சத்தியமார்க்கம்.காம்

தெளிவான தீவிரவாதி...! print Email
ஏடு-இட்டோர்-இயல் - தலையங்கம்
புதன், 11 ஜூன் 2008 10:42

தெளிவான தீவிரவாதி...!இருபதாம் நூற்றாண்டிற்கு மேற்குலகம் கண்டு பிடித்தளித்து, விசித்திரமாகத் தமிழ்ப் படுத்தப் பட்ட சொற்கள்தாம் Terrorism/Terrorist முறையே தீவிரவாதம்/தீவிரவாதி!
 
தேர்தலில் "தீவிர"ப் பிரச்சாரம் செய்பவர், அரசியல்வாதி.
 
என்கவுண்டரில் கொல்லப் பட்ட வீரப்பனை இரு மாமாங்கங்களாகத் "தீவிர"மாகத் தேடியவர்கள், காவல் துறையினர்.
 
நடிக-நடிகையரின் வீட்டில் கருப்புப் பணத்தைத் "தீவிர" வேட்டையாடுபவர்கள், வருமான வரிச் சோதனையாளர்கள்.
 
அமெரிக்காவுடனான அணு ஒப்பந்தத்தை நிறைவேற்றத் "தீவிர" முயற்சியில், மத்திய அரசு.
 
Terrorism, Terrorist
ஆகிய ஆங்கிலச் சொற்களை முறையே தீவிரவாதம், தீவிரவாதி என்று தமிழ்ப் படுத்தினால் மேற்காணும் அரசியல்வாதி, காவல்துறையினர், வருமான வரிச் சோதனையாளர்கள், மத்திய அரசு மட்டுமின்றித் தற்போது தமிழகத்தில் "தீவிர"மாகி விட்ட பருவமழையும் தீவிரவாதிப் பட்டியலில் இடம் பெற்று விடும்.

 

Terrorism என்ற ஆங்கிலச் சொல்லுக்கு, 'பயங்கர ஆட்சிமுறை', 'பயங்கரக் கொள்கை (இயக்கம்)', 'அச்சுறுத்திப் பணிய வைத்தல்' ஆகிய தமிழ்ப் பொருள்களும் Terrorist என்ற ஆங்கிலச் சொல்லுக்கு, 'பயங்கரவாதி', 'வன்முறைப் புரட்சிக்காரன்', 'அச்சுறுத்தி ஆள்பவன்' ஆகிய பொருள்களும் அகராதியில் காணப் படுகின்றன.

ஆனால், தமிழில் வெளிவரும் அனைத்து இதழ்களும் Terroristஐத் தீவிரவாதி என்று தமிழ்ப் படுத்தி,  "ஈடுபடும் காரியத்தில் தெளிவுடனும் உறுதியுடனும் செயல்படுபவன்" என்ற அகராதி பொருளைப் அர்த்தமற்றதாக்கி, "ஆயுதங்களால் மக்களை அநியாயமாகக் கொல்பவன்" என்ற ஒரே பொருள் சார்ந்த அச்சத்தை மக்களின் மனதில் விதைத்து விட்டன.

இந்தத் 'தீவிரவாதி' என்ற பூச்சாண்டியைக் காட்டியே நாட்டில்-உலகில் "தெளிவான தீவிரவாதிகள்" செய்து முடித்துள்ள, செய்ய எண்ணியுள்ள செயல்களும் திட்டங்களும் எழுத்தில் வடிக்க இயலாதவை.

யார் இந்தத் தெளிவான தீவிரவாதிகள்?.

தீவிரவாதிக்கான புதிய அர்த்தத்தின்படி, "தான் கருவறுக்க நினைப்பவர்களைப் பூண்டோடு அழிப்பதற்கான அனைத்து வேலைகளையும் முறையாகத் திட்டமிட்டு இறுதிவரை அதனைச் செயல்படுத்துவதற்கான எல்லா வேலைகளையும் செய்பவன்"ஐத் தமிழிதழியலின் சம்பிராதயத்தைப் பின்பற்றி, "தெளிவான தீவிரவாதி" என்றே தற்காலிகமாகச் சொல்லி வைப்போம்.

அந்த வகையில் இன்று கண்முன் நிழலாடுபவர்கள் இருவரே. முதலாமவர், இருபதாம் நூற்றாண்டிற்குத் தீவிரவாதத்தைப் பரிசளித்த உலகத் தீவிரவாதி ஜார்ஜ் புஷ். இரண்டாமவர், இந்திய உச்சநீதிமன்றத்தாலேயே "நவீன நீரோ" எனப் புகழ்மாலை சூட்டப்பட்ட இந்தியாவின் ஒரே மாநில முதல்வர் நரேந்திர மோடி.

