| பயங்கரவாதத்துக்கு எதிராக இந்திய முஸ்லிம்கள் அமைப்பு! |
|
|
| ஏடு-இட்டோர்-இயல் - தலையங்கம் | |||
| வெள்ளி, 23 மே 2008 12:02 | |||
|
2002ஆம் ஆண்டு குஜராத் சபர்மதி எக்ஸ்பிரஸ் தொடர்வண்டியில் இராம பக்தர்களாக வந்த சங் பரிவார் தொண்டர்களையும் அப்பாவி இந்து மக்களையும் தீவைத்துக் கொளுத்திவிட்டு நிமிட நேரத்தில் அதனை 'முஸ்லிம் தீவிரவாத'மாகத் திசை திருப்பி, 3000க்கும் மேற்பட்ட முஸ்லிம்களைக் காவுகொண்ட மோடியும் அவனது கொலைவெறிக் கூட்டமும் இன்றுவரை வெகு சுதந்திரமாக பவனி வரும் நாடு, நம் நாடு.
கடந்த 2006ஆம் ஆண்டு மகாராஷ்டிர மாநிலம் நான்டட் நகரத்தில் சங்பரிவார் அமைப்பு உறுப்பினர் ஒருவரது வீட்டில் குண்டு தயாரித்துக் கொண்டிருந்தபோது சக்தி வாய்ந்த குண்டு வெடித்த நிகழ்வின்போது அங்கு முஸ்லிம்கள் அணியும் தொப்பிகளும் ஒட்டுத் தாடிகளும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டன. இது போன்ற நிகழ்வுகளால் பலமுறை ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட சங்பரிவார குழுக்களின் பயங்கரவாத முகம் அம்பலப்பட்டாலும் பயங்கரவாதத்தை முஸ்லிம்கள் மட்டும் ஒட்டு மொத்தக் குத்தகை எடுத்துக் கொண்டு செயல்படுவதாகக் காட்டுக் கூச்சல் போடும் பேச்சுரிமைச் சுதந்திரம் மிளிரும் நாடு, நம் நாடு. கடந்த 2007 ஜனவரி மாதம் 24ஆம் நாளிரவில் தென்காசி RSS அலுவலகத்திலும் பேருந்து நிலையத்திலும் நிறுத்தப் பட்டிருந்த ஆட்டோ ரிக்ஷாக்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. பேருந்து நிலையக் குண்டு வெடிப்பில் ஒரு வெற்றிலை வியாபாரி உள்பட இருவர் காயமடைந்தனர். இந்தக் குண்டு வெடிப்பில் தொடர்புடையவர்களைக் கைது செய்வதற்காகக் காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி, இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்த 3 பேரைக் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து வெடிக்காத குண்டு, டெட்டனேட்டர்கள் உள்ளிட்டப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன. என்றாலும், செய்வதையும் செய்துவிட்டு, "இந்தக் குண்டுவெடிப்புகளுக்கு முஸ்லிம் பயங்கரவாதிகளே காரணம்; அவர்களைக் கைது செய்ய வெண்டும்" என்று அறிக்கைகளை அள்ளி விடுவதற்கும் அவற்றைப் படித்துப் பார்க்காமலே பதிப்பதற்கும் பரபரப்புப் பத்திரிகைகள் நிறைந்த கருத்துச் சுதந்திரம் கொடி கட்டிப் பறக்கும் நாடு, நம் நாடு. கேரளத்திலிருந்து வெளியாகும் "தேஜஸ்" என்ற தினசரியில், "நாட்டை உலுக்கிக் கொண்டிருக்கும் வெடிகுண்டு சம்பவங்களுக்குப் பின்னால் முஸ்லிம்களை மோசமானவர்களாகவும் தேச விரோதிகளாகவும் சித்தரிக்க ஹிந்துத்துவ இயக்கங்கள் நடத்தும் சதிகளே" என்று பிரபல தலித் சிந்தனைவாதியும் "தலித் வாய்ஸ்" பத்திரிக்கையின் ஆசிரியருமான V.T இராஜசேகர் உரக்க உண்மையைப் போட்டுடைத்த போதிலும் பயங்கரவாதம், தீவிரவாதம் போன்ற இன்னபிற புண்ணாக்கு வாதங்களெல்லாம் இஸ்லாத்தின் பெயரால் முஸ்லிம்களின் கடமைகளாக நிறைவேற்றப் படுவதுபோல் உலகமுழுதும் உருவாக்கப்பட்டு வரும் மாயையை ஒழித்துக் கட்டுவதற்காகப் பல்வேறு முயற்சிகளை முஸ்லிம்கள் மேற்கொண்டு வருகின்றனர். அதிலொன்றாக, இந்திய முஸ்லிம் அறிஞர்களும் அனைத்திந்திய முஸ்லிம் தனியார் சட்டக் குழுவினரும் இணைந்து 'பயங்கரவாதத்துக்கு எதிரான இயக்கம்' Movement Against Terrorism (MAT) என்ற இயக்கத்தைத் தோற்றுவித்திருக்கின்றனர். "முஸ்லிம்களுக்குக் கல்வியூட்டும் கடமையோடு பயங்கரவாதச் செயற்பாடுகளுக்கு இஸ்லாத்தில் எள்ளளவும் இடமில்லை என்பதை ஊடகங்களுக்கும் பிறமதச் சகோதரர்களுக்கும் உரியவகையில் புரிய வைப்பதைக் கடமையாகக் கையிலெடுத்துள்ளோம்" என்று கூறுகிறார் ப.