தோட்டாக்கள் துளைக்க முடியாத உண்மைகள் (இறுதிப் பகுதி)

Sample Image
Share this:

கார்கரே கொல்லப்பட்டதில் சதி நடந்தது என்பது உறுதி!

இந்திய மண்ணில் எங்கு ஓர் அசம்பாவிதம் நிகழ்ந்தாலும் காவல்துறை சம்பவ இடத்தை அடைவதற்கு முன்னர்கூட அச்சம்பவத்தின் பின்னணியில் செயல்பட்டவர்களைக் குறித்த தீர்க்கமான(!) முடிவுகளை, ஜனநாயகத்தின் ஆறாவது தூணாகக் கருதப்படும் ஊடகத்துறையினர் “கண்டுபிடித்து” பெரும்பாலான வேளைகளில் வெளியிட்டு விடுவர்.

சம்பவத்தைக் குறித்த காவல்துறையினரின் விசாரணைகளைப் பெரும்பாலும் இக்கண்டுபிடிப்புகளே சரியான திசையை விட்டு வழிமாற்றி விட்டுள்ளன.

மும்பை தீவிரவாதத் தக்குதல் தொடங்கிய கொஞ்ச நேரத்துக்குள் தாக்குதலுக்குக் காரணமானவர்களை இதுபோன்ற ஒரு மின்னஞ்சலை வைத்து கண்டுபிடித்து(!) ஊடகங்கள் வெளிப்படுத்தின. அதனைக் காவல்துறையினரும் ஏற்றுக் கொள்ளத் தயங்கவில்லை.

இம்முறை வந்த மின்னஞ்சல் மூலம் ஏற்கெனவே மின்னஞ்சல் மூலம் ‘உருவாக்கப்பட்டிருந்த ‘இந்தியன் முஜாஹிதீன்’ என்ற நிழல் தீவிரவாத அமைப்பின் தென்னக வடிவத்தின் பெயர் அறிமுகப்படுத்தப்பட்டது. “கார்கரே உட்பட A.T.S.ஸின் உயரதிகாரிகளைக் கொலை செய்தது தாங்களே” என அறிவித்த அந்த மின்னஞ்சல், கார்கரே முஸ்லிம்களுக்கு எதிராகச் செயல்பட்டார் என்ற காரணத்தையும் கூறியிருந்தது. மும்பை தாக்குதலின் ஆரம்ப நாட்களில் ஊடகங்கள் அனைத்திலும் நிறைந்து நின்ற அந்த “டெக்கான் முஜாஹிதீனைக்” குறித்த எவ்விதப் பேச்சும் ஆச்சரியமான விதத்தில் காணாமல் போயிற்று! அத்தோடு “டெக்கான் முஜாஹிதீனை” அறிமுகப்படுத்திய ஆரம்பத்தில் கனடாவிலிருந்தும் பின்னர் ரஷ்யாவிலிருந்தும் அனுப்பப்பட்டதாகக் கூறப்பட்ட அந்த மின்னஞ்சல் அனுப்பியவரைக் குறித்த செய்தியும் காணாமல் போய் விட்டது.

ஊடகங்கள் அனைத்தும், “இந்தியன் முஜாஹிதீனின்” தென்னகப் பதிப்பாக அறிமுகப்படுத்தி, பரபரப்பு ஏற்படுத்திய “டெக்கான் முஜாஹிதீன்” என்று ஒன்று இருக்கிறதா? இல்லையா?

“டெக்கான் முஜாஹிதீன்” என்ற அமைப்பு இருப்பது உண்மை எனில், அதனைக் குறித்த விசாரணையோ தகவல்களோ எதுவுமே அடுத்தகட்டத்தை நோக்கி நகராதது ஏன்?

அவ்வாறு ஓர் அமைப்பு இல்லையெனில், அப்போலி மின்னஞ்சல் எதற்காக அனுப்பப்பட்டது? அனுப்பியவர் யார்?

என் கேள்விகளுக்குப் பதில் கிடைக்காது என்று எனக்குத் தெரியும் – (கார்கரேயின் மனைவி) கவிதா கார்கரே!