"
இஸ்லாமியத் தீவிரவாதம்" எனத் தீவிரவாதத்திற்கு இஸ்லாத்தை அடைமொழி கொடுத்த புஷ், இஸ்லாமிய மக்கள் நிறைந்து வாழும் ஆப்கான் மற்றும் ஈராக்கில் கொன்று குவித்த அப்பாவி முஸ்லிம்களின் எண்ணிகை மில்லியன்களைத் தாண்டும்

கடந்த சில தினங்களுக்கு முன்னர், இந்தியத் தலைநகரம் டில்லியில் நடந்த மத-அரசியல் தலைவர்களின் சர்வதேசத் தீவிரவாத எதிர்ப்பு மாநாட்டில் பங்கெடுத்த தலாய்லாமா, "இஸ்லாம் என்பது சமாதானத்தின் மார்க்கமாகும். அது ஒருபோதும் தீவிரவாதத்தை ஊக்குவித்ததில்லை. அப்படியிருக்கையில் தீவிரவாதத்திற்கு இஸ்லாமிய மார்க்கத்தை மட்டும் குறிவைப்பது வேதனைக்குரியதாகும். முஸ்லிம்கள் உலகில் சமாதானத்தை விரும்புபவர்களாவர். ஓர் உண்மையான முஸ்லிமிற்கு ஒரு போதும் தீவிரவாதி ஆக இயலாது" எனக் கூறினார்.

 

தலாய் லாமா கூறியதில், "அமைதியைப் போதிக்கும் / விரும்பும் இஸ்லாத்தை வாழ்க்கைத் திட்டமாக ஏற்றுக் கொண்ட முஸ்லிமால் தீவிரவாதியாக ஒருபோதும் இயலாது" என்ற சொற்கள் ஊன்றிக் கவனிக்கத்தக்கவை.

ஆனால் இவையெல்லாம் தெளிவான திட்டங்களுடன் அரசு இயந்திரங்களை உபயோகித்து தீவிரவாதத்தில் ஈடுபடும் புஷ் மற்றும் மோடி போன்ற தெளிவான தீவிரவாதிகளுக்கு மூளையில் ஏறப்போவதில்லை.
 
 
அந்த மாநாட்டிற்குப் பின்னர் டில்லி ஜுமா மஸ்ஜிதின் இமாம் புகாரி பேசியதில் சில வாசகங்களும் இங்கு கவனிக்கத்தக்கவை.
.


இன அழிப்பைத் திட்டமிட்டு நடத்தியத் தெளிவான தீவிரவாதி!"நரேந்திரமோடி குஜராத்தில் முதல்வராக இருக்கும்வரை அங்கு இன அழித்தொழிப்பு ஓயாது. இன்றுவரை தீவிரவாதி என்ற பெயரில் பல அப்பாவி இளைஞர்களை மோடி என்கவுண்டர் என்ற பெயரில் அழித்து வருகிறார். ஆனால் உண்மையான தீவிரவாதி மோடிதான்.

குஜராத் இன அழிப்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பது உறுதியாக்கப்பட வேண்டும். ஆனால் அது மோடி முதல்வராக இருக்கும்வரை நம்மால் எதிர்பார்க்க இயலாத ஒன்று. தங்களை அநியாயமாக அழிப்பவர்களுக்கு எதிராக ஏதாவது செய்ய வேண்டும் என்ற கோபமே பலரைத் தீவிரவாதத்தில் கொண்டு சேர்க்கின்றது.

தன் சொந்தச் சகோதர-சகோதரிகள், பெற்றோர், பச்சிளம் பாலகர்கள் தன் கண் முன்னே வைத்து கொடுமைப் படுத்தப்பட்டும் மானபங்கப் படுத்தப்பட்டும் கொல்லப்படும்போது தடுக்க வேண்டிய காவல்துறையே தீவிரவாதிகளோடு கைகோர்த்துக் கொண்டு நிற்பதைப் பார்க்கும் ஒருவன் - இறுதியாக நீதிமன்றக் கதவுகளைத் தட்டி, அங்கும் எவ்வித நீதியும் கிடைக்காமல் போனால் அவன் என்ன தான் செய்வான்ர்?. யாருக்காக வாழ வேண்டுமோ அவர்கள் அனைவரும் தன் கண் முன்னால் அநியாயமாகக் கொலையுண்ட பின்னர், தனக்கு நீதியும் மறுக்கப் பட்ட அத்தகைய நிலையில் அவன் தன் உயிரை ஒரு பொருட்டாக மதிக்காமல் தீவிரவாதச் செயல்களின் பக்கம் திரும்பாமல் இருந்தாலே அது அற்புதமாகும்.

