காணாமல் போன 7 கோடி இந்தியர்களும் 20 லட்சம் மிஷின்களும்

Share this:

ந்திய ஒன்றியத்தின் நாடாளுமன்றத்திற்காக நடந்து முடிந்த 17ஆவது தேர்தலின்போது தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் 48 கிராமங்களில் வாழும் 40 ஆயிரம் வாக்களர்களின் பெயர்களை,   வாக்காளர்களின் பட்டியலில் காணவில்லை என சத்தியம் தொலைக்காட்சி உட்பட எல்லா ஊடகங்களும் செய்தி வெளியிட்டன.

தங்களுக்கு வாக்களிக்க மாட்டார்கள் என நிச்சமாகத் தெரிந்த தலித்களையும் முஸ்லிம்களையும் தேர்ந்தெடுத்து, அவர்களில் 7 கோடி பேரை வாக்காளர்களின் பட்டியலிலிருந்து பாஜகவும் அதன் தேர்தல் கூட்டாளியான இந்தியத் தேர்தல் ஆணையமும் சேர்ந்து நீக்கியுள்ளனர் எனும் சதிச் செயல் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது:

லோக்சபா தேர்தலில் 7 கோடி முஸ்லிம், தலித் வாக்காளர்கள் நீக்கம்… ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ’ஷாக்’ அறிக்கை

லோக் சபா தேர்தலில் மோசடி நடந்துள்ளது.. 64 மாஜி ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பகீர் புகார். லோக்சபா தேர்தலில் 7 கோடி முஸ்லிம்கள், தலித்துகள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர்; ஆனால் தேர்தல் ஆணையம் இது தொடர்பாக எந்த விளக்கமும் தரவில்லை என 64 முன்னாள் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

30 ஆண்டுகளில் தற்போதைய லோக்சபா தேர்தல்தான் மிகவும் மோசடியானது என விமர்சித்து தேர்தல் ஆணையத்துக்கு முன்னாள் ஆட்சிப் பணி அதிகாரிகள் கூட்டறிக்கை அனுப்பியுள்ளனர். அதில் கூறப்பட்டுள்ளதாவது:  4 கோடி முஸ்லிம்கள், 3 கோடி தலித்துகள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதற்கு தேர்தல் ஆணையம் சரியான விளக்கம் தரவில்லை.

20 லட்சம் வாக்குப் பதிவு இயந்திரங்கள் மர்மமான முறையில் மாயமாகின. இது தொடர்பாக மும்பை உயர்நீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கும் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு இன்னமும் தேர்தல் ஆணையம் பதிலளிக்கவில்லை.

https://www.youtube.com/watch?v=Mlc20en5Qn4

வாக்குப் பதிவு நாளுக்கு முன்னதாக வாக்குப் பதிவு இயந்திரங்கள் இடம் மாற்றம் செய்யப்பட்டன. இது தொடர்பாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. ஆனால் தேர்தல் ஆணையம் போதுமான விளக்கத்தைத் தரவில்லை.

பதிவான வாக்குகள், எண்ணப்பட்ட வாக்குகளின் வேறுபாடுகள் குறித்தும் தேர்தல் ஆணையம் கருத்து தெரிவிக்கவில்லை. வாக்குப் பதிவு இயந்திரத்தில் பொருத்தப்பட்ட ஒப்புகைச் சீட்டுகளில் எண்ணப்பட்டவை குறித்து எதுவுமே தேர்தல் ஆணையம் தெரிவிக்கவில்லை. இவ்வாறு ஆட்சிப் பணி அதிகாரிகள் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி : Mathivanan Maran | One India


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.