தீவிரவாதத் தாக்குதலுக்கு இடையில் ஹேமந்த் கார்கரே கொல்லப்படுவதற்குண்டான சூழ்நிலை குறித்தத் தன் சந்தேகங்களுக்குப் பதில் தர எவரும் தயாராகததில் கவிதா கார்கரே கடும் அதிருப்தியில் உள்ளார்.

மஹாராஷ்டிரா A.T.S. தலைவராக இருந்த “ஹேமந்த் கார்கரே மற்ற இரு உயர் அதிகாரிகளுடன் கொல்லப்பட்டதற்கான பொறுப்பாளி யார்?” என்பதே கவிதா கார்கரேயின் கேள்வி. மாலேகோன் வழக்கில் துவங்கி பல்வேறு குண்டு வெடிப்பு வழக்குகளில் ஹிந்துத்துவவாதிகளுக்குள்ள தொடர்புகளை வெளிச்சத்துக் கொண்டு வந்ததில் சங்கபரிவாரத் தலைவர்களும் இயக்கங்களும் கார்கரேயைக் கடும் விமர்சனம் செய்திருந்தன. அவருக்கு எதிராக கொலை மிரட்டலும் விடுக்கப்பட்டிருந்தது.

கடந்த நவம்பர் 22 அன்று தங்களின் 28ஆம் திருமண கொண்டாட்டங்கள் கழிந்த அடுத்த 4 தினங்களில் கார்கரே கொல்லப்பட்ட பொழுது, தன் கணவரின் பிரிவை அவர் தீரத்துடன் எதிர் கொண்டார். மாலேகோன் விசாரணையில் ஹிந்துத்துவவாதிகளின் தொடர்பினை கார்கரே வெளிக்கொணர்ந்த நேரம், அவருக்கு எதிராகக் கடும் விமர்சனம் செய்த குஜராத் முதலமைச்சர் நரேந்திரமோடி, அவரது படுகொலைக்குப் பகரமாக வழங்கிய ஒரு கோடி ரூபாயை கவிதா கார்கரே வாங்கவும் மறுத்தார்.

“அன்று என்ன நடந்தது என்பதைக் குறித்து இனியும் எத்தனை நாட்கள் கேள்விகள் எழுப்பிக் கொண்டிருக்க முடியும்?. என் கேள்விகளுக்குப் பதில்கள் கிடைக்காது என்பது எனக்குத் தெரியும்” என ‘தி ஹிந்து’ நாளிதழுக்கு வழங்கிய பேட்டியின் பொழுது வருத்தத்துடன் தெரிவித்த அவர், “பாராளுமன்றத் தாக்குதல் குறித்த சந்தேகங்களே இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னும் முழுமையாக நீங்கவில்லை. பின்னர் எனக்கு எப்படி நிதி கிடைக்கும்?” என அவர் கோபத்துடன் கேள்வி எழுப்பினார்.

“எங்குத் தவறு நிகழ்ந்தது என ஒவ்வொருவரும் சுயபரிசோதனை செய்ய வேண்டியது அவசியம். தேசப்பற்று இன்று களங்கப்பட்டுள்ளது. ஆங்கில ஆட்சி காலத்தில் அது நம்மிடையே மிக உறுதியாக இருந்தது.” எனக் கூறிய அவர், திவிரவாதத்திற்கு எதிராகவும் மதசார்பின்மையைத் தகர்க்க முயலும் மதவெறியர்களுக்கு எதிராகக் கடுமையாக விமர்சனமும் செய்தார்.

தனது கணவர் கொல்லப்பட்டது, சந்தேகத்தை எழுப்புகின்றது எனவும் அவரது கொலைக்குப் பின்னணியில் சதியுண்டோ என்ற சந்தேகம் எழுவதாகவும் கவிதா கார்கரே கேள்வி எழுப்பியிருந்தார். ஆனால், இவ்விஷயத்தைக் குறித்துப் பேசுவதற்கோ அவரது சந்தேகத்தைத் தீர்ப்பதற்கோ எவரும் முன்வராதது அவரைக் கடும் கோபத்துக்குள்ளாக்கி இருக்கிறது.

மாலேகோன் குண்டுவெடிப்பை நடத்தியவர்கள், அதனை சிமி செய்தது போன்று செட்டப்பை உருவாக்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவ்வாறெனில், இந்த மின்னஞ்சலுக்கும் சொந்தக்காரர்கள் …?

