சத்தியமார்க்கம்.காம்

அமெரிக்கப் பொருளாதாரத்தை அதிரவைக்கும் இராக் போர் செலவினங்கள் print Email
செய்திகள் - உலகச் செய்திகள்
வியாழன், 06 மார்ச் 2008 19:58

{mosimage}நியூயார்க்: இராக் போரின் விளைவாக அமெரிக்கப் பொருளாதாரத்தில் கடும் தொய்வு நிலை ஏற்பட்டுள்ளது எனவும் அது பொருளாதார மீட்பிற்கு இடையூறாக உள்ளது எனவும் நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் ஜோஸெஃப் ஸ்டிக்லிட்ஜ் கூறுகிறார்.

 

இதற்கிடையே US அரசாங்கம் போர்ச்செலவீனங்களை மிகவும் குறைவானதாகக் தப்புக்கணக்குக் காட்டி வருகிறது என்று ஸ்டிக்லிட்ஜும் துணை ஆசிரியர் லின்டா பில்மெஸும் அவர்களது புத்தகமாகிய The Trillion Dollar War என்ற தமது நூலில் குறிப்பிட்டுள்ளார்கள்.

சுமார் ஐந்து ஆண்டுகளாக நடைபெறும் இந்த போர், ஆரம்பத்தில் இராக்கின் எண்ணெய் ஏற்றுமதிகள் மூலமே மேலதிகச் செலவுகளின்றி சரியாகிவிடும் என்ற நிலை தற்போது அமெரிக்க நிதிக்கருவூலத்திற்கு நேரடியாக 845 பில்லியன் டாலர் செலவீனமாகியுள்ளது.

 

ஒரு காலத்தில் போர்கள் பொருளாதாரத்திற்கு நல்லது என்று கருதப்பட்டது. எந்த ஒரு பொருளாதார நிபுணரும் தற்போது இந்த கருத்தை சரிகாணுவதோ நம்புவதோ இல்லை, என்று ஸ்டில்கிலிட்ஜ் ஒரு நேர்காணலில் கூறினார்.

 

ஸ்டிக்லிட்ஜும் பில்மெஸும் தமது மிகவும் நடுநிலையான கணிப்பின் அடிப்படையில் இதன் செலவீனங்கள் குறைந்தது 3 டிரில்லியன் டாலர் வரையாகியிருக்கும் என்று வாதிடுகின்றனர். மேலும் இதன் செலவீனங்கள் பணவீக்கத்தையும் கருத்தில் கொண்டால் இரண்டாவது உலகப் போருக்கான செலவையும் தாண்டி 5 டிரில்லியன் ஆகும் என்று குறிப்பிடுகின்றனர்.

 

இதில் நேரடிச் செலவுகளில் போருக்காகப் பெறப்பட்ட கடன் மீதான வட்டி, போரிலிருந்து தாயகம் திரும்பி வருபவர்கள் உடல் நலம் மற்றும் மருத்துவ செலவுகள், போரில் உபயோகித்துப் பாழாகி தரம் குறைந்த இயந்திரங்கள் பழுது பார்த்தல், அல்லது மாற்றிட ஆகும் செலவுகள் ஆகியன சேர்க்கப்படவில்லை என்பதையும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

அதோடு, வரவு செலவுத் திட்டத்தில் சேர்க்கப்படாத எண்ணெய் விலையேற்றம் தொடர்பான சமூகப் பொருளாதாரச் சார்புடைய இதர செலவீனங்களையும் புத்தகம் விவரிக்கின்றது. இந்த பணத்தை இதர பயனுள்ள செலவுகளில் எப்படி ஈடுபடுத்தியிருக்க இயலும் என்பதை விவரிக்க பில்மெஸ் அவர்கள், அமெரிக்காவின் மதியிறுக்க (Autism) ஆராய்ச்சிக்கு வருடத்தில் 108 மில்லியன் டாலர் செலவிட ஒதுக்கீடு செய்யப்படுள்ளதை மேற்கோள் காட்டி, இதே தொகை ஒவ்வொரு நான்கு மணி நேரத்தில் ஈராக்கில் செலவிடப்படுகிறது என்று கூறினார்.

 

ஒரு டிரில்லியன் டாலர் இருந்தால் 15 மில்லியன் பள்ளி ஆசிரியர்களை ஓராண்டிற்குப் பணியில் அமர்த்தியிருக்கலாம், அல்லது 43 மில்லியன் மாணவர்களுக்கு 4 ஆண்டுகள் இலவச உயர்நிலைக் கல்லூரியில் கல்வி பயில வைத்திருக்கலாம் என்றும் அந்தப் புத்தகம் கூறுகிறது.

