சத்தியமார்க்கம்.காம்

குவாண்டனமோ சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட அல்ஜஸீரா கேமராமேன்! print Email
செய்திகள் - உலகச் செய்திகள்
செவ்வாய், 06 மே 2008 11:53

அமெரிக்கப் படையினரால் குவாண்டனமோ சிறையில் அடைக்கப்பட்டு, சொல்லவொண்ணாக் கொடுமைகளைச் சந்தித்த அல்ஜஸீரா செய்தியாளர் ஸாமி அல்-ஹாஜ், கடந்த வெள்ளியன்று (02-05-2008) விடுதலை செய்யப்பட்டுள்ளார். தன் மகன் பிறந்த போது கைதான ஸாமி, உருக்குலைந்த உருவத்துடன் நடைப் பிணமாகச் சொந்த நாட்டிற்குத் திரும்பி, தன் ஏழு வயது மகனை இப்போதுதான் சந்திக்கிறார்.

 

கடந்த டிசம்பர் 2001இல் அல்ஜஸீரா தொலைக்காட்சியின் செய்தி சேகரிப்பிற்காக ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் எல்லையில் படப்பிடிப்பில் இருந்த கேமராமேன் ஸாமி, அல் காயிதா அமைப்பினைச் சேர்ந்தவர் என்று சந்தேகிக்கப்பட்டதாகக் காரணம் கூறி கைது செய்யப்பட்டார். சர்வதேசப் பத்திரிக்கைகளுக்கான சட்டப்பூர்வமான விசா விதிமுறைகளுடன் ஆப்கானிஸ்தான் எல்லையில் செய்தியாளராகப் பணியாற்றிக்கொண்டிருந்த ஸாமி கைது செய்யப்பட்ட சில வாரங்களில் அமெரிக்கப் படையினரால் கியூபாவின் குவாண்டனமோ சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.


அல்ஹஜ் கைது செய்யப்பட்ட மாத்திரத்திலேயே எவ்வித குற்றப்பத்திரிக்கையும் பதிவு செய்யப்படாமலே பயங்கரவாதிகள் பட்டியலில் ஸாமி சேர்க்கப்பட்டார் என்பதும் சிறையில் அடைக்கப்பட்ட நாட்களில் இதுவரை 130 முறைகள் விசாரணை என்ற பெயரில் அவர் கொடுமைக்குள்ளாக்கப் பட்டார் என்பதும் இங்குக்  குறிப்பிடத்தக்கது.


{mosimage}ஸாமிக்காக வழக்குத் தொடுத்துள்ள ஜக்கரி கேட்ஜ் நெல்சன் என்ற வழக்கறிஞர் "இவ்விடுதலைக்கானக் காரணம் அநீதியை எதிர்த்து, கடந்த ஒன்றரை வருடங்களாக ஸாமி அல்-ஹாஜ் சிறைச்சாலைக்குள் நடத்திய உண்ணாநிலைப் போராட்டமே!" என்று கூறியுள்ளார். உணவு உண்ண மறுத்து, சாத்வீக முறையில் தனது எதிர்ப்பைப் பதிவு செய்த ஸாமிக்குக் கட்டாயப்படுத்தி கடந்த 16 மாதங்களாக மூக்கின் துளை வழியாக குழாய் மூலம் கட்டாயப்படுத்தி உணவு உட்செலுத்தப்பட்டுள்ளது. கடுமையான மன-உடல்ரீதியிலான கொடுமைகளால் அவரது சிறுநீரகமும் கல்லீரலும் பாதிக்கப்பட்டுள்ளன என்றும் சிறுநீரகக் குறைபாடுகளால் புற்றுநோய் தாக்கியிருப்பதாகவும் இவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் கூறியுள்ளனர்.


இக்கொடுமைகளால் 39 வயதே நிரம்பியுள்ள ஸாமி 80 வயது முதியவரின் உடல் தோற்றத்தைப் பெற்றுள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. விடுதலை பெற்றுத் திரும்பிய நிமிடத்திலிருந்து மருத்துவமனையின் அவசரப்பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார் ஸாமி.

 

 


இந்நிலையில் சூடான் தலைநகர் கர்த்தூமில் உள்ள ஸாமி அல்-ஹாஜின் இல்லத்திற்கு வருகை தந்துள்ள அல்ஜஸீராவின் பொது இயக்குனர் வாதாஹ் கன்ஃபார், அமெரிக்காவின் இச்செயல் பற்றி கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்துள்ளார். அல்ஜஸீரா தொலைக்காட்சியின் செயல்பாடுகளை அமெரிக்காவிற்கு ரகசியமாக அறிவித்துத் தரும் உளவாளியாக விலைபேசக் கடுமையாக முயன்றும் அதற்கு உடன்படாத காரணத்தாலேயே ஸாமி அல்-ஹாஜ் குவாண்டனமோவுக்கு அனுப்பி, துன்புறுத்தப்பட்டுள்ளதாக இவர் மேலும் கூறியுள்ளார்.


ஸாமி கைது செய்யப்பட்டு குவாண்டனமோவில் அடைக்கப்பட்ட நாள் முதல் அவரது விடுதலைக்கான நடவடிக்கைகளைப் பல கட்டப் போராட்டங்களாக அல்ஜஸீரா முன்னின்று நடத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.


நேர்மையான மற்றும் துல்லியமான செய்திகளினால் உலகப் புகழ்பெற்றுள்ள செய்தி நிறுவனமான அல்ஜஸீராவிற்கே இந்நிலை எனில் சாமான்யர்களின் கதி என்ன என்பதுதான் சர்வதேச அளவில் மக்களின் மனதில் எழுந்துள்ள கேள்வியாகும். பத்திரிகை சுதந்திரம் பற்றி வாய்கிழியப் பேசும் மேற்கத்திய உலகம் இக்கொடுமைகளைக் கண்டும் காணாமல் இருப்பது மனித நேயம் மிதிபடுவதையே மெய்ப்பிக்கிறது.

