| குழந்தை பிறக்கும் நேரத்தை இறைவன் மட்டுமே அறிவான் என்பது உண்மையா? |
|
|
| ஐயமும்-தெளிவும் - பிற மதத்தினருக்காக | |||
| வியாழன், 03 ஜூலை 2008 09:46 | |||
|
தெளிவு: அன்பு சகோதரர் வேணுகோபாலன் அவர்களே!
பகிர்ந்து கொள்க
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
Trackback(0)
கருத்துக்கள் (21)
![]()
ஐந்து விஷயங்கள் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது என்ற கருத்துக்கு ஆதாரமாக 31.34 வது வசனத்தையே அனைவரும் ஆதாரமாகக் கொள்கின்றனர். கியாமத், மழை, கருவறை, நாளை மனிதன் பெறுபவை, மரணம் இந்த ஐந்தையும் இறைவன் மட்டுமே அறிவான் என்ற கருத்தை முஸ்லிம்கள் வைக்கும் போது அதில் பிரதானமாக விவாதிக்கப்படுவது கர்ப்பத்தைப் பற்றிதான்.
வளர்ந்துள்ள விஞ்ஞான நுட்பத்தில் X Y குரோமோஸோம்கள் உட்பட கண்டறியப்பட்டு கர்ப்பம் ஆணா - பெண்ணா என்று தீர்மானிக்கப்படுவதையெல்லாம் கண்டுவிட்ட பிறகு அதை இறைவன் மட்டும் தான் அறிவான் என்ற வாதம் அடிப்பட்டுப் போகின்றது - குர்ஆன் சில கூற்றுகள் இந்த காலத்துக்கு பொருந்தவில்லை என்றும் பேசப்படுகின்றது.
உண்மையில் அந்த வசனம் கர்ப்பம் தரிப்பதைப் பற்றி பேசவேயில்லை. குறிப்பிட்ட வசனத்தில் 'மன் ஃபில் அர்ஹாம்' என்று வரவில்லை. அதாவது கருவறையில் யார் இருக்கிறார்கள் என்று இறைவன் அறிவான் என்று வரவில்லை. கர்ப்பம் தரித்தவுடன் உள்ள கருவைப் பற்றி அந்த வசனம் பேசவேயில்லை. மாறாக 'மா பில் அர்ஹாம்' 'கருவறையைப் பற்றி அவன் அறிவான்' என்றே வந்துள்ளது.
அதாவது ஒரு பெண்ணின் கருவறை எத்துனைக் குழந்தைகளை சுமக்கும்? எந்தெந்த நேரத்தில் கருதரிக்கும்? அது வளர்ந்து வெளியில் வருமா..? சிதைந்து விடுமா..? போன்ற விபரங்களை அவன் (மட்டும்) அறிவான் என்ற செய்தியையே அந்த வசனம் கூறுகின்றது. அரபு வார்த்தையின் அர்த்தம் புரியாததால் சிறு குழப்பம் அங்கு ஏற்படுகின்றதே தவிர இறைவன் சொன்ன வார்த்தை பொருந்தாமல் போகவில்லை.
1
July 04, 2008 20:42
وَلاَ تَلْبِسُواْ الْحَقَّ بِالْبَاطِلِ وَتَكْتُمُواْ الْحَقَّ وَأَنتُمْ تَعْلَمُونَ
நீங்கள் அறிந்து கொண்டே உண்மையைப் பொய்யுடன் கலக்காதீர்கள்; உண்மையை மறைக்கவும் செய்யாதீர்கள். (2:42)///
அன்பு சகோதரர் வேணுகோபாலன்
அவர்களுக்கு இன்னும் பல கேள்விகளை இஸ்லாத்தின்லாலும் திருகுர்ஆன் வழியிலும் நிரைய கேள்விகளை கேட்டு நல்வழியில் செல்ல வல்லமையிடைய அல்லாஹ் அவருக்கு அருள் புரியட்டும் ஆமின்
ஹனீஃப்-குவைத்
2
July 05, 2008 09:41
அன்புச் சகோதரர் ஜி என்,
'வ யஃலமு மா ஃபில் அர்ஹாம்' என்ற வசனத்திற்கு, நீங்கள் எழுதியிருக்கும், 'கருவறையைப் பற்றி அவன் அறிவான்' என்று நேரடியாகப் பொருள் கொள்ளவியலாது. 'மன்' என்ற சொல் உயர்திணையையும் 'மா' என்ற சொல் அஃறிணையையும் குறிக்கப் பயன் படுத்தப் படும் சொற்களாகும்.
எனவே, கட்டுரையில் கண்டுள்ள '... மேலும் கருவறையில் உள்ளவற்றை அறிபவனும் அவனே' என்பது 31:34 வசனத்தின் அந்த வரிகளுக்குச் சரியான தமிழாக்கமாகும்.
//உண்மையில் அந்த வசனம் கர்ப்பம் தரிப்பதைப் பற்றி பேசவேயில்லை// என்று எழுதியிருக்கின்றீர்கள். அவ்வாறு இங்கு நாம் நிறுவ முயலவில்லை. கருவுருவதை விளக்குவது இங்கு முதன்மை நோக்கமில்லை.
