சத்தியமார்க்கம்.காம்

குண்டு வெடிப்புகள் கூறும் இரண்டு செய்திகள்! print Email
ஏடு-இட்டோர்-இயல் - தலையங்கம்
ஞாயிறு, 27 ஜூலை 2008 16:04

 கடந்த 25.07.2008 வெள்ளிக்கிழமையன்று பெங்களூர் விட்ட் மல்லய்யா சாலை, பந்தரப்பால்யா, ரிச்மண்ட் வளைவு, மைசூர் சாலை, நயந்தஹல்லி, மடிவாளா, ஆடுகோடி ஆகிய இடங்களில் மதியம் 1.30 மணி முதல் சாலை ஓரங்களிலும் அகதிகள் முகா‌‌ம்களுக்கு அருகிலும், இரும்பு நட்டுகளால் தயாரிக்கப்பட்டிருந்த நாட்டு வெடிகுண்டுகள் அடுத்தடுத்து வெடித்தன.

டைமர் உபயோகித்து 1 மணி நேரத்திற்குள் 9 இடங்களில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. "குண்டுவெடிப்புக்கு ஜெலட்டின் குச்சிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன" என குண்டுவெடிப்பு நடந்த இடத்தைப் பரிசோதித்த வெடிகுண்டு நிபுணர்கள் கூறியுள்ளனர். இந்தத் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட ஜெலட்டின் குச்சிகள் கடந்த 2005 ஆம் ஆண்டு கேரளவிலுள்ள கோழிக்கோடு எனும் இடத்தில் நடந்த குண்டுவெடிப்பில் உபயோகப்படுத்தப்பட்ட அதே ஜெலட்டின் குச்சி வகையைச் சேர்ந்தது எனவும் காவல்துறையினர் கூறியுள்ளனர்.

 

இதில் இருவர் கொல்லப்பட்டதுடன், 12 பேர் படுகாயமடைந்துள்ளதாக டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் தெரிவித்துள்ளார்.

 

ஒசூ் சாலைக்கும் மடிவாளாவிற்கும் இடையில் 4 குண்டுகளும் நயந்தஹல்லி, விட்டல் மல்லய்யா சாலை, ரிச்மண்ட் வளைவு ஆகிய இடங்களில் 3 குண்டுகளும் வெடித்தன.

 

பெங்களூரு குண்டு வெடிப்புகளுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்காத நிலையில் அடுத்த நாளான 26.07.2008 சனிக்கிழமையன்று மாலை 6.45 மணியளவில் அஹ்மதாபாத்தின் பாபு நகரில் முதல் குண்டு வெடித்தது. அடுத்தடுத்து 16 இடங்களில் குண்டுகள் வெடித்து நாட்டையே உலுக்கியது. இந்த பயங்கர குண்டுவெடிப்புச் சம்பவங்களில் இதுவரை 45 பேர் உயிரிழந்தனர்; 161 பேர் படுகாயமடைந்தனர்.

‌‌க்கள் நெருக்கடி மிகுந்த மணி நகர், பாபு நகர், டைமண்ட் மார்க்கெட், சர்நாக்பூர், ராஜ்பூர், ஜவஹர் நகர், ஹட்கேஷ்வர், நரோல் வளைவு, இசன்பூர், தக்கார் பாபுநகர் உள்ளிட்ட 16 இடங்களில் மாலை 6.45 மணி முதல் சுமார் 25 நிமிட இடைவெளியில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன.

 

குண்டுவெடிப்பைத் தொடர்ந்து அஹ்மதாபாத்தில் பெரும் பரபரப்பும் பீதியும் ஏற்பட்டது. தொலைபேசிகள் செயல்படவில்லை. நகர் முழுவதும் காவலர் குவிக்கப்பட்டனர். பல இடங்களில் போக்குவரத்துப் பாதிப்புக்கு உள்ளானது. குண்டுவெடிப்பு நடந்த பகுதிகளைக் காவல்துறையினர் சீல் வைத்தனர்.

 

பெங்களூரைப் போலவே அஹ்மதபாத்திலும் குறைந்த சக்தி கொண்ட குண்டுகளே வைக்கப்பட்டுள்ளதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. வெடிகுண்டுகள் அனைத்தும் சைக்கிள்கள் மற்றும் டிபன் பாக்ஸ்களில் வைக்கப்பட்டிருந்தன. குண்டுவெடிப்புகள் நடந்த இடங்கள் பெரும்பாலானவை மக்கள் அதிகம் கூடும் கடைவீதிப் பகுதிகள் ஆகும்.

 

இதில் மணிநகர் முதல்வர் நரேந்திர மோடியின் தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு மட்டும் மொத்தம் 3 இடடங்களில் குண்டுகள் வெடித்துள்ளன. அங்குள்ள பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு பேருந்தில் குண்டு வெடித்தது. சைக்கிளில் வெடிகுண்டுடன் வந்த ஒருவர், பேருந்தின் மீது மோதி குண்டை வெடிக்கச் செய்ததாகத் தெரிகிறது. இதில் பேருந்து பாதி எரிந்து போய் விட்டது.

