சத்தியமார்க்கம்.காம்

தமிழகத்துக்கு ரெட் அலர்ட்! print Email
ஏடு-இட்டோர்-இயல் - தலையங்கம்
செவ்வாய், 04 மார்ச் 2008 17:36

{mosimage}"வந்தாரை வாழ்வாங்கு வாழ்விக்கும்" எனப் புகழ் பெற்ற தமிழ்நாடு, சங்ககாலத்திலிருந்து அமைதிக்கும் பெயர் பெற்றது. "தமிழுக்கு அமுதென்று பேர்" என்றார் பாரதிதாசன். 'இனிமை' எனும் தன்மையைத் தன்னகத்தே கொண்ட தமிழ்மொழி  போன்றே பழக இனிமையானவர்களையும் பண்பாடு நிறைந்தப் பழக்க வழக்கங்களைக் கொண்டவர்களையும் பிறப்பிலிருந்தே உருவாக்குவதிலும் தனிச் சிறப்புப் பெற்ற நாடு இந்தத் தமிழ்நாடு.

இந்தியா விடுதலை அடைந்தக் காலகட்டங்களில் வடக்கே இனத்தின் அடிப்படையிலான பிரச்சனைகள் எழுந்து வங்காளத்தை மையமாகக் கொண்டு நாடெங்கும் கலவரம் தலைவிரித்தாடிய மோசமான காலகட்டத்தில்கூட, உலக நாடுகளுக்கிடையில் தலைநிமிர்த்தி நிற்க வைக்கும் இந்தியாவின் தாரக மந்திரமான "வேற்றுமையில் ஒற்றுமையை" நடைமுறையில் நிகழ்த்திக் காட்டிச் சாதனைப் படைத்த மண் இந்தத் தமிழ்மண்.

 

திராவிடம், திராவிடர் என்ற இந்தியாவிற்குச் சொந்தமான சொல், பொதுவாகத் தமிழகத்துடன் கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகிய மூன்று தென்னக மொழிகளைப் பேசும் தென்மாநிலங்களைச் சேர்ந்தவர்களைக் குறிப்பிட்டாலும் குறிப்பாகத் தமிழகத்தையும் தமிழர்களையும் குறிக்கவே இச்சொல் நடைமுறையில் கையாளப்படுகின்றது. தன்னைத் திராவிடன் என்றும் இது திராவிட நாடு என்றும் கூறுவதில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் இறுமாந்திருந்தக் காலமும் உண்டு. அத்துணைக்கு இந்நாட்டில் வாழ்ந்தவர்கள் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ, ஏழை, பணக்காரன் என்றப் பாகுபாடு காண்பிக்காமல் திராவிடன் என்ற ஒற்றைச் சொல்லில் தம்மை அடையாளப்படுத்திக் கொண்டு இருந்தனர்.

 

ஒரு காலத்தில் தமிழகத்தின் பல பாகங்களிலும் இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் என அனைவரும் தங்களின் மத, இன அடையாளங்களை மறந்து மாமன், மச்சான், அண்ணன், சித்தப்பா என முறைகொண்டாடி இன்பமுடன் வாழ்ந்திருந்தனர். இப்பொழுதும் கூட சில கிராமப்புறப் பகுதிகளில் இத்தகையப் பழக்கம் தமிழர்களிடையே காணப்படுவது கண்கூடு.

 

எத்தகையப் பிரச்சனைகள் என்றாலும் தங்களிடையே பரஸ்பரம் உதவிகளைச் செய்து கொண்டு ஒரு குடும்பம் போன்று வாழ்ந்து வந்தத் தமிழக மக்களிடையே அண்மைக்காலங்களில் விரும்பத்தகாதப் பல்வேறு நிகழ்வுகள் நடந்து வருவதைக் காணமுடிகிறது. முக்கியமாக இணக்கமாக வாழ்ந்து வரும் சமுதாயங்களுக்கிடையில் பிணக்குகளின் மூலம் பிளவுகளைத் தோற்றுவிக்கவும் சமூகத்தில் ஒரு குறிப்பிட்டச் சமூகத்தைத் தனிமைபடுத்துவதற்குமான பல நிகழ்வுகள்  திட்டமிட்டே நடத்தப்பட்டு வருகின்றன. விடுதலைக்கான போராட்ட வேளையில் ஆங்கிலேயனுக்கு எதிராகக் கப்பலோட்டிச் சாதனைப் படைத்தவர் திரு. வ.உ. சிதம்பரனார் அவர்கள். இந்துச் சமுதாயத்தைச் சேர்ந்த அவருக்குக் கப்பல் வாங்குவதற்கானப் பண  உதவியை வழங்கியவர் ஒரு முஸ்லிம். இந்த அளவிற்குச் சுதந்திரத்திற்கு முன்னர் இருந்தத் தமிழக மக்களின் இணக்க வாழ்வு, இன்று தாடி வைத்த ஒரு முஸ்லிமை ஒரு இந்து பார்த்தால் "இவன் தீவிரவாதியாக இருப்பானோ?" என்ற சந்தேகப் பார்வையுடன் விலகிச் செல்வதற்கும் அவனுக்கு எதிராக ஏதாவது செய்ய முடியுமா? எனச் சிந்திக்கத் தலைபடுவதற்கும் சாத்தியம் நிறைந்ததாக இன்றையத் தமிழக நிலை கவலைக்குரிய மாற்றம் அடைந்துள்ளது.

 

இதற்கான காரணம் என்ன? உண்மையிலேயே தமிழக முஸ்லிம்கள் அவ்வாறான பயங்கரவாதிகள்தாமா? நாட்டு விடுதலைக்காகத் தனது மக்கள் தொகை வீதத்திலும் மிகமிக அதிகமாக இரத்தமும் இன்னுயிரும் ஈந்த இந்தச் சமுதாயம், தேச ஒற்றுமையைக் குலைக்கும்  செயலில் ஈடுபடுமா? சாத்வீகத்தையும் அமைதியையும் சகோதர, சமத்துவத்தையும் போதிக்கும் ஒரு மார்க்கத்திற்குச் சொந்தக்காரர்கள் மனிதநேயத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுவார்களா? இல்லை! நிச்சயமாக இல்லை!

