| ஆகுமானவையும் விலக்கப்பட்டவையும்! |
|
|
| இஸ்லாம் - இஸ்லாமிய ஆய்வுக் கட்டுரைகள் | |||
| திங்கள், 12 மே 2008 10:39 | |||
|
அல்லாஹ் தனது திருமறையில் கூறுகின்றான்: ஒவ்வொரு மனிதருடைய வாழ்க்கையிலும் இரண்டுவிதமான வாழ்க்கைத் தெரிவுரிமைகள் (choices) இருக்கின்றன. ஒன்று ஆகுமான-ஹலாலான வரம்புக்குட்பட்டது; மற்றொன்று இந்த வரம்புகளை மீறிய, அல்லது தடுக்கப்பட்ட - ஹராமான செயல்பாடுகளைக் கொண்டது. ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் ஹலாலான வரம்புகளில் இருக்கின்றவரை, அதுவே அவருக்கு நேரான வழியாகும்.
பகிர்ந்து கொள்க
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
Trackback(0)
கருத்துக்கள் (10)
![]()
إِنَّ الَّذِينَ كَفَرُواْ سَوَاءٌ عَلَيْهِمْ أَأَنذَرْتَهُمْ أَمْ لَمْ تُنذِرْهُمْ لاَ يُؤْمِنُونَ
நிச்சயமாக காஃபிர்களை (இறைவனை நிராகரிப்போரை) நீர் அச்சமூட்டி எச்சரித்தாலும் (சரி) அல்லது எச்சரிக்காவிட்டாலும் சரியே! அவர்கள் ஈமான் (இறை நம்பிக்கை) கொள்ள மாட்டார்கள். (2:6)
மிக்க பயனுள்ள ஆக்கம் இன்னும் இது போல ஆக்கங்கள் தொடரட்டும் ...வாழ்த்துகள்
ஹனீஃப்-குவைத்
1
May 13, 2008 06:11
சகோ ஹனீஃப்-குவைத்,
நீங்கள் எடுத்து வைத்த திருமறை வசனம் சரியானது என்றாலும், அதனை அது வழங்கப்பட்ட வரிசையில் பொருள் கொண்டால் தான் பொருத்தமாக இருக்கும் எனக் கருதுகிறேன்.
(நபியே!) எவர்கள் (இவ்வேதத்தை மனமுரண்டாக) நிராகரிக்கிறார்களோ, அவர்களுக்கு நீர் அச்சமூட்டி எச்சரித்தாலும் அல்லது எச்சரிக்காவிட்டாலும் சமமே! அவர்கள் ஈமான் (இறை நம்பிக்கை) கொள்ள மாட்டார்கள். (2:6)
இப்போது தெளிவாக இருக்கும் என நம்புகிறேன் நன்றி!
2
May 13, 2008 09:04
சகோ ஆரிஃப் அவர்களுக்கு
நான் கண்ட படித்த குர்கான் தமிழ் ஆக்கத்தில் அப்படி தான் இருக்கு!! திரு குர்கான் அரபி வசனங்களுக்குகேற்றவாறு தான் தமிழ் ஆக்கம் இருக்கு இதில் தங்களுக்கு கேற்ப்ப மாற்றி நமக்குள் வேறுபாடுகளை உண்டு பண்னி மற்றவர்கலுக்கு இடம் குடுக்கவேண்டாம் இன்னும் அல்லாஹ் மிக அறிந்தவனாக இருக்கிறான்
ஹஃனீப்- குவைத்
3
May 13, 2008 15:09
அஸ்ஸலாமு அலைக்கும். அனைத்து முஸ்லீம் சகோதரர்களுக்கும் அன்பு சகோதரர் ஆரிப் அவர்களே நீங்கள் போட்டது போல் குர்ஆன் வசனம் வைத்தால் மூல மொழியில் ஒரு வார்த்தை நீக்கிவிட்டதாக அமையும் அது தான் `` இன்னல்லதீன '' `` நிச்சயமாக அவர்கள் '' அதனால் ஹநிப் போட்டது தான் சரி வேதத்தில் சற்று கவனமாக இருக்கவும் தங்கள் சகோதரர் வடக்குமான்குடி அப்துல் அசீஸ்
மா சலாம்.
அப்துல் அசீஸ்.
4
May 14, 2008 03:39
சுட்டிக் காட்டிய சகோதரர்களுக்கு நன்றி!