இவை தவிர எல்.ஜி. மருத்துவமனை அருகே ஒரு குண்டு வெடித்தது. சிவில் மருத்துவமனையிலும் ஒரு குண்டு வெடித்தது. சிவில் மருத்துவமனை அருகே நடந்த குண்டு வெடிப்பு நடந்த இடத்திலிருந்து  GJ-6 CD 9718 என்ற எண் கொண்ட நம்பர் பிளேட்டைக் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். இதன் மூலம் காரில் குண்டுடன் வந்து மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தியிருக்கலாம் எனக் காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

 

அஹ்மதாபாத் தொடர் குண்டு வெடிப்புக்குச் சற்று முன்னர் ஊடகங்களுக்கும் தொலைக்காட்சி நிலையங்களுக்கும், தாங்கள் குண்டு வெடிப்பு நிகழ்த்தப் போவதாக 'இண்டியன் முஜாஹிதீன்' என்ற அமைப்பினர் எரிதங்களிலிருந்து இம்மின்மடல் பாதுகாக்கப்பட்டுள்ளது. இதனைப்பார்க்க ஜாவாஸ்கிரிப்ட் இயக்கப்படவேண்டும் மற்றும் எரிதங்களிலிருந்து இம்மின்மடல் பாதுகாக்கப்பட்டுள்ளது. இதனைப்பார்க்க ஜாவாஸ்கிரிப்ட் இயக்கப்படவேண்டும் என்ற முகவரிகளிலிருந்து மின்னஞ்சல்கள் அனுப்பினர் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. இத்தனைக்கும் குஜராத் முதல்வர் மோடியின் உளவுத்துறை மொத்தமாகச் செயலிழந்து போயிருக்கிறது. குண்டு வெடிப்பதற்கு முன்னர் அதுகுறித்து குஜராத் உளவுத்துறைக்கு ஒன்றுமே தெரிந்திருக்கவில்லை.

 

குண்டு வெடிப்புகளை நிகழ்த்தி அப்பாவி மக்களின் உயிரைக் குடிக்கும் எவராயினும் அவர்கள் மனிதகுல விரோதிகளாவர். மேலும், இந்திய முஸ்லிம்கள் மீது பழிசுமத்தி அவர்களை மென்மேலும் பலிகடா ஆக்குவதற்கு முயலும் சதிகாரர்களாவர். இண்டியன் முஜாஹிதீன் என்ற பெயரில் ஒளிந்து கொண்டு செயற்படும் கூட்டத்தினரைக் காவல்துறையினர் கைது செய்து சட்டத்தின்முன் நிறுத்த வேண்டும். அநியாயமாக உயிரிழந்தோரது குடும்பத்திற்கு மத்திய - மாநில அரசுகள் நஷ்ட ஈடும் அவர்தம் குடும்பத்தினருள் தகுதியுடையோருக்கு அரசுப்பணியும் வழங்க வேண்டும்.

 

பரபரப்பான அரசியல் குற்றங்களை மக்கள் பேசத் தொடங்கும்போது மட்டும் நம் நாட்டில் குண்டுகள் எப்படி வெடிக்கின்றன என்பது எப்போதும் புரியாத புதிராக இருக்க, நம் நாட்டில் எங்கு குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தாலும் அவை இரண்டு செய்திகளை மறவாமல் சொல்லுகின்றன:

 

1. இந்திய முஸ்லிம்கள் மீது பழி விழுந்து அதனால் அப்பாவி முஸ்லிம்கள் நிம்மதி இழக்க வேண்டும்.

2. நம் நாட்டின் உளவுத்துறை, குண்டு வெடிக்கும் முன்னர் அதைப் பற்றி எதுவுமே தெரியாமல் தூங்கி விட்டு, வெடித்த சப்தம் கேட்ட பின்னரே விழித்துக் கொள்ளும்!

 

வெடிகுண்டுகள் ஒழிய வேண்டும்; மனிதகுல விரோதிகள் அழிய வேண்டும்!

Trackback(0)
கருத்துக்கள் (13)add comment
0
ஜமீல்:
//நம் நாட்டின் உளவுத்துறை, குண்டு வெடிக்கும் முன்னர் அதைப் பற்றி எதுவுமே தெரியாமல் தூங்கி விட்டு, வெடித்த சப்தம் கேட்ட பின்னரே விழித்துக் கொள்ளும்!// தூக்கக் கலக்கத்தோடு செயல்படுவதால்தான் உண்மையான குற்றவாளிகள் தப்பித்து, அப்பாவிகள் கைது செய்யப் படுகிறார்கள் போலும்.
1

July 28, 2008 06:49
0
தீன் சுடர்:
குண்டு வெடிப்பு நடந்த சில மணி நேரங்களில் வெளியான செய்திகள் அனைத்து ஒரே மாதிரியாகவே இருந்ததையும், மத்திய உள் துறை அமைச்சர் முதல் உள்ளூர் போலீஸ் வரை ஒரு தடை செய்யப்பட்ட ஒரு அமைப்பையே குற்றம் சாட்டுவதையும் கூர்ந்து கவனித்தால் இக்குண்டு வெடிப்பிற்கு பின்னால் அரசியல் பின்புலத்துடன் கூடிய உளவுத்துறை சதியே காரணம் என பலத்த சந்தேகம் எழுகிறது.
2

July 28, 2008 07:42
0
"PortoNovo" M.A. Kaja Nazimudeen (Riyadh):
'இரண்டு செய்திகள்' மிகப்பொருத்தமாக எழுதியிருக்கும் நேரத்தில் மேலும் சிலவற்றை குறிப்பிட்டே ஆக வேண்டும். நம் நாட்டை பொறுத்தவரை 'குண்டு வெடிப்பு' கலாசாரத்துக்கு விதை விதைத்தவர்கள் பட்டியலில் (இந்து) ஆட்சியாளர்களே முதன்மை வகிக்கின்றார்கள் என்பது கலாசார சரித்திர உண்மை. 1. சீக்கிய பொற்கோவிலில் இராணுவத்தை நுழையவிட்டு சீக்கியமக்களின் வெறுப்பை சம்பாதித்த முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி 'குண்டுவெடிப்பு' கலாசாரத்துக்கு விதைவிதைத்தவர். 2. 'சரித்திர புகழ் பாபரி' பள்ளிவாயிலை பிஜேபி, பஜ்ரங்தள் போன்ற பயங்கரவாத அமைப்புகளால் இடித்து தரைமட்டமாக்கி முஸ்லீம்களின் பெரும் வெறுப்பை சம்பாதித்த மற்றொரு முன்னாள் பிரதமர் நரசிம்மராவ் 'குண்டுவெடிப்பு' கலாசாரத்துக்கு விதைவிதைத்தவரே. 3. குஜராத்தில் 'இனப்படுகொலை' நடாத்தி அதன் மூலம் முஸ்லீம்களை மேலும் இரணமாக்கி முஸ்லீம்களின் வெறுப்பை என்றென்றும் தக்கவைத்துக் கொண்டிருக்கின்ற நரேந்திர மோ(ச)டி 'குண்டுவெடிப்பு' கலாசாரத்துக்கு விதைவிதைத்தவர் என்பது நிதர்சன உண்மை. ஆக இந்திய ஆட்சியாளர்கள் திருந்தினால் மட்டுமே 'குண்டுவெடிப்பு கலாசாரத்துக்கு' முற்றுப்புள்ளி வைக்க முடியும். ஆட்சியாளர்களுக்கு தேவை 'தொலைணோக்கு பார்வை' .
3