 

"அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் அண்டை வீட்டாருக்குத் தொல்லை தர வேண்டாம். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் விருந்தினரைக் கண்ணியப்படுத்தட்டும். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் (ஒன்று) நல்லதைப் பேசட்டும். அல்லது வாய்மூடி இருக்கட்டும்" என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி) புகாரீ 6018, 6136, 6475)

 

அண்டை அயலாரை மாமன், மச்சான்களாகச் சொந்தம் கொண்டாடி வாழ்ந்த இறையச்சம் கொண்ட எந்த ஒரு முஸ்லிமும், தான் ஏற்றுக் கொண்ட வாழ்வியல் முன்மாதிரியான இறைத்தூதரின் வார்த்தைகளை சிரமேற்கொண்டு வாழ்ந்து வரும் எந்த ஒரு முஸ்லிமும் அத்தகையச் செயல்பாடுகளில் ஈடுபடமாட்டான் என்பது திண்ணம். பின்னர் எப்படி, எதனால் இவர்களுக்குப் பயங்கரவாதப் பட்டம் சூட்டப் படுகிறது? அதற்கான விடையினை மிகத் தெளிவாகத் தென் மாநிலங்களில் அண்மையில் நடந்து வரும் சில நிகழ்வுகள் தெளிவாக்குகின்றன.

 

இந்தியாவை அடக்கியாண்டுக் கொண்டிருந்த அந்நியனுக்கு எதிராக இந்திய மக்கள் ஒற்றுமையாகத் தங்கள் வீரியப் போராட்டங்களை வெளிப்படுத்திக் கொண்டிருந்த 1924 களின் பொழுது, இந்தியச் சுதந்திரத்திற்காகப் போராட வேண்டும் என்ற நோக்கம் அல்லாமல் மற்றொரு நோக்கத்திற்காக - முஸ்லிம்களை அழித்தொழிக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக உருவாக்கப்பட்ட RSS என்றக் கூட்டுப் பார்ப்பனப் படை, இந்தியச் சுதந்திரத்திற்குப் பின் கடந்த 60 வருடக் காலயளவில் இந்தியாவின் வட மாநிலங்களில் தங்களின் திட்டத்தைச் செயல்படுத்துவதற்குத் தேவையான சிந்தனையை இந்துக்கள் மனதில் ஓரளவு விதைத்து விட்ட வெற்றியோடுத் தற்பொழுது தென்னக முஸ்லிம் சமுதாயத்தைத் தனிமைப் படுத்தி இல்லாமலாக்க வேண்டும் என்றத் தெளிவான திட்டத்துடன் களமிறங்கியுள்ளன. கடந்த சில வருடங்களாகத் தென் மாநிலங்களான கேரளம், கர்நாடகம், தமிழ்நாடு போன்றவற்றில் நிகழும் சில நிகழ்வுகளை ஊன்றிக் கவனித்தால் இது புலனாகும்.

 

முஸ்லிம் சமுதாயத்தைத் தனிமைப் படுத்த RSS எடுத்துக் கொண்ட ஆயுதமான "தீவிரவாதம், தீவிரவாதி" என்றச் சொல் வடக்கில் தற்பொழுது நன்றாக எடுபட ஆரம்பித்து விட்டது. ஏதாவது ஒரு காரணத்திற்காக ஒரு முஸ்லிம் கைது செய்யப்பட்டால் அவனை தீவிரவாதி என்ற அடைமொழியினூடாகவே அழைக்கும் வடநாட்டுப் பழக்கத்தைத் தென்னகத்தில் விதைப்பதற்கான முஸ்தீபுகள் விரைந்து எடுக்கப்பட்டுள்ளன.

 

இதன் வெளிப்படையான ஆதாரமே, கடந்த ஜனவரி 24 ஆம் தேதி தமிழகத்தின் முக்கிய நகரான தென்காசியில் மக்கள் கூடும் பேருந்து நிலையம் மற்றும் RSS அலுவலகம் மீது நடந்த வெடிகுண்டுத் தாக்குதல். இத்தாக்குதல் நடந்த சில மணி நேரங்களிலேயே இந்து முன்னணித் தலைவர் ராம கோபாலன் உட்பட அனைத்து இந்துத்துவ முக்கியஸ்தர்களும் ஒரே குரலில் "இஸ்லாமியத் தீவிரவாதிகளைக் கைது செய்" எனக் கூக்குரல் எழுப்பினர். தனது 1998 ஆட்சியின் பொழுது முஸ்லிம்களுக்கு எதிராகக் கோயம்புத்தூர் விஷயத்தில் நடந்து கொண்ட இன்றைய தமிழக முதல்வர் கருணாநிதியின் அதே ஆட்சி, இம்முறை எதிர்பாராத விதமாக நடுநிலையான விசாரணையின் மூலம் அடுத்தச் சில தினங்களிலேயே அக்குண்டுவெடிப்புகளின் பின்னணியில் செயல்பட்ட உண்மையான தீவிரவாதிகள் யார் என்பதை வெளிக் கொண்டுவந்தது.

 

ஆரம்பத்தில் கைது செய்யப்பட்டக் குண்டு வெடிப்புக்குக் காரணமானவர்கள், "கவனத்தைத் திருப்புவது மட்டுமே எங்களின் இலட்சியம்" எனக் கூறியப் பொய்யும் தொடர்ந்து வந்த பிப்ரவரி 17 உடைக்கப்பட்டது. தமிழக மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய அந்த பிப்ரவரி 17அன்று, தென்காசி குண்டு வெடிப்பின் சூத்ரதாரியான தலைமைத் தீவிரவாதி கைது செய்யப்பட்டான்.  ஊடகங்கள் மூலம் மக்கள் மனதில் ஊட்டப்பட்டது போன்று கைதான தீவிரவாதி ஒரு முஸ்லிம் அல்லன். தென்காசியின் பக்கத்து நகரமான கடையநல்லூரின் இந்துமுன்னணி பொதுச் செயலாளர் சிவா என்ற சிவானந்தம் என்பவன்தான் தென்காசிக் குண்டு வெடிப்புகளின் சூத்ரதாரி. அது மட்டுமல்ல; இந்தச் சிவா என்கிற தீவிரவாதி முன்னர் வேலை செய்திருந்த பக்கத்து மாநிலமான கேரளச் செங்கல் குவாரியிலிருந்து அம்மோனியம் நைட்ரேட் உட்பட குண்டுகள் தயார் செய்யப் பயன்படும் பொருட்களைத் தமிழகத்துக்குக் கடத்தி வந்த பயங்கரவாதி என்பதும் தெரிய வந்துள்ளது.

