சத்தியமார்க்கம்.காம்

ஈர்ப்பு விதி செய்வோம்! print Email
ஏடு-இட்டோர்-இயல் - தலையங்கம்
ஞாயிறு, 18 மே 2008 10:34

ஐ ஏ எஸ்தமிழத்தில் வாழும் இந்துச் சமுதாய மக்களுடைய சாதிகளுள் 'நாடார்' என்பதொரு சாதியாகும். நாடார் சாதியினருக்கு 'பரம்பரை'த் தொழிலாக ஒரு காலத்தில் தென்னை-பனை மரங்களிலிருந்து கள் இறக்குவது 'ஒதுக்கப் பட்டிருந்தது'. பின்னர், தங்களுடைய நிலையை உணர்ந்தவர்களாகத் தங்கள் பரம்பரைத் தொழிலைக் கைவிட்ட நாடார்கள் பலர் சென்னை போன்ற நகரங்களுக்குச் சென்று கடைகளில் பணியாற்றியும் சொந்தமாகத் தொழில் செய்தும் பொருளாதார ரீதியில் ஓரளவு உயர்ந்தார்கள். எனினும், உயர்ந்த சாதியினர் என்று சொல்லிக் கொள்பவர்களால் ஒதுக்கப் பட்டவர்களாகக் கருதப் பட்ட நாடார் பெருமக்களுள், "சமூக ரீதியில் உயர்வு பெறுவது எப்படி?" என்று சிந்தித்தவர்கள் மிகச் சிலரே.

அவ்வாறு சிந்தித்தவர்களுள் ஒருவர்தாம் சக்திவேல் நாடார். பல்லாண்டுகளுக்கு முன்னர் இஸ்லாத்தின்பால் ஈர்ப்பு ஏற்பட்டு, முஸ்லிமாக மாறி, சமூக ரீதியான உயர்வு பெற்ற சாதிக் என்ற முன்னாள் சக்திவேல் நாடார், பல்லவி என்றழைத்துப் பெயரிட்ட தம் மகளையும் பர்சானா என்று மாற்றினார்.  அந்த மகள் பர்சானா, ஐ ஏ எஸ் தேர்வில் இந்திய அளவில் 30ஆவது தரம் பெற்றதோடு தமிழகத்தின் பெண் ஐ.ஏ.எஸ்-களில் முதலிடமும் பெற்றிருக்கிறார்.


"கலெக்டர் ஆக வேண்டும் என்பது எனது சிறுவயது ஆசை. ஒரு கலெக்டருக்கு சமுதாயத்தில் அளிக்கப்படும் மதிப்பும், மரியாதையுமே நானும் அந்த பதவிக்குச் செல்ல வேண்டும் என்ற ஆசையை ஏற்படுத்தியது" என்று கூறிய 'பர்சானா, ஐ.ஏ.எஸ்', சென்னை இராயபுரம் கெவின்ஸ் பள்ளியில் ஆரம்பப் படிப்பையும் ஆயிரம் விளக்கு சர்ச் பார்க் கான்வென்டில் மேல்நிலைப் படிப்பையும் முடித்தார். அதன்பின் ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் பி.காம். பட்டமும் தேனாம்பேட்டை எஸ்.ஐ.இ.டி. மகளிர் கல்லூரியில் எம்.காம். பட்டமும் பெற்றார்.


சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்த தொழிலதிபர் முகமது சாதிக்-பாத்திமா சாதிக் தம்பதியரின் மகளான பர்சானா, 12 வயது இருக்கும்போது தந்தையுடன் சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு சென்றிருக்கிறார். அப்போது அலுவலகத்திற்கு வந்த கலெக்டருக்கு அளிக்கப்பட்ட மதிப்பு, மரியாதை, கவுரவம், கலெக்டருக்கு வழிவிடுவதற்காக காவலர்கள் கூட்டத்தினரை தடபுடலாக விலக்கிய காட்சி ஆகியவை இவருக்கு கலெக்டர் பதவி மீது ஈர்ப்பு ஏற்படச் செய்தது. படிப்புக்கு இவ்வளவு மதிப்பு இருப்பதை அறிந்த அவர், தானும் இதுபோன்று கலெக்டர் ஆக வேண்டும் என்று விரும்பினார். அவரது ஆசைக்குத் தந்தை சாதிக் தூண்டுகோலாக இருந்தார். பர்சானாவின் சகோதரர் முகமது உசேன் சாதிக்கும் தங்கையின் கனவை நனவாக்க பக்கபலமாக இருந்தார்.


