சத்தியமார்க்கம்.காம்

போர் வெறியன் பட்டத்திற்காக வருத்தப் படும் புஷ்! print Email
செய்திகள் - உலகச் செய்திகள்
வியாழன், 12 ஜூன் 2008 12:55

போர் வெறியன் பட்டத்திற்காக வருத்தப் படும் புஷ்!

'அமைதி விரும்பி' எனப் பெயர் எடுப்பதற்காகத் தான் செய்த முயற்சிகள் உலகத்தினரால் 'போர் வெறியன்' என்ற பட்டத்தைப் பெற்றுத் தந்துள்ளதற்காக US அதிபர் புஷ் வருத்தம் தெரிவித்துள்ளார். "ஒருவேளை என் பேச்சுகளில் வேறு மாதிரியான சொற்களைப் பயன்படுத்தி இருக்கலாம் என இப்போது நினைக்கிறேன்" என்றும் அவர் கூறினார். 'தி டைம்ஸ்' (The Times) பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

தற்போது ஐரோப்பாவில் சுற்றுப் பயணத்தில் இருக்கும் புஷ், அவரது பேச்சுகள் நளினம் இல்லாமல் இருந்ததைத் தற்போது ஒப்புக் கொண்டுள்ளார்.

 

புஷ் அளித்த ஆணையின் பேரிலேயே ஆப்கானிஸ்தானிலும், இராக்கிலும் கணக்கில் அடங்கா அப்பாவி உயிர்கள் கொல்லப்பட்டன. தேவையே இல்லாதப் போரைத் திணித்து அமெரிக்கக் கருவூலத்தின் மீது மிகப் பெரும் அளவில் சுமையை சுமத்தியதாக ஸ்டிக்லிட்ஜ் என்ற பொருளாதார நிபுணர் சொல்லி இருப்பதை அறிவோம்.

 

இருப்பினும் இந்தப் பேட்டியின் போது ஈரானுக்கு எதிரான தனது வசை மொழிகளை புஷ் நிறுத்தவில்லை. "இராஜதந்திர முயற்சிகள் மூலம் ஈரானின் அணுசக்திச் சோதனைகளை நிறுத்த எல்லா வழியிலும் முயன்று வருகிறோம். இருப்பினும் எங்கள் பொறுமைக்கும் எல்லை உண்டு" என மறைமுகமாக ஈரானுக்குப் போர் எச்சரிக்கை விடுத்தார்.

 

அதேவேளை, ஈரானிய அதிபர் மஹ்மூதிநிஜாத், "புஷ்ஷின் பதவிக்காலம் முடிவதை நினைத்து உலகம் நிம்மதிப் பெருமூச்சு விடுகிறது. ஈரானைத் தீங்கு செய்ய நினைத்த புஷ்ஷின் தீய எண்ணம் நிறைவேறாது" என பதிலளித்துள்ளார்.

கருத்துக்கள் (3)add comment

எழுதியவர்: Mohamed Lafir , June 12, 2008 15:25

Bபுஷ் ஒரு மக்களால் தெரிவு செய்யப்பட்ட சர்வாதிகாரிதான். ஆயினும் அமெரிக்கர்களால் தமது ஜனாதிபதியாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கும் அவருடைய முகத்தை ஹிட்லரின் முகமாய் மாற்றியிருக்கிறீர்களே! இப்படிச் செய்வதற்கு இஸ்லாம் அனுமதிக்கிறதா? அப்படியாயின் அந்த குர்-ஆன் வசனத்தை அல்லது ஆதாரபூர்வமான ஹதீஸை முன் வைப்பீர்களா? வஸ்ஸலாம் அபூ fபௌஸீமா 12.06.2008



எழுதியவர்: சத்தியமார்க்கம்.காம் , June 13, 2008 17:40

வேறொரு தளத்திலிருந்து எடுக்கப் பட்டு, முதலில் இடம் பெற்ற புஷ்ஷின் படம் (கேலிச்சித்திரம்) மாற்றப் பட்டுள்ளது. கவனக் குறைவால் ஏற்பட்ட தவறுக்கு வருந்துகிறோம். கேலிச்சித்திரம் போடுவது இஸ்லாமியப் பண்பாட்டுக்கு எதிரானது என்று சுட்டிக் காட்டிய சகோதரர் முஹம்மது ளாஃபிர் (அபூ ஃபவ்ஸீமா) அவர்களுக்கு நன்றி!



