முகப்பு

இஸ்லாம்

செய்திகள்

தகவல்

கட்டுரைகள்

சேவைகள்

தொடர்பு கொள்க!

English

கட்டுரைகள்

"பாபர் மஸ்ஜித் இடிப்பின் போது இந்தியாவே அமளிக்காடானது. ஆனாலும், தமிழ்நாடு அமைதியாகவே இருந்தது'' என்று இன்றும் பெருமை பொங்க கூறிக் கொண்டிருக்கிறோம்.

இந்தியாவெங்கும் சிறுபான்மையினரை எளிதில் வேட்டையாடுகிறார்கள்; தமிழ்நாட்டில் அது முடியாது.

இந்தியாவெங்கும் பாதிக்கப்படும் சிறுபான்மையின மக்கள் அவர்களாகவே திரண்டு அவர்களின் நீதிக்காகப் போராட வேண்டும்; தமிழ் நாட்டிலோ சிறுபான்மையினரின் கரங்களோடு கோடி கரங்கள் இணையும். அவர்களின் உரிமைகளுக்காக கோடி குரல்கள் ஒலிக்கும். ஏனெனில், இது பெரியார் மண்.

தமிழகத்தின் சமூகவியலிலும் அரசியலிலும் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய உறவாக, திராவிட இயக்க - முஸ்லிம் உறவு அமைந்துள்ளது. சாதியையும் தீண்டாமையையும் எதிர்த்த பெரியார், ""இன இழிவு நீங்க இஸ்லாமே அருமருந்து'' என்றார். அத்துடன், முஸ்லிம்களின் அரசியலுக் கும் ஆதரவாக நின்றார். முஸ்லிம்களுக் கான தனி நாடு கோரிக்கையை ஆதரித்தார். முஸ்லிம்களுக்கு தனி வகுப்புவாரி ஒதுக்கீடு வேண்டும் என்றார். முஸ்லிம்களை "அந்நியர் களாக' முத்திரை குத்தும் சதிக்கு எதிராக, அவர்களை "திராவிடர்கள்' என அணைத்துக் கொண்டார். இதன் விளைவாக முஸ்லிம்களின் நிகழ்ச்சி களில் பெரியார் சிறப்பு அழைப்பாளரானார்.

பல முஸ்லிம் எழுத்தாளர்கள் "குடிஅரசு' இதழில் தொடர்ச்சியாக எழுதினர். முஸ்லிம்களுக்கு ஏதேனும் செய்தி போக வேண்டுமானால் குடிஅரசு இதழில் எழுதினால் போதும் எனும் அளவுக்கு நிலை இருந்தது. பெரியார் தீவிர கடவுள் மறுப்பாளர் என்ற போதும், இஸ்லாமிய மார்க்க அறிஞரும் திருக்குர்ஆனை முதன்முதலில் தமிழில் மொழிபெயர்த்தவருமான அப்துல் ஹமீது பாக்கவியுடன் நெருக்கமான நட்பை கொண்டிருந் தார். இஸ்லாம் தொடர்பான கேள்விகளையும் விளக்கங்களையும் அவரிடம் உரையாடி அறிந்து கொண்டார். மறுபுறம் அரசியல் களத்தில் நாகூர் ஹனீபா போன்ற இளைஞர்கள் சுயமரியாதை இயக்கத்தில் இணைந்து பெரியாரின் தொண்டர்களாக களமாடினர். இந்த உறவை அண்ணா மேலும் வளர்த்தெடுத்தார்.

