சத்தியமார்க்கம்.காம்

ஹஜ் 2008 : விண்ணப்பிக்கத் தமிழக அரசு அழைப்பு! print Email
செய்திகள் - தமிழகச் செய்திகள்
வியாழன், 01 மே 2008 04:52

{mosimage}தமிழ்நாட்டில் வசிக்கும் முஸ்லிம் பெருமக்களில், ஹஜ்-2008 ஆம் ஆண்டில் ஹஜ் புனிதப்பயணம் மேற்கொள்ள விரும்புவோரிடமிருந்து விண்ணப்பங்களை மத்திய ஹஜ் குழு சார்பாக தமிழ்நாடு மாநில ஹஜ் குழு வரவேற்கிறது.
 
ஹஜ்-2008 ஆம் ஆண்டிற்கான ஹஜ் விண்ணப்பங்கள் மற்றும் வழிமுறைகளை சென்னை-34, புதிய எண்.13 (பழைய எண்.7), மகாத்மா காந்தி சாலை (நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை)யில், ரோஸி டவர், மூன்றாம் தளத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவின் நிர்வாக அலுவலரிடமிருந்து விண்ணப்பம் ஒன்றுக்கு சேவைக்கட்டணம் ரூ.100/- வீதம் சென்னையில் மாற்றக்கூடிய வகையில் 'தமிழ்நாடு மாநில ஹஜ் குழு'-வின் பெயரில் கேட்பு வரைவோலை அல்லது பணக்கொடுப்பாணை கொடுத்து 1-5-2008 முதல் விண்ணப்பத்தினை பெற்றுக் கொள்ளலாம்.

1. விண்ணப்பப்படிவங்கள் கோரும் கோரிக்கைகளை, விண்ணப்பம் ஒன்றுக்கு ரூ.100/-க்கான வரைவோலையுடன் (டிமாண்ட் டிராப்ட்) சென்னை, தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவின் நிர்வாக அலுவலருக்கு அனுப்பி வைக்க வேண்டும். வழிமுறைகளின் அடிப்படையில் ஒரு குழு/உறையில் ஆறு விண்ணப்பங்களுக்கு மிகாமல் உள்ளடங்கியதாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.

2.  நிரப்பப்பட்ட விண்ணப்பங்கள், தேவையான ஆவணங்கள், புகைப்படங்கள் மற்றும் நபரொன்றுக்கு, அந்நியச் செலாவணி முன்பணம் மற்றும் பலவகைக் கட்டணங்களுக்காக ரூ.10,700/-(ரூபாய் பத்தாயிரத்து எழுநூறு மட்டும்)-ஐ பாரத ஸ்டேட் வங்கியில், மத்திய ஹஜ் குழுவிற்கான நடப்புக் கணக்கு எண்.30361856116-ல் செலுத்தியதற்கான ரசீதின் நகலுடன் தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவிற்கு சமர்ப்பிக்கவேண்டும். நிரப்பப்பட்ட விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டிய கடைசி நாள் 31-5-2008 ஆகும்.

3. புனிதப் பயணம் மேற்கொள்ள விரும்பும் பயணிகள், கோரிக்கை மனுவுடன் விண்ணப்பம் ஒன்றுக்கு ரூ.100/-ஐ வரைவோலையாக (டிமாண்ட் டிராப்ட்) செலுத்தி, நேரடியாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ விரைந்து அனுப்பி விண்ணப்பப்படிவங்களைப் பெற்றுக்கொள்ளுமாறும், அவற்றைக் கடைசி தேதிக்கு முன்னர் சமர்ப்பித்து விண்ணப்பங்கள் உறுதி செய்யப்படுவதில் ஏற்படும் சிரமங்களைத் தவிர்க்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

 

மேலும் விபரங்களுக்குத் தமிழக அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்வையிடவும்.

 

http://www.tn.gov.in/pressrelease/pr300408/pr300408_322.pdf

 

தகவல்: முதுவை ஹிதாயத்
 

கருத்துக்கள் (0)add comment

கருத்து எழுதுக :
தமிழ்
ஆங்கிலம்
சிறிதாக்குக | பெரிதாக்குக
 

busy

 
Add Site to FavoritesAdd Page to FavoritesShare This PageEmail This Page
Back to Top

இறைமறை

Random Quran Verses

3: 108 (நபியே!) இவை(யெல்லாம்) அல்லாஹ்வின் வசனங்கள் - இவற்றை உண்மையாகவே உமக்கு நாம் கூறுகிறோம். மேலும் அல்லாஹ் உலகத்தோருக்கு அநீதி இழைப்பதை விரும்ப மாட்டான்.

ஆக்கங்களை அனுப்ப...

புதிய கருத்துக்கள்

peacetrain : எல்லாப்புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே.


Mohamed Rucknudeen : அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ். என்று இஸ்லா...


Mohamed Rucknudeen : அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ். மேலேயுள்ள க...


mohamed : அல்லாஹ அக்பர்.......


kamal : மின் அஞ்ஜஅல் அனுபினென் திரும்ப வந்துவிட்டது.


ABDUL KALAM.M : இன்ஷாஅல்லாஹ் அவள் முழு குர்ஆனையும் இ...


NAINAR MOHAMED.M(KHALEEL) : டாக்டர் முஹம்மட்த் அலி மிக சிரப்பான கட்டுரை தந்து இருக்கின்ரார் பாரட்டுக்கல்


hussain ali : இதனை மக்கள் எந்த அளவுக்குப் புரிந்து...


sheik : 'தேர்ந்தெடுக்கப்படும் நூல், சென்னை ர...


"கவியன்பன்" கலாம், அதிராம்பட்டினம் : முஹம்மத் அலி அவர்களின் சமுதாய அக்கறை...


Mohamed Abubacker Sidique : அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்). அன்பு சகோத...


பிறைநதிபுரத்தான் : மகளிர்க்கான இட ஒதுக்கீட்டில் முஸ்லி...


சஃபி : Godhra “witness” escapes to tell his story Vidya Subrahmaniam Husain Mulla says he was not in ...


சஃபி : ஆஸ்திரேலியாவில் இஸ்லாமிய வங்கி தொட...


ர. சிராஜ் முஹம்மது : அஸ்ஸலாமு அலைக்கும் அழகிய தொடர். நம் ...


abdul basith : ‘ஹயாத்து முஹம்மத்’ நூலையே தமிழாக்கம் செய்யலாமா?


அஹமத் .'.பைசல் : அதிகமான இஸ்லாமிய ஆக்கங்கள் படிப்பதற...


Yasin.m : திருகுரானை எப்படி பதிவிறக்கம் செய்வ...



You are here  : முகப்பு செய்திகள் தமிழக செய்திகள் ஹஜ் 2008 : விண்ணப்பிக்கத் தமிழக அரசு அழைப்பு!