July 28, 2008 09:18
0
Abdul Jabbar:
அது எப்படி இரண்டு இடங்களிலும் ஒரே மாதிரியாக குண்டு வெடித்த உடன் தொலை பேசிகளும் கைபேசிகளும் செயல் இழந்தன? குண்டு வெடிப்பின் போது தொலைபேசி அல்லது கைபேசி கோபுரங்கள் எதுவும் பாதிக்கப் படாத போது தொலை பேசிகளும் கைபேசிகளும் செயலிழந்து இருந்ததாக டிவியில் சொன்னார்களே? இது யோசிக்க வேண்டிய விஷயம்
4

July 29, 2008 03:21
0
Imran Hussain:
Well said. But, we have to see few hidden points. Q1) who did this? A (i) may be RSS-BJP combine. because they lost the no confidence motion in parliment. so, they want to malign Congress and make a point to the illetrate mass that Congress is unable to control terrorism. so, they will gain in forthcoming parliment elections. This is strongly believed as the 2 states were bomb blast took place are under these hindu zealots control. (ii) if some terrorist outfits had done may be it is supported by Pak asper the orders of US and behind the scene Israel to weaken Indian economy and spread hatred of Muslims among Hindus as it is evident with the name of the mail sent. Q2) how to put an end to this? A (i). simple unless justice is delivered equally to all U cant stop these activities. ya. U book under Goondas-TAD-POTA act when one Muslim plants a small bomb - when one pickpockets Rs50 in a crowded bus. but what about Advani, Murali Manohar Joshi, Uma Barathi, Ashok Sighal, Satwi Rithambra, Praveen Thokadia, Arun jaitley responsible for Babri masjid demolition evident with their presence at the demolition site recorded worldwide by many news agencies - Bal Thackeray, Manohar Joshi & other Siv Sena rowdies for Bombay riots - Narender Modi, Sri Vastawa, Zapadiya & other RSS-BJp culprits in Gujarat pogram - Jayalalitha, Sasikala & other ADMK ministers, Gowda & his sons, Advani, George Fernandez, TN Balu, Arcot veerasamy, Durai Murugan, Arun jaitley, Mayawathi, Mulayam Singh & his associates etc in corruption case these activities for sure will continue. one point about these socalled Secular (?) Communists. see Our Counntry is in severe Economic crisis. i agree with them i the stand that the N deal either shouldnot be signed or amended. But, for that reason pulling the Govt down is necessary? in this situation where the inflation is at high, prices of all commedities are high, should the Country eed one more Election for which Crores of Govt fund will be spent? and it will favour the RSS-BJP to come back to Power? if the Communists are really secular and patriotic, they should not pull down the Govt in this situation. U see if they are really honest they should fight severely as they do for N-deal to oppose Gujarat-Mumbai-Coimbatore etc riots and book the real culprits behind bar. But they wont. simple reaso is that they are also hindu zealots infiltered the Communist party. u see the top brass of Communists - Jyoti Basu, Buddadev Battacharjee, Prakash karat, Brinda Karat etc alll are Brahmins. so, the dishonesty-hatred feeling for Muslims is in their Blood. (ii) Unless we Muslims dump all those Katchis-Eyakkams-Amaipus and unite ourselves in the name of ALLAH-ISLAM-QURAN we cannot score over these hindu zealots and win Jannah in the life hereafter.
5

July 29, 2008 06:10
0
reji:
In my personal opinion these Bomb Blasts have a link to our Govt. of India. - Reji BECAUSE. 1. At the time of WTO, GATT agreements they used communal politics to avoid people of India and Indian parliament discussing GATT Agreements and without any proper discussion govt. went and sign on the agreement. What was the top most issue of that time? Ram Mandir. Sangparivar played the role of Jocky. 2.Today After govt. winning the confidence motion in the parliament they don't want people of India discussing about the Nuke Deal. Because the more people get aware about the Nuke deal it expose the true face of Manmohan Sing, Congress, SP and BJP. to avoid such a situation they are organising these blasts. Now they can blame poor muslims and call some outfits terror organisations. After 6 to 12 months time it will come in the media in very small news that the arrested people have no connection with any organisation and they are innocents. 3. MK Narayanan, the defence advisor to PM time to time come to Kerala and make statments that Kerala have a big problem of terror threat but so far no State agency or central agency find any terrorist from Kerala (Narayanan MK is a Sweyam Sevak wroking for Gumastan Manmohan only). Why this time no intimation from MK Naryanan on such threat? Why the defence advisor so blank on bombing in different parts of India? 4. We have a reason to believe that IB, RAW or CBI is behind these bomb blasts. Because to help the UPA and Manmohan to win the Confidence Motion in the Parliament they played a big role. They threaten Mayavati of BSP; Defence Advisor MK Narayanan was acting like a Media spoke person of UPA. He was organising press meetings and making statments for the govt. 5. Bush, Manoman's counter part in Nuke Deal used CIA for making fake documents against Iraq and Bush used these documents to mislead Amercian Senate and US Congress to start a war against Iraq. Today's India is going through a very similar situation. Manmohan as Bush mislead the nation of Nuke Deal, Provided wrong information to the Parliament, colliation partners and finally used power and state machinery to win a paper thin majority in the parliament. 6. Do not Blame Indian Muslims. When L.K. Advani was working as Home Minister He answered to a question by Indian Express that no Indian Muslims engaged in any terrorist activity. No Indian Muslims have any link to Al Quaida. 7. No Inteligence agency, CBI, Defence Secreatary given any advance warning on the threat. 8. Under all above said points we have a serious reason to SUSPECT Indian Govt. CBI, Raw and Indian Intelligence agency and MK Narayanan the Defence Advisior to PM on the on going bomb blastas and murder of poor and innocent Indians. I request people of India irrespective of their cast, religion, communal difference to come up together to expose the true face of Indian Ruling class and their anti people face and the way they are using religion for their vested interests. regi.
6