சகோதரர் ஹனீஃப்,
முதலில் உங்களிடம் குர்ஆன் என்பதைச் சரியாக எழுதுமாறு வேண்டிக் கொள்கிறேன்.
எனக்கு அவ்வளவு அரபிப் புலமை இல்லை!
நான் எடுத்துக்காட்டிய வசனத்தின் பொருளில் பிழையிருந்தால் மன்னிக்க! நான் கொடுத்த தமிழாக்கம் தாருல்ஹுதா பதிப்பகம் வெளியிட்டுள்ள குர்ஆன் தர்ஜூமாவில் உள்ளதைத்தான் காட்டியிருக்கிறேன். இனி எச்சரிக்கையாக இருந்து கொள்கிறேன்.
நீங்கள் எடுத்துக் காட்டியபடி பொருள் கொண்டால், நிராகரிப்பாளர்கள் நம்பிக்கை கொள்ளவே மாட்டார்கள் என்று பொருள் வருகிறது.
சத்தியம் எது எனச் சரியாகத் தெரிந்தும் வீம்புக்காக இறைச் செய்தியை மறுப்பவர்களைக் குறித்து இவ்வசனம் குறிப்பதாக உள்ள தமிழாக்கத்தையே நான் வைத்துள்ளேன்.
5
May 14, 2008 12:13
நம் சகோதரர்களாகிய அனைத்து முஸ்லிம்களுக்கும் அஸ்ஸலாமு அலைக்கும். சகோதரர் ஆரிப் நீங்கள் வீம்புக்காக என்று குறிப்பிட்டது மூலத்தில் இருந்தாகணும் இல்லை என்றால் ப்ராக்கெட்டில் போட்டு அதிகமாக விளக்கவேண்டும் என்ற கட்டாயம் மொழிபெயர்ப்பாளருக்கு அவசியம் இல்லை. படிப்பவர்கள் அந்த வீம்புக்காக என்றதை உள்ளடக்கி புரிந்து கொள்ளவேண்டியது தான். இன்னும் கூட வேறு ஒரு வசனத்தை பார்த்து இருப்பீர்கள் அவர்களுடைய இதயங்கள் மீது அல்லாஹ் முத்திரை குத்தி விட்டான். அவர்களுடைய செவிப்புலங்களிலும், அவர்களுடைய பார்வையின் மீதும் ஒரு திரை இருக்கிறது. இந்த வசனத்துக்கு ஒரே ஒரு சொல் அரபியில் `` ஹதமல்லாஹு '' இது தான். அப்புறம் அலா குலூபிஹீம் வ அலா சம்இஹிம் வ அலா அப்சாரிஹீம் செவிப்புலனுக்கும், கண்களுக்கும் திரை என்று வைத்து கொள்ளவேண்டியது தான் முத்திரையும் போடலாம்
மா சலாம்.
அப்துல் அசீஸ்.
6
May 15, 2008 20:41
அல்குர்ஆன் 2:6வது வசனத்துக்கு காஃபிர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள் என்று பொருள் கொண்டால் அது வேறு வசனங்களுக்கு முரண்படும். நடைமுறையில் இனிமேல் காஃபிர்கள் எவரும் இஸ்லாத்தை ஏற்கமாட்டார்கள் என்ற தவறான பொருளையும் தருகிறது.
இஸ்லாத்தை ஏற்பவர்கள் அன்றும் இருந்தார்கள். இன்றும் இருக்கிறார்கள். (அல்லாஹ் நாடினால் நாளையும் இஸ்லாத்தை ஏற்பவர்கள் இருப்பார்கள்.) இதை நாம் அனுபவமாக கண்டு வருகிறோம். எனவே ''நீர் எச்சரிப்பதும் எச்சரிக்காமருலிப்பதும் ஒன்றுதான் அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்'' என்ற வசனம் மொத்தமாக காஃபிர்களைச் சுட்டுவதாக எடுத்துக்கொள்ளாமல் ஒரு குறிப்பிட்ட நிராகரிப்பாளர்களைக் கூறுகிறது என்றே பொருள் கொள்ள வேண்டும்.
இஸ்லாத்தை நிராகரித்தவர்களில் எச்சரித்தப் பின்னரும் நம்பிக்கை கொள்ளாதவர்கள் யார் என்பதை அடுத்த வசனம் தெளிவுபடுத்துகிறது.