எது எப்படி இருந்தாலும் கார்கரேயின் கொலையில் சர்வதேச அளவிலான கைகள் விளையாடியிருக்கின்றன என்பதையே “டெக்கான் முஜாஹிதீனை” அறிமுகப்படுத்திய ரஷ்ய மின்மடல் செய்தி தெரிவிக்கிறது.

என் கேள்விகளுக்குப் பதில் கிடைக்காது என்று எனக்குத் தெரியும் – (கார்கரேயின் மனைவி) கவிதா கார்கரே!

தீவிரவாதத் தாக்குதலுக்கு இடையில் ஹேமந்த் கார்கரே கொல்லப்படுவதற்குண்டான சூழ்நிலை குறித்தத் தன் சந்தேகங்களுக்குப் பதில் தர எவரும் தயாராகததில் கவிதா கார்கரே கடும் அதிருப்தியில் உள்ளார்.

மஹாராஷ்டிரா A.T.S. தலைவராக இருந்த “ஹேமந்த் கார்கரே மற்ற இரு உயர் அதிகாரிகளுடன் கொல்லப்பட்டதற்கான பொறுப்பாளி யார்?” என்பதே கவிதா கார்கரேயின் கேள்வி. மாலேகோன் வழக்கில் துவங்கி பல்வேறு குண்டு வெடிப்பு வழக்குகளில் ஹிந்துத்துவவாதிகளுக்குள்ள தொடர்புகளை வெளிச்சத்துக் கொண்டு வந்ததில் சங்கபரிவாரத் தலைவர்களும் இயக்கங்களும் கார்கரேயைக் கடும் விமர்சனம் செய்திருந்தன. அவருக்கு எதிராக கொலை மிரட்டலும் விடுக்கப்பட்டிருந்தது.

கடந்த நவம்பர் 22 அன்று தங்களின் 28ஆம் திருமண கொண்டாட்டங்கள் கழிந்த அடுத்த 4 தினங்களில் கார்கரே கொல்லப்பட்ட பொழுது, தன் கணவரின் பிரிவை அவர் தீரத்துடன் எதிர் கொண்டார். மாலேகோன் விசாரணையில் ஹிந்துத்துவவாதிகளின் தொடர்பினை கார்கரே வெளிக்கொணர்ந்த நேரம், அவருக்கு எதிராகக் கடும் விமர்சனம் செய்த குஜராத் முதலமைச்சர் நரேந்திரமோடி, அவரது படுகொலைக்குப் பகரமாக வழங்கிய ஒரு கோடி ரூபாயை கவிதா கார்கரே வாங்கவும் மறுத்தார்.

“அன்று என்ன நடந்தது என்பதைக் குறித்து இனியும் எத்தனை நாட்கள் கேள்விகள் எழுப்பிக் கொண்டிருக்க முடியும்?. என் கேள்விகளுக்குப் பதில்கள் கிடைக்காது என்பது எனக்குத் தெரியும்” என ‘தி ஹிந்து’ நாளிதழுக்கு வழங்கிய பேட்டியின் பொழுது வருத்தத்துடன் தெரிவித்த அவர், “பாராளுமன்றத் தாக்குதல் குறித்த சந்தேகங்களே இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னும் முழுமையாக நீங்கவில்லை. பின்னர் எனக்கு எப்படி நிதி கிடைக்கும்?” என அவர் கோபத்துடன் கேள்வி எழுப்பினார்.

“எங்குத் தவறு நிகழ்ந்தது என ஒவ்வொருவரும் சுயபரிசோதனை செய்ய வேண்டியது அவசியம். தேசப்பற்று இன்று களங்கப்பட்டுள்ளது. ஆங்கில ஆட்சி காலத்தில் அது நம்மிடையே மிக உறுதியாக இருந்தது.” எனக் கூறிய அவர், திவிரவாதத்திற்கு எதிராகவும் மதசார்பின்மையைத் தகர்க்க முயலும் மதவெறியர்களுக்கு எதிராகக் கடுமையாக விமர்சனமும் செய்தார்.