எனினும், நீங்கள் கூறியுள்ள கருத்துகள், 'இறைவனுக்கு அவையனைத்தும் முதல் மனிதனைப் படைக்கும்போதே அவனுடைய எத்தனையாவது தலைமுறையில் இந்தப் பெண் பிறந்து எத்தனை பிள்ளகளை எவ்வாறு, எப்போது பெற்றெடுப்பாள் என்பது துல்லியமாகத் தெரியும்' என இங்குத் தெளிவாகக் குறிப்பிடப் பட்டுள்ளன.
பிழை என்று நீங்கள் கருதுபவற்றைத் தகுந்த சான்றுகளுடன் சுட்டிக் காட்டினால் திருத்திக் கொள்வோம், இன்ஷா அல்லாஹ்.
3
July 05, 2008 22:09
//எல்லா சிஸேரியன்களும் பெற்றோர் தேர்ந்தெடுக்கும் நேரத்திலோ மருத்துவர்கள் நிர்ணயிக்கும் நேரத்திலோ துல்லியமாக நடைபெறுவதில்லை என்பதுதான் உண்மை.//
Very true... My second child was born by Caesarian section..
The doctor (Gynec) quoted some health reasons and fixed the time of delivery at 9:30 AM. All the prerequisites had been carried out. During last half hour, I wanted to clarify a few doubts and asked a few questions with the Gynec. She burst into anger thinking that my questions were an insult to her judgement.
She challenged to check with any doctor around but told firmly to us that if she allowed to dischage on our own accord, she will not entertain us again, however serious the condition be..
Alhamdulillaah, we managed to get our daughter born healthily eventhough by C-section but after about 12 hours from the original stipulated time by the first doctor.
Only Allah knows the EXACT birth time of the child.
Jazakkallah Khair
4
July 06, 2008 05:53
அஸ்ஸலாமு அலைக்கும்
அன்பு சகோதரர்களே
மேற்கண்ட 31 : 34 வசனத்திற்கு பதில் அளித்த டாக்டர் ஜாகிர் நாயக் அவர்கள் ''கருவரையில் உள்ளதையும் அவனே அறிவான்'' என்று அல்லாஹ் குறிப்பிடுகின்றான்..
சில மொழிபெயர்ப்பாளர்கள் இது கருவரையில் உள்ள குழந்தை ஆண் பாலா பெண்பாலா என்று இறைவனே அறிவான் என்று மொழிபெயர்த்துள்ளனர் அதனால் இது முரண்பாடு போல் தோன்றுகிறது.
ஆனால் இது கருவறையில் உள்ள குழந்தையின் பண்பையும் குணத்தையும் அதாவது அது வளர்ந்து பிறந்த பின்னர் நல்லதாக வாழுமா அல்லது தீயதாக வாழுமா (அதனால் பலன்கள் உண்டா, கேடுகள் உண்டா) போன்ற குணாதசியங்களை குறித்து கூறப்படுவதாக கருதினால் இதில் முரண்பாடு இல்லை என்று பதிலளித்தார் என்பதையும் இங்கு கவனத்தில் கொண்டுவருகிறேன்.
5
July 06, 2008 07:15
அஸ்ஸலாமு அலைக்கும்
அன்பு சகோதரர்களே
//குழந்தைபிறக்கும் நேரத்தை இறைவன் மட்டுமே அறிவான் என்ற இஸ்லாமியக் கூற்று (குரான் ஹதீஸ்) உண்மையானதா?//
//Alhamdulillaah, we managed to get our daughter born healthily eventhough by C-section but after about 12 hours from the original stipulated time by the first doctor.
Only Allah knows the EXACT birth time of the child.//
ஆக குழந்தை பிறக்கும் நேரம் உட்பட இப்பேரண்டத்தில் உள்ள அனைத்தையும்(துல்லியமாக) அதை படைத்து போஷித்து நிர்வகிக்கும் அல்லாஹ் ஒருவனே அறிவான், என்பது இஸ்லாம் எனும் இயற்கையான இறைக்கோட்பாட்டின் முக்கிய அடிப்படையாகும்.
சகோதரர் வேணுகோபால் அவர்கள் இந்த கேள்வியை இந்த தேதியில் கேட்பார் அதற்கு சத்தியமார்க்கம் சார்பில் இந்த தேதியில் பதில் வரும் அதற்கு இந்த நேரத்தில் பின்னூட்டம் வரும் என்பது உட்பட அனைத்தும் அறிந்தவன அறிபவன் நம் அனைவரின் ஏக இறைவனாகிய அல்லாஹ் ஒருவன் என்பதில் ஏதும் சந்தேகமில்லை.
அன்புடன்
அப்துல்லாஹ் M
6
July 06, 2008 09:01
திருமறை 31:34 வசனத் தொடரைச் சிந்தித்தால் 'மா பில் அர்ஹாம்' - ''கருவறைகளில் உள்ளதை அவன் அறிகிறான்'' என்று பொருள் கொள்வதே பொருத்தமாகத் தெரிகிறது.