''அவர்களின் இதயங்கள் மற்றும் செவிப்புலன்கள் மீது அல்லாஹ் முத்திரையிட்டுவிட்டான். அவர்களின் பார்வை மீது திரை இருக்கிறது. (அல்குர்ஆன் 2:7)
2:6வது வசனத்தில் ''அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்'' என்று கூறிவிட்டு 2:7வது வசனத்தில் அந்த அவர்கள் யாரென அடையாளம் காட்டுகின்றான். ''நீர் எச்சரிப்பதும் எச்சரிக்காமலிருப்பதும் ஒன்றுதான்'' அவர்களின் உள்ளத்திலும் செவியிலும் முத்திரையிட்டதாலும் அவர்களின் பார்வையில் திரை உள்ளதாலும் நீர் எச்சரிக்கை செய்தாலும் அவர்கள் ஒரு போதும் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள். என 2:6-7 இரு வசனமும் விளக்குகின்றன. இதிலிருந்து உள்ளத்திலும் செவியிலும் முத்திரை குத்தப்படாதவர்கள் நம்பிக்கை கொள்வர் என்பது தெளிவு.
''எவருக்கு எதிராக அல்லாஹ்வின் கட்டளை உறுதியாகி விட்டதோ அவர்கள் எந்தச் சான்றுகள் தம்மிடம் வந்த போதும் துன்புறுத்தும் வேதனையைக் காணாத வரை நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்'' (அல்குர்ஆன் 10:96-97)
நிராகரிப்பவர்களில் எவருக்கு எதிராக அல்லாஹ்வின் வாக்கு நிறைவேறியதோ அவர் ஒரு போதும் நம்பிக்கை கொள்ள மாட்டார். என்று 10:96-97 வசனம் கூறுகின்றன. இது 2:6-7 வசனத்துக்கு விளக்கமாக இருக்கிறது. நிராகரிப்பவர்களில் இஸ்லாத்தை ஏற்றவர்கள் முற்றாக மறுத்தவர்கள் இந்த இரு சாராரும் எல்லா காலத்திலும் இருப்பார்கள் என விளங்குவதே சரி.
பத்ர் போர் சம்பவங்களை இறைவசனங்கள் ஓதும்போது
''அழிந்தவர்கள் தக்க காரணத்துடன் அழிவற்காகவும். தப்பி வாழ்பவர்கள் தக்க காரணத்துடன் வாழ்வதற்காகவும் (இறைவன் இவ்வாறு செய்தான்)'' (அல்குர்ஆன் 8:42)
அபூசுஃப்யான் தலைமையில் வந்த வணிகக் கூட்டத்தை மறிப்பதே நபியவர்களின் திட்டமாக இருந்தது. ஆனால் வணிகக் கூட்டத்தினர் தப்பித்து சென்று விட்டனர். பெருமைக்காகவும் மக்களுக்குக் காட்டுவதற்காகவும் வீடுகளிலிருந்து புறப்பட்ட மக்கத்து நிராகரிப்பாளர்களும் தலைவர்களும் பத்ர் போரில் மாண்டனர்.
இஸ்லாத்தை கடுமையாக எதிர்த்து வந்த நிராகரிப்பாளர்களின் தலைவர்களில் அபூசுஃப்யானும் ஒருவர். இவர் பின்னாளில் இஸ்லாத்தை ஏற்றார் என்பது பிரபலமான வரலாற்று சம்பவம். எதிர்காலத்தில் இஸ்லாத்தை ஏற்கவிருப்பவர்கள் என்பதையே தக்க காரணத்துடன் தப்பித்து சென்றார்கள் என்று குறிப்பிடுகின்றான் இறைவன் பரிசுத்தமானவன்.
7
May 16, 2008 15:04
நான் சொல்ல வந்த கருத்தை மிக அழகிய வடிவில் சொல்லிவிட்ட சகோதரர் முஸ்லிம் அவர்களுக்கு நன்றி!
