| திருக்குர்ஆன் உருவாக்கிய சமுதாயம்! |
|
|
| கட்டுரைப் போட்டிகள் - வருடம் 2007 | |||||
| வெள்ளி, 14 மார்ச் 2008 11:13 | |||||
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்.
இஸ்லாம் என்பது உலகளாவிய வாழ்க்கை நெறி - மார்க்கம் - என்பதை "உம்மத்தன் வாஹிதா - ஒருங்கிணைந்த இஸ்லாமிய உலகம்" என்று குறிப்பிடப் படுகிறது. "மனிதர்களுக்காக தோற்றுவிக்கப் பட்ட (சமுதாயங்களுள்) சிறந்த சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள். நீங்கள் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டு, நல்லதை செய்ய ஏவுகிறீர்கள்; தீயதை விட்டு விலக்குகிறீர்கள்" (அல்குர் ஆன் 3 :110). 1400 ஆண்டுகளுக்கு முன் மக்கள் சிலை வணக்கம் செய்பவர்களாகவும் தனிமனிதனை வணங்குபவர்களாகவும் கொலைவெறி பிடித்தவர்களாகவும் அநாதைகளின் சொத்தையும் வட்டியையும் உண்பவர்களாகவும் பெண்களை இழிவுபடுத்துபவர்களாகவும் தீயொழுக்கமுடையோர்களாக, சீர்கெட்ட நிலையில் இருந்தனர். இதற்குக் காரணம் அறியாமையும் சரியான வழிகாட்டுதலும் இல்லாததே. அந்தச் சீர்கெட்ட சமுதாயத்தைச் சீர்படுத்த அவர்களிலிருந்தே ஒரு நபியை - ரசூல் (ஸல்) அவர்களை - முன்மாதிரியாக வாழ்ந்து காட்டவும் அவர்கள் மூலமாக திருமறையாம் 'குர்ஆனை'(சட்ட புத்தகத்தை)யும் இறைவன் அருளினான். திருக்குர்ஆனிலுள்ள அனைத்துச் சட்டங்களையும் நடைமுறைப்படுத்தி மக்களின் ஆன்மீக, சமூக, பொருளாதார, அரசியல் வாழ்க்கையில் வெற்றிகண்ட சமுதாயம் தான் "திருக்குர்ஆனிய சமுதாயம்" அதாவது "தலை சிறந்த சமுதாயம்" (The best community). ஆன்மீக வாழ்க்கை: பல தெய்வங்களையும் சிலைகளையும், தனி மனிதனையும் வணங்கியவர்கள் அவற்றை விட்டுவிட்டு 'ஓர் இறை'க் கொள்கையை ஏற்றனர்.
தீண்டாமை குல வேற்றுமையின் உச்சத்திலிருந்த மக்களின் தீண்டாமைப் பண்பை வேரோடு அறுத்து, சாதி, குலம், நிறம்,மொழி, இனம், தேசம் போன்றவற்றால் மனிதர்களுக்கிடையே உயர்வு தாழ்வு இல்லாத சமுதாயமே நமது திருமறைச் சமுதாயம். நபி(ஸல்) அவர்களின் தலைமையில் சட்ட புத்தகமாம் குர்ஆனைப் பின்பற்றி சமூக ஒற்றுமையுடன் பலதுறைகளில் வளர்ச்சிப் பாதையில் செல்ல திருமறைச் சமுதாயம் உறுதுணையாக இருந்தது. அன்பான, அமைதியான,ஆடம்பரமற்ற அறநெறி வாழ்கையே குர்ஆனிய சமுதாயத்தின் குடும்ப வாழ்க்கை. உறவினர்களைப் பேணுதல், அண்டைவீட்டாருடன் பெருந்தன்மயாக நடந்து கொள்ளல், வந்தவர்களிடம் தாராளமாக நடந்து கொள்ளல்,பெரியவர்களை மதித்தல், கோள்,புறம், அவதூறு, பொய் ஆகியவற்றைத் தவிர்த்து, தீமையை ஒழித்து, அன்பு, ஒழுக்கம் பேணி மேன்மையாக வாழ வழிகாட்டுகிறது நமது திருமறை. ஒவ்வொரு உறவிற்கும் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்து சீரான சிறந்த வாழ்கை வாழ்வதே நமது திருமறைச் சமுதாயம். வியாபாரத்தை ஹலாலாக்கி, வட்டியை ஹராமாக்கி திருமறை கூறியபடி வட்டியில்லா நிதிமுறையை பின்பற்றி வாழ்ந்தனர் திருமறைச் சமுதாயத்தார். விவசாயம், கால்நடை வளர்ப்பு போன்ற நியாயமான முறையில் பொருள் தேடினர். சரியான அளவு நிறுவையில், ஒளிவு மறைவின்றி மோசடியற்ற தொழில் செய்தனர். தானதர்மங்கள் செய்து கலப்பற்ற தூய்மையான பொருளாதார வாழ்க்கையை பின்பற்றினர் திருமறைச் சமுதாயத்தினர். ஆக்கம்: சகோதரி சாராபேகம் எம்.ஏ
2007-ஆம் ஆண்டு சத்தியமார்க்கம்.காம் நடத்திய கட்டுரைப்போட்டி முடிவுகளை அறியவும் பரிசுகளை வென்ற அனைத்துக் கட்டுரைகளையும் படிக்கவும் இங்கு சொடுக்குங்கள்.
பகிர்ந்து கொள்க
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
Trackback(0)
கருத்துக்கள் (0)
![]() கருத்து எழுதுக :
|