ஆளூர் ஷாநவாஸ்தி.மு.க.வுடன் தேர்தல் கூட்டணி கண்ட முதல் அரசியல் கட்சி முஸ்லிம் லீக் ஆகும். 1959 களில் நடைபெற்ற திருச்செங்கோடு நாடாளுமன்றத் தேர்தல், திருவண்ணாமலை சட்டப் பேரவை தேர்தல் ஆகிய இரு தொகுதி தேர்தல்களும் தமி ழகத்தின் அரசியல் வரலாற்றையே  மாற்றியமைத் தன. இரண்டு தொகுதிகளிலும் தி.மு.க. பெற்ற பெரும் வெற்றி, 1962 மற்றும் 1967 தேர்தல்களின் போக்கை தீர்மானித்தன. இந்த இரு தொகுதிகளுக் கான வெற்றி விழாவை கோவையில் மிகப்பெரிய அளவில் தி.மு.க. கொண்டாடியபோது மேடையில் பேசிய அண்ணா, இந்த வெற்றிக்கு காரணமானவர் என காயிதே மில்லத்தை குறிப்பிட்டு நன்றி கூறினார். அன்றிலிருந்து இன்று வரை, அதாவது காயிதே மில்லத் காலம் முதல் காதர் மொகிதீன் காலம் வரை, தி.மு.க. - முஸ்லிம் லீக் உறவு தொடர்ந்து கொண்டிருக்கிறது. இடையிடையே சில முரண்கள் இருந்தாலும் அவ்விரு கட்சிகளும் பெரும்பாலும் இணைந்தே பயணிக்கின்றன.

1990 களுக்குப் பிறகு தோன்றிய த.மு.மு.க. போன்ற அமைப்புகள் முஸ்லிம் இட ஒதுக்கீடு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இளைஞர்களை பெருமளவில் அணிதிரட்டின. 1997-இல் கோவையில் நடைபெற்ற கலவரமும் அதன் பின்னர் நடைபெற்ற குண்டு வெடிப்பும் தி.மு.க. - முஸ்லிம் கள் இடையே பெரும் விரிசலை ஏற்படுத்தின. முன்னெச்சரிக்கை கைதுகள், போராட்டங்களுக்கான தடைகள் என தி.மு.க. அரசால் முஸ்லிம்கள் கடும் நெருக்கடிகளை சந்தித்தனர். பின்னர் 1999 -இல் பா.ஜ.க.வுடன் தி.மு.க. அணி சேர்ந்தபோது, முற்றாக தி.மு.க.வை வெறுக்கும் நிலைக்கு முஸ்லிம்கள் ஆளாயினர். எனினும், தி.மு.க. கட்சிக்குள் இருந்த முஸ்லிம்கள் எவரும் கட்சிக்கு எதிராக பேசவோ கட்சியை விட்டு வெளியேறவோ இல்லை. 2004-இல் பா.ஜ.க அணியிலிருந்து வெளியேறி வலு வான மதச்சார்பற்ற அணியை தி.மு.க. கட்டியபோது, பழைய கசப்புகளை மறந்து மீண்டும் முஸ்லிம்கள் தி.மு.க.வை ஒட்டுமொத்தமாக ஆதரித்தனர்.

2006-இல் பெரும்பான்மை பலமின்றி அமைந்த தி.மு.க. ஆட்சியை மைனாரிட்டி தி.மு.க. ஆட்சி என வர்ணித்தார் ஜெயலலிதா. அதற்கு விடையளித்த கலைஞர் "ஆம், இது மைனாரிட்டிகளின் ஆட்சி' தான் என்றார்.

அதற்கேற்ப 2007-இல், முஸ்லிம்களுக்கும் கிறித்தவர்களுக்கும் சேர்த்து 7 விழுக்காடு தனி இட ஒதுக்கீட்டை சட்டமாக்கினார். தமக்கான இடஒதுக்கீடை விட அதிக பயனை ஏற்கெனவே பெற்றுக் கொண்டிருப்பதாகக் கூறி கிறித்தவர்கள் அதை திருப்பியளித்தனர். முஸ்லிம்களுக்கான 3.5% இட ஒதுக்கீடு மட்டும் நடைமுறையில் உள்ளது. அதையும் 5 விழுக்காடாக உயர்த்தக் கோரி முஸ்லிம்கள் குரல் எழுப்பி வருகின்றனர். முஸ்லிம்கள் தனி இடஒதுக்கீடு பெற அடிப்படையாக அமைந்தது அவர்கள் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டதேயாகும். அதையும் செய்தவர் கலைஞரே. 1971 முதல் 1976 வரை தி.மு.க. ஆட்சி நடைபெற்ற போதுதான், உருது பேசும் முஸ்லிம்கள் உட்பட முஸ்லிம்களில் பல வகையினர் பிற் படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டனர்.

