சத்தியமார்க்கம்.காம்

நம் குடும்பத்தில் ஒரு முஸ்லிம்! print Email
பொதுவானவை - பொதுவானவை
ஞாயிறு, 29 ஜூன் 2008 12:15

சகோதரி யுவான் ரிட்லிஇஸ்லாமை தமது வாழ்க்கை நெறியாக ஏற்க விரும்பும் ஒருவர் முஸ்லிமாக மாறும் வழிமுறை மிக எளிதானது. ஷஹாதா எனப்படும் நம்பிக்கை உறுதிமொழியை மனதால் ஏற்று வாயால் மொழிந்தால் போதும். பிற மதங்களில் இருப்பதுபோல வெற்றுச் சடங்குகள் தேவையில்லை. முஸ்லிமாக ஒருவர் மாறும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள நீங்கள் செல்வீர்களென்றால் வீடியோ கேமராவெல்லாம் எடுத்துச் செல்லத் தேவையிருக்காது. கேமராவின் மூடியை நீங்கள் திறக்குமுன்பே நிகழ்ச்சி முடிந்து விடக்கூடும்!

முஸ்லிமாக மாற விரும்புபவர் மிக எளிமையாக, இரு முஸ்லிம்களின் சாட்சியுடன்வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாரும் இல்லை; முஹம்மது (ஸல்) அவர்கள் இந்த உலகிற்கு இறுதியாக அனுப்பப்பட்ட இறைத்தூதர்என்ற உறுதிமொழியை மொழியவேண்டும். அவ்வளவுதான். அதற்குமேல் எந்தச் சடங்குமில்லை.

ஆனால், அந்தப் புதிய முஸ்லிம்களுக்குஷஹாதாசொல்வது ஒரு புதிய வாழ்க்கை முறையின் துவக்கம்தான். இது ஒரு முன்னுரை மாதிரி. அல்லது அவர்கள் வாழ்வில் ஒரு அத்தியாயம் முடிந்து இன்னொரு அத்தியாயம் துவங்குகிறது என்றும் சொல்லலாம்.

ஒருவகையில் இது அவர்கள் வாழ்வை முழுவதுமாக மாற்றி அமைக்கப்போகும் அனுபவம். கார்களை சுத்திகரிப்புச் செய்வது போல, இதுஆன்மீக சுத்திகரிப்புஎன்று சொல்லலாம். சுத்திகரிப்புச் செய்யப் பட்ட கார் வழுக்கள் நீக்கப் பட்டுப் பளபளப்பது போல அவர் பாவங்கள் நீக்கப்பட்டு, வாழ்வதன் நோக்கம் தெளிவாகி புதிய மனிதராக வாழ்க்கையைத் தொடர்கிறார். இன்னொரு வகையில் பார்த்தால், அடிப்படையில் அவர் அதே மனிதர்தான். ஒரு ஃபோர்டு கார் சுத்திகரிப்புச் செய்யு முன்னரும் ஃபோர்டு காராகத்தானே இருந்தது?.

சில புதிய முஸ்லிம்களின் குடும்பத்தினருக்கு இதைப் புரிந்து கொள்வதுதான் சிரமமாக இருக்கிறது; உண்மையைச் சொல்வதென்றால், சில புதிய முஸ்லிம்களுக்கும் அப்படித்தான் தோன்றுகிறது. அவர்களில் பெரும்பாலானோர் தொழுகை, நோன்பு போன்ற செயல்களில் ஈடுபடுவதோடு, பெயர், தாடி, ஆடை போன்ற புறத் தோற்ற மாறுதல்களிலும் அவசரம் காட்டுவது வழக்கிலிருக்கிறது.

இந்த மாறுதல்களிலும் தவறேதுமில்லைதான்! இஸ்லாம் சிலவற்றைக் கடமையாக்கியிருக்கிறது. சிலவற்றை முஸ்லிம்களுக்குப் பரிந்துரைத்திருக்கின்றது. ஆனால் பரிந்துரைக்கப்பட்டவற்றையும் செய்தால்தான் ஒருவர் முழு முஸ்லிமாக இருக்க முடியும் என்பதல்ல. சில சமயங்களில் ஒரு புதிய முஸ்லிம் தன் புறத் தோற்றங்களை மாற்றிக் கொள்வதில் காட்டும் அவசரம் அவரது முஸ்லிமல்லாத பிற குடும்ப உறுப்பினர்களுக்குக் குழப்பத்தை உண்டாக்குகிறது. இதனால் அவர்கள் மனம் புண்படவும் வாய்ப்பிருக்கிறது.

