முகப்பு

ஹிஜாபுக்குப் பின் கண்ட வாழ்க்கை! - சகுந்தலா நரசிம்ஹன்

 

 திருமதி. சகுந்தலா நரசிம்ஹன் பிரபல எழுத்தாளரும், பெண்ணுரிமைக்குக் குரல் எழுப்பும் சங்கங்களின் பிரதிநிதியுமாவார். சமூகவியலில் முனைவர் பட்டம் பெற்ற இவர், பெண்களின் முன்னேற்றத்திற்கான பயிற்சிப் பட்டறைகளை நடத்தி வருபவராவார். பிராமண சமூகத்தைச் சேர்ந்தவரான இவர் துணிச்சலுடன் "சதி" (இந்தியாவில் விதவைகள் உயிரோடு எரிக்கப்படுதல்) பற்றிய நூலை எழுதி பரபரப்புக்குள்ளானவர். தனது கணவருடன் சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை இங்கே பகிர்ந்து கொள்கிறார்.

 

 

'ஹிஜாபை அணிந்தால்தால் உள்ளே வரமுடியும்' என்ற நிலை வந்தால் நான் சவூதி அரேபியாவிற்கே செல்ல மாட்டேன்.  என் கணவர் மட்டும் எவ்வித இஸ்லாமிய ஆடையையும் அணியாதபோது, நான் மட்டும் ஏன் அணியவேண்டும்? என்பதே எனது மறுப்பிற்கு முதல் காரணமாக இருந்தது. என்றாலும் எனது ஆர்வம் வெறுப்பை வென்றது.

 

சவூதி அரேபியாவின் ரியாத் ஏர்போர்ட்டில் நான் கால்வைத்த கணத்திலேயே மிகவும் பண்போடு "பெண்கள் பகுதி" க்கு அழைத்துச் சென்று அமர வைக்கப்பட்டேன். விசாச் சடங்குகளை முடித்துவர என் கணவர் சென்றிருக்கும் வேளையில் ஒரு குட்டி அரண்மனை போன்று மிக அழகாக வடிவமைக்கப் பட்டிருந்த அந்த அறையின் அலங்காரங்களில் மனம் லயித்துப் போனேன். செல்வச் செழிப்புடன் கூடிய கண்ணியமும் கெளரவமும் ஆண்-பெண் பாகுபாடின்றி அனைவருக்கும் கொடுக்கப்படுவது என் மனதை முதன் முதலாகத் தொட்டு விட்டது!

 

சவூதிக்குக் கிளம்பும் முன்னரே அங்குள்ள ஹிஜாப் பற்றிய விதிமுறைகளைப் பற்றி அறிந்திருந்த காரணத்தினால், புர்காவினைக் கையோடு கொண்டு வந்திருந்தேன். என்றாலும், ஏர்போர்ட் ஃபார்மாலிட்டீஸ்களை முடித்து நகரத்தின் அழகான வீதிக்களைக் கடந்து ஃபைஸலியா ஹோட்டல் வந்து சேரும் வரை நான் புர்காவை அணிந்து கொள்ள வேண்டும் என்று என்னிடம் யாரும் சொல்லவேயில்லை.

 

மறுநாள் காலையில், ஹோட்டல் நிர்வாகத்தினர் அழகான எம்ராய்டரிங் செய்யப்பட்ட புதிய கறுப்பு நிற அபாயா (இந்தியாவில் நாம் புர்கா என்று சொல்லும் உடையை சவூதியில் இவ்வாறு தான் அழைக்கிறார்கள்) ஒன்றினைக் கொடுத்தார்கள். இதனை நான் அணிந்து கொண்டால் வெளியே செல்லும் வேளையில் அதிக சவுகரியமாக இருக்கமுடியும் என்று கனிவோடு ஆலோசனை கூறினார்கள்.

 

"சவுகரியமா? இதன் மூலமா?" என்று மனதில் கேட்டுக் கொண்டேன்.

 

எனது தோற்றத்திற்கும், தனித்தன்மைக்கும் வேட்டு வைக்கும் இந்த உடை, எனக்கு சவுகரியத்தை அளிக்கப்போகிறதா? என்ற கேள்வியை வெளிக்காட்டாமல் சற்றே சினத்துடன் வாங்கி வைத்துக் கொண்டேன்!. ஆனால் நான் ரியாதில் தங்கியிருந்த அடுத்த ஆறு நாட்களில் என் எள்ளலுக்கும் சினத்திற்கும் தகுந்த பதில் கிடைத்தபோது வியப்பிலாழ்ந்து போனேன்.

 

நோபல் பரிசுக்கு இணையாக அறிவியல், மருத்துவம் ஆகிய துறைகளில் உலகளாவிய அளவில் சாதனை படைக்கும் விஞ்ஞானிகளுக்கான விருதுகளையும் இரண்டு லட்சம் அமெரிக்க டாலர்கள் பரிசுகளையும் ஆண்டுதோறும் வழங்கும் சர்வதேசப் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்கான அழைப்பு எனக்கு விடுக்கப்பட்டிருந்தது.

மறுநாள் காலையில், அரண்மனையின் உயரிய கம்பீரத்தோடு, பிரம்மாண்டமாய் அலங்கரிக்கப்பட்டிருந்த "பிரின்ஸ் சுல்தான் க்ராண்ட் செரமோனியல் ஹால்" இல் அடியெடுத்து வைத்த எனக்குப் புதிய வியப்பு ஒன்று அறிமுகமானது. அத்துணை பெரிய சபையில் பெண்களுக்காகத் தனிப் பகுதி ஒதுக்கப்பட்டிருந்தது.