எ.இ.யின் ஒருங்கிணைப்பாளரும் அனைத்திந்திய முஸ்லிம் தனியார் சட்டக் குழுவின் செயற்குழு உறுப்பினருமான காலித் ரஷீத் ஃப்ராங்கி மஹல்லீ. "அண்மையில் நடைபெற்ற ஜெய்ப்பூர் குண்டு வெடிப்புக்குப் பொறுப்பேற்றுக் கொள்வதாக இந்திய முஜாஹிதீன் என்ற பெயரில் மின்னஞ்சல் அனுப்பியவரையும் அதைப்போன்ற பெயர் தாங்கிகளையும் எதிர்த்துப் போராடி முறியடிப்போம்" என்றும் அவர் சூளுரைத்தார். மேலும், கடந்த ஃபிப்ரவரி 2ஆம் நாள் லக்நவ்வில் இந்திய இஸ்லாமிய அறிஞர்கள் குழுமிய மாநாட்டில் இந்தத் தீர்மானம் எடுக்கப் பட்டு, இப்போது செயலுக்கு வருவதாகவும் IANS க்கு அளித்த தொலைபேசிப் பேட்டியின்போது ஆயிஷ்பக் ஈத்காவின் துணை இமாமான மஹல்லீ கூறினார். "நாட்டில் நிகழ்த்தப் படும் பயங்கரவாதச் செயல்கள் அனைத்தையும் ஒட்டு மொத்தமாக முஸ்லிம்கள் தலையில் சுமத்தி வேடிக்கை பார்ப்பது வேதனைக்குரியதாகும்" என்று கூறிய மஹல்லீ, நாங்கள் தொடங்கியிருக்கும் இந்த 'பயங்கரவாதத்துக்கு எதிரான இயக்கம்' பற்றி, ஒவ்வொரு பள்ளியின் வெள்ளிமேடைகளிலும் அறிமுகப் படுத்தி, எங்கள் சமுதாயத்தவரைத் தவறான வழிகாட்டுதலின் பக்கம் செல்ல விடாது தடுத்து, வெற்றியின் இலக்கை நிச்சயம் அடைவோம்" என்று உறுதியோடு கூறும் மஹல்லீயின் அவாவும் இலட்சியமும்தான் கோடானு கோடி இந்திய முஸ்லிம்களின் அவாவும் இலட்சியமுமாகும். நாட்டின் அமைதியே நமது அவா!
பகிர்ந்து கொள்க
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (4)
![]()
அஸ்ஸலாமு அலைக்கும்
அன்பு சகோதரர்களே
முஸ்லிம்களுக்கும் இஸ்லாத்திற்கும் எதிராக களங்கம் கற்பிக்கும் வகையில் உலக அளவில் மீடியாக்கள் செயல் படும் போதும், முஸ்லிம் பெயர் தாங்கிகள் செய்த அல்லது செய்யாமல் சந்தேகத்தின் பேரில் பிடிபட்ட நிலையிலும் கூட அது செய்தியாக்கப் பட்டு ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாயமும் தவறாக சித்தரிக்கப் படும் நிலையிலும்... முஸ்லிம்கள் ஒரு முக்கியமான காரியத்தை செய்ய வேண்டியுள்ளதாக நான் கருதுகிறேன்.
1) முஸ்லிம்கள் சத்திய இஸ்லாத்தின் எல்லா கட்டளைகளயும், எல்லாவகையிலும் முழுமையாக செயல்படுத்தக் கூடிய முஸ்லிம்களாக மாற, மாற்றிட முயல வேண்டும்.
2) இதன் மூலம் தனக்கும் தனது குடும்பத்திற்கும் மட்டுமின்றி தன்னை சுற்றியுள்ள சமுதாயத்திற்கும் நலன் விளையும் என்பதில் உறுதியான நம்பிக்கை யுடையவர்களாக, செயல் ஆற்ற வேண்டும் அதன் மூலம் அனைவருக்கும் நிதர்சனமாக இஸ்லாத்தின் முஸ்லிம்களாக வாழ்வதின் நன்மையை எடுத்துரைக்க வேண்டும்.
3) அதே போல் முஸ்லிம்கள் இஸ்லாத்தினை பின் பற்றுவதன் தனி நபர்களாக அல்லது இணைந்த குழுவாக சமுதாயத்திற்கு செய்த சாதனைகள், செய்து வரும் நற்பணிகள் தொண்டுகள் போன்றதை செய்தியாக்க பரவலாக இயன்ற வகையில் சிற்றேடுகள் முதல் நாளிதழ்கள் மாத இதழ்கள், நூலகங்கள், ஊடகங்கள், குறுந்தகடுகள், இணையம் என்று எவ்வித சார்புமின்றி அறிமுகப்படுத்திடவும் எடுத்துரைக்கவும் முன் வர வேண்டும்.
