சத்தியமார்க்கம்.காம்

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சீர்திருத்தம்! (பகுதி-1) print Email
வரலாறு - இந்திய வரலாறு
வியாழன், 14 ஆகஸ்டு 2008 19:02

"உங்களுக்கு இடையில் ஒரு பெண் பத்து ஆண்களுடன் இணைந்து உறவு கொள்வதும் உங்களின் தாய், சகோதரிகளை இவ்விதம் நடப்பதற்கு சம்மதிப்பதும் பூர்வ ஆச்சாரமாக இருந்து வருகின்ற நிலையில், நீங்கள் அனைவரும் விபச்சாரத்தில் பிறந்தவர்களும் ஆண், பெண் உறவு விஷயத்தில் நிலத்தில் மேய்ந்து நடக்கும் கால்நடைகளை விட கீழான வெட்கமற்றவர்களுமாகின்றீர்கள். இவ்விதமுள்ள பாவகரமான துர் ஆச்சாரங்களை விட்டொழித்துச் சாதாரண மனிதர்களைப் போன்று வாழ்வதற்கு நாம் இதன் மூலம் உங்களுக்குக் கட்டளையிடுகின்றோம்"

 

நாகரீகம் வளர்வதற்கு முந்தைய கற்காலத்தில், மனிதன் கால்நடைகளைப் போன்று வாழ்ந்தான் என்பதை வரலாற்றுப் பாடங்களில் படித்துள்ளோம். அத்தகைய காலகட்டங்களில் அச்சமூகத்திற்குத் தலைமையேற்ற ஏதோ ஒரு நல்ல பண்பாட்டுப் பழக்கவழக்கங்களைக் கொண்ட மன்னன் மேற்கண்டக் கட்டளையை இட்டுள்ளான் என நினைத்தால்.... அது தவறு!

இது நாகரீகம் வளர்ந்து உச்சியை நோக்கிப் பயணிக்க ஆரம்பித்த 17 - 18 ஆம் நூற்றாண்டு காலகட்டத்தில் வாழ்ந்த ஒரு மன்னன் பிறப்பித்தக் கட்டளையாகும். 17 - 18 ஆம் நூற்றாண்டிலும் மக்கள் கால்நடைகளைப் போன்று காணும் ஆடவர், பெண்டிருடன் உறவு வைத்து நடந்தனர் என்பதை நம்பமுடியவில்லை தானே?. ஆனால் அது தான் உண்மை!

சரி, யார் இந்த மன்னன்?. எங்கு, எதற்காக, எந்தத் தருணத்தில் இந்தக் கட்டளையை அந்த மன்னன் பிறப்பித்தான்? என்பதை அறிய ஆவலாக உள்ளதா?.

இவ்வாறு கட்டளையிட்டது, இந்தியாவைப் பலகூறாகப் பிரித்து ஆண்டு கொண்டிருந்த சேர, சோழ, பாண்டிய, பல்லவ, இராஜபுத்திர இன்னபிற மன்னர்களில் எவராவது ஒருவராக இருப்பார் எனக் கருதுவீர்களானால்....... அதுவும் தவறானதே.

இவ்வாறான அதிரடி உத்தரவைப் பிறப்பித்தவர் வேறு யாரும் அல்ல - இந்தியாவை அடக்கியாண்டுக் கொண்டிருந்தப் பரங்கியர்களுக்குச் சிம்மச்சொப்பனமாகத் திகழ்ந்து வரலாற்று ஏடுகளில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கத்தக்க வீரத்துடன் வாழ்ந்த தீரர் திப்பு சுல்தானே தான்.

