தோழர்கள் 66 – ஸுஹைல் இபுனு அம்ரு (இறுதிப் பகுதி)

அவ்வளவு நீண்டகாலம் இஸ்லாமிய எதிர்ப்பில் நிலைத்து நின்ற சுஹைலின் மனமாற்றம் ஆச்சரியம் என்றால், அதற்கடுத்தபடியான அவரது வாழ்க்கையில் இஸ்லாம் எந்தளவு மனத்தில் ஊன்றியிருக்கும் என்ற கேள்வி எழுமல்லவா? அதுதான் பேராச்சரியம்!

Read More

தோழர்கள் – 64 அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் – عبد الله ابن مسعود

அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் عبد الله ابن مسعود மரத்தின்மீது ஏறி நின்றிருந்தார் அவர். முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் தோழர்களும் சூழ்ந்து அமர்ந்திருக்க, பழங்களைப் பறிப்பதற்காக அவர் மரமேறியிருந்தார். நபியவர்கள்தாம் அவரை மரமேறச் சொல்லியிருந்தார்கள்; ‘ஆகட்டும்’ என்று உடனே பழம் பறிக்கச் சென்றுவிட்டார் அந்தத் தோழர். நபியவர்களுடன் நிழல் போல் தொடர்ந்து நபியின் ஒவ்வொரு தேவையையும் பார்த்துப் பார்த்துக்  கவனமுடன் நிறைவேற்றி அந்த இனிய சேவகத்திற்குத் தம்மை உட்படுத்தியிருந்தவர் அவர்.

Read More

தோழர்கள் – 63 அல் பராஉ பின் மாலிக்

அல் பராஉ பின் மாலிக்  البراء بن مالك கோட்டைச் சுவரின் உச்சியிலிருந்து கீழே தொங்கவிடப்பட்ட நெருப்புக் கொக்கி, அனஸ் பின் மாலிக் ரலியல்லாஹு அன்ஹுவைப் பற்றி இழுத்துக் கொண்டு மேலே உயர ஆரம்பித்தது. அதைப் பார்த்துவிட்டு படுவேகமாய் ஓடிவந்தார் அவருடைய சகோதரர்.

Read More

என்னைக் கவர்ந்த சொல்லாட்சி (தோழியர் நூல்)

சகோதரர் நூருத்தீன் எழுதி சத்தியமார்க்கம்.காம் வெளியிட்டுள்ள தோழியர் (நபித்தோழியரின் சீரிய வரலாறு) படித்தேன். நூலாசிரியர் பயன்படுத்தியிருந்த சொல்லாடல் என்னைப் பல இடங்களில் கவர்ந்தது. இத்தகைய சொல்லாடல்கள், வரலாற்று நிகழ்வைக் கண் முன் கொண்டு வந்து நிறுத்தி, லயிக்க வைத்தது. என்னுடைய அனுபவத்தை சக வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.

Read More

தோழர்கள் – 59 அபூஹுதைஃபா இப்னு உத்பா أبو حذيفة ابن عتبة

அபூஹுதைஃபா இப்னு உத்பா أبو حذيفة ابن عتبة மக்காவிலிருந்து குரைஷிகளின் படை வந்து கொண்டிருந்தது. ஆரவாரமும் ஆவேசமும் கோபமுமாகக் கிளம்பியிருந்த குரைஷியருள் ஆர்வம் குன்றிய சிலரும் இருந்தனர். அவர்கள் வேண்டாவெறுப்பாகவும் வேறு வழியின்றியும் படையில் இணைந்திருந்தவர்கள். முஸ்லிம்களை எதிர்த்துப் போரிட அவர்களுக்கு எண்ணமே இல்லை.