தனது கணவர் கொல்லப்பட்டது, சந்தேகத்தை எழுப்புகின்றது எனவும் அவரது கொலைக்குப் பின்னணியில் சதியுண்டோ என்ற சந்தேகம் எழுவதாகவும் கவிதா கார்கரே கேள்வி எழுப்பியிருந்தார். ஆனால், இவ்விஷயத்தைக் குறித்துப் பேசுவதற்கோ அவரது சந்தேகத்தைத் தீர்ப்பதற்கோ எவரும் முன்வராதது அவரைக் கடும் கோபத்துக்குள்ளாக்கி இருக்கிறது.

இந்தியாவில் தீவிரவாதத்தின் யதார்த்த முகமான ஹிந்துத்துவத்தின் பசுத்தோல் முகமூடியை அகற்றிய கார்கரேயின் கொலையில் இதுபோன்ற பல கேள்விகள் விடையின்றி தொக்கி நிற்கும் வேளையில், இத்தொடரின் இறுதி பாகமான இப்பகுதியில் பிரபல ஊடகவியலாளரும் மனித உரிமை ஆர்வலரும் எழுத்தாளருமான டாக்டர். அமரேஷ் மிஸ்ரா, படுகொலை செய்யப் பட்ட மும்பை A.T.S. தலைவர் கார்கரேயின் கொலையின் பின்னணியில் உள்ள சதியை வெளிக்கொணர முயற்சி மேற்கொண்டுள்ளார். அவரது செவ்வியிலிருந்து:

* “மும்பைத் தாக்குதலின் பின்னணியில் மொஸாத் தான் செயல்பட்டுள்ளது” என்ற மிகவும் வித்தியாசமான ஒரு கருத்தை நீங்கள் வெளிப்படுத்தியிருந்தீர்கள். இது தொடர்பாக அரசின் நிலைபாடுகளையும் நீங்கள் கேள்விக்குட்படுத்தினீர்கள். உங்களை இத்தகைய நிலைபாட்டிற்குக் கண்டு சென்றது எது?

கடந்த சில ஆண்டுகளாக மஹாராஷ்டிர, குஜராத் அரசியலை நான் உற்றுநோக்கி வருகிறேன். அந்த இடங்களில் வர்க்க அரசியல் மிக ஆழமாக வேரூன்றியுள்ளது. மும்பைக் காவல்துறை என்பது இந்தியாவிலேயே மிகவும் அதிகமாகக் காவிமயமாக்கப் பட்ட ஒன்றாகும். 1993இல் குண்டுவெடிப்பு நடந்த வேளையில் நூற்றுகணக்கான முஸ்லிம் இளைஞர்களை அநியாயமாகக் கைது செய்து கொடுமை செய்ததும் பெண்களையும் குழந்தைகளையும் கொடுமைப் படுத்தியதுமான வரலாறு அவர்களுக்குண்டு.

தீவிரவாதத்தைக் குறித்தத் தற்போதைய பார்வையை மாற்றியமைத்ததே கார்கரே செய்த குற்றம். தீவிரவாதிகளில் முஸ்லிம்கள் மட்டுமல்ல, ஹிந்துக்களும் – முக்கியமாக ஆர்.எஸ்.எஸ்காரர்களும் – உண்டு என்பதை அவர் நிரூபித்தார். அவர்களுக்குக் கொலை செய்யும் பயங்கராவதக் குழுக்கள் உண்டு என்பதை அவர் வெளிக் கொணர்ந்தார். பஜ்ரங்தள் அலுவலகத்திலிருந்து கிலோ கணக்கில் அமோனியம் நைட்ரேட் கண்டுபிடிக்கப்பட்டது. இதே அம்மோனியம் நைட்ரேட்தான் 2006ல் மும்பை சபர்பன் ரயில் மற்றும் மாலேகோன் குண்டுவெடிப்புகளில் பயன்படுத்தப்பட்டது.

அன்றைய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் டெல்லியில் கலந்து கொண்ட முஸ்லிம் தலைவர்களின் கூட்டத்தில் இவ்விஷயங்களை நாங்கள் சுட்டிக் காட்டியிருந்தோம். மஹாராஷ்டிர உள்துறை அமைச்சர், “முன்னாள் மொஸாத் உறுப்பினர்களைப் பாதுகாப்பிற்காக நியமிக்க வேண்டும்” எனக் கோரியிருந்ததன் ஆதாரங்களுடன் அன்று நான் அக்கூட்டத்தில் பேசினேன்.

