சத்தியமார்க்கம்.காம்

ஈராக்கில் பிரிட்டிஷ் படையினரின் ஒழுங்கீனம் print Email
செய்திகள் - உலகச் செய்திகள்
வெள்ளி, 25 ஜூலை 2008 16:44

ஈராக்கில் சதாம் ஹுஸைன், பேரழிவை தரக்கூடிய ஆயுதங்களை வைத்திருக்கிறார். அதனால் உலக மக்களையும் ஈராக் மக்களையும் நாங்கள் காப்பாற்றப் போகிறோம் என்று தறுதலையாட்டம் ஆடிய புஷ், ஐ.நா.வின் அனுமதியின்றி அத்துமீறி ஈராக்கில் நுழைந்து ஆக்கிரமிப்பு வேலையை செய்தார்.

 

 

அங்கே பேரழிவை ஏற்படுத்தக் கூடிய குண்டூசியைக் கூட அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. லட்சக்கணக்கான ஈராக்கிய மக்களையும் ஆயிரக்கணக்கான அமெரிக்க வீரர்களையும் இழந்ததுதான் மிச்சம்.

பேரழிவை ஏற்படுத்தக் கூடிய ஆயுதங்களை அமெரிக்கா மறைத்து வைத்துள்ளது என்று கூறி சீனாவும் இந்தியாவும் அமெரிக்காவை ஆக்கிரமிப்பு செய்தால் அமெரிக்காவின் நிலை என்னவாக இருக்கும்? ஏன் ஆக்கிரமிப்பு செய்தீர்கள் என்று அமெரிக்காவால் கேட்க முடியாது. எனென்றால் அமெரிக்கா அந்த வேலையைத்தான் ஈராக்கில் செய்து கொண்டிருக்கிறது.

அமெரிக்கா ஒரு வல்லரசு அவர்களை ஆக்கிரமிப்பு செய்வதா? செய்ய முடியுமா? என்றா கேட்கிறீர்கள். ஈ, காக்கை கூட அமெரிக்காவுக்குள் நுழைவதாக இருந்தால் அமெரிக்காவின் அரசாங்கத்திடம் விசா வாங்கித்தான் நுழைய முடியும் என்று கற்பனை சித்திரத்தை வரைந்து வைத்திருந்த அமெரிக்காவுக்கு விழுந்தது பலத்த அடி 2001 ல் இரட்டை கோபுர விமான தாக்குதல். அமெரிக்காவை திடீர் தாக்குதல் நடத்தினால் கோழிக்குஞ்சு போல் குண்ணிப் போய் விடும்.

உலகின் இரண்டாம் எண்ணெய் உற்பத்தி நாடாகிய ஈராக்கை ஆக்கிரமிப்பு செய்து, எண்ணெய் வளத்தை சுரண்ட வேண்டும் என்ற எண்ணத்தில் அமெரிக்க நாட்டு மக்களின் நலனில் கூட அக்கரை காட்டாமல், ஏராளமான வேலையற்றவர்கள் அமெரிக்காவில் பெருக விட்டுக் கொண்டு, மற்றவர்களின் சொத்துக்களின் மீதும் மற்றவர்களின் அதிகாரத்தின் மீதும் அளவில்லா ஆசை கொண்டு பேயாட்டம் போட்டுக் கொண்டிருக்கிறது இந்த அமெரிக்கா.

இந்த அமெரிக்காவின் அடாவடித்தனங்களுக்கு முடிவு கட்டும் காலம் வெகுதொலைவில் இல்லை என்பதோடு முடித்துக் கொண்டு விஷயத்துக்கு வருவோம்.

விசாரணைக் கைதிகள் என்ற பெயரில் கொன்டனாமோ சிறையில் முஸ்லிம்களை பல வருடங்களாக அடைத்து வைத்து எந்த வித விசாரணையும் இதுவரையின்றி முஸ்லிம்களை அவமதிக்கும் அமெரிக்கா சர்வ தேச மனித உரிமை அமைப்புகளால் கடும் கண்டனத்துக்கு இலக்காகி இருக்கிறது.