Read More

தோழர்கள் – 58 உபை இப்னு கஅப் أبي بن كعب

உபை இப்னு கஅப்أبي بن كعب கலீஃபா உமர் ரலியல்லாஹு அன்ஹு மதீனாவின் வீதிகளில் உலாச் சென்றிருந்தார். அறையில் சொகுசாய் அமர்ந்து ஆட்சி செலுத்தும் பழக்கம் உருவாகாத காலம் அது. மக்களுக்கான நல்லது கெட்டது, ஊர் நடப்பின் நேரடித் தகவல் போன்றவற்றுக்கு அதுதான் கலீஃபா உமருக்கு வசதிப்பட்டது.

Read More

தோழர்கள் – 56 – அபூதுஜானா ابو دجانة

அபூதுஜானா ابو دجانة உஹதுப் போரில் கஅப் இப்னு மாலிக் ரலியல்லாஹு அன்ஹு கலந்துகொண்ட நிகழ்வை இரண்டு அத்தியாயங்களுக்கு முன் பார்த்தோம். அந்தப் போரில் முஸ்லிம்களுக்குப் பின்னடைவு ஏற்பட்டு நிறைய உயிரிழப்பு ஏற்பட்டது நாம் முன்னரே அறிந்த நிகழ்வு.

Read More

தோழர்கள் – 55 அதிய் பின் ஹாதிம் அத்தாயீ عدي بن حاتم الطائي (பகுதி-2)

அதிய் பின் ஹாதிம் அத்தாயீ عدي بن حاتم الطائي   பகுதி – 2 நபியவர்களின் மரணத்திற்குப் பிறகு அபூபக்ரு ரலியல்லாஹு அன்ஹு கலீஃபா பொறுப்பில் அமர்ந்ததும் அவர்களை எதிர்கொண்ட தலையாயப் பிரச்சினைகளுள் முக்கியமான இரண்டு. இஸ்லாத்தைக் கைகழுவி மார்க்கத்தைவிட்டு வெளியேறியவர்களின் பிரச்சினை, மற்றும் தம்மை நபியென அறிவித்துக் கொண்டு அராஜகம் புரிய ஆரம்பித்த சில கிறுக்கர்களின் அட்டகாசம்.

Read More

தோழியர் – 9 நுஸைபா பின்த் கஅப் نسيبة بنت كعب

நுஸைபா பின்த் கஅப் نسيبة بنت كعب பொய்யன் முஸைலமாவின் அரசவை. நிறைய மக்கள் குழுமியிருந்தனர். “யாரங்கே கொண்டு வாருங்கள் அந்தத் தூதுவனை” என்று கட்டளை பிறப்பிக்கப்பட, கனத்த சங்கிலிகளால் அவரைப் பூட்டி, இழுத்து வந்தார்கள் காவலர்கள். கால்விலங்கு தரையில் புரள வந்து நின்றார் ஹபீப் இப்னு ஸைத் ரலியல்லாஹு அன்ஹு. இவரது வரலாற்றை நாம் முன்னர் விரிவாகவே பார்த்தோம். இங்கு முன் கதைச் சுருக்கம்போல் முக்கிய நிகழ்வொன்றை மீண்டும் நினைவு படுத்திக்கொள்வோம்.  

Read More

தோழர்கள் – 41 – ஸயீத் இப்னு ஸைது – سعيد بن زيد

ஸயீத் இப்னு ஸைது سعيد بن زيد அவருக்குத் தாகமான தாகம்; தேடிக் கொண்டிருந்தார். அவரது தாகம் நா வறட்சித் தாகமன்று; அவர் தேடுவதும் தண்ணீரையன்று; வேறொன்றை. மக்காவைச் சேர்ந்தவர் அவருக்கு இறைவழிபாடு என்று அங்கு நடைபெறும் கூத்தைக்கண்டு வெறுத்துப்போயிருந்தது. ‘இறைவனை மெய்யாக வழிபடும் மதம் எது; மார்க்கம் என்ன?’ என்று அவருக்குள் அடக்கமாட்டாத வேட்கை; தாகம். நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் பற்றி, செவிவழியாகவும் முதியோர் சிலரிடம் மிச்சம் மீதி என்று தங்கியிருந்த உண்மையின் வாயிலாகவும் சில குறிப்புகள் அவருக்குத் தெரிந்திருந்தன. ‘உண்மையான இறை…