உன் பெயரை ஏன் ஒரு அரேபியப் பெயராக மாற்றிக் கொண்டிருக்கிறாய்? நாங்கள் உனக்கு வைத்த பெயரில் என்ன குறை கண்டு விட்டாய்?”

ஏன் இப்படி வித்தியாசமான உடைகளை அணியத் தொடங்கி விட்டாய்?”

முக்காடு அணிய வேண்டியத் தேவை திடீரென்று உனக்கு ஏன் ஏற்பட்டது? நான் பார்க்கும் ஆசிய முஸ்லிம் பெண்களில்கூட பாதிப் பேர் இதை அணிவதில்லையே?”

இப்படி எல்லா நேரங்களிலும் பள்ளிவாசலே கதி என்று கிடந்தால், உன்னை யாராவது மூளைச் சலவை செய்துவிடுவார்களோ என்று எனக்கு பயமாக இருக்கிறது. என் குடும்பத்தில் ஒரு பயங்கரவாதியைச் சேர்த்து வைத்துக் கொள்ள என்னால் முடியாது

இப்படியெல்லாம் கேள்விகள் பிறக்கலாம்.

ஒருவகையில் பார்த்தால், இது போன்ற எதிர்வினைகளை எதிர்கொள்வது கூட ஆரோக்கியமானதொரு விஷயம்தான். முஸ்லிமல்லாத குடும்ப உறுப்பினர்கள் இஸ்லாம் பற்றிச் சரியான முறையில் அறிமுகம் செய்விக்கப் படாததால்தான் இந்தக் கேள்விகளைக் கேட்கிறார்கள். புதிய முஸ்லிம் தமது குடும்பத்தினரின் கேள்விகளுக்கு பதில் சொல்வதற்காகவேனும் தாம் புதிதாக ஏற்றுக் கொண்ட கொள்கைகளைத் தொடர்ந்து சீர்தூக்கிப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும். கேட்கப்படும் கேள்விகளுக்குத் தகுந்த முறையில் பதில் சொல்ல வேண்டும். இது இரு தரப்பினருக்குமே நன்மை தரக்கூடியதுதான்.

இஸ்லாம் பற்றி இன்றையச் சூழலில் நிலவும் எதிர்மறைப் பிம்பங்களுக்கு காரணம், அதன் கொள்கைகளைப் பற்றி சரியான முறையில் அறியாமல் இருத்தல் அல்லது இனம்புரியாத ஓர் அச்சம்தான். புதிய முஸ்லிம்கள் இந்தச் சூழ்நிலையைச் சாதகமாக்கிக் கொண்டு, இஸ்லாம் பற்றித் தம் குடும்பத்தினருக்குத் தகுந்த முறையில் விளக்கலாம்.

இல்லை அம்மா! இஸ்லாம் அப்படிப்பட்டதல்ல. நான் இஸ்லாத்திந்தான் இணைந்திருக்கிறேன்; அல்-கொய்தாவில் அல்ல.”

இஸ்லாம் அமைதியை வலியுறுத்தும் மார்க்கம்; வன்முறையைத் தூண்டும் மார்க்கமல்ல. இஸ்லாமின் பெயரால் அக்கிரமமான காரியங்களில் ஈடுபடுபவர்கள் இம்மார்க்கத்தின் மீது வீண்பழிச்சொல் விழக் காரணமாகிறார்கள்

அப்பா..! குர்ஆன், பெண்களை அடிமைப் படுத்துவற்கான கையேடு அல்ல. இந்த உலகில் முதன் முதலாகப் பெண்களுக்கான உரிமைகளையும் கண்ணியத்தையும் பிரகடனப்படுத்திய ஆவணமே அதுதான்!”

இப்படியெல்லாம் இஸ்லாம் பற்றிச் சொல்ல ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன! அதிலும் இந்தக் கருத்துகளை புதிதாக இஸ்லாமை ஏற்றுக் கொண்டவர்கள் உரக்கச் சொல்லும்போது, முஸ்லிமல்லாதவர்களுக்கு அது கூடுதல் தெளிவைக் கொடுக்கலாம். அது மட்டுமல்லாமல், பல்வேறு கலாச்சாரங்களின் தாக்கத்தினால் குர்ஆனின் வழிகாட்டல்களை விட்டு விலகி வாழ்ந்து கொண்டிருக்கும் முஸ்லிம்களுக்கும் அவை நினைவூட்டலாக அமையும்.