 

இவ்வாறு கடத்தப்பட்டப் பொருட்கள் எங்கே வைக்கப்பட்டுள்ளன என்பது போன்ற விவரங்கள் ஏதும் இதுவரை வெளியாகவில்லை. அதே நேரம் செங்கல் குவாரியை மையமாகக் கொண்டு கேரளாவில் RSS-ஐச் சேந்தவர்கள் வெடிகுண்டு தயார் செய்வதாகக் கிடைத்தத் தகவலின் பெயரில் கேரளக் காவல்துறை செய்த மின்னல் பரிசோதனைகளில் மட்டன்னூருக்கு அடுத்த கருஞ்சி போன்ற இடங்களிலுள்ள செங்கல் குவாரிகளிலிருந்துப் பயங்கர வெடிபொருட்களைக் காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். கடந்த பிப்ரவரி 12 அன்று அதே மட்டன்னூரில் ஒரு RSSகாரனின் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்துச் சிதறியதில் அவன் வீட்டிலுள்ளோர் படுகாயம் அடைந்த சம்பவமும் நடந்தது.

 

பிப்ரவரி 28 அன்று திருவனந்தபுரம் மேற்குக் கோட்டையிலுள்ள மித்ரானந்தபுரம் ஆலயத்தின் பின்புறமுள்ள RSS காரியாலயமான சக்திநிவாஸிற்கு அருகில் இதே போன்று பதுக்கி வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்துச் சிதறியுள்ளது. கேரளத்தில் ஆர்.எஸ்.எஸினர் நடத்திய பல அக்கிரமச் சம்பவங்களின் பொழுது நடத்தப்பட்டச் சோதனைகளில் பலமுறை வெடிகுண்டுகள் உட்பட பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்ட அதே RSS அலுவலகம் தான் இந்த சக்திநிவாஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மேற்கண்ட இத்தனை நிகழ்வுகளையும் கூட்டிப் பார்க்கும் பொழுது ஒரு விஷயம் தெளிவாகப் புலனாகிறது. வடக்கில் தங்களது பிரிவினை இலட்சியத்தினை மிகச் சரியாகப் பூர்த்தி செய்து கனி கொய்யும் சங்கபரிவாரக் கும்பல் தற்பொழுது தங்கள் இலட்சியமாகத் தென்னகத்தைத் தேர்ந்தெடுத்துள்ளது என்ற பயங்கர உண்மைதான் அது. இருமுறை இந்தியப் பாராளுமன்றத்தை ஆளும் நிலைவரை வந்து விட்ட சங்கபரிவாரத்தால் அதனை தனிப்பெரும்பான்மையுடன் தக்க வைக்க முடியாமல் தடுமாறும் அதன் அரசியல் இயலாமையை இங்கு நினைவில் கொள்ள வேண்டும்.

 

வடக்கில் கிடைக்கும் வாக்குகளுக்கும் பாராளுமன்றத் தொகுதிகளுக்கும் இணையாகத் தெற்கில் கிடைக்காதது, சங்கபரிவாரத்தின் 'நித்திய கண்ட'த்திற்குப் பிரதானக் காரணமாகும். பாபரி மஸ்ஜிதிலிருந்து, தேச விரோதம் வரைத் தங்களின் அனைத்துத் துருப்புச் சீட்டுகளையும் இறக்கி இயன்றவரை நன்றாக நிலை கொண்டு விட்ட வடக்கு போன்று தெற்கில் இவர்களால் இது வரை நிலை கொள்ள இயலவில்லை.

 

அறுதிப் பெரும்பான்மைக்கான ஒரே வழி, தெற்கில் குறிப்பிட்ட அளவு தொகுதிகளைக் கைப்பற்றுவது மட்டுமே ஆகும். அதற்கான உபயம் தான் வடக்கில் பரிசீலித்த "தீவிரவாதத்" தந்திரத்தைத் தற்பொழுது தெற்கில் செல்லுபடியாக்க முயல்வது. அதற்காகத் தென்னகத்தின் அனைத்து மாநிலங்களிடையே மிகத் தெளிவான கட்டமைப்புடன் "முஸ்லிம் தீவிரவாதிகளை" உருவாக்குவதற்கான வெடிகுண்டுகளைப் பெருவாரியாக RSS தலைமையங்களில் பதுக்கித் தென்காசியைப் போன்று தேவைக்கேற்பத் தேவைப்படும் இடங்களுக்குக் கடத்தி வெடிக்க வைத்தலாகும்.

 

அடித்துப் பிடித்துக் கர்நாடகத்தில் சில பாராளுமன்ற தொகுதிகளைப் பெற்றிருப்பதும் கேரளத்தில் இதுவரை ஒரு தொகுதி கூட வெற்றி பெற இயலாததையும் தமிழகத்தில் கிடைத்ததை அதிகரிக்க எல்லாவிதத் தந்திரங்களையும் சங்கபரிவாரம் கையாள்வதை ஊன்றி கவனிக்க வேண்டும். 1990 வரை தமிழகத்தில் கால் ஊன்ற இயலாத பாஜகவிற்கு அங்கு முதன் முதல்  கோயம்புத்தூர் தொகுதி கிடைத்த முறையினை நினைவில் நிறுத்தி சிந்தித்துப் பார்த்தால் தென்னகத்தில் சங்கபரிவாரத்தின் அண்மைகால அதிவேகச் செயல்பாடுகளின் காரணம் தெளிவாக விளங்கும்.

 

எது எப்படியிருப்பினும் உலக அரங்கில் இந்தியாவின் மதிப்புக்கு மாசு விளைவிக்கும் சங்கபரிவாரத்தின் செயல்பாடுகள் தற்பொழுது தென்னகத்தைக் குறிப்பாக அமைதிப் பூங்காவான தமிழகத்தைக் குறி வைத்திருப்பது மட்டும் மிகத் தெளிவாக விளங்குகிறது.

 

மனித இனத்திற்கு எதிரான பார்ப்பனீய விஷத் தந்திரங்களுக்கு விலை போகாமல் திராவிடர்கள் என இறுமாந்திருந்தக் காலத்தை மறக்கடிக்கும் விதத்தில் தமிழகத்தை மாற்றி எடுப்பது சங்கபரிவாரத்திற்கு மிகக் கடினமான காரியம் ஒன்றும் இல்லை. தனது சாத்வீகப் போராட்டத்தின் மூலம் உலகச் சமுதாயத்தையே தன்பக்கம் ஈர்த்த காந்தி பிறந்த மண்ணான குஜராத்தையே சுடுகாடாக மாற்றியவர்களுக்கு வெறும் பகட்டு திராவிடமும் தடம் மாறும் பெரியாரிசமும் கூறி பதவி விளையாட்டு நடத்தும் திராவிட ஆட்சியாளர்களைக் கொண்ட தமிழகம் சுண்டைக்காயைப் போன்று தோன்றக் கூடும்.