July 29, 2008 07:56
0
அதி. அழகு:
2002 குஜராத்தில் நடந்த இனக்கலவரம் நாடே அறியும். 2000த்திற்கும் மேற்பட்ட இசுலாமிய மக்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். நரோடா பாட்டியாவின் சவக்கிடங்கு, கர்ப்பிணியின் வயிற்றை அறுத்து தாயும், சேயும் கறுவறுக்கப்பட்ட காட்சி, பெஸ்ட் பேக்கரியின் 17பேரை உயிரோடு எரித்த சம்பவம், இரத்தக் கவிச்சி அடிக்கும் வெறியுடன் இந்து மதவெறியர்கள் சம்பவங்களை குதூகலத்துடன் தெகல்காவின் கேமராவில் வருணித்த ஆதாரம், முடிவில்லா குஜராத்தின் இனப்படுகொலைப் படிமங்கள் உணர்ச்சியுள்ள எவருக்கும் நெஞ்சை விட்டு அகன்றிருக்காது. ஆனால் கோத்ரா இரயில் எரிப்பு சம்பவத்திற்காக, செய்யாத குற்றத்திற்காக பல அப்பாவி முசுலீம்கள் சிறையில் வாடும்போது இனப்படுகொலை செய்த இந்து மதவெறிக் குற்றவாளிகள் வெளியில் சுதந்திரமாக நடமாடுகின்றனர். குண்டுகள் செய்யும் இரகசிய ஏற்பாடுகளெல்லாம் இந்து மதவெறியர்களுக்கு தேவையில்லை. குஜராத்தில் அவர்கள் நடத்திய நரவேட்டைக்கான துப்பாக்கிகள், குண்டுகள், ஆயுதங்கள், எல்லாம் அண்டை மாநிலங்களிலிருந்து வண்டி வண்டியாக இறங்கின. குண்டுகளின் ஏற்பாடுகளை சதிகள் எனப்பார்க்கும் பொதுப்புத்தி இந்துமதவெறியர்களின் ஏற்பாடுகளை கலவரங்களில் நடக்கும் வழக்கமான ஒன்றாகப் பார்க்கின்றது. எனில் குண்டுகள் ஏன் வெடிக்காது? கோவையில் காவலர் செல்வராசு கொலைசெய்யப்பட்டதை அடுத்து நடந்த கலவரத்தில் 30க்கும் மேற்பட்ட முசுலீம் மக்கள் கொலைசெய்யப்பட்டு பல கோடி மதிப்பிலான இசுலாமியர்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டன. கோவை சங்கபரிவார ரவுடிகளை கைது செய்து தண்டிக்க முடியாத இந்த சமூக அமைப்பு கோவை குண்டுவெடிப்பின் குற்றவாளிகளை விரைவாக விசாரித்து தண்டித்திருக்கிறது. அதிலும் நூற்றுக்கணக்கான அப்பாவிகள் பல வருடங்களை சிறையில் கழித்து விட்டு நிரபராதி என்று விடுவிக்கப்பட்டிருக்கின்றனர். குற்றமின்றி தண்டனையை மட்டும் அனுபவித்துவிட்டு மனைவியையும், குழந்தைகளையும் நிர்க்கதியில் தவிக்கவிட்டு வாழ்வைத் தொலைத்திருக்கும் இந்த சாதரண மனிதர்களுக்கு இந்த சமூக அமைப்பின் மேல் எத்தனை பெரிய கோபம் இருக்கும்? இவர்கள் எவரும் படித்து வசதியாக வாழும் நடுத்தரவர்க்கத்தினரோ, இசுலாமிய மதத்தின் பால் ஆழ்ந்தபிடிப்போ, வெறியோ, இந்துக்களின் மீது விரோதமோ கொண்டவர்கள் அல்லர். இவர்களின் நெஞ்சில் வஞ்சினத்தை ஏற்றுவதற்கு ஐ.எஸ்.ஐ தேவையில்லை. அது உண்மையுமில்லை. இரக்கமற்று தனிமைப்படுத்தும் சமூகத்தின் காரணத்தால் இந்த இளைஞர்களின் அவலம் குண்டுகளாக பரிமாணம் கொள்கின்றன. எனில் குண்டுகள் ஏன் வெடிக்காது? இந்து மதவெறியர்கள் இந்தியாவில் நடத்தியிருக்கும் கலவரங்களில் பதிவு செய்திருக்கும் கொலைக்கணக்கும், பொருள் இழப்பும் அளவில் குண்டுகளை விட பலநூறு மடங்கு அதிகம்தான். ஆனால் அவை பொதுவில் தீவிரவாதிகள் செய்த குற்றமென்று மதிப்பிடப்படுவதில்லை. பெரும்பான்மை இந்துக்களின் பிரதிநிதிகள் என்று சொல்லிக்கொண்டு சிறு கும்பலான சங்கபரிவாரம் செய்யும் அநீதிக்கான அங்கீகாரம் பெரும்பான்மையின் மவுனத்தில் இருக்கிறது. குஜராத்தில் நடந்த இனப்படுகொலையில் எல்லா இந்துக்களும் பங்கேற்கவில்லை என்றாலும் நேரடி மவுன சாட்சியாக பார்த்துக்கொண்டிருந்தார்கள். அந்த மவுனம் அநீதியை மறுக்கவில்லை. அதுவே அநீதியின் அங்கமாக மாறிவிடுகிறது. இதன் விளைவால் உண்மையான தீவிரவாதிகளான இந்துமதவெறியர்கள் பொது அங்கீகாரத்துடன் எல்லாக் கட்சிகளைப்போல ஒரு கட்சியாக இயங்குகிறார்கள். சமூகநீதி, திராவிடம் பேசும் எல்லா கட்சிகளும் இந்து மதவெறியர்களுடன் தேர்தல் கூட்டணி வைப்பது முதல் அரசில் பங்கேற்பது வரை முரணின்றி செய்கின்றன. இந்தியாவின் பொதுவாழ்வில் இந்து மதவெறியர்கள் அதிகாரத்துடன் ஆணவமாக நடந்து கொள்வதற்கு இத்தனை சலுகைகள் இருக்கும்போது குண்டுகளுக்கான முயற்சிகள் எங்கோ இரகசியமாக நடந்து கொண்டுதானே இருக்கும்? குண்டுகள் உருவாதற்கான நிலைமைகளை உருவாக்கிவிட்டு குண்டுகள் மட்டும் வேண்டாம் என்று நினைப்பதி்ல் பயனொன்றும் இல்லை. இந்திய அரசியல் அரங்கில் இந்துமதவெறிச் சக்திகள் கறுவருக்கப்படாதவரை குண்டுகளையும் கருவறுக்க முடியாது. மதசார்பாற்ற அரசியல் அதன் உண்மையான பொருளில் அமலுக்கு வராதவரை குண்டுகள் வந்து கொண்டே இருக்கும். சிறுபான்மை மக்களை பாதுகாக்கும் போராட்டத்தில் புரட்சிகர, ஜனநாயக சக்திகள் வெல்லும்வரை குண்டுகள் தோல்வி அடையப்போவதில்லை. ஆகையால் குண்டுகளை நாம் நியாயப்படுத்துகிறோமா? குண்டுகள் வெடிப்பதில் நியாயம் இருக்கிறதா இல்லையா என்பதைவிட அவை தன் குறிக்கோளில் வெல்லுமா, வெல்லாதா என்பதே முக்கியமான கேள்வி. அதாவது இந்துமதவெறியர்களின் கோரப்பிடியிலிருந்து இசுலாமிய மக்களை பாதுகாப்பதில் குண்டுகள் தோல்வியடைவதோடு உண்மையில் பாதுகாப்பின்மையைத்தான் அதிகப்படுத்தியிருக்கின்றன. குண்டுகளின் முக்கியமான விளைவுகளே இந்துமதவெறியை வலுப்படுத்துவதும், இசுலாமிய மக்களை தனிமைப்படுத்துவதும்தான். தற்போதைய குண்டுவெடிப்புகளில் கூட இந்துமதவெறியர்கள் எவரும் சாகவில்லை என்பதோடு அப்பாவி உழைக்கும் மக்கள்தான் கொல்லப்பட்டிருக்கின்றனர். எதிர்கால குண்டுவெடிப்புகளிலிருந்து தற்காத்துக் கொள்வதற்காக மாநகரங்களில் உள்ள ஐ.