உருதுமொழி பேசும் முஸ்லிம்களின் கோரிக்கையை ஏற்று உருது அகாடமியை ஏற்படுத்தியது, உலமா நலவாரியம் அமைத்தது, காயிதே மில்லத் பெயரில் சாலைகள், கல்லூரிகள், பாலங்கள் அமைத்ததோடு மணிமண்டபம் எழுப்பியது ஆகியன கலைஞரின் குறிப்பிடத்தக்க பணிகளாகும். எனினும், 2006 - 2011 ஆட்சியில் கொண்டுவரப் பட்ட சமச்சீர் கல்வியால் உருது மொழிக்கு இடர் வந்ததும், கட்டாய திருமண பதிவு சட்டத்தால் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட பாதிப்பும் அப்படியே தொடர்கிறது.

1947 முதல் 1962 வரை காங்கிரஸ் ஆட்சியில் தமிழக அமைச்சரவையில் முஸ்லிம் பிரதிநிதித் துவமே வழங்கப்படாத நிலையில், முஸ்லிம்களுக்கு அமைச்சரவை யில் இடமளிக்க வேண்டும் என குரல் எழுப்பினார் அண்ணா. அதன்பிறகே 1962-இல் கடைய நல்லூர் மஜீத் அமைச்சராக காங்கிரஸ் அமைச்சரவையில் இடம் பெற்றார். 47 முதல் 62 வரை தமிழக சட்டமன்ற மேலவைக்கும் முஸ்லிம்கள் நியமிக்கப்படவில்லை. தி.மு.க. தான் திருச்சி ஜானி அவர்களை மேலவை உறுப்பினர் ஆக்கி யது. மேலும், மேலவை, மாநிலங்களவை, மக்க ளவை, சட்டப் பேரவை என, தொடர்ச்சியாக தி.மு.க. சார்பிலும் தி.மு.க. ஆதரவுடன் முஸ் லிம் லீக் சார்பிலும் முஸ்லிம் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அமைச்சரவையிலும் முஸ்லிம்களுக்கு கட்டாயம் இடம் அளித்து வந்துள்ளது தி.மு.க.

தி.மு.க.வுடன் ஒப்பிடும் அளவுக்கு "அ.தி.மு.க. - முஸ்லிம்கள்' உறவில் பெரிதாக சொல்வதற்கு எதுவும் இல்லை. எம்.ஜி.ஆர் கட்சி தொடங்கிய போதும் ஆட்சியில் இருந்த போதும் முஸ்லிம்களை அவரால் ஈர்க்க முடியவில்லை. மேலும் 1980-களில் நடைபெற்ற மண்டைக்காடு கலவரம், இந்து முன்னணியின் வருகை, மீனாட்சிபுரம் மதமாற்றத்தை தடுக்க தமிழக அரசு முயன்றது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அ.தி.மு.க.வுக்கும் முஸ்லிம்களுக்கும் இடைவெளியே அதிகமானது. அதன்பிறகு 1990-களில் ஜெயலலிதா கரசேவையை ஆதரித்ததும், தடா சட்டத்தின் மூலம் முஸ்லிம்கள் பலரை சிறைப்படுத்தியதும், 1998-இல் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்து அக்கட்சி தமிழகத்தில் காலூன்ற வழியமைத்ததும் முஸ்லிம்களிடம் கடும் வெறுப்பை ஏற்படுத்தியது.  பின்னர் வாஜ்பேயி அரசை அவர் கவிழ்த்ததும், பா.ஜ.க - தி.மு.க. கூட் டணி அமைந்ததும் ஜெயலலிதா - முஸ்லிம்கள் இடையே நெருக்கத்தை உருவாக்கின. 1999-இல் சென்னை சீரணி அரங்கில் த.மு.மு.க. நடத்திய முஸ்லிம்களின் வாழ்வுரிமை மாநாட்டில் முழங்கினார் ஜெயலலிதா.