Read More

தோழர்கள் – 37 – ஸைத் இப்னுல் கத்தாப் – (زيد بن الخطاب (صقر يوم اليمامة

ஸைத் இப்னுல் கத்தாப் (زيد بن الخطاب (صقر يوم اليمامة “உங்கள் மத்தியில் ஒருவர் அமர்ந்துள்ளார். மறுமையில் நரகை அடைவார். அவரது கடைவாய்ப் பல்லின் அளவு உஹது மலையைவிடப் பெரிதாய் இருக்கும்” ஒருநாள் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தம் தோழர்களுடன் அமர்ந்திருந்தார்கள். அனைவரும் அளவளாவிக் கொண்டிருக்க, நபியவர்கள் திடீரென அமைதியடைந்து, பிறகு மேற்கண்டவாறு அறிவித்தார்கள்.

Read More

அறிவுப் போட்டி – 28 : விடைகளும் வெற்றியாளர்களும்

அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்பாளன், அல்லாஹ்வின் பெயரால்… அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்… கல்வி கற்றலின் கட்டாயத்தையும் அறிவைப் பெருக்கிக் கொள்வதன் தேவையையும் நமது சகோதர, சகோதரிகளுக்கிடையில் பரவலாக்கிடும் நோக்கில், ஹிஜ்ரி 1431 ரமளான் மாதம் முதல்நாளிலிருந்து சத்தியமார்க்கம்.காம் வாராந்திர அறிவுப்போட்டி நடத்தி வருவதை அறிவீர்கள்.

Read More

அறிவுப் போட்டி – 27 : விடைகளும் வெற்றியாளர்களும்

அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்பாளன், அல்லாஹ்வின் பெயரால்… அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்… கல்வி கற்றலின் கட்டாயத்தையும் அறிவைப் பெருக்கிக் கொள்வதன் தேவையையும் நமது சகோதர, சகோதரிகளுக்கிடையில் பரவலாக்கிடும் நோக்கில், ஹிஜ்ரி 1431 ரமளான் மாதம் முதல்நாளிலிருந்து சத்தியமார்க்கம்.காம் வாராந்திர அறிவுப்போட்டி நடத்தி வருவதை அறிவீர்கள்.

Read More

தோழர்கள் – 30 – துஃபைல் இப்னு அம்ரு அத்தவ்ஸீ – الطفيل بن عمرو الدوسي

துஃபைல் இப்னு அம்ரு அத்தவ்ஸீ الطفيل بن عمرو الدوسي அரேபியாவில் தவ்ஸ் என்றொரு கோத்திரம். அக்கோத்திரத்தின் முக்கியப்புள்ளி ஒருவர் தம் மக்களையெல்லாம் மாய்ந்து மாய்ந்து இஸ்லாத்திற்கு அழைத்துக் கொண்டிருந்தார். அவரின் தந்தை, மனைவி தவிர வேறு யாரும் பெரிதாய் அவர் சொல்வதைக் காதில் போட்டுக் கொள்ளவில்லை. “ஹும்! நல்லாத்தானே இருந்தார். மக்காவுக்குச் சென்று வந்ததிலிருந்து இவருக்கு ஏதோ ஆகிவிட்டது போலிருக்கிறது” என்று உதாசீனப்படுத்திவிட்டு தத்தம் வேலைவெட்டி, வழிபாடு என்று இருந்துவிட்டனர்.

