சத்தியமார்க்கம்.காம்

மதியை அழிக்கும் மது! print Email
இஸ்லாம் - இஸ்லாமிய ஆய்வுக் கட்டுரைகள்
வியாழன், 08 மே 2008 06:42

{mosimage}மது அருந்துவது மூளையின் செயல்பாட்டைக் குறைத்து, திடீரெனத் தோன்றும் இடையூறுகளை உணர முடியாமல் செய்கிறது என அமெரிக்க ஆய்வு நிறுவனம் ஒன்று (National Institutes on Alcohol Abuse and Alcoholism) வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது. 'மது அருந்தியிருப்பவர்கள் வலுச் சண்டைகளில் அதிகம் ஈடுபடுவதற்கு இதுவே காரணம்' என்று, அந்த ஆய்வை நிகழ்த்திய திரு. ஜோடி கில்மன் ஒரு பேட்டியில் தெரிவித்தார்.

மிதமான குடிப்பழக்கம் உடைய 12 பேரிடம் இந்த ஆய்வு நிகழ்த்தப் பட்டது. அவர்கள் மது அருந்தியிருந்த நிலையிலும் தெளிவாக இருந்த நிலையிலும், பயமுறுத்தும் முகத்தோற்றங்கள் மற்றும் சாதாரண முகத்தோற்றங்களைக் கொண்ட நிழற்படங்கள் அவர்களுக்கு காண்பிக்கப் பட்டன. அப்போது அவர்களின் மூளைகளின் எதிர்வினைகளும் பதிவு செய்யப் பட்டன. அவர்கள் தெளிவாக இருந்த நிலையில் பயமுறுத்தும் முகத்தோற்றங்களை பார்த்த போது, மூளைகள் ஒருவித அச்சுறுத்தலை உணர்ந்தன. அவர்கள் மது அருந்தியிருந்த நிலையில் அதை உணரவில்லை.

மது அருந்தியிருக்கும் நிலையில் நமது மூளை அச்சுறுத்தல்களை உணர்ந்து அவற்றை எதிர்கொள்ள நம்மைத் தயார்படுத்தவியலாது என்பதையே இந்த ஆய்வு தெளிவு படுத்துகிறது. மது அருந்திவிட்டு வாகனங்களை ஓட்டுவது பேராபத்தை விளைவிக்கக் கூடியது என்பதும் கவனத்தில் கொள்ளத் தக்கது. 

இரண்டாம் உலகப்போருக்குப் பின் பிறந்த இளைய தலைமுறை அமெரிக்கப் பெண்களிடையே மதுவருந்தும் பழக்கம் அதிகரித்திருப்பதாக வாஷிங்டன் பல்கலைக்கழகம் நடத்திய இன்னொரு ஆய்வு தெரிவிக்கிறது. 'போதைக்கு அடிமையாகும் பெண்கள் கடுமையான உடல்நலக் கோளாறுகளை சந்திக்க நேர்கிறது, மதுவருந்தும் ஆண்களை விட பெண்களுக்கே இதன் பாதிப்பு அதிகமாக இருப்பதால், பெண்கள் தங்கள் ஆயுளின் பெரும்பகுதியை இழந்து விடுகிறார்கள்' எனவும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

உடலிற்கும் உள்ளத்திற்கும் பெரும் கெடுதியை விளைவிக்கும் மதுவை குர்ஆன் தடை செய்கிறது. இறைத்தூதர் நபி (ஸல்) அவர்களும் மது அருந்துவதைப் பற்றிக் கடுமையாக எச்சரித்துள்ளார்கள்.

