதில் எழுதப்பட்டிருக்கும். இது ஒரு வகை அச்சுறுத்தல் தொனியில், கரும்பட்டியலில் உள்ள தனி நபர்களுக்கோ, நிறுவனங்களுக்கோ இணைய தள சேவை நிறுத்தப்படும்.

 

உலகில் பல யூத- கிறிஸ்தவ பயங்கரவாத அமைப்புகள் செயல்படுகின்றன என்ற போதிலும் ஹாகானாவுக்கு அது ஒரு விஷயமே அல்ல. இது இஸ்லாமிஸ்டுகளை எதிர்கொள்வதற்கே என்று துவக்கத்திலேயே குறிப்பிடப்படுகிறது. புத்தகம் பெற கனடாவில் இருந்து இயங்கும் உலக முஸ்லிம் கூட்டமைப்பின் (Muslim World League) இயக்குனரான முஹம்மது கத்தீப் அவர்களை abusinan@yahoo.com என்ற முகவரியில் தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ளலாம்.

 

நன்றி: சமரசம்


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.