இந்த நிலையில், கலெக்டர் கனவுடன் ஐ.ஏ.எஸ். தேர்வுக்காக டெல்லி சென்று வாஜிராம் ரவி ஐ.ஏ.எஸ். பயிற்சி மையத்திலும் சென்னை கணேஷ் ஐ.ஏ.எஸ். பயிற்சி மையத்திலும் தீவிர பயிற்சி மேற்கொண்டார். அவருக்கு வெற்றி எளிதாக கிடைத்து விடவில்லை. முதல் முயற்சியில் முதல்நிலைத் தேர்விலேயே தோல்வி அடைந்தார்.


அடுத்த முறையில் மெயின் தேர்வு வரை மட்டுமே அவரால் செல்ல முடிந்தது. ஆனாலும் நம்பிக்கையை இழக்காமல் தொடர்ந்து முயற்சியில் இறங்கினார். 3-வது வாய்ப்பில் வெற்றிக்கனி கிடைத்தது. 2007-ம் ஆண்டுக்கான ஐ.ஏ.எஸ். இறுதித் தேர்வில் அகில இந்திய அளவில் 30-வது ரேங்க் எடுத்து வெற்றி பெற்றுள்ளார்.

 

தமிழ்நாட்டில் ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்ற பெண்களில் முதலிடத்தை பிடித்துள்ள செல்வி பர்சானாவுக்கு, சத்தியமார்க்கம்.காம் சார்பாக நமது உளம் கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்!


ஈர்ப்பு விதிகள் பெருகட்டும்; எமது சமுதாயம் நிமிரட்டும்!

Trackback(0)
கருத்துக்கள் (7)add comment
0
haneefm:
///தமிழ்நாட்டில் ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்ற பெண்களில் முதலிடத்தை பிடித்துள்ள செல்வி பர்சானாவுக்கு// மேன் மேலும் வெற்றி பாதையில் வீரநடை போட வாழ்த்துக்கள்!!! ஹனீஃப்- குவைத்
1

May 18, 2008 16:00
0
abdul azeez:
சகோதரி பர்சானா அவர்கள் ஐ.ஏ.எஸ். தேர்வில் இந்தியாவிலேயே முப்பதாவது ராங்கில் வந்து தமிழகத்தில் முதல் இடத்தை பிடித்தமைக்கு. என் மனமார வாழ்த்துக்கள். மா சலாம். அப்துல் அசீஸ்.
2

May 18, 2008 19:22
0
அப்துல்லாஹ் M:
அஸ்ஸலாமு அலைக்கும் அல்ஹம்துலில்லாஹ். இஸ்லாம் மதத்தினர்கள் அதிலும் இஸ்லாத்தில் பெண்கள், கல்வி அறிவில் பின் தங்கியவர்கள் எனும் கூற்றைப் பொய்பிக்க, இஸ்லாத்தின் பால் ஈர்க்கப்பட்ட சகோதரி பர்சானா போல் மேலும் பல இஸ்லாமிய சகோதரிகள் இஸ்லாமிய ஹிஜாப் எனும் உண்மையான பாதுகாப்பான சுதந்திரத்துடன் முன்மாதிரியான சகோதரியினைப் போல் இஸ்லாமிய வரம்புடன் கல்வியில் IAS உட்பட பல்வேறு துறையிலும் முறையாக முயன்றால் முன்னேரிட இயலும் என்பதை உலகுக்கு பறைச்சாற்றச் செய்த அல்லாஹுக்கே எல்லாப் புகழும். சகோதரிக்கும் சகோதரியின் குடும்பத்தினருக்கும் நல்வாழ்த்துக்கள். அல்லாஹ் அவர்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் உதவியும் நல்லருளும் புரிவானாக.
3