டி நிறுவனங்களுக்கும், கோவில்களுக்கும் பாதுகாப்பு அளிக்கும் அரசு உழைக்கும் மக்களுக்கு எந்தப் பாதுகாப்பையும் அளிக்கவில்லை. இப்படி குண்டுகள் வெடித்தால் நிச்சயமாக கொல்லப்பட இருக்கின்ற உழைக்கும் மக்கள்தான் உண்மையில் பார்ப்பன இந்துமதவெறியால் ஏற்கனவே அடிமைகளாக நடத்தப்படுவர்களாகவும், வர்க்க ரீதியில் இந்துமதவெறியர்களை வீழ்த்துவதற்கான சக்தியாகவும் இருக்கின்றனர். குண்டுகள் இந்த மக்களைத்தான் இந்துமதவெறியர்களின் கைகளில் எளிதாக மாற்றித் தருகின்றன. எல்லாவற்றுக்கும் மேல் வாழ்க்கைப் போராட்டத்தால் கவலையில் உழன்று கொண்டிருக்கும் அப்பாவி மக்களை இரக்கமின்றி கொல்லும் குண்டுகளில் பாசிச மனமும் கலந்திருக்கிறது. மறுபுறம் தமது எதிர்வரிசையில் எல்லாப் பிரிவு மக்களையும் ஒன்று சேர்க்கும் வேலையையும் குண்டுகள் அடி முட்டாள்தனமாக செய்து வருகின்றன. இவை ஒருபுறமிருக்க குண்டுகளால் இசுலாமிய மக்களுக்கு என்ன பாதிப்பு? ஒவ்வொரு குண்டுவெடிப்பின்போதும் எண்ணிறந்த பாதிப்புகளை இசுலாமிய மக்கள்தான் எதிர்கொள்கின்றனர். குண்டுகளின் அரசியலுக்கு கடுகளவும் தொடர்பில்லாத அப்பாவிகள் கைதுசெய்யப்பட்டு ஆண்டுக்கணக்கில் சிறையில் இருப்பதும், இசுலாமிய மக்கள் அனைவரையும் பொதுச்சமூகம் தீவிரவாதிகளாக பார்ப்பதும், இதன் தொடர் விளைவாக இசுலாமிய மக்களுக்கு வீடு வாடகைக்கு இல்லை, கல்வி இல்லை, வேலை இல்லை மொத்தத்தில் மதிப்பு இல்லை என்ற நிலைமை உருவாக்கப்படுகிறது. இதையே இந்துமதவெறியர்கள் பிரச்சாரத்தின் மூலம் செய்வதை குண்டுகள் தமது வெடிப்பின் மூலம் செய்கின்றன. யாரை எதிர்த்து உருவனதோ அவர்களுடன் எதிர்மறையில் ஒன்றுபடுவதுதான் குண்டுகளின் தர்க்கரீதியான முடிவு. வெடிமருந்தின் மேல் அசாத்திய நம்பிக்கை வைத்திருக்கும் குண்டுகள் வெகுஜன அரசியல் நடவடிக்களுக்காக பொறுமையுடன் ஈடுபடுவதில்லை. பொறுமையிழந்து அவசர அவசரமாக வெடிக்கும் குண்டுகள் நீண்டகால நோக்கில் இசுலாமிய மக்களைத்தான் காவு கேட்கின்றன. குண்டுகளுக்கும் இசுலாமிய மதத்திற்கும் என்ன தொடர்பு? குண்டுகளின் தோற்றுவாயை சமூக நிலைமைகளே தோற்றுவிக்கின்றன என்ற போதிலும் குண்டுவைப்பவர்களின் மன உறுதிக்கு இசுலமிய மதப்பற்றும் ஒரு காரணம் என்பதை மறுப்பதற்கில்லை. குண்டுகள் தாம் இசுலாமிய மதத்தைப் பாதுகாக்கும் புனிதப்போரில் ஈடுபட்டிருப்பதாக நம்புகின்றன. இதை பல இசுலாமிய சமுதாயப் பெரியோர்களும், மக்களும் ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும் குண்டுகள் தாம்தான் உண்மையான இசுலாமியர்கள் என்று கற்பித்துக் கொள்கின்றன. ஆனால் உலக வரலாறு நெடுகிலும் இந்தக் கற்பிதம் பொய்யென்றே நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இன்றைய அரசியல் சமூக பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு இசுலாமிய மதம் ஒரு தீர்வாக அமைய முடியாது. கூடவே உலகில் இசுலாமிய மதத்தை உண்மையாக பின்பற்றும் நாடு எதுவும் கிடையாது, அப்படி இருக்கவும் முடியாது என்பதே அறிவியல்பூர்வமான உண்மை. இசுலாமிய நாடாக அறிவித்துக்கொண்ட பாக்கிஸ்தானில் சன்னி, ஷியா பிரிவுகளிடையே மசூதியில் குண்டு வைத்துக் கொல்லும் அளவுக்கு பிளவு இருப்பதும், ஷரியத்தின் சட்டதிட்டங்களை கறாராக பின்பற்றும் வளைகுடா நாடுகள் அமெரிக்காவின் விசுவாசிகளாக இருப்பதும், ஏழை இசுலாமிய மக்களை மதத்தின் பெயரால் அடிமைப்படுத்த பணஉதவி செய்யும் அரபு ஷேக்குகள் தனிப்பட்ட வாழ்வில் களிவெறியாட்ட பொறுக்கிகளாக இருப்பதும் இந்த உண்மைகளை எடுத்தியம்பும். ஆனால் குண்டுகள் இந்த யதார்த்த்த்தை மறுப்பதுடன் கற்பனையான மத உலகை சித்தரித்துக்கொண்டு வாழ முயல்கின்றன. எனில் குண்டுகளின் எதிர்காலம் என்ன? எதிர்காலம் இந்துமதவெறியர்களின் எதிர்காலத்தைப் பொறுத்தது. சங்க பரிவாரங்கள் இருக்கும் வரையிலும் இந்துத்வா திட்டமும், முசுலீம் மக்களின் மீதான துவேசமும், கலவரங்களும் இந்தியாவின் நிகழ்ச்சிநிரலில் இடம்பிடித்தபடியே இருக்கும். இந்த நிகழ்ச்சிநிரலை மாற்றாதவரை, வரலாறு திருத்த்தப்படாதவரை குண்டுகளையும் இரத்து செய்ய முடியாது. ஆகவே நம்முன் இரு வழிகள் இருக்கின்றன. ஒன்று அடுத்த குண்டு எங்கு எப்போது வெடிக்கும் என்று திகிலுடன் வாழ்வது. அல்லது குண்டுகளைத் தோற்றுவிக்கும் சங்கபரிவார கும்பலை வீழ்த்துவது. இதைத்தாண்டி குண்டுகளிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வதற்கு மூன்றாவது வழி ஏதும் இல்லை. நன்றி : http://vinavu.wordpress.com/2008/07/29/
7