இக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருக்கும் நான்கு புதிய முஸ்லிம்களும் இஸ்லாமைத் தழுவுவதற்குமுன் இம்மார்க்கத்தைப் பற்றி ஒன்றுமே அறியாதவர்களாகத்தான் இருந்தார்கள். இஸ்லாமைத் தழுவுவது பற்றி தங்கள் குடும்பத்தினரிடம் அவர்கள் தெரிவித்தபோது, சந்தேகப் பார்வைகளையும் அச்ச உணர்வையும் மனக்கசப்புகளையுமே அவர்கள் எதிர்கொள்ள நேரிட்டது.

யுவான் ரிட்லி


ஒரு பத்திரிகையாளரான யுவான் ரிட்லி, செப்டம்பர் 2001 தாக்குதலுக்குப் பிறகு ஒரு முஸ்லிம் பெண் போன்ற வேடத்தில் ஆப்கானிஸ்தானில் நுழைந்து, தான் பணியாற்றிக் கொண்டிருந்த பத்திரிகைக்காகச் செய்திகள் திரட்டிக் கொண்டிருந்தபோது, தாலிபான் படையினரால் பிடிக்கப் பட்டார்.

உளவு பார்த்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட அவர், ‘தாம் கல்லாலடித்துக் கொல்லப் படுவோமோஎன்று பயந்து கொண்டிருந்தார். ஆனால், அதற்கு நேர்மாற்றமாக, சிறைப்பிடிக்கப் பட்டிருந்த அவர் மிக மரியாதையாக நடத்தப் பட்டார். குர்ஆனைப் படிக்கப் போவதாகவும் இஸ்லாமைப் பற்றித் தெரிந்து கொள்ளப் போவதாகவும் வாக்களித்த பிறகு அவர் விடுவிக்கப் பட்டார்.

பெண்களை அடக்கி, ஒடுக்கி, துன்புறுத்துவது பற்றிய உபதேசங்கள் இருக்கும் என எதிர்பார்த்துக் குர்ஆனைப் படிக்க ஆரம்பித்த அவருக்கு, அதில் அப்படி எதுவும் இல்லை என்பதே ஆச்சரியத்தை அளித்தது!. “இது பெண்ணுரிமைக்கான பிரகடனம்என்று வியக்கிறார் யுவான் ரிட்லி.

2003-
ல் யுவான் இஸ்லாமைத் தழுவினார். இஸ்லாம் அவருக்கு அளித்த தன்னம்பிக்கையும் கவுரவமும் பிரச்னைகள் நிரம்பியிருந்த அவரது கடந்த கால வாழ்க்கையை மறக்கடிக்கச் செய்தது. ஆனால் அவரது மனமாற்றத்தைப் பற்றி அவரது தாயை மட்டும் இன்னும் அவரால் புரிந்து கொள்ளச் செய்ய முடியவில்லை.

ஜான் ஸ்டாண்டிங்

 

குடும்பத்துடன் ஜான் ஸ்டாண்டிங்ஜான், தனது முஸ்லிம் பெண் தோழி நசிராவை இஸ்லாமிலிருந்து வெளியேற்ற முயன்றார். நசிரா தனது நம்பிக்கையில் உறுதியாக இருப்பது தெரிந்த பிறகே, குர்ஆனைத் தானே படித்துப் புரிந்து கொள்ள ஜான் முடிவு செய்தார். சில மாதங்களுக்குள்ளாகவே அவர் இஸ்லாமைத் தழுவினார். அவர் முஸ்லிமாக ஆனதிலிருந்து மிக அமைதியான, கனிவான மனிதராக இருக்கிறார் என ஜானின் தந்தை டோனி ஒப்புக் கொள்கிறார். இருந்தாலும், ஜான் மூளைச் சலவை செய்யப் பட்டிருப்பாரோ எனத் தனக்கு இன்னும் ஐயம் இருப்பதாகவும் அவர் சொன்னார். ஜான் ஏதாவது வன்முறை தீவிரவாதச் செயல்களில் ஈடுபடுகிறார் எனத் தெரிந்தால் அவரை தமது குடும்பத்தை விட்டும் விலக்கிவிடுவதாகவும் அவரது தந்தை எச்சரித்திருக்கிறார். அவர் அப்படி எதையும் செய்துவிட மாட்டார் என்ற நம்பிக்கையும் அவரது குடும்பத்தினருக்கு இருக்கிறது.