நபிமொழியும் இப்பொருளையே உறுதிப்படுத்துகின்றது.
''அல்லாஹ் கர்ப்பப் பையில் ஒரு வானவரை நியமிக்கிறான். கர்ப்பப் பையில் விந்து செலுத்தப்பட்ட பின்னர் அதன் ஒவ்வொரு நிலையிலும் மாற்றம் ஏற்படும்போது அந்த வானவர், 'யா அல்லாஹ்! இப்போது விந்தாக இருக்கிறது. யா அல்லாஹ்! இப்போது 'அலக்' (கருப்பைச் சுவற்றின் தொங்கும்) எனும் நிலையில் இருக்கிறது. யா அல்லாஹ்! இப்போது சதைத் துண்டாக இருக்கிறது' என்று கூறிவருவார். அல்லாஹ் அதை உருவாக்க நாடினால் அது ஆணா? பெண்ணா? நல்லவனா? கெட்டவனா? என்பதையும் அவனுக்குச் கொடுக்கவிருக்கும் செல்வம் எவ்வளவு? அவனுடைய வாழ்நாள் எவ்வளவு? என்பதையும் கூறிவிடுகிறான். மனிதன் தன் தாயின் வயிற்றில் இருக்கும் போதே இவை எழுதப்பட்டு விடுகின்றன' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' என அனஸ்(ரலி) அறிவித்தார். (புகாரி, 318)
(இன்னும் இதே கருத்தில் விஞ்ஞான ரீதியில் விரிவாக, ''குழந்தை தாயின் சாயலில் ஏன் பிறக்கிறது? என்பதன் விளக்கமாகவும் மேலும் சில அறிவிப்புகள் உள்ளன விரிவஞ்சி இங்கு எழுதவில்லை)
ஒரு துளி விந்திலிருந்து உருவாகும் ஒரு குழந்தை அது உருவாகி, பிறந்து வளர்ந்து, மரணிக்கும் வரை அதன் நல்லது கெட்டது அனைத்து செயல்பாடுகளும் இறைவனால் நிர்ணயிக்கப்படுகின்றன. (இது வேறு எவருக்கும் சாத்தியமில்லை) சிந்திக்கும் போது இதையே, ''தான் நாளை சம்பாதிக்க உள்ளதை எவரும் அறியமாட்டார்'' என்ற வசனத் தொடரும் உறுதிப்படுத்துகின்றது.
கருவறையை அறிவதை விட கருவறையில் உள்ளதை அறிவது தான் பேராற்றல் என்பதற்கு பொருத்தமாகத் தோன்றுகிறது.
(அல்லாஹ் மிக அறிந்தவன்)
7
July 06, 2008 10:49
I appreciate sister Fahmita's strong EEMAAN as well as her good style of English writing. Really I am so proud that our community's women are getting highly qualified education now-a-days. ALHAMDULILLAH. Moreover, her points are absolutely correct as I have heard the same miscalculation from doctor while my wife was delivering our first daughter. The doctor told that my wife would give birth the child on 15th August. But, my wife gave birth our daughter on 26th August. So, this is the truth that ALLAAH ONLY KNOWS all.
8
July 06, 2008 20:22
மனிதர்களை அல்லாது பிற வகைக்கும் நாம் கரு என்கிறோம். உதாரணமாக முட்டை அதில் வெள்ளை பாகத்திற்கு வெள்ளைக்கரு நடுவில் உள்ளது மஞ்சள் கரு காரணம் அதுவும் அல்லாஹ்வின் கண்காணிப்பில் உள்ள ஒரு படைப்பாகும். அதிலிருந்து வெளிவருவது சேவலா ? அல்லது கோழியா ? என்பதையும் அல்லாவை தவிர யாரும் அறிய முடியாது. அது குஞ்சாக இருக்கும் பொழுது எல்லாம் ஒன்றாக தான் தெரியும் வளர்ந்த பிறகு தான் தலையில் பெரிய சிவப்பு கொண்டும் பெரிய வால் இறகோடும் சேவல் என்கிறோம். இன்னும் அதன் இன உற்ப்பத்தி உறுப்புகளெல்லாம் மனிதர்களுக்கு அமைந்தது போல் இல்லை.நமக்கு வெளிப்படையாக இருப்பதைக்கொண்டு மருத்துவர்கள் இரு பாளர்களை சுலபமாக கண்டு பிடித்துவிடுகிறார்கள். இன்னும் ஈ, கொசு, நுன்னுயிர்க்கிருமி, கடலில் வாழும் அனைத்து உயிரினங்களும் கரு கொள்கிறது. இவற்றுக்கெல்லாம் எந்த மருத்துவர்களும் ஸ்கேன் அல்லது எக்ஸ்ரே போன்ற நூதனக்கருவிகள் கொண்டு பரிசோதித்து பார்ப்பது என்பது கனவு தான் காண முடியும். வாட்டர் ப்ரூப் ஸ்கேன் கருவிகள் எல்லாம் தயாரிக்கணும். இன்னும் அவைகளெல்லாம் எத்தனை நாள் சுமக்கும் பிறகு எப்பொழுது ஈன்றெடுக்கும்.வெளிவருவது ஆண் வர்க்கமா ? அல்லது பெண் வர்க்கமா ? அதில் ஊனம் உள்ளது எது ? இன்னும் இறந்து பிறப்பது எது ? என்பதும் அல்லாஹ் நன்கறிவான். மேலும் கீழ் காணும் வசனம் அனைத்து உயிரினத்திற்கும் பொதுவாக தான் உள்ளது மனிதர்களை உட்கொண்டு.
