| இஸ்லாத்தில் கட்டாயத் திருமணம் இல்லை! |
|
|
| இஸ்லாம் - இஸ்லாமிய ஆய்வுக் கட்டுரைகள் | |
| வெள்ளி, 22 பிப்ரவரி 2008 06:11 | |
|
உலகம் முழுதும் வாழும் உயிரினங்களில் மனிதர்கள் மட்டுமே திருமணம் செய்து கொண்டு ஆணும் பெண்ணும் இணைந்து இல்லறம் நடத்துகின்றனர். அந்த 'மனிதச் சடங்கு' நமக்கெதற்கு என்ற போக்கில், தளை அறுத்த சில நவ நாகரீக மேற்கத்தியர்களும் எல்லாவற்றிலும் மேற்குப் பார்த்துப் பின்பற்றி ஒழுகும் சில ஆசியரும் அண்மைக்காலமாக, "திருமணம் என்பது தனிமனித சுதந்திரத்துக்குத் தளை" என்பதாகக் 'கண்டு பிடித்து' அதைப் பின்பற்றிப் 'புரட்சி'யும் செய்து வருகின்றனர். மற்றும் சிலர் திருமணம் என்பது பெண்களின் மீதான அடக்குமுறைக்கு அடித்தளம் இடும் சமூகக் கட்டுப்பாடு என பெண்ணீயப் புரட்சியும் செய்கின்றனர்.
மனிதர்களிடையே பல்வேறு சமூகங்களில் நடத்தப்படும் திருமணங்களிலும் திருமணத்திற்குப் பின்னர் குடும்ப வாழ்வில் கடைபிடிக்கப்படும் பழக்கவழக்கங்களிலும் உள்ள தீமைகள் இவர்களின் கண்களைக் கட்டுகிறது. ஆனால் அத்தகையத் தீமைகள் எதுவும் இஸ்லாம் நடத்த விரும்பும் திருமணங்களில் நிழகச் சாத்தியங்கள் இல்லை என்பதுதான் உண்மை. முக்கியமாக இஸ்லாம், திருமணம் என்ற சமூகக் கட்டுப்பாட்டில் நுழைபவர்களுக்கான சட்டதிட்டங்களில் பெண்களை மிகுந்த கவனத்துடன் பாதுகாக்கிறது. அதனை அறிந்துக் கொள்ள, இஸ்லாமியத் திருமணத்தில் மணமகளின் உரிமை நிலைப்பாடு என்ன என்பதைத் தெரிந்துக் கொள்வது கட்டாயமாகும். "கன்னி(வயது)கழிந்த பெண்ணை அவளுடைய (வெளிப்படையான) ஒப்புதல் பெறாமல் மணமுடித்துக் கொடுக்கக் கூடாது ..." என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள். (அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா (ரலி), பதிவு : புகாரி 4741) "கன்னி(வயது)கழிந்த ஒரு பெண்ணின் திருமணத்திற்கு ஒப்புதல் வழங்குவதற்கு அவளின் குடும்பப் பொறுப்பாளரைவிட அவளே அதிக உரிமையுடையவள் ஆவாள் ..." என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வரையறுத்தார்கள். (அறிவிப்பாளர் : இபுனு அப்பாஸ் (ரலி), பதிவு : முஸ்லிம் : 2545).
