| உலகின் அதிவேக விரைவுக் கணினி (Fastest Supercomputer) அறிமுகம்! |
|
|
| அறிவியல்-நுட்பம் - அறிவியல் | |||
| செவ்வாய், 17 ஜூன் 2008 11:37 | |||
நொடிக்கு ஒரு பெட்டாஃப்ளாப்ஸ் (Petaflops) கணக்கீடுகளை நிகழ்த்தும் அதிவிரைவுக் கணினி (Supercomputer) களை உருவாக்கும் ஆய்வில் பல ஆண்டுகளாக ஈடுபட்டு வந்த அமெரிக்க நிறுவனம் IBM, தற்போது அதனைச் சாத்தியப் படுத்தியுள்ளது.கணினி உலகில் நன்கு அறியப்பட்ட IBM நிறுவனமும், நியூ மெக்சிகோவிலிருக்கும் லாஸ் அலமாஸ் தேசிய ஆய்வுச் சாலையும் இணைந்து இந்தக் கணினியை உருவாக்கியுள்ளன. `ரோட்ரன்னர்' (Roadrunner) என்று அழைக்கப்படும் இந்த கணினி 100 மில்லியன் டாலர் செலவில் உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. IBM இதற்கு முன் உருவாக்கிய அதிவிரைவுக் கணினியான ப்ளூ ஜீன் (Blue Gene)-ஐக் காட்டிலும் இது இருமடங்கு வேகமாக செயல்படும். ஓர் ஒப்பீட்டிற்காக ப்ளூ ஜீன் அதிவிரைவுக் கணினி அதற்கடுத்த அதிவிரைவுக் கணினியைவிட மும்மடங்கு வேகத்தில் கணக்கீடுகள் செய்ய இயலும்.
வானங்களிலும், பூமியிலும் உள்ள மறைபொருள்கள் (இரகசியங்கள் பற்றிய ஞானம்) அல்லாஹ்வுக்கே உரியது; அவனிடமே எல்லாக் கருமங்களும் (முடிவு காண) மீளும். ஆகவே அவனையே வணங்குங்கள்; அவன் மீதே (பாரஞ்சாட்டி) உறுதியான நம்பிக்கை வையுங்கள் - நீங்கள் செய்பவை குறித்து உம் இறைவன் பராமுகமாக இல்லை. (அல்குர்ஆன் 11:123)
இந்த அண்ட சராசரத்தில் படைப்பாளன் மறைத்து வைத்துள்ள அருட்கொடைகள் எண்ணிலடங்காதவை இன்னும் உள்ளன. அவற்றைக் கண்டறியும் ஆற்றலை ஒவ்வொரு மனிதனின் மூளைக்கும் கொடுத்துள்ளான். அந்த மூளையின் ஆற்றலை எவர் சரியாகப் பயன்படுத்துகின்றாரோ அவரால் இன்னும் இன்னும் பல்வேறு கண்டுபிடிப்புகள் இவ்வுலக முடிவு நாள் வரை இம்மனித சமூகத்திற்குக் கிடைத்துக் கொண்டே இருக்கும்.
கல்வி அறிவுடைய ஒவ்வொருவருக்கும் மேலான அறிந்த ஒருவன் இருக்கவே செய்கிறான்! (அல்குர்ஆன் 12:76)
பகிர்ந்து கொள்க
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
Trackback(0)
கருத்துக்கள் (4)
![]()
Assalaamu Alaykum...
COMPUTER.. SUPER COMPUTER is 'AMAZING'
However we should not forget Man is Just an inventor of all that the UNIQUE Creator GOD Almighty has created for Man...... and should realize the CREATOR''s blessings might, power and obey him for ever,
அதிவேக கணிணியின் திறன் மற்றும் அதை கண்டுபிடித்த மனிதனின் திறன் அபாரமானது, அதே நேரத்தில் இது மனிதனுக்காக (அவனது படைப்பாளனாகிய நிகரற்ற ஏக இறைவனால் படைக்கப்பட்டவற்றிலிருந்து) மனிதனால் கண்டுபிடிக்கப்பட்ட கண்டுபிடிப்புகளில் ஒன்று தான் . என்பதை நினைவில் கொண்டு அந்த வல்ல இறைவனின் அருளினையும் ஆற்றலையும் முறையாக உணர்ந்து ஏற்று செயல்பட முற்பட வேண்டும்.
1
June 25, 2008 16:00
கருத்து எழுதுக :
|