2001-இல் மீண்டும் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தபோது அமைச்சரவையில் முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை மறுத்தார், "ராமர்கோயிலை இந்தியாவில் கட்டாமல் வேறு எங்கே கட்டுவது' என்று கேட்டார். பொது சிவில் சட்டம் வேண்டும் என்றார். ஆந்திராவில் முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டதை எதிர்த்து கருத்து சொன் னார். போப் ஜான் பாலை கடுமையாகத் தாக்கினார். மதமாற்றத் தடைச்சட்டம் மற்றும் ஆடு, கோழி பலியிட தடைச்சட்டம் கொண்டு வந்தார். மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்க குஜராத் சென்றார். முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க முயற்சி செய்வதாகக் கூறி, முஸ்லிம் அமைப்புகளின் ஆதரவைப் பெற்றுவிட்டு எதுவுமே செய்யாமல் ஏமாற்றினார். இப்படி நிறைய! ஆனாலும், அவரது ஆட்சியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளோ, முஸ்லிம் கைதுகளோ பெருமளவில் இல்லை என்பதும், நீண்ட காலத்துக்குப் பிறகு முஸ்லிம் கட்சி ஒன்று (மனித நேய மக்கள் கட்சி) சொந்த சின்னத்துடன் பேரவைக்குள் நுழைய வழியமைத்தார் என்பதும், இந்து முன்னணியின் எதிர்ப்பையும் மீறி, திப்பு சுல்தான் ஹைதர் அலிக்கு மணிமண்டபம் கட்ட ஆணையிட்டார் என்பதும் அவர் மீதான பழைய கசப்புகளை போக்கியது.

மொத்தத்தில் கடந்த 50 ஆண்டுகால தி.மு.க. -அ.தி.மு.க. ஆட்சியில் முஸ்லிம்கள் தி.மு.க.விற்கே அதிகம் வாக்களித்துள்ளனர். தி.மு.க.விடமிருந்தே அ.தி.மு.க.வைவிடவும் அதிகம் பயனடைந்துள்ளனர். எனினும், முஸ்லிம்களின் அரசியல் சமூக பொருளாதார நிலை என்பது பெரிய மாற்றங்கள் எதுவும் இன்றி துயரிலேயே தொடர்கிறது.

- ஆளூர் ஷா நவாஸ்

Comments   
Indian
+1 #1 Indian 2017-04-07 10:55
// பெரியார் தீவிர கடவுள் மறுப்பாளர் என்ற போதும், இஸ்லாமிய மார்க்க அறிஞரும் திருக்குர்ஆனை முதன்முதலில் தமிழில் மொழிபெயர்த்தவரு மான அப்துல் ஹமீது பாக்கவியுடன் நெருக்கமான நட்பை கொண்டிருந் தார். //
------------------

கடவுள் இல்லையென சொன்னாலும், அல்லாஹ்வையோ, திருக்குரானையோ, முஹம்மது நபிகளையோ ஒரு முறைகூட பெரியார் இழிவாக பேசியதில்லை. ஜாதி ஒழிய நாத்திகனாக மாறு என ஒரு முறை கூட சொல்லவில்லை. மாறாக ஜாதியை ஒழிக்க இஸ்லாத்தை தழுவு என பலமுறை கூறியுள்ளார்.
---------------------

ஒரு விஷயத்தை தெளிவுபடுத்த விரும்புகிறேன். “இஸ்லாத்துக்கு சர்ட்டிபிக்கேட் தர தந்தை பெரியார் தேவையில்லை. எந்த தோலான் துருத்தியானும் தேவையில்லை. அல்லாஹ்வின் சத்திய வேதம் திருக்குரானும் அண்ணல் நபி(ஸல்) வாழ்ந்துகாட்டிய வழிமுறையும்தான் எங்களுக்கு வழிகாட்டி. அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்ற போராடும் ஒவ்வொரு மனிதனும் எங்களுடைய தோழர். அந்த வகையில், பார்ப்பனீயத்தை அடக்கிய தந்தை பெரியாரும், பார்ப்பன பயங்கரவாதத்தை தோலுரித்த ப்ராஹ்மண சகோதரர் கர்கரேயும் இஸ்லாமியரின் தோழர்களே”.