// 'நிச்சயமாக மறுமை பற்றிய முற்றான அறிவு அல்லாஹ்விடமே இருக்கிறது. அவன்தான் (சூல்கொண்ட மேகத்திலிருந்து) மழையைப் பொழிவிப்பவன். மேலும் கருவறையில் உள்ளவற்றை அறிபவனும் அவனே ...' (அல்குர்ஆன் 31:34). //
இன்னும் கடல் குதிரை என்ற மீன் இனம் அது தன் குஞ்சுகளை வெளிப்படுத்தும் பொழுது ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கில் ஸ்ப்ரே செய்துவிடும் அதன் நேரம் துல்லியம் எல்லாம் வல்ல அல்லாஹ்வை தவிர யார் அறிவார்.
மனித இனங்களை மட்டும் வைத்து பிரசவ நேரத்தை எடை போடும் விசயத்தில் டாக்டர்கள் படாத பாடு என்றால் மேற்குறிப்பிட்ட உயிரினத்திற்கு என்ன செய்ய முடியும் ? அனைத்து முஸ்லிம்களுக்கும் அஸ்ஸலாமு அலைக்கும்
மா சலாம்.
அப்துல் அசீஸ்..
9
July 07, 2008 03:32
ASSALAMU ALAIKKUM
DEAR ALL A RELATED NEWS ARTICLE :
Woman delivers baby on clinic floor
Publish Date: Tuesday,13 May, 2008, at 01:15 AM Doha Time
By Arvind Nair
IF ALL is well that ends well is true, this is a happy story. Both the mother and the baby she delivered on the floor of a doctor's consultation room are doing well. But, had something gone wrong, it could have been a disaster.
Bibi Durra, a 26-year-old Pakistani, gave birth to a bony baby boy on Sunday evening in the gynecologist's consultation room.
What is more surprising is that the Women's Hospital allegedly sent her back less than an hour earlier, saying her baby was not due that day.
According to Mohamed Kalam, 32, the father of the baby, he had taken his full-term pregnant wife, who was in labour, to the emergency department of the Women's Hospital at around 4pm on Sunday. After an ultrasound scan she was sent back, an agitated Mohamed told Gulf Times.
Mohamed was told that it was not time yet. He was asked to bring his wife back the following day.
Mohamed told the hospital that his wife was in pain and that he couldn't possibly take her back home. Rather, he would take her to a private clinic if the hospital did not admit her.
According to Mohamed, the hospital personnel stuck to their stand and the his wife was eventually taken to a private lady gynecologist.
On reaching the clinic, the woman barged into the consultation room even though the doctor was attending to another patient, who happened to be a nurse.
'Before anybody could do anything, she delivered the baby,' the gynecologist, who did not want to be named, told Gulf Times yesterday. The woman couldn't reach the bed.
The young mother was helped by the doctor, the nurses of the clinic and the patient.
They immediately called an ambulance and transferred the mother and the baby, who weighed 'approximately 3.5kg' to the Women's Hospital. They will be discharged today.
The gynecologist, who earlier worked for 10 years at Doha Clinic, confirmed that the pregnancy was full-term.
'Though I have attended to a number of deliveries at Doha Clinic, this is the first such experience at my private clinic', said the amused doctor. 'It was totally unexpected'.
For Bibi Durra, who has been in Qatar for just a year, it is her fifth child. She and Mohamed, who belong to S R Bannu in North West Frontier Province, have two boys and two girls.
Mohamed has been working in Qatar for eight years.
10
July 07, 2008 07:07
அஸ்ஸலாமு அலைக்கும்
அன்பர்களே இதே தொடர்பிலான ஒரு செய்தியிதழில் வந்த செய்தி கீழே :
தனியார் பிரசவ விடுதியின் தரையில் குழந்தை பிரசுவித்த பெண்மனி.
பதிவு தேதி : செவ்வாய் , 13 மே . 2008 நேரம் 01.15 தோஹா,
செய்தி : அர்விந்த் நாயர்.
நல்லவிதமாக முடிவுறும் அனைத்தும் நலம் என்பது உண்மையெனில், இது ஒரு நல்ல சந்தோஷமான விஷயம். ஏனெனில் தாயும் (பிரசவ ஆலோசகரின் அ றையின் தரையில் பிரசுவித்த குழந்தையும்) சேயும் நலமாக உள்ளார்கள்.ஆனால் ஏதும் சிறிய தவறு நிகழ்ந்திருந்தால் மிகப்பெரிய ஆபத்தாக அது மாறியிருக்கலாம்.