“அந்தக் குண்டுவெடிப்புகளில் ஹிந்துத்துவாக்களின் தொடர்பும் அவர்களுக்கு மொஸாத் மற்றும் சி.ஐ.ஏயுடனான தொடர்பையும் குறித்து விசாரணை நடத்த வேண்டும்” எனக் கோரிக்கை விடுத்தேன். அவ்விஷயங்கள் எதையுமே அரசு அங்கீகரிக்கும் என அன்று நான் எதிர்பார்த்திருக்கவில்லை.

கார்கரே அவ்வழக்கை விசாரிக்க ஆரம்பித்த உடன், அவை ஒவ்வொன்றாக வெளியாகின. இந்தியாவிலேயே போன்ஸாலா போன்ற தீவிரவாத பயிற்சிக் கூடங்கள் செயல்படும் விஷயத்தைக் கார்கரே கண்டறிந்தார்.

* பாகிஸ்தானில் பயிற்சிக் கூடங்களும் அவர்கள் எல்லை கடந்து வந்து தாக்குதல் நடத்துவதும் உண்மைகளல்லவா? பாகிஸ்தான் அரசின் ஆதரவின்றி இவை நடக்குமா?

அபினவ் பாரத் முதலான அமைப்புகள் சொந்த மண்ணில் தீவிரவாதப் பயிற்சி வகுப்புகள் நடத்தும்போது, நாம் எவ்வாறு பாகிஸ்தானை மட்டும் குறித்துப் புகார் தெரிவிப்பது?. கார்கரே கண்டறிந்த விஷயங்கள் இந்தியாவிற்குள் மட்டுமே முடிந்து விடும் காரியங்கள் அல்ல என்பதை நீங்கள் புரிந்துக் கொள்ள வேண்டும். முஸ்லிம்களை மட்டுமே தீவிரவாதிகளாகச் சித்தரித்துக் கொண்டுள்ள அமெரிக்காவின் நிலுவையிலுள்ள ‘கேம்’ திட்டத்தைத்தான் கார்கரே தகர்த்தெறிந்தார். மற்றவர்களிலும் தீவிரவாதிகளும் தீவிரவாதப் பயிற்சி கூடங்களும் உண்டு என்பதை அவர் வெளிக்கொணர்ந்தார். இவர்கள் அமெரிக்காவுடன் நல்ல தொடர்பு வைத்திருப்பவர்களாவர்.

நவம்பர் 26 அன்று மும்பை தாக்கப்பட்ட சமயத்தில் கார்கரே சம்பவ இடம் வந்து ஹெல்மெட் மற்றும் குண்டு துளைக்காத ஆடை அணியும் காட்சியைத் தொலைகாட்சியில் நான் கண்டவேளை என் மனைவியிடம், “கார்கரே இன்றே கொல்லப்படுவார்” என்று கூறியிருந்தேன். 30 நிமிடத்திற்குள்ளாக அது நடக்கவும் செய்தது. அவருடன் காந்தேயும் ஸலஸ்கரும் கொல்லப்பட்டார்கள். இவர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்பட்ட கதை சந்தேகத்தை உருவாக்குவதாக இருந்தது.

மூன்று முக்கிய உயரதிகாரிகள், ஒரே வண்டியில், பாதுகாப்பு இல்லாமல் ஒருபோதும் போகக்கூடாத இடத்திற்குச் செல்கின்றனர். கார்கரே இஸட் பிரிவு பாதுகாப்புள்ள அதிகாரியாவார். மற்றைய இரு அதிகாரிகளுக்குப் பாதுகாப்பு அதிகாரிகள் உண்டு. இவை எதுவும் இன்றியே, ஆபரேசன்களுக்குத் தலைமையேற்பதை மட்டுமே செய்ய வேண்டிய அதிகாரிகள் தீவிரவாதிகளின் துப்பாக்கிகளுக்கு முன்பாக நேரடியாகச் செல்ல வேண்டி நிர்பந்திக்கப் படுகின்றனர்.