 

காலம் கடந்தெனினும் இவ்வுண்மையை விளங்கிக் கொண்டு உடனடியாக சங்பரிவாரத் தீவிரவாத்தையும் பார்ப்பனத் தீவிரவாதிகளையும் ஒடுக்குவதற்குண்டான வழிவகைகளைக் குறித்து அனைவரும் - முக்கியமாக - முஸ்லிம்கள், கட்சி, அமைப்பு, இயக்க வேறுபாடுகளை மறந்து ஆலோசனை செய்வதற்கும் செயல்படுத்துவதற்கும் முன்வர வேண்டும். இல்லையேல், விஹிப வெறியர்கள் கூறியது போன்று "தமிழகமும் ஒரு குஜராத்தாக மாறும் நாள் வெகுதொலைவில் இல்லை"

Trackback(0)
கருத்துக்கள் (17)add comment
0
கனி:
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் தமிழக முஸ்லிம் இயக்கங்கள் ஒற்றுமை இக்காலகட்டத்தில் மிகவும் அவசியம். மணிச்சுடர் போன்ற முஸ்லிம்களுக்கான தினசரி பத்திரிக்கைகள் அதிகம் உருவாகவேண்டும். இம்மாதிரியான முஸ்லிம்களுக்கு இடர்செய்யும் RSS போன்ற தீவிரவாத அமைப்புகளின் செயல்கள் உடனுக்குடன் தோலுரித்துக் காட்டப்படவேண்டும். இக்காலத்தில் தமிழில் உலகஅளவில் முஸ்லிம்களுக்கு தனி TV CHANNEL இருப்பதும் அவசியமாகின்றது. ஒற்றுமையாக செயல்பட்டோமேயானால் நமக்கு எப்பொழுதும் அந்த வல்லவனின் உதவி உண்டு. சமுதாய ஒற்றுமைக்காக இயக்கங்கள் ஒன்றுபடுமா... ஏக்கத்துடன் வஸ்ஸலாம் கனி
1

March 04, 2008 21:05
0
abdul azeez:
ஒற்றுமைக்காக சொர்ப்பொழிவும்,மாநாடும்,அனைத்து இயக்கங்களும் நடத்தவேண்டும் தேவை இல்லாத வாதமும் தனி நபர் [மறுமை] நன்மைக்கான ஜகாத்தை பற்றியோ மற்றும் இமாமத் பற்றியோ விவாதிப்பதை தவிர்க்கவேண்டும் அப்படி செய்தால் நமக்குள் பலகீனம் ஏற்படும். நம் கருத்தைவிட குர்ஆன் ஹதீஸ் களுக்கு நேர் முரணான கருத்தை மட்டும் தவிர்த்து அதன் அடிப்படையில் வரக்கூடிய நம் ரசூலை [ஸல்] பார்த்த நம்முடைய இஸ்லாமிய கலீபாக்களின் கருத்தை ஒர்முகமாக தேர்ந்தெடுக்கனும்.இந்த சொர்கத்திற்கு வாக்களிக்கபட்டவர்களின் கருத்தே சிறந்தது.இந்த கருத்தை பதியும் என்னை யாருக்கும் தெரியாது.ஆனால் துண்டு,துண்டாக சிதறுண்டு கிடக்கும் அனைத்து பிரிவினர்க்கும் தெரியுமான சஹாபி,மற்றும் இமாம்கள் கருத்து நம்மை ஒன்று சேர்க்கும் அல்லவா! ஒரே இறைவனை வணங்கக்கூடிய நம் சகோதரப்பில்லைகள் அந்த ஒருவனுக்காக ஒன்று கூடுவோமாக வல்ல அல்லாஹ் மிகப்பெரியவன். அப்துல் அசீஸ்
2