இந்திய முஸ்லிம் அமைப்புகளின் மேற்கண்ட அறிவிப்பு இஸ்லாம் பெண்ணுரிமையைப் பாதுகாக்கும் சமூகத்துக்கு உகந்த மார்க்கம் என்பதை மற்றுமொரு முறை நிறுவியுள்ளதோடு "திருமணம் தனிமனிதத் தளை என்றும் பெண்ணினத்தை அடிமைப் படுத்தும் சமூகக் கட்டுப்பாடு" என்றும் "இஸ்லாம் பெண்ணினத்துக்கு எதிரான அடக்கு முறை மார்க்கம்" என்றும் அவசர கோலத்தில் "சமூகப் பெண்ணியப் புரட்சி(!)" செய்பவர்களுக்குத் தகுந்த பதில் விளக்கமாகவும் அமைந்துள்ளது. திருமணத்தில் இஸ்லாம் கூறும் விதிகளைக் கண்டு கொள்ளாத எஞ்சியிருக்கும் ஒரு சில முஸ்லிம் பெற்றோர்கள் இனிமேலாவது மணமக்களுக்கு - குறிப்பாக - பெண்களுக்கு இஸ்லாம் வழங்கும் உரிமைகளைப் பின்பற்றி அவர்களின் திருமணத்தை நடத்தி வைக்க முன்வரட்டும்.
ஆக்கம்: அதிரை ஜமீல். கருத்துக்கள் (7)
![]() எழுதியவர்: haneefm , February 23, 2008 05:37 அல்ஹம்துலில்லாஹி!!!! புகழ் அனைத்தும் இறைவனுக்குதான்' '''''கன்னி(வயது)கழிந்த ஒரு பெண்ணின் திருமணத்திற்கு ஒப்புதல் வழங்குவதற்கு அவளின் குடும்பப் பொறுப்பாளரைவிட அவளே அதிக உரிமையுடையவள் ஆவாள் ...' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வரையறுத்தார்கள். (அறிவிப்பாளர் : இபுனு அப்பாஸ் (ரலி), பதிவு : முஸ்லிம் : 2545).!!! இந்த ஆக்கம் சாரியான நேரத்தில் பதியபட்டுள்ளது சத்தியமார்க்கத்திற்க்கு வாழ்த்துகள் இன்னும்/திருமணத்தில் பெண்களின் அபிப்ரயத்தை பெரும்பாலன பெற்றேர்கள் கேட்க தவறும் போது மலிந்துவரும் [தாலாக்]இன்னும் ஒருதலைபச்சமாக வாழும் எத்தனையொ ஆண்களும் பெண்களும் உண்டு/ வளர்ந்து வரும் நாகரிக காலத்தில் தங்கள் குழந்தைகளின் மனம் அறிந்து திருமணம் செய்துவைத்தால் மனவாழ்வில் கருத்துவேறுபாடுக்கு வழியில்லை என்பது உறுதி தான் இன்னும் இது போல நல்லகருத்துள்ள ஆக்கங்களை ////திருமணத்தில் இஸ்லாம் கூறும் விதிகளைக் கண்டு கொள்ளாத எஞ்சியிருக்கும் ஒரு சில முஸ்லிம் பெற்றோர்கள் இனிமேலாவது மணமக்களுக்கு - குறிப்பாக - பெண்களுக்கு இஸ்லாம் வழங்கும் உரிமைகளைப் பின்பற்றி அவர்களின் திருமணத்தை நடத்தி வைக்க முன்வரட்டும்.//// அதிரை ஜமீல் அவர்களுக்கும் வாழ்த்துகள் ஹனிஃப்-குவைத் எழுதியவர்: அபூ ஸாலிஹா , February 23, 2008 05:45 அல்ஹம்துலில்லாஹ்! விடுதலையின் அர்த்தம் விளங்காமலேயே பெண் விடுதலை(?)