July 29, 2008 08:24
0
அமானுல்லாஹ்-குவைத்:
அஸ்ஸலாமு அலைக்கும்.., தென்னமரத்தில தேள் கொட்டிச்சாம். பனை மரத்தில நெறி கட்டிச்சாம். அப்டீங்கற கதையா வட நாட்டில வெடிச்ச குண்டுக்கு தமிழ்நாட்டில அரஸ்ட் பண்றாங்க. உளவுத்துறை தூங்கிட்டுலாம் இல்ல. திட்டமிட்டு தான் நடக்குது. ஈர பேனாக்கி, பேன பெருமாளாக்கி இல்லாத விட்டலாச்சாரியர் கதையெல்லாம் சொல்லுவாங்க. 3 மாநிலங்களும் பா.ஜ.க ஆளும் மாநிலம். எதிர் வரும் தேர்தலையொட்டியே நடந்ததாக இருக்கலாம். யூகம் தானே. மின்னஞ்சல் அனுப்ப உபயோகித்த ஐபி முகவரி அமெரிக்கருடையது. அபிஷேக் சர்மா என்பவருடைய வீட்டிலிருந்து அனுப்பபட்டுள்ளது. இதையெல்லாம் கவனத்தில் எடுத்துக் கொள்ளக் கூடாதாம். பாஜக ஆளும் மாநிலம் என்றும் பார்க்ககூடாதாம் தொழில் துறை, பொருளாதார துறை இப்படி உள்ள நகரங்களாகத்தான் பார்க்கவேண்டுமாம். இவைகளின் கவனம் திசை திருப்பத்தான் இஸ்லாமியர் கைது, பக்கத்தில சலசலப்ப உண்டாக்கினால் தூரத்தில நடப்பத பார்க்கமுடியாதுல்ல அதுக்காகத்தான். யா அல்லாஹ் இந்த கொடுமையெல்லாம் எப்ப தீருமோ. இன்னொரு தெஹல்கா இதையெல்லாம் கண்டு பிடிச்சாலும் தண்டனை தரும் அரசாங்கத்தையாவது கொடுப்பாயாக. வஸ்ஸலாம்.
8