"போதை தரும் அனைத்தும் மதுவாகும். போதை தரும் அனைத்தும் விலக்கப்பட்டதாகும்" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.(அறிவிப்பவர்: இப்னுஉமர்(ரலி) நூல்: முஸ்லிம்)

திருமறையில் இறைவன் எச்சரிக்கின்றான், "(நபியே!) மதுபானத்தையும், சூதாட்டத்தையும் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர்; நீர் கூறும்; "அவ்விரண்டிலும் பெரும் பாவம் இருக்கிறது; மனிதர்களுக்கு (அவற்றில் சில) பலன்களுமுண்டு; ஆனால் அவ்விரண்டிலும் உள்ள பாவம் அவ்விரண்டிலும் உள்ள பலனைவிடப் பெரிது." (அல்குர்ஆன் 2: 219)

"ஈமான் கொண்டோரே! மதுபானமும், சூதாட்டமும், கற்சிலைகளை வழிபடுதலும், அம்புகள் எறிந்து குறி கேட்பதும், ஷைத்தானின் அருவெறுக்கத்தக்கச் செயல்களில் உள்ளவையாகும்; ஆகவே நீங்கள் இவற்றைத் தவிர்த்து கொள்ளுங்கள் - அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள்." (அல்குர்ஆன் 5:90)

"நிச்சயமாக ஷைத்தான் விரும்புவதெல்லாம், மதுபானத்தைக் கொண்டும், சூதாட்டத்தைக் கொண்டும், உங்களிடையே பகைமையையும், வெறுப்பையும் உண்டு பண்ணி அல்லாஹ்வின் நினைவிலிருந்தும், தொழுகையிலிருந்தும் உங்களைத் தடுத்து விடத்தான்; எனவே, அவற்றை விட்டும் நீங்கள் விலகிக் கொள்ள மாட்டீர்களா?" (அல்குர்ஆன் 5:91)

'போதைப் பொருளை அருந்துபவர்களுக்கு "தீனத்துல் கப்பால்" எனும் பானத்தை புகட்டுவதாக அல்லாஹ் முடிவு செய்துள்ளான்' என்று நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். அப்போது நபித்தோழர்கள், 'தீனத்துல் கப்பால் என்றால் என்ன'வென்று கேட்டனர். 'அது நரகவாசிகளின் வேர்வை அல்லது நரகவாதிகளிடம் பிழிந்தெடுக்கப்பட்ட பானம்' என பதிலளித்தார்கள். (அறிவிப்பவர்: ஜாபிர்(ரலி) - நூல்: முஸ்லிம்)

'மதுபோதையில் மூழ்கியவன் இறந்துவிட்டால் சிலைவணங்கியைப் போன்று -மறுமையில்- அல்லாஹ்வை சந்திப்பான்.' என்றும் நபி (ஸல்) அவர்கள் அறிவித்தார்கள் (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி) நூல்: அஹமத்)

இஸ்லாம் ஒரு பொருளைத் தடை செய்கிறது என்றால், அது மனிதர்களுக்கு மறுவுலகில் மட்டுமல்லாது இவ்வுலகிலும் தீங்கு விளைவிக்கக் கூடியதாகவே இருக்கிறது. 

"நீங்கள் சிந்தித்து உணரும் பொருட்டு அல்லாஹ் (தன்) வசனங்களை(யும் அத்தாட்சிகளையும்) இவ்வாறு விவரிக்கின்றான்" (அல்குர்ஆன் 2:219)

Trackback(0)
கருத்துக்கள் (7)add comment
0
முஸ்லிம்:
மது பழக்கத்தால் அழிவை நோக்கிச் செல்பவர்களுக்கு எச்சரிக்கையாக இந்த ஆக்கம் அமைந்துள்ளது. மதுவைத் தவிக்கும்படி இஸ்லாம் கூறுவது மனிதனின் நலனுக்குத்தான் என்பதை மது அருந்துபவர்கள் சிந்திக்க வேண்டும்.
1

May 08, 2008 09:21
0
இப்னு ஹமீது:
சமுதாயத்திற்குத் தேவையான ஆக்கம். மது மதியை மட்டுமின்றி உயிரையும் அழிக்கும். மது அருந்தியவர் தனக்கு அளிக்கப்பட்ட அமானிதமான உடலை அழிப்பதோடு, தன் குடும்பத்திற்க்கும் பெரும் தீங்கு செய்கிறார். எச்சரிக்கை தரும் ஆக்கத்தை அளித்தமைக்கு நன்றி!
2