Read More

தோழர்கள் – 29 – ஸாலிம் மௌலா அபீஹுதைஃபா – سالم مولى أبي حذيفة

ஸாலிம் மௌலா அபீஹுதைஃபாسالم مولى أبي حذيفة கலீஃபா உமர் இப்னுல் கத்தாப் ரலியல்லாஹு அன்ஹு கத்தியால் குத்தப்பட்டுக் குற்றுயிராய் மரணப்படுக்கையில் கிடந்த நேரம். அடுத்த கலீஃபாவாக யார் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற முக்கியமான சூழல். நபியவர்களின் அன்பிற்கு மிகவும் உரியவர்களான, பத்ரு யுத்தத்தில் கலந்து கொண்ட ஆறுபேரை உமர் தேர்ந்தெடுத்தார். அலீ, உதுமான், அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப், ஸஅத் பின் அபீவக்காஸ், ஸுபைர் இப்னுல் அவ்வாம், தல்ஹா பின் உபைதுல்லாஹ் ரலியல்லாஹு அன்ஹும். அத்தருணத்தில்…

Read More

தோழர்கள் – 26 – அந்நுஃமான் பின் முகர்ரின் அல்-முஸனீ – النعمان بن مقرن المزني

அந்நுஃமான் பின் முகர்ரின் அல்-முஸனீ النعمان بن مقرن المزني மதாயின் நகரம். பாரசீகத்தின் பேரரசன் யஸ்தஜிர்து கோபத்தின் உச்சத்தில் இருந்தான். அவனது பேரவைக்கு ஒரு பிரதிநிதிக்குழு வந்திருந்தது. அவர்கள் தங்கள் இஷ்டத்திற்கு என்னென்னவோ பேச, சக்கரவர்த்திக்கு இரத்தம் கொதிக்க ஆரம்பித்துவிட்டது. “பிரதிநிதிகளைக் கொல்லக் கூடாது என்ற நடைமுறை மட்டும் இல்லாதிருப்பின் உங்களையெல்லாம் நான் கொன்றிருப்பேன். உங்களுக்கெல்லாம் ஒரு மண்ணும் கிடையாது. திரும்பிச் செல்லுங்கள்” ம்ஹூம், போதாது; வெறுமனே இவர்களை அதட்டி அனுப்பினால் போதாது. அவமானப்படுத்த வேண்டும்!…

Read More

தோழர்கள் – 22 – துமாமா பின் உதால் – ثمامة بن أثال

துமாமா பின் உதால் ثمامة بن أثال யமாமாவிலிருந்து மக்காவிற்கு அவர் யாத்திரை கிளம்பினார். அவர் தமது குலத்தைச் சேர்ந்த பெரும்புள்ளி. பெரும் செல்வாக்கு உண்டு. கரடுமுரடான போர் வீரர். ஆனாலும் யாத்திரை என்றால் மட்டும் தன்னந்தனியே கிளம்புவது அவரது வழக்கம். வழிப்போக்கிற்கும் பெரிய அளவில் உணவு, இதர பொருட்கள் எடுத்துக் கொள்வது அவரது வழக்கமில்லை. செல்லும் வழிநெடுகிலும் உள்ள இதர கோத்திரத்தினர் அவருக்கு உபசரிப்பு வழங்கத் தயாராக உள்ள நிலையில் அதெல்லாம் அவருக்குத் தேவையில்லாதது.

Read More

அறிவுப்போட்டி – 8 : விடைகளும் வெற்றியாளர்களும்

அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன், அல்லாஹ்வின் பெயரால்… அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்… கல்வி கற்றலின் கட்டாயத்தையும் அறிவைப் பெருக்கிக் கொள்வதன் தேவையையும் நமது சகோதர, சகோதரிகளுக்கிடையில் பரவலாக்கிடும் நோக்கில், ஹிஜ்ரி 1431 ஆண்டு ரமளான் மாதம் முதல்நாளிலிருந்து சத்தியமார்க்கம்.காம் வாராந்திர அறிவுப்போட்டி நடத்தி வருவதை அறிவீர்கள். அறிவுப் போட்டிகளின் விவரங்களை எண்கள் வாரியாக இங்குக் காணவும். [http://www.satyamargam.com/islam/islamic-quiz.html]

Read More

தோழர்கள் – 17 – முஆத் பின் ஜபல் அல்-கஸ்ரஜி (معاذ بن جبل)