4) இஸ்லாம் பற்றிய தவறான கருத்துக்கள் முஸ்லிம்கள் பற்றிய தவறான சிந்தனையை எழுத்தாலும் சொல்லாலும் முக்கியமாக செயலாலும் அனைத்துலகிற்கும் எத்திவைக்க ஒவ்வொரு முஸ்லிமும் முனைய வேண்டும்.
5) இவ்வகையில் ஒருமித்த குரலாக முஸ்லிம்கள் தமக்கு கற்பிக்கப்படும் அவப்பெயரை களைய ஒன்றிணைந்தோ அல்லது ஒன்றிணையும் காலம் வரை (தமக்குள் உள்ள கருத்துவேறுபாடுகளை பெரிது படுத்தி ஒருவரை ஒருவர் சாடிட இயன்ற வகையில் எல்லாம் தமது ஆற்றலையும் நேரத்தையும் வீணடிப்பதை தவிர்த்து) முஸ்லிம்களின் நலன் நாடி முஸ்லிமகளின் முஸ்லிமாக வழ்வதின் உண்மையான தோற்றத்தையும் நன்மையையும் உலகிற்கு உணர்த்திட முன் வர வேண்டும்...
அதற்கு அல்லாஹ்வின் உதவியை நாடி அல்லாஹ்விடம் இறைஞ்சிட வேண்டும் என்று கூறி அல்லாஹ்விடம் இறைஞ்சிடும்...
உங்கள் அன்பு சகோதரன்.
மு முஹம்மத்.
1
May 24, 2008 05:53
ஐயா பிரபு,
கருத்த மொழியால சொல்லலாம்.
மொழிய கருத்தால சொல்ல முடியுங்ளா?
மொழிய நடையாக்கலாம்.
நடைய மொழியாக்க முடியுங்ளா?
படிக்கும்போது ரசிக்கலாம்.
ரசிக்கும்போது படிக்க முடியுங்ளா?
3
May 29, 2008 06:25
இருக்காதா பின்னே
நாங்கள் ( முஸ்லிம்கள் தீவிர வாதிகள் ) என்று சொல்லும் கருத்தை ரசிப்பீர்கள். அப்போது மொழி நடையோ மொழி வேறுபாடோ புலப்படாது. ஒன்று மட்டும் நிச்சயம் நாங்கள் ( முஸ்லிம்கள் ) வதைப்பட்டு நிற்கையிலும் கூட எங்களுக்கு நாங்களே ஆதரவு எங்கள் இறைவனே எங்கள் காவலன்.
ரசித்துக் கொள்ளுங்கள் எத்தனைக் காலத்துக்கு ரசிப்பீர்கள்..? ஒரு ஆயுள் முடியுமட்டும் தான் உங்கள் ரசனை எல்லாம். மறுமையில் எல்லாம் தலை கீழாக மாறும் அப்போது ரசிப்பவர் எங்களை( முஸ்லிம்கள் )த்தவிர வேறெவருக்கும் அருகதை இருக்காது இது சத்தியம்.
ஹாரூன் ரஷீத்
4
October 21, 2008 08:26
கருத்து எழுதுக :
|
|
சஃபி :
அன்பான ஷாலினி,
உங்களுக்கு அண்மையிலு... |
|
Bharat :
இந்தியாவை துண்டாட, காஷ்மீரத்தை பிரிக... |
|
அ.அப்துல் ஹமீத் :
வெற்றீ பெற்ற்வர்களுக்கு வாழ்த்துக்... |
|
Satyamargam.com :
Dear Shalini,
Thanks for visiting and your valuable comment.
May Almighty in His Infinite Mercy and... |
|
Shalini :
Hai, I am Shalini. I am hindu. But i know all the details about allah.
I want to convert muslim. in ... |
|
vijay :
kudia sekaramaa varuvainga..........
..................by your friend
..........................vija... |
|
ANEES FATHIMA :
அஸ்ஸலாமு அலைக்கும் எல்லா பெண்ணும் அறிந்து கொள்ள வேண்டிய நல்ல குறிப்புக்கள் |
|
sarfdin :
அருள் முருகன் சகோதரா
முஸ்லிம்களில் ப... |
|
Naseema :
அறிவுப்போட்டிகளை பல தளங்கள் வெளியிட... |
|
ummu afsy :
salaamz,ALLHA has given eough freedom for woman,so may all muslims and non-muslim must support all m... |
|
MOHAMED RAFI :
RAFI,
THIS VERY INFROMATIVE |
|
A.JAHIR HUSSAIN.Sharjah UAE { ATHALAIYUR } :
அஸ்ஸலாமு அலைக்கும்...
புனித மிகு ரமலா... |