சத்தியமார்க்கம்.காம்

சவுதியில் பணி புரிவோருக்கு மருத்துவ உதவி! print Email
உதவிக் கரங்கள் - உதவிக் கரங்கள்
வியாழன், 17 ஏப்ரல் 2008 14:31

சவுதி அரேபியாவில் பணியாற்றி வரும் வசதிக் குறைவான வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு மருத்துவ சிகிச்சைக்கான நிதி உதவிகளை செய்ய இளவரசர் அல் வலீத் பின் தலால் முன் வந்துள்ளார்.

சவுதி அரேபிய அரசக் குடும்பத்தைச் சேர்ந்தவர் இளவரசர் அல் வலீத்.  பெரும் செல்வந்தரான இவர் உலகப் பெரும் பணக்காரர்கள் பட்டியலிலும் இடம் பெற்றுள்ளார்.  இவர் சவுதி அரேபியாவில் பணியாற்றி வரும் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு மருத்துவ சிகிச்சைக்கான நிதியுதவி, சிகிச்சை உதவி ஆகியவற்றை வழங்குவதாக அறிவித்துள்ளார்.

WAMY எனப்படும் 'உலக முஸ்லிம் இளையர் அமைப்பு', சிகிச்சைக்கான தேவை உள்ளிட்டவை குறித்துப் பரிசீலித்து, இளவரசருக்குப் பரிந்துரைக்கும். அதன் பேரில் உதவிகள் வழங்கப்படும்.

இந்த நிதியுதவியைப் பெறும் தேவையுடையவர்கள் கீழ்க்கண்ட முகவரியில் ரியாத் நகரில் உள்ள WAMY தலமையகத்தைத் தொடர்பு கொள்ளலாம். 

சகோ. ஹமாத் அல் அசிம்,

WAMY தலைமையகம்,

கிங் ஃபஹத் சாலை,

உவைஸ் மார்க்கெட் எதிரில்,

ரியாத் - சவுதி அரேபியா

தொலைபேசி எண்- 2050000

Mr Hamad Al Asim

WAMY Head Quarters,

King Fahd Road,

Opposite Owais Market.

Riyadh- Saudi Arabia.

(Phone No: 2050000)

Trackback(0)
கருத்துக்கள் (1)add comment
0
முஸ்லிம்:
நல்ல சேதி! சவூதியில் பணி செய்து வரும் வெளிநாட்டுத் தொழிலாளர்களின் உடல் நலக்குறைவில் சவூதி அரசு ஒரு சதவிதமும் அக்கறைக் காட்டுவதில்லை. மருத்துவ விஷயத்தில் வெளிநாட்டினரை மனிதர்களாக் கூடக் கருதாமல் மிகக் கேவலமாக நடத்தப்படுகிறார்கள். இந்நிலை மாறவேண்டும். மருத்துவ உதவி என்பது வெறும் காய்ச்சல், தலைவலி, ஜலதோஷத்து உதவுவதில்லை. மாறாக உயிருக்கு அபாயத்தை விளைவிக்கும் நோய்க்கு உடனடி உதவி செய்து அவர்களைக் காப்பாற்ற வேண்டும். //WAMY எனப்படும் 'உலக முஸ்லிம் இளையர் அமைப்பு', சிகிச்சைக்கான தேவை உள்ளிட்டவை குறித்துப் பரிசீலித்து, இளவரசருக்குப் பரிந்துரைக்கும். அதன் பேரில் உதவிகள் வழங்கப்படும் // அவசர சிகிச்சை அளிக்க வேண்டிய ஒருவருக்கு பரிந்துரை பேரில் உதவி எதிர்பார்த்திருந்தால் அவர் பரலோகம் போய் சேர்ந்த பின்பே உதவி வந்து சேரும். ஏனென்றால் பரிந்துரை பேரில் கிடைக்கும் அரசு உதவிகளெல்லாம் உடனுக்குடன் கிடைப்பதில்லை, இதுவும் மாற்றப்பட வேண்டும்.
1

April 19, 2008 19:06

கருத்து எழுதுக :
தட்டச்சு மொழி மாற்ற crtl+g அழுத்துங்கள்.
சிறிதாக்குக | பெரிதாக்குக

busy
 

இறைமறை

இப்பக்கத்தை PDF வடிவில் சேமிக்க...

தேடுக...

Random Quran Verses

2:28 நீங்கள் எப்படி அல்லாஹ்வை நம்ப மறுக்கிறீர்கள்? உயிரற்றோராக இருந்த உங்களுக்கு அவனே உயிரூட்டினான். பின்பு அவன் உங்களை மரிக்கச்செய்வான். மீண்டும் உங்களை உயிர் பெறச் செய்வான். இன்னும் நீங்கள் அவன் பக்கமே திருப்பிக் கொண்டு வரப்படுவீர்கள்.

புதிய கருத்துகள்

kalibulla : very good and happy news go ahead,.


Ibrahim ulavi london : Assalamu alaikum, This is very happy news for every muslim . our brother CNM SALIM And brother Imran...


j.ameer ali : On our part, let all of us pray for his good health and long life service to our society. By J.Ameer...


Ansary : This is a great news to know. He is doing fine. This is a very good example to other District Collec...


y.m.anari : ஹிஜாப் பற்றி இந்தத் தளத்தினர் குரான்...


Jaffer : Masha Allah ...May allah bless him and guide him to strive in the straight path.


Karunakaran : Salute to Collector Ahmad... You are the REAL hero!


haneefm : رَبَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَن...


M Muhammad : Assalamu Alaikum Dear Brother J Ameer Ali KSA // Dear editor, would you please send the complete ad...


Li_Brothers : கணக்குகள் சரி பார்க்கப்படும் அந்த மற...


j.ameer ali, ksa : Dear editor, would you please send the complete address of that Elders' orphanage,Rajagiri to my e-...


j.ameer ali, ksa : May Almighty Allah show our society the right path of living. Is there no Imam and Jumma prayers in ...


சுலைமான் : புறம் ஒரு சமூகத் தீமை. கூர்மையான வரிக...


Noor Huq : Thank u for the information. Starting college like this is very neccessary for the women living ar...


faizal : masha allah.Its very useful


mohamed iqbal : அஸ்ஸலாமு அலைக்கும் வரஹமதுல்லாஹ், ம...



You are here  : முகப்பு சேவைகள் உதவிக்கரம் சவுதியில் பணி புரிவோருக்கு மருத்துவ உதவி!
Twitter
RSS
YouTube
English