முஆத் பின் ஜபல் அல்-கஸ்ரஜி (معاذ بن جبل)   கலீஃபா உமர் பின் கத்தாப் ரலியல்லாஹு அன்ஹு, தோழர் ஒருவரை அழைத்து பனூ கிலாப் கோத்திரத்தாரிடம் சென்றுவரச் சொன்னார். அரசு உதவி பெறத் தகுதியான ஏழை மக்களுக்குக் கருவூலத்திலிருந்து உதவித் தொகை எடுத்துச் சென்று வழங்க வேண்டும். ஸகாத் அளிக்க வேண்டியவர்களிடமிருந்து ஸகாத் திரட்டி வரவேண்டும். அவருக்கு அப்பணி இடப்பட்டது. “உத்தரவு கலீஃபா!” என்று உடனே கிளம்பிச் சென்றார் அத்தோழர். அது சற்று நீண்ட பயணம்.

Read More

தோழர்கள் – 16 – ஸைது இப்னு தாபித் – (زيد بن ثابت )

ஸைது இப்னு தாபித் (زيد بن ثابت ) ஹிஜ்ரீ இரண்டாம் ஆண்டு. மதீனா நகரம் முக்கியமான வரலாற்று நிகழ்வொன்றிற்குத் தயாராகிக் கொண்டிருந்தது. அந்நகரிலிருந்த வீடு ஒன்றில் பதின்மூன்று வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் இருந்தார். தன் தாயாரிடம் விரைந்து சென்றார்.   “நானும் போரில் கலந்து கொள்ள வேண்டும். என்னையும் அழைத்துச் செல்லுங்கள்”

Read More

தோழர்கள் – 15 – வஹ்ஷி பின் ஹர்பு – وحشي بن حرب

வஹ்ஷி பின் ஹர்பு وحشي بن حرب தாயிஃப் நகரம். மிகவும் குழப்பமான மனோநிலையில் இருந்தார் அவர். உலகமே சுருங்கிவிட்டதைப் போலிருந்தது அவருக்கு.

Read More

தோழர்கள்-13 தாபித் பின் கைஸ் பின் ஷம்மாஸ் அல் அன்ஸாரீ-ثَابِت بْن قَيْس بْن شَمَّاس الأنْصَاريْ

தாபித் பின் கைஸ் பின் ஷம்மாஸ் அல் அன்ஸாரீ ثَابِت بْن قَيْس بْن شَمَّاس الأنْصَاريْ ‏ அன்று ஒரு முடிவுடன் எழுந்து நின்றார் அவர். அரிதாரம் பூசிக் கொண்டார். அரிதாரம் என்றால் திருவிழாவை வேடிக்கை காணத் தயாராவதுபோல் பவுடர், சென்ட் அல்ல – இறந்த உடலைப் பாதுகாக்கும் நறுமணப் பொருட்கள். அவற்றைப் பரபரவென்று தனது உடலில் பூசிக் கொண்டார். பிறகு தனது உடலைப் போர்த்திக் கொண்டார். இதுவும் சால்வையோ, அங்கவஸ்திரமோ அல்ல – இறந்த…

Read More

தோழர்கள் – 11 – அப்பாத் பின் பிஷ்ரு – عباد بن بشر

அப்பாத் பின் பிஷ்ரு عباد بن بشر மதீனா நகரம். ஒருநாள் இரவுநேரத்தில் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், தம் மனைவி ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹாவின் இல்லத்தில் பின்னிரவுத் தொழுகை தொழுது கொண்டிருந்தார்கள். அது மஸ்ஜிதுந் நபவீயை ஒட்டிய வீடு. கதவைத் திறந்து நுழைந்தால் பள்ளிவாசல். அங்கிருந்து மிக இனிமையான குரலில் குர்ஆன் ஓதும் ஒலி மிதந்து வந்தது. இனிமையாக, மிக இனிமையாக, நபியவர்களுக்கு ஜிப்ரீல் (அலை) கொண்டு வந்து அளித்ததைப் போன்று, தூய்மையாய், துல்லியமாய்…