கார்கரே கொல்லப்பட்ட விஷயத்தில் சதி நடந்துள்ளது 100 சதவீதம் உறுதியானதாகும். மும்பையைத் தாக்கிய தீவிரவாதிகள் வந்தது பாகிஸ்தானிலிருந்தே. அவர்கள் உபயோகிக்கப்பட்ட அம்புகள் மட்டுமே. அவர்களுக்குக் கணக்கில்லாத பணம் கிடைத்துள்ளது என்பதும் உறுதியானதாகும். அதேபோல் கார்கரேயைக் கொன்றது இதே தீவிரவாதக் குழு அல்ல என்பதும் உறுதியாகும். அவர்கள் தூய மராத்தி மொழியில் பேசினர் என்பதற்கு போலீஸ்காரரின் வாக்குமூலமே ஆதாரமாக உள்ளது. மும்பை காவல்துறைக்கும் நரேந்திரமோடிக்கும் இவர்கள் யாரென்ற விவரம் தெரிந்திருக்க வேண்டும்.

மாலேகோன் குண்டுவெடிப்புப் தொடர்பான வழக்கு விசாரணையின் கரம், வி.ஹெச்.பி தலைவர் பிரவீண் தொகாடியாவரை நீண்டு சென்றிருந்தது. அடுத்த வெளிப்படுத்தல் மோடியாக இருந்திருக்க வேண்டும். ப்ரக்யா சிங் தாக்கூர் குஜராத்தைச் சேர்ந்தவர் என்பது முக்கியமானது.

தாஜ் மற்றும் ஓபராய் ஹோட்டல்களின் உரிமையாளர்களுக்கும் மோடிக்கும் இடையிலான தொடர்பு அனைவருக்கும் தெரிந்த ஒன்றாகும். இவை அனைத்தையும் இணைத்து வைத்தே நான் அந்த முடிவுக்கு வந்தேன். ஏ.ஆர். அந்துலே, திக் விஜய் சிங், சீதாராம் யெச்சூரி போன்றவர்களெல்லாம் இதே அடிப்படைக் காரணங்களை வைத்தே பேசினார்கள்.

* ஆனால், கஸபின் வாக்குமூலமும் குற்ற ஒப்புதலும் உங்களின் முடிவுகளுக்கு எதிராக அல்லவா உள்ளது? கிடைத்துள்ள ஆதாரங்களும் உங்களின் நிலைபாட்டுக்கு எதிரானவைகளாகும்.

கஸப் குற்றத்தை ஒப்புக் கொண்டதோ வாக்குமூலம் கொடுத்ததோ நீதிமன்றத்தின் முன்னிலையில் அல்ல. இவையனைத்தும் மும்பை காவல்துறைப் போலியாக உருவாக்குபவைகளாகும். அவர்கள் நம்பிக்கைக்குரியவர்கள் அல்லர். மும்பை காவல்துறையை நம்பலாம் எனில், பொறியாளர் காஜா யூனுஸின் விஷயத்தைக் குறித்த உங்கள் நிலைபாடு என்ன?.

மும்பை காவல்துறையின் விளக்கப்படி, காஜா யூனுஸ் காவல்துறையின் கஸ்டடியிலிருந்து தப்பினார் என்பதாகும். ஆனால், அவரைக் கொன்று விட்டு, அவர் சிறையிலிருந்து தப்பினார் எனக் காவல்துறை பொய்யறிக்கைத் தாக்கல் செய்தது நீதிமன்ற விசாரணையில் வெளியானது. அதனாலேயே மும்பைத் தாக்குதலைக் குறித்து நீதிமன்ற விசாரணை கோருகின்றோம்.

தற்பொழுது இவ்வழக்கை விசாரிக்கும் டெப்யூட்டி கமிஷனர் ராகேஷ் மரியா, அண்டர்வேல்ட் மாஃபியாக்களிடமிருந்துக் கையூட்டு பெறும் ஒரு கிரிமினலாவார். மும்பை காவல்துறையில் முன்பு நாயகனாய் விளங்கிய பிரதீப் சர்மா தற்பொழுது திஹார் சிறையில் உள்ளார். சோட்டா ராஜன் கும்பலுடனான அவருடைய மறைமுகத் தொடர்பின் காரணத்தினாலேயே சிறையில் அடைக்கப்பட்டார். இதே குற்றத்திற்காகப் பிடிக்கப்படும் அடுத்த நபர் ஒருவேளை ராகேஷ் மரியாவாக இருக்கலாம்.