 

பூக்களை மொத்தமாக இறக்குமதி செய்யும் பெரும் நிறுவனம் ஒன்றின் பெண் உரிமையாளர் எனது வலப் பக்கத்திலும் அவருக்கு அருகில் ஒரு பல்கலைக் கழகத்தில் பொருளாதாரம் போதிக்கும் பெண் நிபுணரும் அமர்ந்திருந்தனர். ஒரு முழு ஆண்டின் பெரும்பகுதி நேரத்தினை நியூயார்க்கில் செலவழிக்கும் தனியார் நிறுவனம் ஒன்றின் தலைவியும் ஜே ஆர் டி டாட்டாவின் நெருங்கிய தோழி என்று அறியப் பட்டவருமான ஒரு பெண்மணி எனது இடப்பக்கத்திலும் அவருக்கு அருகில் இளம் பத்திரிகையாளர் பெண் ஒருவரும் அமர்ந்திருந்தார்.  ஜித்தாவிலிருந்து வந்திருந்த 'மிகப் பெரும் சொத்துக்களுக்கு வாரிசுதாரர்' என்று அறியப் பட்ட ஒரு பெண்ணும் எங்களோடு அமர்ந்திருந்தார்.

 

சரி, இதில் வியக்க என்ன உள்ளது என்கிறீர்களா? அவர்கள் அனைவருமே அணிந்திருந்தது கறுப்பு நிற ஹிஜாப் உடை தான்.

 

என்னருகில் அமர்ந்திருந்த பெரும் நிறுவன உரிமையாளரான அந்த இளம் பெண் விழா நிகழ்ச்சிகளைப் படம் எடுத்துக் கொண்டிருந்த டிவி கேமராக்கள் எங்களை நோக்கித் திரும்பும் நேரத்தில் எல்லாம் விலகியிருக்கும் தன் முகத்திரையினை சரி செய்து முகத்தை மூடிக் கொண்டார். புதிராகப் பார்க்கும் என் பார்வையினைப் புரிந்தவராக என் பக்கம் சாய்ந்து, "கேமராக்கள் நம்மைப் படம்பிடிப்பதை விட்டும் விலகி விட்டால் எனக்கு தெரியப் படுத்துங்கள்!" என்றார்.

நிகழ்ச்சிக்கு வந்த மற்ற அனைத்துப் பெண்களைப் போலவே இவரும் மிக அழகிய ஆங்கிலம் பேசுவதைக் கேட்டு வியப்பு விலகாமல் ஆர்வத்துடன் நெருங்கி கேட்டேன்: "எதனால் தங்கள் முகத்தினைக் கேமராமுன் காண்பிக்க மறுக்கிறீர்கள்?"

 

அதற்கு அவர், "நீங்கள் இப்போது அணிந்துள்ள புடவை, ஏதேனும் ஒன்றில் சிக்கி, உங்கள் முழங்கால் வெளியே தெரிவதை நீங்கள் விரும்ப மாட்டீர்கள் அல்லவா? அது போலவே அறிமுகமற்றப் புதியவர்கள் என் முகத்தைப் பார்ப்பதை நான் விரும்பவில்லை!" என்றார்.

"முஸ்லிம் பெண்கள் பர்தா அணிவிக்கப்பட்டு அடிமைப்படுத்தப் படுகிறார்கள்" என்ற சொல்லையே இந்தியாவில் திரும்பத் திரும்ப கேட்டிருந்த என் மனதினுள் இது பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது.

என் அருகில் அமர்ந்திருந்த மற்றொரு பெண் தனது கைகளுக்கும் விரல்களுக்கும் உதட்டுக்கும் கண்களுக்கும் தேர்ந்த ஒப்பனை செய்திருந்ததையும் கவனித்தேன். மனதில் எழுந்த கேள்விகளை அடக்க முடியாமல் அவர் பக்கம் நெருங்கினேன்.

 

"இத்தனை அற்புதமான அலங்காரங்களைச் செய்துள்ள உங்கள் அழகை இந்த புர்கா சிதைக்கவில்லையா?" பொருளாதார நிபுணரான அப்பெண் மென்மையாக சிரித்தவாறே கூறினார்.

 

"இல்லவே இல்லை! இத்தனை அலங்காரங்களையும் என் சந்தோஷத்திற்காக மட்டுமே செய்கிறேன். நம் சுவைக்குத் தக்கவாறு உணவைத் தேர்ந்தெடுத்துச் சுவைத்துச் சாப்பிடுவது நமது தனிப் பட்ட விருப்பமில்லையா அது மாதிரி...!" என்றார்.

 

அத்துடன் நில்லாமல், "இந்த அழகு அலங்காரங்கள் எல்லாம் வேற்று ஆண் ஒருவரை ஈர்ப்பதற்காக அல்லவே? பின்பு ஏன் கவலை?" என்றார்.

 

அப்படியென்றால் இத்தனை காலம் மேற்கத்திய மற்றும் கீழத்தேய எழுத்தாளர்கள் அனைவரும், "புர்கா என்பது பெண்ணடிமைத்தனம் என்று கூறி வந்தது பொய்யா?" என்ற பெரிய கேள்வி ஒன்று பூதாகரமாக என் மனதில் உருவாவதை உணர்ந்தேன்.

என் கேள்விக்கு விடை தேடும் முயற்சியில் வாரிசுதாரரான ஜித்தாப் பெண்ணிடமும் இது பற்றி உரையாடினேன்.