May 08, 2008 09:30
0
சீனிவாசன்:
சமுதாய சிந்தனையுள்ள பதிவுக்கு நன்றி சத்தியமார்க்கம். இங்கே யதார்த்தம் என்ன தெரியுமா? குடிகாரர் எவரிடம் கேட்டாலும் 'ஆமா! மூளையை மழுங்கடிக்கத்தான் செய்யும். நல்லா தெரியுமே' என்பார். இத்தகையவர்களை திருத்த அறிவுரை பத்தாது. இரும்புக்கரம் தான் வேண்டூம். தவிர மது அருந்துவதை தூண்டும், குடிகாரர்களை உற்சாகப்படுத்தும் காரணிகளை கண்டுபிடித்து வேரோடு வெட்டி எறிய வேண்டும். தமிழ் தொலைக்காட்சி ஊடகங்களில் (அது சினிமாவாகட்டும் சீரியலாகட்டும்) மது அருந்துவது ஸ்டேட்டஸ் & ஸ்டைல் மற்றும் உயர்தர வர்க்கத்தினரின் செய்கையாக காண்பிக்கப்படுகிறது. இதில் எரிச்சலூட்டும் படியாக 'மது உடல்நலத்திற்குக் கேடு' என்று பிட் நோட்டிஸ் வேறு காட்டப்படும். இது பார்க்கும் எளிய தட்டு மக்களையும், மாணவ உள்ளங்களையும் சீரழிக்கும் படி உள்ளது. ஊடகங்களின் இந்த இரட்டை வேஷ அயோக்கியத்தனத்தை முற்றிலும் களைய வழி வகையினை ஆளும் அரசாங்கம் செய்யவேண்டும். குறைந்த பட்சம் குடி, போதை, காட்சிகளோ வசனங்களோ வந்தால் அவை கத்தரிக்கப்படும் என்று ஒரு விதியினை சென்சார் போர்டு அறிவிக்க வேண்டும். டாக்டர் ராமதாஸ் ஆட்சிக்கு வந்தால் முதலில் நாங்கள் செய்யும் காரியம் தமிழகத்தில் மதுவை முற்றிலுமாக ஒழித்துக்கட்டுவோம் என்கிறார். இவரைப் போன்றவர்கள் ஓரணியில் திரண்டு - ஒரு தொற்று நோயினை சமூகத்தினை விட்டு ஒழித்துக்கட்டுவது போல் செய்திட வேண்டும்.
3

May 15, 2008 11:07
0
முஸ்லிம்:
சீனிவாசன் உங்கள் கருத்துக்களும் மதுவை ஒழிக்க திட்டமிடும் ஆலோசனைகளும் அருமை. //டாக்டர் ராமதாஸ் ஆட்சிக்கு வந்தால் முதலில் நாங்கள் செய்யும் காரியம் தமிழகத்தில் மதுவை முற்றிலுமாக ஒழித்துக்கட்டுவோம் என்கிறார். இவரைப் போன்றவர்கள் ஓரணியில் திரண்டு - ஒரு தொற்று நோயினை சமூகத்தினை விட்டு ஒழித்துக்கட்டுவது போல் செய்திட வேண்டும்.// நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மதுவை ஒழித்துக்கட்டுவோம் என்று ஆண்ட ஆளும் கட்சிகளெல்லாம் வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்தபின் மாறி மதுக்கடைகளைத் திறந்திருக்கிறார்கள். அரசியல் கட்சிகளுக்கெல்லாம் மக்களின் நலனைவிட மதுவினால் கிடைக்கும் கொழுத்த வருமானம் மிக முக்கியம் எனக்கருதி தடம் மாறி விடுகின்றன. இதற்கு எந்த அரசியல் கட்சியும் விதிவிக்காகுமா என்பது குதிரைக் கொம்புதான்.
4