மற்றபடி பெரியாரை வைத்து பிழைப்பு நடத்தும் அவசியமோ தேவையோ இஸ்லாமியருக்கு கிடையாது. சகோதரர் அப்துல்லாஹ் பெரியார்தாசன் சொன்னது போல் "எங்களுக்கு பெரியவனுக்கெல்ல ாம் பெரியவன் அல்லாஹ்வின் துணை இருக்கிறது”. அதுபோதும். அல்லாஹு அக்பர்.
Quote | Report to administrator
Indian
+1 #2 Indian 2017-04-08 19:23
// முஸ்லிம்களின் அரசியல் சமூக பொருளாதார நிலை என்பது பெரிய மாற்றங்கள் எதுவும் இன்றி துயரிலேயே தொடர்கிறது. //
---------------------------

தமிழகத்தின் அடுத்த முதல்வராக ஒரு இஸ்லாமியர் வரமுடியுமா?:

1947ல், கிட்டத்தட்ட 40 சதவீத இஸ்லாமியர் பெரும்பான்மையாக வாழ்ந்த பகுதி மேற்கு பாக்கிஸ்தான், கிழக்கு பாக்கிஸ்தான்(இன ்றைய பங்களாதேஷ்) என பிரித்து தரப்பட்டது. மீதி 60 சதவீத இஸ்லாமியர் டெல்லி முதல் கன்னியாகுமரி வரை பரவி இருந்ததால் அவர்களுடைய நிலப்பங்கை பிரிக்க முடியவில்லை. இன்று “பாக்கிஸ்தான் + பங்களாதேஷ்” ஜனத்தொகை 40 கோடி — ஆக 40 சதவீத இஸ்லாமியரின் ஜனத்தொகை 40 கோடியாக உயர்ந்திருக்கைய ில், 60 சதவீத இஸ்லாமியரின் ஜனத்தொகை எவ்வளவு கோடியாக பல்கி பெருகியிருக்கும ் என்பதை கண்டுபிடிக்க பெரிய அறிவுஜீவியாக இருக்க வேண்டிய அவசியமில்லை.

தமிழகத்தில் இஸ்லாமியரின் ஜனத்தொகை கிட்டத்தட்ட 30 சதவீதம். ஆனால் 50 சதவீதத்துக்கு மேலான முஸ்லிம்களிடம் வாக்கு அட்டை கிடையாது. "ராமன் ஆண்டாலும் ராவன் ஆண்டாலும் எனக்கெதுவும் கிடைக்காது?. நான் போறேன் சவூதிக்கு" எனும் மனநிலையும் அதிகாரிகளின் கெடுபிடியும்தான ் இதற்கு காரணம். தேர்தல் வரும் வரை இஸ்லாமிய இயக்கங்கள் தூங்கிவிட்டு, தேர்தல் அறிவிக்கப்பட்டத ும் போய் ஓட்டு கேட்டால் யார் ஓட்டு போடுவர்?.