கொடுமைப் படுத்தப்பட்டவர்களுக்கு நீதி உறுதி செய்யப்பட்டால் மட்டுமே தீவிரவாதத்தை ஒழிக்க இயலும்" என இமாம் புகாரி கூறினார்.

இமாம் புகாரியின் கருத்தை நாம் இங்கு எடுத்தெழுதுவதற்கு முக்கிய காரணம் ஒன்று உண்டு.

கடந்த பாராளுமன்றத் தேர்தல்களில் தனது தோழர் வாஜ்பாயின் வெற்றிக்காக பாஜகவுக்கு ஓட்டு கேட்டவர்தான் இவர். முஸ்லிம் சமுதாயத்தின் மீது அக்கறை கொண்ட எவனும் இந்தியத் தீவிரவாதத்தின் ஊற்றுக்கண் ஆர்.எஸ்.எஸ்ஸைத் தலைமையாகக் கொண்ட பாஜகவிற்காக ஓட்டு கேட்க மாட்டான் என்பது திண்ணம்.

அப்படியிருக்க பாஜக அனுதாபியான இவர், அதே பாஜகவின் மாநில முதல்வர் மோடியினைக் குறித்து இவ்வாறு கூறியிருக்கின்றார் எனில் அது கவனிக்கப்பட வேண்டிய விஷயமேயாகும்.

தனது தலைமைபீடம் பயிற்றுவித்த, "முஸ்லிம்களை அடியோடு அழித்தல்" என்ற அடிப்படை அஜண்டாவை அப்படியே உள்வாங்கி, துவக்கம் முதல் மிகச் சரியாகத் திட்டமிட்டு அதனை குஜராத்தில் நடைமுறைப் படுத்துபவர்தான் மோடி.

அதற்காகத் தனது இன மக்களைக்கூட காவுகொடுக்கத் தயாரானவன் தெளிவான தீவிரவாதியல்லாமல் வேறென்ன?

தன் பதவிக்காகத் தன் மக்களையே எரித்த நவீன நீரோ!உலகில் இஸ்லாமியர்களின் தலைமீது தீவிரவாதச் சுமையைத் தூக்கி வைத்து, அவர்களை அழிக்கத் தன் சொந்த நாட்டு மக்களையே காவு கொடுக்கும், உலகத்திலேயே தெளிவான தீவிரவாதியான புஷ்ஷை அடியொற்றி, குஜராத் முஸ்லிம்களை அழிக்கத் தன் இன மக்களான "கரசேவகர்களையே ரயிலில் வைத்துப் பூண்டோடு எரித்த" மோடி, தொடர்ந்த முஸ்லிம் மக்களின் இன அழிப்பிற்காகப் பல மாதங்களுக்கு முன்னரே தயாராகி இருந்தது இன்று வெளிக்கொணரப் பட்டுள்ளது.

தான் காக்கவேண்டியப் பயிரையே மேய்ந்த வேலி!குஜராத் முதல்வராக மோடி பதவி ஏற்றதிலிருந்து இதுவரை போலி என்கவுண்டர் மூலம் காவல்துறையால் சுட்டுத் தள்ளப் பட்ட - சொஹ்ரப்தீன் தம்பதியினர் உட்பட - முஸ்லிம்களின் எண்ணிக்கை ஐம்பதை நெருங்குகிறது. படுகொலை செய்யப் பட்ட அனைவர் மீதும் "மோடியைக் கொல்லச் சதி செய்தார்கள்" என்ற ஒரேயொரு போலியான குற்றச்சாட்டு சுமத்தப் பட்டது. நாட்டுத் துப்பாக்கிகள் 'வைத்து' எடுக்கப் பட்டன. ஆனால், நேர்மையான சில பத்திரிகைகளாலும் நல்ல மனம் படைத்த நடுநிலையாளர் சிலராலும் உண்மை வெளிச்சத்துக்குக் கொண்டு வரப் பட்டது.  போலி என்கவுண்டர்கள் மூலம் முஸ்லிம்களைச் சுட்டுத் தள்ளிய குற்றத்துக்காக மூன்று IPS கொலைகார அதிகாரிகள் கைது செய்யப் பட்ட செய்தி, நாட்டையே ஓர் உலுக்கு உலுக்கி எடுத்தது. பள்ளிப் படிப்பைப் படிப்பதற்குக்கூட வசதியில்லாமல் முஸ்லிம்கள் போட்ட பிச்சையில் படித்தவனும் பதின்மூன்று முஸ்லிம்களைப் போலி என்கவுண்டரில் கொன்றவனுமான டி.பி. வன்சாரா என்ற அயோக்கியக் கொலைகாரன் IPS-க்கு 150 கோடி வரை சொத்துகள் பரிசளிக்கப் பட்டுள்ளன.