March 05, 2008 22:54
0
M.S.K.:
அஸ்ஸலாமு அலைக்கும் அன்பு சகோதரர்களே... //ஒரே இறைவனை வணங்கக்கூடிய நம் சகோதரப்பில்லைகள் அந்த ஒருவனுக்காக ஒன்று கூடுவோமாக வல்ல அல்லாஹ் மிகப்பெரியவன்.// அல்ஹம்துலில்லாஹ்... ஒவ்வொரு முஸ்லிமும் அவர் தனி நபராக இருந்தாலும் ஒரு அமைப்பு, அல்லது ஜமாத்தில் இருந்தாலும் உலகளவில் அனைவரும் இதையே கூறுகின்றனர். ஆனால்....... எனது கருத்து சரி, எனது கொள்கை சரி, இதைப் பார்க்கக்கூடாது, இதைப் பார்க்க வேண்டும், இது சாதாரண விஷயம், இது சாதாரணவிஷயமல்ல இது மிகப் பெரிய விஷயம், நான் இருப்பதே நபி வழி, நான் இருப்பதே நேர்வழி, என்று தமக்குள் அறிந்தோ அறியாமலோ, கருத்து வேறுபாடுள்ள விஷயங்களுக்காக (மட்டுமின்றி கருத்து வேறுபாடற்ற விஷங்களிலும் கூட இணைய இயலாமல்) முக்கியமான 'முஸ்லிம்கள் ஒற்றுமை', 'முஸ்லிம்கள் நலன்' எனும் முக்கிய கருத்திலிருந்து பிரியும் ஒரு தடையை ஏற்படுத்திக் கொண்டு அதற்கு முறையாக முயலாமல் தமது தனிக் கருத்துகளில் தொடர்கின்றனர். அடுத்தவர் கருத்தில் இருக்கும் நியாயத்தை வாதத்தைப் பார்ப்பதில்லை மட்டுமின்றி அடுத்தவர் கருத்து எனும் போதே அதை அவருக்காக அவர் அமைப்பிற்காக ஜமாத்திற்காக என்று பார்ப்பதையே தவிர்க்கும் நிலையும் பார்க்க விடாமல் தடுக்கும் நிலையும் வெறுக்கும் நிலையும் பரவியுள்ளது. சிலர் குர் ஆன் ஹதீஸைப் மட்டும் பார்க்க வேண்டும் அதற்கு(நபி வழிக்கு) முரணான மற்றவர் கருத்தைப் பார்க்கக் கூடாது என்பர், சிலர் குர் ஆன் ஹதிஸைப் பார்க்க வேண்டும் ஸஹாபாக்கள் மற்றும், இமாம்கள் கருத்தையும் பார்க்க வேண்டும் என்பர்,(அது குர் ஆன் ஹதீஸுக்கும் நபி வழிக்கும் முரண்படுகின்றதா என்று பார்க்க தேவையில்லை என்று சொல்லாமல் சொல்லுவர்) ஆக தாங்கள் உட்பட அனைவரும் (தமது ஆய்வின் அடிப்படையில்) இப்படி பட்ட முஸ்லிம் ஒற்றுமையை நாடும் போதும் கூட தனிபட்ட கருத்துக்களை ஒற்றுமைக்கு வழியாக கொண்டுள்ளோம். இதில் சுய இலாபம், மனோஇச்சைகள், அறியாமை, அகந்தை காழ்ப்புணர்ச்சி, பொறாமை...போன்ற அடிப்படையான முறைகேடுகளும் கலந்து இதை தடுக்கின்றன. ஆக இதற்கு வழி என்ன என்பது உண்மையில் அல்லாஹ்தான் நன்கறிவான், ஆனால் அவனது கட்டளைகளை (3 : 31),(3 : 102),(33 :21) (4 : 59),(16 : 125) முழுமையாக பின்பற்றி இதற்கு முனைந்தால் ஒற்றுமை ஏற்படுகின்றதோ இல்லையோ நமக்கு அந்த எண்ணத்திற்கும் முயற்சிக்கும் கூலியிருப்பதுடன், அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து இன்ஷா அல்லாஹ் தப்ப வழி பிறக்கலாம். அதே நேரம் அல்லாஹ் வலியுறுத்தும் உண்மையான நபிவழியில் அமைந்த ஒற்றுமையும் ஏற்பட வழியாகலாம். ஆக நாம் எதற்கு முக்கியத்துவம் கொடுப்பது என்பதற்கும் கண்ணியத்திற்குரிய நபித்தோழர்கள் வாழ்வில் இதற்கு படிப்பினை இருக்கிறது, என்பதற்கு பல உதாரணங்கள் காட்டலாம். உதாரணத்திற்கு திர்மிதியில் (ஹதீஸ் எண் 753) வரும் அப்துல்லாஹ் இப்னு உமர் அவர்கள் சம்பந்தமான ஒரு சம்பவத்தை குறிப்பிடலாம்... அப்தில்லாஹ் இப்னு உமர்(ரழி) என்பவர் அவர்களிடம் கண்ணீயத்திற்குரிய 2ம் கலீஃபா உமர்(ரழி) அவர்களின் மகன் ஆவார். அவரிடம் தமத்து ஹஜ் கூடுமா என்று கேட்கப் பட்டபோது அது கூடும் என்று கூறினார், உங்கள் தந்தை உமர்(ரழி) அவர்கள் இது கூடாது என்று கூறியுள்ளார் என்று அவரிடம் கூறிய போது நான் அல்லாஹ்வுடைய தூதர் கூறியதாக கூறுகிறேன் நீங்கள் அதற்கு மாற்றமானதை எமது தந்தை கூறியதாக கூறுகிறீர்கள் எதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று திருப்பி கேட்டு அதை மறுக்கிறார்,,,,, இப்படி பல சம்பங்கள் கண்ணியத்திற்குரிய ஸஹாபாக்கள் வாழ்க்கையில் நடந்து அல்லாஹ்வின் மூலம் நபி( ஸல்) அவர்களுக்கு போதிக்கப் பட்டதே உயர்ந்தது, மற்றவர்கள் அனைவரும் கருத்தில் தவறு ஏற்பட வாய்புடையவர்களே என்று விளக்குகிறது. இதைப் போன்றதை உணர்ந்து நாம் அல்லாஹுக்காக முறையாக படிப்பினை பெற, இருக்கும் தடைகள் களையப்பட்டு முஸ்லிம்கள் அனைவரும் ஒற்றுமையும் நேர்வழியும் பெற அல்லாஹ் அருள் புரிய பிராத்திப்போமாக.
3

March 06, 2008 07:10
0
asalamone:
ஒற்றுமையை வலியுறுத்தி ஒரு போராட்டமே நடத்த வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம். அவரவர் தாம் சார்ந்து இருக்கும் கொள்கையில் இருக்கிறார்கள். எப்படி ஒற்றுமையை பிடிக்க போகிறார்கள் அதுதான் தெரியவில்லை. ஒற்றுமை ஓங்குக.
4

March 06, 2008 10:05
0
abdul azeez:
ஏன் அல்லாஹ் ஒருவனுக்காகவே இணையக்கூடாது. சகோதரர்கள் வல்லவனுக்காகவே தம் உயர்ந்த கொள்கைகளை மூன்றாம் தரத்தில் அல்லது அதுக்கும் பின்னுள்ள பட்சமாக வைக்க கூடாது.தம் பக்கத்து வீட்டு சகோதரிகள் வெறி பிடித்தவர்களால் கலங்கப்படுவது ஜீரநிக்கிறதா?அல்லது தம் கொள்கைக்கு அடுத்த கொள்கை சகோதரர் மாறுபடுவது பெரிதாக தெரிகிறதா? உன்,சகோதரன் ஜெயிலில் தீரவாதியாய் பழி சுமத்தப்பட்டு வாடி வதந்டுகொண்டிருக்கிரானே!கொள்கையின் விவாதம் ஓடோடி வந்து காப்பாத்துமா?நாளைக்கு. நான்! அல்லது நீ! ஏன் ஒற்றுமையை பற்றி குர்ஆன் போதிக்கவில்லையா? இப்படி செய்தால் தான் என்ன யாருடைய கொள்கை சரி யாருடைய கொள்கை சரிஇல்லை.என்பதை அல்லாஹ்விடம் ஒப்படைத்துவிட்டு மறுமையில் எந்த கொள்கைக்காரர்கள் அல்லாஹ்விடம் அங்கீகரிக்கப்படுகிரார்களோ! வெற்றி பெறுகிறார்களோ! வெற்றி பெற்றவர்கள் தோற்றவர்களுக்கு தங்கள் நன்மைகளில் கால்பாகம்.கொடுக்கவேண்டும்.ஏன் என்றால் இங்கு எல்லோருமே நான் தான் சரி என்பதனாலும் பின்பு உங்களால் தைரியமாய் கொடுக்கமுடியும். என்பதை சுட்டிதான். இதையும் மீறி!ஒன்றும் ஆகாது என்று நினைத்து மனம் போன போக்கில் போனால் வெறும் நான்கு முஸ்லிம்கள் மட்டுமே! நம் நாட்டில் இருந்தாலும். நான்குவிதமான கொள்கைகள் இருக்கும். நான்கு பேரும் விவாதித்து கொண்டே இருப்போம்.பிறகு நான்கு விலங்கை நாலுபேருக்கும் மாட்டி பொடா சட்டத்தில் போட்டு நம் சமுதாயம் சுத்தமாக துடைத்து எறியப்படும்.வெற்றி காபிர்களின் கையில் நம் பெண்கள் அவர்களால் சீண்டப்படும். பிறகு ஜெயிலில் இருந்துகொண்டு கொள்கை பிடிப்பு புத்தகம் படிக்கமுடியாது. அங்கு தான் ஒருவர்க்கு ஒருவர் சலாம் சொல்லிக்கொண்டு இருப்போம். அதனால் ஒற்றுமை ஜெயிலில் வேண்டுமா?அல்லது சுதந்திரமாக இருக்கும் இடத்திலேயே வேண்டுமா?என்பதை அனைத்து கொள்கை சகோதரர்களும் கொஞ்ச நேரம் யோசியுங்கள். மாசலாம். அப்துல் அசீஸ்
5