அபூகாரிப் சிறையில் அமெரிக்க பிரிட்டானிய படைகள் முஸ்லிம் சிறைவாசிகளை எந்த அளவுக்கு கொடுமைப்படுத்துகிறார்கள் என்பதை உலக மக்கள் அறிந்து கொள்ளும் வண்ணம் அல்லாஹ் வெளிக் கொண்டுவந்தான். ஆடு மாடுகளை விட கேவலமாக முஸ்லிம் சிறைவாசிகளை நிர்வாணமாக்கி கண்களை கறுப்புத் துணிகளால் கட்டி விட்டு பாலுணர்வை தூண்டி விட்டு விளையாடிய விஷயங்கள் அம்பலத்துக்கு வந்தன. இப்படிப்பட்ட கழிசடைகள் தான் ஈராக் மக்களையும் உலக மக்களையும் காப்பாற்றப் போகின்றனவாம். அந்தோ பரிதாபம்.

ஐரோப்பிய படையினர் ஒரு ஈராக்கியரை அநியாயமாக கொன்றதற்காக வழக்கு தொடுக்கப்பட்டு அந்த ஈராக்கியரின் தந்தைக்கு பல மில்லியன் பவுன்டுகள் தண்டத்தொகை வழங்குமாறு உத்திரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பாஷா மூஸா என்ற 26 வது ஹோட்டல் ரிசப்ஸனிஸ்ட், பிரிட்டிஷரின் கட்டுப்பாட்டில் இருந்த போது 2003 செப்டம்பரில் பிரிட்டிஷ் படையினர் அடித்தே கொன்று விட்டனர். பாஷா மூஸாவின் தந்தைக்கு 3 மில்லியன் பவுன்டுகள் தண்டத் தொகையாக கொடுப்பதாக ஒத்துக் கொ    ள்ளப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தின் போது மேலும் 9 ஈராக்கியர்கள் பிரிட்டிஷரின் கடுமையான தாக்குதலுக்கு உள்ளானார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிரிட்டிஷ் படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் கைதியாக பிடிக்கப்பட்ட 14 வயது ஹஸன் என்ற ஈராக் சிறுவனை சிறையில் அடைத்து வைத்து, அவனோடு சிறையில் இருந்த மற்றொரு கைதியை கொண்டு வலுக்கட்டாயமாக பாலுணர்வு வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட விவகாரம் பிரிட்டிஷ் கோர்ட்டுக்கு சென்றுள்ளது.

பிரிட்டிஷ் பாதுகாப்பு அமைச்சகம் இந்த விவகாரத்தை ராயல் மிலிட்டரி போலீஸ் துப்புத் துலக்கிக் கொண்டிருப்பதாக உறுதி செய்துள்ளது. இந்த விஷயம், உண்மை என்று நிரூபிக்கப்பட்டால் பிரிட்டானிய படையினரின் ஒழுக்கமற்ற செயல் மத்திய கிழக்கு நாடுகளில் பிரிட்டிஷ்காரர்களின் பெயருக்கு மேலும் களங்கத்தை ஏற்படுத்தும்.

இதுமட்டுமல்லாமல், மாஸின் யூசுப் என்ற ஈராக் லீக்கைச் சேர்ந்தவர் ஈராக்கில் உள்ள பஸ்ரா என்ற இடத்தில் முலைமுடுக்கெல்லாம் சென்று, பிரிட்டானியப் படையினரின் இது போன்ற 80 ஒழுக்கமற்ற செயல்களின் கேஸ்களை தகுந்த ஆதாரங்களோடு திரட்டி வைத்திருப்பதாக கூறுகிறார்.

என்ன நடக்கிறது உலகத்தில் - அநியாயக்காரர்கள் உலகத்தில் நீதியை நிலை நாட்டப் போகிறார்களா? ஒழுக்கமற்றவர்கள் உலகத்தில் ஒழுக்கத்தை போதிக்கப் போகிறார்களா? வியப்பாக இருக்கிறதே.