July 29, 2008 14:10
0
அலாவுதீன்:
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (துவங்குகிறேன்) அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)(இறைவனின் சாந்தியும் சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக!) சகோதரர்களே: இந்தியாவில் இன்றுவரை அனைத்து இடங்களில் நடந்த குண்டு வெடிப்புகளை சற்று பின்னோக்கி நினைவுகளை கொண்டு செல்லுங்கள் : /// பரபரப்பான அரசியல் குற்றங்களை மக்கள் பேசத் தொடங்கும்போது மட்டும் நம் நாட்டில் குண்டுகள் எப்படி வெடிக்கின்றன என்பது எப்போதும் புரியாத புதிராக இருக்க: ///சகோதரர்களே புதிர் இல்லை. உண்மை -தெளிவாக தெரிந்து கொண்டு இருக்கிறது. அரசியல்வாதிகளின் நாற்காலி (பதவி பித்து)-ஆட்டம் காணும் அனைத்து நேரங்களிலும் கலவரங்களும், குண்டு வெடிப்புகளும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இப்படிப்பட்ட கோணத்தில் எந்த பத்திரிக்கையும் சிந்திப்பதில்லை – தனது கற்பனை திறனை தட்டி விட்டு பத்திரிக்கையும், போலீசும் அப்பாவி முஸ்லிம்களை பற்றி கையில் ஸ்குரு ட்ரைவர் வைத்திருந்தவன், எலக்டிரிஸியன், பேன் ரிப்பேர் செய்பவன் இப்படி கையில் பல் விலக்கும் குச்சியே கையில் வைத்து இருந்தாலும் பயங்கர முஸ்லிம் தீவிரவாதி பிடிபட்டான் எங்களுக்கு செய்தி கிடைத்தது என்று இன்னும் என்னவெல்லாம் சொல்ல முடியுமோ இவை அனைத்தையும் உளவுத்துறை சொன்னது, போலிசு சொன்னது இப்படி எதையாவது குடிகாரன் உளறுவது போல் உளறிக்கொண்டு தினம் ஒரு பரபரப்பு செய்தி போட்டு -கெட்ட பாத்திரமான தங்களின் வயிற்ற வளர்க்க பொய்யை விற்று நெருப்பை திண்னும் கூட்டம் பெருகி விட்டது. நடந்து முடிந்த குண்டு வெடிப்புகள் அரசியல் பிழைப்பு நடத்தவே. இதுவரை நடந்த குண்டு வெடிப்புகள், கலவரத்தின் மூலம் யார் யார் பலன் அடைந்தார்கள். என்பதை தங்களின் சிந்தனைக்கு விட்டு விடுகிறேன். முஸ்லிம்கள் மட்டுமே -தீவிரவாத பட்டம் பெற்று வஞ்சிக்கப்பட்டார்கள். எத்தனையோ நிகழ்ச்சிகளில் குற்றவாளிகள் பிடிக்கப்படுவதில்லை. ஆனால் குண்டு வெடிப்புகளில் மட்டும் வெடித்த உடன் அப்பாவி முஸ்லிம் குறிப்பாக தாடி வைத்தவன் பிடிக்கப்படுகிறான் - எப்படியாவது பைல்களை மூடி விட வேண்டும் அரசியல் குற்றவாளிகள் தப்பித்து விட வேண்டும் என்பதே நோக்கம். இஸ்ரேலின் உளவுத்துறைக்கு சிவப்புக் கம்பளம் கொடுத்து இந்தியா வரவேற்று நீண்ட காலமாகிவிட்டது. இப்பொழுது நடந்த குண்டு வெடிப்பு அமெரிக்காவின் நலத்திட்டமான (இன்னும் பல நாடுகள் இந்தியாவில் கிடைக்கும் எலும்புத்துண்டுகளுக்காக அமெரிக்கா இந்தியாவில் போடும் அணு ஆயுத ஒப்பந்தத்திற்கு துணை போகின்றன - ஈராக்கிற்கு ஒத்துழைத்தது போல்) அணு ஒப்பந்தம் சத்தமில்லாமல் கையெழுத்தாக வேண்டும் என்றால் மக்கள் இதைப்பற்றி விவாதமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. இதை மறக்க வேண்டும். அமெரிக்காவின் அடிமையான மன்மோகன் சிங் - இவரின் காங்கிரஸ்ம் அமெரிக்கா காட்டிய இடத்தில் கையெழுத்து போட வேண்டும். இவர்கள் கையெழுத்துபோடும் நேரத்தில் எந்த எதிர்ப்பும் வரக்கூடாது – கையெழுத்து போடப்போகிறார்கள் எந்த எதிர்ப்பும் இல்லை. -தற்பொழுது -கம்னீயுஸ்ட் முதல் அணு ஒப்பந்தத்தை எதிர்ப்பவர்கள் யாரும் வாய் திறக்காமல் மௌனமாகி விட்டதை கவனித்தீர்களா? நீண்ட தூக்கத்தில் ஆழ்ந்து விட்டார்கள். அணு ஒப்பந்தத்தால் யார் யார் எல்லாம் பலன் அடைய போகிறார்களோ (பெட்டி வாங்கிக் கொள்ளப் போகிறார்களோ) இதுவரை நடந்த குண்டு வெடிப்புகளில் யார்?யார்? அரசியல் ஆதாயம் அடைந்தார்கள் - இப்பொழுது யார்? யார்? பலன் -அடையப்போகிறார்கள் ஏன் இவர்களின் சதியாக - இருக்கக் கூடாது என்ற வழியில் சிந்திக்க தெளிவான சூழ்நிலை – தெரியவில்லையா – நியாயமான பத்திரிக்கை தருமம் பேணும் ஒருவர் கூட இந்தியாவில் இல்லாமல் போனது வேதனை அளிக்கிறது. வல்ல அல்லாஹ் சுபுஹானத்தஆலா - இவர்களின் முகத்திரையை கிழித்து வெளிச்சமாக்க போதுமானவன்.அவனிடமே அனைவரும் பிரார்த்தனை செய்து உண்மை வெளி வர உதவி செய்யுங்கள்.
9