கடந்த 50 ஆண்டுகளாக இடைவிடாமல் ஏமாந்து போய், இன்று நேர்மையான ஆட்சியாளருக்காக தமிழக மக்கள் ஏங்குகின்றனர். தொகுதிவாரியாக மக்களை சந்தித்து அவர்களுடைய பிரச்னைகளை தீர்க்க தோள்கொடுப்பதின் மூலம் மக்களின் நம்பிக்கையை வெல்ல முடியும். "ஏதாவது பிரச்னையென்றால் பாய கூப்புடு" எனும் நிலையை இஸ்லாமிய இயக்கங்கள் உருவாக்கினால், "நம்ம ஓட்டு பாய்க்குதான்" என தமிழக மக்கள் ஒரு நேர்மையான இஸ்லாமியரை அடுத்த முதல்வராக தேர்ந்தெடுப்பர் . கலிஃபா உமர் போன்ற நேர்மை இருந்தால், இந்தியாவை 800 வருடங்கள் ஆட்சி செய்த இஸ்லாமியரை தேடி மீண்டும் ஆட்சி அதிகாரம் இன்ஷா அல்லாஹ் வரும்.
Quote | Report to administrator
ஆதி
-1 #3 ஆதி 2017-04-10 09:11
// 1947ல், கிட்டத்தட்ட 40 சதவீத இஸ்லாமியர் பெரும்பான்மையாக வாழ்ந்த பகுதி மேற்கு பாக்கிஸ்தான், கிழக்கு பாக்கிஸ்தான்(இன ்றைய பங்களாதேஷ்) என பிரித்து தரப்பட்டது. மீதி 60 சதவீத இஸ்லாமியர் டெல்லி முதல் கன்னியாகுமரி வரை பரவி இருந்ததால் அவர்களுடைய நிலப்பங்கை பிரிக்க முடியவில்லை.//
----------------

ஒரு வேளை 60 சதவீத முஸ்லிம்களின் நிலப்பங்கும் பிரிக்க முடிந்திருந்தால ், பாக்கிஸ்தானுடன் சேர்ந்து போயிருப்பார்கள் என்பது தெளிவாகிறது. அதாவது சரியான வாய்ப்பு கிட்டினால், இஸ்லாமியர் இன்னொரு பாக்கிஸ்தானை உருவாக்குவார்கள ா?.
Quote | Report to administrator
Indian
0 #4 Indian 2017-04-10 10:58
// சரியான வாய்ப்பு கிட்டினால், இஸ்லாமியர் இன்னொரு பாக்கிஸ்தானை உருவாக்குவார்களா?.//
------------------------

உலக மக்கள் அனைவருக்கும் சமத்துவம், சமநீதி, சகோதரத்துவம் வழங்க வந்ததே இஸ்லாம். ஒருவர் ஐந்து வேளை தொழுது, 30 நாள் நோன்பு நோற்று, ஹஜ் செய்து விட்டு "யார் எக்கேடு கெட்டால் எனக்கென்ன?. நான் ரொம்ப யோக்கியன். தீமையை கண்டால் கண், காது, வாய் ஆகிய அனைத்தையும் காந்தி குரங்கு போல் பொத்திக்கொண்டு போய்விடுவேன்" என சொன்னால், "அநீதியை மனதளவில் கூட எதிர்க்காதவன், சொர்க்கம் புகமாட்டான். அவனுடைய வணக்கம் எனக்கு தேவையில்லை" என அல்லாஹ் திருக்குரானில் அறிவிக்கிறான்.

அப்படியிருந்திருந்தால், அண்ணல் நபியை "ஹீரா குகையிலே உட்கார்ந்து கண்ணை மூடிக்கொண்டு என்னை தவம் செய்யுங்கள்" என அல்லாஹ் விட்டிருப்பான். திருக்குரானை அவர் கையில் கொடுத்து, "மனித குலத்துக்கு நல்வழி காட்டுங்கள். அநீதிக்கெதிராக ஜிஹாத் செய்யுங்கள்" என அல்லாஹ் கட்டளையிட்டிருக ்க மாட்டான்.