May 15, 2008 20:56
0
kavianban,KALAM, Adirampattinam:
மனிதர்களின் சட்டங்களுக்கு மனங்கள் மாற்றம் பெறுவது கிடையாது. மாறாக, மனிதர்களை படைத்து அவன் புனிதமாக வாழ வழிகாட்டும் வான்மறை தந்த வல்ல இறைவனின் சட்டம் மூலம் தான் மது,திருட்டு,விபச்சாரம்,கொலை போன்ற பெரும்பாவங்களில் மூழ்கி கிடந்த மனிதர்களை உலமே வியக்கும் புனிதர்களாக மாற்றியதும்; இன்றுவரை இறை சட்டங்களினால் தரப்படும் தண்டனைகளினால் அவ்விறை வேதம் இறங்கிய மண்ணில் மேற்கூறிய குற்றங்கள் தடைச் செய்யப்பட்டு மக்களும்;பொருட்களும் பாதுகாப்புடன் இருக்க வழிகாட்டியதும் கண்கூடாக உலகம் காணும் பேருண்மை.மாறாக, மனிதர்க்ளின் சட்டம் பொய்த்து விட்டதற்கு இதோ சான்றுகள்: விபச்சாரத்தைத் தடுக்க வேண்டிய காவலரே விபச்சாரிகளின் வலையில் சிக்கியதும்; மதுவினால் கேடு என்று விளம்பரம் செய்யும் அரசே மதுவை விற்பனை செய்வதும்;ஊழல் என்னும் திருட்டும்- பூட்டிய வீட்டில் திருடர்களின் கைவரிசை யாவும் தினமும் நடைபெறும் சாதாரண நிகழ்ச்சிகளானதும்; பெண்கள்- சிறுமியர்-மாணவியர் கற்பழிப்புகளும் தினச்செய்திகளானதும் ஏன்????எப்படி??? எங்கே??? ஒரே பதில்: எங்கு இறைவனின் சட்டம் அமல் படுத்தப்படவில்லையோ- அங்கே-அப்படி-அதன் காரணத்தால். எங்கே இறைவனின் சட்டம் அமல் படுத்தப்படுகின்றதோ அங்கே மனிதர்களைத்திருத்த ஆர்ப்பாட்டம் தேவையில்லை.மனிதன் தன்னைப் படைத்த இறைவனின் சட்டம் தனக்கும் தன்னைச் சுற்றியிருப்பவர்கட்கும் 'நன்மை' தரவே என்பதை உணர வேண்டும்; அதற்கு தான் அல்-குர்-ஆன் என்ற 'இறைவனின் இறுதிச் சட்ட நூலாம்- இறுதி வேத' த்தின் தமிழ்மொழி பெயர்ப்பைப் படியுங்கள்-பரப்புங்கள் சகோதரர்களே......அறிந்து கொள்வீராக இறைசட்டம் அமல் படுத்தப்ப நாட்டில் பெண்கள் மிகவும் சுதந்திரமாக நடக்க முடியும்; கண்ணுக்கு இமையை பாதுகாப்பாக அமைத்த அதே இறைவன் பெண்ணுக்கு'பர்தா'வை பாதுகாப்பாக அமைத்தான்.
5

May 17, 2008 11:35
0
nanba:
நானும் ஒரு மது அருந்துபன். இன்று விடமுடியாமல் அவதிபடுபவன். இளையதலைமுறை தயவு செய்து ஒருமுறை கூட மதுவை அருந்திவிடாமல் இதுபோல் அறிவூட்டும் கட்டுரைகளை படித்து தப்பித்துக் கொள்ளுங்கள்.
6