May 18, 2008 20:59
0
கனி:
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் சகோதரிக்கு நல்வாழ்த்துக்கள் இன்ஷாஅல்லாஹ் தமிழ்நாட்டிற்கே கலெக்டராக வந்து சாதனைகள் பல புரிய வாழ்த்துகின்றேன். இதுபோல் இஸ்ஸாமிய சகோதரிகள் பல துறைகளில் முன்னேறி சாதனைபுரிய வாழ்த்துகின்றேன்.
4

May 19, 2008 22:12
0
deepak:
congradulation to சகோதரி பர்சானா அவர்கள் ஐ.ஏ.எஸ். தேர்வில் இந்தியாவிலேயே முப்பதாவது ராங்கில் வந்து தமிழகத்தில் முதல் இடத்தை பிடித்தமைக்கு. என் மனமார வாழ்த்துக்கள். .Deepak

5

May 09, 2010 10:56
0
senthil:
matham marenal vetri pera mutium entra thavarana manapokai er batutha kutathu
6

September 10, 2010 17:50
0
sahul:
original islamiya pennal veeti pera mudiyathu.....................ivan mangetta channan
7

June 18, 2011 15:28

கருத்து எழுதுக :
தட்டச்சு மொழி மாற்ற crtl+g அழுத்துங்கள்.
சிறிதாக்குக | பெரிதாக்குக

busy
 

இறைமறை

இப்பக்கத்தை PDF வடிவில் சேமிக்க...

தேடுக...

Random Quran Verses

2:149 ஆகவே (நபியே!) நீர் எங்கிருந்து புறப்பட்டாலும் (தொழுகையின் போது) உம் முகத்தைப் புனிதப் பள்ளிவாயிலின் பக்கமே திருப்பிக்கொள்வீராக. நிச்சயமாக இதுதான் உம் இறைவனிடமிருந்து வந்த உண்மை-அல்லாஹ் நீங்கள் செய்பவை பற்றிப் பாராமுகமாக இல்லை.

English News

புதிய கருத்துகள்

mohammad rafiq : முகத்தை திரையிட்டு மறைப்பதும் மார்க...


mohamed ASHIQ : share with me more.....


monisha.chennai : wrong news modi great man one man army


s.abdul nishath : the use full website for satyamarkam. To use more & more muslim people for dinyath


சத்தியமார்க்கம்.காம் : அன்புச் சகோதரர் Peer Mohamed. அஸ்ஸலாமு அலைக்...


ARULKUMAR.A COIMBATORE : PLEASE AVOID ALCHOCAL CONSUMPITION AND JUNK FRUITS.TAKE FRUITS AND VEGITABLES ITEMS DAILY AND WEEKLY...


Peer Mohamed : Very good effort. I seek your permission to publish these articles in TamilIslamicAudio.com website....


Ansary : First of all i would like to thank Br. Nooruddin for giving all of us such a good translation of Sah...


kalibulla : very good and happy news go ahead,.


Ibrahim ulavi london : Assalamu alaikum, This is very happy news for every muslim . our brother CNM SALIM And brother Imran...


j.ameer ali : On our part, let all of us pray for his good health and long life service to our society. By J.Ameer...


Ansary : This is a great news to know. He is doing fine. This is a very good example to other District Collec...


y.m.anari : ஹிஜாப் பற்றி இந்தத் தளத்தினர் குரான்...


Jaffer : Masha Allah ...May allah bless him and guide him to strive in the straight path.


Karunakaran : Salute to Collector Ahmad... You are the REAL hero!


haneefm : رَبَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَن...



You are here  : முகப்பு தலையங்கம் ஈர்ப்பு விதி செய்வோம்!
Twitter
RSS
YouTube
English