இதே சத்தியமார்க்கம்.காம் தளத்தில் இது தொடர்பாக கண்ணில் பட்ட சுட்டி ஒன்று:
http://www.satyamargam.com/index.php?option=com_content&task=view&id=273&Itemid=40
8
May 16, 2008 15:44
அஸ்ஸலாமு அலைக்கும்
அன்பு சகோதரர் முஸ்லிம் அவர்களே
அல்ஹ்மதுலில்லாஹ் வ ஜஸாக்கல்லாஹு கைர்
சகோதரர் முஸ்லிம் அவர்களின் அருமையான விளக்கத்தின் தொடராக கீழ் கண்ட வசனமும் நிராகரிப்பாளர்களில் பின்னர் ஈமான் கொள்ளக்கூடியவர்கள், மற்றும் நிராகரித்த நிலையிலேயே மரணிப்பவர் என்று இரு சாராரைக் குர் ஆன் மூலம் அல்லாஹ் அடையாளம் காட்டுவதை பார்க்கலாம்,
3:91 எவர்கள் நிராகரித்து, நிராகரிக்கும் நிலையிலேயே இறந்தும் விட்டார்களோ, அவர்களில் எவரிடமேனும் பூமிநிறைய தங்கத்தை ஈடாக கொடுத்தாலும் (அதனை) அவரிடமிருந்து ஒப்புக் கொள்ளப் படமாட்டாது. அத்தகையோருக்கு துன்புறுத்தும் வேதனை உண்டு. இன்னும் அவர்களுக்கு உதவுவோர் யாருமில்லை.
ஆக இரண்டாவது கலீஃபாவாகிய கண்ணியம் மிகுந்த உமர் (ரலி) அவர்கள் ஆரம்பத்தில் இஸ்லாத்தை கடுமையாக நிராகரித்து எதிர்த்தவர் எது வரை எனில் நபி( ஸல்) அவர்களை கொலை செய்ய நாடி வாளேந்தி புறப்பட்டவர்... என்பதும் இங்கு அழகான உதாரணம். ஆகும்.
சிலர் மேற்கண்ட வசனத்தை குர் ஆனில் உள்ள முரண்பாடு போல் இறைவனே (ஒட்டு மொத்தமாக சில) நிராகரிப்பவர்கள் உள்ளத்தில் முத்திரை வைத்து விட்டதாக கூறும் போது யாரும் ஈமான் கொள்ள அழைக்க முடியாது என்று கூறி வருகின்றனர். அவர்களுக்கும் இது அழகான விளக்கம்.
அல்லாஹ் அனைவருக்கும் நேர்வழி காட்டுவானாக.
9
May 17, 2008 14:31
அஸ்ஸலாமு அலைக்கும். அனைத்து சகோதரர்களுக்கும் சகோதரர் முஸ்லீம் அவர்கள் அல்லது வேறு யாரவது விளக்குவார்கள் என்று எனக்கு தெரியும். இன்னும் இரு சாரார் உள்ளனர் செவிடர் காதில் சங்கு ஊதுவது போல் உள்ள மனிதர்களும், வேத வாக்குகளை உணர்ந்து அதன் பக்கம் பல பேர் தங்களை இணைத்து கொள்ளும் மக்களும் இருக்கத்தான் செய்கின்றனர். இன்னும் சிலர் சத்தியம் தெரிந்திரிந்தும் சந்தர்ப்ப சூழ்நிலை தங்களின் சமூக எதிர்ப்பு மற்றும் பொருளாதார வசதி குறைவு காரணமாக தங்கள் வேலையை இழக்கும் கட்டாயத்திற்கு ஆளாகிவிடுவோம்மற்றும் பாதுகாப்பு இன்மை என்ற அச்சம் காரணமாக கூட தங்களை மார்க்கத்தில் இணைத்துக்கொள்ள தயங்குகிறார்கள். மேலும் முஸ்லீம் அவர்களே சகோதரர் அப்துல் ரஹ்மான் உங்களுக்கு அத்தஹியாத்து விசயத்தில் பதில் அனுப்பியுள்ளார்
// அல் அல்பானி அவர்க்கள் சரியான அறிவிப்பாளார் அல்ல மேலும் இதை ஏற்க கூடாது என்றும்,பலகினமானவர் என்று (மேலும் இது சாத் மற்றும் முன்கர் தரதில் அமைந்தவை ஆகும்) இமாம் அபுதாவுது (ரஹ்)பதிவு அமைத்து உள்ளார்கள் இதை யாருமே வெளியே சொல்ல மாட்டர்கள்.//
என்று முஹம்மத் அப்பாஸ் அவர்கள் குறிப்பிட்டுள்ளதை உங்களுக்கு நினைவு படுத்தி.அந்த அறிவிப்பாளர் அல் அல்பானி அவர்களின் நண்பகதன்மை சான்று பிற அறிவிப்பாலரிடம் இருந்து கிடைக்கின்றதா ? என்று கேட்டுக்கொண்டு விடைபெறுகின்றேன்.
மா சலாம்.
அப்துல் அசீஸ்.
10
May 17, 2008 19:36
கருத்து எழுதுக :
|