பீபீ துர்ரா எனும் 26 வயது பாகிஸ்தானிய பெண்மணி ஞாயிரு மாலை பிரசவ மருத்துவ ஆலோசகரின் அறையின் தரையிலேயே ஒரு அழகான ஆண் குழந்தையை பிரசவித்தார்.
இதில் ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால் பெண்கள் மருத்துவமனையிலிருந்து ஒரு மணி நேரத்திற்கு முன்னரே இன்று குழந்தை பிரசவிக்க சாத்தியம் இல்லை என்று கூறி அவர்களை திருப்பியனுப்பியுள்ளனர்.
குழந்தையின் தந்தை முஹம்மத் கலாமின் (வயது 32 ) கூற்றுப்படி அவர் தனது நிறைமாத கர்பிணியான மனைவியை பிரசவ வேதனையோடு பெண்கள் மருத்தவமனையின் அவசர பிரசவப் பிரிவுக்கு சுமார் மாலை 4 மணியளவில் கொண்டு சென்றார். ஆனால் அல்ட்ரா ஸவுண்ட் ஸ்கேன் செய்தபின்னர் அவளை திருப்பியனுப்பி விட்டனர் என்று அவர் ஆவேசத்துடன் கூறினார்.
இன்னும் நேரம் ஆக வில்லை நாளை மீண்டும் அழைத்து வாருங்கள் என்று அவரிடம் கூறப்பட்டது.
முஹம்மத் தம் மனவி மிகுந்த வேதனையில் உள்ளார் அவரை வீடு அழைத்து செல்வது இயலாது வேறு தனியார் பிரசவ மருத்துவ மனைக்குதான் கொண்டு செல்ல நேரிடும் ஆகையால் மருத்தவமனையிலாவது அனுமதிக்குமாரு கேட்டுக்கொண்டார்.ஆயினும் மருத்துவமனையினர் தமது கூற்றில் உறுதியாக இருந்ததால் அவர் தம் மனைவியுடன் இந்த தனியார் பெண் டாக்டருடைய பிரசவ மனைக்கு அழைத்து செல்ல நேர்ந்தது. இந்த மருத்துவ மனையை அடைந்ததும் அவள் நேரே இந்த பெண் டாக்டர் இருந்த அறைக்குள் வேதனையோடு விரைவாக சென்றார். டாக்டர் வேறு ஒரு நோயாளியை கவனித்து கொண்டிருந்தார் அவளும் ஒரு நர்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
யாரும் எதுவும் செய்யும் முன்னரே அவள் தமது குழந்தையை பிரசவித்தாள் என்று பேர் கூற விரும்பாத அனத பெண் டாக்டர் கல்ஃப் டைம்ஸ் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தார்.அந்த பெண்ணை படுக்கைவரை கொண்டு செல்ல இயலுமுன்பே இது நிகழ்ந்து விட்டது.
அந்த இளம் பெண்ணிற்கு மருத்துவ மனையின் டாக்டர் மற்றும் நர்ஸ்கள் உதவினர்.
பின்னர் மருத்துவவாகனம் ( ஆம்புலென்ஸ்) வரவழைக்கப்பட்டு அவள் மீண்டும் பெண்கள் மருத்துவ மனைக்கு மாற்றப்பட்டார். குழந்தை சுமார் 3.5 கிலோ எடையுடையதாக இருந்தது. அவர்கள் இன்று வீடு செல்வார்கள்.
அந்த பெண் டாக்டர் இது நிறை பிரசவம் தான் என்பதை உறுதி படுத்தினார், அவர் இதற்கு முன்பு 10 ஆண்டுகள் தோஹா கிளினிக்கில் பிரசவ டாக்டராக பணி புரிந்துள்ளார்.
நான் பத்து ஆண்டுகள் தோஹா கிளினிக்கில் பல பிரசவங்கள் பார்த்துள்ளேன் ஆயினும் இது எனது தனியார் மருத்துவமனையில் ஒரு வித்தியாசமான அனுபவம் ஏற்படுத்திய சம்பவம் என்று அவர் கூறினார். இது சிறிதும் எதிர்பார்க்காத ஒன்று என்றும் அவர் கூறினார்.
பீபீ துர்ரா கத்தரில் வந்து ஒரு ஆண்டு தான் ஆகிறது, அவருக்கு இது ஐந்தாவது குழந்தையாகும். முஹம்மத் மற்றும் பீபீ துர்ரா தம்பதிகள் எஸ் ஆர் பன்னூ எனும் வட பிராந்திய மாநிலத்தை சேர்ந்தவர்கள். அவர்களுக்கு இதற்கு முன்பு இரண்டு ஆண் மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். முஹம்மத் கடந்த எட்டு ஆண்டுகளாக கத்தரில் பணி புரிந்து வருகிறார்.
11
July 07, 2008 17:54
அன்பின் சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்.