"உங்களுக்குத் தெரியுமா?" என்று என்னிடம் கேள்வி எழுப்பினார் செல்வச் சீமாட்டியான அந்த பெண். "மேற்கத்திய நாடுகளின் என் பயணங்களில் கவனித்திருக்கிறேன். அலுவல் சார்ந்த உயர் நிகழ்ச்சிகளில் உடல் முழுமையாக மறையும் வண்ணம் பிஸினஸ் சூட் அணிந்து வரும் மேற்கத்தியப் பெண்கள் பலர் இருக்கிறார்கள். இத்தகையோரின் உடைக்கும் ஹிஜாபுக்கும் பெருத்த வித்தியாசம் ஏதுமில்லை!" என்றார்.

"கறுப்பு நிறக் கலாச்சார உடையினை உடல் முழுவதும் சுற்றிக் கொள்ளுதல்" என்று பலரை இதுநாள் வரை கேலி செய்திருந்த எனக்கு, யதார்த்தமான இப்பதில் வெகுவாக யோசிக்க வைத்தது.

பொறுமையின் எல்லையைக் கடந்தவளாக ஆர்வம் மிகுதியில் என் கையில் கொண்டு வந்திருந்த புர்காவை எடுத்து அணிந்து பார்த்தேன். எடுத்த எடுப்பில் சற்றே வெறுப்பாய் உணர்ந்த நான், அடுத்த சில நாழிகைகளில் எனது வெறுப்புத் தளர்வதை உணர ஆரம்பித்தேன். பிற்பாடு ஹிஜாப் அணிந்தவண்ணம் வெளியே செல்லவும் ஆரம்பித்தேன்.

என் போன்றே ஹிஜாப் அணிந்து பார்த்த, மருத்துவத்துறைக்கான பரிசினை வென்ற அமெரிக்கர் ஒருவரின் மனைவி பெண்களின் கூட்டத்திற்கிடையே பேசுகையில், "தான் அணிந்துள்ள ஹிஜாப் மூலம், தான் மிகவும் சவுகரியமாகவே உணர்வதாக"க் குறிப்பிட்டார். "சுருக்கங்கள் நிறைந்த, அடிக்கடி விலகும் எனது ஸ்கர்ட் பற்றி இனிக் கவலையில்லை!" என்று கூறி அங்குள்ள பெண்கள் அனைவரையும் சிரிக்கச் செய்தார்.

வியப்பில் என் விழிகள் அகலும் வண்ணம் நாங்கள் பார்வையிடச் சென்ற தேசியக் கண்காட்சி மையம், பல்கலைக் கழகம், மருத்துவ-ஆராய்ச்சி மையம் என்று எங்கு, எப்பணியில் நோக்கினாலும் பெண்கள் தடங்கலின்றி சுறுசுறுப்பாகப் பணியாற்றிக் கொண்டிருந்தனர்.  அவர்கள் அனைவரும் ஹிஜாப் அணிந்தவண்ணம் பணிகளில் ஈடுபட்டிருந்ததைத் தனியாகச் சொல்லவும் வேண்டுமா?

 

அறிவியல், தொழில்நுட்ப ஆய்வாராய்ச்சி நிலையங்களிலும் உயர் தொழில்நுட்பப் பணிகளிலும் அநாயசமாகவும் எளிமையாகவும் அப்பெண்கள் ஹிஜாபுடன் எவ்வித இடைஞ்சலுமின்றி செயற்படுவதைக் கண்டு வியப்பின் எல்லைக்குச் சென்றேன்.

 

இந்தியத் தூதர் M.O.H ஃபாரூக் அவர்கள் எங்களுக்காக அவர் வீட்டில் அளித்திருந்த உயர் ரக விருந்தில்கூட பெண்கள் (அதிகாரிகளின் மனைவிகள்) அனைவருக்குமான தனித்த இடத்தில் விருந்து நடந்தது.

அதன் பிறகு ஒரு நாளில், கோல்டு மார்க்கெட் எனப்படும் தங்க நகைகள் விற்கும் கடைவீதிக்குச் சென்று வந்தேன். (பார்ப்பதற்கு மும்பையின் ஜாவேரி பஜார் போன்று ஆனால் அதைவிடச் சிறப்பாக இருந்தது இப்பகுதி) அப்பகுதியில் உள்ள ஷாப்பிங் மால்கள் அனைத்திலும் ஹிஜாபுடன் ஏறி இறங்க எனக்கு மிக மிக எளிமையாகவே இருந்தது.

அந்நேரத்தில் அப்பகுதிகளில் சவூதி நாட்டு படித்த இளம் பெண்கள் பலரைப் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. அப்படி பார்த்த பல பெண்கள் தங்கள் கைகளில் லேட்டஸ்ட் டெக்னாலஜி மொபைல் ஃபோன்களை வைத்துக் கொண்டு மகிழ்வுடன் பேசிக் கொண்டிருந்தனர். பெண்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த பகுதியில் அமர்ந்து, தன் மொபைல் ஃபோனில் டயல் செய்து கொண்டிருந்த ஓர் இளம் பெண்ணை அணுகினேன்.

 

அந்தப் பெண், நவீன கலாச்சாரச் சூழலில் வளர்ந்தவர் என்பது பார்க்கும் பார்வையிலேயே தெரிந்தது. படித்த, பகட்டான உடையணிந்த பெண் என்பதால் ஹிஜாப் குறித்த மாற்றுச் சிந்தனையை எதிர்பார்த்து அணுகினேன்."நீங்கள் ஹிஜாபை விரும்பித்தான் அணிகிறீர்களா?" என்று கேட்டு விட்டேன்.