March 07, 2008 23:51
0
M.S.K.:
அஸ்ஸலாமு அலைக்கும் அன்பு சகோதரர்களே... சகோதரர் அப்துல் அஜீஸ் போன்ற எண்ணற்ற சகோதர முஸ்லிம்களின் ஆதங்கத்தை உணர்ந்து அமைப்புகள், ஜமாத்துக்கள், இயக்கங்கள், மற்றும் அதன் முன்னோடிகள், பின்னோடிகள் ,,, மேலும் அதன் உயிர் நாடியான உடல் உதிரத்தை வியர்வையாக்கும்,..... முஸ்லிம் சகோதரர்களே...சகோதரிகளே பெரியோர்களே.... அல்லாஹுக்காக கருத்து வேறுபாடுகளை மூட்டை கட்டி வைத்து (அல்லது வைக்காமல்) ஒரு பொதுவான அணியில் முஸ்லிம்களின் நலனுக்காக ஒன்றிணைய முன்வாருங்கள்... அல்லாஹ் போதுமானவன். அன்புரிமை மற்றும் ஆதங்கத்துடன் M.S.K.
6

March 08, 2008 16:14
0
அப்துல்லாஹ் M:
அஸ்ஸலாமு அலைக்கும் முஸ்லிம்கள் நலனுக்காகவும் ஒற்றுமைக்காகவும் கருத்து வேறுபாடுகளை மூட்டை கட்டி வைத்து அல்லது வைக்காமல் ஒன்றிணைவதில் தவறில்லை, ஆனால் இஸ்லாம் வலியுறுத்தும் ஒரிறைவனை மட்டும் வணங்க வேண்டும் எனும் கொள்கை, தொழுகை, ஜகாத் போன்ற ஏனைய அல்லாஹ்வினால் வலியுறுத்தப்பட்ட கடமைகளை முறையாக பேணாமல் உதாசீனப்படுத்தியோ மூட்டைகட்டியோ வைத்து விட்டு ஒற்றுமை என்று ஒரு அரசியல் கட்சி போல்(அல்லாஹ்வின் பெயரில்) இணைந்து வெறும் கூச்சலிட்டால் அல்லாஹ்வின் திருப்தியும் உதவியும் கிடைக்குமா என்பதையும் சிந்தித்து நாம் சீராக செயல் பட வேண்டும். என்பதை மேலுள்ள பின்னூட்டங்களின் கருத்தோடு சேர்த்து பார்ப்பதும் மிகவும் முக்கியமாகும்.
7

March 09, 2008 07:16
0
abdul azeez:
சகோதரப்பிள்ளைகள் அனைவருக்கும் அஸ்ஸலாமுஅலைக்கும். ஒன்று சேருங்கள் என்று நான் கூக்குரல் விடுவது.கொள்கைகளை தூக்கி எரிந்து விட்டு சேருங்கள் என்பதல்ல அதை நடைமுரைபடுத்திகொண்டே தான்! இப்போது டஜன் கணக்கில் பிரிந்துகிடக்கிரோமே..இப்போ மட்டும் நம் பிரிவில் யாரும் நூற்றுக்கு நூறு % மார்க்கத்தை நிறைவேற்றிகொண்டா இருக்கிறோம்? இவ்வளவு பிரிவு இருந்தும் இப்படியும் அப்படியுமாக தானே இருக்கிறோம். நான் சொல்வது எல்லோரும் ஒருவட்டத்தில் வரவும் அதுக்குள் தங்கள் கொள்கைகளை பேணவும் ஒருவருக்கு ஒருவர் குறைகளை தவிர்க்கவும் மற்ற சகோதரர் கொள்கை எவ்வளவு முரண்பட்டாலும் நலன் விசாரித்துக்கொண்டு சலாம் சொல்லிக்கொள்ளவும்.முடியுமான வரை சகாபாக்களின் தரத்தை எட்ட முயற்சிக்கவும் இன்றைக்கு டஜன் கணக்கில் பிரிந்த நாம்.நாளைக்கு அது குட்டி போடும் அனைவரும் ஒன்று சேருங்கள் என்ற வசனத்தை குத்தகைக்கா விட்டிரிக்கோம்? இல்லையே. காபிர்களின் கைகளை கொண்டு தான் அல்லாஹ் நம்மை தண்டிக்கவேண்டும் என்பதில்லை!பிரிந்தவனே வெட்ட வருவான் இன்னும் தளத்திலும் செய்திகளிலும் பார்த்து கொண்டு தான் இருக்கிறோம் அந்த அவலத்தை அல்லது அல்லாஹ் அந்த பேருதவியை நமக்கும் செய்வான் என்று பகல் கனவு கான முடியுமா?அத்தனை பிரிவுகளும்..அந்த தரத்தில் இருக்கிறோம் என்று ஊர்ஜிதம் செய்ய முடிகிறதா? அந்த உதவியை பாருங்கள் உங்களுக்கு மேலிருந்தும், உங்களுக்குக் கீழிருந்தும் அவர்கள் உங்களிடம் (படையெடுத்து) வந்த போது, (உங்களுடைய) இருதயங்கள் தொண்டை(க் குழி முடிச்ச)களை அடைந்து (நீங்கள் திணறி) அல்லாஹ்வைப் பற்றி பலவாறான எண்ணங்களை எண்ணிக் கொண்டிருந்த சமயம் (அல்லாஹ் உங்களுக்கு செய்த அருள்கொடையை) நினைவு கூருங்கள். (33:10) சகோதரப்பில்லைகளே! இப்படிப்பட்ட படைகள் நம் பிரிவுகளான முஸ்லிமுகளிருந்து வரணுமா?அல்லது காபிர்களிலிருந்து எதிர்ப்பார்கின்றோமா? விவாதிப்பதை விட யோசிப்பதற்கு நிறைய நேரம் இருக்கு. மாசலாம். அப்துல் அசீஸ்
8