கருத்துக்கள் (2)add comment

எழுதியவர்: ARB , May 07, 2008 15:10

39 வயது கொண்ட சகோதரர் ஸாமி அல் ஹாஜ் 80 வயது கொண்டவரைப் போன்று அமெரிக்க அராஜகத்தினால் மாற்றப்பட்டிருக்கிறார். நாகரீகத்தை வாயளவில் பேசும் காட்டுமிராண்டிகளாகிவிட்டனர் அமெரிக்கர்கள். அல்ஜஸீரா தொலைக்காட்சி அமெரிக்க ஆட்சியாளர்களின் நித்திரையை நித்தமும் கெடுத்துக் கொண்டிருப்பது இன்னொரு முறை உறுதி செய்யப்பட்டுள்ளது. சகோதரர் ஸாமி விரைவில் குணமடைய எல்லாம் வல்ல இறைவனிடம் இரு கரம் ஏந்துவோம்.



எழுதியவர்: அபு ஃபாஹிம் , May 08, 2008 17:30

அல்ஜஸீரா கேமராமேன் அல் ஹாஜ் கைது செய்யப்பட்டது போலவே இந்தியாவில் 2002-ம் ஆண்டு 'கஷ்மீர் டைம்ஸ்' என்ற நாளேட்டின் டெல்லி பிரிவு தலைமை செய்தியாளராக இருந்த இஃப்திகார் ஜீலானி என்பவர் இந்திய ஐ.பி துறையினரால் தீவிரவாதியாக சித்தரிக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். ஆனாலும் பத்திரிக்கை உலகத்தினரின் தொடர் முயற்சியால்(இதே பத்திரிக்கையாளர்கள்தான் இவரை தீவிரவாதி என்று சொன்னதும் உண்டு) அவர் மீதான குற்றங்களை நிருபிக்க முடியாமல் 7 மாதங்களில் வழக்குகள் வாபஸ் பெறப்பட்டு விடுதலையானர். http://www.rediff.com/news/2003/jan/13gee1.htm ஆனால் இங்கே அல்ஹாஜ் இவ்வளவு காலம் கடந்து விடுதலையாகி இருப்பதை பார்க்கும்போது, இவரின் விடுதலைக்காக அல்-ஜஸீரா செய்த முயற்சிகள் எதுமே இல்லையோ என்றே எண்ணத்தோன்றுகிறது.



கருத்து எழுதுக :
தமிழ்
ஆங்கிலம்
சிறிதாக்குக | பெரிதாக்குக
 

busy

 
Add Site to FavoritesAdd Page to FavoritesShare This PageEmail This Page
Back to Top

இறைமறை

Random Quran Verses

3: 108 (நபியே!) இவை(யெல்லாம்) அல்லாஹ்வின் வசனங்கள் - இவற்றை உண்மையாகவே உமக்கு நாம் கூறுகிறோம். மேலும் அல்லாஹ் உலகத்தோருக்கு அநீதி இழைப்பதை விரும்ப மாட்டான்.

ஆக்கங்களை அனுப்ப...

புதிய கருத்துக்கள்

hussain ali : இதனை மக்கள் எந்த அளவுக்குப் புரிந்து...


sheik : 'தேர்ந்தெடுக்கப்படும் நூல், சென்னை ர...


"கவியன்பன்" கலாம், அதிராம்பட்டினம் : முஹம்மத் அலி அவர்களின் சமுதாய அக்கறை...


Mohamed Abubacker Sidique : அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்). அன்பு சகோத...


பிறைநதிபுரத்தான் : மகளிர்க்கான இட ஒதுக்கீட்டில் முஸ்லி...


சஃபி : Godhra “witness” escapes to tell his story Vidya Subrahmaniam Husain Mulla says he was not in ...


சஃபி : ஆஸ்திரேலியாவில் இஸ்லாமிய வங்கி தொட...


ர. சிராஜ் முஹம்மது : அஸ்ஸலாமு அலைக்கும் அழகிய தொடர். நம் ...


abdul basith : ‘ஹயாத்து முஹம்மத்’ நூலையே தமிழாக்கம் செய்யலாமா?


அஹமத் .'.பைசல் : அதிகமான இஸ்லாமிய ஆக்கங்கள் படிப்பதற...


Yasin.m : திருகுரானை எப்படி பதிவிறக்கம் செய்வ...


சாபிரா : அருமையான தொடர். வாழ்த்துக்கள்


Syed : மறந்த வரலாற்றை நினைவுப்படுத்துகிறீர்கள். கண்களில் கண்ணீர் வருகிறது. தொடரும்


M. Abdul Hameed. : வ அலைக்குமுஸ் ஸலாம் // .........இதுதான் சில ...


M A H : நபி (ஸல்) அவர்களின் எச்சரிக்கை: "வார்த...


benazirjaila : மஸாஅல்லாஹ் இது மாதிரியாமன கதைகளை பெண...


இப்னு முஹம்மத்(ஹனீஃப்) : அன்புச் சகோதரர்களே அஸ்ஸலாமு அலைக்கு...


M.A. Abdullah : அஸ்ஸலாமு அலைக்கும் அன்பு சகோதரர் சைய...



You are here  : முகப்பு செய்திகள் உலக செய்திகள் குவாண்டனமோ சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட அல்ஜஸீரா கேமராமேன்!