| சரியும் அமெரிக்கப் பொருளாதாரம், உலகம் அமைதியை நோக்கி... |
|
|
| ஏடு-இட்டோர்-இயல் - தலையங்கம் | |
| ஞாயிறு, 24 பிப்ரவரி 2008 13:53 | |
|
{mosimage}ஏழை, நடுத்தர நாடுகளின் பொருளாதாரத்தைப் பல்வேறு வழிகளிலும் சுரண்டி அதன் மூலம் தனது இராணுவம் மற்றும் தகவல் தொழில்நுட்பத்தை வளர்த்துக் கொண்டு இன்று உலகின் மிகப்பெரிய தலைவலியாக மாறியிருக்கும் அமெரிக்கப் பொருளாதாரம் கடந்த ஓரிரு வருடங்களில் மிகப் பெரியச் சரிவை நோக்கிச் சென்று கொண்டிருப்பது அனைவரும் அறிந்ததே! பொருளாதாரத்தின் மூலம் தன்னை நிலைநிறுத்திக் கொண்டு உலகின் ஏழை மற்றும் நடுத்தர நாடுகளைப் பயமுறுத்திக் கொண்டிருந்த அமெரிக்கா இன்று சிறிது சிறிதாக அதே பொருளாதாரத்தின் மூலம் அழிவை நோக்கி சென்றுக் கொண்டிருக்கின்றது. இரண்டாம் உலகப்போருக்குப் பின் உலகின் பெரும்பாலான நாடுகளின் பொருளாதாரத்தை அமெரிக்க டாலர்கள் ஆக்ரமித்து வந்ததற்கு 21 ஆம் நூற்றாண்டு விடை கூற நெருக்கிக் கொண்டிருக்கின்றது. அமெரிக்காவின் ஏகாதிபத்தியச் செயல்பாடுகளுக்கு ஊக்கம் கொடுத்த அமெரிக்கப் பொருளாதாரம், உலக வர்த்தகத்தின் பெரும்பங்கு அமெரிக்க டாலரை அடித்தளமாகக் கொண்டு இயங்குவதின் மீதே கட்டமைக்கப்பட்டிருந்தது. 2000 நூற்றாண்டின் 80, 90கள் வரை உலக வர்த்தகத்திற்கு மற்றொரு நாணயத்தைக் குறித்து உலகம் சிந்திக்காமல் இருந்ததே அமெரிக்காவின் இடைப்பட்ட கால இமாலய எழுச்சிக்கு அடிப்படைக் காரணமாகும். -சத்தியமார்க்கம்.காம்
பகிர்ந்து கொள்க
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
Trackback(0)
கருத்துக்கள் (7)
![]()
அல்ஹஃம்துலில்லஹி!!
சரிந்து வரும் அமெரிக்காவின் சரிவு இன்னும் சரியும் மேலும் அமெரிக்கவை மையமககொண்டு இயங்கிவரும் அரபு நாடுகள் [ கொஞ்சம் ] புரிந்துக்கொள்ள துவங்கியுள்ளது. இனியாவது இந்த அரபு நாடுகள் தன்னிச்சையாக செயல்படனும்/ அப்படி செயல்படும் தருனம் அரபு நாடுகளூம் ஓரு வல்லரசுதான் /வாழ்த்துகள் அமெரிக்காவின் சரிந்துவரும் பொருளாத வீழ்ச்சிக்கு!!!!!
ஹனிஃப்-குவைத்
1
February 25, 2008 07:30
Naan ungal thodar vaasagan. ungalidam neenda naatkalaaha ezhuthi ketka enni irundha kelvi - thalaiyangam enru oru paguthi vendum enru..
thalaiyangam pakuthi migavum sirappaagavum seeriya sindhaiyai thoondum padiyaagam vulladhu.
vaazthukkal.
(pin kurippu: iththalam muzukka thamizil padikka miga azhakaka vulladhu. thamizhil eppadi ezuthi anuppa vendum?)
2
February 26, 2008 08:56
அன்புச் சகோதரர் கலை அன்பன்,
இத்தள முகப்பில் இடப்பக்கத்தின் இறுதியில் தென்படும் 'Tamil Typing' என்ற உதவிப் பலகையில் சொடுக்கி, தமிழில் தட்டச்சப் பழகிக் கொள்ளுங்கள்.
நன்றி!
3
February 26, 2008 10:42
மிக்க நன்றி! சிறிது நேரம் பழகியபின் என்னால் தமிழ்யில் யூனிகோடில் எழுத முடிகிறது. அருமையான இவ்வசதியையும் தகவலையும் தளத்திலேயே அளித்த உங்களுக்கு நன்றிகள்!
4
February 27, 2008 10:35
தமிழில் செய்திகள் பரிமாறுவதற்க்கு உதவி செய்த சத்திய மார்க்கத்திற்க்கு எமது வாழ்த்துக்கள்
5
March 09, 2008 14:07
சகோதரர்,கலைஅன்பன்,மற்றும் அஹ்மத் சபீர் அவர்களுக்கு இன்னும் சுலபமான தமிழ் எழுதும் லிங்க் தங்க்லீசில் எழுதி ஸ்பேஸ் கீ அழுத்தினால் தமிழ் வந்துவிடும்
பயன் படுத்துங்கள்
அப்துல் அசீஸ்
http://www.google.com/transliterate/indic/Tamil
6
March 09, 2008 23:09
உலக வர்த்தகத்தின் பெரும்பங்கு அமெரிக்க டாலரை அடித்தளமாகக் கொண்டு இயங்குவதின் மீதே கட்டமைக்கப்பட்டிருந்தது.
என்று படித்ததும் எனக்கு உண்டான சந்தேகம்
உலக வர்த்தகத்துக்கு பொதுவான ஒரு நாடு சாரா நாணயமாக தங்கத்தை வைத்துக் கொண்டிருக்கலாம் தானே. அது ஏன் டாலராகவோ யூரோ வாகவோ இருக்கணும்....?
இன்றைக்கு அமெரிக்கர்கள்..... நாளை ஐரோப்பியர்கள் .... என்கிற நிலையிலிருந்து ஏனைய நாடுகளுக்கு அதுவும் பலன் கொடுக்கும் பண்டங்கள் வைத்திருக்கும் அரேபிய இந்திய மற்றும் சீன நாடுகளுக்கு என்றென்றைக்கும் தலைவலிதானே இந்த டாலர் முறைகளால் .....?
ஹாரூன் ரஷீத்
7
October 21, 2008 09:39
கருத்து எழுதுக :
|