July 29, 2008 17:37
0
Abu Hassan:
I don't have the ability to translate the following. I would like to bring this to the notice of the administrators, so that the truth can be brought forward. Kindly take your time to go through these reports and translate. http://tehelka.com/story_main40.asp?filename=Ne090808coverstory.asp ‘I have evidence of RSS and VHP making bombs’: http://tehelka.com/story_main40.asp?filename=Ne230808Incoldblood.asp The Kafka Project: http://tehelka.com/story_main40.asp?filename=Ne160808thekafka_project.asp ‘They just want Muslim boys to always be in jail’: http://tehelka.com/story_main40.asp?filename=Ne160808theyjustwant.asp
10

August 19, 2008 11:51
0
சத்தியமார்க்கம்.காம்:
அன்புச் சகோதரர் அபூ ஹஸன் அவர்களுக்கு, அஸ்ஸலாமு அலைக்கும். தங்கள் கருத்துகளுக்கும் சுட்டிகளுக்கும் மிக்க நன்றி! டெஹல்காவின் சில கட்டுரைகளைத் தமிழாக்கம் செய்து கொண்டிருக்கிறோம். இன்ஷா அல்லாஹ் இரண்டொரு நாட்களில் தமிழில் தருவோம். 'கருத்துக்கள்' என்ற தலைப்பின் கீழ் 'தமிழில் தட்டச்ச ...' என்ற உதவிச் சுட்டி உள்ளது. பயன் படுத்திப் பாருங்கள்.
11

August 19, 2008 12:55
0
Thaz:
I dont understand one thing, how come the news daily 'Dinamala(r)m', 'Sirapu nirubar' comes to know the involvment of 'SIMI' before the inteligenct agencies news release. All these event looks like 'fasle flag' or 'pre text' methods used by western countires to blame the minority in their country. To find out more these methos please browse http://www.infowars.com/ by Alex Jones or 'http://www.chomsky.info/'. We can findout that how western countires using these type of false flag incidents to blame minorities.
12

August 21, 2008 01:30
0
சத்தியமார்க்கம்.காம்:
கருத்திடும் வாசகர்களின் கவனத்திற்கு, தங்கள் கருத்துகளை எழுத்தில் வடிக்கும்போது 'இஸ்லாமியப் பண்பாடு' தவறி விடாமல் நாகரீகமான சொற்களைப் பயன் படுத்துமாறு அன்புடன் வேண்டுகிறோம்.
13

August 21, 2008 11:38

கருத்து எழுதுக :
தட்டச்சு மொழி மாற்ற crtl+g அழுத்துங்கள்.
சிறிதாக்குக | பெரிதாக்குக

busy
 

இறைமறை

இப்பக்கத்தை PDF வடிவில் சேமிக்க...

தேடுக...

Random Quran Verses

2:45 மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக்கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள். எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கு அன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும்.

English News

புதிய கருத்துகள்

mohammad rafiq : முகத்தை திரையிட்டு மறைப்பதும் மார்க...


mohamed ASHIQ : share with me more.....


monisha.chennai : wrong news modi great man one man army


s.abdul nishath : the use full website for satyamarkam. To use more & more muslim people for dinyath


சத்தியமார்க்கம்.காம் : அன்புச் சகோதரர் Peer Mohamed. அஸ்ஸலாமு அலைக்...


ARULKUMAR.A COIMBATORE : PLEASE AVOID ALCHOCAL CONSUMPITION AND JUNK FRUITS.TAKE FRUITS AND VEGITABLES ITEMS DAILY AND WEEKLY...


Peer Mohamed : Very good effort. I seek your permission to publish these articles in TamilIslamicAudio.com website....


Ansary : First of all i would like to thank Br. Nooruddin for giving all of us such a good translation of Sah...


kalibulla : very good and happy news go ahead,.


Ibrahim ulavi london : Assalamu alaikum, This is very happy news for every muslim . our brother CNM SALIM And brother Imran...


j.ameer ali : On our part, let all of us pray for his good health and long life service to our society. By J.Ameer...


Ansary : This is a great news to know. He is doing fine. This is a very good example to other District Collec...


y.m.anari : ஹிஜாப் பற்றி இந்தத் தளத்தினர் குரான்...


Jaffer : Masha Allah ...May allah bless him and guide him to strive in the straight path.


Karunakaran : Salute to Collector Ahmad... You are the REAL hero!


haneefm : رَبَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَن...



You are here  : முகப்பு தலையங்கம் குண்டு வெடிப்புகள் கூறும் இரண்டு செய்திகள்!
Twitter
RSS
YouTube
English