 

கருவறுக்கப்பட்டது போக, அனைத்தையும் இழந்து சொந்த மண்ணில் அகதி முகாம்களில், அடிமனதில் அடங்காத பீதியுடன் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கும் முஸ்லிம்களுக்குத் தினசரி வாழ்வாதார உரிமைகளைக்கூட கொடுக்காமல் மறுத்து வருவது மோடியின் திட்டத்தின் மற்றொரு கட்டத்தைச் செயல்படுத்துவதன் ஒரு பாகமே.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்காமல் தடுப்பதும் அதன் மற்றொரு கட்டம்தான். இதனைத் தான் இமாம் புகாரி அடிகோடிட்டுள்ளார்.

இதோ இன்று தனது நாட்டில் நடைமுறைபடுத்திய அதே திட்டத்தைக் கர்நாடகத்திலும் "குஜராத் மாடல் பின்பற்றப்படும்" எனத் தனது மற்றொரு சக சங்கத்தோழனான எடியூரப்பாவிற்கு ஆலோசனை வழங்கி இருக்கிறார் மோடி.

இந்தியா முழுவதும் ஆர்.எஸ்.எஸ் வகுத்தளித்த "முஸ்லிம் இன அழிப்பை"த் திட்டமிட்டு நடைமுறைபடுத்த முயலும் மோடியை இந்தியாவின் நம்பர் ஒன் தெளிவான தீவிரவாதி என்று தாராளமாகக் கூறலாம்.

"
கத்தி எடுத்தவன் கத்தியால் சாவான்" என்ற உவமைச் சொலவடையை உண்மைப் படுத்துவதுபோல் பெரும்பாலும் தீவிரவாதிகளுக்கு இறுதி முடிவு என்பது "என்கவுண்டர்" போன்று ஏதாவது விரும்பத்தகாத துர்முடிவாகவே இருக்கும்.

இன்று உலகிலும் இந்தியாவிலும் தெளிவான தீவிரவாதிகளாக வலம் வரும் புஷ் மற்றும் மோடி தீவிரவாதிகளின் முடிவு...?

இவர்களால் பாதிக்கப்பட்டு இன்றும் நீதி மறுக்கப்பட்டு மனதில் அடங்காக் குமுறலுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களுக்கு அவர்களுக்கான நீதி கிடைப்பதைப் பொறுத்தே இவ்விருவரின் முடிவும் அமையும்.

இந்தத் தெளிவான தீவிரவாதிகளால் அநியாயத்திற்குள்ளாக்கப்பட்டு, மறுக்கப்பட்ட நீதியுடன் உலாவரும் எண்ணிலடங்கா அப்பாவி மக்களை, இவர்களைப் போன்றவர்களுக்கு எதிரான மற்றொரு தீவிரவாதக் கூட்டமாக மாற்றாமல் இருப்பதற்கான கடமை இவ்வுலகில் நீதிமன்றங்களுக்கு மட்டுமே உண்டு.

 