 

நொடிக்கூட தாமதிக்காமல் பதில் வந்தது: "இது எனக்கு கண்ணியத்தைப் பெற்றுத் தருகிறது. மேலும் ஒரு உள்ளாடையை அணிவது போன்று எளிமையாகவும் இருக்கிறது" என்றார்.

என்னை ஏறிட்டு நோக்கியவர், என் மனதில் உள்ள குழப்பங்களைப் படித்தது போன்று எதிர்கேள்வி ஒன்றையும் என்னிடமே போட்டார்:

"செரினா வில்லியம்ஸ், இப்போது அணிந்துள்ள ஸ்கர்ட்டை விடச் சிறிய, பிகினி உடையினை அணிந்தால் இன்னும் வேகமாக அவரால் ஆட முடியும்தான். ஆனால் அது அவருக்கு சவுகரியமாக இருக்காது என்பதால் அவர் செய்ய மாட்டார் இல்லையா?" என்றார். இதுநாள் வரை எனக்குக் கிடைக்காத சில விடைகள் சரசரவென்றுக் கிடைக்க ஆரம்பித்தன.

 

இச்சூழலில், மும்பையின் மலபார் ஹில் பகுதியில் ஒருமுறை நான் கலந்து கொண்ட திருமண டின்னர் பார்ட்டி ஒன்று நினைவுக்கு வந்தது. மணமகளாக அலங்காரம் செய்யப்பட்ட பெண் ஒருத்தி, பல்லாயிரம் ரூபாய்கள் செலவழித்து சிகை அலங்காரம் செய்திருந்தாலும் கூன்கட் (Ghoonghat) எனப்படும் முக்காடு கொண்டு தலைப்பகுதியினை நிகழ்ச்சி முழுவதும் தன்னை மறைத்திருந்தாள். அவளது அலங்கரித்த தலைமுடியை மறைத்திருப்பது பற்றி நான் எழுப்பிய வினாவிற்கு,  "கூன்கட் எனப்படும் தலையினை மறைப்பதுதான் பெரியோர்களுக்குச் செய்யும் மரியாதையாகும். இது எங்கள் பாரம்பரிய கலாச்சாரமாகும்; நான் ஏன் அதை மீற வேண்டும்?" என்று பெருமையாகக் கூறுயதே விடையாகக் கிடைத்தது.

எனவே எனக்கு ஏற்பட்ட பலவித அனுபவத்திலிருந்து சில முடிவுகளுக்கு வந்தேன்.

மும்பையில் ஒரு சமுதாயத்தின் பாரம்பரிய கலாச்சாரத்திற்காக ஒரு பெண் தலையை மறைப்பது பெருமையாக கருதப்படுவதும் அது ஆண்களிடையே 'அடிமைத்தனம்' என்ற கூக்குரலாக வெளியே வருவதில்லை. ஆனால், இஸ்லாத்தில் பெண்கள் ஹிஜாப் அணிகையில் மட்டும் 'பெண்ணடிமை'த் தனமாக உருவகப்படுத்தப் படுவது ஏன்? என்ற நெருடல் அவ்வேளையில் எழுந்தது.

ஒவ்வொரு நாட்டிலும் பெண்ணின் உடை அளவிலான கோட்பாடுகள் என்பது உள்ளது என்பது மறுக்கவே முடியாத உண்மை. ஆனால் அது அவரவர் கலாச்சாரம், பாரம்பரியத்திற்கு ஏற்று மாறுபடுகிறது. செரினா வில்லியம்ஸின் உதாரணம் உட்பட.

என்னுடைய ஆறாவது நாளின் முடிவில் அபாயா (ஹிஜாப்) அணிந்த பெண்களில் ஒருத்தியாக என்னை நானே கேட்டுக்கொண்டேன்.

இந்த உடை அணிந்ததன் மூலம் நான் எதுவும் சிரமமாக உணர்கிறேனா?

பெண்ணுரிமைக்காக கடுமையாகப் போராடுபவள் என்ற உணர்வில் இருந்து சற்றும் மாறுபடாமல் என் அடிமனதில் இருந்து எழுந்த பதில்,

இல்லை. எனக்கு எந்தச் சிரமமும் இல்லவே இல்லை!

சவூதி அரேபியாவுக்குச் சென்றதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்! அங்கே ஹிஜாப் அணிந்து வலம் வந்தபோதும்!

 

 

- தமிழாக்கம்: அபூ ஸாலிஹா

Comments:

கருத்துக்கள்   

 
மஸ்தூக்கா
0 #1 மஸ்தூக்கா -0001-11-30 05:53
பெண்கள் அந்நிய ஆண்களின் பார்வையிலிருந்த ு தங்களை மறைத்துக் கொள்ள அணியும் ஹிஜாப் எவ்விதம் கண்ணியமானது என்பதை அனுபவப்பூர்வமாக தாம் புரிந்து கொண்டது மட்டுமின்றி மற்றவர்களுக்கும ் புரிய வைத்திருக்கும் விதம் மிக அருமை.
இந்த ஆக்கத்தின் ஆங்கில மூலத்தையும் இணையத்தில் படிக்க நேர்ந்தது. மிகவும் எளிமையாகவும் கருத்துப் பிசகாமலும் மிகச்சிறந்த எழுத்துநடையில் தமிழாக்கம் செய்திருக்கும் அபூசாலிஹா அவர்களுக்கு பாராட்டுக்கள்.
தமிழ் இணைய உலகம் அபூசாலிஹா அவர்களை அதிகமதிகம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
Quote | Report to administrator
 