கேரள நம்பூதிரிகளின் அக்ர
ார அலங்கோல ஆச்சாரங்களை ஒரே கட்டளையின் மூலம் தகர்த்தெறிந்தத் திப்புவின் இந்தக் கட்டளைக்கான காரணம் என்ன? தனது ஆட்சிபரப்பை விரிவாக்கும் எண்ணத்தில் கேரளத்தில் அடியெடுத்து வைத்தத் திப்புவின் வாயிலிருந்து வெளியான இந்தக் கட்டளைக்கும் அன்றையக் கேரள அரசவைக் கூட்டத்தையும் அடிதட்டு மக்களையும் ஒருங்கே கைகளில் அடக்கி ஆட்சி செய்துகொண்டிருந்த நம்பூதிரிகளுக்கும் என்ன சம்பந்தம்?

திப்புவைக் குறித்துப் பேசப்படும் வரலாற்று நூல்களில் பெரும்பாலானவைகளிலெல்லாம் காணப்படும் பிரசித்தமான இந்தத் திப்புவின் கட்டளைக்குக் காரணம் தான் என்ன?. அதனை அறிந்துக் கொள்ள வேண்டுமெனில், திப்பு கேரளத்தில் கால்பதித்த வேளை கேரள மக்கள் எந்நிலையில் வாழ்ந்து வந்தனர் என்பதைக் குறித்துத் தெரிந்துக் கொள்ள வேண்டும்.

சிறிது வரலாற்றின் பக்கங்களைப் புரட்டிப் பார்ப்போம்....

விஜயநகர சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சிக்குப் பின் மைசூரில் பிரபல சக்தியாக வளர்ந்து வந்த ஹைதர் அலியின் படை, அக்காலத்தில் மலபார் என அறியப்பட்டிருந்தக் கேரளத்தினுள் நுழைந்துத் தெற்கு மலபாரை ஆட்சி செய்துக் கொண்டிருந்த கேரள வரலாற்றில் மிகப்பெரிய மஹாராஜாவாக அறியப்பட்டிருந்த சாமிரி ராஜாவை அடக்கி அடிபணியவைத்ததோடு ஹைதர் அலியின் மைசூர் ஆட்சி மலபாருக்கும் விரிவடைந்தது. அதனைத் தொடர்ந்து 1773 ல் மைசூர் ஆட்சியின் மலபார் கவர்னராக ச்ரீநிவாச ராவ் பதவியேற்றது முதல் 1790 வரையுள்ள 16 ஆண்டு காலம் மலபார், மைசூர் ஆட்சியின் கீழ் இருந்தது.

இதில் 9 ஆண்டுகள் ஹைதர் அலியும் 7 ஆண்டுகள் திப்புவும் ஆட்சி செலுத்தினர். மிகக் குறுகிய இந்தக் காலயளவில் மலபார் மக்களின் வாழ்க்கை முறையில் ஒரு புரட்சியையே ஏற்படுத்த திப்பு முனைந்திருந்தாலும் இஸ்லாமிய பெயர் கொண்ட ஒரு நவீனத்துவ முகம் கொண்டிருந்ததால் அவரின் சீர்திருத்தங்கள் மூட பழக்க வழக்கங்களிலும் கீழ்த்தர ஆச்சாரமுறைகளிலும் கண்மூடித்தனமான நம்பிக்கை வைத்திருந்த அச்சமூகத்தில் தேவையான மாற்றங்களை ஏற்படுத்தாமல் போனது.

அக்காலகட்டத்தில், சமூகத்தின் எல்லாப் பகுதி மக்களையும் தம் கைகளில் அடக்கி வைத்திருந்த நம்பூதிரிமார்கள், தாழ்த்தப்பட்ட பெண்களையும் ஆண்களையும் அடக்கியாண்டு மோசம் செய்து கொண்டிருந்தனர். தங்களைத் தெய்வத்தின் பிரதிநிதிகளாகவும் பூஜிக்கப்பட வேண்டியவர்களாகவும் அவர்கள் மனதில் நினைத்துக் கொண்டிருந்தனர். அந்த எண்ணத்தைச் சமூகத்தில் விதைப்பதிலும் அவர்கள் வெற்றி பெற்றிருந்தனர்.