எழுதியவர்: S.S.K. , June 16, 2008 06:35

அமைதி விரும்பியின் பார்வை??? கொலைவெறி கலந்த அப்-பாவியான, கழுகு-பார்வையினால், சுயநலம் நாடி அகந்தையினால் உலகெங்கும் பலரை கொன்ற இப்-பாவியின் பார்வை, உண்மையில் அமைதியின் போர்வை கலந்த நச்சு பார்வை. இது அப்பாவி, உலக அமைதிவிரும்பியின் பார்வை என்று நம்பியோர்கள் இன்றும் உண்டோ? இப்பார்வையின் தாக்குதல்களால் மாண்டோர்கள் ஒரு பாவமும் செய்யாத அப்பாவிகளும் அபலைகளும், குழந்தைகளும், பள்ளி சிறார்களும், முதியவர்களும் உலகெங்கும்.... எண்ணிக்கையிலடங்காதோர் எனும் அளவில் இன்றும் தொடர்கின்றது. என்று ஓயும் என்று கேட்காதோர் உண்டோ?? இப்பாவியின் கொடூரங்கள் அதுவும், அமைதிபோர் எனும் போர்வையில் என்றும் நிகழ்ந்ததும்,நிகழ்த்துவதும் கொலையாளியே அப்பாவிகளினை தாக்கியபின் அமைதியும் நிம்மதியும் இழந்தவர்களை நோக்கி நலமா என்று (நச்சுகலந்த) புன்முறுவலுடன் நலன் விசாரிப்பதற்கு ஒப்பானதன்றோ???. அ(ட)ப்பாவி அமைதி விரும்பியே உனக்கு சிறிதேனும் விவேகமும் மதியும் இருப்பின், இனியேனும் இப்போக்கை கைவிட்டு திருந்திடு, உனது பார்வையை பேணி உண்மையில் (உலக) நன்மை நாடும் அப்பாவியான பார்வையாக மாற்றப் பழகு. இதுவும் முயன்றால் எளிதே. இல்லையெனில் எண்ணற்ற பாவிகளின் கதியே உனக்கும் என்பதில் சிறிதும் சந்தேகமுண்டோ????



கருத்து எழுதுக :
தமிழ்
ஆங்கிலம்
சிறிதாக்குக | பெரிதாக்குக
 

busy

 
Add Site to FavoritesAdd Page to FavoritesShare This PageEmail This Page
Back to Top

இறைமறை

Random Quran Verses

6: 125 அல்லாஹ் யாருக்கு நேர்வழி காட்ட நாடுகிறானோ அவருடைய நெஞ்சை இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதற்காக விசாலமாக்குகிறான் - யாரை அவன் வழி கெடுக்க நாடுகிறானோ, அவருடைய நெஞ்சை, வானத்தில் ஏறுபவன் நெஞ்சைப் போல் இறுகிச் சுருங்கும்படிச் செய்கிறான்...

ஆக்கங்களை அனுப்ப...

புதிய கருத்துக்கள்

imran kahn.n : அல்ஹம்துலில்லாஹ்


peacetrain : எல்லாப்புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே.


Mohamed Rucknudeen : அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ். என்று இஸ்லா...


Mohamed Rucknudeen : அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ். மேலேயுள்ள க...


mohamed : அல்லாஹ அக்பர்.......


kamal : மின் அஞ்ஜஅல் அனுபினென் திரும்ப வந்துவிட்டது.


ABDUL KALAM.M : இன்ஷாஅல்லாஹ் அவள் முழு குர்ஆனையும் இ...


NAINAR MOHAMED.M(KHALEEL) : டாக்டர் முஹம்மட்த் அலி மிக சிரப்பான கட்டுரை தந்து இருக்கின்ரார் பாரட்டுக்கல்


hussain ali : இதனை மக்கள் எந்த அளவுக்குப் புரிந்து...


sheik : 'தேர்ந்தெடுக்கப்படும் நூல், சென்னை ர...


"கவியன்பன்" கலாம், அதிராம்பட்டினம் : முஹம்மத் அலி அவர்களின் சமுதாய அக்கறை...


Mohamed Abubacker Sidique : அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்). அன்பு சகோத...


பிறைநதிபுரத்தான் : மகளிர்க்கான இட ஒதுக்கீட்டில் முஸ்லி...


சஃபி : Godhra “witness” escapes to tell his story Vidya Subrahmaniam Husain Mulla says he was not in ...


சஃபி : ஆஸ்திரேலியாவில் இஸ்லாமிய வங்கி தொட...


ர. சிராஜ் முஹம்மது : அஸ்ஸலாமு அலைக்கும் அழகிய தொடர். நம் ...


abdul basith : ‘ஹயாத்து முஹம்மத்’ நூலையே தமிழாக்கம் செய்யலாமா?


அஹமத் .'.பைசல் : அதிகமான இஸ்லாமிய ஆக்கங்கள் படிப்பதற...



You are here  : முகப்பு செய்திகள் உலக செய்திகள் போர் வெறியன் பட்டத்திற்காக வருத்தப் படும் புஷ்!