யைப் பெற்றுத் தருவதற்காகப் போராடும் அமைப்புகள், சமயப்பாகுபாடில்லாமல் அனைத்துலகப் பெற்றோர்கள், இஸ்லாமிய அடிப்படை உண்மைகளை அறிந்தும் அறியாததுபோல் விஷமம் செய்பவர்கள், விஷயத்தினை அறியாதவர்கள் என அனைத்துத் தரப்பினருக்கும் இஸ்லாம் கூறும் அடிப்படை என்னவென்பதைத் தெளிந்த நீரோடையாகப் பாடம் நடத்தியிருக்கும் கட்டுரையாளர் பாராட்டுக்குரியவர். நன்றி! எழுதியவர்: அபூ முஹை , February 23, 2008 16:35 மணமகனைத் தேர்வு செய்யும் உரிமையைப் பெண்களுக்கு இஸ்லாம் வழங்கியுள்ளது. பெற்றோரேயானாலும் பெண்ணின் மணச் சுதந்திரத்தில் குறுக்கிட முடியாது என்பதை தக்க ஆவணங்களுடன் விளக்கியிருக்கும் அருமையான ஆக்கம் நன்றி! எழுதியவர்: மு முஹம்மத் , February 24, 2008 07:04 அஸ்ஸலாமு அலைக்கும் அல்ஹம்துலில்லாஹ். எக்காலத்திற்கும் பொருந்தும் அழகான இஸ்லாமிய கருத்துக்களை, அதிலும் பெண்களை இழிவு படுத்தும் மார்க்கம் என்று கூறிவரும் மாற்றுக்கருத்துடையவருக்கு பதிலாகவும்,உன்னத நபிவழிகள் மூலம் வழிவகுக்கப்பட்ட மற்றும் இதனால் வாழ்க்கையில் ஏற்படக்கூடிய பல பிரச்சினைகளினை தவிர்க்க வழியாக பெண்களின் பெற்றோர்களுக்கும் பொறுப்பாளர்களுக்கும் ஒரு அறிவுரையாகவும் நல்லுபதேசமாகவும் உள்ள ஆக்கம். ஜஸாக்கல்லாஹு கைர் எழுதியவர்: அல் அமீன் , February 24, 2008 08:51 அருமையான கட்டுரை. சமூகத்தில் நிகழும் விவாகரத்து, மணப்பெண் கொலை/தற்கொலை, கணவன் - மனைவி இடையே ஏற்படும் பிரச்சனைகள் போன்றவற்றிற்கான அடிப்படை காரணமே விருப்பமின்றி/விருப்பம் அறியப்படாமல் நடத்தப்படும் திருமணங்களே. குறைந்தபட்சம் இருவரின் சம்மதத்துடன் நடத்தப்படும் திருமணங்களில், திருமணத்திற்குப் பின் ஏதாவது அவர்களிடையே பிரச்சனை ஏற்பட்டால் கூட - யாருடைய வற்புறுத்தலும் இன்றி துணையை நாமே தேர்ந்தெடுத்துள்ளோம் என்ற எண்ணம் - அவர்களுக்கிடையே தாமே பிரச்சனைகளைச் சுமூகமாகத் தீர்த்துக் கொள்வதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும். காலத்திற்கேற்ற அருமையான கட்டுரையை எழுதியவருக்கும் வெளியிட்டவர்களுக்கும் நன்றிகள். எழுதியவர்: ஜமீல் , February 24, 2008 11:23 இக்கட்டுரைக்குக் கருத்தளித்த சகோதரர்கள் அனைவருக்கும் நன்றி! ஒரு சிறிய - ஆனால் முக்கியத்துவம் வாய்ந்த - ஊடகச் செய்தியை அடிப்படையாக வைத்துக் கோர்த்து, சத்தியமார்க்கம்.காம் தளத்தினருக்கு அனுப்பி வைத்ததிருந்தேன். இதைப் பதித்த தளத்தினருக்கு என் நன்றிகள் உரித்தாகட்டும்! இதுபோன்று சமுதாயத்திற்குப் பயன்படும் ஆக்கங்களை அல்லது செய்திகளை ஒரு கட்டுரையாக்கி நீங்களும் அனுப்பி வைத்தால் இன்ஷா அல்லாஹ் சத்தியமார்க்கம்.காம் தளத்தினர் பதிவுக்குக் கொண்டு வருவார்கள். முயற்சி செய்யுங்கள்; அல்லாஹ்வின் உதவி கிடைக்கும். கருத்து எழுதுக :
|