இந்த அடிப்படையில் பார்த்தால், "முஸ்லிம்கள் மட்டும் நல்லபடியாக பிரியாணி சாப்பிட்டு சந்தோஷமாக இஸ்லாமிய ராஜ்ஜியத்தில் வாழட்டும். ஹிந்து சகோதரர்கள் ஜாதிவெறியிலும், அறியாமையிலும் அடித்துக்கொண்டு சாகட்டும்" என கண்ணை மூடிக்கொண்டு எங்களால் போகமுடியாது. ஆகையால் அல்லாஹ்வின் சத்தியவேதம் திருக்குரானை அவர்களுக்கு கொடுத்து, கலீஃபா உமரின் நீதியான ஆட்சியை நிலைநாட்டி, வறுமையை ஒழித்து, எங்கள் தாய்நாடு இந்தியாவை 55 இஸ்லாமிய நாடுகளின் தலைவனாக உருவாக்கி, "எல்லோரும் எல்லாமும் பெற்று இல்லாமை இல்லாமல் வாழவேண்டும்" என்பதே எங்களுடைய துஆ. ஆமீன்.
Quote | Report to administrator
ராமகோபாலன்
-2 #5 ராமகோபாலன் 2017-04-11 11:25
// ஆகையால் அல்லாஹ்வின் சத்தியவேதம் திருக்குரானை அவர்களுக்கு கொடுத்து, கலீஃபா உமரின் நீதியான ஆட்சியை நிலைநாட்டி, வறுமையை ஒழித்து, எங்கள் தாய்நாடு இந்தியாவை 55 இஸ்லாமிய நாடுகளின் தலைவனாக உருவாக்கி,.. //
--------------------

வீணாக மனப்பால் குடிக்க வேண்டாம். 2022ல் இந்தியா ஹிந்து ராஷ்டிரமாகிவிடு ம். அதற்கு முன்னால், முஸ்லிம்கள் அனைவரும் சொத்துபத்தை விற்றுவிட்டு பாக்கிஸ்தானுக்க ோ, அரேபியாவுக்கோ போய்விடுவது நல்லது. காலம் தாழ்த்தினால், வெறுங்கையோடு வெளியேறும் நிலை வரும்.
Quote | Report to administrator
Indian
+1 #6 Indian 2017-04-11 15:54
// 2022ல் இந்தியா ஹிந்து ராஷ்டிரமாகிவிடு ம். அதற்கு முன்னால், முஸ்லிம்கள் அனைவரும் சொத்துபத்தை விற்றுவிட்டு பாக்கிஸ்தானுக்க ோ, அரேபியாவுக்கோ போய்விடுவது நல்லது. //
----------------------

தனி நாடு கேட்கும் சூழலுக்குத் தள்ளாதீர்கள்; தென்னிந்தியர்கள ் கருப்பர்கள் என்ற கருத்துக்கு மல்லிகார்ஜுன கார்கே பதிலடி…

பாரதீய ஜனதா கட்சியின் முன்னாள் எம்பியும், ஆர்எஸ்எஸ் அமைப்பின் சார்பில் வெளிவரும் வார இதழின் எடிட்டராகவும் பணிபுரிந்த தருண் விஜய், டெல்லியில் ஆப்பிரிக்க மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து அல்ஜசீரா தொலைக்காட்சிக்க ு பேட்டி அளித்திருந்தார்.

அதில் ‘‘நாங்கள் நிறவெறியர்கள் என்றால் ஏன், தென்னிந்தியர்கள ான தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் வசிக்கும் கருப்பர்களுடன் சேர்ந்து வாழவேண்டும்?… எங்களை சுற்றி கருப்பர்களும் இருக்கிறார்கள். இந்தியாவை நிறவெறி கொண்டவர்கள் என்று கூற முடியாது” என்று கூறியது பெரும் சர்ச்சையை எழுப்பியது

இது போன்ற நடவடிக்கைகள் “தனி நாடு கோரிக்கைக்கே தங்களை இட்டுச்செல்லும் ” என்றும் கார்கே அப்போது எச்சரிக்கை விடுத்தார்.
— thetimestamil
———————

2022க்கு முன் தந்தை பெரியார் கனவு கண்ட திராவிட நாடு வந்துவிடும் போல் தெரிகிறது. "சூழ்ச்சிக்காரன ுக்கெல்லாம் சூழ்ச்சிக்காரன் அல்லாஹ்" என திருக்குரான் உரைக்கிறது.
Quote | Report to administrator
Add comment
இது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.


சமீப கருத்துக்கள்