 
கனி
0 #2 கனி -0001-11-30 05:53
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
சகுந்தலா நரசிம்ஹன் அவர்களின் புர்கா அணிவது சம்பந்தப்பட்ட நேரடி அனுபவம் மிகவும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இது போன்ற கட்டுரைகளின் மூலம், இஸ்லாத்தையும் பெண்கள் அணியும் புர்காவையும் பற்றி தவறுதலாக புரிந்து வைத்திருப்பவர்க ளுக்கு இந்த மாதிரியான நேரடி நிகழ்ச்சிகள் இஸ்லாத்தையும் இஸ்லாமியர்களின் நடைமுறை வாழ்க்கை வழிமுறைகளையும் அதன் உண்மையான வடிவில் தெரிந்துகொள்ள வழிவகுக்கும்.
இதனை தமிழாக்கம் செய்து உதவிய அபூசாலிஹா அவர்களுக்கும் இதனை வெளியிட்ட சத்தியமார்க்க இணையதள நிர்வாகிகளுக்கு ம் மிக்க நன்றி.
Quote | Report to administrator
 
 
jafar safamarva
0 #3 jafar safamarva -0001-11-30 05:53
அல்ஹம்துலில்லாஹ ்! அருமையான விஷயத்தைத் தொட்டிருக்கிறீர ்கள். அல்லாஹ் அவருக்கு ஹிஜாபுடைய உண்மையை உணர்த்தியது போல், நேர்வாழியையும் காட்டுவானாக!!!
Quote | Report to administrator
 
 
இல்யாஸ்
0 #4 இல்யாஸ் -0001-11-30 05:53
இவரை போன்று ஹிஜாபினுடைய நண்மையை இவ்வுலகமே உணரும் நாள் வெகு தொலைவில் இல்லை
Quote | Report to administrator
 
 
முஹம்மது
0 #5 முஹம்மது -0001-11-30 05:53
அருமையான ஆக்கம்!

வாழ்த்துக்கள்! தமிழில் அபூஸாலிகா போன்ற நிறைய தமிழ் முஸ்லிம் எழுத்தாளார்கள் நிறைய தேவைப்படுகிறது. அப்போது தான் இஸ்லாமிய விரோதிகளின் முகமூடியைக் கிழிக்க ஏதுவாக இருக்கும்.

அல்லாஹ, அபூசாலிஹா அவர்களுக்கு சிறந்த நற்கூலியைத் தருவானாக என்று வேண்டியவனாக அவரின் இது போன்ற இன்னும் பல சிறந்த ஆக்கங்களை எதிர்பார்க்கிறே ாம்.
Quote | Report to administrator
 
 
கடவுள்
0 #6 கடவுள் 2012-04-02 21:18
இந்த ஆடை, இஸ்லாம் துவங்கிய நாட்களில் பாலைவன மணல் முகத்தில் வீழாமல் இருக்க தயார் செய்தது. மணல் புயல் அதிகமானால், நீண்ட கூந்தல் உடையோரின் நிலைமை படுகஷ்டம். இதற்காக அணியப்பட்ட 12ஆம் நூற்றாண்டு ஆடையை, ”அந்நிய ஆண்களின் பார்வையிலிருந்த ு தங்களை மறைத்துக் கொள்ள” என அனைத்து ஆண்களையும் கீழ்தரமாக சித்தரிப்பது தவறு.
Quote | Report to administrator
 
 
மரைக்காயர்
0 #7 மரைக்காயர் 2012-04-03 15:15
'கடவுள்' என்ற பெயரில் கருத்துப் பதிந்த நண்பரே, என்னங்க சார்.. இரண்டு வரி கருத்து எழுதுவதற்குக்கூ ட உங்கள் உண்மை அடையாளங்களை மறைத்துக் கொள்ளும் முகமூடி தேவைப்படுகிறதா? யாருடைய பார்வையிலிருந்த ு இப்படி ஒளிந்துக் கொண்டிருக்கிறீர ்கள்?
Quote | Report to administrator
 
 
abdul azeez
0 #8 abdul azeez 2012-04-03 19:41
// ”அந்நிய ஆண்களின் பார்வையிலிருந்த ு தங்களை மறைத்துக் கொள்ள” என அனைத்து ஆண்களையும் கீழ்தரமாக சித்தரிப்பது தவறு.//

இல்லை அப்படி கீழ் தரமாக சித்தரிப்பது சரிதான். காரணம் அந்த அந்நிய ஆண்களில் யார் நல்லவர் யார்? கெட்டவர் என்று மனதை பூதக் கண்ணாடி போட்டு ஆய்வு செய்யும் அளவுக்கு உலகம் இன்னும் முன்னேறலை. இந்தியாவில் அப்படி ஏதாவது சிஸ்டம் இருக்கா?
மா சலாம்.
அப்துல் அஜீஸ்
Quote | Report to administrator
 
 
கடவுள்
0 #9 கடவுள் 2012-04-04 08:54
அஸ்லைக்கும் சலாம்

அப்துல் அஜீஸ் அவர்களே.. நிங்கள் எனக்கு அந்நிய ஆண் ஆவிர்கள். இப்போழுது நிங்கள் நல்லவரா, கெட்டவரா என தெரிந்தா நான் ஆடை அணிய வேண்டும்? அல்லா எல்லோரையும் நல்லவராகவே படைத்துள்ளார். அல்லாவிடம் நம்பிக்கையில்லத வருக்கு வேண்டுமானால் “மறைத்துக் கொள்ள” தேவையிருக்கலாம் . எனக்கு அல்லாவிடம் முழு நம்பிக்கை உண்டு, ஆகையால், முழுவதும் மறைத்துக்கொள்ள அவசியம் எனக்கு இல்லை.
Quote | Report to administrator
 
 
abdul azeez
0 #10 abdul azeez 2012-04-04 21:03
அஸ்ஸலாமு அலைக்கும் என்று எழுத்து பிழையை சரியாக திருத்தி உங்களுக்கு முகமன் கூரிக்கொண்டதொடல ்லாமல்