அனைத்தையும் இறைவன் அறிகிறான் என்பதற்கும், இறைவனைத் தவிர வேறு யாரும் அறியமாட்டார்கள் என்பதற்கும் வித்தியாசம் உள்ளது.
இறைவனைத் தவிர வேறு யாரும் அறியமாட்டார்கள் என்பதில் கியாமத், மழை, கருவறை, மனிதன் நாளை அடைவது, மரணம் போன்றவை அடங்கும்.
இறைவனைத் தவிர வேறு யாரும் அறியமுடியாது எனும் போது 'கருவறையில் உள்ளவற்றை..' என்று மொழியாக்கம் செய்தால்.. (இந்தக் கருத்தைத்தான் சகோதரர் முஸ்லிமும் சரிகண்டுள்ளார் ஹதீஸ் துணையுடன்) அதாவது உயிரணுவின் மூலக்கூறுகள், அதன் நிமிடக்கணக்கான வளர்ச்சி, நிலைமாற்றங்கள் என்று 'கருவறையில் உள்ளவற்றை' லட்சக்கணக்கான விஞ்ஞானிகளும், மருத்துவர்களும் அறிந்து விடுகிறார்கள். இறைவன் மட்டுமே அறிவான், இறைவனைத் தவிர வேறு யாரும் அறிய முடியாது என்ற நம்பிக்கையை நிலைநாட்ட வேண்டிய இடத்தில் 'கருவறையில் உள்ளவற்றை..' என்று மொழியாக்கம் செய்யும் போது 'உள்ளவற்றை' பிறரும் அறிந்து விடும் நிலை ஏற்படத்தான் செய்கின்றது.
'மா.ஃபில் அர்ஹாம்' என்பதற்கு 'கருவறையில் உள்ளவற்றை' என்று மொழி பெயர்க்கும் போது நிச்சயம் கர்ப்பம் தரித்த நிலையையே அது குறிக்கும். அனைத்தையும் அறிவது போன்று இதையும் இறைவன் அறிகிறான் என்ற கருத்தை நாம் முன் வைப்பதாக இருந்தால் 'கருவறையில் உள்ளவற்றை' என்று சொல்லி விட்டுப் போகலாம். இறைவனைத் தவிர வேறு யாரும் அறிய முடியாது என்ற இறைத் தன்மையை நிலைநாட்ட இந்த வசனத்தை முன் வைத்தால் 'கருவறையில் உள்ளவற்றை... என்ற மொழியாக்கம் சரியாகத் தெரியவில்லை. 'மாஃபில் என்ற அஃ.றிணையான வார்த்தையை சிந்திக்கும் போது அது இன்னும் நுணுக்கமான அறிதல்களை குறிக்கவே பயன்படுத்தப்பட்டுள்ளது.
கருவறையின் அறிதல் என்பது இறைவனைத் தவிர வேறு யாருக்கும் தெரியாத ஒன்றாகும். கருவறையில் உள்ளவற்றை அறிதல் என்பது கொஞ்சம் விஞ்ஞானத்துக்கும் தெரியத்தான் செய்கின்றது.
(அல்லாஹ் மிக்க அறிந்தவன்)
12
July 08, 2008 04:38
அஸ்ஸலாமு அலைக்கும்
அன்பின் சகோதரர்களே
//மேற்கண்ட 31 : 34 வசனத்திற்கு பதில் அளித்த டாக்டர் ஜாகிர் நாயக் அவர்கள் ''கருவறையில் உள்ளதையும் அவனே அறிவான்'' என்று அல்லாஹ் குறிப்பிடுகின்றான்..
இது கருவறையில் உள்ள குழந்தையின் பண்பையும் குணத்தையும் அதாவது அது வளர்ந்து பிறந்த பின்னர் நல்லதாக வாழுமா அல்லது தீயதாக வாழுமா (அதனால் பலன்கள் உண்டா, கேடுகள் உண்டா) போன்ற குணாதசியங்களை குறித்து கூறப்படுவதாக கருதினால் இதில் முரண்பாடு இல்லை என்று பதிலளித்தார் என்பதையும் இங்கு கவனத்தில் கொண்டுவருகிறேன்.//
இதன் அடிப்படையில் கருவறையில் உள்ள குழந்தை நாளை நல்லவனாக அல்லது நல்லவளாக வாழ்வார்களா? தீயவனாக தீயவர்களாக வாழ்வார்களா என்பதை அல்லாஹ்வைத் தவிர எந்த விஞ்ஞானத்தாலும் கூற இயலாது என்பது பொருத்தமாக உள்ளது.
அல்லாஹ் மிக அறிந்தவன்.
13
July 08, 2008 16:08
அஸ்ஸலாமு அலைக்கும்
அன்புச் சகோதரர் ஜீ.என்
''ஒவ்வொரு பெண்ணும் (கருவறையில்) சுமப்பதையும், கருவறைகள் சுருங்குவதையும், விரிவடைவதையும் அல்லாஹ் அறிகிறான்''. (திருமறை 13:8) அல்லாஹ் அறிந்ததை விஞ்ஞானமும் அறிந்து வைத்துள்ளதே.
