சத்தியமார்க்கம்.காம்

கல்வி உதவிக்கான இந்திய அரசின் வலைத்தளம்! print Email
உதவிக் கரங்கள் - கல்வி வழிகாட்டி
புதன், 07 மே 2008 10:51

மத்திய அரசின் மனிதவள அமைச்சகம் உருவாக்கியுள்ள இந்தியாவில் உள்ள மாணவர்கள் உதவித்தொகை (Scholarship) பற்றிய தகவல்களை அறிந்துகொள்வதற்காக ஓர் இணையதளத்தை உருவாக்கியுள்ளது.

 

இத்தளத்தின் முகவரி: http://www.educationsupport.nic.in

அரசு மட்டுமின்றி தனியார் துறை வழங்குகின்ற உதவித்தொகை பற்றிய தகவல்களும் இங்குக் கிடைக்கின்றன. பள்ளிப்படிப்பு முதல் முனைவர் பட்டப்படிப்பு வரை பல்வேறு உதவித்தொகைகள் வழங்கும் நிறுவனங்கள், துறைகள் பற்றிய தகவல்கள் இங்குள்ளன. கலைக்கல்லூரி படிப்புகள், மருத்துவம், பொருளாதாரம், புள்ளியியல் படிப்புகள் என எல்லா துறை படிப்புகளுக்கும் உதவித்தொகை கிடைக்கிறது.

இந்தியாவில் மட்டுமின்றி ஐரோப்பா, அமெரிக்கா என உலகின் பல்வேறு நாடுகளிலும் படிக்கக் கிடைக்கும் உதவித்தொகை பற்றிய தகவல்களையும் அறியலாம். உதவித்தொகைக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது, என்னென்ன சான்றிதழ்களை இணைக்கவேண்டும், கடைசித் தேதி போன்ற தகவல்களும் இந்த இணைய தளத்தில் உண்டு. கல்விக்கடன் கொடுக்கும் வங்கிகள், கடனைப் பெறும் முறை போன்ற தகவல்களையும் கொடுத்துள்ளனர். கல்வி சம்பந்தமான முக்கிய தகவல்கள், வெளியீடுகளும் இங்கு பார்க்கலாம்.

இது கல்வி கற்கும் அனைத்து பிரிவினரும், கல்வி மேம்பாட்டுக்கு உதவி செய்யும் குழுவினரும் தெரிந்து கொண்டு, பயன் பெற வேண்டிய இணையதளமாகும்.

 

தகவல்: தாருஸ்ஸஃபா ஸாதிக்

 

தொடர்புடைய இன்னொரு சுட்டி: http://www.satyamargam.com/index.php?option=com_content&task=view&id=655&Itemid=172

 

கருத்துக்கள் (2)add comment
0
kavianban KALAM, Adirampattinam:
சமுதாயத்திற்கு தேவையான இத்தகு தகவல்களைத் திரட்டித் தரும் தங்களின் சேவையை எத்துணை முறை பாராட்டினலும் தகும்.
1

May 09, 2008 19:54
0
சாதிக்:
தாங்களது வலைப் பக்கத்தில் சேர்த்து நமது மாணவர்களுக்கு உதவியதில் சந்தோஷம். அன்புடன், தாருல்ஸஃபாவிலிருந்து சாதிக். www.darulsafa.com
2

May 17, 2008 01:38

கருத்து எழுதுக :
சிறிதாக்குக | பெரிதாக்குக

busy
 

இறைமறை

Random Quran Verses

2:103 அவர்கள் நம்பிக்கை கொண்டு தங்களை காப்பாற்றிக் கொண்டால், அல்லாஹ்விடமிருந்து கிடைக்ககும் நற்கூலி மிகவும் மேலானதாக இருக்கும். இதனை அவர்கள் அறிய வேண்டாமா?

விருப்பத் தேர்வுகள்


You are here  : முகப்பு கல்வி வழிகாட்டி கல்வி உதவிக்கான இந்திய அரசின் வலைத்தளம்!