// நிங்கள் எனக்கு அந்நிய ஆண் ஆவிர்கள். இப்போழுது நிங்கள் நல்லவரா, கெட்டவரா என தெரிந்தா நான் ஆடை அணிய வேண்டும்?//

நூறு சதவீதம் நல்லவராக இருந்தாலும். அந்நியருடன் இந்த புர்கா நிலையில் தான் இருக்கணும். இது உலக திருகுர்ஆனின் கருத்து மேலும் நான் யார் நல்லவர் கெட்டவர் என்று போட்டது ஆண்கள் பெண்ணின் மீது கொள்ளும் சபலம் மற்றும் அதனால் அவனுக்குள் ஏற்படும் அந்த ஆசை போன்ற மோகம் என்ற எண்ணங்கள் எல்லாம் தோன்றி அவன் மனது அந்த சஞ்சலத்தில் உள்ளாவதற்கு அந்த பெண்ணின் அறைகுறை ஆடை தான் காரணம்.

// அல்லா எல்லோரையும் நல்லவராகவே படைத்துள்ளார்.//

அந்த அல்லா உங்களிடம் சொல்லிட்டு போனாரா? எல்லோரையும் நல்லவரா படைதிருக்கேன் என்று. எந்த அடிப்படையில் சொல்கிறீர்கள். கொலை, திருட்டு, கற்பழிப்பு, விபச்சாரம் போன்ற லிஸ்டில் அடங்காத கிரிமினல் பாவங்கள் எல்லாம் விலங்கினங்களிலோ அல்லது மற்ற உயிரினங்களிலோ செய்வது கிடையாது நீங்கள் சொல்லும் நல்லவராகவே படைக்கப் பட்ட இனத்தில் தான் இருக்கிறார்கள்.

// அல்லாவிடம் நம்பிக்கையில்லத வருக்கு வேண்டுமானால் “மறைத்துக் கொள்ள” தேவையிருக்கலாம் . எனக்கு அல்லாவிடம் முழு நம்பிக்கை உண்டு, ஆகையால், முழுவதும் மறைத்துக்கொள்ள அவசியம் எனக்கு இல்லை.//

வீடு தீ பற்றிக் கொண்டு எரிகிறது அந்த வீட்டில் மனைவி குழந்தை தூங்கிக் கொண்டு இருக்கிறார்கள். நீங்கள் அல்லா மேல் வைத்த நம்பிக்கை மாதிரி இருந்தால் பேசாமல் இருக்கனும் ஓடிப் போய் காப்பாற்றக் கூடாது அல்லது அவசர எண்ணுக்கும் தகவல் கொடுக்கக் கூடாது அல்லா வந்து தண்ணிய ஊத்தி அணைத்து காப்பாத்துவார் என்று பொறுமையா காத்திருந்து எதிர்பார்க்கனும ். நான் போய் காப்பாற்றனும் என்ற அவசியம் இல்லை என்று ஊர் மக்கள் கேட்டால் அறிவு பூரணமா பதில் சொல்லனும் சொல்லுவீர்களா?

இந்த மாதிரி குருட்டு தனமா தன் மீது நம்பிக்கை கொள்ளுமாறு அல்லாஹ் கட்டளை போடலை திருக் குர்ஆனில் உள்ள ஏனைய கட்டளை, உபதேசம், கருத்து அனைத்தையும் நம்பனும் அப்ப தான் அல்லாஹ்வை நம்பினதாகவே ஆகும் இல்லை என்றால் அல்லா என்ற பெயரை கேள்விபட்டதாகவே ஆகும்.

நீங்கள் கேட்கலாம் புர்க்கா போட்டுக் கொண்டு நடந்தால் அப்ப மட்டும் கெட்டவனால் அந்த பெண்ணை கற்பழிக்க முடியாதா? அல்லது நடந்ததே இல்லையா ? என்று.

உதாரணம்: உங்கள் வீட்டில் ஒரு கிலோ அளவில் நகைகள் மற்றும் பணங்கள் இருக்கின்றது உங்கள் வீட்டில் உள்ள பீரோவில் பூட்டி வைத்திருந்தால் கூடு மாணவரை உங்கள் பொருளை பாது காத்துக் கொண்டீர்கள். அதை விட்டுட்டு திண்ணையில் அந்த நகைகளை வைத்துவிட்டு வீட்டை பூட்டிக் கொண்டு தூங்கினால் சொல்லவே வேண்டாம்.

வேண்டும் என்றே திட்டம் தீட்டி கற்பழிப்பவனுக்க ு உதாரணம் வீட்டை உடைத்து பீரோவில் உள்ள நகைகளை எடுத்துக் கொண்டு ஓடியவனை போலாவான்.அந்த மாதிரி உள்ளவனுக்கு நாட்டு சட்டத்திலும் தண்டிக்க இடம் உண்டு இறைவன் சட்டத்திலும் உண்டு.

அல்லா பாதுகாத்து கொடுப்பார் என்று நம்பினால் திண்ணையில் நகைகளை வைத்துவிட்டு தூங்கியவனின் நம்பிக்கைக்கு ஒப்பானது.