''அவன் அறியாமல் எந்தப் பெண்ணும் கருவுறுவதில்லை, ஈன்றெடுப்பதுமில்லை'' (திருமறை 35:11) இந்த வசனம் பெண் கருவுறுவதையும், பிரசவிப்பதையும் பிறர் அறியமாட்டார் என்ற கருத்தைத் தரவில்லையே.
(நமது கருத்துப்படி) கருவறைகளில் உள்ளதை அவன் அறிகிறான் என்பது மற்றவர்கள் அறியமாட்டார்கள் என்பதை மறுக்கவில்லையே.
அவனைத் தவிர எவரும் அறியமாட்டார்.
அவன் அறிகிறான்.
இரண்டு வாசகங்களுக்கும் வேறுபாடு இருக்கத்தான் செய்கிறது. கருவறையில் உள்ள கருவையும், கருவின் உருமாற்றத்தையும் அணுவணுவாக இன்றைய விஞ்ஞானம் அறிந்திருக்கிறது. நாளைய விஞ்ஞானம் இன்னும் முன்னேற்றமடையலாம். ஆனால் எந்தக் காலத்திலும் எவரும் அறிய முடியாத, இறைவன் மட்டுமே அறிந்தது அந்தக் கருவின் விதி. என்றும் கொள்ளலாமே.
எழுதியதில் தவறு இருந்தால் மேலதிக விளக்கம் தரவும்.
14
July 08, 2008 21:35
நவீன மருத்துவத் தொழில்நுட்பத்தில் கருவிலிருக்கும் குழந்தை பிறக்கும் நேரத்தைக் கணிக்க முடியும்போது, குழந்தை பிறக்கும் நேரத்தை இறைவன் மட்டுமே அறிவான் என்பது முரண்பாடாகத் தெரிவதாகக் கேட்டிருக்கிறார்.
திருக்குர்ஆன் வசனம் 31:34 இல் இறுதிநாள், மழை, கரு, நாளை, மரணிக்கும் இடம் குறித்தவை பேசப்படுகின்றன. நவீன அறிவியல் நுட்பத்தில் உலக இறுதிநாள் தவிர மற்ற அனைத்தையும் ஓரளவுக்குக் கணிக்கலாம் என்பது உண்மையே! அத்தகையக் கணிப்புகளின் துல்லியத் தன்மைக்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை.
அதேசமயம், நிச்சயமாக அல்லாஹ்தான் நன்கறிபவன்; நுட்பம் மிகுந்தவன் என்றும் அதே (31:34 ) வசனத்தில் சொல்லப்பட்டுள்ளது. நுண்பெருக்கிகள் கண்டுபிடிக்கப்படும்வரை மனிதக் கருவைப் பற்றியத் தெளிவான ஆய்வு முடிவுகள் எதுவுமில்லை.குர்ஆனுக்கு முற்பட்ட கிரேக்கத் தத்துவங்களில் முழுமையடைந்த மனிதத் தோற்றத்தின் மிகச்சிறிய வடிவமாகவே கருவும் இருப்பதாக நம்பப்பட்டது!
ஆனால், குர்ஆன் மட்டுமே எவ்வித உபகரணமுமின்றி மனிதக் கருவின் வெவ்வேறு படிநிலைகளை மிகத்துல்லியமாகச் சொன்னது. ஏறத்தாழ 14 நூற்றாண்டுகளுக்குப் பின்னரே அறிவியல் ஆய்வுகளில் இவை கண்டு பிடிக்கப்பட்டன!
ஆக, கருவறை, கரு குறித்த துல்லியத்திலும் நுட்பறிவிலும் அல்லாஹ்வே இதுவரை விஞ்சி நிற்கிறான்! இனிமேலும்தான்!!!
15
July 28, 2008 06:50
பீஜிங்: சீனாவை சேர்ந்த 92 வயது மூதாட்டி, இறந்துபோன சிசுவை 60 ஆண்டுகளாக தன் வயிற்றில் சுமந்திருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் ஹுவாங்கிலவோடன் பகுதியை சேர்ந்தவர் ஹுவாங் யிஜுன்; 92 வயது மூதாட்டி. இவர் 60 ஆண்டுகளுக்கு முன்,1948ல் கர்ப்பம் தரித்தார். அதன் பிறகு குழந்தை பிறக்கவே இல்லை. தொடர்ந்து உப்பிய வயிற்றுடனே வசித்து வந்தார் சமீபகாலமாக அவருக்கு கடும் வயிற்றுவலி ஏற்பட்டது.
பரிசோதனைக்காக டாக்டர்களிடம் சென்றார். அப்போது ஹுவாங்கின் கருப்பையில், இறந்த நிலையில் சிசு இருப்பதைப் பார்த்து டாக்டர்கள் அதிர்ந்தனர் அதை ஏன் அகற்றவில்லை?' என்று டாக்டர்கள் கேட்ட போது, ஹுவாங்
சொன்ன பதில் டாக்டர்களை மேலும் அதிர வைத்தது.