 

ஸ்டிக்லிஸ்ட்ஜும் பில்மெஸும் தாங்கள் தங்கள் போர் எதிர்ப்புச் சார்பான கருத்துக்களுக்கு ஈடாக்க, இந்த கணக்கீட்டில் மிகவும் நடுநிலையான போக்கையே மேற்கொண்டுள்ளதாக இந்நூலில் கூறுகின்றனர்.

 

இராக் மீதானப் போரின் விளைவாகவே அமெரிக்காவின் நிதி நிலையில் தற்போது மாபெரும் தொய்வு ஏற்பட்டுள்ளதாக நிச்சயமாகத் தாம் கருதுவதாக ஸ்டிக்லிட்ஜ் கூறினார்.

அமெரிக்க நிதி நிறுவனங்களில் பிரச்சினைகள் ஏற்பட்டபோது, அவர்கள் மத்திய கிழக்கின் ஆட்சியாளர்களின் நிதிகளின் பக்கம் தமது மீள் வரவுக்கும் பொருளாதார மீட்சி வழிவகைகளுக்கும் எதிர்நோக்க வேண்டிய நிலை ஏற்பட்டது என்று அவர் கூறினார். நூலாசிரியர்கள் இது போன்ற மேலும் பல அதிர்ச்சியளிக்கும் உண்மைகளை இந்நூலில் வெளியிட்டுள்ளனர்.

கருத்துக்கள் (2)add comment

எழுதியவர்: arshad , March 07, 2008 11:42

alhamdulilah., allahu akbar



எழுதியவர்: Faiyaz Ahmed , March 08, 2008 04:45

அஸ்ஸலாமு அலைக்கும் இந்தா வெப்சைட் மிகவும் பயனுள்ளதாக உள்ளது ஈமெயில் வரும் தகவல்களை படிக்க முடியவில்லை fஅன்ட் பிரச்சினை உள்ளது ஆகையால் fஅன்ட் டவுண்லோடு கமன்ட் கொடுத்தால் ஈமெயில் வரும் தகவல்களை படிக்க முடியும்.



கருத்து எழுதுக :
தமிழ்
ஆங்கிலம்
சிறிதாக்குக | பெரிதாக்குக
 

busy

 
Add Site to FavoritesAdd Page to FavoritesShare This PageEmail This Page
Back to Top

இறைமறை

Random Quran Verses

6: 32 உலக வாழ்க்கை வீணும் விளையாட்டுமேயன்றி வேறில்லை. இறைவனை அஞ்சுவோருக்கு மறுமை வாழ்வே சிறந்ததாகும். நீங்கள் இதை விளங்க மாட்டீர்களா?

ஆக்கங்களை அனுப்ப...

புதிய கருத்துக்கள்

imran kahn.n : அல்ஹம்துலில்லாஹ்


peacetrain : எல்லாப்புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே.


Mohamed Rucknudeen : அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ். என்று இஸ்லா...


Mohamed Rucknudeen : அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ். மேலேயுள்ள க...


mohamed : அல்லாஹ அக்பர்.......


kamal : மின் அஞ்ஜஅல் அனுபினென் திரும்ப வந்துவிட்டது.


ABDUL KALAM.M : இன்ஷாஅல்லாஹ் அவள் முழு குர்ஆனையும் இ...


NAINAR MOHAMED.M(KHALEEL) : டாக்டர் முஹம்மட்த் அலி மிக சிரப்பான கட்டுரை தந்து இருக்கின்ரார் பாரட்டுக்கல்


hussain ali : இதனை மக்கள் எந்த அளவுக்குப் புரிந்து...


sheik : 'தேர்ந்தெடுக்கப்படும் நூல், சென்னை ர...


"கவியன்பன்" கலாம், அதிராம்பட்டினம் : முஹம்மத் அலி அவர்களின் சமுதாய அக்கறை...


Mohamed Abubacker Sidique : அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்). அன்பு சகோத...


பிறைநதிபுரத்தான் : மகளிர்க்கான இட ஒதுக்கீட்டில் முஸ்லி...


சஃபி : Godhra “witness” escapes to tell his story Vidya Subrahmaniam Husain Mulla says he was not in ...


சஃபி : ஆஸ்திரேலியாவில் இஸ்லாமிய வங்கி தொட...


ர. சிராஜ் முஹம்மது : அஸ்ஸலாமு அலைக்கும் அழகிய தொடர். நம் ...


abdul basith : ‘ஹயாத்து முஹம்மத்’ நூலையே தமிழாக்கம் செய்யலாமா?


அஹமத் .'.பைசல் : அதிகமான இஸ்லாமிய ஆக்கங்கள் படிப்பதற...



You are here  : முகப்பு செய்திகள் உலக செய்திகள் அமெரிக்கப் பொருளாதாரத்தை அதிரவைக்கும் இராக் போர் செலவினங்கள்