ஜான் ஏன் தனது பெயரை ஜமாலுத்தீன் என மாற்றிக் கொள்ள வேண்டும்? நல்ல எதிர்காலமுள்ள இசைக்கலை தொடர்பான தொழிலை ஏன் அவர் கைவிட வேண்டும்? (இஸ்லாம் இசையைத் தடை செய்திருக்கிறது என்பது ஜானின் நம்பிக்கை). மேலும், ஒரு இஸ்லாமிய நாட்டிற்குக் குடிபெயர்வது பற்றி அவர் ஏன் யோசிக்க வேண்டும்? என்பதெல்லாம் ஜானின் தந்தைக்கு இன்னும் புரியாத புதிர்தான்.

இஸ்லாம் உண்மையில் இது போன்ற மாற்றங்களை கட்டாயமாக்கியிருக்கிறதா?

அகீல் பர்ட்டன்

 

அகீல் பர்ட்டன்அகீல், ஜமைக்காவைச் சேர்ந்த தன் கிருஸ்துவப் பெற்றோருடன் மான்செஸ்டர் நகரில் வளர்ந்தவர். தமது பெற்றோர் பின்பற்றிய கிருஸ்துவ மதம் அகீலுக்குப் பிடிக்கவில்லை. அது வெள்ளை இனத்தவருக்கான மதம் என்று அகீலுக்குத் தோன்றியது. இஸ்லாம் இதிலிருந்து மாறுபட்டது என்றும் அவருக்குத் தோன்றவில்லை. பள்ளிப் பருவத்தில் அவர் அறிந்திருந்த முஸ்லிம்களெல்லாம் ஆசிய நாடுகளிலிருந்து வந்தவர்கள். ஆனால், அவரைப் போன்றே ஜமைக்காவைச் சேர்ந்த ஒரு நண்பர் முஸ்லிமானது, அகீலுக்கும் இஸ்லாம் மீது ஆர்வம் ஏற்படக் காரணமான அமைந்தது. அவர் குர்ஆனைப் படிக்க ஆரம்பித்தார். பதில் கிடைக்காமல் அவரது மனதில் சுழன்று கொண்டிருந்த கேள்விகளுக்கெல்லாம் இஸ்லாமில் பதில் இருக்கிறது என்பதை அவர் கண்டு கொண்டார்.

ஒரு தொழில்முறை குத்துச்சண்டை வீரராக இருந்த அகீல், முஸ்லிமாக ஆனதிலிருந்து சண்டையிடுவதை நிறுத்திவிட்டு ஒரு பயிற்சியாளராகத் தொடர்கிறார். குத்துச்சண்டைக்காக அவர் பெற்ற கட்டுப்பாடு மற்றும் ஒழுங்குமுறைப் பயிற்சிகள், தமது புதிய இஸ்லாமிய வாழ்க்கைமுறையைக் கடைப்பிடிப்பதற்கும் துணைபுரிவதாக அகீல் உணர்கிறார்.

ஷஹ்
நாஸ் மாலிக்

 

குழந்தைகளுடன் சகோதரி ஷஹ்நாஸ் மாலிக்வெள்ளை இனக் குடும்பம் ஒன்றைச் சார்ந்த ஷஹ்நாஸ் அவரது ஆசிய ஆண் நண்பர் நசீரைத் திருமணம் முடித்தபோது இஸ்லாமைத் தழுவினார். அப்பொழுதெல்லாம் வெறும் பெயரளவில் மட்டும் முஸ்லிமாக இருந்த நசீரை கடந்த ஆறு ஆண்டுகளில் ஷஹ்நாஸ்தான் மார்க்கத்தில் பிடிப்புள்ளவராக மாற்றினார். முதலில் ஷஹ்நாஸ் ஹிஜாப் அணியத் தொடங்கினார். அதன் பிறகு சில ஆண்டுகள் கழித்து, நசீரின் தூண்டுதல் எதுவுமின்றியே முழு புர்கா அணிய ஆரம்பித்தார்.