ராகேஷ் மரியா ஒரு யூதனாவார். இவர் மொஸாதின் ஏஜண்டாக இருக்கலாம் என்ற குற்றச்சாட்டு ஏற்கெனவே உள்ளது. 1993இல் மும்பை காவல்துறையிலுள்ள சிலரைப் பயிற்சிக்காக இஸ்ரேலுக்கு இவர் கொண்டு சென்றிருந்தார்.

தற்போதைய மும்பை தாக்குதலில் தாக்குதல் நடந்த ஓர் இடமான நரிமன் ஹவுஸில் கடந்த இரு மாதங்களாக சந்தேகத்திற்கிடமான பல்வேறு சம்பவங்கள் நடைபெற்றிருந்தன.

* சொந்த மக்களை மொஸாதே கொல்கிறது. இதற்கு இஸ்ரேலியரே ஆதரவும் கொடுக்கின்றனர். இது அசாதாராணமானது அல்லவா?

மொஸாத் யூதர்களைக் காப்பாற்றுவதற்கான அமைப்பு என்று உங்களுக்குக் கூறியவர் யார்? நரிமன் ஹவுஸிற்கு இந்தச் சம்பவத்துடனான ரோலை மாற்றிச் சிந்திக்க வேண்டும். நரிமன் ஹவுஸே துர்சம்பவங்களுக்கான தலைமை இடமாகும்.

கார்க்கரேயின் மரணம் தனியாகப் பார்க்க வேண்டியதாகும். அது சந்தேகத்திற்கிடமானது.

மும்பை தாக்குதல் 9:30க்கு ஆரம்பிக்கிறது. 11 மணிக்கு வெறும் 500 மீட்டர் தூரத்தில் 500க்கும் மேற்பட்ட இராணுவத்தினர் தயார் நிலையில் இருக்கின்றனர். இருப்பினும் அவர்களுக்கு நரிமன் ஹவுஸ் நோக்கிச் செல்வதற்கான உத்தரவு கொடுக்கப்படவில்லை. மறுநாள் காலையில் டில்லியிலிருந்து என்.எஸ்.ஜி கமாண்டோக்கள் வந்து சேர்வதுவரை அவர்கள் வெறுமனே அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர்.

கார்க்கரேயின் விஷயத்திலும் இதே போன்ற சந்தேகங்கள் உண்டு. அந்துலே கேள்வி எழுப்பியதுபோன்று, “காமா மருத்துவமனைக்குச் செல்ல கார்க்கரேக்குத் தகவல் அளித்தது யார்?”. அந்நேரத்தில் (தற்போது இவ்வழக்கு விசாரணையை நடத்தும் மொஸாத் உளவாளியான யூதன்) மரியாதான் காவல்துறை கட்டுப்பாட்டு அறையில் இருந்தார். மரியாதான் அவரைக் காமா மருத்துவமனைக்குச் செல்லப்பணித்தவர் எனில் அவருக்குத் தண்டனை வழங்கப்பட வேண்டும். அவர் ஒரு சிறிதும் நம்பிக்கைக்குரியவர் அல்லர். அவருக்கு எதிராக எண்ணிலடங்கா ஒப்புதல் வாக்குமூலங்கள் உண்டு. கார்க்கரேயின் மரணத்தைக் குறித்த விசாரணை ஒருவேளை மரியாவினிடத்தில் சென்று முடிந்து விடக்கூடும்.

* இருப்பினும் பல்வேறு உண்மைகள் இவ்வழக்கில் மறைந்து கிடக்கின்றனவே? ஒரே பார்வை வீச்சில் புரிந்துக் கொள்ள இயலாத பல விஷயங்கள் அதில் உண்டு. இவற்றை எல்லாம் இணைத்துப் பார்க்கும் பொழுது அரசு கூறுவதிலும் நியாயம் உள்ளது போன்றே தோன்றும்?