Trackback(0)
கருத்துக்கள் (2)add comment
0
அதி. அழகு:
கூடுதல் விபரங்கள்: குஜராத் மாநிலத் தலைநகர் அகமதாபாத்தின் புறநகர் பகுதியில், நவம்பர் 26, 2005 அன்று சோராபுதீன் ஷேக் என்பவர் குஜராத் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். ''லஷ்கர்இதொய்பா என்ற தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த சோராபுதீன், முதல்வர் நரேந்திர மோடியைக் கொல்லும் நோக்கத்தோடு குஜராத்திற்கு வந்தபொழுது, போலீசாரோடு நடந்த மோதலில் சுட்டுக் கொல்லப்பட்டதாக'' குஜராத் போலீசு துறையைச் சேர்ந்த தீவிரவாத எதிர்ப்பு படை அதிகாரிகள் அறிவித்தனர். ''சோராபுதீன் சுட்டுக் கொல்லப்பட்டது பற்றியும்; அவரது மனைவி கவுசர்பீ காணாமல் போனது பற்றியும் மையப் புலனாய்வுத் துறை விசாரிக்க வேண்டும்'' எனக் கோரி, சோராபுதீனின் சகோதரர் ருபாபுதீன், உச்சநீதி மன்றத்திற்குக் கடிதமொன்று எழுதினார். அக்கடிதத்தைப் பொதுநல வழக்காக எடுத்துக் கொண்ட உச்சநீதி மன்றம், இம்மோதல் கொலையைப் பற்றி விசாரிக்குமாறு குஜராத் அரசிற்கு உத்தரவிட்டது. இம்மோதலைப் புலனாய்வு செய்த கீதா ஜோஹ்ரி என்ற அதிகாரி, ''இது போலி மோதல் கொலையாக இருக்கலாம்'' என அறிக்கை அளித்தார். இப்பொழுது இந்த வழக்கில் திடீர் திருப்பமாக, ''சோராபுதீன் போலி மோதலில்தான் சுட்டுக் கொல்லப்பட்டார்; அவரது மனைவி கவுசர்பீயும் கொல்லப்பட்டு, அவரது சடலம் இரகசியமாக எரிக்கப்பட்டு விட்டதாக'' குஜராத் அரசே உச்சநீதி மன்றத்தில் ஒப்புக் கொண்டுள்ளது. இவ்வழக்கில் குற்றவாளிகளாகக் கருதப்படும் வன்சாரா, ராஜ்குமார் பாண்டியன், எம்.என். தினேஷ் ஆகிய மூன்று ஐ.பி.எஸ். அதிகாரிகளும்; ஆய்வாளர் என்.ஹெச்.தாபி, காவலர் சாந்தாராம் ஷர்மா; போலீசு கண்காணிப்பாளர் ராஜ்குமார் பாண்டியனின் தனி உதவியாளர் அஜய் பர்மர் உள்ளிட்டு ஆறு போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர். ''ஹைதராபாத் நகரில் இருந்து மகாராஷ்டிராவிற்குத் தனது மனைவி கவுசர்பீ, தனது நண்பர் துளசிராம் பிரஜாபதி ஆகியோரோடு பயணம் செய்து கொண்டிருந்த சோராபுதீன் வழி மறிக்கப்பட்டு, நவம்பர் 22, 2005 அன்று நள்ளிரவில் போலீசு கண்காணிப்பாளர் ராஜ்குமார் பாண்டியன் தலைமையில் சென்ற குஜராத் மற்றும் ஆந்திர மாநில போலீசாரால் கடத்தப்பட்டது தொடங்கி, நவம்பர் 26, 2005 அன்று அகமதாபாத் நகரில் குஜராத் மாநில தீவிரவாத தடுப்புப் படையால் சோராபுதீன் சுட்டுக் கொல்லப்பட்டது வரை அனைத்தையும்'' போலி மோதல் கொலையில் பங்கு கொண்ட காவலர் அஜர் பர்மர் வாக்குமூலமாக அளித்திருக்கிறார். சோராபுதீன் கொல்லப்பட்ட பிறகு, அவரது மனைவி கவுசர்பீ, பா.ஜ.க.வின் அகமதாபாத் நகர கவுன்சிலர் சுரேந்திரா ஜிராவாலாவுக்குச் சொந்தமான பங்களாவில் இரண்டு நாட்கள் அடைத்து வைக்கப்பட்டு, நவ. 28, 2005 அன்று அதே பங்களாவில் கொல்லப்பட்டு, பிறகு அவரது சடலம், (இவ்வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஐ.பி.எஸ். அதிகாரி) வன்சாராவின் சொந்த கிராமமான இலோலுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அங்கு இரகசியமாக எரிக்கப்பட்டதை குஜராத் மாநில தீவிரவாத எதிர்ப்பு போலீசு படையைச் சேர்ந்த ஓட்டுநர் நாதுசிங் ஜடேஜா வாக்குமூலமாக அளித்திருக்கிறார். மேலும், கடத்தி வரப்பட்ட சோராபுதீன் கவுசர்பீ தம்பதியினரைத் தனியார் பண்ணை வீட்டில் சட்ட விரோதமாக அடைத்து வைத்திருப்பதற்கு உதவிய சதீஷ்பாய் ராம்ஜிபாய் ஷர்மா; கவுசர்பீயின் சடலத்தை எரிப்பதற்குத் தேவையான விறகினை போலீசுக்கு விற்ற பகவதி டிம்பர் மார்ட் என்ற நிறுவனத்தின் அதிபர்; கவுசர்பீயின் சடலம் எரிப்பதற்குக் கொண்டு செல்லப்பட்டபொழுது, சகதியில் சிக்கிக் கொண்ட வாகனத்தை மீட்பதற்கு போலீசாரால் அழைத்து வரப்பட்ட கிரேன் இயக்குநர் ஆகியோரும் கவுசர்பீயின் கொலை தொடர்பாகச் சாட்சியம் அளித்துள்ளனர். சோராபுதீன் போலி