உறவினர்கள், நண்பர்கள் சிலரின் கிண்டலும் கேலியும் ஷஹ்நாஸை தைரியமிழக்கச் செய்யவில்லை. மாறாக, அழகிப் போட்டியில் பங்கு கொள்வது போன்று ஆடை அணியும் மேற்கத்தியக் கலாச்சாரத்திலிருந்து விடுதலை பெற்றதாகவே அவர் உணர்கிறார்.

இந்த நான்கு புதிய முஸ்லிம்களும் வெவ்வேறு வழிகளில் தங்களது மனமாற்றத்திற்கு முந்தைய மேற்கத்திய கலாச்சார வாழ்க்கை முறைகளிலிருந்து இஸ்லாம் காட்டும் வாழ்க்கை நெறிமுறைகளுக்கு மாறியவர்களாவர். வழிமுறைகள் வேறாக இருந்தாலும், ‘மாற வேண்டும்என்ற உறுதி இவர்கள் அனைவரிடமும் இருக்கிறது. மாற்றங்களைத் தேடும் இவர்களின் வாழ்க்கைப் பயணத்தை உற்று நோக்கினால் அதில் இஸ்லாமிற்கும் மேற்கத்தியக் கலாச்சாரத்திற்கும் இடையிலான ஒரு தொடர்புப் பாலத்தை ஒருவேளை நாம் காணக்கூடும்.

மூலம்: http://news.bbc.co.uk/1/hi/programmes/3663771.stm

தமிழில் : ப்னு பஷீர்

Trackback(0)
கருத்துக்கள் (4)add comment
0
abdul azeez:
சிந்திக்கின்ற மக்களுக்கு அல்லாஹ் நேர் வழியை காட்டுகின்றான். இஸ்லாம் சிந்தனையை தூண்டும் மார்க்கம். அல்லாஹ்வுடைய வசனங்கள் அவர்களுக்கு ஓதி காண்பிக்கப்பட்டால் குருடர்கள், செவிடர்கள் போல் அவற்றின் மீது விழுந்துவிடமாட்டார்கள். ஒரு செய்தி : சகோதரி சாஜிதா அவர்களுக்கு உதவி செய்யும் படி அனைத்து சகோதரர்களிடமும் குறிப்பிட்டு இருந்தீர்கள். இன்னும் கும்பகோணம் ஹாளிமா எடுகேசினல் அறக்கட்டளை நிர்வாகிகளுக்கு தெரியபடுத்தினதை ஜூனியர் விகடன் பத்திரிக்கை எழுதினது என்றெல்லாம் அதை பற்றி எழுதி விபரமாக பார்த்தோம் இருந்தாலும் எனக்கு மனதில் குழப்பமாக இருந்த காரணத்தால் கும்பகோணம் ஹாளிமா எடுகேசினல் அறக்கட்டளை நிர்வாகிகளுக்கு போன் செய்து விபரத்தை கேட்டேன். அவர் பெயர் ஜாகிர் அவர் சொன்னது ஜூனியர் விகடன் பத்திரிக்கை நிருபர்கள் எங்களிடம் பேட்டி எடுத்தது உண்மை தான் ஆனால் அது அந்த சகோதரிக்கு தெரியாது என்றார். தற்போது அந்த பெண் எங்கள் பொறுப்பில் இல்லை அதிராம்பட்டினம் பைத்துல் மால் மூலம் அந்த ஜமாஅத் ஏற்றுகொண்டது என்று என்னிடம் சொன்னார். நான் கேட்டேன் அப்படி என்றால் நீங்கள் உதவி செய்வது இல்லை என்றேன். அப்படி கிடையாது எப்ப வேண்டும் என்றாலும் நாங்கள் செய்ய தயார். என்றார். இருந்தும் என்னுடைய