"அவரின் - நம்பூதிரியின் - உடல் பவித்ரமானதாகும். சலனம் தெய்வீகக் காட்சியாகும். அவர் உண்டு மீந்த உணவு அமிர்தமாகும். மனித உயிர்களில் ஏற்றவும் உயர்ந்த நிலையில் பூஜிக்கப்பட வேண்டியவர்களாவர்; பூமியில் தெய்வத்தின் பிரதிநிதிகளாவர். இக்காரணங்களால் அவர்களுடன் எந்தப் பெண்ணிற்கு உறவு கொள்வதற்கான வாய்ப்பு கிடைக்கப்பெறுகின்றதோ அவள் பாக்கியம் பெற்றவள்" என்று அக்காலத்தில் தாழ்த்தப்பட்ட மக்களிடையே நம்பிக்கை ஊட்டப்பட்டிருந்தது.

"நம்பூதிரியை மகிழ்ச்சியடைய வைப்பது தெய்வத்தைத் திருப்திபடுத்துவதற்குச் சமமானதாகும். நாயர் பெண்களுடன் சயனிப்பதற்கான உரிமை கடவுள் அவர்களுக்கு வழங்கியதாகும். அதனை நிராகரிப்பவர்கள் - எதிர்ப்பவர்கள் - தெய்வக்குற்றத்திற்கு ஆளாவர்". இது போன்ற மூடநம்பிக்கைகள் சமூகத்தில் மிகுந்த நம்பிக்கையுடன் பரவியிருந்தக் காரணத்தால், அழகான பெண் குழந்தைகளைப் பெற்றிருந்த நாயர் குடும்பங்கள் தங்கள் பெண்களை ஏதாவது ஒரு நம்பூதிரியுடன் சயனிக்க வைக்க மனப்பூர்வமாக விரும்பியிருந்தனர்.

"சூத்திரப் பெண்கள் பத்தினித்தன்மையைப் பேண வேண்டிய அவசியம் இல்லை எனவும் நம்பூதிரிகளின் ஆசாபாசங்களை நிறைவேற்றி வைக்க சுயம் சமர்ப்பிக்கப்பட்டவர்கள் என்றும் இது கேரளத்திற்கு ஆச்சாரங்களைப் பரிசளித்தப் பரசுராமன் போட்டக் கட்டளையாகும் என ஆச்சாரங்களைக் கற்பித்துப் போற்றும் பிராமணர்கள் தெரிவிக்கின்றனர்". (சி. அச்சுதமேனோன் - கொச்சின் மாநில கையேடு - 1910. பக்கம் 193. c. achchutha menon - Cochin State Manual - 1910. Page No: 193.) 

தொடரும், இன்ஷா அல்லாஹ்.....!