மோதலில் கொல்லப்பட்டதற்கு, கவுசர்பீ வலுவான சாட்சியமாக இருந்திருக்கிறார். குஜராத் போலீசார், இந்த வலுவான சாட்சியத்தைக் கலைப்பதற்காகவே, ''பணம் தருகிறோம்; பாகிஸ்தானுக்கு ஓடி விடு'' என கவுசர்பீயிடம் பேரம் நடத்தியுள்ளனர். அதற்கு கவுசர்பீ ஒத்துக் கொள்ளாததால்தான், அவர் பாலியல் பலாத்காரப்படுத்தப்பட்டு, அதற்குப் பின் கொல்லப்பட்டிருக்கக் கூடும் எனக் கூறப்படுகிறது. இம்மோதல் கொலையின் மற்றொரு சாட்சியான துளசிராம் பிரஜாபதி, இராசஸ்தான் மற்றும் குஜராத் மாநிலங்களைச் சேர்ந்த ரோந்து போலீசாரால், டிச.26, 2006 அன்று குஜராத் மாநிலத்தின் எல்லைப்புற மாவட்டமான பனசகந்தாவில் உள்ள அம்பாஜி நகரில் நடந்த ''மோதலில்'' சுட்டுக் கொல்லப்பட்டார். சோராபுதீனைச் சுட்டுக் கொன்ற போலீசு படைக்குத் தலைமை தாங்கிய வன்சாரா, குஜராத் மாநில எல்லைப்புற போலீசு பிரிவின் போலீசு இயக்குநராகப் பதவியேற்றுக் கொண்ட இரண்டாவது வாரத்திலேயே, பிரஜாபதி அம்மாநிலத்தின் எல்லைப் பகுதியில் நடந்த 'மோதலில்' சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார் என்பதும்; இம்மோதல் சோராபுதீன் கொலை பற்றிய விசாரணை ஆரம்பித்த ஒரு சில மாதங்களிலேயே நடந்திருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும், சோராபுதீன் கொலையின் மற்றொரு சாட்சியான சில்வஸ்டர் டானியல் கிறிஸ்டியன், பிரஜாபதி போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட பிறகு ''காணாமல்'' போய்விட்டதாகக் கூறப்படுகிறது. சோராபுதீன் கொலை தொடர்பான சாட்சியங்களை ஐ.பி.எஸ். அதிகாரி வன்சாரா ஒருபுறம் அழித்துக் கொண்டிருந்த பொழுது, இன்னொரு புறம் குஜராத் அரசின் உள்துறை அமைச்சகம் கொலை தொடர்பான விசாரணையைத் தாமதப்படுத்துவதற்கு எல்லா உள்ளடி வேலைகளையும் செய்தது. உச்சநீதி மன்றம், இம்மோதல் கொலையை விசாரிக்குமாறு சனவரி 21,2006 அன்று குஜராத் அரசிற்கு உத்தரவிட்டது. இதனையடுத்து போலீசு உயர் அதிகாரிகளின் கூட்டத்தை நடத்திய உள்துறை துணை அமைச்சர் அமித் ஷா, ''கவுசர்பீ, சோராபுதீனின் சட்டபூர்வ மனைவி கிடையாது; கவுசர்பீ பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர் என்பதால், பாகிஸ்தானுக்குத் தப்பியோடியிருக்கலாம்'' என அண்டப்புளுகை அவிழ்த்து விட்டார். உச்சநீதி மன்ற உத்தரவு வந்து ஆறு மாதங்கள் கழித்துதான், இம்மோதல் கொலை பற்றிய விசாரணை அதிகாரியாக கீதா ஜோஹ்ரி நியமிக்கப்பட்டார். ''இது போலி மோதல் படுகொலை'' என அவர் அளித்த முதல் அறிக்கையை, உச்சநீதி மன்றத்திற்கு உடனடியாக அனுப்பி வைக்காமல், குஜராத் அரசு காலதாமதப்படுத்தியது. விசாரணை தொடர்பாக ஹைதராபாத் செல்ல திட்டமிட்டிருந்த கீதா ஜோஹ்ரிக்கு, அந்நகருக்குச் செல்லும் அனுமதி மறுக்கப்பட்டது. வன்சாரா, ராஜ்குமார் பாண்டியன், தினேஷ் ஆகிய மூன்று ஐ.பி.எஸ். அதிகாரிகளைக் குற்றவாளிகளென கீதா ஜோஹ்ரி முடிவு செய்து அறிக்கை கொடுத்த பிறகு, அக்குற்றவாளிகள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யக்கூடாது என கீதா ஜோஹ்ரிக்கு வாய்மொழி உத்தரவு இடப்பட்டது. இறுதியாக, விசாரணையை தாமதப்படுத்தும் நோக்கத்துடன், கீதா ஜோஹ்ரிக்குப் பதிலாக அவரின் ''எதிரி'' ரஜ்னிஷ் ராய் என்பவர் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாக, ரஜ்னிஷ் ராய் அம்மூன்று அதிகாரிகளைக் கைது செய்ததோடு, அவர்களை உண்மை அறியும் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப் போவதாக அறிவித்தார். இதே சமயத்தில், ''கீதா ஜோஹ்ரி ஏன் மாற்றப்பட்டார்?'' என உச்சநீதி மன்றம் கேட்டதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட குஜராத் அரசு, ரஜ்னிஷ் ராயைத் தூக்கியடித்துவிட்டு, கீதா ஜோஹ்ரியை மீண்டும் விசாரணை அதிகாரியாக நியமித்தது. எனினும், கீதா ஜோஹ்ரி தன்னிச்சையாகப் செயல்படுவதைத் தடுப்பதற்காக, அவருக்குச் சில கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது, குஜராத் அரசு. குஜராத் மாநில காங்கிரசு கமிட்டியின் தலைவர் பரத்சிங் சோலங்கி, ''ராசஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த மார்பில் கற்கள் தயாரிக்கும் நிறுவனங்களின் முதலாளிகளைப் பணம் கேட்டு மிரட்டி வந்த சோராபுதீனைப் போட்டுத் தள்ள அவர்கள் விரும்பியதாகவும்; அதற்கான பேரம், பா.