அதனால் கூடு மாணவரை புர்க்கா ஆடை மூலம் பெண் பாது காத்துக் கொள்வதே சிறந்தது. அல்லாவின் கட்டளையை ஏற்றுக் கொண்டதாகிறது.

மா சலாம்.

அப்துல் அஜீஸ்
Quote | Report to administrator
 
 
கடவுள்
0 #11 கடவுள் 2012-04-05 23:58
//ஆண்கள் பெண்ணின் மீது கொள்ளும் சபலம் மற்றும் அதனால் அவனுக்குள் ஏற்படும் அந்த ஆசை போன்ற மோகம் என்ற எண்ணங்கள் எல்லாம் தோன்றி அவன் மனது அந்த சஞ்சலத்தில் உள்ளாவதற்கு அந்த பெண்ணின் அறைகுறை ஆடை தான் காரணம்.//

மனம் என்பது என்ன அதை எப்படிக் தன் கட்டுப்பட்டிற்க ்குள் வைத்திருக்கவேண் டும் என அல்லா என்ன கூறுகிறார் என படித்திருந்தால் , தன்னுடைய தவற்றை பாதிக்கப்பட்டவர ் மேல் போடமாட்டீர். கட்டுப்பாடு பெண்களின் ஆடைக்கு அல்ல, ஆண்களின் ஆசைக்கு.
Quote | Report to administrator
 
 
கடவுள்
0 #12 கடவுள் 2012-04-06 00:05
//பீரோவில் பூட்டி வைத்திருந்தால் கூடு மாணவரை உங்கள் பொருளை பாது காத்துக்//

எங்கேனும் பெண்கள் ஆடையில்லாமல் திண்ணையில் அமர்ந்திருக்கின ்றனரா? அவர்கள் தங்கள் தேவை, தட்பவெட்பநிலை அறிந்து “மறைக்க வேண்டியவற்றை” மறைத்தே செல்கின்றனர். பார்ப்பவரின் பார்வை, அவரின் கீழ்தர மனநிலை எல்லாம் சமுகத்தின் வெளிப்பாடு. இதற்கும் பர்தாவிற்கும் தொடர்பில்லை என்பது எனது உறுதியான நிலைப்பாடு.
Quote | Report to administrator
 
 
muslim
0 #13 muslim 2012-04-06 13:12
இஸ்லாம் துவங்கிய காலம் என்று எடுத்துக்கொண்டா ல் முதல் மனிதர் தோன்றிய காலத்திலிருந்து கணக்கெடுக்க வேண்டியிருக்கும ். அதனால் இஸ்லாம் மீள் பிரச்சாரம் தொடங்கியதிலிருந ்து என்று புரிந்து கொள்வோம்!

புயல் காலத்தில் பாலைவன மணல் முகத்தில் விழாமல் இருக்க பாதுகாப்புக்காக தயாரிக்கப்பட்ட ஆடை புர்கா என்றால் அது இரு பாலினங்களுக்கும ் பொருந்தும். மணலுக்கான பாதுகாப்பு ஆடை அவற்றை ஆண்களும் பெண்களும் அணிந்து கொள்ளலாம். எனவே மணல் பாதுகாப்பிற்காக அணிந்துகொள்ளும் ஆடைகளை பெண்களுக்கான புர்கா என்று மட்டும் விளங்க முற்படுவது சற்று மிகை. அதனால் இதையும் விட்டுவிடுவோம்!

அடுத்து,

அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டவர் அல்லாஹ் கூறியிருப்பதைப் பின்பற்றினால்தா ன் அல்லாஹ்வின் மீது முழு நம்பிக்கை கொண்டவராவார். அதனால் அல்லாஹ்வை நம்பியவர்கள் ஆடைகள் விஷயத்திலும் ஆணாயினும் பெண்ணாயினும் சரியே அல்லாஹ் கூறியிருப்பதை நடைமுறைப்படுத்த ிட வேண்டும்! ஆகையால், ''எனக்கு அல்லாஹ்விடம் முழு நம்பிக்கை உண்டு. அதனால் முழுதும் மறைக்க வேண்டியதில்லை'' என்பது கவ்வைக்குதவாத வாதமட்டுமல்ல, அடியில் தூரில்லாத ஓட்டை வாளியைக் கொண்டு கிணற்றில் நீரிறைப்பதற்குச ் சமம். தண்ணீரும் வராது, தாகமும் தீராது!

இனி,

//எங்கேனும் பெண்கள் ஆடையில்லாமல் திண்ணையில் அமர்ந்திருக்கின ்றனரா? அவர்கள் தங்கள் தேவை, தட்பவெட்பநிலை அறிந்து “மறைக்க வேண்டியவற்றை” மறைத்தே செல்கின்றனர். பார்ப்பவரின் பார்வை, அவரின் கீழ்தர மனநிலை எல்லாம் சமுகத்தின் வெளிப்பாடு. இதற்கும் பர்தாவிற்கும் தொடர்பில்லை என்பது எனது உறுதியான நிலைப்பாடு.//

கடவுள் என்பவரின் மேல்கண்ட கருத்துக்களுக்க ான விளக்கத்தை கடவுளிடமே கேட்போம்!

''பெண்கள் மறைக்க வேண்டியவற்றை மறைத்தே செல்கின்றனர்'' இருந்தாலும் பாலியல் வன்முறையால் பெண்களே சீரழிக்கப்படுகி ன்றனரே ஏன்?

பருவமடைந்த பெண்களை விடுங்கள்! ஆடைகள் விஷயத்தில் வரம்பு எதுவும் இல்லாத சிறுமிகளும் பாலியல் வன்முறைக்கு பலியாகின்றனரே ஏன்?