March 10, 2008 00:17
0
haneefm:
8;56. நபியே! இவர்களில் நீர் எவருடன் உடன்படிக்கை செய்து கொண்டாலும், ஒவ்வொரு தடவையும் அவர்கள் தம் உடன்படிக்கையை முறித்தே வருகின்றார்கள் அவர்கள் [ அல்லாஹ்வுக்கு] அஞ்சுவதேயில்லை./// ஒற்றுமை ஒற்றுமை என்று பேசும்போதுயொல்லம் இது வெறும் சொல் அளவில் தான் இருக்கு/தமக்குள் இருக்கும் கருத்துவேறுபாட்டை இந்த இஸ்லாமிய தலைவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் [அவர்கள்] தங்கள் போலி உருவத்தையும் இன்னும் அவர்களுக்குள் இருக்கும் ஈகொவை எரிந்துவிட்டு இஸ்லாம் என்னும் பொர்வயில் நானும் முஸ்லிம் என்ற உணர்வுடன் வரவேண்டும்/ நமக்குள் இருக்கும் ஈகொவை எரித்து எரிந்துவிட்டு என்றைக்கு இவர்கள் ஒன்றாக ஒற்றுமையுடன் குரல் குடுத்து தங்களை ஒரு தியாக பணிக்கு அற்பனிக்க முன் வருகிறார்களொ அன்றைக்கு தான் இந்த சமுதயத்தின் முகத்தில் ஒட்டபட்ட[தீவிரவாதம்/தீவிரவாதி]இன்னும் சொல்லில் அடங்க முத்திரைகள் கிழித்து எரியபடும்/ அந்த நாளுக்கு நாமும் நம் சமுதாய தலைவர்கள் என்று சொல்லிக்கொள்பவர்களும் உண்மையாக ஒற்றுமையின் பக்கம் ஒன்றுபடவேண்டும் வல்லமையுடை அல்லாஹ் அந்த பாக்கியத்தை நம் அனைவருக்கும் தந்து அருளட்டும் ஆமின் ஹனீஃப்-குவைத்
9

March 10, 2008 08:39
0
abdul azeez:
அஸ்ஸலாமு அலைக்கும். அனைத்து கொள்கை சகோதரர்களுக்கும்.எல்லா மாநிலத்திலும் நாலு பேர் அல்லது ஐந்து பேர் என்று தீவிரவாதி லிஸ்டில் நம்மவர்களை பிடித்து உள்ளே வைக்கிறார்கள் எஞ்சிநீருக்கு படிக்கும் நம் சகோதரக்குழந்தைகள்.நீங்கள் எங்கு போனாலும் அடையாள அட்டையுடன். செல்லுங்கள். லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டுவது. தேவை இல்லாத அலட்சியம். தவிர்த்து கொள்ளுங்கள். அப்படி படித்தவர்களை அந்த தீவிரவாதி லிஸ்டில் போட்டு படிப்பையும் வீணாக்கி வாழ்க்கையையும் வீனாக்கியுள்ளது டிவி உடகங்கள்.கேரளத்தில் சமீப செய்தி இது.தலைவர்கள் ஈகோ பார்ப்பது என்றால் பிரிவுகளில் உள்ள நம் கூட்டம் தானே தேர்ந்து எடுத்தோம். அட்லீஸ்ட் நாங்கள் தீவிரவாதி அல்ல.என்று ஊர்ஜிதம் செய்வதற்காவது தனி டிவி ஊடகம் முஸ்லிம்களுக்காக.மட்டும் வேண்டும். இப்படி முப்பத்திரெண்டு பிரிவா இருந்து கொண்டு மைக் கூட வாங்க தகுதி இல்லாத நிலையில் ஊடகம் வைக்கமுடியாது.ஒன்று சேர்ந்தாலே தவிர. மாசலாம். அப்துல் அசீஸ்.
10

March 11, 2008 00:18
0
ஜி.என் (பரங்கிப்பேட்டை):
ஏற்கனவே சில பதிவுகளில் 'ஒற்றுமை'யைப் பற்றி பேசி முடிந்து விட்ட நிலையில் மீண்டும் இப்போது பேச்சு துவங்கியுள்ளது. பேசட்டும் பேசினால் தான் குறைந்தப்பட்ச நெருக்கமாவது கிடைக்கும்.ஆனால் பதிவாளர்கள் எதிர்ப்பார்க்கும் ஒற்றுமைக்கு எந்த முகாந்திரமும் தெரியவில்லை. இயக்கம் - கட்சி என்ற சிந்தனை எந்த உள்ளத்தில் நுழைந்து விட்டதோ அதிலிருந்து அவர்களை விடுபட வைப்பதென்பது மிகக் கடினமான ஒன்றாகும். இஸ்லாமியவாதியாக இருப்பதை விட இயக்கவாதியாக, கட்சிவாதியாக நம் சகோதரர்கள் வார்த்தெடுக்கப்படுகிறார்கள். அதனால் தான் இஸ்லாம் குறைக் கூறப்படும் போது மெளனமாக இருப்பவர்கள் இயக்கம் குறைக் கூறப்படும் போது வரித்துக் கட்டிக் கொண்டு மோத வருகிறார்கள். இந்த நிலை மாறும் வரை ஒற்றுமை??????
11

March 11, 2008 11:13
0
இறை நேசன்:
இந்த நிலை மாறும் வரை ஒற்றுமை .......... கருணாநிதி, ஜெயலலிதா கட்சி மேடைகளிலும் புத்தக, சிடி கடைகளிலும் நல்ல விலைக்குச் விற்றுக் கொண்டிருக்கும். - இறை நேசன்
12

March 11, 2008 13:01
0
மு முஹம்மத்:
அஸ்ஸலாமு அலைக்கும் கருணாநிதியோடும் ஜெயலலிதாவோடும் இன்னும் இவர்கள் போன்றோர்களை முன்னிருத்தி கொள்கையளவில் முஸ்லிம்கள் கொள்கைக்கு பெரிதும் மாறுபடும் அவர்களுடன் ஒற்றுமையாக இருக்க முடிகின்றது ஆனால் 'முஸ்லிம்கள் அனைவரும் சகோதரர்கள்' என்ற நபிமொழிக்கு சொந்தக்கார முஸ்லிம் சமுதாயம் தமக்குள் கொள்கையளவில் உள்ள சிறிய கருத்து வேறுபாட்டை மறந்து ஒற்றுமையாக இருக்க முடியவில்லை, முயலவில்லை என்பது மிகப் பெரிய கைசேதமே. அல்லாஹ் நம் முஸ்லிம் சகோதரர்கள் அனைவருக்கும் உதவியும் நல்லருளும் புரிவானாக.
13