ஜ.க. தலைவர்கள் மூலம் வன்சாராவிடம் நடந்ததாகவும்; இதற்காக 60 இலட்ச ரூபாய் பணம் கைமாறியதாகவும்'' குற்றஞ் சுமத்தியிருக்கிறார். குஜராத் மாநில போலீசு இந்தப் பின்னணி பற்றி விசாரணை நடத்தவேயில்லை. ··· இது போன்ற மர்மம் நிறைந்த ''தேச பக்த கொலைகள்'' இந்து ராஷ்டிரமான குஜராத்தில் இரண்டு மாதத்திற்கு ஒன்று நடப்பதாகவும்; நரேந்திர மோடிக்கு மிகவும் நெருக்கமான போலீசு அதிகாரியான வன்சாரா 9 மோதல் கொலைகளை நடத்தி, 15 பேரைக் கொன்றிருப்பதாகவும் கூறப்படுகிறது. ஐந்து ஆண்டுகளுக்கு முன், அக். 22, 2002 அன்று சமீர்கான் என்ற முசுலீம் இளைஞர் குஜராத் மாநில குற்றப் பிரிவு போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். வன்சாரா தலைமையில் நடந்த இம்மோதல் படுகொலை, மோடியின் அரசியல் பயணத்தில் முக்கியமான ஒன்று. ''சமீர்கான் ஜெய்ஷ்இமுகம்மது என்ற பாக். தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவன்; பாக்.இல் பயங்கரவாதப் பயிற்சி பெற்றவன்; நரேந்திர மோடியைக் கொல்லவே குஜராத்திற்குள் நுழைந்திருக்கிறான்'' என வன்சாரா சமீர்கானைச் சுட்டுக் கொன்ற பிறகு பத்திரிகைகளுக்கு பேட்டியளித்தார். அப்பொழுது, குஜராத் மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரம் முழு வீச்சில் நடந்து கொண்டு இருந்தது. நரேந்திர மோடி, ''குஜராத் பெருமையைக் காப்பாற்ற உழைக்கும் என்னை முசுலீம் ஜிஹாதிகள் குறி வைக்கிறார்கள்'' எனக் கூறி, இம்மோதலைத் தனது அரசியல் செல்வாக்கை உயர்த்திக் கொள்ளப் பயன்படுத்திக் கொண்டார். இம்மோதல் படுகொலையை விசாரித்த குஜராத் உயர்நீதி மன்றம், ''சமீர்கான் எந்தவொரு தீவிரவாத அமைப்பையும் சார்ந்தவரோ, பாக்.இல் தீவிரவாதப் பயிற்சி பெற்றவரோ கிடையாது'' எனத் தீர்ப்பளித்தது. இப்படுகொலையை மோதலாகக் காட்ட முதலமைச்சர் அலுவலகமும், போலீசு அதிகாரிகளும் இணைந்து பல மோசடிகள் நடத்தியிருப்பதை, ஐ.கே.யாதவ், தீர்த் ராஜ் என்ற இரு உயர் போலீசு அதிகாரிகளே தங்களின் விசாரணையில் கண்டறிந்து அம்பலப்படுத்தியுள்ளனர். ஜூன் 15, 2004 அன்று அகமதாபாத் நகரின் நுழைவாயில் பகுதியில், மகாராஷ்டிராவைச் சேர்ந்த கல்லூரி மாணவி இஷ்ரத் ஜஹன் உள்ளிட்டு நான்கு முசுலீம்கள் குஜராத் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதுவும், மோடியின் உயிரை ''தீவிரவாதிகளிடமிருந்து'' காப்பாற்ற, வன்சாரா நடத்திய மோதல்தான். இம்மோதல் கொலை பற்றி தேசிய மனித உரிமைக் கமிசன் குஜராத் போலீசாருக்கு எழுதிய கடிதத்தில், ''இம்மோதல் பற்றி போலீசார் விவரித்துள்ளதில் கடுகளவுகூட அடிப்படை ஆதாரம் இல்லை'' எனக் குறிப்பிட்டுள்ளது. பி.ஜி. வர்கீஸ் என்ற பத்திரிகையாளர், ''குஜராத்தில் 2003க்கும் 2006ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் நடந்த 21 மோதல் படுகொலை பற்றி முறையாக விசாரணை நடத்தக் கோரி உச்சநீதி மன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருக்கிறார். ''இந்த 21 மோதல் படுகொலைகளில் ஒன்றில் கூடப் பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டதாகத் தெரியவில்லை. சுட்டுக் கொல்லப்பட்டவர்களில் ஒருவர் கூடக் கைது செய்யப்பட்டவுடன் நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்படவில்லை'' என அம்மனுவில் குறிப்பிட்டுள்ளார். http://poarmurasu.blogspot.com/2008/01/blog-post_08.html
1