இதற்கும் சமூகத்தின் மன நிலைதான் காரணம் என்று சாக்குப்போக்கு சொல்லாமல், ஆபத்து ஏற்படும் எனக்கருதினால் மூன்றடுக்கு ஆறடுக்கு என பாதுகாப்பு ஏற்பாடு வழங்குவதுபோல் பாலியல் வன்முறையில் அபாய நிலையுள்ளது எனக்கருதும் பாலினத்துக்கு பாதுகாப்பும், பாதுகாப்பிற்கான ஆலோசனைகள் வழங்குவதிலும் தவறு இல்லையே!

கடவுள் விளக்குவாரா?
Quote | Report to administrator
 
 
abdul azeez
0 #14 abdul azeez 2012-04-06 17:31
சகோதரரே

// மனம் என்பது என்ன அதை எப்படிக் தன் கட்டுப்பட்டிற்க ்குள் வைத்திருக்கவேண் டும் என அல்லா என்ன கூறுகிறார் என படித்திருந்தால்//

அப்படி நீங்கள் படித்திருந்தால் எழுதுங்களேன்.

// கட்டுப்பாடு பெண்களின் ஆடைக்கு அல்ல //

33:59. நபியே! நீர் உம் மனைவிகளுக்கும், உம் பெண்மக்களுக்கும ் ஈமான் கொண்டவர்களின் பெண்களுக்கும், அவர்கள் தங்கள் தலைமுன்றானைகளைத ் தாழ்த்திக் கொள்ளுமாறு கூறுவீராக; அவர்கள் (கண்ணியமானவர்கள ் என) அறியப்பட்டு நோவினை செய்யப்படாமலிரு க்க இது சுலபமான வழியாகும். மேலும் அல்லாஹ் மிக மன்னிப்பவன்; மிக்க அன்புடையவன்.

இது திருக் குர்ஆன் வசனமாகும் ஈமான் கொண்ட பெண்கள் என்றால் நம்பிக்கை கொண்ட என்று அர்த்தம். ஆக இங்கே கட்டுப்பாடு அல்லாஹ்வால் கொடுக்கப்படுகிறது.

//ஆண்களின் ஆசைக்கு//

. 24:30. (நபியே!) முஃமின்களான ஆடவர்களுக்கு நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; அது அவர்களுக்கு மிகப் பரிசுத்தமானதாகு ம்; நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை நன்கு தெரிந்தவன்.

கண்டபெண்களை பார்க்க கூடாது தன் மனைவியை தவிர வேறொரு பெண்ணிடம் உறவு கூடாது என்பது போன்ற ஆணித்தர கருத்துக்கள் அடங்கிய வசனமாகும்.

// எங்கேனும் பெண்கள் ஆடையில்லாமல் திண்ணையில் அமர்ந்திருக்கின்றனரா?//

ஆடை இல்லாமல் பெண்கள் திண்ணையில் அமருவதாக நான் பதியவில்லை நகைகள் உதாரணம் தான் சொன்னேன்.

இறுக்கமான டி ஷர்ட் மார்பகங்கள் தூக்கலாக வரும் பெண்கள் பெரும் நகரங்களில் போய் பாருங்கள் லட்சணம் தெரியும் ட்ரான்ஸ்பரன்ட் ஆடை அதாவது உள்ளாடை அதன் நிறம் அதனுடன் இணைக்கப்பட்ட கொக்கிவரை வெளியில் தெரியவே செய்கின்றன இதை எல்லாம் பார்த்தால் காமம் வரவே கூடாது என்றால் அவர் நடைமாடும் பிணமாக இருந்தால் தான் சாத்தியம்.

// இதற்கும் பர்தாவிற்கும் தொடர்பில்லை என்பது எனது உறுதியான நிலைப்பாடு.//12
உங்கள் உறுதியான நிலைபாடு எங்களுக்கு தேவை இல்லை. காரணம் உங்கள் மனோ நிலைபாட்டுக்கு தகுந்தாற்போல் அல்லா வசனம் இறக்கி இருப்பார் என்று நினைத்து இருந்தீர்கள் ஆனால் அது பர்தாவை போதிக்கவே செய்கின்றன.

அன்றியும் நாங்கள் நம்பிக்கையாளர்க ள் அதனால் அல்லாஹ்வின் வசனத்திற்கு மாற்று கருத்து சொல்லமாட்டோம் எங்களுக்கென்று தனிப்பட்ட அபிப்பிராயமோ தனி உறுதியோ கிடையாது.

மா சலாம்.

அப்துல் அஜீஸ்
Quote | Report to administrator
 
 
ismail
0 #15 ismail 2012-04-12 12:44
yaarunka antha kadaul ,allah unkalukku nerana valiyai tharanan prarthikkiren.n adu nilaimaiyaka sinthithu,naatt il nadakkum nadappukaliyum paarthu karuthukkalai velippatuthuvat huthan ariudaimai.ntha namaka yosiyunkal
Quote | Report to administrator
 

ஆரோக்கியமான சிந்தனைப் பரிமாற்றங்கள் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த இயலும். வாருங்கள். உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்:

இது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.


செய்திமடல் (Newsletter)

 

சத்தியமார்க்கம்.காம் தள ஆக்கங்களை மின் அஞ்சலில் பெற்றுக் கொள்ள, உங்கள் மின் அஞ்சல் முகவரியை இட்டு உறுதி செய்யவும். நன்றி!

சமீப கருத்துக்கள்