March 11, 2008 20:16
0
அழகப்பன்:
//தனது சாத்வீகப் போராட்டத்தின் மூலம் உலகச் சமுதாயத்தையே தன்பக்கம் ஈர்த்த காந்தி பிறந்த மண்ணான குஜராத்தையே சுடுகாடாக மாற்றியவர்களுக்கு வெறும் பகட்டு திராவிடமும் தடம் மாறும் பெரியாரிசமும் கூறி பதவி விளையாட்டு நடத்தும் திராவிட ஆட்சியாளர்களைக் கொண்ட தமிழகம் சுண்டைக்காயைப் போன்று தோன்றக் கூடும்.// அதிர வைக்கின்றன இவ்வரிகளில் பொதிந்துள்ள உண்மை! மதத்தின் பெயரால் இனச் சுத்திகரிப்பை ஆங்காங்கே செய்யத் தூண்டும் ஹிந்துத்துவா தீய சக்திகளை எதிர்கொள்ள திராவிடச் சமுதாயம் செய்ய வேண்டியது என்ன என்பது தான் இப்போதைக்கு அலசப்பட வேண்டிய தலைப்பு.
14

March 12, 2008 10:48
0
அப்துல் காதர்:
அஸ்ஸலாமு அலைக்கும் உலக மக்கள் அனைவரும் சகோதரர்கள், ஒரே தாய் தந்தைக்கு பிறந்த சகோதரர்கள் என்ற சத்திய வாக்கைத் தாங்கிய வேதமாம் திருக் குர் ஆன், அதை உலக மாந்தர் அனைவருக்கும் எடுத்துரைத்து செயல்வடிவில் ஒன்றுபட்டு, ஒன்றிணைத்து ஒற்றுமையின் பாடம் நடத்த வேண்டிய இஸ்லாமியர்கள், முஸ்லிம்கள் அதை மறந்து வாழ்வதும், தமக்குள்ளும் ஒற்றுமையின்றி வாழ்வதும் மிகப்பெரும் தவறு என்பதை உணர்வது காலத்தின் கட்டாயமாகும். கடந்ததை மறந்து சீரான சிறப்பான எதிர்காலம் அமைக்க முயல்வோமாக.
15

March 12, 2008 21:41
0
abdul azeez:
அஸ்ஸலாமு அலைக்கும்.எல்லா கட்சி,மற்றும் அனைத்து கொள்கைகள் சகோதரர்களே.அல்லாஹ்!தம்மை தி.மு.க. மற்றும் ஏ.தி.மு.க. வுக்கு மட்டும் படைத்துள்ளதாக. நினைத்து கொண்டு இருக்காமல். ஒற்றுமையுடன் நம் சகோதரர்கள் பக்கம் திரும்பவும்.மறுமையை நினைத்து செயல் படவும் அந்த இரண்டு கட்சிகளும் நம் சமுதாயத்திற்கு மாறி மாறி நெற்றியில் பட்டைகள் தான் போட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.ஒவ்வொன்றையும் மாநாடு போட்டு கதறி கூப்பாடு போட்டு தான் வாங்க வேண்டி இருக்கு.. ஆனால் நாம் ஒன்று சேர்ந்தால் நமக்குள்ளேயே ராஜ்ஜியம் நடத்தமுடியும்.யார் கிட்டேயும் கை ஏந்த தேவை இல்லை இந்த தளத்தின் பின்னூட்டங்கள் எல்லா சகோதரர்களும்.பார்த்து தாய்ப்பில்லைகள் போல் இருப்போமாக. வல்ல அல்லாஹ் உதவி புரிவானாக. மா சலாம் அப்துல் அசீஸ்.
16

March 12, 2008 23:47
0
M.L.Gani:
அஸ்ஸாலாமு அலைக்கும்(வரH) இந்த இணையதளத்தை தான் நான் எதிர்பார்தத்து இருந்தேன் இன்ஷா அல்லாH இதை அதிரை எக்ஸ்பிரஸ் மூலம் அல்லாH காட்டிவிட்டான் அல்Hஅம்ட்துலில்லாH இன்று பல்வேறு பிரிவுகளாக பிரிந்து இருப்பதுதான் எனக்கு ஒரு கவலையாக இருக்கிறது இதற்க்கு என்னதான் முடிவு இன்ஷா அல்லாH அனைவரையும் சேர்த்து வைக்க ஒரு முடிவு எடுங்கள் எம்.எல்.கனி
17

June 18, 2009 00:02

கருத்து எழுதுக :
தட்டச்சு மொழி மாற்ற crtl+g அழுத்துங்கள்.
சிறிதாக்குக | பெரிதாக்குக

busy
 

இறைமறை

இப்பக்கத்தை PDF வடிவில் சேமிக்க...

தேடுக...

Random Quran Verses

2:28 நீங்கள் எப்படி அல்லாஹ்வை நம்ப மறுக்கிறீர்கள்? உயிரற்றோராக இருந்த உங்களுக்கு அவனே உயிரூட்டினான். பின்பு அவன் உங்களை மரிக்கச்செய்வான். மீண்டும் உங்களை உயிர் பெறச் செய்வான். இன்னும் நீங்கள் அவன் பக்கமே திருப்பிக் கொண்டு வரப்படுவீர்கள்.

English News

புதிய கருத்துகள்

mohammad rafiq : முகத்தை திரையிட்டு மறைப்பதும் மார்க...


mohamed ASHIQ : share with me more.....


monisha.chennai : wrong news modi great man one man army


s.abdul nishath : the use full website for satyamarkam. To use more & more muslim people for dinyath


சத்தியமார்க்கம்.காம் : அன்புச் சகோதரர் Peer Mohamed. அஸ்ஸலாமு அலைக்...


ARULKUMAR.A COIMBATORE : PLEASE AVOID ALCHOCAL CONSUMPITION AND JUNK FRUITS.TAKE FRUITS AND VEGITABLES ITEMS DAILY AND WEEKLY...


Peer Mohamed : Very good effort. I seek your permission to publish these articles in TamilIslamicAudio.com website....


Ansary : First of all i would like to thank Br. Nooruddin for giving all of us such a good translation of Sah...


kalibulla : very good and happy news go ahead,.


Ibrahim ulavi london : Assalamu alaikum, This is very happy news for every muslim . our brother CNM SALIM And brother Imran...


j.ameer ali : On our part, let all of us pray for his good health and long life service to our society. By J.Ameer...


Ansary : This is a great news to know. He is doing fine. This is a very good example to other District Collec...


y.m.anari : ஹிஜாப் பற்றி இந்தத் தளத்தினர் குரான்...


Jaffer : Masha Allah ...May allah bless him and guide him to strive in the straight path.


Karunakaran : Salute to Collector Ahmad... You are the REAL hero!


haneefm : رَبَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَن...



You are here  : முகப்பு தலையங்கம் தமிழகத்துக்கு ரெட் அலர்ட்!
Twitter
RSS
YouTube
English