ஒரு உண்மையும் இல்லை. நாம் இந்தியர்கள் மிகவும் மென்மையானவர்கள்; கள்ளம் கபடமற்றவர்கள். ஆங்கிலேயர்கள் இந்தியாவுக்கு வந்தபோது, அவர்கள் வியாபாரத்திற்கு வந்தவர்கள் என்று கருதி அவர்களை வரவேற்ற முட்டாள்கள் நாம். இவ்வழக்கு தெளிவானது. இதன் பின்னணியில் ஹிந்துத்துவ-மொஸாத்-சி.ஐ.ஏ கூட்டணி உள்ளது உறுதி. வண்டியில் பின்பக்கமிருந்த போலீஸ் கான்ஸ்டபிள் ஜாதவ்தான் கார்க்கரே, காந்தே, ஸலஸ்கரைக் கொன்ற நபர் இல்லை என்பதற்கு என்ன உத்தரவாதம் உள்ளது?. குஜராத் A.T.Sஇல் உள்ள சிலர் தான் இவர்களைக் கொன்றனர் என்றும் சிலர் நம்புகின்றனர். பொய் கதையைக் கூற ஜாதவ் நியமிக்கப்பட்டவராக இருக்கலாம். இதனை இல்லை என முற்றாக மறுத்துவிட முடியாது.

புதருக்கிடையில் மறைந்திருந்த கஸபும் இஸ்மாயிலும் அதிகாரிகளை நோக்கிச் சுட்டனர் எனக் கூறப்படுகிறது. காமா மருத்துவமனைக்கு முன்பு புதர் எங்கே இருக்கின்றது?. கஸபையும் இஸ்மாயிலையும் வி.டி.க்குக் கொண்டு வந்த டாக்ஸி டிரைவர் யார்?

தீவிரவாதிகள் வந்த கப்பல் மற்றும் படகுகளின் உரிமையாளர்கள் யார்? இக்கேள்விகளுக்கு விடைகள் கிடைப்பின் சம்பவத்தின் பின்னணியில் செயல்பட்டவர்களைக் குறித்து ஒருவாறு விஷயங்கள் தெளிவாகும். இது ஒரு விழிப்படைவதற்கான அழைப்பாகும்.

* கார்க்கரேயின் மரணத்திற்குப் பின் A.T.S. தலைமையில் வந்த மாற்றம் மாலேகோன் வழக்கு விசாரணையை எவ்விதத்தில் பாதிக்கும்? முன்பு A.T.S. தலைவராக இருந்த ரகுவன்ஷியே அல்லவா மீண்டும் பொறுப்பேற்றுள்ளார்?

ரகுவன்ஷி ஒரு ஆர்.எஸ்.எஸ் காரராவார். பரிபூர்ணமான ஆர்.எஸ்.எஸ் காரர். மற்றொரு விஷயம், கார்கரே கொல்லப்பட்டது பிஸ்டலின் மூலமாக சுடப்பட்ட 9எம்.எம் துப்பாக்கி ரவையின் மூலமாகவாகும்.

இஸ்மாயிலின் கைவசம் பிஸ்டலும் இருந்தது எனக் காவல்துறை இதனைக் குறித்துக் கூறுகிறது. சரமாரியாகச் சுடுவதற்கு வாய்ப்புள்ள ஏ.கே. 47 கைவசம் இருக்கும்பொழுது, சாதாரணமான பிஸ்டலை உபயோகித்து சுடக் காரணம் என்ன?. அவ்வாறே என்றாலும் இஸ்மாயிலின் கைவசமிருந்த பிஸ்டலில் உள்ள ரவைகள்தானா கார்க்கரேயின் உடலில் துளைத்தவை என்றும் பரிசோதிக்க வேண்டும்.

-o-

அம்ரேஷ் மிஸ்ரா முன்வைக்கும் ஐயங்களுக்குக் கடைசிவரையில் பதில்கள் கிடைக்கா விட்டால், ஆக்ரோஷங்களும் ஆவேசங்களுமாகத் தொடங்கி, பின்னர் அடையாளமே தெரியாமல் மறைந்து போய்விட்ட பல “தீவிரவாதத் தாக்குதல்களை” போலவே காலப்போக்கில் மறைந்து போவதே மும்பைத் தாக்குதலின் விதியாக இருக்கும்; குறைந்த பட்சம் மற்றொரு கார்கரே வரும் வரையிலாவது!


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.