நண்பர் சிராஜுதீன் அவர்களை வேலையை போட்டுவிட்டு அந்த ஊருக்கு போய் நன்றாக விசாரித்து விட்டு வா என்றேன். அவர் சனிக்கிழமை அன்று புறப்பட்டு போய் ஒத்தயடி பாதையாம் பஸ் மரத்தில் மோதி விபத்து ஆகி பாதி வழியில் திரும்பி வந்துவிட்டார். மறு நாள் ஞாயிறு போனார். சரியான குக்கிராமம் கீற்று வீடு அதுவும் சொந்தவீடு அல்ல பேராவூரநியிலிருந்து ஆறு கிலோமீட்டர் தெரு விளக்கு கிடையாது. ஆட்டோ வசதியோ கார் வசதியோ எதுவும் இல்லை. கொலை பன்னி போட்டால் கூட யாருக்கும் தெரியாது. அந்த சகோதரியின் டீச்சர்கள் தான் விண்ணப்பம் அனுப்பி இருந்தார்களாம். அண்ணா யுனிவர்சிடிக்கு இதுவரை எந்தவொரு ரிப்ளையும் இல்லை கவுசளின் வந்தால் தான் தெரியும் என்கிறார். அந்த அக்கௌன்ட் நம்பர் எல்லாம் சரிதான் என்கிறார். உங்களுக்கு உதவி செய்பவர்கள் யார் ? பைத்துல் மால் மூலம் வந்தார்களாமே ! என்று என் நண்பர் கேட்டார். அதற்க்கு நாலு அல்லது ஐந்து பேர் வந்தார்கள் அதில் ஒருவர் அஜ்ரத் பார்த்தார்களாம் பிறகு அப்துல் ரஹ்மான் ஜகாத் புன்ட் பௌண்டேசின் தெரியபடுதிவிட்டு போய்விட்டார்கள். அந்த இடத்திலிருந்து இதுவரை உதவி விண்ணப்பம் வரவில்லை என்கிறார் ஷாஜிதாவின் தாயார். அந்த சகோதரிக்கு அபுதாஹிர் என்று பதினோரு வயதில், ஒரு தம்பியும் அப்சல் ஹசீனா என்று ஆறு வயதில் ஒரு தங்கையும் உள்ளார்கள். அவரின் தாயார் அதே வேலையை தான் தொடர்ந்து செய்துகொண்டுவருகிறார். அவருக்கு ஒரு அண்ணன் ஒரு தம்பியாம். திருமணம் ஆகி வெளியூரில் இருக்கிறார்களாம். சகோதரி சாஜிதாவுக்கு டெலிபோன் வசதி மற்றும் மொபைல் வசதி இல்லை. எதிர் வீட்டுக்கு போன் செய்து சாஜிதாவை வரவழைத்து அனுப்பும் தொகை கிடைத்த விபரம் கேட்கலாம். எதிர் வீட்டு சகோதரியின் பெயர் பௌசியா பேகம். இதை எல்லாம் எதற்கு எழுதுகிறேன் என்றால். கும்பகோணம் நிர்வாகம் ஏற்றதை பைத்துல் மால் சகோதர்கள் பெருமனதோடு ஏற்று பிறகு கை கழுவி விட்ட மாதிரி இருக்கு தானும் படுக்க மாட்டேன் தள்ளியும் படுக்கமாட்டேன் என்கிற கதையா இருக்கு அதனால் அந்த சகோதரிக்கு இந்த தளத்தில் உள்ள அனைத்து சகோதரர்களும் உதவி செய்யுங்கள். அஸ்ஸலாமு அலைக்கும். powjiyaa begum mobile no: +919750298306 மா சலாம். அப்துல் அசீஸ்.
1