நன்றி - இஸ்லாமிய தாஃவா.காம்

Trackback(0)
கருத்துக்கள் (3)add comment
0
அல் அமீன்:
இன்று ஈராக்கில் நடந்த மனித குண்டுவெடிப்பில் 6 அமெரிக்கப்படையினர் சாகடிக்கப்பட்டனர். மனித வெடிகுண்டாகச் செயல்பட்டது ஒரு பெண். மானத்துடன் வாழ இயலா நிலைக்கு ஈராக்கிய மக்களை அமெரிக்கா கொண்டுசென்று நிறுத்தியுள்ளது. இவற்றிற்கெல்லாம் அமெரிக்கா என்றாவது பதில் சொல்லியே தீரவேண்டும்
1

July 25, 2008 20:14
0
basheer ahamed:
அஸ்ஸலாமு அலைக்கும், இராக்கில் ஒரு சதாமை அழித்து ஆயிரம் சதாமை உருவாக்கிய பெருமை உலக சைத்தான் புஷ்ஷையே சாரும், அமெரிக்க படை தலை தெரிக்க ஓடும் நாள் வெகு தொலைவில் இல்லை, தலைமை இல்லாத ஒவ்வொரு சமுதாயமும் இப்படி பட்ட நிலைக்கு தள்ளப்படுவது புதிது அல்லவே.. ஒரு தலைமையின் கீழ் ஒன்றாய் இருந்த போது நாமே உலகை ஆண்டோம், இன்ஷா அல்லாஹ் ஆல்வோம்.
2

July 26, 2008 19:59
0
farook abdullah:
தலைமை இல்லாத ஒவ்வொரு சமுதாயமும் இப்படி பட்ட நிலைக்கு தள்ளப்படுவது புதிது அல்லவே.. ஒரு தலைமையின் கீழ் ஒன்றாய் இருந்த போது நாமே உலகை ஆண்டோம், இன்ஷா அல்லாஹ்நாமே ஆல்வோம்அநியாயக்காரர்கள் உலகத்தில் நீதியை நிலை நாட்டப் போகிறார்களா? ஒழுக்கமற்றவர்கள் உலகத்தில் ஒழுக்கத்தை போதிக்கப் போகிறார்களாஇல்லை
3

July 27, 2008 12:11

கருத்து எழுதுக :
தட்டச்சு மொழி மாற்ற crtl+g அழுத்துங்கள்.
சிறிதாக்குக | பெரிதாக்குக

busy
 

இறைமறை

இப்பக்கத்தை PDF வடிவில் சேமிக்க...

தேடுக...

Random Quran Verses

2:45 மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக்கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள். எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கு அன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும்.

புதிய கருத்துகள்

mohammad rafiq : முகத்தை திரையிட்டு மறைப்பதும் மார்க...


mohamed ASHIQ : share with me more.....


monisha.chennai : wrong news modi great man one man army


s.abdul nishath : the use full website for satyamarkam. To use more & more muslim people for dinyath


சத்தியமார்க்கம்.காம் : அன்புச் சகோதரர் Peer Mohamed. அஸ்ஸலாமு அலைக்...


ARULKUMAR.A COIMBATORE : PLEASE AVOID ALCHOCAL CONSUMPITION AND JUNK FRUITS.TAKE FRUITS AND VEGITABLES ITEMS DAILY AND WEEKLY...


Peer Mohamed : Very good effort. I seek your permission to publish these articles in TamilIslamicAudio.com website....


Ansary : First of all i would like to thank Br. Nooruddin for giving all of us such a good translation of Sah...


kalibulla : very good and happy news go ahead,.


Ibrahim ulavi london : Assalamu alaikum, This is very happy news for every muslim . our brother CNM SALIM And brother Imran...


j.ameer ali : On our part, let all of us pray for his good health and long life service to our society. By J.Ameer...


Ansary : This is a great news to know. He is doing fine. This is a very good example to other District Collec...


y.m.anari : ஹிஜாப் பற்றி இந்தத் தளத்தினர் குரான்...


Jaffer : Masha Allah ...May allah bless him and guide him to strive in the straight path.


Karunakaran : Salute to Collector Ahmad... You are the REAL hero!


haneefm : رَبَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَن...



You are here  : முகப்பு செய்திகள் உலக செய்திகள் ஈராக்கில் பிரிட்டிஷ் படையினரின் ஒழுங்கீனம்
Twitter
RSS
YouTube
English