June 12, 2008 12:45
0
imran:
ok whatever you had written is good. but whats the use? we all know the gujarat pogram. we have how many Muslim MPs in parliment? how many MLAs in various state assemblies? even the president was a Muslim(?) at the time? how many lawyers are there in various high courts and in supreme courts? how many organisations are there, including tmmk, tntj, league? why don't a single muslim turn to help and protect jahira sheikh of best bakery case? it was only a Chritian lady Teesta Chedalwat who rendered a helping hand only to be betrayed by jahira sheikh in latter stage? think and ponder the Quran verses : 'Unless a Community tries-makes efforts to change itself Almighty ALLAH will not change them'
2

June 13, 2008 14:28

கருத்து எழுதுக :
தட்டச்சு மொழி மாற்ற crtl+g அழுத்துங்கள்.
சிறிதாக்குக | பெரிதாக்குக

busy
 

இறைமறை

இப்பக்கத்தை PDF வடிவில் சேமிக்க...

தேடுக...

Random Quran Verses

2:115 கிழக்கும், மேற்கும் அல்லாஹ்வுக்கே (சொந்தம்). நீங்கள் எந்தப் பக்கம் திரும்பினாலும் அங்கே அல்லாஹ்வின் முகம் இருக்கிறது. நிச்சயமாக அல்லாஹ் விசாலமானவன். எல்லாம் அறிந்தவன்.

English News

புதிய கருத்துகள்

kalibulla : very good and happy news go ahead,.


Ibrahim ulavi london : Assalamu alaikum, This is very happy news for every muslim . our brother CNM SALIM And brother Imran...


j.ameer ali : On our part, let all of us pray for his good health and long life service to our society. By J.Ameer...


Ansary : This is a great news to know. He is doing fine. This is a very good example to other District Collec...


y.m.anari : ஹிஜாப் பற்றி இந்தத் தளத்தினர் குரான்...


Jaffer : Masha Allah ...May allah bless him and guide him to strive in the straight path.


Karunakaran : Salute to Collector Ahmad... You are the REAL hero!


haneefm : رَبَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَن...


M Muhammad : Assalamu Alaikum Dear Brother J Ameer Ali KSA // Dear editor, would you please send the complete ad...


Li_Brothers : கணக்குகள் சரி பார்க்கப்படும் அந்த மற...


j.ameer ali, ksa : Dear editor, would you please send the complete address of that Elders' orphanage,Rajagiri to my e-...


j.ameer ali, ksa : May Almighty Allah show our society the right path of living. Is there no Imam and Jumma prayers in ...


சுலைமான் : புறம் ஒரு சமூகத் தீமை. கூர்மையான வரிக...


Noor Huq : Thank u for the information. Starting college like this is very neccessary for the women living ar...


faizal : masha allah.Its very useful


mohamed iqbal : அஸ்ஸலாமு அலைக்கும் வரஹமதுல்லாஹ், ம...



You are here  : முகப்பு தலையங்கம் தெளிவான தீவிரவாதி...!
Twitter
RSS
YouTube
English