'கர்ப்பத்தில் இறந்த சிசுவை அகற்ற சென்ற போது, அதற்கு கட்டணமாக, 60 ஆண்டுக்கு முந்தைய மதிப்பில், 4,000 ரூபாய் கேட்டதாகவும், அவ்வளவு பெரிய தொகையை தன்னால் செலுத்த முடியாது என்பதால், அந்த முயற்சியை கைவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
அவர் மீது இரக்கப்பட்ட டாக்டர்கள், இலவசமாகவே அறுவை சிகிச்சை செய்து, கருப்பையில் 60 ஆண்டுகளாக இறந்த நிலையில் இருந்த சிசுவின் உடலை அகற்றினர் தற்போது உடல் நிலை தேறி வருகிறார் ஹுவாங்.
16
January 27, 2009 20:08
மனிதர்கள் துல்லியமாக கூறமுடியாது, இறைவனால் துல்லியமாக கூறமுடியும் என்று கூறுகிறீர்கள். மனிதர்கள் கூறுவது நமக்கு தெரிகிறது, இறைவன் எங்கே நம்மிடம் கூறுகின்றான். மேலும் வயிற்றில் இருப்பது ஆணா, பெண்ணா என்று இக்காலத்தில் தெரிந்துவிடுகிறது. மேலும் மனிதர்களைத் தவிர மற்ற உயிரினங்களை மனிதனின் தேவைக்கேற்ப உயிராக்குகின்றனர்
17
July 10, 2009 19:49
அஸ்ஸலாமு அலைக்கும். அனைத்து முஸ்லிம்களுக்கும்.
சகோதரர் அஸ்கர் அவர்கள் ஆக்கங்களின் வார்த்தைகளை நன்றாக படித்து பாருங்கள். இதில் கூட உங்களால் துல்லியமாக பார்க்க முடியாமல் போனதால். மனிதர்கள் தான் அதற்க்கு மேல் மனிதர்களுக்கும் துல்லியத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது நன்கு விளங்கும். // மனிதர்கள் துல்லியமாக கூறமுடியாது, இறைவனால் துல்லியமாக கூறமுடியும் என்று கூறுகிறீர்கள். மனிதர்கள் கூறுவது நமக்கு தெரிகிறது, இறைவன் எங்கே நம்மிடம் கூறுகின்றான். // மேலும் கட்டுரையில் துல்லியமாக இறைவனுக்கு '' தெரியும் '' என்றுள்ளது. தவிர கூறமுடியும் என்று நீங்கலாக நினைத்து கொண்டது போல் கிடையாது. அவ்வளவு துல்லிய கால அளவையும் ரப்புல் ஆலமீன் நமக்கு தெரியப் படுத்தியாகவேண்டும் என்ற நிர்பந்தமும் அவனுக்கு கிடையாது. அப்படியே கூறினாலும் அதனால் நமக்கு எந்த பயனும் கிடையாது வேனும் என்றால் பிறப்பு சான்றிதல் தான் அடித்து கொள்ளமுடியும். அதில் கூட துல்லிய நேரத்தை போட மாட்டோம். ஒரு முட்டையை எடுத்து தருகிறேன். நீங்கள் துல்லியம் அறிவிக்கும் என்று நம்புகின்ற நிபுணரிடம் கேட்டு சொல்லமுடியுமா ? அந்த முட்டையிலிருந்து சேவல் வருமா அல்லது பெட்டை வருமா ? என்றும் இன்னும் அந்த முட்டையின் மூலம் எத்தனை சந்ததிகள் வரும் அவைகள் எத்தனை முட்டைகள் மூலம் இனப்பெருக்கம் உருவாக்கும் எத்தனை முட்டைகள அழுகிவிடும் என்றெல்லாம் கணிக்க முடியுமா ? எவன் அவைகளைப் படைத்தானோ அவனுக்கு தான் தெரியும். மா சலாம். அப்துல் அசீஸ். 18
July 11, 2009 01:59
அல்ஹம்துலில்லாஹ்.
அருமையான பதில். அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக. 19
July 11, 2009 19:27
சலாம்." ... அவன் அறியாமல் எந்தப் பெண்ணும் கருவுறுவதில்லை; பிரசவிப்பதுமில்லை ..." (அல்குர்ஆன் 35:11).இந்த வசனத்திற்கு அல்லாஹுடைய பார்வையில் இருந்து ஏதும் தப்பாது என்ற பொருள்தானே வருகிறது.இதில் எங்கே முரண்பாடு உள்ளது.இதில் அல்லா அவனுடைய ஆற்றலை பற்றிதானே வருகிறது.ஒரு திருமணம் ஆகாத ஒரு பெண் எப்போது கருவுருவாள் என்பதை சொல்ல முடியுமா.அனால் அல்லாஹ் அவளுக்கு எப்போது திருமணம் ஆகும் என்பதையும்,அவள் எப்போது பிரசவிப்பாள் என்பதையும் முன்கூட்டியே அறிவான்.
20
December 19, 2009 16:42
கருத்து எழுதுக :
|