Read More

தோழர்கள் – 9 – ஃபைரோஸ் அத்-தைலமி فيروز الديلمي

ஃபைரோஸ் அத்-தைலமி فيروز الديلمي ஹிஜ்ரீ பத்தாம் ஆண்டில் ஒருநாள், யமன் நாட்டு அரண்மனைக்கு அரசியைச் சந்திக்க அவரின் ஒன்றுவிட்ட சகோதரர் ஒருவர் சென்றார். அப்பொழுது அந்நாட்டை ஆண்டு கொண்டிருந்த அரசனால் அங்கு மாபெரும் தொல்லையும் குழப்பமும் ஏற்பட்டிருந்த சூழ்நிலை. அரசியைச் சந்தித்த அண்ணன்காரர், “இந்தக் கேடுகெட்டவனால் உனக்கும் மக்களாகிய எங்களுக்கும் எவ்வளவு கேடும் அவமானமும் என்பது நீ உணர்ந்ததே. இருந்தாலும் அதை உனக்கு எடுத்துச் சொல்ல வந்திருக்கிறேன்” என்று ஆரம்பித்தார்.

Read More
வெட்ட ... வெட்ட

தோழர்கள் – 6 – ஹபீப் பின் ஸைத் பின் ஆஸிம் அல்-அன்ஸாரீ – حَبِيبِ بْنِ زَيْد بْن عَاصِم الأنْصَارِيّ

ஹபீப் பின் ஸைத் பின் ஆஸிம் அல்-அன்ஸாரீ حَبِيبِ بْنِ زَيْد بْن عَاصِم الأنْصَارِيّ யத்ரிப் நகரில் ஒரு குடும்பம் வசித்து வந்தது. தந்தை, தாய், இரு மகன்கள் என்ற அளவான குடும்பம். அந்தக் குடும்பம் ஒரு குழுவுடன் மக்காவிற்கு யாத்திரை சென்றது. மொத்தம் 73 ஆண்களும், 2 பெண்களும் கொண்ட குழு அது.

Read More
அரிசி அறிமுகம் - உத்பா பின் கஸ்வான்

தோழர்கள் – 5 – உத்பா பின் கஸ்வான் – عُتبة بن غَزْوان

உத்பா பின் கஸ்வான் – عُتبة بن غَزْوان அது ஹஜ்ரீ 18ஆம் ஆண்டு. ஹஜ் முடிந்து பஸரா நகருக்குத் திரும்ப வேண்டிய அதன் கவர்னர், வழியில் மதீனா வந்து கலீஃபா உமரைச் சந்தித்தார். அப்போது உமர் பின் கத்தாப் (ரலி) இரண்டாவது கலீஃபாவாக ஆட்சி செலுத்திக் கொண்டிருந்தார். மதீனாதான் கலீஃபாவின் தலைநகரம். ”தாங்கள் தயவு செய்து என்னை வேலையிலிருந்து நீக்க வேண்டும்” என்றார் கவர்னர்.

Read More

காலித் பின் வலீத் (ரலி)

இஸ்லாமிய படைத்தளபதிகள் காலித் பின் வலீத் (ரலி) இஸ்லாமிய வரலாற்றில் காலித் பின் வலீத் (ரழி) ஒரு தனிச்சிறப்பிடம் உண்டு. உயரமான மலை போன்ற உறுதியான தோற்றம், மற்றும் பரந்த மார்புகள், குறிப்பிட்டுச் சொல்லும் தகுதிகளான கழுகு போன்ற கூர்ந்த பார்வை, தொலை நோக்குச் சிந்தனைத் திறன், சிறந்த அறிவாற்றல், நல்ல நினைவாற்றல் மற்றும் உயர்ந்த சிந்தனைகள், உறுதியான கொள்கைப் பிடிப்பு ஆகிய குணநலன்களை ஒருங்கே பெற்றவர் தான் காலித் பின் வலீத் (ரழி). இஸ்லாமிய போர்…

Read More