கருத்துக்கள் (1)add comment

எழுதியவர்: abdul azeez , August 15, 2008 03:18

இந்திய பாட புத்தகங்களில் வரலாற்று பாடத்தை நீக்கிவிட்டு வேற ஒன்றை கற்பித்தால் நன்று. அல்லது வரலாறு என்ற ஒரு சப்ஜெட் இல்லை என்றால் கூட மாணவர்களுக்கு சிரமம் குறையும். ஏன் ? என்றால் அதில் மதங்களுக்கு தகுந்தவர்களையும். அல்லது தங்கள் சமயம் சாயலில் உள்ள ஒத்த கருத்தை சொல்லும் வரலாற்று மன்னர்களை மட்டும் மேல் தூக்கி துதி பாடுவதும். இல்லை என்றால் மாற்றார் மன்னர்கள் எல்லாம். கேவலமானவர்கள், அயோக்கியர்கள், வால் முனையில் மத பிரச்சாரம் செய்தவர்கள், அல்லது சில அரசர்களின் வரலாற்றை அடியோடு இருட்டடிப்பு செய்வதும்.இந்திய வரலாற்று பாட புத்தகம் தன் கோர கரும்புள்ளியை இல வயது மாணவ மாணவியர்களின் மனதில் பதிய வைத்து விடுகிறது. இதனால் ஒற்றுமை என்பது வருங்கால தலைமுறைக்கும்,இப்பவும் எட்டா கனியாகிவிடுகிறது. பொது கழிப்பிடம் போல் போகிறவர்கள்,வருகிறவர்கள், எல்லாம் பயன்படுத்துவது மாதிரி வரலாற்றையும் தன் இஷ்டத்திற்கு நீக்கியும், இடைச்சொருகல் செய்தும் யார் யாரோ எழுதி வைத்துள்ளார்கள். அந்த குப்பையை படிப்பதற்கு பதிலாக. வேற ஒன்றை படித்து மாணவர்கள் பயன் பெற்றுவிடலாம் அல்லவா ? அனைத்து முஸ்லிம்களுக்கும் அஸ்ஸலாமு அலைக்கும். மா சலாம். அப்துல் அசீஸ்.



கருத்து எழுதுக :
தமிழ்
ஆங்கிலம்
சிறிதாக்குக | பெரிதாக்குக
 

busy

 
Add Site to FavoritesAdd Page to FavoritesShare This PageEmail This Page
Back to Top

இறைமறை

Random Quran Verses

3: 150 அல்லாஹ்தான் உங்கள் அதிபதி. இன்னும் அவனே உதவி செய்வோரில் சிறந்தவன்.

ஆக்கங்களை அனுப்ப...

புதிய கருத்துக்கள்

sheik : 'தேர்ந்தெடுக்கப்படும் நூல், சென்னை ர...


"கவியன்பன்" கலாம், அதிராம்பட்டினம் : முஹம்மத் அலி அவர்களின் சமுதாய அக்கறை...


Mohamed Abubacker Sidique : அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்). அன்பு சகோத...


பிறைநதிபுரத்தான் : மகளிர்க்கான இட ஒதுக்கீட்டில் முஸ்லி...


சஃபி : Godhra “witness” escapes to tell his story Vidya Subrahmaniam Husain Mulla says he was not in ...


சஃபி : ஆஸ்திரேலியாவில் இஸ்லாமிய வங்கி தொட...


ர. சிராஜ் முஹம்மது : அஸ்ஸலாமு அலைக்கும் அழகிய தொடர். நம் ...


abdul basith : ‘ஹயாத்து முஹம்மத்’ நூலையே தமிழாக்கம் செய்யலாமா?


அஹமத் .'.பைசல் : அதிகமான இஸ்லாமிய ஆக்கங்கள் படிப்பதற...


Yasin.m : திருகுரானை எப்படி பதிவிறக்கம் செய்வ...


சாபிரா : அருமையான தொடர். வாழ்த்துக்கள்


Syed : மறந்த வரலாற்றை நினைவுப்படுத்துகிறீர்கள். கண்களில் கண்ணீர் வருகிறது. தொடரும்


M. Abdul Hameed. : வ அலைக்குமுஸ் ஸலாம் // .........இதுதான் சில ...


M A H : நபி (ஸல்) அவர்களின் எச்சரிக்கை: "வார்த...


benazirjaila : மஸாஅல்லாஹ் இது மாதிரியாமன கதைகளை பெண...


இப்னு முஹம்மத்(ஹனீஃப்) : அன்புச் சகோதரர்களே அஸ்ஸலாமு அலைக்கு...


M.A. Abdullah : அஸ்ஸலாமு அலைக்கும் அன்பு சகோதரர் சைய...


M.Mohamed Abbas : அஸ்ஸலாமு அலைக்கும் அனைத்து முஸ்லிம்...



You are here  : முகப்பு தொகுப்பு வரலாறு இந்தியா வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சீர்திருத்தம்! (பகுதி-1)