June 30, 2008 03:40
0
சிராஜ்:
முஸ்லிமாக மாறுவோர் எண்ணிக்கை அதிகமானதும் தாங்களும் 'மதமாற்றம்' என்ற பெயரில் நான்கு முஸ்லிம்(?) இளைஞர்களைப் பிடித்து வந்து இந்து மதத்துக்கு ;) மாறி விட்டதாக காமெடி செய்த RSS க்கு இச்செய்தியை அனுப்பியே ஆகவேண்டும். மேலும் சகோதரி சாஜிதா பற்றிய கூடுதல் தகவல் தந்த சகோதரர் அப்துல் அசீஸ்க்கு நன்றி ஆனால் சம்பந்தமில்லா ஆக்கத்தின் அடியில் பதிந்துள்ளீர்களே அசீஸ்?
2

June 30, 2008 16:22
0
abdul azeez:
உண்மை தான் நானும் அந்த சகோதரி தொடர்பான ஆக்கத்தை இந்த தளத்தில் தேடி பார்த்தேன். நேரம் தான் போகிறது தவிர கண்டு பிடிக்க முடியவில்லை. இருந்தாலும் எந்த இடத்தில் வைத்தால் என்ன ? அந்த சகோதரிக்கு நம் சகோதரர்களின் உதவிகள் எப்படியும் போயாகவேண்டும் என்ற நோக்கத்தில் உடனடி தகவல் கிடைத்ததை முன்னிட்டு இதில் பதிந்துவிட்டேன். இதில் பதிந்ததற்கு வருந்துகிறேன். மறுபடி கும்பகோணம் ஹாளிமா அறக்கட்டளை நிர்வாகிக்கு நேற்று காலை போன் செய்து இப்படி செய்து விட்டார்கள் பைத்துல் மால் சகோதரர்கள் என்று விபரத்தை சொல்லி மறுபடி நீங்கள் போருப்பெற்றுக்கொள்ளுங்கள். என்று பரிந்துரைத்தேன். என் நண்பர் பெயரையே ! வைத்துள்ள சகோதரர் சிராஜ் அவர்களுக்கும் ஏனைய முஸ்லீம் சகோதரர்களுக்கும் அஸ்ஸலாமு அழைக்கும். மா சலாம். அப்துல் அசீஸ்.
3

July 01, 2008 01:49
0
சத்தியமார்க்கம்.காம்:
அன்புச் சகோதரர் அப்துல் அஜீஸ், உங்கள் உதவி மனப்பான்மைக்கும் ஆர்வத்திற்கும் அல்லாஹ் நற்கூலி அளிப்பானாக! வருங்காலத்தில் நீங்கள் அதிக நேரம் செலவிடாமல் தேவைப் படுவதை சத்தியமார்க்கம் தளத்தில் எளிதாக உடனே கண்டு பிடிப்பதற்கு வழி இருக்கின்றது. முகப்பின் மேல் (கிழமைக்குக் கீழ்) வலப்புறக் கடைசியில் 'உதவி' என்ற சொல்லில் மவுஸை வைத்தால் நான்காவதாக 'யுனிகோடில் தேட' என்று வரும். அதில் நீங்கள் தேடும் சொல்லைத் தமிழில் உள்ளிட்டால் நொடியில் உங்களுக்கு விடை கிடைக்கும். தேடிப்பாருங்கள் ... சொல்: ஸாஜிதா மிக்க நன்றி!
4

July 01, 2008 06:29

கருத்து எழுதுக :
தட்டச்சு மொழி மாற்ற crtl+g அழுத்துங்கள்.
சிறிதாக்குக | பெரிதாக்குக

busy
 

இறைமறை

இப்பக்கத்தை PDF வடிவில் சேமிக்க...

தேடுக...

Random Quran Verses

2:195 அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யுங்கள். இன்னும் உங்கள் கைகளாலேயே உங்களை அழிவின் பக்கம் கொண்டு செல்லாதீர்கள். இன்னும், நன்மை செய்யுங்கள். நிச்சயமாக அல்லாஹ் முஹ்ஸின்களை -நன்மை செய்வோரை- நேசிக்கின்றான்.

புதிய கருத்துகள்

kalibulla : very good and happy news go ahead,.


Ibrahim ulavi london : Assalamu alaikum, This is very happy news for every muslim . our brother CNM SALIM And brother Imran...


j.ameer ali : On our part, let all of us pray for his good health and long life service to our society. By J.Ameer...


Ansary : This is a great news to know. He is doing fine. This is a very good example to other District Collec...


y.m.anari : ஹிஜாப் பற்றி இந்தத் தளத்தினர் குரான்...


Jaffer : Masha Allah ...May allah bless him and guide him to strive in the straight path.


Karunakaran : Salute to Collector Ahmad... You are the REAL hero!


haneefm : رَبَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَن...


M Muhammad : Assalamu Alaikum Dear Brother J Ameer Ali KSA // Dear editor, would you please send the complete ad...


Li_Brothers : கணக்குகள் சரி பார்க்கப்படும் அந்த மற...


j.ameer ali, ksa : Dear editor, would you please send the complete address of that Elders' orphanage,Rajagiri to my e-...


j.ameer ali, ksa : May Almighty Allah show our society the right path of living. Is there no Imam and Jumma prayers in ...


சுலைமான் : புறம் ஒரு சமூகத் தீமை. கூர்மையான வரிக...


Noor Huq : Thank u for the information. Starting college like this is very neccessary for the women living ar...


faizal : masha allah.Its very useful


mohamed iqbal : அஸ்ஸலாமு அலைக்கும் வரஹமதுல்லாஹ், ம...



You are here  : முகப்பு தொகுப்பு பொதுவானவை நம் குடும்பத்தில் ஒரு முஸ்லிம்!
Twitter
RSS
YouTube
English