December 02, 2009 05:11
0
sun:
மனிதர்களின் சட்டங்களுக்கு மனங்கள் மாற்றம் பெறுவது கிடையாது. மாறாக, மனிதர்களை படைத்து அவன் புனிதமாக வாழ வழிகாட்டும் வான்மறை தந்த வல்ல இறைவனின் சட்டம் மூலம் தான் மது,திருட்டு,விபச்சாரம்,கொலை போன்ற பெரும்பாவங்களில் மூழ்கி கிடந்த மனிதர்களை உலமே வியக்கும் புனிதர்களாக மாற்றியதும்; இன்றுவரை இறை சட்டங்களினால் தரப்படும் தண்டனைகளினால் அவ்விறை வேதம் இறங்கிய மண்ணில் மேற்கூறிய குற்றங்கள் தடைச் செய்யப்பட்டு மக்களும்;பொருட்களும் பாதுகாப்புடன் இருக்க வழிகாட்டியதும் கண்கூடாக உலகம் காணும் பேருண்மை.மாறாக, மனிதர்க்ளின் சட்டம் பொய்த்து விட்டதற்கு இதோ சான்றுகள்: விபச்சாரத்தைத் தடுக்க வேண்டிய காவலரே விபச்சாரிகளின் வலையில் சிக்கியதும்; மதுவினால் கேடு என்று விளம்பரம் செய்யும் அரசே மதுவை விற்பனை செய்வதும்;ஊழல் என்னும் திருட்டும்- பூட்டிய வீட்டில் திருடர்களின் கைவரிசை யாவும் தினமும் நடைபெறும் சாதாரண நிகழ்ச்சிகளானதும்; பெண்கள்- சிறுமியர்-மாணவியர் கற்பழிப்புகளும் தினச்செய்திகளானதும் ஏன்????எப்படி??? எங்கே??? ஒரே பதில்: எங்கு இறைவனின் சட்டம் அமல் படுத்தப்படவில்லையோ- அங்கே-அப்படி-அதன் காரணத்தால். எங்கே இறைவனின் சட்டம் அமல் படுத்தப்படுகின்றதோ அங்கே மனிதர்களைத்திருத்த ஆர்ப்பாட்டம் தேவையில்லை.மனிதன் தன்னைப் படைத்த இறைவனின் சட்டம் தனக்கும் தன்னைச் சுற்றியிருப்பவர்கட்கும் 'நன்மை' தரவே என்பதை உணர வேண்டும்; அதற்கு தான் அல்-குர்-ஆன் என்ற 'இறைவனின் இறுதிச் சட்ட நூலாம்
7

July 05, 2011 10:11

கருத்து எழுதுக :
தட்டச்சு மொழி மாற்ற crtl+g அழுத்துங்கள்.
சிறிதாக்குக | பெரிதாக்குக

busy
 

இறைமறை

இப்பக்கத்தை PDF வடிவில் சேமிக்க...

தேடுக...

Random Quran Verses

2:119 (நபியே!) நாம் உம்மை உண்மையுடன், (நல்லடியாருக்கு) நன்மாராயம் கூறுபவராகவும், (தீயோருக்கு) அச்சமுட்டி எச்சரிக்கை செய்பவராகவுமே அனுப்பியுள்ளோம். நரகவாதிகளைப் பற்றி நீர் வினவப்பட மாட்டீர்.

புதிய கருத்துகள்

mohammad rafiq : முகத்தை திரையிட்டு மறைப்பதும் மார்க...


mohamed ASHIQ : share with me more.....


monisha.chennai : wrong news modi great man one man army


s.abdul nishath : the use full website for satyamarkam. To use more & more muslim people for dinyath


சத்தியமார்க்கம்.காம் : அன்புச் சகோதரர் Peer Mohamed. அஸ்ஸலாமு அலைக்...


ARULKUMAR.A COIMBATORE : PLEASE AVOID ALCHOCAL CONSUMPITION AND JUNK FRUITS.TAKE FRUITS AND VEGITABLES ITEMS DAILY AND WEEKLY...


Peer Mohamed : Very good effort. I seek your permission to publish these articles in TamilIslamicAudio.com website....


Ansary : First of all i would like to thank Br. Nooruddin for giving all of us such a good translation of Sah...


kalibulla : very good and happy news go ahead,.


Ibrahim ulavi london : Assalamu alaikum, This is very happy news for every muslim . our brother CNM SALIM And brother Imran...


j.ameer ali : On our part, let all of us pray for his good health and long life service to our society. By J.Ameer...


Ansary : This is a great news to know. He is doing fine. This is a very good example to other District Collec...


y.m.anari : ஹிஜாப் பற்றி இந்தத் தளத்தினர் குரான்...


Jaffer : Masha Allah ...May allah bless him and guide him to strive in the straight path.


Karunakaran : Salute to Collector Ahmad... You are the REAL hero!


haneefm : رَبَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَن...



You are here  : முகப்பு இஸ்லாம் கட்டுரைகள் மதியை அழிக்கும் மது!
Twitter
RSS
YouTube
English